Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதங்களால் பிரிந்த மனங்கள்.......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதங்களால் பிரிந்த மனங்கள்.......

சிறு கதை

அன்று இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு தொடக்கத்தின் முதல் நாள் கார்த்திக் தனது நேர அட்டவணையைப் பார்த்தபடி அவனின் வகுப்பு அறைக்கு வந்து சேர்ந்த போது பேராசிரியர் இன்னும் வந்து சேரதபடியால் எல்லா மாணவர்களும் அறைக்கு வெளியிலே கல கலப்பாக கதைத்தவண்ணம் காத்திருந்தனர். கார்த்திக் வந்ததை கண்டதும் அவனுடன் இரசாயனத்துறையில் முதலாம் ஆண்டு படித்த மாணவர்கள் ''கி, கெல்லொ'' என்றெல்லாம் சொல்லிவிட்டு அமைதியாக நின்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் நின்ற அந்த இடத்துக்கு ரோஜா ஒன்று பளிச்சென்று வந்து நின்றுகொண்டது, தலை மட்டும் கருப்புத்துணியால் போர்திருந்தது. ஆம் ! அவள் முஸ்லீம் அழகி எல்லோரும் ஒருதடவை அவளைப் பார்த்துவிட்டு பின்னர் தங்கள் பேச்சுக்களை தொடர்ந்து கொண்டிருக்க அவள் இவனுக்கு நேரெதிரே நின்று கொண்டிருந்தபடியால் கார்த்திக்கின் கண்கள் மட்டும் அவளை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தது, கார்த்திக்கும் தன்னைப் பார்ப்பதை அதை அவளும் பார்த்துவிட்டு தலை குனிந்தவண்ணம் நின்றுகொண்டாள்.

பேராசிரியரும் வந்து பாடமும் ஆரம்பமானது, அவளிருந்த வரிசையிலே கார்த்திக்கும் அமர்ந்திருந்தான். கார்த்திக் நோட்ஸ் எடுக்க கொஞ்சம் தாமதித்த படியால் பக்கத்தில் அமர்ந்திருந்த அவளிடம் கேட்க அவளும் அதைக் கொடுத்து உதவ நன்றி எனும் வார்த்தையில் நட்பு ஆரம்பமாகியது.

மேலும் தொடர்ந்த நாட்களில் அவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக தங்கள் குடும்பங்களைப் பற்றிய விபரங்களைப் கதைத்து பரிமாறத் தொடங்கினார்கள். அவர்கள் நன்றாகப் பழகினாலும் அந்த ரோஜாவின் முகம் என்றும் சிறிது வாட்டத்துடனேயே காணப்பட்டது. ஏன் என்று அறிய ஒரு நாள் கார்த்திக் அவளைப்பார்த்து...'' நபீசா... வை யு லுக்ஸ் சோ டல், எனி புரொப்ளம் '' என அவளும் பதிலுக்கு இல்லை கார்த்திக்..'' என்ர அம்மா போன வருடத்திலிருந்து சுகயீனமாக இருப்பதால் நானே தான் அவவையும் பார்த்து படிக்க வேண்டியிருக்கிறது, அப்பாவோ படிப்பை நிறுத்தி வீட்டில் இருந்து அம்மாவை பார்க்கச் சொல்லுறார் இந்தவருடம் அவ கொஞ்சம் பரவாயில்லை என்ற படியால் தான் நான் மீண்டும் 2ம் வருடத்திலிருந்து தொடர ஆரம்பித்துள்ளேன், என் தங்கையும் இப்பத்தான் எ/ல் படிக்கிறாள் எனவேதான் எல்லாப் பொறுப்பும் என் மேலே...'' என்று தன் கஸ்ரங்களையெல்லாம் ஒரேயடியாகச் சொல்லி முடித்தாள்.

இப்பத்தான் ஏன் அவள் வாடிய ரோஜா போல் தெரிகிறாள் என்பதை அறிந்து கொண்டான். இப்படியாக அவர்கள் நட்பு வலுத்துக்கொள்ள வீட்டில் ஏர்படும் சிரமங்களைச் சொல்லி சில நேரம் அழுவாள், இவனுக்கோ அவழை தேற்றுவதில் சங்கடமாகிவிடும்.

