Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தை உருவாக்குவோம்: இராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்டமான பேரணி- பொதுகூட்டம்

Featured Replies

ராமேஸ்வரம்: இலங்கையில் தமிழரக்ளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், நிரந்தர தீர்வு காணவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் பெருமளவு ராமேஸ்வரத்தில் இன்று குவிந்துள்ளனர்.

சன் லைவ்:

பிற்பகல் 2 மணிக்குத் துவங்கும் திரையுலகினரின் இந்த பரபரப்பான பேரணியை, சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. மாலை நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டமும் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இந்தப் போராட்டத்துக்காக இயக்குநர் பாரதிராஜா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமையில் 2000 இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நேற்று மாலை தனி ரயிலில் ராமேஸ்வரம் புறப்பட்டனர்.

இன்று காலை ராமேஸ்வரம் சேர்ந்த அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடுதிகளுக்குச் சென்றனர். இயக்குநர் பாரதிராஜா மற்றும் போராட்ட ஏற்பாட்டாளர்கள், பேரணி, பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களைப் பார்வையிட்டனர்.

பிற்பகல் 2 மணிக்கு திரையுலகினரின் பிரமாண்டப் பேரணி துவங்குகிறது.

இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:

எங்கள் இன உணர்வைக் காட்ட, ஈழத்தில் செத்து மடியும் சகோதரனின் உயிரைக் காப்பாற்றக் கோரிக்கை விடுக்க இங்கே வந்திருக்கிறோம். திட்டமிட்டபடி எல்லாம் சிறப்பாக நடக்கும். இந்த தமிழ் கலைஞர்களின் குரலை உலகமே செவி கொடுத்துக் கேட்கும்போது, மத்திய அரசின் காதுகளில் மட்டும் விழாமலா போகும்... நிச்சயம் இலங்கைத் தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும், விடிவு பிறக்கும்.

எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கே திரளாக வந்திருக்கும் இனமான உணர்வு கொண்ட கலை உள்ளங்களுக்கு நன்றி என்றார் பாரதிராஜா.

http://thatstamil.oneindia.in/movies/speci...rameswaram.html

  • Replies 50
  • Views 8k
  • Created
  • Last Reply

நன்றிகள் பல..

kollywoodtrain_008.jpg

kollywoodtrain_036.jpg

kollywoodtrain_258.jpg

kollywoodtrain_263.jpg

kollywoodtrain_030.jpg

kollywoodtrain_277.jpg

kollywoodtrain_270.jpg

kollywoodtrain_020.jpg

kollywoodtrain_021.jpg

kollywoodtrain_015.jpg

வெற்றிகரமாக பாதுகாப்பு என பொய் சொல்லி கலந்து கொள்ளாமல் இருந்துவிட்ட சிங்களத்து மாப்பிள்ளை சரத் குமாருக்கு பாராட்டுகளும் நன்றிகளும் :)

சரத்குமார் கலந்து கொண்டால் இலங்கையில் இவர்களின் முதலீடுகள் அம்பேல் ஆகிவிடும் என்பதும் ஒருகாரணம்.

Edited by Janarthanan

ஈழவன் படங்கள் பார்க்க முடியவில்லை

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்

நன்றிகள்////

இலங்கையில் ராணுவத்தினரால் தமிழர்கள், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், சுட்டுக் கொல்லப்படுவதையும் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் இன்று கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து தமிழ் திரையுலகை சேர்ந்த டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் ராமேஸ்வரத்துக்கு தனி சிறப்பு ரயிலில் இன்று காலை வந்தடைந்தனர்.

பிற்பகல் 2.30 மணியளவில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு திரையுலக பிரமுகர்கள் திரண்டனர். அங்கிருந்து இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி பேரணி தொடங்கியது. இந்த பேரணியை டைரக்டர் பாரதிராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், செல்வமணி, டி.ராஜேந்தர், அமீர், பாலாஜி சக்திவேல், மனோபாலா, வேல்முருகன் மற்றும் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன், வடிவேலு, மனோஜ்குமார் உள்பட ஆயிரத்து 400 பேர் ‌பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கிய பேரணி, ரத வீதிகள், ரயில்வே ரோடு, நடுத்தெரு வழியாக நான்கு முனை ரோட்டுக்கு வந்தது. அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் கிழக்காடு பகுதிக்கு பேரணியாக செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் நான்கு முனை ரோட்டில் இருந்து திரையுலக பிரமுகர்கள் பஸ்கள் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் ‌இடத்துக்கு சென்றனர்.

இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். திரையுலக பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ‌போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

http://www.tamilseythi.com/tamilnaadu/rame...2008-10-19.html

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொண்ட கலைஞர்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் துயர் துடைக்க புறப்பட்டிருக்கும் தமிழக கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

கலந்து கொண்ட கலைஞர்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் திரைப்பட துறையினருக்கு

ஈழத்தை உருவாக்குவோம்: இராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்டமான பேரணி- பொதுகூட்டம்

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஒக்ரோபர் 2008, 07:10 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்களுக்கான தமிழீழ நாட்டை உருவாக்குவோம் என்ற முழக்கத்தொடு தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் மிகப் பிரம்மாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தமித் திரையுலகம் இன்று நடத்தியுள்ளது.

தமிழ்த் திரையுலகத்தினர் சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மிகப் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்த் திரையுலகத்தின் பல்வேறு பிரிவினர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்யும் மகிந்த ராஜபக்சவே தமிழ்நாட்டுக்கு கைது செய்து சிறையில் அடைக்கும் காலமும் வரும்-

தமீழத் தமிழர்களுக்கான தனி நாட்டை உருவாக்குவோம் என்றும் அறைகூவல் விடுத்தனர்.

