Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் தனிநாட்டை பிரகடனப்படுத்தும் காலாம் வெகுவிரைவில்

Featured Replies

தமிழீழகளத்தில் நடப்பதை ஏதோ செஸ் விளையாடுவது போல் புலம் பெயர் மக்களும் , யார் அடிப்பார் , யார் தோற்பார் என்று ஒவ்வொரு நாட்டு புலனாய்வாளர்களும் , உலக செய்தியாளர்களும் காத்திருக்கும் ஒரு திசையாகவும் எம் தாயகம் மாறி இருக்கும் இவ் வேளையில் , உண்மையில் எம் தாயக களத்தில் நடப்பது என்ன என்பதை நோக்கப்போனால் தமிழர் நிலம் கொஞ்சம், கொஞ்சமாக இனவெறி அரசு ஆக்கிரமித்து என்றுமில்லாத ஒரு வகையில் தாயக மக்கள் சிங்கள அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழர்களின் தலமைத்துவம் 2002ம் ஆண்டு ஒரு இராணுவச்சமநிலையில் இருந்து ஒரு சமாதன பேச்சுவார்த்தைக்கு சிங்கள அரசை வரவைக்க முடிந்தது ஆனால் ஏன் அந்த இராணுவச்சமநிலை தொடர்ச்சியாக பேணமுடியாது போனது என்பதற்கு சமாதான காலத்தில் சிங்களம் நடத்திய சமாதன நாடகத்தில் எம் தமிழ்த்தலமை பலமிலந்துவிட்டதா என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி இன்று அனைத்து தமிழர்களிடமும் எழுகிறது ... அது மாத்திரமில்லாமல் சமாதான காலத்தில் தான் பெரும்பாலா நாடுகள் தமிழ்த்தலமையை தடை செய்தது என்றால் அதற்கு எல்லாம் என்ன காரணம் என்றால் இந்த சமாதானம் என்ற பொய் நாடகம்தான் காரணமாக இருக்கிறது.

இதனால் இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் மிகப்பெரிய சவாலை சந்தித்துள்ளார்கள். அது இராணுவத்துடனான யுத்தம் இல்லை மாறாக உலக அரசியல் என்பது தமிழர்கள் பக்கம் அதாவது விடுதலைப்புலிகள் பக்கம் திரும்பவேண்டும். இதற்ககாவே இன்று விடுதலைப்புலிகள் பல உயிர்விலை கொடுத்துக்கொண்டு மிகப்பெரிய அரசியல் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை சிங்கள இராணுவம் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் பலமிலந்துவிட்டார்கள் என்று மார்புதட்டி கோத்தாவும், சரத்தும், மகிந்தவும் தமிழர் தாயகத்தை சிதைத்து வருகிறது... இதற்கு காலம் காலமாக எச்சில் இலைக்கு அலையும் தூரோக கூட்டமும் அருவருடிகளாக செயற்படுபவர்களும் விரைந்து பல முன்னேற்றங்களை செய்து சிங்களத்திற்கு துணைபோகிறது.

வருகிற சில மாதத்திற்குள் ஒரு மிகப்பெரிய ஒரு அரசியல் நெருக்கடியை சிறிலங்கா அரசு சந்திக்கும் அதே நேரம் இராணுவ சமநிலை மீண்டும் விடுதலைப்புலிகளால் நிரூபிக்கப்படும் என்பது உண்மை. அதன் பின் தமிழீழ தேசம் அங்கு பிரகடனப்படுத்துவதற்கு உரிய ஒழுங்குகள் அனைத்தும் நடைபெறுமே ஒழிய மீண்டும் ஒரு சமாதான பேச்சு வார்த்தை இடம்பெறும் வாய்புக்கு இடமளிக்க மாட்டார்கள் விடுதலைப்புலிகள் என்பது தான் அப்போதைய கள நிலவரமாக இருக்கும், அதற்கு எமது தாயகம் தம்மை தயார்படுத்தும், அதற்கு புலம் பெயர் தமிழ் மக்கள் நாம் தற்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி பதிலகள் தேடவேண்டியவையாக இருக்கிறது

Edited by கிருபா

இது யாரால் எழுதப்பட்டது? மூலம் எது?

அல்லது இது உங்கள் கருத்தா?...

தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்....

