Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று கிளிநொச்சி பகுதியில் கடும் மோதல் : 45 படையினர் பலி : 170 படையினருக்கு காயம்

Featured Replies

நான்காவது ஈழ யுத்தத்தின் ஒரு முனைப்பாக இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்ற முற்படும் போது அதை காப்பாற்ற விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். மோதல்களின் முக்கிய கட்டமாக இன்றைய மோதல் மிக அகோரமாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய (19) மோதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 170க்கும் அதிகமான இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர். விடுதலைப்புலிகள் தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தற்போதைய மோதல்களுக்கு விடுதலைப்புலிகள் தரப்பில் தற்கொலைப்படையினரே முன்னணி வகிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வழி அறியமுடிகிறது.

http://www.ajeevan.ch/content/view/6733/1/

ஒருவருக்கும் கிடைக்காத செய்திகள் இவருக்கு மட்டும் கிடைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மோதல் தொடர்பில் பாதுகாப்பமைச்சகம் பல மாறுபட்ட தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது.

அக்கராயன் மீட்பு என்று ஒரு அறிக்கை வந்து சிறிது நேரத்தின் பின் அக்கராயனில் விசவாயுத் தாக்குதலால் படை நகர்வு தாமதம் என்று அறிக்கை வந்தது. ஆனால் டெயிலிமிரரோ.. வன்னேரிக்குளம் மீட்பு என்கிறது. பாதுகாப்பமைச்சகமோ வெறும் 1/2 சதுர கிலோமீற்றரை வன்னேரியில் வடக்கு நோக்கித் தாண்டியதாகச் சொல்கிறது.

ஆனால் எப்போதும் இல்லாது பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் பல படையினர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியிட்ட இடத்தில் வழமையாக பல நூறு புலிகள் இறந்ததாகக் கதைவிடுவது வழமை. ஆனால் இன்று அப்படிச் செய்யவில்லை. புலிகளின் இழப்புப் பற்றி பாதுகாப்பமைச்சகம் எந்த அறிவித்தலும் செய்யவில்லை. மாறாக தமது படையினர் பலர் பலி என்று சொல்கிறது. இதன் பின்னணி..???!

According to the available information, several soldiers made their ultimate sacrifice for the nation while many others suffered injuries during this battle. Many of the own casualties were due to booby traps, AP mines and mortar fire.

ஒருவருக்கும் கிடைக்காத செய்திகள் இவருக்கு மட்டும் கிடைக்கின்றது.

அஜீவன் அண்ணாவின் எண்ணிக்கை விபரங்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்.. வன்னியில் இன்றைய மோதலில் பல படையினர் பலி என்று பாதுகாப்பமைச்சகமே அறிக்கை விட்டுள்ளது. எண்ணிக்கை குறிப்பிடவில்லை..! மேலே பாதுகாப்பமைச்சக அறிக்கையில் உள்ள ஆங்கிலப் பந்தியை இணைத்துள்ளேன். மிகுதி.. தணிக்கை செய்யப்பட்டுள்ளது. :)

Edited by nedukkalapoovan

ஒருவருக்கும் கிடைக்காத செய்திகள் இவருக்கு மட்டும் கிடைக்கின்றது.

நெடுக்கண்ணா உண்மையென்றால் எல்லோர் வாயிலிருந்தும் ஒரே செய்திதான் வரும். சிங்களவர்களை திருப்திப்படுத்த நினைப்பவர்கள் அதிலும் ஜனாதிபதியிடம் நல்ல பெயர் வாங்க விரும்புபவர்கள்இல்லாததையும

தற்போதைய மோதல்களுக்கு விடுதலைப்புலிகள் தரப்பில் தற்கொலைப்படையினரே முன்னணி வகிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வழி அறியமுடிகிறது.

நடுநிலை மயிர் மண்ணாங்கட்டி எண்டு செய்திகளை எழுதுறவர்களிற்கு இலங்கைத் தீவில் நடைபெற்ற படை நடவடிக்கைகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கொஞ்சமாவது அறிவு இருக்க வேண்டும்.

அல்லது செய்தியை மொழி பெயர்த்தால் அந்தச் செய்தியின் மூலத்தைக் குறிப்பிடவேண்டும்.

Edited by மின்னல்

ஒருவருக்கும் கிடைக்காத செய்திகள் இவருக்கு மட்டும் கிடைக்கின்றது.

