Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன் New Message

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bank Adress

Postbanken,

N-0021 Oslo,

Norway.

Shanmugampillai Jayapalan

Bank Account no. 0532 51 18328

Payment from abroad,

use the IBAN number NO9705314490942,

and BIC-code (Swift-address)

DNBANOKK.

நன்றி ஈசன், எனக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்புங்கள். நட்பை வேட்கிறேன்

பல நூற்றுக்கணக்கானோர் உங்கள் பாடல்களை தரவிறக்கம் செய்துள்ளார்கள் என்றால் இது பல நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் உங்கள் படைப்பை மேடை யேற்றியதற்கு சமானமாகும். இது ஒரு கவிஞருக்கு கிடைத்த வெற்றியே.

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், கவிஞர், வங்கிக் கணக்கு இலக்கங்களை இப்படி விளாவாரியாக ஒரு பொதுக் களத்தில் பரிமாறிக் கொள்வது எவ்வளவு பாதுகாப்பானதோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் மட்டுமே வலைத் தானம் அல்ல. - நோர்வே யாழ்கள நண்பர்களே. வரும் 20ம் திகதி பாலை இசைத் தொகுப்பு வெளியீடு இடம்பெறுகிறது. பாலையில் உள்ள சில பாடல்களுக்கு தமிழக முன்னணி நடனக் கலைஞர் நர்த்தகி நடராசன் நடனம் ஆடுகிறார். பாலையில் உள்ள வேறுசில பாடல்களுக்கு நர்தகி நடராசனின் தயரிப்பில் தமிழினி சிவலிங்கமும் அவரது மாணவர்களும் நடனமாடுகிறார்கள்.

நான் பாலை பாடல்களை வாசுகிக்குத் தெரியாமல்தான் யாழில் இணைத்தேன். வாசுகிதான் கடன்பட்டு பணம் முதலீடு செய்தாள். பலர் பாடல் பிரதி வைத்திருக்கிறதாகவும் பாடலை யாழில் பெற்றதாகச் சொன்னபோது மனச்சோர்வுடன் என்னைத் தொடர்புகொண்டாள். நோர்வே யாழ்கள நண்பர்கள் எல்லோரும் படலை வலைப்படுத்தியிருந்தாலும் நிச்சயமாக விழவில் சிடி வாங்குவார்கள் என்று சொன்னேன். தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள். பாலை இசைத்தொகுப்புப் பாடல்கள் உங்களுக்கும் உங்களிடமிருந்து பிரதி பெறுகிறவர்களுக்கும் என்னால் கடனாகவே வளங்கப் பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஈசன் முதல்வராக இந்த கலைக் கடனைத் தீர்க்க முன்வந்தமைக்கு நன்றி. இதுபற்றி நான் எனது அடுத்த நூலில் பதிவுசெய்வேன்.

ஈசன் முன்பணமின்றி நம்பிகையின் அடிப்படையில் ஒரு தரமான இசைத்தொகுப்பு கொள்பவர்களது நாணயத்தை நம்பி சுடச் சுட வலையில் வளங்கப் படுவது படுவது இதுவே முதல்த் தடவை என்று கண்ணன் உட்பட விமர்ச்சகர்கள் சொல்கிறார்கள். அற்புதமான பாலை இசைத்தொகுப்பை வலைத்தானம் செய்துவிட்டதாகக் கவலைப்பட்ட ஒரு இந்திய விமர்சகருக்கு இது வலைத் தானம் அல்ல, யாழில் பலர் தானம் பெறுகிற நிலையில் இல்லை இது வலைக் கடன் மட்டுமே என்றும் பதிலளித்தேன்.. நேற்று 12.09.2008 கலையில் டெல்கியைச் சேர்ந்த CNN IBN தொலைக் காட்சியினர் என்னை பேட்டி எடுத்தார்கள். இந்திய வெள்யுறவுக்கொள்கை, பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் தெரியாமல் சோனியா அம்மையார் வீட்டில் வத்து இலங்கை அரசுக்கு இராணுவ ஆதரவு வளங்கும் முடிவுகளை எடுத்தல், எம்.கே.நாராயனன் போன்று பல விடயங்கள் தொடர்பாக ஆணி அடிக்கும் விமர்சனங்களுடன் பேட்டி கொடுத்திருக்கிறேன். எதுவும் நிகளலாம். ஈசன் நீங்கள் எனது இசைத்தொகுதிக்காக அனுப்பிய பணம் எனக்கு நிச்சயம் பெரிய காரியங்களைச் செய்ய உதவும்.

