Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு – மறுக்கிறார் பிரபல ராப் இசைப் பாடகி மாயா அருட்பிரகாசம்

Featured Replies

பிரிட்டனைச் சேர்ந்த ராப் இசைப்பாடகியான மாயா (மாதங்கி அருள்பிரகாசம்) பயங்கரவாதத்த்pற்கு ஆதரவு தெரிவிப்பதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தான் பயங்கரவாதக் குழுவில் அங்கம் வகிப்பவள் என்றும் அவர்களுக்காகப் பாடுபவள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

எனினும் தான் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

M.I.A.உலகெங்கும் ஆங்கிலத்தில் வெளிவரும், ஈழம் பற்றிய செய்திகளுக்கான இணைப்பை தரும், தமிழ் கனடியன் இணையத் தளத்தில்தான் அந்த செய்தி இணைப்பையும் [Jan. 27, 2005 Eye Weekly] பார்த்தேன்.

அதனைத் திறந்து படிக்கும் ஆர்வத்தை தலைப்பும் முன்குறிப்பும் சுட்டி நின்றன. Tiger, tiger, burning bright (Tamil pop provocatrice M.I.A. wages war on the dancefloor) என்ற தலைப்புடன் காணப்பட்ட அக்கட்டுரைக்குள் நுழைந்தபோது ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியங்கள் சிதறிக்கிடந்தன.

உலகெங்குமான இளவயதினரை ஈர்த்திழுக்கும் நவீன இசை நடன அரங்கில் ஈழத்து தமிழ்ப்பெண் தடம்பதித்துக் கொண்டிருக்கின்றார் என்பதுடன் சர்வதேச ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார் என்பதும் முக்கியமாகப்பட்டது.

(ஊடகங்களில் வெளிவந்தவை இணைப்பாக கீழே தரப்படுகின்றது). மற்றது அவரின் இசையின் உள்ளடக்கமாக அரசியல் இருந்ததென்பதும் செவ்விகளின் போது தனது அடையாளத்தையும் குடும்ப நிலையையும் வெளிப்படையாக பேசியதென்பதும் முக்கியமாகப்பட்டது.

Mayaமாயா அருட்பிரகாசம் (மாதங்கி அருட்பிரகாசம், வயது 27) என அறிமுகப்படுத்தப்படும் அவரின் அரங்கப்பெயரும் குறியீடும் M.I.A. என்பதாகும்.

இலண்டனில் பிறந்து தந்தையாரின் அரசியல் ஈடுபாடு காரணமாக பெற்றோரால் கைக்குழந்தையாக ஈழம் எடுத்துச்செல்லப்பட்ட அவர் பின்னர் பதினொரு வயதில் தாயாருடனும் இரு சகோதரர்களுடனும் இலண்டன் திரும்பினார்.

London's Central Saint Martins Art School ல் நுண்கலைத் துறையில் தன் பட்டப்படிப்பை முடித்த மாயா, அப்பட்டப்படிப்பில் சினிமாத்துறையையும் தன் கற்கைநெறியாக கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் ஓவியக் கண்காட்சியை இலண்டனில் நடாத்தியபோது அது (nominated for the alternative Turner prize) ருனர் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டதுடன் அவ்வோவியங்கள் தொகுப்பு நுலாக்கப்பட்டு Pocko நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இவ்வோவியங்களில் போர்க்கருவிகளும் பனைமரமும் முக்கிய இடத்தை பெற்றுள்ளனவாம்.

Galangஇசை நடனத் துறையில் ஆர்வம் கொண்ட மாயா தனது “Galang” என்னும் முதல் தனிப்பாடல் இறுவெட்டு வெளிவந்தபோதே ஊடகங்களின் கவனத்தை பெற்றார். Sunday Times Culture, The New Yorker போன்ற பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின.

sunshowersபின்னர் “Sunshowers” என்னும் இறுவெட்டை வெளியிட்டிருக்கின்றார். இந்த ஆண்டு பெப்ரவரியில் அவரது மூன்றாவது இறுவெட்டு வெளிவர உள்ளது.