லங்கா ஈ நியூஸ் தளத்தின் சிங்கள மொழிச் சேவைக்குச் செல்லுங்கள். அவருக்குக் கிடைக்கும் பெரும்பாலான செய்திகள் கிடைக்கும்.

http://www.lankaenews.com/Sinhala/news.php?id=6862

யாழில இருக்கின்ற வெட்டி ஒட்டல் திருட்டு மன்னர்கள் அந்தரத்தில தொங்கிக்கொண்டு தினமும் மூலத்தை காட்டாது களவாக யாழில செய்திகளை வெட்டி ஒட்டிக்கொண்டு இருக்கேக்க குரல் குடுக்காத நடுநிலைவாதிகள் இப்ப இந்த செய்திக்கு விஞ்ஞான விளக்கம் கேட்க்கிறத பார்க்க சிரிக்கிறதா அழுவுறதா எண்டு தெரிய இல்ல.

மற்றவகளின் ஆக்கங்களை திருடி தமது செய்தியாக ஒட்டுபவர்களுக்கு, மற்றும் உடுக்கு அடிப்பவர்களுக்கு ஒருவருக்கும் கிடைக்காத செய்திகள் கிடைக்கிறது கஸ்டமாத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கும் கிடைக்காத செய்திகள் இவருக்கு மட்டும் கிடைக்கின்றது.

Sunday, October 19

கிளிநொச்சி பகுதியில் கடும் மோதல் : 45 படையினர் பலி : 170 படையினருக்கு காயம்

-- நான்காவது ஈழ யுத்தத்தின் ஒரு முனைப்பாக இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்ற முற்படும் போது அதை காப்பாற்ற விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். மோதல்களின் முக்கிய கட்டமாக இன்றைய மோதல் மிக அகோரமாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய (19) மோதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 170க்கும் அதிகமான இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர். விடுதலைப்புலிகள் தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தற்போதைய மோதல்களுக்கு விடுதலைப்புலிகள் தரப்பில் தற்கொலைப்படையினரே முன்னணி வகிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வழி அறியமுடிகிறது.

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் அதிகாலை முதல் கடும் மோதல்கள் இடம்பெற்றன. சுமார் 13 மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளன.

மோதல்களின் போது இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் பல ஏற்பட்டதுடன் மேலும் பலர் படுகாயங்களுக்கும் இலக்காகிய நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி நாச்சிக்குடா வன்னேரிக்குளம் மணியன்குளம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் ஆந்தன்குளம் பகுதிகளிலும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களின் போதும் இரு தரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளனர்.

இம்மோதல்களின் போது புலிகளின் பிரதான நிலைகள் சிலவற்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். என இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார

http://thambiluvilweb.blogspot.com/2008/10/45-170.html

'கோத்தபாய, பசில் இன்று இந்தியா பயணமாகின்றனர் - புதுடெல்லியில் அவசர சந்திப்புகள் ஏற்பாடு - இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை அழைப்பு"

மேற்சொன்ன செய்தியையும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட கிளிநொச்சி மோதல்கள், வாயு வதந்திகள், தற்கொலை தாக்குதல்கள் போன்ற செய்திகளையும் கூட்டிக் கழித்து பார்த்தீர்கள் என்றால் கணக்கு சரியாக வரும்.

டெல்லியை தன் பக்கம் வைத்திருக்கும் தரவுகளை தயார்படுத்தாமல் டெல்லி போவதற்கு கோத்தா என்ன தாஜ்மஹாலை மனைவிக்கு சுற்றிக்காட்டவா டெல்லி போகிறார்?

சிங்களவர்களை முட்டாள்கள் என்று சொல்லிக் கொண்டே வர வர நம்மவர்களில் சிலர் தான் அப்படி நடந்து கொள்கிறார்கள்!

Edited by vettri-vel

ஒரு செய்திக்கே இவ்வளவு எதிர்ப்பா? தமிழீழம் கிடைத்தால் எதிர்ப்பவன் சிங்களவனாக இருக்க முடியாது. அது தமிழனாகத்தான் இருக்கும்? ஈகோவை விட்டு உண்மைகளை ஏற்று பழகுங்கள். அதைவிட்டு வசைபாடாதீர்கள். தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம்.

