Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் : புதிய அதிபர் யார்?

Featured Replies

எந்த முடிவுகளும் இதுவரை வெளிவரவில்லை... முதலாவது முடிவு வர இன்னும் குறைந்தது 9 மணித்தியாலங்கள் உள்ளது. முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள

http://edition.cnn.com/ELECTION/2008/results/president/

Edited by வாசகன்

  • Replies 66
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று அமெரிக்க தேர்தல்-ஒபாமா Vs மெக்கெய்ன்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 4, 2008

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை வாக்குப் பதிவு தொடங்கியது. நாளை மாலை முடிவுகள் வெளியாகும்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெய்னும் கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஒபாமா சிகாகோவிலும் மெக்கெயின் அரிசோனாவிலும் தங்களது கடைசி பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

கிட்டத்தட்ட 21 மாதங்களாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்குப் பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை துவங்கிவிடும்.

இந்திய நேரப்படி நாளை மாலை 5 மணி முதல் முடிவுகள் வெளியாகத் துவங்கிவிடும்.

அமெரிக்க தேர்தல் முறை:

ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு குறிப்பிட்ட புள்ளிகள் (Electoral College) உண்டு. அதிக மாகாணங்களில் வென்று அதிக புள்ளிகளை வெல்பவரே அதிபராவார்.

நாட்டிலேயே மிகப் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் வென்றால் 55 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சிறிய மாகாணமான கொலம்பியாவில் வென்றால் 3 புள்ளிகள் தான் கிடைக்கும்.

இதனால் யார் அதிகபட்சமான பெரிய மாகாணங்களில் வெல்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி சாத்தியமாகும்.

மொத்தம் எல்லா மாகாணங்களையும் சேர்த்து 538 புள்ளிகள் உள்ளன. அதிபராக குறைந்தபட்சம் 270 புள்ளிகளை வெல்ல வேண்டும்.

அமெரிக்காவின் இந்த ஓட்டுமுறையால் நாடு முழுவதும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் தான் அதிபராக முடியும் என்ற நிலை இல்லை. அங்கே புள்ளிக் கணக்கே முக்கியமாகும்.

உதாரணத்துக்கு, 2000ம் ஆண்டு தேர்தலில் ஜார்ஜ் புஷ் நாடு முழுவதும் வாங்கிய ஓட்டு 47.87%. அவரை எதிர்த்து நின்ற அல் கோர் வாங்கி ஓட்டு 48.38%. ஆனால், புஷ் வென்ற புள்ளிகள் (Electoral College votes) 271. கோர் வென்றது 266 தான்.

ஒரு கட்டத்தில் இருவரும் சரி சம நிலையில் இருக்க புளேரிடாவில் கிடைத்த வெற்றியால் 25 புள்ளிகளை வென்ற புஷ் ஆட்சியைப் பிடித்தார். அந்த மாநிலத்தில் இருவருக்கும் இடையே நிலவிய ஓட்டு வித்தியாசம் வெறும் 537 ஓட்டுக்கள் தான்.

இந்தப் புள்ளிக் கணக்கை அமெரிக்கா கையாளக் காரணம், எல்லா மாகாணத்துக்கும் சமமான நிர்ணய பலம் கிடைப்பது தான். மாகாணத்தின் மக்கள் தொகையையும் பிற விஷயங்களையும் கணக்கில் வைத்த இந்த புள்ளிகள் நிர்ணயிக்கப்படுவதால், மாகாணங்களின் ஓட்டுக்கு உரிய பலமும் மரியாதையும் கிடைக்கிறது.

உதாரணத்துக்கு கலிபோர்னியாவின் மக்கல் தொகை அமெரிக்க மக்கள் தொகையில் 12.03 சதவீதம். ஆனால், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டு்ள்ள புள்ளிகள் 55 தான். இது மொத்த புள்ளிகளில் 10.22% சதவீதம் தான்.

அதே நேரத்தில் மிகச் சிறிய மக்கள் தொகை கொண்ட (அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 0.18%) வியோமிங் மாகாணத்திற்கு தரப்படும் புள்ளிகள் 3. இது மொத்த புள்ளிகளில் 0.56% ஆகும்.

இந்த புள்ளிகளின் எண்ணிக்கையை வைத்துத் தான் அமெரிக்க நாடாளுமன்றம் (House of Representatives), செனட் சபை ஆகியவற்றுக்கு எம்பிக்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் மாகாணத்துக்கு உரிய பலம் (புள்ளிகள்) கிடைக்க இந்த தேர்தல் முறை வழி வகுக்கிறது.