அதன் பெயர் அருளர் (Arular) என்பதாகும். தனது தந்தையாரின் போர்க்களப் பெயர் அருளர் எனத் தெரிவிக்கும் மாயா, அவரது கடந்தகால அரசியல் செயற்பாட்டிற்காக இந்த இறுவெட்டை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Arular

அருளப்பு ரிச்சர்ட் அருட்பிரகாசம் என்னும் முழுப்பெயரைக் கொண்ட அருளர் முதுமாமணிப் பட்டம் பெற்ற இயந்திரவியல் பொறியாளர் என்பதும், ஈழத்து போராட்ட இயக்கங்களில் ஒன்றாக விளங்கிய ஈரோஸ் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்பதும்,

லங்காராணி என்னும் புதினத்தின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாயா தனது செவ்விகளில் தனது தந்தையார் பற்றியும் அவரது அரசியல் பற்றியும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கேற்பட்டு ஆச்சரியங்களை இப்போது நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

இந்த ஆச்சரியங்களுக்கு அப்பால் அவரது துணிச்சலும், கலைத்துவ சாதனையும் மிக்க இம்முயற்சியை பாராட்ட வேண்டியது எமது கடமையாகின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையினர் கட்டியெழுப்பப் போகும் புதிய உலகத்தின் முன்மாதிரிகளில் ஒருவராக மாயா திகழ்கின்றார் என்றால் மிகையல்ல.

தன் அடையாளத்தை இழக்காமல் சர்வதேச அரங்கில் மேலும் வெற்றிகளைக் குவிக்க அப்பால் தமிழ் குழுமம் அவரை இதயம் கனிந்து வாழ்த்துகின்றது!

மகன் தந்தைக்கு ஆற்றுவது "வள்ளுவர் அறமாக" இருக்கலாம் மகள் தந்தைக்கும் தாய்க்கும் ஆற்றுவது "ஈழப்போராட்ட அறமாக" மாறுகின்றது என்பதற்கு மாயாவும் உதாரணமாகின்றார்.

மாயா பற்றிய மேலதிக விபரங்களிற்கும், அவரது படைப்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவரது இணையத் தளத்திற்குச் செல்லுங்கள்.

மாயாவின் இணையத்தளம்:

www.miauk.com

மாயா பற்றி செய்தி இதழ்களில் வந்த செய்திகள்:

http://newyorker.com/critics/music/?041122crmu_music

http://www.japantimes.com/cgi-bin/getartic...m20050116a2.htm

http://www.pitchforkmedia.com/top/2004/singles/index5.shtml

http://www.dustedmagazine.com/features/324

http://www.230publicity.com/mia.html

http://www.google.de/search?hl=de&q=Ma...Suche&meta=

நிழற்படங்கள் வேறுதளங்களில் இருந்து பெறப்பட்டவை. அத்தளங்களிற்கு எம் நன்றிகள்.

Edited by isoorya

வணக்கம் ஐ சூர்யா எனும் வெட்டி ஒட்டும் மன்னரே.

எனது வலைப்பதிவில் இருந்து

http://viriyumsirakukal.blogspot.com/2008/08/blog-post.html

எந்த வித வெட்கமும் இல்லாமல் எப்படி உங்களால் எடுத்து போட முடிகிறது. அந்த தகவலை சேகரித்து எனது வலைப்பதிவில் இட்டது நான். வலைப்பதிவில் எனது பெயர் வேறு ஆகா இருக்கலாம். இதுவரை வெட்டி ஒட்டும் போது அவை செய்தி தளங்களில் இருந்து வெட்டி ஒட்டுதல் ஆக இருந்தமையால் அதை அதிகம் நான் பொருட் படுத்துவதில்லை. சொந்தமாக சேகரிக்கும் திறமை இருக்க வேண்டும் இல்லாது விட்டால் திருடிய இடத்தை சொல்லும் நேர்மையாவது இருக்க வேண்டும் இரண்டும் இல்லாது எதற்கு வலைப்பதிவு வைத்திருக்கிறீர்கள்.

