Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி விரைவில் வீழும் - மகிந்த சூளுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி விரைவில் வீழும் - மகிந்த சூளுரை

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

கிளிநொச்சியை வெகு விரைவில் மீட்டுவிடுவோம் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு நோக்கிய யுத்தத்தில் புதிய போரியல் தந்திரரோபாயங்களைப் பயன்படுத்துவதால் எமது படையினர் முன்னேறிவருகின்றனர். வெகு விரைவில் கிளிநொச்சி நகரம் எமது படையினரின் வசம் வீழும். வராற்றப் புகழ்மிக்க எமது படைவீரர்கள் யுத்தகளத்தில் முன்னேறிவருவின்றனர். இவர்களுக்கு நாங்கள் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச சகோதரர் கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்தினம் கிளிநொச்சியை மீட்பதற்கு இன்னும் நான்கு மாதகள் தேவை எனத் தெரிவித்திருந்தார். இதேபோன்று இராணுவத் தளபதி பல காலக்கெடுக்களை விதித்திருந்தார். அமைச்சர் ரம்புக்வெல கிளிநொச்சியிலிருந்து 21 கிலோ மீற்றரில் சிறீலங்காப் படையினர் நிற்பதாக கூறினார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க கிளிநொச்சி விரைவில் அரச அலுவலகங்கள் என கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இவ்வாறு ஆட்சியில் இருந்த பல அரச தலைவர்களும், அமைச்சர்களும், படைத்தளபதிகளும் பல காலக்கெடுக்களை விதித்திருந்தனர். ஆனால் நடந்த சம்பவங்களே வேறு. அதேபோன்று மகிந்தவும் இன்றும் காலக்கெடு விதித்துள்ளார்.

http://www.pathivu.com/?p=2866

மகிந்தவின்ரை ஆசையை ஏன் கெடுப்பான். இப்ப தானே புது அரசியல் dynasty ஒன்றை கட்டியெழுப்ப ஆரம்பிச்சிருக்கிறார்.

சமாதான செயலகத்துக்கு முன்னுக் ஆமி நிக்கிற படங்கள் defense.lk இல வரும். :)

மகிந்தவின்ரை ஆசையை ஏன் கெடுப்பான். இப்ப தானே புது அரசியல் dynasty ஒன்றை கட்டியெழுப்ப ஆரம்பிச்சிருக்கிறார்.

சமாதான செயலகத்துக்கு முன்னுக் ஆமி நிக்கிற படங்கள் defense.lk இல வரும். :)

இதில் என்ன அதிசயம் இருக்கு? இலங்கை அரசாங்கத்தின் சமாதான செயலகத்துக்கு இலங்கை அரசின் படைகள் பாதுகாப்பு போடுவதில் தப்பு என்ன/

கிளிநொச்சியையும் பிடிக்கலாம் அங்கே கிளிநொச்சி வீழாது. சிங்களப் படைகள் வீழும்.

1990 ஆம ஆண்டு ஜூலை மாதம் 08 ஆம் திகதியன்று அப்போது சிறிலங்கா அரச பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேயரத்ன நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது :

'.....நான் முழுப்பலத்துடன் புலிகளைத் துரத்திச் செல்வேன். எனக்குப் பிரபாகரனின் தலை தேவையாக உள்ளது. நான் ஜேவி.பியை நிர்மூலமாக்கியுள்ளேன். எனவே அதே போன்று நான் விடுதலைப்புலிகள் அமைப்பையும் நிர்மூலமாக்குவேன்....' என சவால் விட்டிருந்தார்.

அவர் அவ்வாறு உரை நிகழ்த்தி ஒன்பது மாதங்கள் கடந்திருந்த வேளையில்இ அதாவது 1991ம் ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதியன்று அவரது தலை தான் இல்லாமல் போனது.

மல்ரி பரல் பீரங்கிகளையும் டாங்கிகளையும் ஆட்டிலெறி பிரங்கிகளையும் கடல் வழியால் கொண்டு போய் இறக்கிறது கஷ்டம் என்று தெரிந்த படியால் மகிந்த மாத்தய அவற்றை அண்ணைக்கு அன்பளிப்பா கொடக்கிறதுக்கு முடிவெடுத்திருக்கிறார்

எங்கடை ஊர் முழுக்க கோயில்கள் தானே. எல்லாரும் ஏதோ ஒரு கோயிலடி ஆக்கள் தான். எங்கடை சிந்தனை பொருளாதார வளம் எல்லாத்தையும் ஏதோ தேசிய நலன் மாதிரி உதுகளில தானே குவிச்சு உலக சாதனை படைச்சிருக்கிறம். அதுவே இப்ப புலம்பெயர்ந்த நாடுகளில தொடருது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26655

