Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் முன்னரங்கில் - ஒரு வாரத்தில் 927 படையினர் பலி-270 படையினரை காணவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முன்னரங்கு பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் இடம்பெற்ற சண்டையில் 927 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 270 பேரைக்கொண்ட இராணுவ அணியொன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் சென்று காணாமல்போயுள்ளதாக படைவட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சில தினங்களுக்கு பரந்தன் ஊடாக விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் முன்நகர்வை மேற்கொண்ட இரு இராணுவ அணி காணாமல்போயிருந்தது.

இந்த நிலையில் இந்த இராணுவ அணியினரை தேடிச்சென்ற 270க்கும் மேற்பட்ட இராணுவ அணியினரை உள் நுழைய விட்டு தாக்கும் உத்திமூலம் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த அணியுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை படையினர் மீட்ட பூநகரி பிரதேசத்தை விடுதலைப்புலிகள் மீண்டும் மீட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்ததாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

http://www.swissmurasam.net/news/breakingn...27---270--.html

Edited by kuddipaiyan26

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை படையினர் மீட்ட பூநகரி பிரதேசத்தை விடுதலைப்புலிகள் மீண்டும் மீட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்ததாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்தில் மட்டும் 927 ஆமி பலி + 270 காணவில்லை இரண்டையும் கூட்டினா 1197 அவுட் ஒரு வாரத்தில் மட்டும் :unsure: .. சிங்கள மக்கள் காதுக்கு இந்த செய்தி போய் செருமா..

இனி சிங்கள தேசத்தில அவல குரல் தான் கேக்கும் :o ...

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒருவாரச் சண்டை குறித்து விடுதலைப்புலிகள் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

இவை சிறீலங்கா சிங்களப் பகுதித் தகவல்களே ஆகும்.

ஒரே வெற்றிச் செய்தியாகப் போய்.. அரசு திடீர் தேர்தலை அறிவிச்சிட்டா.. தங்கட நிலை என்னாகிறது என்ற பீதியில்.. ஐ தே க.. மற்றும் மங்களவின் குமுறல்களாகக் கூட இவை இருக்கலாம்.

எமக்கு புலிகள் சொல்வார்கள். அவர்கள் சொல்லாத வரை... அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுதான் ஆய்வுக்குரியதாக இருக்க வேண்டும். ஆயுறம் புடுங்கிறம் என்று காட்டிக்கொடுக்கிறதாலதான்.. புலிகளும் அடக்கி வாசிக்கிறார்களோ தெரியவில்லை. :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முன்னரங்கு பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் இடம்பெற்ற சண்டையில் 927 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 270 பேரைக்கொண்ட இராணுவ அணியொன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் சென்று காணாமல்போயுள்ளதாக படைவட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நல்ல செய்தி குட்டிப்பையன் . :unsure:

இறக்கும் இராணுவத்தை விட தப்பி ஓடும், காயப்படும் இராணுவம்தானப்பா இராணுவ தலைமைக்கு தலையிடி....!!! இதை கவனத்திலை எடுத்து இறந்த இராணுவதொகையை விட்டு ஓடின தொகையை கொஞ்சம் தூக்கலாய் எழுதுங்கோ... அப்பதான் இன்னும் கிழுகிழுப்பாய் இருக்கும்.....!!!

நல்ல செய்தி குட்டிப்பையன் . :unsure:

நல்ல செய்தி தான் ஆனால் உண்மை செய்தியாக வேண்டும்.

என்னக்கு என்னமோ 270 பேர் கொண்ட அணி உள்ள போடுது என்றதும் புலிகள் வர்கலை தேடி போக இவங்கள் சண்டை இல்லாம கிளிநொச்சியை பிடிக்க போறங்களோ என்று யோசனை வந்த்துட்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி குட்டிப்பையன் . :o

ஒம் சிறி அண்ணா நல்ல செய்தி தான்

இந்த அடிய போல இன்னும் நாலு ஜந்து அடி குடுக்கனும் மகிந்தா ராஜபக்சா தன்ர வாயாளையே போர் நிறுத்தத்தை அறிவிப்பான் :wub::unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில Ambulance அங்கையும் இங்கையும ஒடுதாம் காயமடைந்த படையிரை ஏத்தி கொன்டு..

கூலி படையள் முறையா தான் வேன்டி கட்டிட்டினம் போல :unsure:

கொழும்பில Ambulance அங்கையும் இங்கையும ஒடுதாம் காயமடைந்த படையிரை ஏத்தி கொன்டு..

கூலி படையள் முறையா தான் வேன்டி கட்டிட்டினம் போல :unsure:

எப்பஎப்படி யார் சொன்னது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்பஎப்படி யார் சொன்னது?

எனது நண்பன் சென்னான்

Call பன்னி :unsure:

கொழும்பில் ambulance அப்படி ஓடுவதாககொழும்பில் உள்ளவர்கள் மூலன் நானும் அறிந்தேன்...

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பைய்யன்,

எந்தச் சிங்களத் தளத்தில் இப்படி எழுதியிருக்கு ? நீங்கள் சுவிஸ் முரசத்திலிருந்தல்லவா எடுத்து இணைத்திருக்கிறீர்கள்.

