Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் மாபெரும் நிகழ்வாக தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்

Featured Replies

கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் ரொறன்ரோ நகரில் இன்று தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இந்நிகழ்ச்சி அதிகாலை 6:30 மணிக்கும் மாலை 5:00 மணிக்கும் நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள இடம்:

Pearson Convention Centre

2630 Steeles Avenue West (Steeles / Airport Road),

Brampton.

நான் வானொலி கேட்கிறது இல்லை. போனமுறை இஞ்ச இணைக்கப்பட்ட தகவலிண்ட அடிப்படையிலதான் பொங்குதமிழுக்கு போனது. அதுவும் வடிவாய் விளக்கமாய் சொல்லாததால Transit இல போன பலர் திக்குமுக்காட வேண்டி இருந்திச்சிது. நான் காரில உங்கபோய் பழக்கம். போனகிழமையும் ஒரு அலுவலா போனது. ஆனால்.. Transit இல போய் பழக்கமில்லை பிரம்டனுக்கு டொரண்டோவில இருந்து. ஆனால் நாளைக்கு Transit இலதான் போகவேணும். யாருக்காவது Transit இல போக இலகுவான - சரியான வழி தெரிஞ்சால் சொல்லுங்கோ. Transit வழி மற்ற ஆக்களுக்கும் உதவும். யாரும் பிரம்டன் ஆக்கள் இதுக்க இருக்கிறீங்களோ? நன்றி!

இந்நிகழ்ச்சி அதிகாலை 6:30 மணிக்கும் மாலை 5:00 மணிக்கும் நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள இடம்:

Pearson Convention Centre

2630 Steeles Avenue West (Steeles / Airport Road),

Brampton.

correct address

2638 Steeles avenue west

brampton, on

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

058map.gif

பொது வாக பியசன் விமான நிலைத்துக்கு செல்வதற்க்கு வழி தெரியும் மற்றுமு; படி குறிப்பிட்ட இடத்துக்கு எப்படி போவதென்று தெரியாது.

58 Malton (Form Lawrence West subway | Yellow line) விமான நிலையம் வரை செல்லும் அதற்கப்பால் எனக்கு தெரியாது.

Kippiling Subway (Green line) இதிலிருந்து பிரம்டன் நகருக்கான பேருந்துக்களை எடுக்க முடியும்.

இதை விட GO Transit பேருந்து மற்றும் தொடரூந்துகளிலும் செல்ல முடியும். கீழே குறிப்பிட்ட நிறுத்திடத்தை தெரிவு செய்தால் இலகுவாக அடைய முடியும் என்று நினைக்கிறேன்.

http://www.gotransit.com/publicroot/en/sta...px?station=STET

Edited by Paravaikal

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறுகிற‌தா? நிறுத்தப்பட்டு விட்டதாக சிங்களவர்கள் கொக்கரிக்கிறார்கள். :(

நான் காலை நிகழ்ச்சிக்கு போகலாம் எண்டு நினைச்சு இருந்தன். சில இடர்ப்பாடுகளால போக முடிய இல்லை. இடம் மாற்றினது பற்றி தெரிய இல்லை. நீங்கள் போக முயற்சிக்க இல்லையோ டங்குவார்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் காலை நிகழ்ச்சிக்கு போகலாம் எண்டு நினைச்சு இருந்தன். சில இடர்ப்பாடுகளால போக முடிய இல்லை. இடம் மாற்றினது பற்றி தெரிய இல்லை. நீங்கள் போக முயற்சிக்க இல்லையோ டங்குவார்?

நான் இருப்பது 380கி.மீ தள்ளி.. சாலைப் பயண இடர்பாடுகள் மற்றும் வேலை நாளாகவும் இருப்பதால் என்னால் வரமுடியவில்லை. :(

மாலை இந்த நிகழ்சி நடக்குமா நடக்காதா?

