Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓஸ்லோ: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இருவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்த விருது கூட்டாக கிடைத்துள்ளது. மூலக்கூறு இயற்பியல் பிரிவில் இந்த விருது கிடைத்துள்ளது.

மூலக்கூறு இயற்பியலில், அடிப்படை மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்காக ஜப்பானைச் சேர்ந்த மகோடா கோபயாஷி, தோஷிடே மஸ்கவா, அமெரிக்காவைச் சேர்ந்த யோசிரோ நம்பு ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் விருது கிடைத்துள்ளது.

பிரபஞ்சம் உருவானது தொடர்பான கருத்துக்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக இந்த மூவரும் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான பல விரிவான விளக்கங்களையும் அதில் அளித்துள்ளனர்.

இதை அடிப்படையாக வைத்துத்தான் ஜெனீவா அருகே பிக் பாங்க் குறித்து, புரோட்டான்களை மோத விடும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

செய்திக்கு நன்றி தமிழ் சிறி!

இவர்களின் ஆய்வின் முடிவு என்ன? பிரபஞ்ச உற்பத்திபற்றிய இவர்களின் மாற்றுக் கருத்துகள் என்ன? புரோட்டான் மோதல்ஆய்வு முடிவுகள் ஏதாவது வெளிவிடப்பட்டுள்ளதா? என்பவை பற்றி முடிந்தால் தயவு செய்து சுருக்கமாக அறிவியுங்கள் தமிழ் சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்திக்கு நன்றி தமிழ் சிறி!

இவர்களின் ஆய்வின் முடிவு என்ன? பிரபஞ்ச உற்பத்திபற்றிய இவர்களின் மாற்றுக் கருத்துகள் என்ன? புரோட்டான் மோதல்ஆய்வு முடிவுகள் ஏதாவது வெளிவிடப்பட்டுள்ளதா? என்பவை பற்றி முடிந்தால் தயவு செய்து சுருக்கமாக அறிவியுங்கள் தமிழ் சிறி.

உங்களின் ஆர்வத்துக்கு நன்றி கரு , :o

இவர்களின் ஆய்வின் முடிவு என்ன? பிரபஞ்ச உற்பத்திபற்றிய இவர்களின் மாற்றுக் கருத்துகள் என்ன? புரோட்டான் மோதல்ஆய்வு முடிவுகள் ஏதாவது வெளிவிடப்பட்டுள்ளதா?

இதற்கான விடைகள் தெரிந்திருந்தால் , எனக்கும் அல்லவா நோபல் பரிசு கிடைத்திருக்கும் .

அப்படி தெரிந்திருந்தாலும் , உங்களுக்கு சொல்லாமல் விடுவேனா .

பொறுத்திருந்து பார்ப்போம் , வேறு உறுப்பினர்களுக்கு இதன் விடை தெரிந்திருந்தாலும் , தெரிந்திருக்கும் .

செய்திக்கு நன்றி தமிழ் சிறி!

இவர்களின் ஆய்வின் முடிவு என்ன? பிரபஞ்ச உற்பத்திபற்றிய இவர்களின் மாற்றுக் கருத்துகள் என்ன? புரோட்டான் மோதல்ஆய்வு முடிவுகள் ஏதாவது வெளிவிடப்பட்டுள்ளதா? என்பவை பற்றி முடிந்தால் தயவு செய்து சுருக்கமாக அறிவியுங்கள் தமிழ் சிறி.

கரு,

புரோட்டான் மோதல் ஆய்வு தற்காலிகமாக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட கசிவினாலும், மின் பிறப்பாக்கி ஒன்று வெடித்தமையாலும் நிறுத்தி/ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் வேறு என்றும், எதிர் பாராத சில விளைவுகளினால் தான் இவ் ஆய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மறு தரப்பு (ஆய்வினை எதிர்பவர்கள்) குற்றம் சாட்டுகின்றது

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறீ, நிஷாலி! உங்கள் இருவரின் பதிலுக்கும் நன்றி.