நிர்வாகத்திடம் ஒரு வேண்டு கோள் இப்படி அடுத்தவர் முயற்சியை திருடி தமது பெயரில் வெளியிடுபவர்களை எவ்வளவு நாளைக்கு பொறுத்து கொள்ள போகிறீர்கள்

என்ன நல்ல கெட்டி தனம் தான் பதிந்த செய்தி இருந்த சுவடே தெரியாமல் தலைப்பை மாற்றி அமைத்து செய்தியையும், வலைப்பதிவில் திருடி இட்டதையும் நீக்கிவிட்டால் ஆதாரம் இல்லை என்று ஆகிவிடுமா. கணனி திரையை படி எடுத்து வைத்துள்ளேன்.

isoorya1la8.th.jpg

isoorya2uk9.th.jpg

isoorya3rw2.th.jpg

isoorya4lt9.th.jpg

நிர்வாகத்தின் கவனத்துக்கு. முன்னர் யாழ் களத்தில் ஒரு விதி இருந்தது ஒரு செய்தியை/ பதிலை எழுதி விட்டால் அதன் மூல கருத்தில் திருத்தம் செய்யும் போது அதன் பொருள் மாறுபடாது திருத்த வேண்டும் என்று. அது இப்போதும் அமுலில் உள்ளதா?

Edited by KULAKADDAN

நான் எனது பதிலை இட்ட பின் ஐ சூர்யா எனும் அங்கத்தவர் தனது மூல செய்தியையும் அதன் தலைப்பையும் மாற்றி இட்டுள்ளார். அவரது வலைப்பதிவின் கணனி திரையையே பிரதி எடுத்திருந்தேன். யாழ் களத்தின் திரையை நான் பிரதி எடுக்கவில்லை. மூல செய்தியில் அவர் மற்றம் செய்ததால் நானும் அவரது வலைப்பதிவின் கணனி திரை பிரதியை இங்கு பிரதியிட வேண்டியதாகிவிட்டது. அவர் தனது வலைப்பதிவில் இருந்தும் அதை நீக்கியதால் வலைப்பதிவின் கணனி திரை பிரதியை இணைத்துள்ளேன்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வலைப்பதிவில் மாயா பற்றிய தகவல்கள் இல்லையே. விலைப்பட்டியல் தானே இருக்கிறது. ஏன் இத்தலைப்புக்குள் அந்தக் குற்றச்சாட்டை செய்கிறீர்கள்..??! இரண்டுக்கும் ஏதேனும் தொடர்புகள்..??! அல்லது தலைப்பையே மாற்றி வேறு விடயத்தை தந்து விட்டார்களா..??! :mellow::mellow:

Edited by nedukkalapoovan

உங்கள் வலைப்பதிவில் மாயா பற்றிய தகவல்கள் இல்லையே. விலைப்பட்டியல் தானே இருக்கிறது. ஏன் இத்தலைப்புக்குள் அந்தக் குற்றச்சாட்டை செய்கிறீர்கள்..??! இரண்டுக்கும் ஏதேனும் தொடர்புகள்..??! அல்லது தலைப்பையே மாற்றி வேறு விடயத்தை தந்து விட்டார்களா..??! :mellow::mellow:

இல்லை நெடுக்காலபோவான். முதலில் எனது வலைப்பதிவில் இருந்து திருடி தனது வலைப்பதிவில் இட்டிருந்த யாழ்ப்பாணத்து விலைப்பட்டியல் எனும் செய்தியை அட்சரம் பிசகாமல் யாழ்களத்தில் வழமை போலவே தனது சொந்த செய்தி போல் இணைத்திருந்தார். அதை நான் சுட்டிக்காட்டியபின் தனது வலைப்பதிவில் இருந்து நீக்கிவிட்டு யாழ் களத்தில் இணைத்த செய்தியில் எனது வலைப்பதிவு இணைப்பை கொடுத்திருந்தார். பின்னர் யாழ் களத்தில் இணைத்த செய்தியை முழுமையாக நீக்கிவிட்டு மாயாவின் செய்தியை இணைத்திருக்கிறார்.யாழில் அவர் இணைத்த மூலத்தலைப்பை நான் பிரதியெடுக்கவில்லை. ஆனால் வலைப்பதிவை பிரதியெடுத்து வைத்திருந்தேன். அதனால் அதை நான் இணைத்திருக்கிறேன்.