நன்றி ஈசன் நம்து செயல்பாடுகலால் வலைக் கடனாகச் சிருஸ்டிகலை வலங்குதல், பெற்ற வலைக் கடனை செலுத்துதல் என்கிற புதிய கருத்தாகத்தை தமிழ் கலைப் படைப்பாளிகளுக்கும் இரசிகர்களுக்கும் ஆக்கித்தந்த்ருக்கிறோம். ஜஸ்ரினுக்கும் எனமது நன்றி.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

20ம் திகதி பாலை இசைத் தொகுப்பு வெளியீடு சிறப்புடன் நடைபெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே! வணக்கம்.

கனடா, அமெரிக்க யாழ்க்கள நண்பர்களின் ஒத்துழைப்புடன் நானும் இணைந்து உங்களுடைய பாலை இறுவட்டை பெற்றுக் கொள்ளவிரும்புகிறோம். எங்களுக்கு 25 இறுவட்டுகள் கிடைக்கக்கூடியவாறு வழி செய்யமுடியுமா? இது உங்கள் இலக்கியப் பணிக்காக, யாழ்க்கள நண்பர்வட்டத்தில் இணைந்திருக்கும் உங்களுக்கு நாங்கள் செய்யும் எம்மாலான ஒரு உற்சாகமூட்டலே. நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய சக கவிஞர் வல்வை சாகராவுக்கு, பாலை இசைத்தொகுப்புத் தொடர்பான தோழமைமிக்க தாங்கள் பாராட்டுக்கள் தொலைபேசி ஆதரவில் தொனித்த சத்தியம் தொடர்ந்து தாங்கள் எடுத்துள்ள முயற்ச்சிகள் யாவற்றுக்கும் நன்றி. முதலில் வலையில் பிரதி பண்ணிக் கொள்ளுங்கள். வலையில் ஏற்றியதால் வினியோகத்தர்கள் பின்வாங்குவதால் கனவுகாணும் ஏழைக்கவிஞனின் தலையில் சம்பந்தமில்லாத உற்பத்தி வினியோகப் பணிகள் விழுந்துள்ளது.

நான் பல்வேறு நெருக்கடிகளில் இருப்பதால் பிரதிகள் தயாரித்து அனுப்ப அவகாசம் வேண்டும். இதோ இப்பவே

அனுப்புகிறேன் என வாக்களிக்க முடியவில்லை.

நாளை செவ்வாய்க் கிளமை CNN IBN தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் இனகொலைக்கு உதவுவதாக ----------- குற்றம்சாட்டும் என் கடுமையான பேட்டியின்பின்னர் இங்கு இருக்க முடியுமா அல்லது எங்கிருக்க நேருமோ என்பது தெரியவில்லை. உடைந்துபோகலாம் என்கிற பயத்தில் புக்லாண்ட் போன்ற புத்தகக் கடைகள் அஞ்சலில் சிடி அனுப்பும் பொறுப்பை ஏற்க்க மறுக்கிறார்கள். பிரதிகள் தயாரிக்க ஈசன் அனுப்பும் பணத்தை முடக்கவுள்ளேன். கனடாவில் இருந்து யாரும் வந்தால் கொடுத்துவிடலாம். அல்லது எனக்கு அவகாசம் தாருங்கள்.

என்னுடைய கலை உழைப்பை என்னுடைய முதலீட்டை இலவசமாக எடுத்துக்கொள்ள விரும்பாத உங்கள் நல்மனசை வாழ்த்துகிறேன். எதற்க்கும் முதலில் வலைஊடாக நீங்களே பிரதிகள் எடுத்துக்கொள்ளுங்கள் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய கவிதயினி,

தொலைபேசியில் சொன்னதுபோல 25 பிரதி செய்துகொள்ளுங்கள். பணம் கிடைத்தால் வசதியாய் இருக்கும். சிடி நகல் பதிவு செய்யவேனும். பணமுள்ளபோது சிடி அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். தயவுசெய்து உங்கள் முகவரியையும் எனது ஈமெயிலுக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.

சிடி பெற்விரும்புகிற அனைவர்ம் இந்த நடைமுறையைக் கைகொள்ளவும்

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர் ஜெயபாலன் அவர்களுக்கு, இங்கு நான் தனிமடலில் தொடர்பு கொண்ட உறுப்பினர்களில் நால்வர் மாத்திரமே ஒவ்வொரு பிரதி வாங்குவதாகக் கூறியுள்ளார்கள். அவர்களும் உங்கள் பதிலைப் பார்த்திருப்பார்கள். ஆதலால் அவர்கள் நீங்கள் கூறியதுபோல் தாமே பதிவு செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். தங்கள் பங்களிப்பை அவர்கள் உங்களுக்கு நேரடியாகவே செய்வார்கள் என்றும் நம்புகிறேன். அடுத்து நீங்கள் கனடா வருவதாகக் கூறினீர்கள் அப்போது உங்களுடைய ஆக்கங்களை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன். வீணான அஞ்சல் செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

URGENT அன்புகுரிய ஈசன் தயவுசெய்து மன்னியுங்கள். நான் பிழையான IBAN இலக்கத்தை தந்துவிடேன்.. சரியான இலக்கம் NO 6105325118328

(NO நேர்வேயின் குறியீடு.

