Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து ,

தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும்

கண்டனக் கவிதைப் போராட்டம்.

இடம் :சென்னை மெரீனா கடற்கரையில்,

காந்தி சிலையருகே

நாள் : டிசம்பர் - 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை

நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி,

இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து

தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.

அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.

சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோருவோம் !

தொடர்புக்கு

மின்னஞ்சல் : tamilpoets@gmail.com

செல்பேசி : 9841043438, 9884120284, 9952089604

http://tamilpoets.blogspot.com/2008/11/blog-post.html

இலங்கை இன படுகொலைக்கு எதிராய் சில சொற்கள் - லக்ஷ்மி மணிவண்ணன்

ஈழ தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரி தமிழ் கவிஞர்களின் கண்டனம் - சில சொற்களோடு

ஒவ்வொரு இனத்திற்கும், அதன் உள்புறத்தில் இயங்கும் இனக்குழுக்களுக்கும், நீண்ட மரபுடனும் சடங்குகளுடனும் வழிபாடுகளுடனும் கூடிய அகவுடல் ரசசியங்களால் அமைந்திருப்பது. உரிமைகளை, எதிப்பை, பாதுகாப்பை, உறவை அவை உரிய வழிகளில் ரகசியங்களை பேணிய வண்ணம் எதிர்கொள்ள இயலாமல் போகும் போது வெடிப்புறத் தொடங்குகிறது.

மானுடவியல், இனவரையியல் போன்ற அறிவுக் கருவிகள், ஊடகத் தகவல்கள் ஆகியவை இனங்களை, சமூகங்களை, குழுக்களை அறிய உதவுவது போன்ற பாவனைகள் மட்டுமே, அறிவுக் கருவிகள் மூலம் சமூகத்தின் ஒரு பண்பை அறிய முயலும்போது அறிய இயலாத பகுதிகளை, ஊடக வழிகள் கொண்டும் பொதுப் புத்தி சார்ந்தும் இட்டு நிரப்பும் முயற்சி முடிவில் அடிப்படை உள்ளுணர்வின் எதிர்ப்புணச்சிக்கு இலக்காவது தவிர்க்க இயலாதது.

பொதுப் புத்தி என்பது மக்களின் பார்வை என்பதல்ல. மாறாக அது முன்னேற்றம், வளர்ச்சி, வெற்றி, பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பதங்களின் ஊடாக வறண்ட கற்பனையை களியூட்டுகிற அரசின் செயல் ஆகும், மனித உயர் உணர்வின் உயர்ந்த பட்ச சாத்தியங்களை, தன்னிச்சையான கற்பனையின் விகாரத்தை இது தடை செய்யும் செயலும் ஆகும். இச் செயல்பாட்டின் ஒரு பகுதியான பொதுப்புத்தி என்பது படைப்புச் செயல்பாட்டுக்கு நேர் எதிர் திசையில் கதி நிலை பெற்றிருந்தலின் அபாயத்தை பல திசைகளில் எதிர் கொள்ளும் திசையில் இன்றைய மனித இருப்பின் ஆதாரம் குழப்பமடைந்திருக்கிறது. உயர் மனசாட்சியின் எதிர்ப்பாக ரகசியங்களின் அறச்செயல்பாடாக துப்பாக்கிச் சத்தத்தை பெருகச் செய்தது. எதிர்ப்பிற்கு மௌனத்தையும் அலட்சியத்தையும் முகம் காட்டும், தனிமனித பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாகக் கூறும் உலக முழுதும் விரிந்துள்ள ஒற்றைபடை நாகரீக ஜனநாயக அரசு ஆகும்.

தனி மனிதப் பாதுகாப்பை முன்னிறுத்தி, சமூகங்களை அலட்சியம் செய்யும் இவ்வரசு எதையும் பாதுகாக்க இயலாத நிலைக்கு பின் தள்ளப்பட்டு விட்டது.