தமிழ்த் திரையுலக பிரமுகர்களான இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், அமீர் மற்றும் இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. ராஜேந்தர் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகத்தின் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் இன உணர்வுப்பூர்வமாக உரையாற்றினர்.

புதினம்

"இனமான உணர்வு கொண்ட கலை உள்ளங்களுக்கு நன்றி"

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொண்ட திரையுலக கலைஞர்களுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ளங்களே உங்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்!

காலத்தே செய்யும் உதவி ஞாலத்திலும் சாலப் பெரிது!!!

மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து முடிந்தன பேரணியும் பொதுக்கூட்டமும்.... சன் நியூஸில் நேரடி ஒளிபரப்பு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இந்த நிகழ்வினை எடுத்துச்சென்றது.

பேசிய கலைஞர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையையும் அதற்கு இந்தியா உதவி செய்வதையும் கடுமையாக கண்டித்தனர்... சீமான் மற்றும் அமீர் மிகவும் நல்ல உரையை நிகழ்த்தினர்.

அமீர் கேட்ட கேள்விகள் இந்திய அரசுக்கு செருப்படி கொடுப்பது போல் இருந்தது.

வடிவேலு பாமர மக்களும் ஈழத்தில் நடக்கும் கொடுமையை உணரும் வகையில் பேசினார்.

தமிழ்த்தாய் பெற்ற தவப்புதல்வன் தமிழர்களை தலை நிமிரச்செய்த தலைவன் பிரபாகரனை மறக்காமல் புகழ்ந்தனர் (இப்போ இந்து ராம் சோ போன்றோர் என்ன செய்வார்கள்)

பெருமளவு மக்கள் கூடியிருந்தனர் அனைவரும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் ,வழியும் கண்ணீரோடும் கேட்டுக்கொண்டிருந்தனர்... மேடையிலும் சிலர் கண்ணீர் சிந்தியவண்ணம் இருந்தனர்....

நன்றி கலைஞர்களே !!!

....... உங்களை பெற்ற சந்தோஷத்தை தமிழ்த்தாய் நிச்சயம் இன்று அடைந்திருப்பாள்

Edited by வேலவன்

என் பல தமிழக நண்பர்கள் இன்றைய நிகழ்வை பற்றியும் சீமான், சேரன், அமீர் ஆகியோரின் பேச்சு பற்றியும் சிறப்பாக கூறினார்கள்

இவற்றின் ஒளிப்பட தொகுப்பு கிடைத்தால் தயவு செய்து இணைக்கவும்

--நிழலி--

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இத்தனை பெரிய இயக்குனர்கள் தங்கள் வேலைகளை விட்டு இராமேஸ்வரம் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டது மிகப் பெரிய விடயம்.

கலைஞர்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம் : இலங்கையில் ராணுவத்தினரால் தமிழர்கள், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், சுட்டுக் கொல்லப்படுவதையும் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் இன்று கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து தமிழ் திரையுலகை சேர்ந்த டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் ராமேஸ்வரத்துக்கு தனி சிறப்பு ரயிலில் இன்று காலை வந்தடைந்தனர். பிற்பகல் 2.30 மணியளவில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு திரையுலக பிரமுகர்கள் திரண்டனர். அங்கிருந்து இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி பேரணி தொடங்கியது. இந்த பேரணியை டைரக்டர்பாரதிராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

tbltopnews43006533385rs2.jpg

டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், செல்வமணி, டி.ராஜேந்தர், அமீர், பாலாஜி சக்திவேல், மனோபாலா, வேல்முருகன் மற்றும் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன், வடிவேலு, மனோஜ்குமார் உள்பட ஆயிரத்து 400 பேர் ‌பேரணியில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கிய பேரணி, ரத வீதிகள், ரயில்வே ரோடு, நடுத்தெரு வழியாக நான்கு முனை ரோட்டுக்கு வந்தது. அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் கிழக்காடு பகுதிக்கு பேரணியாக செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் நான்கு முனை ரோட்டில் இருந்து திரையுலக பிரமுகர்கள் பஸ்கள் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் ‌இடத்துக்கு சென்றனர். இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். திரையுலக பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ‌போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நன்றி: தினமலர்

1400 பேர் தான் கலந்து கொண்டதாக தினமலர் கதை விடுகிறது.... ஒரு வேளை திரைப்படத்துறையினரை மட்டும் சொல்கிறதோ ???!!!

உண்மையில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் .......

பொதுக்கூட்டத்திற்கும் கூட்டம் அலைமோதியது!!!

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் .....

நான் நேற்று தான் இந்தியாவில் இருந்து வந்தேன்....சில போராட்டங்களை கண்டு கொள்ள வாய்ப்பு கிடைத்தது...நக்கீரன்் ஏடு தலைவரின் படத்தை தினமும் முன் அட்டையில் பிரசுரீக்கும்்்....

Edited by sanjee05

ஈழத் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்களுக்கான தமிழீழ நாட்டை உருவாக்குவோம் என்ற முழக்கத்தொடு தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் மிகப் பிரம்மாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தமிழ்த் திரையுலகம் இன்று நடத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர்களின் பேரனி தொடர்பான செய்திகள் அழுத்துகு http://www.puspaviji.net/page166.html

Edited by puspaviji

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.