Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தண்ணீர்.. தண்ணீர்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர்.. தண்ணீர்…

on 16-10-2008 18:39

தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

காலையில் துயில் நீவி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், l மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)

முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம். இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

adhikaalai

ஓ..அப்படியோ கறுப்பி அக்கா..கா..!!.. :unsure:

டகவலிற்கு நன்றி..ஆனா கடசி வரை எந்த தண்ணி குடிகோனும் எண்டு மட்டும் சொல்லவே இல்ல கறுப்பி அக்கா அது தானே முக்கியம்..ம்...!!. :D

மற்றது..து வந்து..து..

காலம்பற எழும்பினவுடன் தண்ணி எல்லாம் குடிக்காம "ரெட்புல்"..(Redbull) ஒண்டு குடித்தா என்னவாம்..ம் :D ஏன் கேட்கிறன் எண்டா காலம்பற..ற எழும்பி அவசரபட்டு வேலைக்கு போகக்க..க அதை தான் நான் குடித்து கொண்டு போறனான்..ன் அது தான் கேட்டனான்..ன்.. :)

நீங்க என்ன மாதிரி..??.. :)

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா..வாழ்க்கையில பல பேர் தன் நீரை மறந்து விட்டு அடுத்தவன் நீரை தான் பார்க்கிறான்..ன்.." :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்போதுமே தண்ணியிலதானுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

காலம்பற எழும்பினவுடன் தண்ணி எல்லாம் குடிக்காம "ரெட்புல்"..(Redbull) ஒண்டு குடித்தா என்னவாம்..ம்.

அதுதான் இருந்திருந்திட்டு ஆளும் குணமும் bull மாதிரி... இருக்கிறதோ...! ம்ம்ம்.. இப்பதானே விளங்கிச்சுது. வடிகட்டின.. சுத்தமான தண்ணீர் குடிச்சா அப்படி ஆகாது. :)

நான் எப்போதுமே தண்ணியிலதானுங்கோ

லிடிலில விக்கிற சீப்பான வொட்கா வைத்தானே சொல்லுறீங்க.ம்ம்.. தமிழாக்கள் அதைத்தான் அதிகம் வாங்கிக் குடிக்கிறதைக் கண்டிருக்கிறன்..! :unsure:

மருத்துவ முறை

காலையில் துயில் நீவி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், l மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

குளிர் காலங்களில் தான் கடினமாக இருக்கும்.

மிகவும் பிரயோசனமான குறிப்பு அக்கா. நன்றி :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா எந்த தண்ணியை பற்றி பேசுறிங்கள் !!!!

காலையில் கசிப்பு நல்லது நெடுக்ஸ் :):lol::blink:

நான் எப்போதுமே தண்ணியிலதானுங்கோ

தண்ணியில மீன் அழுதா துடைக்க ஒரு கைகள் வருவதில்லை..எண்டு சொல்லாம சொல்லுறியளோ கறுப்பி அக்கா..கா.. :icon_idea::rolleyes:

அப்ப நான் வரட்டா!!

அதுதான் இருந்திருந்திட்டு ஆளும் குணமும் bull மாதிரி... இருக்கிறதோ...! ம்ம்ம்.. இப்பதானே விளங்கிச்சுது. வடிகட்டின.. சுத்தமான தண்ணீர் குடிச்சா அப்படி ஆகாது.

அட...இவ்வளவு நாளும் எண்ட அம்மா தான் மாட்டு கொணம் உனக்கென்றுவா..வா இப்ப நீங்களுமா தாத்தா..தா சரி சரி இது எல்லாம்..ம் நம்ம வாழ்க்கையில சகஜம்..ம்.. :lol:

அப்பப்ப bull குணம் வராட்டிக்கு லோகத்தில இருக்க ஏலாது..து முட்டி போடுவீனம்..ம்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மிக்க நன்றி கறுப்ஸ்.இதை மனிசிக்கு காட்டினால் இனி விடிஞ்ச உடனயே தொடங்கியாச்சாஎன்று ஏச்சு விழாது :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.