Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை நிறுத்த தாம் தயார் என்பதை புலிகள் அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

Featured Replies

போரை நிறுத்த தாம் தயார் என்பதை புலிகள் அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

[சனிக்கிழமை, 08 நவம்பர் 2008, 09:50 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

போரை நிறுத்துமாறு ஒரு தரப்புக்கு மட்டும் நிர்ப்பந்தம் கொடுக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ள கருத்தை அடுத்தே தா.பாண்டியன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்று இந்திய மக்களும், தமிழ் மக்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ள மனிதாபிமான கோரிக்கையை பொதுவாக பலரும் ஆதரிக்கின்றனர்.

இந்த பின்னணியில் மத்திய அரசும், தமிழக முதல்வரும் சிறிலங்கா அரச தரப்பில் மட்டும் போரை நிறுத்துவது எவ்வாறு சாத்தியப்படும். மறுதரப்பும் (விடுதலைப் புலிகள்) போரை தொடர மாட்டோம் என்று அறிவிக்க வேண்டாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். பொதுமக்களிடமும் இது குறித்த ஐயப்பாடு இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காக போராடி வருபவர்களும் குறிப்பாக இதில் விடுதலைப் புலிகளின் சார்பாக அதன் பொறுப்பாளர்களும், தாங்களும் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி வழியில் தீர்வுகாண தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Tigers reiterate consent to ceasefire

[TamilNet, Saturday, 08 November 2008, 16:42 GMT]

Liberation Tigers Political Head B. Nadesan, when contacted by TamilNet on Saturday, following reports of Tamil Nadu leaders seeking clarification on LTTE's stand on ceasefire, said "there is no hesitation on our side to reiterate our position that we have always wanted a ceasefire." It is the Government of Sri Lanka (GoSL) that unilaterally abrogated the ceasefire, Mr. Nadesan said and added that the Tigers were only fighting a defensive war since Colombo has thrust upon Tamils an aggressive war.

LTTE Political Head B. Nadesan [File photo]The LTTE Political Head also said they have always reiterated that they have been committed to the Ceasefire.

Earlier, the State Secretary of the Communist Party of India (CPI), Mr. D. Pandian issued a public statement urging those who were fighting for the democratic rights of the Eezham Tamils, especially the political leadership of the Liberation Tigers, to come forward to announce their stand in a clarifying manner.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போர்நிறுத்தத்தில் இருந்து விலத்தவில்லை என்பதைத் திரு பாண்டியன் அவர்கள் அறிய வேண்டும். இது வரை தற்பாதுகாப்புத் தாக்குதல் தான் நடத்துகின்றார்களே தவிர, நிலத்தைக் கைப்பற்றும் தாக்குதல் செய்யவில்லை.

போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலத்தியது சிறிலங்கா அரசு மட்டும் தான் என்பதையும் நினைவூட்டுகின்றோம்.

போரைத் தொடங்கியவர்கள் யார்? போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியவர்கள் யார்? சார்க் மாநாட்டின் போது கிடைத்த சந்தர்ப்பத்தினை உதறித் தள்ளியவர்கள் யார்? இவைகளுக்கெல்லாம் தெளிவான விடையுண்டு. ஆனாலும் களம் எப்படிப்பட்ட முடிவை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

புலிகள் 2002 இல் போரை நிறுத்திவிட்டார்களே! ஐயாமாரே விழித்தெழுங்கள். :):unsure:

புலிகள் போர்நிறுத்தத்தில் இருந்து விலத்தவில்லை என்பதைத் திரு பாண்டியன் அவர்கள் அறிய வேண்டும். இது வரை தற்பாதுகாப்புத் தாக்குதல் தான் நடத்துகின்றார்களே தவிர நிலத்தைக் கைப்பற்றும் தாக்குதல் செய்யவில்லை.

போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலத்தியது சிறிலங்கா அரசு மட்டும் தான் என்பதையும் நினைவூட்டுகின்றோம்.

