Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயன்தாராவுக்கும் கோயில் ? !

Featured Replies

யார் என்ன சொன்னாலும் நயன் தாரவுக்கு கோயில் கட்டி, அதற்கு முன்னால் சிம்புன்ர தலையைக் கொண்ட நந்தி வைக்காமல் என் ஆவி அடங்காது....

  • Replies 147
  • Views 18.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கோயில் என்பது உங்களுக்குப் புனிதமானது. நயன்தாரா ரசிகர்களுக்கு நயன்தாராவின் கோயில் புனிதமானது.

உங்கள் கோயிலுக்கு மற்றவர்கள் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பையும் புனிதத்தையும் நயன்தாரா கோயிலுக்கும் நீங்கள் கொடுப்பதே நேர்மையானது.

அனைத்துமே கோயில்தான். அங்கே அம்மாளாச்சி இருந்தால் என்ன? வாழும் தெய்வம் நயன்தாரா இருந்தால் என்ன? எல்லாம் கோயில்தான். எல்லாம் புனிதம்தான்.

உங்களுக்கு நயன்தாராவில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். உங்களுக்குப் பிடிக்காது விட்டால் நீங்கள் நயன்தாரா கோயிலுக்குப் போக வேண்டாம்.

ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை நக்கலடிக்க வேண்டாம். புண்படுத்த வேண்டாம்.

எமது முன்னோர்கள் தாம் கற்பனையில் கண்ட பெண் தெய்வங்களை பெருத்த மார்புகளோடு சிலை வடிவில் செய்து வணங்கினார்கள்.

அந்த வடிவங்களை குஸ்பு, நமீதா, நயன்தாராவிடம் கண்ட இன்றைய தலைமுறையினர் அவர்களுக்கு சிலை வடித்து வணங்குகின்றார்கள்.

அனைத்து ஆறுகளும் ஒரே கடலிலேயே கலப்பதை புரிந்து கொள்ளுங்கள்

நயன் எப்படி புனிதமா கருதப்பட முடியும். ஒண்டுக்கு கக்காக்கு போவார்.சொறி சிரங்கோட இருப்பார்.அதெல்லாம் புனிதமாவா இருக்கும்.நோய் எல்லோ பரவும். ஆனால்.. கோவிலில இருக்கிற அம்மனால உங்களுக்கு எதுவும் பரவாது.அங்க போகேக்கையாவது மனிசரை குளிக்க வைக்கினம். உண்டி சுருக்கி வைக்கினம். சுத்தமான ஆடை அணிய வைக்கினம்.. மனசுக்கு மகிழ்ச்சியான புத்துணர்ச்சியான சூழலை உருவாகினம்.

நயனைத் தானே நேர காண முடியுது. பிறகேன் கோவில். நேர போயே அவரைக் கும்பிடலாம் தானே கும்பிட விரும்புறவ. அம்மனை நேர காணேலாததால கோவில் கட்டி.. கும்பிடினம். அதைப் புனிதமா பார்க்கக் கற்றுக் கொடுக்கினம். அது மனித மூளையில புனிதம் என்றதுக்கு ஒரு வரைவிலக்கணத்தை ஏற்படுத்துது.அதையும் செய்யவில்லை என்றால் பல மூளைகளுக்கு புனிதம் என்பதம் அர்த்தம் புரியாமலே போயிருக்கும்.

நயன் குசு விட்டுக் கொண்டு இருக்கிறது ரசிகர்களுக்கு புனிதம் என்பது உங்களின் ரசனை..!

பெண் என்ற படைப்புக்கு மார்பு என்பது வகுத்தது. அம்மனை பெண்ணாக் காட்ட மார்பையும் அடையாளப்படுத்தினம். அந்த மார்பில தான் ஒரு புதிய உயிரின் இருப்புக்கான உணவு..நோய்களை எதிர்க்கும் மருந்து சுரக்குது. அந்த மார்பு வெறும் உணர்ச்சிக் கூறல்ல. அது இன்னும் விஞ்ஞானிகளால் கூட உருவாக்கப்பட முடியாத அற்புத தொழிற்சாலை. இயற்கையின் கொடை. மார்ப்பை அடையாளப்படுத்தல்.. என்னைப் பொறுத்தவரை கவர்ச்சிக்கு மேலால் மார்பின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதாகவே நோக்குவேன். :)

Edited by nedukkalapoovan

நயன் எப்படி புனிதமா கருதப்பட முடியும். ஒண்டுக்கு கக்காக்கு போவார்.சொறி சிரங்கோட இருப்பார்.அதெல்லாம் புனிதமாவா இருக்கும்.நோய் எல்லோ பரவும்.

