Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்டசபையில் மோதல்

Featured Replies

இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்டசபையில் மோதல்

[புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 09:11 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்]

இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட சபையில் இன்று புதன்கிழமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக சட்டசபையில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். முதலில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் விஜயகாந்தை பேச அழைத்தார்.

அவர் சபையில் இல்லாததால் அடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமாரை உரையாற்றுமாறு அழைத்தார்.

ரவிக்குமார் உரையாற்றியதாவது:

இலங்கை தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல் மனித கற்பனைக்கு எட்டாத வகையில் கொடூரமாக உள்ளது. 5 லட்சம் பேர் அந்த நாட்டிலேயே அகதியாக காடுகளில் வாழ்கிறார்கள். பாடசாலைகள் மூடப்பட்டு 30 ஆயிரம் மாணவ- மாணவிகள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைகிறார்கள். பாம்பு கடிக்கு மருந்தின்றி நிறைய பேர் சாகிறார்கள். கண்மூடித்தனமாக சிறிலங்கா இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது. சிறிலங்கா அரச தலைவர் இந்தியா வந்துள்ளார். அங்கு படுகொலைகள் நிறுத்தப்பட போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

இதற்கு இந்தியா வழி காண வேண்டும். இதை வலியுறுத்தி இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் மூலம் சுமூக நிலை ஏற்பட வழி ஏற்படும் என நம்புகிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர் மு.கண்ணப்பன் உரையாற்றியதாவது:

60 ஆண்டுகளாக ஆயிரமாயிரம் தொப்புள்கொடி உறவுகொண்ட தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. வரலாற்றுப்படி பார்த்தால் இலங்கை தமிழர்களுக்கே சொந்தம். சிங்களவர்கள் அங்கு குடியேறியவர்கள்தான் இதற்காக இலங்கை தமிழர்களுக்கே சொந்தம் என நான் வாதிடவில்லை. பண்டைய காலத்தில் தனித்தனி ஆட்சி நடந்தது. யாழ்ப்பாணத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது 1833 இல் சிங்களவர்களோடு சேர்ந்து தமிழர் பகுதியும் இணைக்கப்பட்டு ஒன்றானது. 1948 இல் இலங்கை விடுதலை பெற்ற பிறகு ஒரே நாடாக அறிவிக்கப்பட்டு இருந்து வருகிறது. அதே ஆண்டில் அங்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக 10 லட்சம் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

இது பற்றி இந்தியப் பிரதமராக இருந்த நேரு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இது நீதியற்ற செயல் என்றார்.

ஆனாலும் தமிழர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தது. ஈழத் தமிழர்கள் 2 ஆம் தர மக்களாக ஆக்கப்பட்டனர். சிங்களம் தான் ஆட்சிமொழி என்று இலங்கை அறிவித்தது. இதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த தமிழர்கள் மீது சிறிலங்கா துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதன் பிறகு சிறிலங்கா அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் ஈழப் பிரச்சினையை தீர்க்க போடப்பட்டது.

ஜெயவர்த்தன- ராஜீவ் காந்தி ஒப்பந்தம் உட்பட ஒரு ஒப்பந்தத்தை கூட சிறிலங்கா அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதை உலக நாடுகளே கண்டித்துள்ளன.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இறந்த அன்று யாழ்ப்பாண தமிழர்கள் எல்லோரது வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி துக்கம் கடைப்பிடித்தார்கள். அப்போது ஊர்வலமாக வந்த ஈழத்தமிழர்கள் மீதும் சிறிலங்கா இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

உள்நாட்டிலேயே இன்று ஈழத்தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய பிரதமராக மன்மோகன்சிங் வந்த பிறகே இலங்கையுடன் ஒப்பந்தம் போட முடிவானது. இதை வைகோ உட்பட பல்வேறு தலைவர்களும் எதிர்த்ததால் ஒப்பந்தம் கைவிடப்பட்டது. பின்னர் சிறிலங்காவுக்கு கதுவீ கருவி வழங்கப்பட்டது தெரிந்ததும் அதனையும் திரும்பபெற வலியுறுத்தினோம். இன்று சிறிலங்காவுக்கு இராணுவ உதவி செய்கிறது. போர் நிறுத்தம் விடுதலைப் புலிகள் தரப்பில் அறிவித்தும் சிறிலங்கா மறுக்கிறது.

எனவே சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில் கூடுதலாக சில வாசகங்களையும் சேர்க்க வேண்டும். சிறிலங்காவுக்கு கொடுத்த கதுவீ கருவிகளை திரும்ப பெற வேண்டும். தொழில்நுட்ப வல்லுனர், இராணுவ அதிகாரிகளை திரும்ப பெற வேண்டும். தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டும்.

பயிற்சிகளை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை இருதரப்பினரும் தொடர வேண்டும். இவற்றை சிறிலங்கா செய்யாவிட்டால் தூதரக உறவை துண்டித்து பொருளாதார தடை விதிக்க எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

மத்திய அரசை குறை கூறி பேசிய கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன் உரையாற்றியதாவது:

கண்ணப்பன் பேசும் போது இந்திய அரசு அங்கு ஆயுதப் பயிற்சி கொடுத்ததாகவும் எல்லாவற்றையும் மத்திய அரசு செய்தது போல் பேசினார். மத்திய அரசு மறுத்துள்ள நிலையில் இவர் இப்படி பேசலாமா எல்லாத் தரப்பினரும் ஏற்கும் வகையில் தீர்மானம் கொண்டு வருவதற்கு இது இடையூறாக இருக்காதா?.