இப்படியாக நாட்கள் நகர இரண்டாம் வருட முடிவும் அண்மித்துக்கொண்டிருந்தது. கார்த்திக்கின் மனதில் இருந்த நட்பு மெல்ல மெல்ல காதலாக மாறுவதை உணர்ந்த அவன் இரு வேறு மதங்களான இரு மனங்களின் காதல் வெற்றியளிக்குமா, அவள் முஸ்லீமாக இருப்பதால் பிரச்சனை ஏற்படலாமென்று அவனுக்குத் தெரியும். மனங்களை கட்டுப்படுத்தும் சக்தி மதங்களுக்கு இல்லையே அவனின் மனதும் அதற்கு விதிவிலக்கு அல்லவே...! .

எப்படியோ மனதில் தைரியம் வந்தவனாக இன்று எப்படியாவது தான் அவளை விரும்புவதை சொல்லவேண்டும் என யூனிக்குப் போனவனுக்கு அவளைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம் என்றுமில்லாதவாரு மிகவும் சந்தோசமாக இருந்தாள்.

கார்த்திக் அவளைப் பார்த்து'' நபீசா....யூ லுக்ஸ் சோ... பியூட்டிபுல் ருடே, எனித்திங் ஸ்பெசல்..? '' என கேட்க அவளும் ''யெஸ் ருடே ஸ் மை பேர்த்டே, தற்ஸ் வை...'' என சொல்லி முடித்தாள். பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி முடித்து விட்டு அவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுக்க யோசித்துவிட்டு..'' சரி நபீசா.. நீங்கள் லெக்சருக்கு போங்கோ நான் வாறன்..'' என்று சொல்லிவிட்டு கடைக்குப் போய் ஓர் விலை உயர்ந்த பாக்கர் பேனாவும், லமினேற் பண்ணிய ஓர் தாஜ்மகால் படங்களடங்கிய ஓர் சிறு புத்தகமும் வாங்கி வகுப்புக்கள் முடிந்ததும் அவளிடம் அவன் கொடுக்க...அவளும் ''ஓ... கார்த்திக்... வை ஓல் தீஸ்...என சொல்லிவிட்டு தாங்யூ வெறிமச்...'' என மகிழ்ச்சியுடன் வாங்கியவண்ணம்..'' ஓகே கார்த்திக் சீ யு ருமாறோ..'' என்று சொல்லிவிட்டு பிரிந்து சென்றாள்.

தாஜ்மகால் படம் கொடுத்து தன் காதலை அவளுக்கு ஓரளவு தெரியப்படுத்தியதன் முடிவு நாளை தெரியும் என்று நினைத்தவனாக நிம்மதியாக அன்று நித்திரைக்குப் போனான் கார்த்திக்.

அடுத்த நாள் சில லெக்சர் முடிந்தவுடன் மதிய உணவாய் சான்ட்விச் சாப்பிட மர நிணலில் அமர்ந்தவன்ணம் கார்த்திக் பேச்சை தொடக்கினான். '' 2 ம் வருட முடிவில் சரி என்ன பிளான்..என கேட்க..'' அவளும் சிறிது யோசித்து விட்டு நத்திங்..! அஸ் யூசுவல்...'' என்றாள்.

கார்த்திக்கும் தன் காதலைச் சொல்ல முயற்சிக்க முயன்றும் மனத் தைரியம் வராததால் பரீட்சை முடிய சொல்லலாம் என யோசித்துவிட்டு, அவளைப் பார்த்து...'' இன்று என் கமராவை கொண்டுவந்திருக்க வேண்டும் எனக்கு முதலிலே தெரியவில்லை...!'' என சலித்துக்கொள்ள '' ஏய்... கார்த்திக் நீ....படமெல்லா...ம் எடுப்பியா...? ''என் ஆச்சரியத்துடன் கேட்க..'' நான் தான் என் சேர்க்கிளுக்குள் ரொப் போட்டோகிராபர்... ஆனால் உழைப்புக்காக எடுப்பதில்லை...., பொழுதுபோக்காக எடுப்பேன், அழகான எதைக்கண்டாலும் படம் எடுத்திடுவேன் ஆனால் இன்று ஒரு அழகுச்சிலையை படம் பிடிக்க என் கமரா தவறிவிட்டது..! '' என்றான் கார்த்திக் சிறு புன்னகையுடன்.