தயவுசெய்து உங்கள் கொடுபனவை மீழப்பெற்று திருப்பி அனுப்புங்கள். கவிஞர் வல்வைசாகரவும் இதனைக் கவனியுங்கள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வசி,

தமிழினியும் நீங்களும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள். நமக்குள் இதெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உன்னுடைய புதிய இசைத்தொகுப்பும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இசைப் பாடல்களே வாழ்வாய்த் திளைக்கும் உனக்கும் உன் காதல் மனைவிக்கும் திருமணபரிசாக எனது இசைத்தொகுப்பை வாசுகி தந்தது பொருத்தமானதே. நல்வாழ்த்துக்களுடன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை எனக்கு சிறிரஞ்சினி ஸ்ரெபான் மற்றும் கி.கோகிலா அவர்கள் அனுப்பிய பணம் கிடைத்துள்ளது. இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசுகியுடன் சேர்ந்து பாலை இசை தட்டு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கிறபோது பாலையாகிப்போன காலங்கள் வயிற்றினுள் பாம்புபோல நெழிகிறது. பழம்கனவாய்ப்போன இனத்தின் வாழ்வும் பாலையாகிவிட்டது. தனிப்பட என்னை அமுக்கிய பாலை கடன் சுமையை அடைக்க திரைத் துறைக்கு போக நேர்ந்ததது. என்னினும் 1996ல் ஆரம்பித்தது போலவே, ஜெயசுக்குறு தருணத்தில் தீவிரப் பட்டதுபோல எனது ஆய்வுப் பணிகளும் அறிக்கைகளும் தொடர்ந்தன. ஏனோ முன்போலலாமல் என் தோழர்கள் கேட்க்கவிம் பார்க்கவும் தவறிவிட்டனர். தைமாதமே தீப்பற்றிய புல்வெளியாய் என் தயகம் சாம்பல்மேடாகப் போவதை முன்னுணர்ந்து பாடுகமனமே http://www.yarl.com/forum3/index.php?showtopic=53138 கவிதையை எழுதினேன். மேற்படி கவிதை கலங்காதே தாய்மண்ணே என்ற தலைப்பில் இவ்வாரக் குமுதத்தில் வெளிவந்துள்ளது. நமது வாழ்வையும் போராட்டத்தையும் அதன் வரலாற்றுக் காவியத் தன்மை கெடாமல் எழுதுவதையே எனக்கு எங்சியுள்ள பணியாகக் காண்கிறேன். கடன்கள் அடைத்ததும் கலங்காதே தாய்மண்ணே என இன்னொரு இசைப் பேழை ஒன்று தயாரிக்கும் கனவு உள்ளது.

இந்த பக்கதில் உள்ள எனது பாடல்களின் தொடர்புச் சுட்டிகள் கிளிக் பண்ணும்போது செயல் படவில்லை. அதனை எப்படி மீண்டும் செயல்ப்பட வைக்கலாம் என்று யாராவது கூறுவீர்களா. அல்லது இந்த இணையத் தளத்தில் கேட்க்கலாம். http://voiceofthf.blogspot.com/2008_03_01_archive.html

அன்புடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Edited by poet

கடன்கள் அடைத்ததும் கலங்காதே தாய்மண்ணே என இன்னொரு இசைப் பேழை ஒன்று தயாரிக்கும் கனவு உள்ளது.

அன்புடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

அதனை தயாரிக்கும் போது தேவையேற்படின் உதவி கேட்கவும். முடிந்தால் உங்களுக்கு உதவ நான் உட்பட பலர் இருக்கின்றனர். அடுத்த முறையாவது 'வியாபார தந்திரம்' சிலவற்றையாவது செய்யவும். ஓசியில கவிதை கேட்டுவிட்டு காசு கொடுக்க மறுக்கும் சனம் அவ்வளவு கெதியில் திருந்தாது

dear Poet

kavithagal miga inimai, PLs mention your Bank A/c no,

oru kaiyagalagatha thamilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி சொன்னது போல அடுத்ததடவையாவது சில வியாபார நுணுக்கங்களை கவிஞர் கையாள்வது நல்லது. தனிப்பட்ட ரீதியில் நான் வாசகர்களை - ரசிகர்களை குறைசொல்ல மாட்டேன். நாம் சரியா விதத்தில் அவர்களிடம் கொண்டு சென்றால் போதும்.