போரைத் தொடங்கியவர்கள் யார்? போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியவர்கள் யார்? சார்க் மாநாட்டின் போது கிடைத்த சந்தர்ப்பத்தினை உதறித் தள்ளியவர்கள் யார்? இவைகளுக்கெல்லாம் தெளிவான விடையுண்டு. ஆனாலும் களம் எப்படிப்பட்ட முடிவை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசு இலங்கை அரசுக்கிடையில் நடந்த மாகாணங்களின் இணைப்பு ஆகிய வற்றை இந்திய அரசு கைகட்டிப்பார்த்து இருக்கும் நிலையிலும் இன்னும் சொல்லப்போனால் இந்திய மத்திய அரசு தமிழ் நாட்டு அரசு ஆகியவை இதுவரை நடந்த போரில் ஆக்கிரமிப்பு போரில் இலங்கை இராணுவத்துக்கும் இலங்கை அரசின் ஆட்டத்துக்கும் பக்கபலமாக இருந்தும் இன்னும் விடுதலைப்புலிகள் உலக அரங்கை பார்த்து கைகட்டி மௌனப்போக்கில் பொறுமை போர்த்து தங்களின் விடுதலை இலட்சியத்தை உலகம் உணரும் காலம் வராதா என்று பார்த்து இருந்தும் இப்படியான இந்திய அரசியல் மையத்தை ஆண்டு கொண்டு வாழும் அனைத்து அரசியல் களமும் ஏன் இன்னும் எம்மை புரியவில்லை என்று இன்னும் எமக்கு இந்திய அரசு கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது தெரிகின்றது

புலிகள் 2002 இல் போரை நிறுத்திவிட்டார்களே! ஐயாமாரே விழித்தெழுங்கள்

பாண்டியன் அவர்களின் கோரிக்கை நியாயாமானதும் ஆக்க பூர்வமானது. புலிகள் தாங்கள் போர் பிரியர்கள் அல்ல என்பதை முன்னரும் சொல்லி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை சொல்ல மாட்டார்கள் என்பதுக்கு இல்லை.

நல்லதொரு அரசியல் நகர்வாக அது இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசு இலங்கை அரசுக்கிடையில் நடந்த மாகாணங்களின் இணைப்பு ஆகிய வற்றை இந்திய அரசு கைகட்டிப்பார்த்து இருக்கும் நிலையிலும் இன்னும் சொல்லப்போனால் இந்திய மத்திய அரசு தமிழ் நாட்டு அரசு ஆகியவை இதுவரை நடந்த போரில் ஆக்கிரமிப்பு போரில் இலங்கை இராணுவத்துக்கும் இலங்கை அரசின் ஆட்டத்துக்கும் பக்கபலமாக இருந்தும் இன்னும் விடுதலைப்புலிகள் உலக அரங்கை பார்த்து கைகட்டி மௌனப்போக்கில் பொறுமை போர்த்து தங்களின் விடுதலை இலட்சியத்தை உலகம் உணரும் காலம் வராதா என்று பார்த்து இருந்தும் இப்படியான இந்திய அரசியல் மையத்தை ஆண்டு கொண்டு வாழும் அனைத்து அரசியல் களமும் ஏன் இன்னும் எம்மை புரியவில்லை என்று இன்னும் எமக்கு இந்திய அரசு கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது தெரிகின்றது

:)

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு அர்த்தமில்லாத கோரிக்கையும், அதைத்தொடர்ந்து உங்களால் வைக்கப்படும் வேண்டாவாத கருத்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுடன் சேர்ந்து சம்பூர் போன்ற அணு மின் நிலைய திட்டங்களை இலங்கை அரசு மூலம் நிலை நாட்டியதை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். அத்தோடு துணைப்படையை மறைமுகமாக யார் ஊக்குவிக்கிறார்கள் என்பதையும் திரு பாண்டியன் அவர்கள் அறிவார்கள் என நினைக்கிறேன். அத்தோடு மறைமுக இராணுவ உதவிகள் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மேலும் போர் நிறுத்த ஒப்பந்தில் இருந்து அதாவது 2002 ல் இருந்து இற்றை வரை விடுதலை புலிகள் எந்த ஒரு நில மீட்பு போரிலோ அல்லது போர் நிறுத்த ஒப்பந்தந்தை கிழித்தெறியவோ இல்லை. அல்லாமலும் நோர்வே போன்ற ஸ்கண்டினேவிய மத்தியஸ்தர்களையும் நாட்டை விட்டு விரட்டியதை முழு உலகமும் அறியும்.

திரு பாண்டியன் எந்த அடிப்படையில் இப்படி ஒரு பொறுப்பற்ற அறிக்கையை வெளியிட்டார் என விளங்கவில்லை?