அவன் அவளை அழகுச்சிலையென்றதும் அவள் முகம் மாலைச்சூரியனைப்போல் சிவந்ததக் கண்டு ரசித்தான் கார்த்திக். அவன் மேலும் தொடர்ந்தான் '' ஓர் பூங்காவில் சென்று மாலை நேரச் சூரியனின் ஒளி உன் கூந்தலை அணைக்க என்னிடமிருக்கும் சில கமரா பில்ரரை பாவித்து உன் முகத்தை மட்டும் குளோசப்பில் படம் எடுத்தால் நீ வானத்திலிருந்து பூமிக்கு வந்த தேவதை போல இருப்பாய் தெரியுமா....? அதை சொல்லில் வடிக்க முடியாது செயலிலேதான் காட்ட முடியும் சந்தர்ப்பம் வரும் போது அப்படி எடுத்துவிட்டு பின்னர் படத்தை காட்டும் போது அறிவாய் என் திறமையை...'' என்று தன் திறமையை புகழ்ந்துவிட்டு அவளை பார்க்க, அவளோ இவன் தன்னைப் புகழ்வதை உள்ளுக்குள் ரசிக்கிறாள் என்பதை அவள் கண்கள் காட்டிக்கொடுத்தன. கதைத்த வண்ணம் இருந்துவிட்டு இருவரும் மகிழ்ச்சியாய் வீடு திரும்பினர்.

இறுதி பரீட்சையும் முடிந்து நீண்ட விடுமுறை நாள் அன்று '' சரி நfஏசா இது என் மோபைல் நம்பெர் தயவு செய்து நேரம் இருக்கும் போது அழையுங்கள்'' என கொடுக்க அவளும் அதை வாங்கிவிட்டு ''கார்த்திக் கவெ அ நிcஎ கொலிடய் இ'ல்ல் சே யொஉ இன் ஸெப்டெம்பெர்'' என சொல்லிவிட்டு இருவரும் இனிமையான நினைவுகளுடன் பிரிந்து சென்றனர்.

அவளின் அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து அவனின் விடுமுறையெல்லாம் சந்தோசமில்லாமல் வீணாய் கழித்தவன் விடுமுறை முடிந்து பல்கலைக்கழகம் ஆரம்பித்ததும் அவனின் கனவுத்தேவதையை காணத் துடித்தவனுக்கு அங்கு சென்றதும் ஏமாற்றமே மிஞ்சியது காரணம் அவள் அங்கும் வரவில்லை. சில மாதங்கள் சென்றும் அவள் வரவில்லை, அவள் நினைவோ அவன் மனதை நெருஞ்சி முள்ளாய் குத்த படிப்பிலும் கவனம் செல்ல மறுத்தது. தன் குடும்ப நிலமையை நினைத்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

இறுதியாண்டோ அவனுக்கு இருள் சூழ்ந்ததாகவே இருந்தது, இருந்தும் பாரீட்சையை ஒருவாறு முடிந்துவிட்ட முடித்துவிட்ட சந்தோசத்தில் மனதில் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டாலும், அந்தப் பல்கலைக்கழகத்தில் அவளுடன் தான் இருந்து, கதைத்து, பழகிய இடங்களைப் பார்த்தபோது அவளை மீண்டும் பார்க்கமாட்டேனா என்று மனதுக்குள் அழுதபடி தன்னுடன் மிகவும் சிறப்பாக பழகிய சீன, இந்திய மற்றும் ஏனைய நண்பர், நண்பியர்களுக்கும் பிரியாவிடை பெற்றுச் சென்றான் கார்த்திக்.