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:huh: முனிவர்,

சிலருக்கு ஒரு குணம் இருக்கிறது. சனம் என்னத்தைச் செய்யுதோ அல்லது சொல்லுதோ அதற்கு எதிராகத்தான் கதைப்பது அல்லது செயல்படுவது. இது ஒருவகையில் தனது சுய விளம்பரத்துக்காக அவர்கள் செய்யும் வேலை. இப்படி எழுதுவதாலோ அல்லது கதைப்பதாலோ தாங்கள் மற்ற எல்லோரிலும் இருந்து வேறுபட்டவர்களாகக் காட்டப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக இவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் குறுக்கு. அவரைப் பின்பற்றி இப்ப இன்னொருத்தரும் நுளைஞ்சிருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இவர்களின் கருத்துக்களில் மற்றையவர்களின் கருத்துக்களின் மேல் ஏளனமும், நகைப்பும் தான் தொக்கி நிற்கும். இவர்களைப் பொறுத்தவரை தம்மைத்தவிர ஏனையவர்கள் எல்லோருமே அறிவற்றவர்கள். புலிகள் அடித்து நொருக்கிக் கொண்டு வெற்றியடைந்து வருவதாகக் கனவு காணும் முட்டாள் மனிதர்கள்.கனவுலகில் வசிக்கும் அற்பப் பதர்கள்.

வன்னியில் இப்ப நடக்கு நிகழ்வுகள் எம் எல்லோரையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. இதனால் போராட்டம் இன்னும் இன்னும் பின்னோக்கிப் போகப் போகின்றதே என்ற நியாயமான பயம் எம் எல்லோருக்கும் பற்றிக்கொண்டுள்ளது.இந்த நிலை மாற தமிழ்த் தேசியம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கவலையுடனான எதிர்பார்ப்பு எம் எல்லோருக்கும் இன்று இருக்கிறது. சிங்களவன் கண்டுவரும் முன்னேற்றம் அவ்வளவு நல்லதிற்கில்லை என்று உள்மனம் சொல்லிக் கொண்டிருக்கு. அப்படியிருக்கும் போது இந்த அதிபுத்திசாலிகள்(என்று தம்மைத்தாமே நினைத்துக்கொள்ளும்) வன்னியின் நிலமை தம்மைத்தவிர இந்த உலகில் வேறு எவருக்கும் தெரியாது என்று எண்ணிக் கருத்து எழுதும்போது உண்மையிலேயே மிகவும் சினம் வருகிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை.

சொந்தமாகக் கருத்து எழுத வக்கில்லையென்றால் பேசாமல் மூடிக் கொண்டிருக்க வேணும்.அதை விட்டுப் போட்டு மற்றயவன் எழுதின கருத்தில மயிர் புடுங்கிறேன் பார் எண்டால் என்ன செய்யிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது கருத்து

.....................தேங்கி நிற்கும் மழைநீரில் தூண்டில் போடாதீர்கள் மீன் கிடக்காது [டவளை.......தவளை, மோக்கான்,பாம்பு ]என்பதுதான் கிடைக்கும்

சற்று வெளியில் வாங்கோ வாய்பேசும் ........................................................ :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஊர் முழுக்க கோயில்கள் தானே. எல்லாரும் ஏதோ ஒரு கோயிலடி ஆக்கள் தான். எங்கடை சிந்தனை பொருளாதார வளம் எல்லாத்தையும் ஏதோ தேசிய நலன் மாதிரி உதுகளில தானே குவிச்சு உலக சாதனை படைச்சிருக்கிறம். அதுவே இப்ப புலம்பெயர்ந்த நாடுகளில தொடருது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26655

குறிப்பிட்டளவு ? வருமானம் வருவதை மறுக்கமுடியாதல்லவா. இதிலிருந்து என்ன தெரியுது எண்டா முதல் போடாமலே இலாபம் சம்பாதிக்க கூடிய ஒரே நிறுவனம்(?) கோயில்தான். அதில எத்தனையத்தான் உருவாக்கினால் யாருக்கப்பு நட்டம்?