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வருகிற சில மாதத்திற்குள் ஒரு மிகப்பெரிய ஒரு அரசியல் நெருக்கடியை சிறிலங்கா அரசு சந்திக்கும் அதே நேரம் இராணுவ சமநிலை மீண்டும் விடுதலைப்புலிகளால் நிரூபிக்கப்படும் என்பது உண்மை. அதன் பின் தமிழீழ தேசம் அங்கு பிரகடனப்படுத்துவதற்கு உரிய ஒழுங்குகள் அனைத்தும் நடைபெறுமே ஒழிய மீண்டும் ஒரு சமாதான பேச்சு வார்த்தை இடம்பெறும் வாய்புக்கு இடமளிக்க மாட்டார்கள் விடுதலைப்புலிகள் என்பது தான் அப்போதைய கள நிலவரமாக இருக்கும், அதற்கு எமது தாயகம் தம்மை தயார்படுத்தும், அதற்கு புலம் பெயர் தமிழ் மக்கள் நாம் தற்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி பதிலகள் தேடவேண்டியவையாக இருக்கிறது

யாருடைய கருத்தாக இருந்தாலும் இன்னும் அதற்கான காலம் கனியவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருடைய கருத்தாக இருந்தாலும் இன்னும் அதற்கான காலம் கனியவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

தை பிறந்தால் வழி பிறக்கும் :o:wub:

  • கருத்துக்கள உறவுகள்

தை பிறந்தால் வழி பிறக்கும் :o:wub:

சித்தன் ,அதை ஏன் ஐமிச்சமாக சொல்கிறீர்கள். உறுதியாக கூறுங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் ,அதை ஏன் ஐமிச்சமாக சொல்கிறீர்கள். உறுதியாக கூறுங்களேன்.

தை பிறந்தால் வழிபிறக்குமென்பது பழம்பெரும் தமிழுழவரின் நம்பிக்கை அப்போதுதான் அறுவடை நடக்கும், பொருள் தானியங்ககள் வீடு வந்து சேரும்,செல்வம் கொழிக்கும் , வரும் தையும் தமிழருக்கு நம்பிக்கையான மாதமே, உலகஅரசியலில் மாற்றம் வரும் மாதமாக அமையப்போகிறது, அமெரிக்க, இந்திய தேர்தல்கள் நடந்து உலகஅரசியலில் மாற்றம் வரபோகிறது, அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ழ்சியின் காரணமும் இந்த மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்க போகிறது, வரும் காலம் சண்டைக்காக பெரும் பணத்தை செலவழிக்கும் போக்கிரி அரசுகளுக்கு உதவிகள் குறைக்கப்படபோகிறது, மாறி வரும் உலக அரங்கு தமிழருக்கு சாதகமாக அமையலாம், இனிபேச்சு சண்டை என இழுபடபோவதில்லை சரியான தருணத்தில் இறுதிப்போர் மூழும், அத்தருணத்துக்காக தமிழர்படை இழப்புகளோடு காத்திருக்கிறது, புபெயர்தமிழர்களாலும், ஆய்வாளர்களாலும் காத்திருக்கமுடியுமா? :o

  • தொடங்கியவர்

இது யாரால் எழுதப்பட்டது? மூலம் எது?

அல்லது இது உங்கள் கருத்தா?...

தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்....

நன்றி

இது எனது ஆய்வுக்கருத்து

நல்லசெய்திதான். படிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் நடக்குமா?

முதலில் விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல என்பதை நிருபிக்கவேண்டியுள்ளோமே. அத்துடன் அவர்கள் தான் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதையும் உலகிற்கு கூறி நம்பவைக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்படி செய்யலாம்? உங்கள் கருத்தை எழுதுங்கள்

இது என்றோ ஒருநாள் நடக்கும்... ஆனால் காலத்தை அறிதியிட்டுக்கூறமுடியாது, மேலும் களமுனையில் உள்ளவர்கள் மாத்திரமே விடுதலையில் கூர்மையுடன் இருக்கிறார்கள் ஏனைய தமிழ் மக்களும் தம்மை முழுமையாக இனைக்கம்போதே காலம் கனியுமென நானினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது என்றோ ஒருநாள் நடக்கும்... ஆனால் காலத்தை அறிதியிட்டுக்கூறமுடியாது, மேலும் களமுனையில் உள்ளவர்கள் மாத்திரமே விடுதலையில் கூர்மையுடன் இருக்கிறார்கள் ஏனைய தமிழ் மக்களும் தம்மை முழுமையாக இனைக்கம்போதே காலம் கனியுமென நானினைக்கிறேன்.