இந்த மனுசனுக்கு அப்பம் எண்டால் புட்டு காட்ட வேணும். நயந்தாரவுக்கு கோயில் கட்டிற எண்டால் அவாவைக் கொண்ட மூலசானத்துக்குள் வைக்கிறெல்ல. கல்லில அவா மாதிரி செய்து வைக்கிறது. கல்லு சிலை ஒண்டுக்கும் போகாது. நீங்கள் கவலை பட வெண்டாம். " நாய்க்கு நட்டாற்றிலும் நக்கல் தண்ணி தான் " என்ற போல உங்கட கதை... **** எல்லாம் அந்த நயன் அம்மனுக்கு தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசனுக்கு அப்பம் எண்டால் புட்டு காட்ட வேணும். நயந்தாரவுக்கு கோயில் கட்டிற எண்டால் அவாவைக் கொண்ட மூலசானத்துக்குள் வைக்கிறெல்ல. கல்லில அவா மாதிரி செய்து வைக்கிறது. கல்லு சிலை ஒண்டுக்கும் போகாது. நீங்கள் கவலை பட வெண்டாம். " நாய்க்கு நட்டாற்றிலும் நக்கல் தண்ணி தான் " என்ற போல உங்கட கதை... **** ...எல்லாம் அந்த நயன் அம்மனுக்கு தான் வெளிச்சம்.

நினைச்சனான்.. நயன் கக்காக்கு ஒண்டுக்குப் போறது பெரிய தர்க்கமாகும் என்று. நிரூபிச்சிட்டியள்.

நயனை.. சிலையா இருத்தனும் என்றதை நான் சொல்லேல்ல. அம்மன் என்றது நயனை மாதிரி கக்கா.. ஒண்டுக்கு போகாதது எப்பவும். நயன் அப்படிப் பார்க்கேக்க அசிங்கம் தானே. அதுக்கு கோவில் கட்டுறது அசிங்கமாத்தானே இருக்கும்..! :D

**** :)

நயன் அப்படிப் பார்க்கேக்க அசிங்கம் தானே. அதுக்கு கோவில் கட்டுறது அசிங்கமாத்தானே இருக்கும்..!

அப்படி பார்த்தால் எல்லோரும் அசிங்கம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

nayanthara11pz4.jpg

ஒரு தேர்ந்த சிற்பி நயன்தாராவை சிலையாக வடித்தால் அம்மனையும் விஞ்சிவிடுவார். பக்தகூட்டமும் அலைமோதும். நெடுக்ஸும் வந்துசேர்வார் என்று நம்பலாம்!

ஆரம்பிச்சிட்டாங்கடா....இவங்க கிட்ட மட்டும் எப்படி நேரமும் பணமும் ரொம்ப கிடைக்குது இதெல்லாம் பண்ண..

nayanthara11pz4.jpg

அரோகரா, அரோகரா , ஓம் நயந்தார பார்பதியே...எல்லோரும் வாழ்க ( நெடுக்ஸ் உட்பட), இன்பமே சூழ்க...

கக்கா போவதையும் குசு விடுவதையும் இங்கே தர்க்கப் பொருளாக்கியது நண்பர் நெடுக்காலபோவான்தான்.

கடவுளுக்கு மலமும் சலமும் வருமா என்பது குறித்து நான் சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.