இணைத்த படங்களில் கீழே யாழ்ப்பாண விலை எனும் ஒரு விண்டோஸ் எக்ஸ் புளோரர் தலைப்பு யாழில் அவர் இணைத்த செய்தியின் விண்டோஸ் எக்ஸ்புளோரர்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் அப்படித்தான் கு.கா. எனக்கும் இப்படி அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. யாழ் களத்தில் கூட சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.

-----

சூர்யா நீங்கள் பெறும் தகவலுக்கு மூலத்தைக் குறிப்பிடுவதில் என்ன தவறை.. அல்லது கெளரவக் குறைவைக் காண்கிறீர்கள். அதை தெளிவுபடுத்தினால் உங்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காணலாம்.

நீங்கள் இணைத்த பயனுள்ள தகவலை நீங்களே நீக்கிக் கொண்டது அவ்வளவு அழகான செயல் அல்ல. அதற்கு மூலத்தைக் குறிப்பிட்டு.. அதனை அப்படியே விட்டிருக்கலாமே. அதுதான் உண்மையான ஒரு செய்திச் சேவையை மக்களுக்காக வழங்குவதன் நோக்கமாக இருக்க முடியும்.

செய்தி மக்களுக்குச் சொல்லவே அன்றி.. பூட்டி வைக்கவோ.. வலைப்பூவை.. இணையத்தளத்தை அலங்கரிக்கவோ அல்ல...!

உங்களின் செயலுக்காக கு.கா விடம் வருத்தம் தெரிவித்துவிட்டு.. அதே செய்தியை.. வலைப்பூவிலும் இங்கும் மூலம் குறிப்பிட்டு பிரசுரிப்பதே வாசகர்களை ஏமாற்றாத செயலாக இருக்க முடியும்..! :mellow::mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள்

இந்த அரும்பெரும் பொக்கிசமான அந்த பாடகியை அறிவதை விட்டுவிட்டு

எதைப்பற்றி கதைத்துக்கொண்டிருக்கிக்றோம

இதிலிருந்து தெரியவில்லையா எவ்வளவு பயப்படுகிறார்கள் எவ்வளவு உசாராக இருக்கிறார்கள் என்று...

மிக முக்கியமான சந்தோசமான செய்தி இது....

எங்களுக்கு கிடைத்த செய்திதான் முக்கியம்.....அதனைத்தந்தவருக்க

ும் நன்றிகள்...

மாயா போன்று பல ஈழத்தமிழர்கள் உலகமுழுவதும் இலைமறைகாயாக இருக்கிறார்கள்..

எமது விடுதலை போராட்டம் உலகிற்கு எடுத்து செல்லப்பட்டிருக்கு... இவர் போன்ற திறமையானவர்கள்

ஊக்கிவிக்கபடல் வேண்டும்....

வெளிகொண்டுவ்ரப்படவெண்டும்....

அதைட்டு.... சிஙளவர்கள் உடனேயெ தொடங்கிவிட்டர்கள் பயஙரவாதத்திற்கு நிதி சேர்ப்பவர்கள்

என்று... முதலிலேயெ கரிபூசி அமுக்கிவிடலாம் என்று....

எனவே எம்மக்கள் நிச்சயமாக ஊக்கிவிக்கப்படல் வேண்டும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள நாய்கள் அவருக்கு எதிராப் பிரச்சாரம் செய்கின்றார்கள். எதிரி எப்படி முயற்சியெல்லாம் செய்கின்றார்கள் என்பதை வெறும் வாய்ப் பேச்சினூடாக நாம் முடித்துக் கொள்ளாமல் பதிலுரைக்கவேண்டும்.

http://www.youtube.com/watch?v=7NxWQY8yu4I

இவன் ஒரு சிங்கள இனவெறி கொள் பாடகன்:

அத்துடன் இவருக்கு எதிரான கருத்துக்களுடன் ஒரு மின்னஞ்சல் சிங்களவரிடையே பரப்பப்பட்டுளது, இப்பொழுது youtube இல் இவருடைய பாடல்களுக்கு இனவாத கருத்துக்களை போட்டு வருகிறார்கள்.சிங்கள மொழியிலான அந்த மின்னஞ்சல் இவ்வாறு செய்ய கோரியிருக்கும் என நினைக்கிறன்

இவரது முதல் தொகுப்பு 2005 இல் வந்திருந்தாலும் , தமிழ் ஊடகங்களில் இவர் தொடர்பான செய்திகள் முன்னர் வந்ததாய் தெரியவில்லை,

வந்ததா??????????

புலத்து எமது ஈழத்து இளைஞர்கள் பாடல்கள் இங்கே உள்ளன... :mellow:

http://worldtv.com/eelamboys/ :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இவரது முதல் தொகுப்பு 2005 இல் வந்திருந்தாலும் , தமிழ் ஊடகங்களில் இவர் தொடர்பான செய்திகள் முன்னர் வந்ததாய் தெரியவில்லை,

வந்ததா??????????

இவருக்கு எப்படி இவ்வளவு உசார் என வியந்ததுண்டு

ஆனால் இன்றுதான் தெரிந்தது

அருளரின்...............

புலிக்கு பிறந்தது.......................???

ஒரு சிறந்த பாடகி. பல ஆங்கில பத்திரிகைகளில் இவர் படமும் செய்திகளும் வந்திருக்கின்றன. லண்டன் மெட்றோவில் இவர் படம் முதல் பக்கத்தில் அரை பக்கத்திற்க்கு வந்திருக்கிறது. இவர் பிறேசிலிலும் பிரபலம்... மற்றும் இவர் ஒரு சொந்தமுயற்சியில் உயர்ந்த மல்டி மில்லியனர். :)

இங்கிலாந்தை எடுத்துக்கொண்டா... ஒரு 30% 35% தமிழர்களுக்கு இவர் அருமை பெருமைகள் தெரிந்திருக்கின்றது... மிச்சம் வட்டத்தை விட்டு வெளியேவரமறுப்பவர்கள். :lol:

...

...

...

நானும் பார்த்தேன் பொன்னு... என்ன துவேஷம்....... இவனுகளுக்கு சரியான பதிலடி கொடுக்கவேண்டும்

மற்றும் இவன் ஒரு பிரபலம்தேடும் பாடகன்...... ஆகவே கவனமாக கையாளவேண்டும்.... :mellow::mellow::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் மாயாவின் சில பாடல்களை கேட்டுள்ளேன், ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவை எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை. இதற்கு பதிலாக தமிழ்-ராப் பாடல்களையே கேட்கலாம். மாயா காணொளிகளில் தோன்றும் காட்சிகளும் அவ்வளவு நல்லதாக இல்லை.

மு.கு.

இணையத்தளத்தை பார்க்க சூரியக்கண்ணாடி தேவை!

ஐசூர்யா உங்களுக்கு பலமுறை செய்தி இணைத்தல் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. வேறு பல செய்தி இதழ்களிலும், இணையங்களிலும் செய்திகளை எடுத்து உங்கள் வலைப்பதிவில் இணைத்துவிட்டு, பின்னர் அது உங்களுடைய செய்திபோல் யாழ்களத்தில் இணைக்கிறீர்கள். அதன் மூலத்தைக் கூட நீங்கள் குறிப்பிடுவதில்லை. ஒரு ஆக்கத்தின் பின்னால் அல்லது ஒரு செய்தியின் பின்னால் இருக்கிற உழைப்புக்கு நீங்கள் மதிப்புக் கொடுப்பதில்லை.