லங்கா ஈ நியூஸ் தளத்தின் சிங்கள மொழிச் சேவைக்குச் செல்லுங்கள். அவருக்குக் கிடைக்கும் பெரும்பாலான செய்திகள் கிடைக்கும்.

http://www.lankaenews.com/Sinhala/news.php?id=6862

ஒரே செய்தி பல தளங்களில் வருகிறது. அது அவரவர் தொடர்புகளைப் பொறுத்தது. ஒரேசெய்தி ஒரேநேரத்தில் பலருக்கு வர வாய்ப்பிருக்கிறது. அது அவரவர் வைத்திருக்கும் செய்தியாளர்களைப் பொறுத்தது. சில செய்தியாளர்கள் போட ஐயப்படும் செய்திகள் மற்றொரு தளத்தில் வருகிறதென்றால் அதை பாராட்டியே ஆகவேண்டும். அப்படி ஏகப்பட்ட செய்தி சேவைகள் உண்டு.

ஒரு செய்திக்கே இவ்வளவு எதிர்ப்பா? தமிழீழம் கிடைத்தால் எதிர்ப்பவன் சிங்களவனாக இருக்க முடியாது. அது தமிழனாகத்தான் இருக்கும்? ஈகோவை விட்டு உண்மைகளை ஏற்று பழகுங்கள். அதைவிட்டு வசைபாடாதீர்கள். தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம்.

எது உண்மை? மேலே உள்ள செய்தியா???

இந்த செய்தியின் அடிப்படை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை என்பதே மறுக்க முடியாத உண்மை.

புலிகள் இராணுவத்துடன் மரபு ரீதியில் மோதாமல் வன்னிக் களமுனையில் தற்கொலை தாக்குதல்களை பெருவாரியாக நடத்துவதால் அதை சமாளிக்கவே வான் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு சதிவலை மேற்குறித்த செய்தியில் நயவஞ்சகமாக பின்னப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளமுடியவில்லையா உங்களால்???

அடுத்து எப்போதும் இல்லாதவாறு புலிகளின் இழப்பு தொகையை குறைத்தும் சிங்கள இராணுவத்தின் இழப்புகளை கூட்டியும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிக்கை விடுவது ஏன்?

புலிகள் இன்னும் மிகப்பலமாகவே இருக்கிறார்கள் இப்போது ஒரு யுத்த நிறுத்தம் கொண்டுவந்தால் இத்தனை நாளும் புலிகளை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்தனையும் வீணாகிவிடும் என்னும் மயக்கத்தை டெல்லியில் இருப்பவர்களிடம் ஏற்படுத்த சிங்களம் பின்னும் சதிவலையின் ஒரு பகுதியே மேற்குறித்த அறிக்கை.

தமிழர்கள் மிகவும் எச்சரிக்கையாக செயற்பட வேண்டிய காலகட்டம் இது.

சிங்கள அரசினாலும் றோவினாலும் விலைக்கு வாங்கப்பட்ட தமிழர்கள் பலர் எமக்குள்ளேயே தான் முகமூடிகளுடன் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள்

டெய்லிமிரர் போன்ற நடுநிலை வேடமிடும் பத்திரிகைகள் பொங்கு தமிழ் போன்ற நிகழ்வுகளை முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்வது ஏன் என்று சிந்தித்தீர்கள் என்றால் இது போன்ற செய்திகளை பிரசுரிப்பவர்களின் நோக்கமும் புரியும்.

Edited by vettri-vel

எது உண்மை? மேலே உள்ள செய்தியா???

இந்த செய்தியின் அடிப்படை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை என்பதே மறுக்க முடியாத உண்மை.

புலிகள் இராணுவத்துடன் மரபு ரீதியில் மோதாமல் வன்னிக் களமுனையில் தற்கொலை தாக்குதல்களை பெருவாரியாக நடத்துவதால் அதை சமாளிக்கவே வான் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு சதிவலை மேற்குறித்த செய்தியில் நயவஞ்சகமாக பின்னப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளமுடியவில்லையா உங்களால்???

டெய்லிமிரர் போன்ற நடுநிலை வேடமிடும் பத்திரிகைகள் பொங்கு தமிழ் போன்ற நிகழ்வுகளை முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்வது ஏன் என்று சிந்தித்தீர்கள் என்றால் இது போன்ற செய்திகளை பிரசுரிப்பவர்களின் நோக்கமும் புரியும்.