கடவுள்களுக்கு மலம், சலம், குசு போன்றவை வராது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கடவுளுக்கு காமம் வருகின்றது, கலவி நடை பெறுகின்றது. கலவியிலும் ஓரினச் சேர்க்கை, கூட்டுக் கலவி, மிருகங்களுடன் கலவி என்று எல்லாம் நடைபெறுகின்றது. கடவுளுக்கு பிள்ளை பிறக்கின்றது. கடவுளுக்கு நித்திரையும் வருகின்றது.

இவற்றை விட முக்கியமாக கடவுளுக்கு பசிக்கின்றது. கடவுள் சாப்பிடவும் செய்கின்றார்.

இவற்றை ஞானிகளாக இருந்த முன்னோர்கள் தமது அகக்கண் கொண்டு பார்த்து அறிந்திருக்கிறான்றார்கள்.

அவர்கள் கடவுள் மலம் கழித்ததையும் குசு விட்டதையும் அறியாமல் போனார்கள் என்பதனாலோ, அல்லது அறிந்தும் அதை சொல்லவில்லை என்பதனாலோ, அல்லது சொல்லியும் நாம் அறிந்து கொள்ளவில்லை என்பதனாலோ, இவைகள் இல்லையென்று ஆகி விடாது.

உண்பதற்கு பல தின்பண்டங்களைப் படைக்கும் பக்தர்கள் கழிப்பதற்கு ஒரு மலசலகூடத்தை கட்டவில்லை என்ற காரணத்தினால்தான் கோயில்களில் கடவுள்கள் எழுந்தருளுவது இல்லை என்று நான் நினைக்கின்றேன்.

இதை எமது பக்தர்கள் தீவிரமாக பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுகின்றேன்.

அத்துடன் மலம், சலம் கழிப்பதன் காரணத்தால் நாம் நயன்தாராவை கடவுள் இல்லை என்று சொல்லி விட முடியாது. அப்படி யாரும் தவறாகப் புரிந்து கொண்டு விடக் கூடாது என்பதனாற்தான் சாஜிபாபா தொடக்கம் டென்மார்க் லலிதாவரை கடவுள் மனிதரூபத்தில் தோன்றி கக்காவும் இருந்து குசுவும் விட்டு அருள்பாலிக்கின்றார்.

ஆகவே கக்காவையும் குசுவையும் காரணம் காட்டி ஒருவரைக் கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருஞானசம்பந்தர் தொடக்கம் பலர் பார்வதியின் பெருங் கொங்கைகளை தமது ஞானக் கண்ணால் கண்டு பதிகம் பாடியுள்ளார்கள்.

அவற்றை குஸ்புவிடமும், நமீதாவிடமும், நயன்தாராவிடமும் கண்டு இன்புற்ற சில ரசிக பக்தர்கள் அவர்களுக்கு கோயில் கட்டுகின்றார்கள்.

எல்லாமே கடவுள்தான்.

ஒரு பெருத்த மனித உடம்பில் யானைத் தலையைப் பொருத்தி அங்கே கடவுளைக் காண முடியும் என்றால், அதை விட அதிகமாகவே நயன்தாராவிடம் கடவுளைக் காணலாம்.

தாங்கள் கற்பனையில் காண்பதை எல்லாம் வணங்குவதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், மற்றவர்கள் வேறு யாருக்கேனும் கோயில் கட்டினால் அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தம்முடையதுதான் கோயில், தம்முடையதுதான் கடவுள் என்று சொல்லி மற்றையவர்களின் நம்பிக்கையை தடுப்பது மதவாதமும் பாசிசமும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

*** தலைப்புக்குச் சம்பந்தமே இல்லாமல் இவர் இந்து மதத்தைத் தாக்குவது, வம்புக்கிழுப்பது, திரும்பவும் யாழ்களத்தில் பிரச்சனைகளை ஊக்குவிப்பதாகவே அமையும். அதற்கு நீங்களும் இடம் கொடுப்பதாகவே, இக் கருத்துக்களை அனுமதிப்பதின் மூலம் உணர முடிகின்றது.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்.. கடவுளை மனித உருவில் மனிதனே வடிவித்துவிட்டதற்காக.. கடவுளே இல்லை என்றிட முடியாது. ஏனெனில் மனிதருக்குள் இயற்கையில் இருந்துதான் கடவுள் என்ற எண்ணமே தோற்றம் பெற்றது..!