இந்நிலையில் இவ்வரசுக்கு அப்பாற்பட்டு, பொதுப்புத்தி, அரசியல், ஊடகம், ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டு கவிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோர்களின் தற்கால சமூகப் பொறுப்புகள் என்னென்னவாக அமைய வேண்டும். இவை நமது பொது சுயத்தின் விசாரனைக்கு உட்பட்டவை, இவ்விசாரணையே வருங்காலங்களில் ஜனநாயக அரசுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே நிகழவிருக்கும், மோதல்களின் போது சகல விதமான வாழ்தலின் சுதந்திரத்தை மீட்கவும் வலியுறுத்தவும் நமக்கு உதவும்.

இந்த அடிப்படையிலேயே ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் போருக்குத் தமிழ் கவிஞர்கள் தங்கள் உணர்வின் பொது வெளிப்பாடாக கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

மாறுபட்ட வாழ்க்கைப் பின்புலனும் வரலாறும் கொண்ட ஈழத் தமிழர்களின் படைப்புகள் சுயதன்மையும் சுய வரலாறும் கொண்டவை. தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் ஈழத் தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் தனித்து அறியப் படவேண்டியவை. தமிழினம் என்று ஒற்றை இனப் பார்வையை முன்னிறுத்தும் ஊடகமறதி அரசியல் குரல்களிலிருந்து படைப்புக் குரல்கள் மாறுபட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகில் எந்தவொரு இனமும் எந்தவொரு காரணத்தின் பெயராலும் ராணுவத்தின் தலைமையோடு ஒழிக்கப்படுவதை தமிழ் கவிஞர்கள் எதிர்க்கிறோம். அவ்வகையில் ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவப் போரை தமிழ் கவிஞர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்க் கவிஞர்கள் இக்கண்டனத்தைத் தெரிவிக்கும் இச் சந்தர்ப்பத்தில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவிக்கும் கோரிக்கைகள் இவை.

1. உலக அளவில் ஈழத் தமிழ் அகதிகள் – தமிழகத்தில்தான் வேறெங்கு நடப்பதைக் காட்டிலும் மலிவான முறையில் நடத்தப்படுகிறார்கள். அவமானத்திற்குள்ளாகிறார்கள் மனிதவுரிமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் கண்காணிப்பிற்கிலக்காகிறார்

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

November 30, 2008

எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல் - செல்மா பிரியதர்ஸன்

எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல்.

இது இறுதிப் போர் என்று அறிவித்து சிங்கள ராஜபக்சே அரசு ஏவுகணைகளையும் எறிகுண்டுகளையும் ஈழத் தமிழர்களின் குடியிருப்பின் மேல் உடமைகள் மேல் வாழ்வாதாரங்களின் மேல் எறிந்து வருகிறது. இலங்கையின வரைபடத்திலிருந்து தமிழர்களை துடைத்து எறியும் இறுதி நடவடிக்கையாக சிங்கள அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. உயிர் பிழைத்திருக்க முப்பது ஆண்டுகளாக அத்தீவைவிட்டு வெளியேறி உலகம் முழுவதும் அகதிகளாக வாழ்ந்து வருகிறது ஈழத் தமிழனம.; கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் குடியிருப்புகளைவிட்டு வெளியேறி வனாத்திரங்களில் முகாம்கள் அமைத்து பசியிலும் நோயிலும் பிழைத்து வருகிறார்கள். உணவுப் பொட்டலங்களுக்குப் பதிலாக அணுகுண்டுகளை விட மோசமான உயிர்க்காற்றை ( ஆக்ஸிஜனை) உறிஞ்சுகிற உக்கிர குண்டுகளை அவர்களுக்கு உணவாக வழங்குகிறது ராஜ பக்சே அரசு. எப்போதும் போல் தமிழ்ப் பெண்களின் உடல்கள் மேலும் நீட்டிக்கப்படும் போரின் செயல்பாடுகள். சிங்கள அரசிற்கு பொருளாதார இராணுவ உதவிகளைச் செய்துவரும் நம் இந்திய அரசோ இந்தியாவிற்கு (தமிழகத்திற்குள்) வரும் போர் அகதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி தனது சொந்தப் பொறுப்பில் பராமரிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துகிறது.