இதனால் தான் பெரும் குழப்பமாக இருந்தாலும் இந்த முறையையே அமெரிக்கா கையாளுகிறது.

ஹாம்சையரில் ஒபாமாவுக்கு வெற்றி:

இதற்கிடையே ஹாம்ப்சையர் மாகாணத்தில் டிக்ஸ்வி்ல்லே நாட்ச் பகுதியில் பதிவான 21 வாக்குகளில் 15ல் ஒபாமா வென்று முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டார்.

நாடு முழுவதும் ஓட்டெடுப்பு இன்று மாலை தான் நடக்கிறது என்றாலும் சில மாகாணங்களில் சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே வாக்கெடுப்பு நடப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒபாமாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

ஒபாமா பாட்டி மரணம்:

இந்நிலையில் ஒபாமாவின் பாட்டி மேடலின் பெய்ன் டன்ஹம் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லட் என்ற இடத்தில் மரணமடைந்தார். பிரச்சாரத்திலிருந்த ஒபாமா இத்தகவலைத் தெரிவித்தார். ஒபாமாவை வளர்த்தவர் அவரது பாட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர்

மக்களை வாக்களிக்கக் கோரும் பிரசுரம்

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருக்கிறார்கள்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்க அதிபராகப்போவது குடியரசு கட்சியின் ஜான் மெக்கைனா அல்லது ஜனநாயகக் கட்சியின் பாரக் ஒபாமாவா என்பதை இந்தத் தேர்தல் நிர்ணயிக்கும்.

முன்னதாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ள 29 மில்லியன் வாக்காளர்களுடன், மிகப்பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய ஒரு பில்லியன் தேர்தல் நிதி திரட்டப்பட்டு, சுமார் இரண்டு ஆண்டுகாலம் நீடித்த தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தத் தேர்தல் அமெரிக்கர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஒபாமா அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளன.

உலகின் பார்வையில் அமெரிக்க அதிபர் தேர்தல்

கறுப்பு இனத்தைச் சேர்ந்த இலிநொய்ஸ் மாநில செனட்டரான பராக் ஒபாமா அவர்கள் போட்டியிடுவதன் காரணத்தினால் மாத்திரந்தான் அமெரிக்க அதிபருக்கான இந்த தேர்தலை உலகமே மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறது என்று கூற முடியாது.

இதனை விட மிகவும் முக்கியமான வேறு காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

உலகமே ஒரு கடன் நெருக்கடி நாடகத்தை எதிர்கொள்கின்ற இன்றைய சூழ்நிலையில், இராக்கிலும், ஆப்கானிலுமாக இரண்டு போர்களில் அமெரிக்கா ஒரே நேரத்தில் ஈடுபட்டிருக்கின்ற சூழ்நிலையில், அத்துடன், உலக மட்டத்தில் அமெரிக்காவின் தார்மீக ஆளுமையும், தாமே உலகத்தலைவர் என்ற அவர்களது பிரகடனமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்த தேர்தல் வந்திருக்கிறது.

அதுதான் இந்த தேர்தலை உலகம் உன்னிப்பாக கவனிக்க முக்கிய காரணமாகும்.

இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் முஸ்தீபுகள் அனைத்தும் மிகவும் ஆச்சரியங்கள் நிறைந்தனவாகவே காணப்பட்டன என்று கூறலாம்.

இந்த தேர்தல் குறித்து இலங்கை ஆய்வாளரான கீதபொன்கலன், இந்திய- அமெரிக்க வர்த்தக அமைப்பின் தமிழ் நாடு கிளையின் தலைவர் எஸ். ரவிசங்கர் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் கே. எஸ். சுப்ரமணியம் ஆகியோரின் செவ்விகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

www.bbc.co.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரக் ஒபாமாவுக்கு முதல் வெற்றி

.

Tuesday, 04 November, 2008 01:31 PM

.

நியூ ஹாம்ப்ஷயர், நவ. 4: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் பாரக் ஒபாமாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

.

நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள டிக்ஸ்வில்லி நாச் பகுதியில் நடைபெற்ற முதல் வாக்குப்பதிவில் பாரக் ஒபாமா ஜான் மெக்கைனைவிட 9 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் முதல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 156 என்ற கணக்கில் மெக்கைனைவிட கூடுதலாக வாக்குகள் பெற்று ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். இந்த மாகாணத்தில் ரால்ப் நாடர் என்ற சுயேச்சை வேட்பாளர் போட்டியிட்ட போதிலும் அவருக்கு ஒரு ஓட்டுக்கூட கிடைக்கவில்லை.