மனிதன் மனிதனை வழிபடுவது அநாவசியமானது. ஆனால் மனித உருவில் உள்ள கடவுளை அவன் வழிபடுவதால் தவறில்லை. அது புனிதம் என்றால்.. புனிதமாக இருக்கும். ஆனால் மனிதன் அவ்வாறான்று. மனிதன்.. புனிதம் அசிங்கம் இரண்டும் கலந்த கலவை.

நீங்கள்.. கடவுளை நிந்திக்க.. மனிதன் கடவுளை வைத்து இயற்றிய காமக் கதைகளை அளந்துவிடுகிறீர்கள். சினிமாவிலும் அதைத்தான் செய்து.. இந்த நங்கையரைக் கனவுக் கன்னிகளாக வரிந்துவிட செய்திருக்கிறார்கள். இரண்டுமே தவறானதே..!

இயற்கை பற்றிய புதிர்கள் இருக்கும் வரை கடவுள் என்ற நம்பிக்கை இருக்கும். அதற்காக மனிதனை மனிதன் வழிபட ஆரம்பிப்பது.. அது கவர்ச்சிக்காக வழிபடுவது.. மிகவும் கேவலமான ரசனை. மனிதனை மனிதனே.. கேவலமாக ரசிக்கும் தன்மையினது..! :(:lol:

அப்படி பார்த்தால் எல்லோரும் அசிங்கம் தானே?

என்ன தீடிர் துணிச்சல். ஊரில் இல்லையோ?

எல்லாம் என்றால்...?? மனிதன் அசிங்கம் பிடிச்சவன் தான். :(

நான் யாருக்கும் பயந்து கருத்துச் சொல்லத் தயக்க மாட்டேன். எனக்கு இயற்கையளித்த சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன். அதுமட்டுமன்றி இல்லாத ஒன்றுக்காக நான் ஏன் பயப்பிட வேண்டும்..! :)

நான் இங்கே யாரையும் நிந்திக்கவில்லை.

இங்கே உள்ள சிலர்தான் நயன்தாரா ரசிகர்களின் நம்பிக்கையை நிந்தித்தார்கள். அப்படி நிந்திப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுந்து விட்டது.

மனிதன்தான் கடவுளுக்கு மனிதரின் குணங்களையும் அதையொட்டிய கற்பனைக் கதைகளையும் படைத்து விட்டான் என்ற நெடுக்காலபோவானின் வாதத்தை ஏற்றுக் கொள்வோம்.

ஆனால் கோயில்கள் அந்தக் குணங்களின் மற்றும் கதைகளின் நிகழ்ச்சி நிரலில்தான் நடத்தப்படுகின்றன.

ஆகவே அதே குணங்களையும் மற்றும் கதைகளையும் கொண்டுள்ள நயன்தாராவிற்கும் கோயில் கட்டலாம்.

ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரின் கோயிலை இடிப்பதோ, அல்லது கோயில் கட்டுவதை நிந்திப்பதோ மிகத் தவறானது.

இவர்களுக்கு உள்ள உரிமை அவர்களுக்கும் உண்டு. இதைத்தான் நான் சொல்கின்றேன்.

உங்களுக்கு அம்மாளாச்சி கடவுள். அவர்களுக்கு நயான்தாரா கடவுள். அவ்வளவுதான்.

இதில் அவர்களை மட்டும் நக்கல் அடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

அனைத்து வீண்விரயங்களையும் எதிர்ப்பதில் காட்டிய நேர்மையை இதிலும் காட்டுங்கள்.

கற்பனையில் காணும் உருவங்களுக்கு கோயில் கட்ட முடியும் என்றால், நேரில் காணும் நமீதாவிற்கும் நயன்தாராவிற்கும் கோயில் கட்ட முடியும். .இதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு.