பல்கலைக்கழகம் முடிந்து அவனது சில நண்பர்களை கடந்த ஒருவருடத்துக்குள் கண்டிருந்தாலும் கூட அவன் உயிராய் நினைத்த அவனின் வெண்ணிலவை காணமுடியவில்லை. ஒரு நாள் கார்த்திக்கின் சீன நண்பனிடமிருந்து ஒரு தொலைபேசி வழமையான நலம் விசாரிப்பின் பின்னர் அழைப்பு..'' கி, கார்த்திக் உன்ர பிரெண்ட் நபீசா என்னை சொப்பிங்கில் சந்திதபோது உனக்கு தன் போன் நம்பெரைக் கொடுத்து தன்னை உடனடியாய் அழைக்கச் சொன்னவ..'' சொல்லி முடித்தான். நம்பரை வாங்கியதும் கார்த்திக் பட்ட சந்தோசத்துக்கு அழவேயில்லை.

மனதெல்லாம் மகிழ்ச்சி பொங்க உடனடியாக அழைக்கிறான், அந்தப்பக்கம் அவளின் குரல், பல காலம் பிரிந்து பின்னர் ஒன்றாய் சேர்ந்த காதலர்கள் போல் அவர்கள் உரையாடல் தொடர...அதை இடைமறித்தவளாக...''ஏய் ..கார்த்திக்...விலாசம் தருகிறேன் உடனடியாகவோ அல்லது நாளையோ என் வீட்டுக்கு வரமுடியுமா...?..'' என்று அவள் கேட்க..... கார்த்திக்கின் கார் 10 மையில் தூரத்துக்கு மிகவும் வேகமாகப் பறந்து அவள் வீட்டின் முன்னால் போய் நின்றது.

வீட்டு மணியை அழுத்த கதவை திறக்கிறாள் அவனின் கருப்பு துணி போர்த்த தேவதை. அவளை கட்டியனைத்து முத்தம் தர அவனின் மனம் எண்ணினாலும் அவளின் தாய், தந்தையர் இருக்கும் இடமாச்சே என்று மிகவும் கண்ணியத்துடன் அவளின் வரவேற்பையேற்று உள்ளே சென்றான். அங்கு சென்றதும் அவளின் கட்டாயத்தின் பேரில் தான் அவளின் பெற்றோர்கள் தன்னை அங்கு வர அனுமதித்திருப்பதாக அங்கிருந்த நிலமை உணர்த்தியது. அவளின் அம்மாவின் வேண்டாவெறுப்பான உபசரிப்பும், தந்தையின் பாராமுகம் எல்லாவற்றையும் அவள் மேல் தான் கொண்ட காதலுக்காகவே பொருத்துக்கொண்டான் கார்த்திக்.

அவளின் பெற்றோர்கள் அங்கிருந்து அகன்றதும் அவள் முகமும் வாடியிருந்ததை பார்த்த அவன் தன்னை அழைத்ததற்கு காரணம் கேட்க....'' கார்த்திக்...ஐ லைக் யு சோ மச்...''என்றவண்ணம் சிறிது கண் கலங்கியவள் மேலும் தொடர்ந்தாள். கார்த்திக்...அடுத்தவாரம் எனக்கு.... எ.ன..க்கு திருமணம், அதுக்கு உன் கமராவால் படம் எடுத்து தருவி...யா...?..'' என திடீரென கேட்க அதைக் கேட்டு உறைந்தவனாக தனது மனது ஏதோ பாரமாகிவிட்டதாய் உணர்ந்தவனின் வாய் அவளுக்கு ஏதோ பதில் சொல்ல முயல அவளின் பெற்றோரும் மறுபடியும் அங்கே வந்தனர்.

அவளின் அம்மா கார்த்திக்கை பார்த்து..'' தம்பி உங்கட பெயர் கார்த்திக் தானே..? கார்த்திக் எங்களுக்கு இங்கே படமேடுக்க ஆக்கள் இருகினம்.. ஆனா இவள் தான் நீர் தன்னோட படிச்சனீர் நல்லா படம் எடுப்பீர்கள் என்று உம்ம கூப்பிடச்சொன்னவ....'' என்று ஒரேயடியாகச் சொல்லி முடித்தாள்.