கொழும்பில் இருந்து எழுதுகின்றேன். கடந்த இரு நாட்களாக வழமைக்கு மாறக காவு வண்டிகள் ஓடிக் கொண்டிருப்பதை கவனித்தேன். அத்துடன் உலஙக்கு வானுர்திகளும் ஓடித்திரிந்ததைக் கவனித்தேன். கொழும்பு வைத்திய சாலைக்கு இரத்மலானை விமான தளத்திலிருந்து மூன்று முக்கிய பாதைகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் இப்படியெனில் மற்ற வீதிகளில்...! ஆக ஏதோ ஏட கூடமாக நடந்திருப்பது புரிகிறது. அத்துடன் ஆக்கிரமிப்பாளனின் பூநகரி வெற்றி விழா இன்னும் கொழும்பில் களைகட்டவில்லை என்பதும் புரியாத புதிராக உள்ளது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு குட்டிப்பையனை பேசாதேங்கோ .

Edited by தமிழ் சிறி

படையினருக்கு சிகிச்சை வழங்குவதற்காக நோயாளர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர் - ஐ.தே.க

கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் காயடைந்த பெரும் எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில், வைத்தியசாலைகளில் தங்கியிருந்து கிசிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களில் சுமார் 250க்கும் மேற்பட்ட படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதகாவும், குருணாகல் மாவட்டத்திற்கு மாத்திரம் சுமார் 48 சடலங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த படைவீரர்கள் சிலரின் இறுதிக் கிரியைகளுக்கு தாம் சமூகமளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நடவடிக்கைகளின் உண்மை நிலைமையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த சேத விபரங்கள் பற்றி இலங்கையில் வெளியிடப்படாவிட்டாலும், அல்ஜசீரா, சீ.என்.என் போன்ற செய்தி வேவைகளின் ஊடாக உலகம் முழுவதும் வெளிப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/

விடயம் உண்மை. ஆனால் என்னவென்று இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.

பரந்தனில் முன்னேறிய படைக்கு என்ன நடந்தது? இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாம்

பரந்தனில் 270 பேரை கொண்ட சிறிலங்கா இராணுவக் குழுவிற்கு என்ன ஆனது. அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பரந்தனில் 270 பேரை கொன்ட இராணுவக்குழு முன்னேறியபோது அவர்களை முன் நகரவிட்டு புலிகள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் , பரந்தனில் உள்ள சில இராணுவக் குழுக்களுடன் முற்றாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக, இராணுவ வட்டாரங்கள் பகிரங்கமாக அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அத்துடன் படையினர் கைப்பற்றிய முக்கிய பிரதேசம் ஒன்றை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.(இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை) ஒரு வாரத்திற்குள், மட்டும் குறைந்தது 927 படையினரை சிறிலங்கா இராணுவம் இழந்துள்ளது.

இதேவேளை, வன்னிப்பகுதி மோதல்களில் கொல்லப்பட்ட 200ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரின் சடலங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் கொழும்பு ஜெயவர்த்தன மலர்ச்சாலைக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் பாதுகாப்பு கண்காணிப்பகத்தின் அமைப்பாளருமாகிய மங்கள சமரவீர தெரிவித்தார்.

இம்மோதல்களில் படுகாயமடைந்த 710 சிறிலங்காப் படையினர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதி வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளின் போது பலியாகும் படையினரது எண்ணிக்கையை வெளியிட ஊடகங்களுக்கு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு பாதுகாப்புத் தொடர்பான விடயங்களைக் கொண்டு செல்ல பாதுகாப்புக் கண்காணிப்பகத்தை சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/

பரந்தனில் உள்ள சில இராணுவக் குழுக்களுடன் முற்றாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக, இராணுவ வட்டாரங்கள் பகிரங்கமாக அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இப்படியொரு செய்தியை எப்போது படைத்துறை வட்டாரங்கள் வெளியிட்டன?

270 பேரைக் கொண்ட படையணியுடனான தொடர்பு அறுந்த செய்தியை எந்தவொரு கொழும்பு ஊடகமும் வெளியிடவில்லை. புதிதாக முளைத்துள்ள தமிழ்ஸ்கைநியூஸ், குளோபல்தமிழ்நியூஸ், சுவிஸ்முரசம் போன்றவையே ஒன்றிற்கொன்று கற்பனையில் செய்திகளை எழுதி வருகின்றன.

யாழ்.முகமாலையில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு ஒன்று முறியடிப்புப் தொடர்பான செய்தியில்(கட்ந்த செவ்வாய் வெளியிடப்பட்ட) தமிழ்நெட் இணையத் தளம் முகமாலையில் நகர்வில் ஈடுபட்ட இரு பட்டாலியன்களிற்கும் யாழ். கட்டளை மையத்திற்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவலறிந்த படைத்துறை வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியே படிப்படியாகச் சோடிக்கப்பட்டு 270 படையினராக்கப்பட்டு, ஆழ ஊடுருவும் படையினரே இதுவரை வராத பரந்தனுக்கு கொண்டுவரப்பட்டு துண்டாடப்பட்டுள்ளனர். அதுக்கு கொழும்பு ஊடகமும் துணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை படையினர் கைப்பற்றிய இடம் ஒன்று புலிகளால் மீளக்கைப்பற்றப்பட்ட செய்தியும் எந்தக் கொழும்பு ஊடகத்தில் வெளிவந்தது என்பது புதிராக இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு இடம் ஒரு இடம் என்று குறிப்பிட்ட காளான் இணையத் தளங்கள் தற்போது அதனைப் பூநகரியாக்கியுள்ளன.