கல்லை ஏன் வழிபடுகிறீhகள் என்றால் கேட்டால், கடவுளை எதிலும் காணலாம் என்று உயர்ந்த தத்துவ விளக்கங்கைள எல்லாம் இங்கே பலர் சொல்லியிருக்கிறார்கள். விகாரமான உருவங்களையும் மிருகங்களையும் வணங்குவதற்கும் இந்த விளக்கத்தைத்தான் சொல்கிறார்கள்.

கேவலம் குரங்கில் கடவுளை காண முடியும் என்றால், நயன்தாராவில் காண முடியாதா என்பதே என்னுடைய கேள்வி

மொத்தத்தில் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். தங்களுடைய நம்பிக்கைக்கு கோயில் கட்டுகின்றவர்கள், மற்றவர்களுடைய நம்பிக்கைக்கு அவர்களுடைய விருப்பப்படி கோயில் கட்டுவதை எதிர்க்கக் கூடாது என்பதே

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களையே கடவுளாக மதிப்பதாகச் சொல்லும் சமூகத்தில் எதற்கு நயனதாராவுக்கு மட்டும் கோவில். எல்லாப் பெண்களுக்கும் நிகராக தானே ஏலவே அம்மாள் ஆச்சி கோவிலில குடியிருக்கா..! அப்புறம் எதற்கு மனிதப் பெண்ணுக்கு ஆளுக்கொருவருக்கு கோவில்.

தாயைத் தெய்வமாக மதிக்கும் சமூகத்தில்.. நடிகைகள் தெய்வமாவது.. மொத்த சமூகத்தின் சிந்தனைப் போக்கையே சந்தேகிக்க வைக்கிறது. உண்மையில்.. தமிழர்கள்.. தமிழர்களா.

முன்னர் மும்பை குஷ்புக்கு கோவில் எழுப்பினார்கள்.. இப்போ கேரளத்து நயனுக்கு கோவில். ஆனால் ஆண்டிப்பட்டியிலும் அடுபங்கரையிலும் கிடக்கும் தாய்மாருக்கு எந்த மதிப்பும் இல்லை...!

பெண்களை.. தாயாக.. தெய்வமாக மதிங்க என்றுதான் பெண் உருவில் கடவுளை உருவகித்தான் மனிதன். ஆனால் அதே பெண்கள் மனிதராகக் கூட மதிக்கப்படாது வெறும் கவர்ச்சிச் சிலையாக மதிக்கச் சொல்வது...???! கடவுள் வழிபாடல்ல. கவர்ச்சி வழிபாடு..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையனை அந்தக்கோயிலுக்கு முன்னாலை ,

தேங்காயும் , கற்பூரமாவது விற்க விடுங்கப்பா ............

தமிழ் பெண்களுக்குத்தான் கோயில் என்று பார்த்தால் நிறைய கோயில்களை கட்ட முடியாது போய் விடுமே!

வடநாட்டுப் பெயர்கள் கொண்ட கற்பனைப் பெண் உருவங்களுக்கு கோயில் கட்ட முடியும் என்றால், வடநாட்டு குஸ்புவுக்கும் கோயில் கட்டலாம். சேரநாட்டு மங்கை நயனுக்கும் கோயில் கட்டலாம்.

அத்துடன் கவர்ச்சி வழிபாடு நிறைய இருக்கின்றது. இதன் பட்டியல்களை எடுத்து விட்டால், இந்து மதத்தை நிந்திப்பதாக இங்கே சிலர் சொல்வார்கள். அந்தக் கவர்ச்சிகளுக்கு கொடுக்கும் உயர்ந்த தத்துவத்தை நயன்தாராவுக்கும் கொடுத்து விடுங்களேன். பிரச்சனை முடிந்து விடும்.

கடவுள் என்பதன் அர்த்தம் கடந்து உள்ளது என்பதாகும். எங்கள் சிந்தனையை சக்தியை கடந்து உள்ளது என்பதாகும்.

ஆனால் மனிதன் அதை தன்னுடைய சிந்தனைக்குள் அடக்கி பல வடிவங்களைக் கொடுத்தான். ஆரம்பத்தில் "தாய்" வடிவத்துடன் உருவான பெண் தெய்வங்கள் இன்றைக்கு பல வடிவங்களை எடுத்து விட்டன.