அவர் பேசியது மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளதால் அதனை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

இதற்கு பதிலளித்த மு.கண்ணப்பன்: நான் இல்லாததை சொல்லவில்லை. வைகோவுக்கு பிரதமர் எழுதிய பதில் கடிதத்தில் அவரே ஒத்துக்கொண்டுள்ளார். நான் எதையும் இட்டுக்கட்டி கூறவில்லை. என்னிடம் ஆதாரம் கையில் உள்ளது.

ஞானசேகரன்: மத்திய அரசை குறை கூறி விட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமா? அந்த வாசகத்தை நீக்க வேண்டும்.

மு.கண்ணப்பன்: நான் சொன்ன கருத்தை திருத்த சபைதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர ஞானசேகரன் அல்ல. (இதற்கும் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்).

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவபுண்ணியம் உரையாற்றியதாவது:

சட்டசபையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற முழு முயற்சி எடுத்த முதலமைச்சரை பாராட்டுகிறேன். இந்த தீர்மானம் மூலம் இலங்கையில் அமைதி ஏற்பட வாழ்த்துகிறோம்.

இதன்மீது கருத்துச் சொல்ல அவரவருக்கு உரிமை உண்டு. மாறுபட்ட கருத்து இருப்பதை பதிவு செய்வது தவறு ஆகாது. இலங்கையில் ஒரு இனப்படுகொலையே நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள்.

இலங்கையில் எப்போதெல்லாம் போர் நடக்கிறதோ அப்போதெல்லாம் தமிழக மீனவர்களும், சுடப்படுகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பங்களாதேஷ் யுத்தம் எப்படி வந்தது அந்த நாட்டு அகதிகள் லட்சக்கணக்கில் இந்தியா வந்தனர். அப்போது தான் இந்திரா காந்தி யுத்தம் நடத்தி அந்த நாட்டை பிரித்துக் கொடுத்தார். இன்று அதே நிலைதான் இலங்கையில் நடக்கிறது. அகதிகளாக லட்சக்கணக்கில் வருகிறார்கள்.

அங்குள்ள காடுகளிலும் லட்சக்கணக்கில் பதுங்கி கிடக்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்காத தான் முதலில் இரத்துச் செய்தது.

இன்று அங்கு நடைபெறும் இனப் படுகொலையை பல்வேறு நாடுகள் கண்டித்தும் அதனை ஏற்காத அரசாக சிறிலங்கா உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.

இதில் மத்திய அரசு விரைந்து முயற்சி எடுக்க வேண்டும். மத்திய அரசின் இராணுவ உதவி மறுக்க முடியாத உண்மை (காங்கிரஸ் கடும் எதிர்ப்பு). இதில் சீனா, ரஷியா உள்பட எந்த நாடு இராணுவ உதவி செய்தாலும் தவறு தான். (இவ்வாறு பேசி விட்டு காங்கிரஸ் கட்சி மீது ஒரு குற்றச்சாட்டை கூறினார்.

இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து சபைக்குறிப்பில் இருந்து அந்த வாசகத்தை நீக்க சொன்னார்கள். சபாநாயகர் அதனை சபைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.)

நான் உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே பின்னால் இருந்து காங்கிரஸ் உறுப்பினர் மிரட்டும் பாணியில் பேசுவது நல்லதல்ல. ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறேன்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதியும், முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்டசபையில் மோதல்

இந்தமாதிரி தலையங்கம் வைப்பது சரியல்ல

பொறுப்பிலுள்ளவர்கள் கவனிக்கவேண்டும்

கவனிப்பார்பளா???????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெற்றில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக இருக்கிறதே.

இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்டசபையில் மோதல்

தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் யார் இப்படி ஒரு தலைப்பு இட்டது?

என்ன புதினம் கைமாறிவிட்டதா?

இல்லை புதினத்துக்குள் சில புல்லுருவிகள் நுழைந்துவிட்டனவா??

அப்படியும் இல்லை என்றால் புதினத்தில் உள்ளவர்களூக்கு மண்டை கலங்கிவிட்டதா?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தி ஏலவே வெளிவந்திருக்கின்றது. அந்த தலைப்பு இவ்வாறு இடப்பட்டிருக்கின்றது.

சிறிலங்கா அரசு உடனடியாக படைகளை பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்: தமிழக சட்டசபையில் தீர்மானம்

யாழிலும் இது இணைக்கப்பட்டிருக்கின்றது. தமிழக சட்டசபையில் மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இந்திரா காங்கிரஸ் கட்சி மோதியிருக்கின்றது. இது பிறிதொரு செய்தி. இச்செய்தி இன்றைய தமிழக ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றது.

ஆகவே செய்திகளை பகுத்தாய்வு செய்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் யார் இப்படி ஒரு தலைப்பு இட்டது?

என்ன புதினம் கைமாறிவிட்டதா?

இல்லை புதினத்துக்குள் சில புல்லுருவிகள் நுழைந்துவிட்டனவா??

அப்படியும் இல்லை என்றால் புதினத்தில் உள்ளவர்களூக்கு மண்டை கலங்கிவிட்டதா?

சிறிலங்கா அரசு உடனடியாக படைகளை பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம்

http://www.puthinam.com/full.php?22ImUcc3o...6D2e2HMC3b34Aee

அதே நேரத்தில் இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவிகள் செய்வதைக் குறிப்பிட்ட மதிமுக, இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கருத்து மோதலில் ஈடுபட்டது.

http://www.puthinam.com/full.php?22OoZcc3v...7A2e2IRC3b35Hke

செய்திகளை வாசித்தபின்பு கருத்துக்களை வையுங்கள் வெற்றி வேல். அவசரப்பட்டு புதினம் மீது குற்றம் சாட்ட வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.