அடடா நீங்க என்னமா சிந்திக்கறீங்க. இதை கட்டுநாயக்கா , அனுராதபுரம் மற்றும் வவுனியா தாக்குதல்களுக்கு சொல்லிடாதீங்க? :) அங்கு மரபு நிலை போர் இப்போது சாத்தியமா தெரியாது. நீங்க என்னவோ அங்கிருந்து போர் செய்பவர் போல கதைக்கிறீங்க? அது எப்படியான தாக்குதலா இருந்தாலும் வெற்றி வெற்றிதான்.

அங்குள்ள மக்களின் அவலம் புரியாத உலகத்துக்கு இது மட்டும் புரிந்தாலென்ன? புரியாட்டால் என்ன?

விடுதலைப் புலிகள் கண்ணிவெடிகள், பொறிவெடி வயல்களை உருவாக்கி கொலை வலயங்களுக்குள் எதிரிகளை இழுத்து பெரும் தொகையில் கொன்றொழிக்கும் நடவடிக்கையில் பெருவெற்றி கண்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற செய்திகள் அரச படைகளை உசார் படுத்திவிடும்? இதைவிட அது பரவாயில்லை.

டெய்லி மிரர், லங்கா ஈநியுஸ் போன்றவை நடுநிலமையானவையே... ஏனெனில் அவை முற்றுமுழுதாக சிங்களவர்களால் சிங்களவர்களை நம்பி நடத்தப்படும் பத்திரிகைகள். அப்படி இருந்தும்.. அரசுக்கு எதிராக தமிழ்பத்திரிகைகள் வெளியிடத் துணியாத அளவு செய்திகளையும், ஏன் புதினம் போன்ற பத்திரிகைகள் மேற்கோள் காட்டும் அளவுக்கு செய்திகளை ஒரு கொடுங்கோல் நாட்டில் இருந்து வெளிவிடுகின்றன.

நடுநிலமை என்பது மனிதர்களின் தீர்ப்பு! அவை அந்த மனிதர்கள் வாழும் இடம், சூழ்நிலை, தரவு என்பன குறித்து மாறுபடும்.

மற்றயவர்கள் கூறுவதை அப்படியே யாரும் அங்கீகரிக்கத் தேவையில்லை, ஆனால் காது கொடுத்கக்கூடத் தயங்குபவர்களே பக்கச்சார்பின் வியாக்கியானம்;!

Edited by சாணக்கியன்

அடடா நீங்க என்னமா சிந்திக்கறீங்க. இதை கட்டுநாயக்கா , அனுராதபுரம் மற்றும் வவுனியா தாக்குதல்களுக்கு சொல்லிடாதீங்க? :) அங்கு மரபு நிலை போர் இப்போது சாத்தியமா தெரியாது. நீங்க என்னவோ அங்கிருந்து போர் செய்பவர் போல கதைக்கிறீங்க? அது எப்படியான தாக்குதலா இருந்தாலும் வெற்றி வெற்றிதான்.

அங்குள்ள மக்களின் அவலம் புரியாத உலகத்துக்கு இது மட்டும் புரிந்தாலென்ன? புரியாட்டால் என்ன?

ஒரே செய்தி! அது வெளியிடப்படும் நேரத்தை பொறுத்து அதன் விளைவுகள் வேறுபடும். அனுராதபுரம், வவுனியா தாக்குதல்கள் நடந்த வேளையில் இருந்த அரசியல் சூழல் அல்ல இப்போது இருப்பது. இப்போது சிங்கள அரசு முகம் கொடுக்கும் அரசியல் நெருக்கடி என்பது வித்தியாசமானது.

டெல்லியை நோக்கி படையெடுக்கும் சிங்கள அமைச்சர்களும் அதிகாரிகளும் தமக்கு சாதகமான செய்திகளை அறிக்கைகளாக வெளியிட்டு விட்டே அங்கு போவார்கள் என்பதை கணிக்க கணிதத்தில் கலாநிதி பட்டம் தேவை இல்லை!!!

தூங்குபவர்களும் உண்டு! தூங்குவது போல் நடிப்பவர்களும் உண்டு!!

அடடா நீங்க என்னமா சிந்திக்கறீங்க. இதை கட்டுநாயக்கா , அனுராதபுரம் மற்றும் வவுனியா தாக்குதல்களுக்கு சொல்லிடாதீங்க? :)

வயிறுவலிக்க சிரிப்பவர்கள் மனிதஜாதி பலர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருகஜாதி என்ற பாடல் வரிகளை நான் மிகவும் ரசிப்பதுண்டு!!!