அனைத்து வடிவங்களுக்கும் கோயில் உண்டு. பல வடிவங்களில் பெண் தெய்வங்களை கற்பனை செய்து உருவாக்குபவர்கள், மற்றவர்கள் நயன்தாராவை கடவுள் வடிவம் ஆக்குகின்ற பொழுது, அதை மறுப்பது தவறானது.

தமக்கு உள்ள சிந்தனை உரிமை மற்றவர்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக கோயில்கள் தேவையா என்று கேளுங்கள்! அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்:

ஆனால் குறிப்பிட்டவர்கள் தாம் விரும்பிய வடிவங்களுக்கு கோயில் கட்டலாம், ஆனால் சிலர் அப்படிக் கட்டக் கூடாது என்பது அக்கிரமம். தாங்கள் விரும்பிய வடிவங்களைத்தான் அனைவரும் கடவுள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகத் தவறு.

இது பெரும்பான்மையினரின் சர்வாதிகாரம் ஆகும். பெரும்பான்மை சமூகம் தான் வழிபடுவதற்கு ஒன்றை தேர்வு செய்வது போன்று சிறுபான்மை சமூகத்திற்கும் (அது ஒரு பத்துப் பேராக இருந்தாலும்) தான் வழிபடுவதற்கு ஒன்றை தேர்வு செய்யும் உரிமை உண்டு. இதை யாரும் மறுக்க முடியாது.

இதில் யாருடையது உண்மையான கடவுள் என்ற கேள்விக்குள் நான் வரவில்லை. ஒருவன் கல்லைக் வணங்கி விட்டு அதற்கு ஒரு விளக்கம் தருகிறான். இன்னொருவன் நடிகையை வணங்குகிறான்.

இரு தரப்புமே என்னுடைய பார்வையில் முட்டாள்கள். ஆனால் கல்லை வணங்குபவன் நடிகையை வணங்குபவனைப் பார்த்து நக்கல் அடிப்பதுதான் எனக்கு மிகப் பெரும் வேடிக்கையாக இருக்கின்றது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை மனித உருவில் வழிபட.. ஜேசுவாக...மேரியாக.. நபியாக..வழிபட உரிமை இருக்கிறது. மனிதனை மனிதன் வழிபடுபவது கேவலமானது மட்டுமன்றி.. மனிதரிடையே சமத்துவமற்ற தன்மையையே உருவாக்கும்.

நயனை கவர்ச்சி வழிபாடு செய்ய கோவில் அவசியமில்லை. தியேட்டர் காணும்.

ஆனால் சமூகத்துக்கான ஒரு நெறியை போதிக்க நடிகை.. கோவிலில் அமர முடியாது. ஏனெனில் அவளுக்கு அதற்கான தகுதியை மக்கள் அளிக்கமாட்டார்கள்..! கவர்ச்சிப் பித்தர்கள் அல்ல உலக மக்கள் எல்லோரும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை மனித உருவில் வழிபட.. ஜேசுவாக...மேரியாக.. நபியாக..வழிபட உரிமை இருக்கிறது. மனிதனை மனிதன் வழிபடுபவது கேவலமானது மட்டுமன்றி.. மனிதரிடையே சமத்துவமற்ற தன்மையையே உருவாக்கும்.

நயனை கவர்ச்சி வழிபாடு செய்ய கோவில் அவசியமில்லை. தியேட்டர் காணும்.

ஆனால் சமூகத்துக்கான ஒரு நெறியை போதிக்க நடிகை.. கோவிலில் அமர முடியாது. ஏனெனில் அவளுக்கு அதற்கான தகுதியை மக்கள் அளிக்கமாட்டார்கள்..! கவர்ச்சிப் பித்தர்கள் அல்ல உலக மக்கள் எல்லோரும்..! :)

சத்திய சாய்பாபா பற்றி நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

*** தலைப்புக்குச் சம்பந்தமே இல்லாமல் இவர் இந்து மதத்தைத் தாக்குவது, வம்புக்கிழுப்பது, திரும்பவும் யாழ்களத்தில் பிரச்சனைகளை ஊக்குவிப்பதாகவே அமையும். அதற்கு நீங்களும் இடம் கொடுப்பதாகவே, இக் கருத்துக்களை அனுமதிப்பதின் மூலம் உணர முடிகின்றது.