இந்த மாகாணத்தில் 100 சதவிகித வாக்கு பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை இந்த மாகாணத்தில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜான் மெக்கைனுக்கும், பாரக் ஒபாமாவுக்கு கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனம் இனத்தோடைதான் சேருமாம். :wub:

புரியலையே

புரியலையே

:wub:அட இது கூடப் புரியவில்லையா?? ஒரு கறுப்பருக்கு இன்னொரு கறுப்(பி)பரின் ஆதரவு!!!!!! என்ன கு.சா சரி தானா?? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரியலையே

நான் கறுப்பு நிறத்தை சொன்னனான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் இந்தக்கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்

தேர்தலின்பின் இதன் உண்மைநிலை பற்றி விவாதிக்கலாம்????

;

அமெரிக்காவில் வசிப்பவரும் கறுப்பு இனத்தை சார்ந்தவரும் சாம்பியன் பட்டத்தை பலமுறைவென்றவருமாகிய ஒருவர்பிரான்சின் ரேடிறோவிற்கு போட்டி கொடுக்கும்போது குறிப்பிட்டவரிகள் இவை

முதலில் ஒரு கறுப்பு இனத்தவன் அinரிக்காவில் தனியே வீதியால் நடந்து போகட்டும்

அதன்பின்னர் வெள்ளைமாளிகைக்கு போவதைப்பற்றி கதைக்கலாம்...................?????????????

குகதாசன் சொல்வது முற்றிலும் உண்மை. வீட்டிலேயே கறுப்பை அண்டாத அமெரிக்கா நாட்டின் தலைவனாக எண்ணிப்பார்க்குமா ? அப்படி அவர் வந்தால் அது கறுப்பு இனத்தவர்கள் செய்த புண்ணியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் இந்தக்கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்

தேர்தலின்பின் இதன் உண்மைநிலை பற்றி விவாதிக்கலாம்????

;

அமெரிக்காவில் வசிப்பவரும் கறுப்பு இனத்தை சார்ந்தவரும் சாம்பியன் பட்டத்தை பலமுறைவென்றவருமாகிய ஒருவர்பிரான்சின் ரேடிறோவிற்கு போட்டி கொடுக்கும்போது குறிப்பிட்டவரிகள் இவை

முதலில் ஒரு கறுப்பு இனத்தவன் அinரிக்காவில் தனியே வீதியால் நடந்து போகட்டும்

அதன்பின்னர் வெள்ளைமாளிகைக்கு போவதைப்பற்றி கதைக்கலாம்...................?????????????

ம்.............உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கர்கள் தங்களுக்கான ஜனாதிபதியை தெரிவு செய்கின்றனரே தவிர.. உலகத்துக்கான ஜனாதிபதியை தெரிவு செய்யும் அதிகாரம் அமெரிக்கர்களுக்கு கிடையாது. அமெரிக்க ஜனாதிபதிகள் உலகை ஆதிக்கம் செய்யும் போக்கு மாற வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

மேற்குலக ஊடகங்கள் அமெரிக்கத் தேர்தலுக்கு அதிகம் முக்கியம் வழங்கி வருகின்றன. இது வழமையான அமெரிக்காவின் வல்லாதிக நலன் சார்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் சி ஐ ஏ போன்ற உளவு நிறுவனங்களின் அறிக்கைகளின் படிதான் இயங்கப் போகின்றார். ஒபாமா வெற்றி பெற்றால் கூட கொண்ட கொள்கையிலின்றும் விலகக் கூடிய அளவுக்கு அவருக்கு அழுத்தங்கள் கொண்டு வரப்படலாம்.. அவரை தவறாக வழிநடத்த சி ஐ ஏ யே உலகில் வன்முறைகளைத் தூண்டியும் விடலாம்.

அமெரிக்காவின் வல்லாதிக்க தன்மை உலகில் பலவீனப்படும் வரை.. அமெரிக்க ஜனாதிபதிகள்.. உலகுக்கு பெரிய மாற்றங்களை தந்திடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் ஒப்பீட்டளவில் ஒபாமா.. ஒரு முன்மாதிரியான ஜனாதிபதியாக இருக்கக் கூடிய வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கிறார். அது ஒரு எதிர்பார்ப்புடனான வரவேற்பு மட்டுமே அன்றி. அவர் சாதிப்பார் என்று திடமாகச் சொல்ல முடியாதே இருக்கிறது.