புரோட்டான் மோதல் ஆய்வின்போது ஏதோ தாக்கங்கள் நடந்து ஜெனரேற்றர் யந்திரத்தில் வெடிப்பேற்படுமளவுக்கு ஏதோ விளைவுகள் உண்டாகியிருக்கின்றன. இது பரிசோதனையின் விளைவா அல்லது பரிசோதனையின் போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறா தெரியவில்லை. பரிசோதனையின் விளைவுதானென்றால் மனிதன் ஆகக் குறைந்தது பெருவெடிப்புக் கொள்கையை வாய்ப்புப் பார்த்து சில முடிவுகளைப் பெற்றுக்கொண்டான் அல்லது புரோட்டான்களை மோதி சடப்பொருட்களையுருவாக்கும் முயற்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தமாகும். இன்னும் சில காலத்தினுள் விண்வெளியில் இத்தகைய ஆய்வுகளைச் செய்து சில சிறிய கோள்களையும் சிறிய சூரியன் களையுங்கூட உருவாக்கும் வல்லமை பெற்றுவிடக்கூடும். ஒரு குட்டிப் பிரபஞ்சத்தை உருவாக்கிவிடக்கூடிய வல்லமை பெற்றுவிட்டால் பிறகென்ன ஒரு குட்டிக் கடவுளாகக் கூட மாறி உயிரையும் தோற்றுவித்து அக்கிரகங்களில் உலவவிட முடியும்.

கடைசியில் இப்பிரபஞ்சத்தை ஆக்குவதற்கும் தன்னைப் போல ஒருவர் இருந்திருக்கவே வேண்டுமென்னும் முடிவுக்கு வருவான். பிறகு நாத்திகரெல்லாம் ஆத்திகராகிவிடுவார்கள். இது எப்பிடியிருக்கு? நீங்களென்ன சொல்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புரோத்தன் மோதல் ஆய்வு இதுவரை எந்தப் புரோத்தனையும் மோதவிடவில்லை. புரோத்தன் கற்றைகளை இரு வேறு சந்தர்ப்பங்களில் தனித்தனியே ஒன்றுக்கு ஒன்று எதிரான பாதைகளில் அதி உயர்வேகத்தில் வட்டப்பாதையில் செலுத்தியதுதான் நடைபெற்றுள்ளது.

பிரபஞ்சம் என்பது வெறும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கொண்டது என்பது தவறு. பிரபஞ்சத்தில் அவை திணிவு அடிப்படையிலான கொஸ்மிக் கூறுகள். மொத்தப் பிரபஞ்சத்தில் அவை வெறும் 4% சதவீதமே.

அணுவில் புரோத்தனும் நியூத்திரனும் அணுவுக்குரிய திணிவை வழங்குகின்றன. நியூத்திரன் ஏற்றமற்ற துணிக்கை. ஆனால் புரோத்த நேரேற்றம் உள்ள துணிக்கை மட்டுமன்றி ஐதரசன் அணுக்கருவே புரோத்தன்.

ஆக.. இந்த ஆய்வின் அடிப்படை நோக்கம் இயற்கை எதனை அடிப்படையாக வைத்து திணிவை ஆக்குகிறது என்பதுதான். இயற்கையை விளங்கிக் கொள்ள இந்த ஆய்வு இயற்கையில் உள்ள கூறுகளைக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு ஆய்வே அன்றி.. இயற்கையை ஆக்கியுள்ள கூறுகளின் அடிப்படைக் கூறுகள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதை இவ்வாய்வு விளக்கப் போதுமாக இருக்காது. அது கடினமானதாகவே இருக்கும்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கரு ,

எமது முன்னோர் எந்த விதமான ஆய்வு கூடம் இல்லாமலே , புஷ்பகவிமானத்தை தயாரித்து வெற்றிகரமாக செலுத்தியதை பார்க்கும் போது ,

ஆய்வு கூட வசதியுடன் குட்டி பிரபஞ்சத்தை உருவாக்கி அங்கு பெரிய கடவுளாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு .

அந்த பிரபஞ்சத்துக்கு வருவதற்கு நாத்திகர்களுக்கு விசா கொடுக்கவே கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

.இலக்கிய நோபல் வென்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஜான் மாரி குஸ்தாவ் ல க்ளெசியோ! (J.M.G. Le Clezio)

Le_Clezio_300x383.jpg

பால்சாக், பாதலெய்ர், சார்த்ர், ஆல்பர் காம்யூ, மல்லார்மே, ராம்போ. பெக்கெட், ஆந்ரே மார்லோ, ஜார்ஜ் பெரெக், மைக்கேல் பூட்டர், மாரிஸ் பிளான்ஷோ என்று இலக்கிய உலகிற்கு சிந்தனை சிற்பிகளையும், நவீன சிந்தனாமய படைப்பாளிகளையும், செயலூக்கிகளையும் உருவாக்கிய பிரெஞ்ச் இலக்கிய வரிசையில் நீண்ட காலத்திற்கு பிறகு ஜான் மாரி குஸ்தாவ் ல க்ளெசியோ என்ற படைப்பாளிக்கு 2008ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

காலனியாதிக்கத்திலேயே ஊறி வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பிரிட்டன், ஸ்பெயின் ஆகியவற்றின் அடக்கு முறைகளுக்கு சளைத்ததல்ல பிரான்ஸ். ஆப்பிரிக்க நாடுகளை பிரான்ஸ் அடக்கி ஆண்டு காலனிப்படுத்தியது என்பது வரலாறு. நோபல் பரிசு வென்றுள்ள ல கிளெசியோ தனது பெரும்பாலான நாவல்களில் காலனிய ஆதிக்கத்திற்கு முந்தைய, தொழிற்புரட்சிக்கு முந்தைய, நவீனத்துவம் நுழைந்த சீரழிவிற்கு முந்தைய ஆப்பிரிக்க நாடுகளின் மறைந்த கலாச்சாரங்கள், பிரதேசங்கள், இயற்கை எழில்கள், புதிர் வழிப்பாதைகள், இடங்கள் இவரது எழுத்துக்களில் பிராதான இடம் பிடித்துள்ளதால், இவர் ஒரு புரட்சியாளர் என்றே அடையாளம் காணப்பட்டார்.

இவர் ஏப்ரல் 13, 1940ஆம் ஆண்டு தெற்கு பிரான்ஸ் நகரான நைஸ் என்ற நகரில் பிறந்தார். இவரது தாய் பிரான்ஸைச் சேர்ந்தவர் தந்தை பிரிட்டன் மருத்துவர்.

இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டன் ராணுவத்திற்கு மருத்துவ சேவை புரிந்து வந்த இவரது தந்தை குடும்பத்தை பிரிந்து நைஜீரியா செல்ல நேர்ந்தது.

பிறகு 1948ஆம் ஆண்டு ல கிளெசியோ தந்தையுடன் இணைய ஆப்பிரிக்கா சென்றார். இந்த பயணம்தான் அவர் சந்தித்த தொன்ம உலகங்கள் வாயிலாக அவரது எழுத்தில் பெரும் தாக்கம் செலுத்தின. இந்த பயணத்தை அவர் 1991-ஆம் ஆண்டு வெளியிட்ட அரை சுயவரலாறு நாவலான ஓனிட்ஸ்சாவிலும் 2004-ஆம் ஆண்டு வெளிவந்த தி ஆஃப்ரிக்கன் என்ற நாவலிலும் காணலாம் என்று அவரது விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

webulagam.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஆஸ்லோ: பல நாடுகளில் அமைதியை நிலைநாட்ட சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதற்காக பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்டி அதிஸாரிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்டி அதிஸாரி. சர்வதேச பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல்வேறு நாடுகளில் அமைதி முயற்சியை கடந்த 30 ஆண்டுகளாக மார்டி மேற்கொண்டுள்ளார். அவரின் இந்த சேவையை பாராட்டி இந்தாண்டுக்கான சமாதான நோபல் பரிசு மார்டிக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