Edited by vettri-vel

மற்றயவர்கள் கூறுவதை அப்படியே யாரும் அங்கீகரிக்கத் தேவையில்லை, ஆனால் காது கொடுத்கக்கூடத் தயங்குபவர்களே பக்கச்சார்பின் வியாக்கியானம்;!

நிச்சயமாக! அடக்கப்படும் ஒரு இனம் அந்த அடக்குமுறையில் இருந்து வெளிவருவதற்கான விடுதலை போராட்டத்தின் பக்கச்சார்பாகவே நான் இருக்கிறேன்.

இனியும் அப்படித்தான் இருப்பேன்!!!

இதில் நடுநிலையாய் இருப்பது என்பது கேடிகள் செய்வது

Edited by vettri-vel

நிச்சயமாக! அடக்கப்படும் ஒரு இனம் அந்த அடக்குமுறையில் இருந்து வெளிவருவதற்கான விடுதலை போராட்டத்தின் பக்கசார்பாகவே நான் இருக்கிறேன்.

இனியும் அப்படித்தான் இருப்பேன்!!!

இதில் நடுநிலையாய் இருப்பது என்பது கேடிகள் செய்வது

அப்படித் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெய்லி மிரர், லங்கா ஈநியுஸ் போன்றவை நடுநிலமையானவையே... ஏனெனில் அவை முற்றுமுழுதாக சிங்களவர்களால் சிங்களவர்களை நம்பி நடத்தப்படும் பத்திரிகைகள். அப்படி இருந்தும்.. அரசுக்கு எதிராக தமிழ்பத்திரிகைகள் வெளியிடத் துணியாத அளவு செய்திகளையும், ஏன் புதினம் போன்ற பத்திரிகைகள் மேற்கோள் காட்டும் அளவுக்கு செய்திகளை ஒரு கொடுங்கோல் நாட்டில் இருந்து வெளிவிடுகின்றன.

நடுநிலமை என்பது மனிதர்களின் தீர்ப்பு! அவை அந்த மனிதர்கள் வாழும் இடம், சூழ்நிலை, தரவு என்பன குறித்து மாறுபடும்.

மற்றயவர்கள் கூறுவதை அப்படியே யாரும் அங்கீகரிக்கத் தேவையில்லை, ஆனால் காது கொடுத்கக்கூடத் தயங்குபவர்களே பக்கச்சார்பின் வியாக்கியானம்;!

புலிகளின் பிரச்சார வலிமையும் சிங்களத்தின் பிரச்சார வலிமையும் ஒப்பீடு செய்யக் கூடியதா?

பெய்யும் மழைக்கு குடையால் தடுப்பதைப் போன்றதுதான் அரச பிரச்சாரத்தை புலிகளால் தடுக்க நினைப்பது என்பது

அப்படி இருக்க புலிஆதரவாளர்கள் குடைபிடித்து மறைக்கின்றார்கள் என்று நீங்கள் குறைபட்டுக் கொள்கின்றீர்கள்

மடிக்குள் இருக்கும் சொந்தபாரத்தை யாருடைய சாவீட்டிலாவது அழுது தீர்ப்பதைப் போன்றதுதான் உங்களுடைய முயற்சிகளும்.

அப்படித் தெரியவில்லை.

மகிழ்ச்சி! தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட!

நிச்சயமாக! அடக்கப்படும் ஒரு இனம் அந்த அடக்குமுறையில் இருந்து வெளிவருவதற்கான விடுதலை போராட்டத்தின் பக்கசார்பாகவே நான் இருக்கிறேன்.

எனவே பக்கச்சார்பான ஒரு கேள்வி,

கடந்த வாரம் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்யும் படையினருக்கு ஆசி வேண்டி இராணுவத்தினரின் பெற்றோர் நடத்திய பிரார்த்தனை பற்றிய செய்தியை ஏன் புதினம் பத்திரிகை வெளியிடவில்லை?

ஏனெனில் அது பக்கச்சார்பான பத்திரிகை!

அப்படியானால் உண்மையான, நடுநிலையான, அனைத்து செய்திகளையும் பெறுவதற்கு?

புலிகளின் பிரச்சார வலிமையும் சிங்களத்தின் பிரச்சார வலிமையும் ஒப்பீடு செய்யக் கூடியதா?