இலங்கை பாதுகாப்பமைச்சு நிகழ்ச்சி தடை செய்யப் பட்டதாக சொல்கின்றது. கனடா வாழ் ஈழ தமிழ் மக்களை குழப்ப பொய் செய்தி போட்டிருக்கலாம். யாராவது தெளிவு படுத்துங்கள். என்னிடம் இன்னமும் சொந்தமாக வாகனம் இல்லை. 70 கி.மீ பயணிக்க வேண்டும். யாருடனாவது தொத்த வேண்டும். ஒருவருக்கும் சரியாக தெரியவில்லை. அலுவலகத்தில் இருப்பதால் வானொலியும் கேட்க முடியவில்லை

யாராவது தெளிவு படுத்தினால் கோடி புண்ணியம்

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி திட்டமிட்டபடியே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இது சிலரின் சூழ்சிக்கு கிடைத்த மரணஅடி.

நாம் ஒன்றுபட்டால் முடியாதது என்று ஒன்றுமில்லை.

தமிழனின் பிரச்சாரம் இப்போது முன்னேற்றகரமாகவுள்ளது என்பதிற்கு இதுவும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இணைவோம் தமிழராய்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் திட்டமிட்டபடி காலை மற்றும் மாலை நேர மாவீரர் தின நிகழ்வுகள் இடம் பெற்றன. காலையில் சில தடங்கல்கள் இடர்பாடுகள் வந்த போதும் அவை வெற்றிகரமாக சரி செய்யப்பட்டு, தலைவரின் ஒலி வடிவ உரையுடன் நிகழ்வுகள் இடம் பெற்றன.

தலைவரின் உரையை காணொளியில் ஒளிபரப்ப வேண்டாம் என கனேடிய பாதுகாப்பு பிரிவினர் கேட்டுக்கொண்டதுக்கிணங்க நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு தரப்பினரின் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இரவு நிகழ்வுகள் முடியும் வரை தொடர்ந்தது. தேவையற்ற நிபந்தனைகளும், வேண்டுதல்களும் விடுக்கப்பட்டது. எதையும் வாக்குவதமின்றி கடலெனத்திரண்டிருந்த மக்களின் ஆதரவோடும், காலநேரம் பாராது உழைத்த தொண்டர்களின் உழைப்பாலும் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றன.

வழமை போல் இடப்பற்றாக்குறை காரணமாக பாதி நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு தொகுதி மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அந்த மக்களின் உணர்வுகளுக்கு அனைவரும் தலைவணங்க வேண்டும். இரு வேளை நிகழ்வுகள் நடைபெற்ற போது மாலை நிகழ்வில் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டனர்.!

தலைவரின் எண்ணத்தை செயலாற்றும் உறுதியோடும் மக்களும், இளைஞர்களும் நிகழ்வு நிறைவில் வீடு சென்றனர்.

Edited by Paravaikal

தடைகள் இருந்தும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த உணர்வாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

தடைகள் இருந்தும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த உணர்வாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஒன்று பட்டால் முடியாதது எதுவும் இல்லை தீபன்.

இடப் பற்றாக்குறை பல ஆண்டுகாலமாகவே உள்ள ஒரு குறை. அதை நிவர்த்தி செய்ய முடியாதநிலையில் கனடியத் தமிழ் மக்கள் உள்ளனர். நேற்று நடந்த மண்டபத்தை இனி எந்தத் தமிழ் விழாக்களுக்கும் கொடுக்கமுடியாதவாறு இந்நாட்டுப் பாதுகாப்புத் துறையினர் செய்துவிட்டனர். எமது தலைவர் அவர்களின் உரையை ஒலிவடிவில் ஒலிபரப்புவதற்குக்கூட தடை விதிக்கப் பார்த்தனர். ஆனால், எம் தொண்டர்களின் சாதுரியத்தினால் அது நடக்கவில்லை. தலைவர் அவர்கள் கூறியதுபோல், எமது தடைகளை இந்நாடுகள் விலக்குவதற்காக நாம் தொடர்ந்து போராடவேண்டும்.