மற்றையது படையினரின் இழப்புத் தொடர்பானது:

கொழும்பில் 200 சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மங்கள சமரவீரவும், கடந்த 20ம் நாள் மோதலில் மட்டும் 250 படையினர் கொல்லப்பட்டதாக தயாசிறி ஜெயசேகரவும் தெரிவித்திருந்தனர். இவர்கள் இருவரும் தெரிவித்த எண்ணிக்கை விபரங்கள் மட்டுமே கொழும்பு ஊடகங்களில்(இணையங்கள் உட்பட) வெளிவந்தன. எந்தவொரு ஊடகமும் தமது தரவுகளின் அடிப்படையில் படையினரின் சாவு எண்ணிக்கையையோ அல்லது காய எண்ணிக்கையையோ வெளியிடவில்லை. டிபன்ஸ் வயரில் படையினரின் இழப்பு 300 என்றும் இவற்றில் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட படையினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

முகமாலையில் நடந்த மோதலில் பெரும் எண்ணிக்கையில் படையினர் கொல்லப்பட்டதாக லங்கா ஈ நியூஸ் இணையம் செய்தி வெளியிட்டிருந்தது. அதுவும் உறுதிப்படுத்த முடியாத வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி எழுதப்பட்ட போதும் செய்தி கொல்லப்பட்ட, அல்லது காயமடைந்த படையினரின் எண்ணிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே 270 படையினர் துண்டிப்பும், கைப்பற்றப்பட்ட பகுதி ஒன்றின் மீளக்கைப்பற்றலும், காளான் இணையத் தளங்களின் கற்பனையே! படையினரின் இழப்பு எண்ணிக்கையை மங்கள மற்றும் தயாசிறி ஆகியோர் வெளியிட்ட தரவுகள் உண்மையெனில் ஒருவார இழப்பை காளான் இணையங்களின் எண்ணிகைக்கு கிட்டவாக ஊகிக்கலாம்.

இந்த விடயத்தில் மக்களைக் குழப்பாது மங்கள மற்றும் தயாசிறி ஆகியோரின் அறிக்கைகளை மாத்திரம் வெளியிட்ட புதின ற்கு வாழ்த்துக்கள்

Edited by மின்னல்

முழு விபரமும் மாவீரர் தினத்திற்கு முதல் நாள் வெளியே வரலாம்.....

முழு விபரமும் மாவீரர் தினத்திற்கு முதல் நாள் வெளியே வரலாம்.....

படைத்துறை வட்டாராம், கொழும்பு ஊடகம் எண்டு நீங்கள் காட்டிய பூச்சாண்டி விபரமுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிங்களப்படையணியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது, அவர்களை தேடி மற்றொரு அணி சென்றுள்ளது என ஒரு செய்திக்குள் சிறுதகவலாக army.lk அல்லது defence.lk இணையத்தில் படித்த நினைவு எனக்குள்ளது.

சிங்களவங்கள் இப்பிடி அப்பிடி எண்டு தாங்களே அறிக்கை விட்டு திரியும்போது புலிகள் ஒன்றுமே சொல்லாதிருப்பது சிங்களவங்களுக்குத்தான் விசர்வரும்.... எங்களுக்கு ஏன் குழப்பவம் வரவேணும்?..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்திருப்போம் ஏன் வீன் வாக்குவாதம்

புலிகள் ஏன் அவசரப் படவேண்டும். சிங்கள அரசே அதனை வெளிப்படுத்தட்டுமே. அல்லது பாதுகாப்பு அமைச்சின் இணையத்திலிருந்து கொண்டு வருபவர்கள், நடுவுநிலையாளர்கள் இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள்.

பூநகரி வெற்றி கொண்டாட்டத் தயக்கமே உட்கிடையான பதில்தானே. இல்லாவிட்டால் மகிந்தண்ணர் பிறந்த நாள் கொண்டாட்டத்தினை விடவும் இதற்குத்தானே வெடிக் கொழுத்தியிருப்பார்.

ஒரு சிங்களப்படையணியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது, அவர்களை தேடி மற்றொரு அணி சென்றுள்ளது என ஒரு செய்திக்குள் சிறுதகவலாக army.lk அல்லது defence.lk இணையத்தில் படித்த நினைவு எனக்குள்ளது.

அப்படித் தமிழ்நெட்டிலைதான் வந்தது. சம்பவம் உண்மை எண்டாலும் டிபன்ஸ்.எல்கே, ஆர்மி.எல்கே போன்ற தளங்களில் அப்படிச் செய்தி வராதுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.