பெய்யும் மழைக்கு குடையால் தடுப்பதைப் போன்றதுதான் அரச பிரச்சாரத்தை புலிகளால் தடுக்க நினைப்பது என்பது

அப்படி இருக்க புலிஆதரவாளர்கள் குடைபிடித்து மறைக்கின்றார்கள் என்று நீங்கள் குறைபட்டுக் கொள்கின்றீர்கள்

மடிக்குள் இருக்கும் சொந்தபாரத்தை யாருடைய சாவீட்டிலாவது அழுது தீர்ப்பதைப் போன்றதுதான் உங்களுடைய முயற்சிகளும்.

நன்றி வணக்கம் :)

Edited by சாணக்கியன்

எனவே பக்கச்சார்பான ஒரு கேள்வி,

கடந்த வாரம் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்யும் படையினருக்கு ஆசி வேண்டி படைவீரரின் பெற்றோர் நடத்திய பிரார்த்தனை பற்றிய செய்தியை ஏன் புதினம் பத்திரிகை வெளியிடவில்லை?

ஏனெனில் அது பக்கச்சார்பான பத்திரிகை!

அப்படியானால் உண்மையான, நடுநிலையான, அனைத்து செய்திகளையும் பெறுவதற்கு?

ஐலண்ட், டெய்லி நியூஸ் போன்ற ஜனநாயக அரசின் ஆசியுடனும் ஆதரவுடனும் நடத்தப்படும் பத்திரிகைகள்

உண்மையை சொல்லாமல் பொய்யா சொல்லப் போகிறார்கள்??? :):):)

அவற்றை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்!

அப்படி அவை உண்மை சொல்லவில்லை என்றால் கொழும்பில் ஒரு ஜனநாயக எதிர்ப்பு ஊர்வலம் நடத்தித் தான் பாருங்களேன்!

ஒரு ஜனநாயக அரசு உங்கள் உண்மையை அறியும் ஆர்வத்துக்கு தக்க பரிசுகள் தராமலா போய்விடும்!!! :)

Edited by vettri-vel

ஐலண்ட், டெய்லி நியூஸ் போன்ற ஜனநாயக அரசின் ஆசியுடனும் ஆதரவுடனும் நடத்தப்படும் பத்திரிகைகள்

உண்மையை சொல்லாமல் பொய்யா சொல்லப் போகிறார்கள்??? biggrin.gif rolleyes.gif biggrin.gif

அவற்றை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்!

உங்கள் இதயசுத்தியுடனான பதிலுக்கு நன்றி!

இதைத்தான் இந்த திரியை ஆரம்பித்தவர் செய்ததோடு, அதை அனைவருடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்!

Edited by சாணக்கியன்

உங்கள் இதயசுத்தியுடனான பதிலுக்கு நன்றி!

இதைத்தான் இந்த திரியை ஆரம்பித்தவர் செய்ததோடு, அதை அனைவருடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்!

ஓ! ஐலண்ட், டெய்லி நியூஸ் போல இந்த திரியை ஆரம்பித்தவர் சிங்கள அரசின் ஆசியுடனும் ஆதரவுடனும் உண்மைகளையே இங்கே இணைக்கிறார்கள் என்கிறீர்கள்?!!! என்ன இருந்தாலும் இப்படி ஒரேயடியாக தூக்கி நிலத்தில் அடிக்கக் கூடாது! :)

அவர் தெரிந்தே தவறுகள் செய்கிறார் என்று நான் நினைக்கவில்லை!

ஒரு செய்தியின் ஆழ அகலம் சிலவேளைகளில் அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்களுக்கும் புரிவதில்லை. அப்படித்தான் இதுவும்!!

Edited by vettri-vel

ஓ! ஐலண்ட் டெய்லி நியூஸ் போல இந்த திரியை ஆரம்பித்தவர் சிங்கள அரசின் ஆசியுடனும் ஆதரவுடனும் உண்மைகளையே இங்கே இணைக்கிறார்கள் என்கிறீர்கள்?!!!

அவர் தெரிந்தே தவறுகள் செய்கிறார் என்று நான் நினைக்கவில்லை!

ஒரு செய்தியின் ஆழ அகலம் சிலவேளைகளில் அனுபவம் வாய்ந்த ஊடகவியலாலர்களுக்கும் புரிவதில்லை. அப்படித்தான் இதுவும்!!

உண்மைகளை பகுத்துணரும் அறிவும், ஆர்வமும் யாழில் எம்மனைவரிடமும் உள்ளது, ஆகவே அஞ்சற்க!

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.