இனிவரும் காலங்களில் தமிழீழத்தில் மாவீரரை நினைவுகூரும் அதேவேளையில் இங்கும் மாவீரரை நினைவு கூருவார்கள் எனக் குறிப்பிடப்பட்டது. ஆகவே, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதிகாலை ஆறு மணிக்கே மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடங்குமென அறிவிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறுகிற‌தா? நிறுத்தப்பட்டு விட்டதாக சிங்களவர்கள் கொக்கரிக்கிறார்கள். :wub:

ஏன் சிங்களச் செய்திகளைக் கேட்டு நம்புகின்றீர்கள். சிரிஆர் தொடக்கம் பல வானொலிகளில் அது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இது கூட மக்கள் போவதைத் தடுக்கின்ற சிங்கள அரசின் சதி வலைகளில் ஒன்று. எம்மைச் சுற்றி இறுக்கமான, குழப்பமான சதிகளை அவர்கள் பின்ன முனைகின்றார்கள். அது குறித்து நாங்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும்.

மக்கள் கூடுவதைக் கண்டு பொறுக்க முடியாத அவர்கள், குண்டு கிடப்பதாக காவற்துறைக்கு அறிவித்திருக்கின்றார்கள். அதனால் காவற்துறையும் மக்களை வெளியேற்றச் சொல்லி பிரச்சனை கொடுத்தார்கள். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சாதுரியத்தால் அவர்களின் சதி நடைபெறவில்லை.

எச் சவால்களையும் சந்திக்க எம்மக்கள் எப்போதும் தயார் என்பதைத் தான் நேற்றைய அளவுகடந்த மக்கள் கூட்டம் நிருபித்திருக்கின்றது. பலரை இடையில் வெளியேற்றிய பின்னரும் கூட, நிலத்தில் இருந்து நிகழ்ச்சியைப் பலர் பார்வையிடும் அளவுக்கு மக்கள் நிரம்பி வழிந்தார்கள்.

சிறிலங்கா அரசின் சதிகளுக்குப் பலியாகி விடாதீர்கள் நண்பர்களே! அவர்களின் சவால்களை முறியடிக்க தலைவர் சொன்னது போன்று, இளையோர் சமூகம் முன்வரவேண்டும்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியிருப்பினும் எமது மக்கள் தமிழ்தேசியத்தின்பால் கொண்டுள்ள பற்று வார்த்தைகளால் அளவிடமுடியாது.

எந்த சட்டம் தடுத்தாலும் தலைவரின் கரத்தை பலப்படுத்த தாம் தயாரென மீண்டும் செயல் மூலம் நிரூபித்துள்ளார்கள் எம்மக்கள்.

இணைவோம் தமிழராய்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடப் பற்றாக்குறை பல ஆண்டுகாலமாகவே உள்ள ஒரு குறை. அதை நிவர்த்தி செய்ய முடியாதநிலையில் கனடியத் தமிழ் மக்கள் உள்ளனர். நேற்று நடந்த மண்டபத்தை இனி எந்தத் தமிழ் விழாக்களுக்கும் கொடுக்கமுடியாதவாறு இந்நாட்டுப் பாதுகாப்புத் துறையினர் செய்துவிட்டனர்.

நீங்கள் சொல்வது உண்மை எனினும், நமக்கான ஒரு மண்ணடபத்தை கட்டுவதோ, அதில் நிகழ்வுகளை நடாத்துவதோ பெரிய விடயமில்லை எனினும் அதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதை உணர முடிகின்றது. பிபலமான மண்டபங்கள் மீதே பாரிய அழுத்தங்களை பிரயோகிக்கும், மத்திய, மாநகர காவல்த்துறையினர் எமக்கான மண்டபங்கள் கிடைக்கும் பட்சத்தில் இதிலும் அதிகமான அழுத்தங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் எடுக்க முற்படலாம்.

அதே நேரம் கனேடிய தமிழர்கள் தமது "உரிமைகள் " மதிக்கப்படுவதில்லை என மனித உரிமை அமைப்புக்களுக்கு முறையிடுவதன் மூலம் காவல்துறையின் அடாவடித்தனங்களை சற்று குறைக்க முடியும் என்பது எனது கருத்து...