செய்தியை அரைகுறையாக இணைத்து மிகுதியைப் படிக்க உங்கள் தளத்துக்கு இணைப்பு கொடுப்பது தொடர்பாகவும் நாம் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறோம். அதனையும் அலட்சியப்படுத்தியுள்ளீர்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள நாய்கள் அவருக்கு எதிராப் பிரச்சாரம் செய்கின்றார்கள். எதிரி எப்படி முயற்சியெல்லாம் செய்கின்றார்கள் என்பதை வெறும் வாய்ப் பேச்சினூடாக நாம் முடித்துக் கொள்ளாமல் பதிலுரைக்கவேண்டும்.

http://www.youtube.com/watch?v=7NxWQY8yu4I

இவன் ஒரு சிங்கள இனவெறி கொள் பாடகன்:

பலருடைய முயற்சியால் அந்த சிங்களவனின் பாடல்கள் யூடுபில் இநருந்து நீக்கப்பட்டன.. தயவுசெய்து நீகள் இப்படியான இனத்துவேச பாடல்களை பார்த்தல் அதை 'பிளாக்' பண்ணுவதன் மூலம் நீக்கிவிடலாம்... மாயாவோடு ஒப்பிட்டால் அவர் ஒரு தூசி..அனாலும் எங்களுக்கு எதிரான பரப்புரைகளில் இதுவும் ஒன்று...எனவே மக்களே...ஒன்றுபடுங்கள்...

வெட்டி ஒட்டல்களால் வளர்ந் பெரிய இணயங்களில் முக்கியமானது லங்காசிறி அதோடு நமது யாழுமே... :icon_idea: இன்றுவரை அதெல்லாம் சொல்லி சொல்லி இப்ப நிலமை கொஞ்சம் மாறி இருக்கு.... :(:D இசூரியா அந்த காலம்போயிட்டு. :D

சிங்கள நாய்கள் அவருக்கு எதிராப் பிரச்சாரம் செய்கின்றார்கள். எதிரி எப்படி முயற்சியெல்லாம் செய்கின்றார்கள் என்பதை வெறும் வாய்ப் பேச்சினூடாக நாம் முடித்துக் கொள்ளாமல் பதிலுரைக்கவேண்டும்.

http://www.youtube.com/watch?v=7NxWQY8yu4I

இப்போ அப்ப நடந்த மாதிரியே You tube, Google, Dailymotion வீடியோக்களில் அல்லது தேவையான எம் தமிழ் அத்த பிரதிகளை எடுத்துமாற்றம் நடந்துவருவது... :(:unsure: நல்லதாக தெரியவிலை இதுவும் எப்படிவந்து முடியப்போகிறதோ... :(:D:o

ஒரிஜினல் பாடல்..... பேப்பர் பிளேன்ஸ்....

M.I.A. accused of terrorist imagery

If Sri Lankan hip-hop Mavon DeLon is to be believed, M.I.A. might not have been kidding when she said `All I wanna do is (bang bang bang bang)...and take your money.`

On July 29, he posted a remix video disc of the British rapper`s `Paper Planes` on YouTube that claims M.I.A. used imagery from the LTTE.

The video consists of a graphic montage of terrorist victims, child soldiers, and the lady in question, set to a remix of `Paper Planes` that has DeLon bellowing, `Yo, here`s for all you people that really think that M.I.A. is a freedom fighter, trying to dress up like her. Let me give you some facts...` It also makes the not-so-subtle insinuation that M.I.A. has traded in her bona fides for dolla dolla bills and the depiction is, to say the least, unflattering.

This probably couldn`t come at a worse time for M.I.A., who is herself a Sri Lankan and whose song is being heavily promoted for the film Pineapple Express , which hits film theatres today. According to the video, which cites the FBI, the LTTE `perfected the use of suicide bombers, invented the suicide belt, pioneered the use of women in suicide attacks, murdered some 4,000 people in the past two years alone, and assassinated two world leaders.`

DeLon has drawn attention as a rising star in the international hip-hop scene, especially for his willingness to stand up to the LTTE, and is the first Sri Lankan/American to ever make it to the Billboard charts. His video is no longer available on YouTube, as it was given a cease-and-desist from Interscope Records for `endangering M.I.A.`s reputation as a freedom fighter.`

As a result, DeLon is now filing a lawsuit against Interscope/UMG for infringement of his First Amendment rights.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.