உண்மைதான்

இத்தனை கோடி தமிழனின் கனவு அது

நல்லசெய்திதான். படிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் நடக்குமா?

முதலில் விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல என்பதை நிருபிக்கவேண்டியுள்ளோமே. அத்துடன் அவர்கள் தான் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதையும் உலகிற்கு கூறி நம்பவைக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்படி செய்யலாம்? உங்கள் கருத்தை எழுதுங்கள்

இத்தனை கோடி தமிழனின் கனவு அது

நல்லசெய்திதான். படிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் நடக்குமா?

இது என்ன சந்தேகம் இத்தனை தூரம் தாண்டி வந்தபின்..........

இத்தனை கோடி தமிழனும் ஒன்றாகிவிட்டால்

ஒரு கை கொடுத்தால்..

இதோ....இதோ....தமிழீழம்

உண்மைதான்

இத்தனை கோடி தமிழனின் கனவு அது

இத்தனை கோடி தமிழனின் கனவு அது

நல்லசெய்திதான். படிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் நடக்குமா?

இது என்ன சந்தேகம் இத்தனை தூரம் தாண்டி வந்தபின்..........

இத்தனை கோடி தமிழனும் ஒன்றாகிவிட்டால்

ஒரு கை கொடுத்தால்..

இதோ....இதோ....தமிழீழம்

சும்மா கற்பனையை ஓடவிடாதெங்கோ குகதாசன்..

இஞ்ச கோயிலைப்பத்தி எழுதினா குலைச்சுக்கொண்டு திரியுறாங்கள் 6000 ம் அதிகமானதரம் பார்த்தும், 150 ம் கும் அதிகமான கருத்தும் வருது.... அங்க வன்னில சனம் சகுதெண்டா நாலுபேரும் நாலு கவலையுந்தான்... எவனோ ஏவி விட்ட கோயில்களையும் எவனுக்கோ ஆராத்தி எடுத்து விழா நடத்துவதிலுமே கலத்தை செலவழிக்கும் உலகத்தமிழினம் வன்னி மக்களுக்கா ஒன்றுபடுமா? ஏதோ வன்னி சனமும் ஏனைய சிலரும் போராடினாத்தான் உண்டு....

இண்டைக்கு பாட்டி கூட்டியெண்டு திரியிற உலகத்தமிழன், நாளைக்கு வன்னிலசனம் முற்றும் மடிந்தாலும் கோயிலுகுப் போயொருபிண்டத்தை போட்டு விட்டு இப்படியே ஆடியும் பாடியும் துலைந்துபோகும்.... வன்னியைத்தரிந்த ஏனைய பகுதிமக்கள் நீர்கொளும்பில காணாமல் போன தமிழினம்போல அழிந்துபோய்விடும்....

இதிலவேதனை யென்னவெண்டா இன்று எங்களின் வாழ்வா சாவா போராட்டத்திலும் தமிழன் ஒன்றுபடாவிட்டால் எங்களின் இனத்துக்கு விடுதலை ஒரு கேடா?... தியாகத்தின் உச்சத்தை தொட்டு கவியமான மாவீரர்களின் ஆண்மாவுக்களுக்கும்... ஆவியையும் குருதியையும் ஆகுதியாக்கிய இலச்சோ இலச்சம் உறவுகளின் ஆண்மாக்களின் சாபத்துகும், வரல்லாற்றின் வெறுப்பையும் உலகத்தமிழன் நிச்சயம் சுமப்பான்....

இதை எந்தக்கோயிலிலும் கரைக்கமுடியாது... எந்த பாவமன்னிப்பும் நிவர்த்திக்காது.

Edited by Sooravali

ருகிற சில மாதத்திற்குள் ஒரு மிகப்பெரிய ஒரு அரசியல் நெருக்கடியை சிறிலங்கா அரசு சந்திக்கும் அதே நேரம் இராணுவ சமநிலை மீண்டும் விடுதலைப்புலிகளால் நிரூபிக்கப்படும் என்பது உண்மை. அதன் பின் தமிழீழ தேசம் அங்கு பிரகடனப்படுத்துவதற்கு உரிய ஒழுங்குகள் அனைத்தும் நடைபெறுமே ஒழிய மீண்டும் ஒரு சமாதான பேச்சு வார்த்தை இடம்பெறும் வாய்புக்கு இடமளிக்க மாட்டார்கள் விடுதலைப்புலிகள் என்பது தான் அப்போதைய கள நிலவரமாக இருக்கும், அதற்கு எமது தாயகம் தம்மை தயார்படுத்தும், அதற்கு புலம் பெயர் தமிழ் மக்கள் நாம் தற்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி பதிலகள் தேடவேண்டியவையாக இருக்கிறது