மனுக்களை அனுப்புவோர் தயவு கூர்ந்து சுய விபரங்களையும் அவர்கள் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொடர்பு முகவரிகளையும் வழங்குது சிறப்பு.... (கனடாவில் உள்ளவர்கள் மட்டும்)

முயன்று பார்ப்போம்... இல்லையேல் நாம் இலங்கையில் எப்படி காவல்துறைக்கு பயந்தோமே அதே அச்சத்துடன் இங்கும் இருக்க வேண்டியத தான். சட்டப்படி அவர்களால் எந்்த நடநடிக்கை எடுக்க முடியுமோ அதே சட்டத்தையும், சமூகத்தையும் எமக்காதரவாக திரட்ட கனேடிய தமிழ் இளையோர்கள் ஒன்றிணைய வேண்டும்!

Edited by Paravaikal

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிங்களச் செய்திகளைக் கேட்டு நம்புகின்றீர்கள். சிரிஆர் தொடக்கம் பல வானொலிகளில் அது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இது கூட மக்கள் போவதைத் தடுக்கின்ற சிங்கள அரசின் சதி வலைகளில் ஒன்று. எம்மைச் சுற்றி இறுக்கமான, குழப்பமான சதிகளை அவர்கள் பின்ன முனைகின்றார்கள். அது குறித்து நாங்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும்.

மக்கள் கூடுவதைக் கண்டு பொறுக்க முடியாத அவர்கள், குண்டு கிடப்பதாக காவற்துறைக்கு அறிவித்திருக்கின்றார்கள். அதனால் காவற்துறையும் மக்களை வெளியேற்றச் சொல்லி பிரச்சனை கொடுத்தார்கள். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சாதுரியத்தால் அவர்களின் சதி நடைபெறவில்லை.

எச் சவால்களையும் சந்திக்க எம்மக்கள் எப்போதும் தயார் என்பதைத் தான் நேற்றைய அளவுகடந்த மக்கள் கூட்டம் நிருபித்திருக்கின்றது. பலரை இடையில் வெளியேற்றிய பின்னரும் கூட, நிலத்தில் இருந்து நிகழ்ச்சியைப் பலர் பார்வையிடும் அளவுக்கு மக்கள் நிரம்பி வழிந்தார்கள்.

சிறிலங்கா அரசின் சதிகளுக்குப் பலியாகி விடாதீர்கள் நண்பர்களே! அவர்களின் சவால்களை முறியடிக்க தலைவர் சொன்னது போன்று, இளையோர் சமூகம் முன்வரவேண்டும்.

தூயவன்.. நான் இருக்கும் இடத்தில் தமிழ் வானொலி கேட்க முடியாது. இணையட்தில் வேண்டுமானால் கேட்கலாம். ஆனால் அலுவலகத்திலிருந்து இணைய வானொலி கேட்க இங்கே அனுமதி இல்லை. அதனால்தான் யாழ்களத்தில் கேட்டு வைத்தேன். :wub:

நீங்கள் சொல்வது உண்மை எனினும், நமக்கான ஒரு மண்ணடபத்தை கட்டுவதோ, அதில் நிகழ்வுகளை நடாத்துவதோ பெரிய விடயமில்லை எனினும் அதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதை உணர முடிகின்றது. பிபலமான மண்டபங்கள் மீதே பாரிய அழுத்தங்களை பிரயோகிக்கும், மத்திய, மாநகர காவல்த்துறையினர் எமக்கான மண்டபங்கள் கிடைக்கும் பட்சத்தில் இதிலும் அதிகமான அழுத்தங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் எடுக்க முற்படலாம்.

அதே நேரம் கனேடிய தமிழர்கள் தமது "உரிமைகள் " மதிக்கப்படுவதில்லை என மனித உரிமை அமைப்புக்களுக்கு முறையிடுவதன் மூலம் காவல்துறையின் அடாவடித்தனங்களை சற்று குறைக்க முடியும் என்பது எனது கருத்து...