இங்கே இந்தக் களத்தில் புலிகள் ஏன் இன்னும் அடிக்கவில்லை.? தோல்வியுற்று ஓடுகினம் என்கிற கணக்கில் கருத்தெழுதும் கணனிப் புரட்சியாளர்களுக்கு.... தயவு செய்து கள நிலைமையை ஒரே ஒரு கணம் உங்கள் மனதில் நிறுத்தி சிந்தித்துப் பாருங்கள்..... ஒரு களமுனையின் குவிமத்தை நோக்கி நிமிடத்துக்கு 400 மல்ரிபரல் செல்கள் அவற்றுக்கு வலு சேர்க்கும் விதத்தில் ஆட்லெறி மற்றும் பீரங்கித்தாக்குதல்கள் விமானக் கண்டு வீச்சு என்று ஒரே நெருப்பு மழையை பொழிந்து கொண்டுதான் எதிரி எங்கள் தாயகத்தை ஆக்கிரமிப்பச் செய்ய முயன்று கொண்டிருக்கிறான்.இவற்றுக்கு மத்தியில் எங்கள் போராளிகள் தங்கள் உயிரையும் இரத்தத்தையும் ஆகுதியாக்கி தளரா மனத்துடனும் கொள்கை உறுதியுடனும் போராடிக்கொண்டிருக்கிறார்கள;

. எதிரியின் பிரதான நோக்கமே தான் வகை தொகையின்றி வாங்கிக் குவித்து வைத்திருக்கும் மல்லிபரல் குண்டுகளைக் கொண்டு இயன்ற வரை விடுதலைப்புலிகளுக்கு அதிகளவு ஆள் இழப்புக்களை ஏற்படுத்துவது அவர்களது வெடி பொருள் கையிருப்பை ஒழிப்பது.வன்னி மண்ணை அறிந்தவர்களுக்கு வன்னியின் புவியியல் சூழலை அறிந்தவர்களுக்கு அடுத்து வரும் மாதங்கள் அங்கே அகலக் கால் வைத்திருக்கும் சிறீலங்கா படையினர் எப்படிப்பட்ட பேராபத்தை சந்திக்கப் போகிறார்கள்.அந்த வன்னி மண்ணே அவர்களுக்கு பதை குழியாக மாறப் போகிறது என்பது புரியும். எதிரிமூர்க்கத் தனமான ஆயதபலத்துடன் முன்னேறும் போது பின் வாங்கு.அவன் தாக்குதல் நிலையில் இருக்கும் போது நீ தற்காப்பு நிலை எடுத்து உன்னைத் தயார் படுத்திக் கொள்.எதிரி தற்காப்பு நிலை எடுக்கும் போது அவன் எதிர் பார்க்காத வகையில் எதிர்பாக்காத இடங்களில் இருந்து மூர்க்கத்தனமான தாக்கதல்களை தொடுத.;து அவனைத் துடைத்து அழி. என்பது தானே ஒரு விடுதலை இராணுவம் கைகொள்ள வேண்டிய அடிப்படை இராணுவ தந்திரோபாயம். எதிரியை எதுவரை விடுவது.எங்கே எப்போது எப்படி அவன் மீது தாக்குதல் தொடுப்பது என்பதை எங்கள் தேசித்தலைவர் பார்த்துக் கௌ;வார்.அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மனதை தளரவிடாதீர்கள்.எதிரி தனது உளவியல் பேரில் வெற்றியடைவதற்கு தயவு செய்து இடங்கொடுத்துவிடாதீர்கள்.பேhர

ாட்டத்தின் மீதும் தேசித்தலைவர் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள்அங்கே உங்களுக்காவும் சேர்த்து எங்கள் போராளிகள் படும் கஸ்டத்தை செய்யும் ஈகத்தை வைத்து தயவு செய்து எழுத்து வியாபாரம் செய்யாதீர்கள்.

Edited by athiyan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு மில்லரால் கலங்கிய அரசு கலங்கும் நாள் வெகு தூரத்திலில்லை. அத்தோடு புல்லுருவிகள் யாழில் இருந்தால் என்ன வெளியில் இருந்தாலென்ன இனம் காணப்பட வேண்டும்.

உறவுகளே ஒருகணம் சிந்தியுங்கள் நாம் அனைவரும் தமிழர்களே. தமிழர்களாகவே வாழ்வோம். எம் இனத்தை வேரோடு சாய்த்துவிட சிங்களவெறியர்கள் முயற்சிசெய்கிறார்கள். இதற்கு நாமே துணைபோகலாமா. எம்மையும் எம்மினத்தையும் காக்க தங்கள் உயிரையும்துச்சமென நினைத்து போர்களத்தில் போராடும் எம் உறவுகளுக்கு உறுதுணையாய் இருப்போம். ஊக்கமான கருத்துக்களை முன்வைப்போம். அவர்களும் எம்களத்தை பார்க்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எங்கோ ஓரிடத்தில் கவிதை ஒன்றுபடித்திருந்தேன் அதில் வன்னியில் சேவல் கூவி விடிவதில்லை செல்கள் கூவியே விடிகின்றன என்று

உண்மைதான் உறவுகளே அங்குள்ள உறவுகளையும் சற்றுச்சிந்தியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.