மத்திய அரசில் அதிகாரத்தினை பங்கு போட்டிருக்கும் தமிழ் மாநில அரசியல் கட்சிகளோ அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மீது விறைத்த பற்றுடன் செயலாற்றி வருகிறது.

தமிழ் மொழியில் கவிதைகள் எழுதிவரும் நாங்கள் நிலவிவரும் சூழல்களையும் நிலவரங்களையும் அறிந்திருக்கிறோம். ஒரு சமூகத்தில் மொழியில் இயங்கும் கவிஞர் என்பவரின் வரம்புகளையும் சாத்தியங்களையும் உணர்ந்தே இருக்கிறோம். அழிந்து வரும் அரிய உயிரினத்தின் மாதிரிகள் போல நாம் வாழும் காலத்தில் ஈழத் தமிழினம் கண்களின் முன்னால் அழிந்து வருவதைக் காணச் சகியோம் எங்களிடம் அதிகாரம் இல்லை ஆயுதங்கள் இல்லை ஆட்சி இல்லை. வார்த்தைகள் மட்டுமே உள்ளது சிங்கள அரசின் தமிழ் ரத்தம் பருகும் இராணுவ வெறிமீது ஏவுகணைகள் போல் வார்த்தைகளை வீசுவோம். தமிழனத்தின் விடுதலைமீது வாழ்வுமீது பாரா முகமாய் இருக்கும் தமிழக அரசியல் மௌனத்தின் மீது தற்கொலைபோல் வார்த்தைகளாய் விழுவோம். தேசம் என்று நம்பி வாழும் இந்தியப் பாராளுமன்றத்தின் மனசாட்சியை நோக்கி மரணம் போல வார்த்தைகளை எறிவோம், கண்ணீர் சிந்துவோம், ஒப்பாரி வைப்போம், தூற்றுவோம் சாபமிடுவோம்.

தமிழகத்தில் கவிஞர்கள் பல்வேறு குழுக்களாக, வேறுபாடுகள் உடையவர்களாக இருந்து வந்த போதிலும் எல்லா வித்தியாசங்களையும் கடந்து சென்னை மெரினா கடற்கரையில் டிசம்பர் 7-ல் ஒன்று சேர்கிறோம். தமிழகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் சொந்த தார்மீகத்தில் கடற்கரை நோக்கிப் பயணிக்கிறோம்.

தமிழ்க் கவிஞர்களின் கண்டனக் கவிதைப் போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள அனைத்து எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், மாணவர்களையும், பொதுமக்களையும் அழைக்கிறோம்.

செல்மா பிரியதர்ஸன்

November 30, 2008

கண்டன கவிதைப் போராட்டத்திற்கான வெளிச்சத்தின் ஆதரவு

தமிழக கவிஞர்களுக்கு வெளிச்சம் நன்றி தெரிவிக்கின்றது. எங்கிருந்தாலும் நீங்கள் ஈழத்தமிழர்களின் தொப்பூள்கொடி

தமிழக கவிஞர்கள் எழுகிறார்கள்! ஈழத்தமிழர்களுக்காக கண்டன கவிதைப்போராட்டம்!

ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றுமாறு கோரி தமிழகத்தின் கவிஞர்கள் ஒன்று திரண்டு கண்டனக்கவிதைப்போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருகின்றார்கள்.

எதிர்வரும் டிசம்பர் 7 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையருகே இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகின்றது.

சுமார் 150 க்கும் அதிகமான கவிஞர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்கள் இன்று பட்டு வரும் அவலங்களை தங்களது கவிதைகளாக பதிவு செய்யவுள்ளனர்.

இந்த கண்டனக்கவிதைப்போராட்டத்தில

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகாறா உங்கள் தகவலுக்கு.