:)

உப்பிடித் தான் பாருங்கோ எங்கட தமிழ் ஊடகவியாலளார் 2002 காலத்தில சாத்தினவை இந்தா 5 வருடத்திற்குப் பிறகு உலகம் எங்களை செம்மங்கள வரவேற்பு செய்யுது இல்லாட்டில் சிங்கள அரசு போர் நிறுத்த்தில் இருந்து வெளியேறினால் இந்தா விழுந்தடிச்சுக் கொண்டு " தமிழீழத்தை " அங்கீகரிப்பனம் எண்டு வீடுப்பக் காட்டி இருந்த சிங்களவனை ஊசுப்பேற்றி இண்டைக்கு இருக்கிற நிலமும் பறிபோய் சனமும் தினமும் செத்து செத்து போய் கொண்டிருக்குது ஆனால் எழுதேக்கை நல்லால் எழுதலாம ஆனால் நடைமுறை அல்லது யாதாhத்தம் கொஞ்ச் வித்தியாசமாக இருக்கிறது.

  • தொடங்கியவர்

யாரையும் குசிப்படுத்துவதற்கா இதை எழுதவில்லை உண்மையில் நடக்கப்போவது இப்படித்தான் ஆனால் எம் புலம் பெயர்ந்த மக்கள் எல்லோரும் முதலில் அதை நம்பவேண்டும் அப்பதான் எங்கட சமூகத்தை உலகம் அங்கீகரிக்கும் நாங்களே சந்தேகத்தை வளர்த்தால் எப்படி

  • கருத்துக்கள உறவுகள்

கிருபா, யதார்த்தத்தை நோக்குங்கள். புலம் பெயர்ந்தவர்களினால் மட்டுமே அங்கீகாரம் என்ற இலக்கை அடைய முடியும். உண்மையில் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு மிக மிக குறைவு என்பது தான் உண்மை நிலை. யாராவது எடுத்து தருவார்கள் என்ற கையேந்து நிலையில் தான் எமது புலம் பெயர் மக்கள் பெரும்பாலும் உள்ளார்கள். குறிப்பாக கனடாவை எடுத்துக் கொண்டால் நாலு லட்சம் மக்கள் கிட்டத்தட்ட 25 வருடங்களாக வாழ்ந்த போதும் அரசியல் ரீதியாக ஒருவர் கூட பாராளுமன்றம் செல்ல முடியவில்லை. எம்மை விட சிறு தொகையில் உள்ள மக்கள் தொகையில் குறைவாக உள்ள போதும் தமது ஒற்றுமையால் பாராளுமன்றத்தில் உறுப்பினர், அமைச்சராக கூட உள்ளார்கள். ஆகவே எம்மை பற்றி பெருமை பேசுவதை விட எமது குறைகளை நிவர்த்தி செய்வதே முதல் படி. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

நன்றி.

  • தொடங்கியவர்

புலம் பெயர்ந்தவர்களினால் மட்டுமே அங்கீகாரம் என்ற இலக்கை அடைய முடியும். உண்மையில் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு மிக மிக குறைவு என்பது தான் உண்மை நிலை. யாராவது எடுத்து தருவார்கள் என்ற கையேந்து நிலையில் தான் எமது புலம் பெயர் மக்கள் பெரும்பாலும் உள்ளார்கள். குறிப்பாக கனடாவை எடுத்துக் கொண்டால் நாலு லட்சம் மக்கள் கிட்டத்தட்ட 25 வருடங்களாக வாழ்ந்த போதும் அரசியல் ரீதியாக ஒருவர் கூட பாராளுமன்றம் செல்ல முடியவில்லை. எம்மை விட சிறு தொகையில் உள்ள மக்கள் தொகையில் குறைவாக உள்ள போதும் தமது ஒற்றுமையால் பாராளுமன்றத்தில் உறுப்பினர், அமைச்சராக கூட உள்ளார்கள். ஆகவே எம்மை பற்றி பெருமை பேசுவதை விட எமது குறைகளை நிவர்த்தி செய்வதே முதல் படி. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல ஒற்றுமையே பலம் நிருபித்துக்காட்ட ஒரு சந்தர்ப்பம் நிருபித்துக்காட்டுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே கருத்திலேயே உள்ளோம்

எனவே தலைவர் எதிர்பார்ப்பதை செய்வோம்

அவர் விடிவை எமக்குத்தருவார்

நிச்சயமாக தலைவர் காலத்திலேயே நாம் வென்றாக வேண்டும்

எனவே எல்லோரும் உழைப்போம் அதற்காய்

இராமனுக்கு குரங்குகள் செய்ததைச்செய்தாலே போதும்.................???