71 வயதாகும் மார்டி ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 1960ம் ஆண்டு அரசியலில் இறங்கினார். 1973ல் தான்ஸானியாவுக்கான தூதரானார். 1994ம் ஆண்டு பின்லாந்து அதிபர் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சியில் மார்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபரானார்.

செர்பியாவுக்கும் அந்த ஒரு பகுதியான கொசொவாவுக்கும் இடையிலான பிரச்சனையில் சமரசம் செய்து வைப்பதற்காக கடந்த 2005ம் ஆண்டு ஐநாவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கொசொவாவுக்கு சாதகமாக மார்டி நடந்து கொள்வதாக செர்பியா குற்றம் சாட்டியது. மேலும் கொசொவாவுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று மார்டி சிபாரிசு செய்தார்.

இதை செர்பியா ஏற்காததால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு கொசாவா தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. அதை உலக நாடுகள் வரவேற்றன.

அதே போல கடந்த 2005ம் ஆண்டில் இந்தோனேஷிய அரசுக்கும் அஸே மாகாண தீவிரவாதிகளுக்கும் இடையிலான சண்டையை தீர்த்து வைத்ததிலும் மார்ட்டியின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. 30 ஆண்டுகளாக நீடித்த போர் சமாதானத்துக்கு வந்தது.

இவருடைய சிறந்த சேவையை பாராட்டி இந்தாண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நோபல் பரிசு மெடலும், ரூ.6.6 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. டிசம்பர் 10ம் தேதி ஆஸ்லோவில் நடக்கும் விழாவில் நோபல் பரிசை மார்டி பெறுகிறார்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

"பொறுக்காத பல்லு வலிக்குச் சுருக்கத்தில மருந்திருக்கு போக்கிரிக்கிட்ட வாயக் குடுத்துப் பார்க்கச் சொல்லுங்க"

என்றொரு சினிமாப் பாடல் இருக்கிறது.

நமக்கெல்லாம் நோபல் பரிசு கிடைக்கிறதாயிருந்தால் இதுதான் சுருக்கமான வழி போல கிடக்குது. அதனால நோபல் பரிசை நினைக்கவே பயமாயிருக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது வரை நோபல் பரிசு பெற்ற தமிழர்களின் விபரம் யாரிடமாவது உள்ளதா ?

எனக்கு தெரிந்து ........

பி . இராமன் -----------------கணக்கியல்

சந்திரசெகரன் -----------------பௌதீகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே சொல்லியிருக்கிறமாதிரிப் பார்த்தால் லிஸ்ட்டில கனபேர் இருப்பாங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பொறுக்காத பல்லு வலிக்குச் சுருக்கத்தில மருந்திருக்கு போக்கிரிக்கிட்ட வாயக் குடுத்துப் பார்க்கச் சொல்லுங்க"

என்றொரு சினிமாப் பாடல் இருக்கிறது.

நமக்கெல்லாம் நோபல் பரிசு கிடைக்கிறதாயிருந்தால் இதுதான் சுருக்கமான வழி போல கிடக்குது. அதனால நோபல் பரிசை நினைக்கவே பயமாயிருக்குது.

நான் மேலே சொல்லியிருக்கிறமாதிரிப் பார்த்தால் லிஸ்ட்டில கனபேர் இருப்பாங்க.

:icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரம்: பால் க்ரூக்மேனுக்கு நோபல் பரிசு!

ஸ்டாக்ஹோம்: இவ்வாண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கப் பொருளாதாரா நிபுணர் பால் க்ரூக்மேனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10- ஆம் தேதி ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படும்.