மேலே இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பின் தயவுசெய்து அதை சுட்டிகாட்டுக....???

நாயன்தாரா அல்லது நாயன்அம்மனுக்கு கோவில் வைப்பது பற்றிய விவாதம்தான் நடக்கின்றது

இல்லாத பொல்லாத அம்மனுக்கெல்லாம் கோவில் இருப்பது நியாயமெனில்.... நாயன் அம்மன் கோவில்காண என்ன குறையுள்ளது என்பதே கேள்வி??? அது பிழையென நீங்கள் கருதின் அதை விளக்முடன் எழுதினால் வாசிப்பவர்கள் சரியா பிழையா எனும் முடிவை எடுக்கலாம். ***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

கற்பனையில் காணும் உருவங்களுக்கு கோயில் கட்ட முடியும் என்றால், நேரில் காணும் நமீதாவிற்கும் நயன்தாராவிற்கும் கோயில் கட்ட முடியும். .இதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு.

நாம் இப்போது வழிபடும் தெய்வங்கள், காலம் காலமாக எம்முன்னோரால் வணங்கப்பட்டு வந்தவை. தெய்வங்கள் நிஜமோ அல்லது கற்பனையோ என்று நாங்கள் முடிவு பண்ண இயலாது. எமது சிந்தனைக்கு எட்டியவகையில் தெய்வ வழிபாடு இவ்வாறு தோன்றியிருக்கலாம், அவ்வாறு தோன்றியிருக்கலாம் என்று வெறும் ஊகங்களை மட்டுமே கொள்ளலாமே தவிர தெய்வங்கள் உண்மையாக உண்டோ/ இல்லையோ என்று முடிவெடுக்க முடியாது.

ஆனால், நயாந்தாரா போன்றவர்கள் எமது காலத்தில் வாழ்கிறார்கள். எனவே, அவர்களுக்கு கோயில் கட்டுமளவுக்கு அவர்கள் தகுதியானவர்களா / இல்லையா என்று நாங்கள் ஆராய்ந்து நீங்களே ஒரு முடிவெடுங்கள். முன்னோர்களின் தெய்வ வழிபாடு மூடநம்பிக்கையோ / இல்லையோ என்று தெரியாது. ஆனால், நயனுக்கு கோயில் கட்டுவது போன்ற மூட நம்பிக்கையான செயல்களை நாம் ஏன் ஊக்குவிக்க வேண்டும். அவரது ரசிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அது கூட படங்களில் அப்படியான நல்ல வேடங்களில் நடித்தால் (அது கூட செய்யவில்லை) மட்டும் போதாது. நிஜ வாழ்விலும் அப்படி நடக்க வேண்டும்.

நெடுக்ஸ் சொன்ன மாதிரி:

நயனை கவர்ச்சி வழிபாடு செய்ய கோவில் அவசியமில்லை. தியேட்டர் காணும்.

ஆனால் சமூகத்துக்கான ஒரு நெறியை போதிக்க நடிகை.. கோவிலில் அமர முடியாது. ஏனெனில் அவளுக்கு அதற்கான தகுதியை மக்கள் அளிக்கமாட்டார்கள்..! கவர்ச்சிப் பித்தர்கள் அல்ல உலக மக்கள் எல்லோரும்..! :)

கேவலம் குரங்கில் கடவுளை காண முடியும் என்றால், நயன்தாராவில் காண முடியாதா என்பதே என்னுடைய கேள்வி

யாருக்கு தெரியும்? ஒரு வேளை மனிதர்களை விட குரங்குகள் மேலானதாக இருக்கலாம். குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்தான் என்கிறார்கள். பரிமாண வளர்ச்சி குரங்குடன் நின்று போயிருந்தால் (மனிதனுக்கு மாறாமல்), இந்த உலகில் அமைதி நிலைத்திருக்கும் போல. குரங்கைவிட ஓரறிவை கூடுதலாக வைத்துக்கொண்டால் மட்டும் (அதுவும் அதை அழிவுக்கே அதிகளவில் பயன்படுத்தும்), நாம் எப்படி குரங்கை கேவலமாக கருத முடியும்? :)

  • கருத்துக்கள உறவுகள்

சத்திய சாய்பாபா பற்றி நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்???