எறிகணை (செல்) வீச்சைக் கண்டித்து சொல் வீச முன்வந்த கவிஞர்களுக்கு நன்றிகள்.

ஆண்டவா! ஒப்பாரிதான் இறுதியாக மிஞ்சியதோ???????????????

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்லைசகாரா ஒப்பாரி என்பது எல்லாமே முடிந்த பின்னர் இயலாமையின் இசைதானே?? எனவே அதை ஏன் அறம்பாடுதலாக்கக்கூடாது?? இதனை நானும் சம்பந்தப் பட்டவர்களின் கவனத்திற்கு கொணர்ந்துள்ளேன். காரணம் ஈழத்தமிழனிற்கு எல்லாமே இன்னமும் முடியவில்லை . எனவே எதிரிக்கு அறம்பாடுதலாக இதனை செய்யலாமே இதனை நீங்:களும் அவர்களிற்குத் தெரியப்:படுத்தலாமே?? பெரிய பொரிய கவிஞர்:களெல்லாம் கலந்து கொள்ப்போகின்றார்கள். அவர்கள் அளவிற்கு எனக்கு அறிவில்லை என்றாலும் என்னுடைய ஒரு வேண்டுகோள்தான் நன்றி :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்லைசகாரா ஒப்பாரி என்பது எல்லாமே முடிந்த பின்னர் இயலாமையின் இசைதானே?? எனவே அதை ஏன் அறம்பாடுதலாக்கக்கூடாது?? இதனை நானும் சம்பந்தப் பட்டவர்களின் கவனத்திற்கு கொணர்ந்துள்ளேன். காரணம் ஈழத்தமிழனிற்கு எல்லாமே இன்னமும் முடியவில்லை . எனவே எதிரிக்கு அறம்பாடுதலாக இதனை செய்யலாமே இதனை நீங்:களும் அவர்களிற்குத் தெரியப்:படுத்தலாமே?? பெரிய பொரிய கவிஞர்:களெல்லாம் கலந்து கொள்ப்போகின்றார்கள். அவர்கள் அளவிற்கு எனக்கு அறிவில்லை என்றாலும் என்னுடைய ஒரு வேண்டுகோள்தான் நன்றி :)

இப்படியும் யோசிக்கலாமே சாத்திரியார்.

உதாரணத்திற்கு ஒரு காகத்தின் குஞ்சு காயப்பட்டு விழுந்து கிடந்தால் அந்தக் காகத்தின் இனம் என்ன அறம்பாடிக் கொண்டா இருக்கும்? ஒப்பாரி வைத்துக் கொண்டு அந்தக் குஞ்சிற்கு மேற்கொண்டு ஆபத்துகள் வராவண்ணம் காக்குமல்லவா...

இக்கண்டன கவியரங்க நிகழ்விற்கானதலைப்பைப் பார்த்தவுடன் எனக்கும் உங்கள் கருத்தே தோன்றியது இருப்பினும் இக்கண்டனக் கவியரங்கத்தில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெருங்கவிஞர்களும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அறியாததா?

இக்கருத்துக்களத்தை அங்கு அந்த நிகழ்வில் பங்குபற்றக்கூடிய பலர் பார்வையிடுவார்கள் என்று நம்புகிறேன். அவர்களில் யாரேனும் எங்கள் களத்தில் தங்கள் கருத்தைப் பதிவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

180 , பிரபல கவிஞர்களா ..... ?

இந்த கண்டன ஒப்பாரியுடன் அவன் , நாசமாக போகவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வின் தலைப்புத்தான் சற்றுச்சங்கடமாகவுள்ளது.

சாத்திரியாரின் ஆதங்கம்தான் எனக்கும் ஏற்படுகின்றது.

இருந்தும் அவர்களின் ஆதரவுக்கு எனது நன்றி!

ஏன் இப்போது சிங்களனின் குண்டுவீச்சுக்கு பலியான தமிழ்க்குழந்தைகள் மரணத்திற்கு ஒப்பாரி வைக்ககூடாதா?

முன்வந்த கவிஞர்களுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.