உலக மயமாக்குதலின் விளைவுகள், தனியார்மயம் மற்றும் தடையில்லா வர்த்தகம், உலக நாடுகளின் நகரமயமாக்கல் பிரச்சினை போன்றவற்றுக்கு தனது புதிய சிந்தனைகளால் தீர்வு சொன்னவர் க்ரூக்மேன்.

இந்தக் கருத்துகள் பல வெறும் கோட்பாடுகளோடு நின்றுவிடாமல் நடைமுறைக்கு ஏற்றவையாக உள்ளதால் இப்பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக நோபர் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

55 வயதாகும் பால் க்ரூக்மேன், அமெரிக்காவில் உள்ள லாங் தீவில் பிறந்தவர். யூத இனத்தைச் சேர்ந்தவர். பிரபல யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டமும், மாசசூட்ஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்துக்கான டாக்டர் பட்டமும் பெற்றவர்.

இப்போது அமெரிக்காவின் பிரின்ஸ்டோன் பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறைத் தலைவராக உள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அமெரிக்க பொருளாதார நிபுணருக்கு நோபல் பரிசு கிடைக்கிற நேரம்பார்த்து அமெரிக்க தனியார் வங்கிகள் ஆட்டம் காணுது.

அமெரிக்கருக்கு பொருளாதார நோபல் பரிசா!!!!!

நோபல் பரிசுத் மூலப்பணத்தொகையையும் அமெரிக்க பங்குவர்த்தகத்தில்தான் முதலிட்டுள்ளார்களோ என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்

Aravind Adiga wins Booker prize

October 15, 2008

aravindadigapt1.jpg

Aravind Adiga, a dual Indian-Australian citizen, has become only the third debut novelist to win the prestigious Man Booker Prize for fiction, for his book The White Tiger.

Adiga, who moved to Australia when he was 15 and whose father still lives in Sydney, received the £50,000 award at a ceremony in London last night local time. At 33, he was the youngest author on the shortlist, two years younger than fellow debut novelist and Sydneysider Steve Toltz, who also made it to the final six.

The chairman of the judges, Michael Portillo, said: “The novel is in many ways perfect. It is quite difficult to find any structural flaws with it.”

Adiga, a former Asia correspondent with Time magazine, was poised and articulate as he addressed around 40 journalists after the awards dinner at Guildhall, in central London. But he admitted that he had not expected to win the Booker. “I thought I would be out partying in Soho by now,” he joked.

The White Tiger tells the story of Balram, a young Indian born in the “darkness” of rural India who is seduced by the underbelly of Delhi through his work as a driver to the son of a wealthy landlord.

Adiga said that he wanted to write a story about the “colossal underclass of India, and to do so without sentimentality, or without depicting them as remorseless, humourless weaklings that they are usually”.

He said that he drew on his experiences as an outsider arriving in Sydney as well as New York and London, where he studied at university. “What struck me when I went back to Delhi was all the poor people coming daily on the train from the villages. When they get off they are as completely lost as I was when I went to [sydney] and New York and when I came here [to London].”

But he does not deny his own middle-class roots. “A person like me, my equivalent in India, treats the people who have got off the train quite badly and it reminded me of how I’ve been treated in the past.”

“Class is something that’s on my mind...and this is maybe where my experience of having lived in other places maybe changed the way I perceive things,” he said.

Adiga was born in Madras in 1974. He studied literature at Columbia, Oxford and Princeton Universities and now lives in Mumbai. He credited his work as a journalist with forcing him to go out and hear the stories of the Indian poor.

"For the first time, I met people like rickshaw-pullers, and it got me thinking about India in a different way. This book was an attempt to capture the voice of the men I met."