'' சரி நான் படமெடுத்து விடுகிறேன், எப்ப என்று அறிவியுங்கோ....'' என பதில் சொல்லிவிட்டு மனதில் அழுதபடியும் உதட்டில் சிரித்துவிட்டும் இறுதி.....யா...ய் ஓர் தடவை தன் பங்கிளியின் முகத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட அவளும் வந்து.'' சீ யு கார்த்திக்..'' என்று கண்கள் கலங்கிட கஸ்ரப்பட்டு வரவழைத்த ஓர் புன்னகையால் பதில் சொல்லி அவனுக்கு விடை கொடுத்தாள்.

அவன் மனதின் எண்ணங்கள் எல்லாம் மெதுவாக இயங்குவதுபோல உணர்ந்த அவன் தன் காரையும் மெதுவாகவே செலுத்திச்சென்றான். மீண்டும் ஓர் தொலைபேசி...ஆம் அவளிடமிருந்து..., தான் சொல்ல முடியாமல் வந்த தன் உணர்ச்சிகளை சொல்லவென தொலைபேசியில் கதைக்க ஆரம்பிக்க மறுபக்கம் அவளல்ல... அவளின் அப்பா..! '' தம்பி நீங்கள் கலியாணத்திற்கு படமெடுக்க வேண்டாம் ஏனென்றால் நாங்கள் எங்கடை நாட்டில, அதுதான் பாகிஸ்தானில் அவளின் நிக்காவை வைக்க முடிவெடுத்திட்டோம். எனவே நீங்கள் வரத்தேவையில்ல..'' என்று சொல்லி தொலைபேசி அணைப்பை துண்டித்துக் கொண்டார்.

அப்பொழுது கார்த்திக் நினைத்தான் '' தான் ஒரு நாள் பல்கலைகழகத்தில் உன்னை தேவதை போல படம் பிடிக்கிறேன் என்று சொன்ன ஒருவார்த்தையை இன்றுவரை மறக்காமல் இன்னும் ஒருதனுக்கு மனைவியாகப் போகிறேன் என்று தெரிந்தும் கூட என் மனதில் தான் தேவதையாக குடிவர முடியவில்லையென்றாலும் என் கமராவில் குடிவர நினைத்தவளின் கடைசி ஆசை கூட நிறைவேறவில்லையே என நினைத்து உருகியவண்ணம்... ,இத்துடன் அவளின் எல்லா இணைப்பும் துண்டிக்கப் பட்டதாய் உணர்ந்தவன், இறுதியாய் அவள் கண்களில் தெரிந்த கண்ணீரையும்..... அந்தப் புன்னகையையும்..... தன் நெஞ்சில் சுமந்தவண்ணம் மதங்களால் பிரிந்த மனங்களுக்காய் அழுதவன்ணம் தனது பயணத்தை தொடர்ந்தான்.

இளங்கவி

ம்ம்..மதங்களாள் பிரிந்த மனங்கள்..ள் காதலின் வேதனை..னை..அந்த வேதனையை கதைகளிள் காட்டிய விதமும் சரி நகர்த்திய விதமும் சரி நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்..ள்.. :lol:

இளம் கவி அண்ணா..ணா..!! :lol:

கூற போனால் காதலின் வலி..லு பெண்களை விட ஆண்களுக்கு தான் கூடுதல் போல் தெரிகிறது..து..பாவம் ஆண்கள் எத்தனை வலிகளை தான் சுமக்கிறது..து..(ஏன் சொல்லுறன் எண்டா பள்ளி தொடக்கம் பல்கலை மட்டும் எத்தனை பேரை காதலிக்கிறாங்க ரொம்ப பாவம்).. :lol:

அட என்ன தப்பா நெனைத்திடாதையுங்கோ..கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்று இளங்கவி உங்கள் கதை .............ஹாய் ..........ஹலோ ......போன்ற ஆங்கில எழுத்தை தமிழில் எழுத சிக்கல் வருகிறது போல் இருக்கிறது . இப்படி மதங்களால் பிரிந்த திருமணங்கள் எத்தனையோ .....மதம் மாறி செய்தும் இருக்கிறார்கள் .

நெஞ்சு கனக்க வைக்கும் நல்ல கதை... ஆங்கில வசனங்களை ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தால் பொருத்தமாகவும், இலகுவாகவும் இருக்கும்... :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முபேபிக்கு

முதலில் என் கதையை ரசித்ததற்கு நன்றி..!