போர்நிறுத்தம் உருவாகக் கூடாது என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடுகிடையாது. என்ன வெற்றியென்ற நிலையிலிருக்கும் அரசு அப்படிப்பட்ட ஒரு போர் நிறுத்தத்தினை ஏற்றுக் கொள்ளாது. போர் நிறுத்தம் என்பது தோல்வி நிலையைக் குறிப்பதல்ல. அதுவும் இனப் பிரச்சினைத் தீர்வின் ஒரு நகர்வே. போராடும் தமிழர் தரப்பே இதுபற்றிய கோரிக்கையைக் கவனத்திலெடுக்க வேண்டும்.

பாண்டியன் அவர்களின் கோரிக்கை நியாயாமானதும் ஆக்க பூர்வமானது. புலிகள் தாங்கள் போர் பிரியர்கள் அல்ல என்பதை முன்னரும் சொல்லி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை சொல்ல மாட்டார்கள் என்பதுக்கு இல்லை.

நல்லதொரு அரசியல் நகர்வாக அது இருக்கும்.

உண்மை!

ஈழத்தின் நிலைமையை தமிழகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகப் புரிகின்றது. முதலில் அடித்தவன் அடிப்பதை நிறுத்தட்டும். புலிகள் இன்னும் யுத்த நிறுத்த ஒபப்பந்தத்திலிருந்து விலகிவிடவில்லை. தம்மையும் தமிழரைக் காக்க தற்காப்பிற்காகவே யுத்தமே செய்கின்றனர். எனவே புலிகள் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஜானா

தமிழகத்தின் இன்றைய ஈழ ஆதரவு எழுச்சிகளுக்கு முக்கிய காரணமான திரு. தா. பாண்டியன் போன்றவர்கள் இது தெரியாதவர்கள் அல்ல!

இது போன்ற கோரிக்கைகளின் பின்னுள்ள காய் நகர்த்தல்களை புரிந்து கொண்டால் குழப்பங்கள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி. அரசியல் நகர்வு சரிப்படும் என சொல்வீர்களா? எப்படி தமிழர்கள் ஏற்றாலும் இந்திய அரசும், இலங்கை அரசும் அரசியல் குளிர் காய்வார்கள்.. தமிழர்கள் மீண்டும் GOING BACK TO SQUARE ONE. இது எனது தனிப்பட்ட ஊகிப்பு மட்டுமே. புலிகள் இம்முறை யாரை நடுநிலைவாதிகளாக தேர்ந்து எடுப்பது நயவஞ்சக உலகத்தில். எல்லோருமே வி.புலிகளை மடக்குவதிலே தான் கண்ணும் கருத்துமாய் உள்ளார்கள்.இவ்வளவுக்கும் மேலாக பயங்கரவாதிகள் என்ற நாமம் வேறு.இதில் எப்படி சரியான அரசியல் நகர்வென கூறுவீர்கள்.

உடனடியாக தமிழீழ அரசியல் துறை இது பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது கவனியுங்கள்.

இது செய்தியாக வரும் போது விடுதலைபுலிகள் போர்வெறியர்கள் அல்ல என்ற தகவல் மீண்டும் ஒருமுறை இந்திய மக்களிடம் எடுத்துச் செல்லப்படும்.

மேலும் விரிவாக இவை பற்றி தற்போதைக்கு பேச விரும்பவில்லை.

நன்றி

[TamilNet, Saturday, 08 November 2008, 16:42 GMT]

Liberation Tigers Political Head B. Nadesan, when contacted by TamilNet on Saturday, following reports of Tamil Nadu leaders seeking clarification on LTTE's stand on ceasefire,

"there is no hesitation on our side to reiterate our position that we have always wanted a ceasefire." It is the Government of Sri Lanka (GoSL) that unilaterally abrogated the ceasefire Mr. Nadesan said and added that the Tigers were only fighting a defensive war since Colombo has thrust upon Tamils an aggressive war.

Earlier, the State Secretary of the Communist Party of India (CPI), Mr. D. Pandian issued a public statement urging those who were fighting for the democratic rights of the Eezham Tamils, especially the political leadership of the Liberation Tigers, to come forward to announce their stand in a clarifying manner.

Edited by vettri-vel

தமிழகத்தின் இன்றைய ஈழ ஆதரவு எழுச்சிகளுக்கு முக்கிய காரணமான திரு. தா. பாண்டியன் போன்றவர்கள் இது தெரியாதவர்கள் அல்ல!

இது போன்ற கோரிக்கைகளின் பின்னுள்ள காய் நகர்த்தல்களை புரிந்து கொண்டால் குழப்பங்கள் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.