மக்களை ஏம்மாற்றி பணம் சம்பாதிக்கத் தெரிந்த ஒரு சாமானியன்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பின் தயவுசெய்து அதை சுட்டிகாட்டுக....???

நாயன்தாரா அல்லது நாயன்அம்மனுக்கு கோவில் வைப்பது பற்றிய விவாதம்தான் நடக்கின்றது

இல்லாத பொல்லாத அம்மனுக்கெல்லாம் கோவில் இருப்பது நியாயமெனில்.... நாயன் அம்மன் கோவில்காண என்ன குறையுள்ளது என்பதே கேள்வி??? அது பிழையென நீங்கள் கருதின் அதை விளக்முடன் எழுதினால் வாசிப்பவர்கள் சரியா பிழையா எனும் முடிவை எடுக்கலாம். ***

தன்னையே காப்பற்றிக் கொள்ளத் தெரியாமல் சிலுவையில் அறைபட்ட ஜேசுநாதருக்குக் கோவில் இருக்கின்றபோது, நயன்தாரவிற்குக் கோவில் கட்டுவதில் எவ்வித தவறுமில்லைத் தான்.

இல்லாத, பொல்லாத அம்மன் என்றால் என்ன? எதை அப்படிச் சொல்ல வருகின்றீர்??

தன்னையே காப்பற்றிக் கொள்ளத் தெரியாமல் சிலுவையில் அறைபட்ட ஜேசுநாதருக்குக் கோவில் இருக்கின்றபோது, நயன்தாரவிற்குக் கோவில் கட்டுவதில் எவ்வித தவறுமில்லைத் தான்.

அதுதானே... அதுவும் ஈழத்தமிழர் துயர் துடைப்பிற்காக தனது உடை குறைத்து நடித்த பணத்தில் இருந்து எடுத்து கொடுத்து ...! அவருக்கு கோயில் கட்டினால்தான் என்ன..??

மூன்று தேங்க்காய் ஒரு யூரோவுக்கு வாங்கி உடைத்தால் தவறு, ஆனால் 24 யூரோவுக்கு ஒரு ( பிறகு பலபோத்தல்கள்) போத்தல் ஜொனி வோக்கர் வாங்கி உடைச்சு கிறிஸ்மஸ் பாட்டி வைத்தால் கலாச்சார நிகழ்வு.... இது தானுங்கோ பகுத்தறிவு எண்டது சுருக்கமாக...

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்படி , அவற்றை தலை மயிர் ,

80 வயதிலேயும் புஸ் , புஸ் எண்டு வளந்திருக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் 24 யூரோவுக்கு ஒரு ( பிறகு பலபோத்தல்கள்) போத்தல் ஜொனி வோக்கர் வாங்கி உடைச்சு கிறிஸ்மஸ் பாட்டி வைத்தால் கலாச்சார நிகழ்வு.... இது தானுங்கோ பகுத்தறிவு எண்டது சுருக்கமாக...

இதென்ன. பண்டிகை கொண்டாட்டங்கள் ஒன்றுக்கும் கூப்பிடாத கவலையில் எழுதின மாதிரி இருக்கு. யாரும் தங்கள் பணத்தைச் செலவழித்து வாங்கித் தந்தால் ஊத்தி ஊத்திக் குடிக்கலாம். எனவே நண்பர் வட்டத்தை அதிகரித்துக் கொள்வது நல்லது!

இல்லாவிட்டால் 31ந் தேதி நள்ளிரவு கோயிலுக்குப் போய் புதுவருடப் பூசையில் பங்குபற்றி, புதுக் கலண்டர் வாங்கவேண்டி வரும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.