Jump to content

வாழ நினைத்தால் .................


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ நினைத்தால் ..................

வாழ்கை என்று நினைக்கும் போது எம் முன்னே வா ........என்கிறது ,பின் வாழ் .......என்கிறது

அதற்கும் பின் வாகை அதாவது வெற்றி வாகை சூடி நீயும் வாழு என்கிறது .என்ன அழகான தத்துவமுத்துக்கள்

. அவனும் வாழ தான் நினைத்தான் . ராகவனுக்கு வயது நாற்பது .வைத்திய சாலைக்கே உரிய

அந்த நெடி ...அவனுக்கு பழக்கமாகி இருந்தது, முழங்கால் சத்திர சிகிச்சைக்காக படுத்து இருந்தான்,

அவன் மனம் பலவாறு சிந்தித்தது .தனிமையும் அமைதியும் மனதின் ஆழத்தை ஆராய சிறந்த இடம்

என்பார்கள். அன்பான மனைவியும் மகனும் வீடில் , அவள் வர மாலை ஐந்து மணியாகும்.

இவனுக்கு மறுபக்கத்தில் உள்ள கட்டிலில் நேற்று இரவு ஒரு விபத்து ,சம்பவதுக்காக் ஒருவனை

அனுமதித்து இருந்தார்கள் .அவனது மறைப்பு போடப்பட்டு இருந்த தாலும், அதிக நேரம் அவன்

தூங்கியதாலும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை . நாளை காலையில் விசாரிக்கலாம்

என்று இருந்து விட்டான் , ராகவன்.

சில மாதங்களாக அவனது வலது முழங்கால் மிகவும் வலி கொடுத்ததால் வைத்தியதிடம் போய்

வருவதே அவன் முதல் வேலையாக இருந்தது. இறுதியாக எதற்கும் குணமாகாமல் ஒரு சத்திர

சிகிச்சை செய்ய வேணும் என்று டாக்டர் சொல்லியிருந்தமக்கு அமைய இன்று அவன் வைத்திய

சாலைக்கட்டிலில் ..நாளை மறு நாள் சத்திர சிகிச்சை . அவன் வாழ்கையே வெறுத்த ஒரு நிலைக்கு

போய் இருந்தான். காரணம் அவனுக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது. புண் ஆறுமா ,

தொற்றினால் (infection) அவதி பட வேண்டுமா என்று எண்ணிய படியே நித்திரையாகி விட்டான்.

மறு நாள் விடிந்தது .மனைவி மாலா பழங்களும் .மாற்று துணி களும் கொண்டு வந்து

வைத்து விட்டு போயிருக்கிறாள்.தாதி மார் வந்து அன்றாட கடமைகளை செய்தது விட்டு

போயிருந்தனர் .அயலில் உள்ள கட்டிலில் பேச்சு குரல் கேட்கவே அவன் அவனது

உதவி ஆள் மூலம் .நோயாளி இருபது

வயதானவன் என்றும் விபத்தினால் இடது முழங்க்காலோடு அகற்ற பட வேண்டும் என்றும்

அறிந்து கொண்டான் .அப்போது தான் அவன் நினைத்தான் நான் நாற்பது வயது வரை வாழ்ந்து

விடேன்,

இவன் இன்னும் வாழ்கையின் இன்பங்களை காணாத வயது.... இவனை யார் மணமுடிப்பர்கள் ?

கால் இழந்த ஒருவனை ? எவ்வளவு சிரம பட போகிறான் என்று. எனக்கோ காலில் சத்திர சிகிச்சை

அவனுக்கோ.... காலே எடுக்க போகிறார்கள். இறைவா என்ன சோதனை ...

.வாழ்வை வாழ எவ்வளவு எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கிறது. அப்போது வான் அலையில்

ஒலிக்கிறது ........வாழ நினைத்தால் வாழலாம் ...வழியா இல்லை பூமியில் ...ஆளக் கடலும்

சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி ....வா.........

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

வாழ்க்கையின் யதார்த்தத்தை கதையில் சொன்ன விதம் அழகு...

அனுபவம் தான் வாழ்க்கையின் நல்ல நண்பன்.... வாழ்க்கையில் பல வடயங்களைக் கற்றுக்கொடுக்கும்...

வாழ்த்துக்கள்.....

இளங்கவி

Link to comment
Share on other sites

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

('மயக்கமா... கலக்கமா...' பாடல் வரி)

வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா. :rolleyes:

Link to comment
Share on other sites

நல்லதொரு கருத்தான கதை நிலாமதி அக்கா! (எல்லோரும் அக்கான்னுறாங்க.. நானும் அக்காண்டுக்கறேன்.. :unsure: )

இந்தக் கதைய நான் உல்டா பண்ணி ஒரு கதை பிசையட்டுங்களா? :D

கோலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் சுதா.

சத்யனும் அவனது நண்பர்களும் ஆரவாரமாக உள்ளே புகுந்தார்கள். சத்யன் அட்டைப் பெட்டியைத் திறந்து விஸ்கிப் போத்தலை வரவேற்பறை மேசைமீது வைத்தான்.

'திருமணநாள் வாழ்த்துக்கள் சத்தியன்' - விஸ்கிப் போத்தலிலிருந்து பார்வையை எடுக்காமலே வாழ்தொலித்தான் நண்பனொருவன்.

அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

'திருமணநாள் என்றால் மனைவியான எனக்கு ஏதாவது பரிசு தருவார் என்று பார்த்தால்.. நண்பர்களுக்கு விஸ்கியாம் விஸ்கி.. இவர் கெட்ட கேட்டிற்கு திருமணநாள்தான் கேட்குதாக்கும்' - கோபத்துடன் கணவன் சத்யனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.

கோபம் கவலையாக மாறியது. அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல், படுக்கை அறைக்குப்போய் சிறிய தொலைக்காட்சியை 'ஓன்' பண்ணினாள்.

செய்தி போய்க் கொண்டிருந்தது.

'விமானக் குண்டு வீச்சுக் காரணமாக ஒரு வயதுக் குழந்தையின் தந்தை கோரப்பலியானார்.. இளம் மனைவி சித்தப்பிரமை பிடித்தவரைப்போல மாறினார்...'

ஓ.. கடவுளே! பாவம் அந்தப் பெண்ணும் குழந்தையும். அவளுக்கு இனி யார் துணை?

அவள் அவர்கள் குடியுடன் சுவைக்க ஏதாவது தயாரிக்க ஆயத்தமானாள்.

.வாழ்வை வாழ எவ்வளவு எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கிறது. அப்போது வான் அலையில்

ஒலிக்கிறது ........வாழ நினைத்தால் வாழலாம் ...வழியா இல்லை பூமியில் ...ஆளக் கடலும்

சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி ....வா.........

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொன்ன விதம் அழகு வாழ்த்துகள்.

வாழ நினைத்தால் வாழலாம்.

வலிக்காமலும் வாழ்க்கையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கதை பார்த்து கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் குறிப்பாக கறுப்பி

இளங்கவி,மல்லிகைவாசம், நிரூஜா யாவருக்கும் நன்றிகள்.

விசேடமாக ........கதைக்கு கதை சொன்ன சோழியன் அண்ணாவுக்கு மிக நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.