ஜோன் மெக்கைன்.. இராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமன்றி வியட்நாம் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக மும்மரமாகச் செயற்பட்டவர். ஈராக் யுத்தத்துக்கு புஷ்சை வழி நடத்தியவர். எனவே அவர் அமெரிக்காவின் உலக சர்வாதிகாரம் நிறைந்த வல்லாதிக்கம் வளர்வதையே விரும்புவார். சண்டை. சாவு.. ஆயுதம் தான் அவரின் உலகுக்கான முதல் தெரிவாக இருக்கும். :wub:

Edited by nedukkalapoovan

ஒபாமாதான் அதிபராக வருவார் என பல அரசியல் ஆய்வாளரின் கருத்துகளை நமது யாழ்கள ஆய்வாளர் பொய்யாக்க முயற்சி செய்யினம் போல இருக்கு :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாதான் அதிபராக வருவார்.

அனேகமான தொலைக்காட்சிகள் எல்லாம் தேர்தல் பற்றிய செய்தியே போய்க் கொண்டிருக்கிறது.

ஓபாமா வந்தால்தான் என்னைப்போன்றவர்களிற்கு சற்று மரியாதை கிடைக்கும்

ஓபாமா வந்தால்தான் என்னைப்போன்றவர்களிற்கு சற்று மரியாதை கிடைக்கும்

அது எப்படி பரணி? (அல்லது நீங்களும் என்னைப் போல நல்ல கறுப்போ?)

Edited by NIZHALI

புரொஜெக்டட் முடிவு (Projected results: வாக்குகள் முற்றாக எண்ணப்படாமல், எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையிலும் வாக்களித்து வெளியேறினவர்களை பேட்டி கண்டும் எதிர்வு கூறப்படும் முடிவுகள்)

மக்கெய்ன்: 08 (கென்றூக்கி, Kentucky)

ஒபாமா: 03 (வேர்மன்ட்: Vemont)

பி.பி.சி யின் எதிர்வு கூறல் (புரொஜெக்டட்)

ஒபாமா: 103

மக்கெய்ன்: 34

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வாக்குகள் (Electoral votes)

(வெற்றிபெறத் தேவை: 270 வாக்குகள்)

ஒபாமா: 81 மக்கெயின்: 34

  • கருத்துக்கள உறவுகள்

Latest Presidential Polls

Election 2008 Obama McCain RCP Average

National 52.1 44.5 Obama +7.6

Battlegrounds Obama McCain RCP Average

Florida 49.0 47.2 Obama +1.8

Pennsylvania 51.0 43.7 Obama +7.3

Ohio 48.8 46.3 Obama +2.5

North Carolina 48.0 48.4 McCain +0.4

Virginia 50.2 45.8 Obama +4.4

Indiana 46.4 47.8 McCain +1.4

Minnesota 51.6 41.8 Obama +9.8

Colorado 50.8 45.3 Obama +5.5

Iowa 54.0 38.7 Obama +15.3

Nevada 50.3 43.8 Obama +6.5

New Mexico 50.3 43.0 Obama +7.3

New Hampshire 52.8 42.2 Obama +10.6

மக்கெயின் நிச்சயம் வெல்ல கூடும் என எதிர்பார்க்கப்பட்ட பென்சில்வேனியா (ஏன் பென் வேண்டினியா என்று கூறுவது இல்லை) விலும் ஒபாமாவின் வெற்றி எதிர்வு (Projected Results)கூறப்பட்டுள்ளது.

C N N இன் செய்திகளின் படி பார்த்தால் மிகப் பெரும்பாண்மையுடன் ஒபாமா முதற்கட்டத் தேர்தலில் வெற்றி பெறுவார் போலுள்ளது.

இதுவரை கிடைத்த முடிவுகளின் படி

ஒபாமா: 199

மக்கெய்ன்: 78

குட்டியின் ஆய்வின் படி ஒபாமா 330 ற்கு மேற்பட்ட வாக்குகளுடன் பெரு வெற்றி பெறுவார். :wub:

பி.பி.சி யின் உறுதியாக எதிர்பார்க்கப்படும் பெறுபேறிகளின் படி ஒபாமா 270 இற்கும் அதிகமான இடங்களை வென்று, முதல் கறுப்பு இன அமெரிக்க ஜனாதிபதியாக வர அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளது

ஒபாமா: 297

மக்கெய்ன்: 145

தரவு: பி.பி.சி

சி.என்.என்:

ஒபாமா: 333

மக்கெய்ன்:155

மக்கெய்ன் ஒபாமா வெற்றியீட்டியதற்காக வாழ்த்து தெரிவிது உள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.