மனுக்களை அனுப்புவோர் தயவு கூர்ந்து சுய விபரங்களையும் அவர்கள் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொடர்பு முகவரிகளையும் வழங்குது சிறப்பு.... (கனடாவில் உள்ளவர்கள் மட்டும்)

முயன்று பார்ப்போம்... இல்லையேல் நாம் இலங்கையில் எப்படி காவல்துறைக்கு பயந்தோமே அதே அச்சத்துடன் இங்கும் இருக்க வேண்டியத தான். சட்டப்படி அவர்களால் எந்்த நடநடிக்கை எடுக்க முடியுமோ அதே சட்டத்தையும், சமூகத்தையும் எமக்காதரவாக திரட்ட கனேடிய தமிழ் இளையோர்கள் ஒன்றிணைய வேண்டும்!

நீங்கள் கூறுவதுதான் சரி. அவர்களின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்யும் அடாவடித்தனங்கள் கூடிக்கொண்டே போகிறது. இதனை இப்படியே விட்டால் நாங்கள் கையாலாகாதவர்கள் போலாகி விடுவோம். இதனை மனிதவுரிமை அமைப்புகளுக்கு கனடாவில் வாழும் தமிழ் மக்கள் முறையிட வேண்டும். தமிழீழநலனுக்காகப் பொங்கியெழுவதோடு மட்டுமின்றி, இவர்களின் இந்த அடாவடித்தனங்களுக்கெதிராகவு

புலம் பெயர்ந்த நாடுகளில் ஊர் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், கோயில்கள் என பல சங்கங்ளை அமைத்து போட்டிக்கு போட்டியாக நிகழ்ச்சிகளை நடத்தி தேவையில்ல செலவுகளை செய்வதை நிறுத்தி சில அரோக்கியமான வேலைகளை செய்ய வேண்டும்.

எங்களுடைய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஒரு பெரிய மண்டபமும், ஒரு விளையாட்டு மைதானமும் வாங்க வேண்டும். பெரும் தொகையான கனடா, பிரித்தனியாவில் இருப்பதால் அங்கு இது சத்தியமாகும். பிரித்தனியாவில் இருநூறுக்கு மேற்பட்ட சங்கங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். இவர்களும், வர்த்தகர்களும் மற்றும் வசதி படைத்தவார்கள் நினைத்தால் செய்ய முடியும்.

இன்னென்று தமிழ் சனசமுக நிலையம் ( Tamil Community Centre) அமைக்க வேண்டும்.

எங்கையாவது ஒருவர் ஒரு மண்டபத்தினை வங்கி வாடகைக்கு விட்டு நன்றாக உழைப்பதாக சும்மவாது கூறுங்கள் எங்கடை சனம் போட்டி போட்டுக் கொண்டு நிறைய மண்டபங்களை வாங்குவார்கள். அந்த மண்டபத்திற்கு எதிரேயே வேறு ஒன்றை கட்டவும் முயற்சி செய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஊமை,

நீங்கள் சொல்வது மிகவும் சரி, இதனாலேயோ கனடாவில் அண்மையில் கனேடிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதில பெரும்பலான தேசியத்தை தாங்கும் அமைப்புக்கள் தங்களை இணைத்துள்ளன.

அதே நேரம் இங்கு பலர் மண்டபங்களை சொந்தமாக நடாத்தி வந்தாலும் அவை வெறும் 400 பேருக்கானதாக மட்டுமே இருக்கின்றது. ஆனால் எமது தேசிய நிகழ்வுகளுக்கு 50000 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்கள் ஒன்று கூடும் போது குறைந்தது 100000 பேரை உள்வாங்க கூடிய மண்டபங்கள் அவசியம். அவற்றை கட்டுவதில் பணப்பிரச்சினை இருக்காது என்று எண்ணும் அதே வேளை, இப்படியாண மண்டபங்களை தமிழர்கள் உருவாக்கிய பின்னரும் எம்மால் நினைத்த படி நிகழ்வுகளை நடாத்த முடியுமா? என்பது பெரும் கேள்விக்குறியே!

அப்படியிருக்கையில் பெருந்தொகை பணத்தையும் மக்களின் உழைப்பையும் எப்படி வீணாக்க முடியும்?

நீங்கள் சொல்வது உண்மை. அத்துடன் இப்போது எம்நாட்டில் எம்மக்கள் படும் கஷ்டத்தில் எமக்கு இது அவசியம் என்று எனக்குப் படவில்லை.

Edited by Soori

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.