வடலி என்னும் பதிப்பகம் + இணைய வழி நூல் வணிகத்தை ஆரம்பித்த கடந்த 3 மாதத்தில் இணைய வழியாக புத்தகங்கள் வாங்கியோரின் எண்ணிக்கை சராசரியாக தினத்திற்கு 3 ஆக இருக்கிறது. online sale 100 புத்தகங்களை தாண்டி செல்கிறோம். உண்மையில் நமது தமிழர்களை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை இது எனக்கு உணர்த்தியது.

கவிஞர் அடுத்த தடவை படைப்பாக்க முயற்சிகள் செய்யும் போது அகிலனைத் தொடபு கொள்ளுங்கள். உதவ தயாராயிருக்கிறோம்

இயலுமாயின் இங்கு சென்று பார்க்கவும்

www.vadaly.com/shop

Edited by sayanthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் திரு ஜெயபாலன் ஐய

நான் உங்களின் கவிதைகளை யாழ்ப்பாணத்திலிருந்த காலம் தொட்டு

இரசித்துவந்த சிறியவன் .மீண்டும் இங்கு வாசிக்ககிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி .

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இந்தவேளைகளில்

உங்களின் வரிகள் ஆதரவும் தேறுதலும் தருகின்றன .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்துக்கள் அத்தனையும் இதமாய் ஈரக்கிறது தொடரட்டும் உங்கள் பனி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிழலி, நாம் என்றும் சந்தித்ததில்லை எனினும் நீ நீண்டகாலமாகவே நலன் நாடும் தோழன், நெற்குளதானுக்கும் சேகுவேராவுக்கும் நன்றி. நான் வடலி அமைபினை தமிழகம் சென்றதும் சந்திப்பேன். என் கலைப் பணி தொடர வாழ்த்தும் உங்கள் மனசுக்கு நன்றி. எனினும்ொரு ஈழத் தமிழ் கலைஞனுக்கு கலைப் பணியைத் தொடர்வது எவ்வளவு கெட்ட கனவு என்பது எங்களுக்குத்தான் தெரியும். நான் எந்த ஈழத் தமிழ் கலைஞனையும் பெரும் விலை கொடுத்து உங்கள் கலைப்பணியைத் தொடருங்கள் என்று வற்புறுத்த மாட்டேன்.

Edited by poet

வணக்கம் நிழலி, நாம் என்றும் சந்தித்ததில்லை எனினும் நீ நீண்டகாலமாகவே நலன் நாடும் தோழன்,

நாம் பலதடவை சந்தித்துள்ளோம். வாசுகி அக்காவின் தேனீரும் அதை ஒட்டிய சம்பவமும் இன்னும் நினைவுகளில் இருக்கு. அது நான் சரிநிகரில் தொங்கிக் கொண்டிருந்த காலம். பல்கலைகழக அனுமதி பெற்றும் போக முடியாது மிரண்டு போய் இருந்த கெட்ட காலம்

உண்மையில் நமது தமிழர்களை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை இது எனக்கு உணர்த்தியது
.

நன்றிகள் சயந்தன் வாசகர்களாகிய எமக்காக குரல் கொடுத்தமைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்களின் இழப்பையும் இழவையும் எஞ்சியுள்ள நம்பிக்கைகளையும் பதிவுசெய்யும் முயற்ச்சியில் உள்ளேன். மேலும் பொருளாதாரம் இடம்கொடுக்கும்போது வெளியிட பாடல்களும் எழுதி வருகிறேன். உங்கள் பார்வையில் இந்த நாட்களின் இருளையும் நட்சதிரங்களையும் பற்றிய கருத்துக்களை அறிய விரும்புகிறேன். எழுதினால் மகிழ்வேன்

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்களின் இழப்பையும் இழவையும் எஞ்சியுள்ள நம்பிக்கைகளையும் பதிவுசெய்யும் முயற்ச்சியில் உள்ளேன். மேலும் பொருளாதாரம் இடம்கொடுக்கும்போது வெளியிட பாடல்களும் எழுதி வருகிறேன். உங்கள் பார்வையில் இந்த நாட்களின் இருளையும் நட்சதிரங்களையும் பற்றிய கருத்துக்களை அறிய விரும்புகிறேன். எழுதினால் மகிழ்வேன்

உண்மையான தேடல் அடிப்படையிலான விவாதங்களும் பங்களிப்புகளும் மேல்லோங்க வேண்டிய தருணமிது. அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமன்றி ஆய்வுபூர்வமான தேடல்கள் கலைக்கும்கூட அவசியமாகியுள்ளது. நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்கிற நக்கீரனின் மனசு ஒவ்வொரு படைபாளிக்கும் அவசியம். இக்காலக்கட்ட படைபாளிகளின் கவனத்துக்குரிய விடயங்கள் பற்றிக் கருத்துகள் எழுதப்பட்டால் மகிழ்ந்து வாழ்த்துவேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.