The other nominees were Amitav Ghosh, also Indian, as well as the Irish poet and author Sebastian Barry and British writers Linda Grant and Philip Hensher. Adiga is the fourth Indian-born author to win the Booker Prize since it was launched in 1969, joining Salman Rushdie, Arundhati Roy and Kiran Desai. He is also is the second-youngest winner in the Booker’s 40-year history.

Portillo, a former Tory politician, told The Age: “This year there were two outstanding debut novelists who also happened to be very young, and there was the Australian connection.

“Historically the number of first-time authors that have won the Booker is very few. So [Adiga] is a white tiger in another sense. It’s a pretty exceptional outcome.”

But he does not deny his own middle-class roots. “A person like me, my equivalent in India, treats the people who have got off the train quite badly and it reminded me of how I’ve been treated in the past.”

“Class is something that’s on my mind...and this is maybe where my experience of having lived in other places maybe changed the way I perceive things,” he said.

Adiga was born in Madras in 1974. He studied literature at Columbia, Oxford and Princeton Universities and now lives in Mumbai. He credited his work as a journalist with forcing him to go out and hear the stories of the Indian poor.

"For the first time, I met people like rickshaw-pullers, and it got me thinking about India in a different way. This book was an attempt to capture the voice of the men I met."

The other nominees were Amitav Ghosh, also Indian, as well as the Irish poet and author Sebastian Barry and British writers Linda Grant and Philip Hensher. Adiga is the fourth Indian-born author to win the Booker Prize since it was launched in 1969, joining Salman Rushdie, Arundhati Roy and Kiran Desai. He is also is the second-youngest winner in the Booker’s 40-year history.

Portillo, a former Tory politician, told The Age: “This year there were two outstanding debut novelists who also happened to be very young, and there was the Australian connection.

“Historically the number of first-time authors that have won the Booker is very few. So [Adiga] is a white tiger in another sense. It’s a pretty exceptional outcome.”

http://www.theage.com.au/articles/2008/10/...954.html?page=2

அமெரிக்கருக்கு பொருளாதார நோபல் பரிசா!!!!!

நோபல் பரிசுத் மூலப்பணத்தொகையையும் அமெரிக்க பங்குவர்த்தகத்தில்தான் முதலிட்டுள்ளார்களோ என்னவோ?

krugmanbig1012.jpg

Paul Krugman - இவருக்கு 2007ம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைக்கும் எண்டு எங்களுக்கு படிப்பிச்ச பேராசிரியர் 2006ம் ஆண்டு சொல்லி இருந்தவர். இவர் எழுதின Macroeconomics Textbookதான் நாங்கள் ஒரு Semesterக்கு பாடப்புத்தகமாக படிச்சது. இவரிட்ட Princeton University இல படிச்ச பெடியங்கள் இவரைப்பற்றி இதில இப்பிடி எழுதி இருக்கிறாங்கள். வாசிச்சு பார்த்தால் உங்களுக்கு பகிடியாய் இருக்கும்.

4/12/07 Econ101 5 1 1 1 emoticon_unhappy flag Ignorant and horrendously biased.

2/28/07 econ101 1 1 1 1 emoticon_unhappy flag envelope

6/20/06 Eco 101 1 1 1 5 emoticon_unhappy flag Not even 1/1000 as smart as Per Krussel

6/1/06 eco 101 5 1 1 5 emoticon_unhappy flag This class would be better if an active researcher taught it rather than a journalist.

11/18/05 EC 3 2 3 2 emoticon_undecided flag To the ignorant fool who left the comment below, NEWSFLASH I'M CONSERVATIVE!!!!!! and I got an A in his class, so chances are you're making one hell of an unqualified generalization.

மூலம்: http://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=243005

ஆனால் இவர் பொருளாதாரத்தில நிறைய விளையாட்டுக்கள் காட்டி இருக்கிறார். இவரைப்பற்றி நான் 2006 இல பேராசிரியர் மூலமும், இணையம் மூலமாகவும் விரிவாக அறியக்கூடியதாக இருந்தது.

Edited by முரளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.