எமது தோட்டப் பயிரை வளர்ப்பது போல்

எல்லோரும் இறங்குங்கள் உழையுங்கள்

நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல ஒற்றுமையே பலம் நிருபித்துக்காட்ட ஒரு சந்தர்ப்பம் நிருபித்துக்காட்டுங்கள்

Edited by KUGATHASAN

யாரையும் குசிப்படுத்துவதற்கா இதை எழுதவில்லை உண்மையில் நடக்கப்போவது இப்படித்தான் ஆனால் எம் புலம் பெயர்ந்த மக்கள் எல்லோரும் முதலில் அதை நம்பவேண்டும் அப்பதான் எங்கட சமூகத்தை உலகம் அங்கீகரிக்கும் நாங்களே சந்தேகத்தை வளர்த்தால் எப்படி

உங்களுக்கு சாத்திரம் பார்க்கும் பழக்கம் உண்டா கிருபா? ஒருவேளை குருவும் வியாழனும் ஒருவீட்டிலையும் ராகுவும் தேதுவும் எதிர் வீட்டில் சஞ்சரிக்கும் போது சனி சுழண்டடிச்சு குறுக்கால பாக்கும்போது நிகழுமாமென்று எனக்கும் ஒரு சாத்திரி சொன்னார்.

இருந்தாலும் உங்கள் கனவு யதார்த்தமாகவேண்டும்... எங்களுக்கு ஒரு தேசம் வேண்டும்.... ஈழ மக்களுக்கு ஒரு விடிவு வேண்டும்.

கிருபா சொல்வது நிச்சயமாக நடக்கும்.......

ஈழம் என்னும் குழந்தை பிறப்பதற்கு பிரசவ வேதனை தொடங்கிவிட்டது...

புலிகள் என்னும் மருத்துவர்கள் சத்திரசிகிச்சைமூலம் தான் சாத்தியம் என ஆயத்தமாக இருக்கிறார்கள்...

ஆனால் தாயும் சேயும் நலமாக வாழ ஊட்டம் வழங்க வேண்டியது உலகத்தமிழர்களே...

காலம் கனிந்துள்ளது ..ஒன்று படுங்கள்.....

  • தொடங்கியவர்

தாயகம் விடிவு பெற கனிந்துவிட்டது என்பது உண்மை ஆனால் யாருக்கும் அது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் , உலக நாடுகளுக்கு அது நன்றாகவே புரிந்துவிட்டது அதுதான் பிரித்தானிய அமைச்சர் தமிழீழம் அமைவதை விரும்பாது என்று கூறுவதற்கு காரணம், கிளிநகர் வரை இராணுவத்தை வரவிடுவதும் பல லட்சம் மக்கள் இடம்பெயரவும் பார்த்துக்கொண்டிருப்பது விடுதலைப்புலிகளின் இராணுவ தந்திரோபாயம் அல்ல மாறாக அது ஒரு உலக அரசியலை தமக்கு சார்பாக மாற்றுவதற்கு ஒரு தருணத்தை விடுதலைப்புலிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகம் விடிவு பெற கனிந்துவிட்டது என்பது உண்மை ஆனால் யாருக்கும் அது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் , உலக நாடுகளுக்கு அது நன்றாகவே புரிந்துவிட்டது

சங்கரின் (ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன்) படம் பார்த்தது போல் திரில்லாக இருக்கிறது. :)

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல்???

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப்புலிகளின் இராணுவ தந்திரோபாயம் அல்ல மாறாக அது ஒரு உலக அரசியலை தமக்கு சார்பாக மாற்றுவதற்கு ஒரு தருணத்தை விடுதலைப்புலிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் செய்துகொண்டிருக்கும் பங்களிப்புகளையும், ஆதரவுகளையும் சற்று அதிகமாகவும் வேகமாகவும் செய்வோமானால் நடப்பவை நல்லதாகவும், விரைவாகவும் நடக்கும்.

எது எப்படியிருப்பினும் வெற்றி நெருங்குகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.