ஒரு பெண் பல ஆண்களால் காதலிக்கப்படுகிறாள், ஆனால் பெரும்பாலா..ன சந்தர்ப்பங்களில் ஒருவனுடனேயே சேருவாள் அவன் தனக்காக உயிரையும் கொடுப்பா...ன் என தெரிந்தால் (இரக்க சுபாவம் கூட உள்ளவள்). ஆனால் ஆண்கள் முதல் காதலில் தோல்வி ஏற்பட தொடர்ந்தும் முயற்ச்சிப்பார்கள்( விதிவிலக்குகள் உண்டு முதல் காதலுக்காகவே உயிரை விடும் ஆண்களும் உண்டு) காரணம் விடாமுயற்ச்சி உடையவர்கள். அவர்களின் முயற்ச்சியில் தோல்விகள் ஏற்பட சந்தர்ப்பமும் இருப்பதால் வலிகளும் அதிகமாகத்தான் இருக்கும்( பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை)

பின் குறிப்பு: தோல்விகளால் முனிவராகியவர்களும்...ச்..சீ..., மன்னிக்கவும் சாமியாராகியவர்களும் உண்டு.

இளங்கவி அண்...ணா..! ??? என்பதுதான் கொஞ்சம் விழங்கவில்லை...!!!

மேலும் ஓர் உண்மை இது ஓர் உண்மைக் கதை, பெயர்கள் வேறு, ஆனால் சம்பவம் உண்மை...!

சரி நான் வரட்....டா..!

இளங்....கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

millikai vaasam

இது ஓர் உண்மைக் கதை. பிரித்தானியாவில் பிறந்த பாகிஸ்தான் பெண் அவள். அவர்களின் உரையாடல் முழுவதுமே ஆங்கிலத்திலேயே இருந்தது. அவர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை முடிந்தவரைக்கும் தமிழில் மாற்றி தந்துள்ளேன்.

ஆங்கில வார்த்தைகளைப் பாவித்தால் வாசகர்களின் விமர்சனம் எப்படி இருக்குமோ என்ரு பயந்த படியால் விட்டு விட்டேன்.

கருத்துக்கு நன்றி millikai vaasam

இளங்கவி

நிலாமதி அக்காவுக்கு

முடிந்தவரைக்கும் ஆங்கில வார்த்தைல்களை தவிர்த்துள்ளேன். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடுவதில் சிரமங்கள் ஏற்பட்டதனால் விட்டுவிட்டேன்.

கருத்துக்கு நன்றி நிலாமதி அக்கா

இளங்கவி

நிலாமதி அக்காவுக்கு

முடிந்தவரைக்கும் ஆங்கில வார்த்தைல்களை தவிர்த்துள்ளேன். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடுவதில் சிரமங்கள் ஏற்பட்டதனால் விட்டுவிட்டேன்.

கருத்துக்கு நன்றி நிலாமதி அக்கா

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

பின் குறிப்பு: தோல்விகளால் முனிவராகியவர்களும்...ச்..சீ..., மன்னிக்கவும் சாமியாராகியவர்களும் உண்டு.

ஏதோ நம்மளையும் கோர்த்து வாங்கியது போல் இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும்

அதாவது இளங்கவி எல்லாம் சொல்லிவிட்டு சிரிப்பாள் ,பேசுவாள் சந்தியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தால் போ என்று சைகை யும் காட்டுவாள் ஆனால் கடைசியில் ஒரு பல்டி அடித்து விட்டால் தான் பலபேர் சாமியாகிறதும்

ஏன் முனிவராவதும் கூட :o:o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ எதிர்காலத்தில் வரவிருந்த குடும்பப் பிரச்சனையொன்று தவிர்க்கப் பட்டு விட்டது பெரிய துன்பத்துடன்!!! நன்றி இளங்கவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

suvy

மனங்கள் என்றும் பிரியாமல் இனைந்து இருந்தால் மதங்களால் வரும் பிரச்சனையை கூடியவரை தவிர்க்கலாம் தானே. உங்கள் கருத்துக்கு நன்றி.

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.