Jump to content

இந்தியாவில் புலிகளின் தடையை நீடிப்பதற்கான காரணத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் புலிகளின் தடையை நீடிப்பதற்கான காரணத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்து

[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 01:11.36 PM GMT +05:30 ]

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாயின் அதற்கான காரணத்தைச் சமர்ப்பிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது தொடர்பாக அமைப்பட்டிருக்கும் விசேட நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

நீதிமன்றுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி விக்ரம்ஜித் சென் , தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டுமாயின் நாளைய தினத்திற்குள் அதற்கான நியாயமான சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1992 ம் ஆண்டு , இந்தியாவின் 1967 ம் ஆண்டின் சட்டரீதியற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைசெய்யப்பட்டதன் பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை பின்னர் 2 வருடங்களுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை விசேட நீதிமன்றில் விடுதலைப் புலிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி , இந்தியாவின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் தடங்கல் இன்றி செயற்படுவதால் அந்த அமைப்பைத் தடை செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் நீதித்துறை எல்லைக்குள் இதற்கான வாய்ப்புகள் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

Link to comment
Share on other sites

தீர்ப்பு எல்லோருக்கும் தெரிந்ததுதானே..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்ப்பு எல்லோருக்கும் தெரிந்ததுதானே..! :(

எந்த தீர்ப்பை சொல்கின்றீர்கள்? இன்றைய தீர்ப்iபாய அல்லது நாளைய தீர்ப்பையா?

Link to comment
Share on other sites

எந்த தீர்ப்பை சொல்கின்றீர்கள்? இன்றைய தீர்ப்iபாய அல்லது நாளைய தீர்ப்பையா?

புலிகள் தடை தொடர்பிலான வரப்போகும் இந்திய நீதிமன்றத் தீர்ப்பைச் சொன்னேன்..! :(

Link to comment
Share on other sites

ஏதோ.... இந்த செய்தில்... கன உள்ளக்கிடக்கைகள்.... பின்னால் உள்ளது... :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக புலி ஊடுருவுகின்றார்கள், ஆயுதம் கடத்துகின்றார்கள் என்ற நாடகத்தை றோவினர் மேற்கொள்ளவிருக்கின்றனர் என்பதை அறியத் தருகின்றேன்

Link to comment
Share on other sites

தங்களது நாடகத்திற்கு ஏற்ற களமாக நீதிமன்றம் பயன்படப்போகின்றது. :(

Link to comment
Share on other sites

சொந்த மீனவர்களை முன்னம் காப்பாத்துங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்தியாவின் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டள்ளது.

விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட வேண்டியதற்கான காரணிகளை முன்வைக்குமாறு விக்ரம்ஜித் சிங் தலைமையிலான நீதவான் குழு மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முதல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஆதாரத்துடன், நியாயமான காரணிகள் முன்வைக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படும்.

1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடை நீடிக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இந்த தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய எல்லைக்குள் தமது போராட்டங்களை முன்னெடுக்காமையினால் அமைப்பை தடை செய்ய முடியாதென விடுதலைப் புலிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறைமைக்கு பங்கம் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்கிலோபல்நியுஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @suvy 2007 உல‌க‌ கோப்பையில் அய‌ர்லாந்திட‌ம் தோத்து தான் பாக்கிஸ்தான் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறின‌வை.................அய‌ர்லாந் பாக்கிஸ்தானை சில‌து வெல்ல‌க் கூடும் இன்றும் த‌லைவ‌ரே............................
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்?  அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
    • இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர்.  தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 
    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.