Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலும் வேதனையும்

Featured Replies

நீங்கள் குறிப்பிட்டதுபோல, அந்தப் பெண் அந்த ஆணை மட்டம் தட்டவில்லை. மாறாகத் தொடர்ந்து படிக்கத்தான் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணின் நியாயமான விருப்பத்தைக்கூட அவளின் பெற்றோர் கவனத்தில் எடுக்கவில்லை என்பதுதான் எனது வாதமே தவிர, படிக்காதவர்களுக்கெதிரானதல்

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nedukkalapoovan

அந்தப் பெண் அறிவற்றவளாக இருந்திருந்தால் அந்தத் திருமணத்திற்கு சம்மதித்திருக்கமாட்டாள். முக்கிய விடயம், அவர்களுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. நிச்சயம்தான் (பதிவுத் திருமணம்) முடிந்திருக்கிறது. அப்பெண் நினைத்திருந்தால், அத்திருமணத்தையே முறித்திருக்கலாம். நாம் என்னதான் முயற்சித்தாலும், இந்த உறவினர் கூட்டமும் சமுதாயமும் இன்றி வாழ்வது கடினம். அப்படி வாழவேண்டுமெனில், வேறொரு நாட்டிற்குத்தான் குடிபெயரவேண்டும்.

நீங்கள் குறிப்பிட்ட உங்கள் நண்பரைப் போல ஊரில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். நான்கூட ஊரில் இருந்திருந்தால் O/Lலைத் தாண்டுவதே கேள்விக்குறியாகியிருக்கும். காரணம் எங்கள் நாட்டிலிருந்த கல்விமுறையும் ஆசிரியர்களும்தான். ஆனால், இங்கு வந்து பல்கலைக்கழகம் வரை செல்லக்கூடியதாக இருந்திருக்கிறது. அறிவு என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமென்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். அறிவு, ஒருவரின் வாழ்க்கையையே தடம்புரட்டிப் போடவல்லது. அந்த அறிவை ஓரளவிற்கேனும் மேம்படுத்துவதில் படிப்பும் ஒன்று. ஆகவேதான், பெண்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்காக படித்தவர்கள் எல்லோரும் அறிவுள்ளவர்கள் என்பதல்ல. ஆனால், ஓரளவேனும் பகுத்தறிவு இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதோடு அவர்களின் சிந்தனைத்திறனும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும்.

கணவன், மனைவி உறவென்பது வாழ்க்கை முழுவதும் இருப்பதொன்று. அவர்களின் சிந்தனைத்திறனும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி வேறுபட்டு இருப்பின், பிரச்சனைகள்தான் மிஞ்சும்.

இப்படியெல்லாம் நீங்களா யோசிச்சு.. முடிவுகளைக் கட்டிக் கொள்கிறீர்களே தவிர.. உங்கள் முடிவுகளில் எவையுமே அறிவுபூர்வமானவையாக இல்லை..!

1. நினைத்திருந்தால் அந்த ஆணை விவாகரத்துச் செய்திடலாம் என்று இலகுவாகச் சொல்கிறீர்கள்.

உங்களின் படிப்பறிவை நினைச்சா எனக்கு வருத்தமாக இருக்கிறது. அப்படி ஒரு திருமண முறிவின் பின்னால் வரப்போகும் பாதிப்பைப் பற்றி சிந்திக்காத ஒரு படிப்பறிவு.

சரி உங்கள் படிப்பறிவைக் கொண்டு.. மேற்குறிப்பிட்ட திருமண முறிவால் ஏற்படும்.. பாதிப்பு... மற்றும் நன்மைகள் ஆண் - பெண் என்ற வகையில் பட்டியலிடுங்கள் பார்க்கலாம்...!

2. ஒரு இளைஞன் படிக்க முடியவில்லை என்பது இருக்கட்டும். அவனுக்கு மொழி ரீதியான தகமையின்மைகள் கூட இருக்கலாம். அதைப் பெறுவதற்குரிய ஆளுமை இயற்கையாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவன்.. அந்தப் பெண்ணின் மீது அன்பு வைக்கமாட்டான் என்றோ அவளோடு சந்தோசமாக வாழ தன்னைத் தயார்படுத்த மாட்டான் என்றோ எப்படி தீர்மானிக்கிறீர்கள். எந்தக் கல்வி அறிவின் அடிப்படையில் இதைத் தீர்மானிக்கிறீர்கள்..???!

3. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை அனைவருக்கும் பல்கலைக்கழகக் கல்வி.. என்பது அவர்களின் தாரக மந்திரம். அதுவும் தொழில்சார் கல்விகள் தான் அதிகம். ஆனால் ஊரில் திறமை அடிப்படையிலான போட்டி இலவசக் கல்வி. அந்த முறைமைக்கு அது சரி. மேற்குலகில் சராசரி திறமையுள்ளவரும் பல்கலைக்கழகம் போய் படிக்கலாம். ஆனால் ஊரில் நிச்சயம் குறிப்பிடத்தக்க திறமையின்றி பல்கலைக்கழகத்தை விட்டு வெளிவர முடியாது..! தொழில் கல்வியை மையமாகக் கொண்ட மேற்குலக பல்கலைக்கழகங்கள்.. திறமைக்கு முதல் தொழில்பயிற்சி அறிவை வழங்கவே முன்னிற்கின்றன. அதனால் தான் பலர் பல்கலைக்கழகம் போக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் எல்லாம் மா மேதைகள் என்பதல்ல அர்த்தம்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

அதுசரி, ஊரிலை படித்துப் பட்டம் பெற்ற நீங்கள் எல்லோரும் மாமேதைகளாகத்தானே இருக்கிறீர்கள்? உலகக்கண்டுபிடிப்பெல்லாவற்ற

  • கருத்துக்கள உறவுகள்
அதுசரி, ஊரிலை படித்துப் பட்டம் பெற்ற நீங்கள் எல்லோரும் மாமேதைகளாகத்தானே இருக்கிறீர்கள்? உலகக்கண்டுபிடிப்பெல்லாவற்ற

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இணைந்த காதலர்கள் காதலிலும், இந்தத் திரியில் எழுதுபவர்களும் அதை வாசிப்பவர்களும் வேதனையிலும் இருப்பதுமாதிரித் தெரியுது!

நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும் :wub::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் இப்படிக்கோலைத்தனமாய் முடிவு எடுக்காமல் காதலுக்காக போரடியிருந்தால் உண்மையில் காதலே சோத்துவைத்திருக்கும் அத்துடன் படிப்பையும் நல்லபடியாக முடித்திருக்கலாம் பொறியாளரான பின்பு அவர்கள் உறுதியுடன் இருந்திருப்பார்களேயானால் நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார்கள். இப்படி தைரியம் இல்லாதவர்கள் தான் பின்னால் வாழ்கையில் பல அடிகள் வாங்கவேண்டிவரும் சிலவேளைகளிள் விவாகரத்துக்கு கூட செல்லும் அவர்களுடைய பொருளாதார நிலமையினால். இப்படி சேர்ந்து வாழ்க்கையில் போராடி வென்றவர்களும் இல்லாமல் இல்லை. இவையெல்லாம் அவரவர் முயற்சிகளை பொறுத்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புஸ்பா விஜி காதலிக்கும் போது சுயமாக சிந்தித்தல் குறைவு காதலித்து கல்யாணம் செய்து விட்டு அந்த காதலை பற்றியும் குறைகூறுவதும் இந்த காதலர்கள்தான் பின்பு உலகே மாயம் வாழ்மே மாயம் தான் :wub:

முயற்ச்சி என்பது படிக்கும் படிப்பை விட்டு ஊரை விட்டு ஓடிச்சென்று திருட்டு கல்யாணம் கட்டி கொள்வதா?? :rolleyes:

காதல் கட்டில் மேல் ஏறி தொட்டில் மேல் இறங்கும் போது பலருக்கு கசக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சகிவன் முக்கியமாக இந்த மருந்து கொடுப்பது மாத்திரை கொடுப்பது ஈழத்தில் இல்லை [நான் அறிந்ததாக இல்லை] :rolleyes::wub:

ஈழத்தில் நானும் அறியவில்லைத்தான்.நான் சொன்னது இங்கை மேற்கத்தைய நாடுகளில் வாழும் சில எம்மவர்கள்.அத்துடன் ஈழத்தில் உந்த மருந்து மாத்திரைகள் தேவையில்லை ஏன் என்றால் அங்கு பிள்ளைகள் ஏதாவது குழப்படி விட்டால் வீட்டுக்குள்ள பூட்டி வைத்து கும்மலாம்.இங்க அந்த பருப்பு வேகாது.அப்படிசெய்தால் உள்ளுக்கு தூக்கிப்போட்டு விடுவார்கள். :lol:

வெளிநாட்டில் நடப்பது காதலா என்பதில் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் ??? :rolleyes::wub:

வீதியோரத்தில் நிற்கும் மகிழுந்துகளை[car] பார்த்தால் ஜயோ :lol::):D

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கட்டில் மேல் ஏறி தொட்டில் மேல் இறங்கும் போது பலருக்கு கசக்கும்

முனிவர் வாயில் இருந்து உதிர்ந்த நல்வார்த்தைகள்...................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் வாயில் இருந்து உதிர்ந்த நல்வார்த்தைகள்...................

இதுதானே உன்மை புத்தன் :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன டங்குவார் பெற்ரோர் மீதும் சமுதாயம் மீதும் பழியை போட்டு இருக்கிறீங்கள் :o

பெற்றோர்.....படிக்கும் போது யாராவது காதலித்து திரிந்தால் அவர்களின் எதிர்காலம் என்னத்திற்க்காகின்றது என்று யோசித்து கண்டித்து இருக்கலாம்.அடுத்து பெற்றோர் தன் பிள்ளைகளை தெரிந்தும் வாழ்க்கையில் கஸ்ரப்பட விடுவார்களா என்ன அந்த ஆணுக்கு வேலையில்லை உன் வாழ்க்கையை பற்றி சற்று யோசி என சொல்லியிருக்கலாம் அப்போது நீங்கள் சொன்ன ஓர் மோன்கள் விட்டிருக்காது போல :rolleyes: சுயமாக சிந்தித்தல் என்பது காதலிக்கும் போது மறந்து போகிறார்கள் போல :lol:

சமுதாயம்__

...............................சமுதாயம் என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றீர்கள் எனக்கு தெரியாது இருந்தும் சமுதாயம் ஒரு மனிதனால் தனது விருப்பதிற்கேற்றவாறு தன் சூழலை அமைத்துக்கொள்கிறான் அது அவனது நடவடிக்கைக்கு சாதகமாக அமையும் போது அந்த சமுதாயத்தை பாராட்டுவான் அதுவே பாதகமாக அமையும் போது அதை குறை கூறுவான் அந்த சமுதாயம் என்பது அவன் தான்

முனிவர்.. ஒரு 18 வயதுக்கு மேல எல்லோராலயும் ஓரளவுக்காவது சிந்திக்க முடியும். அதுதான் சட்டப்படி திருமண வயதாக ஒரு குறிப்பிட்ட வயதையும் வச்சிருக்கினம். அந்த வயதை அடைந்த பிள்ளைகள் காதலித்தால் அதைக் கண்டிக்க பெற்றோருக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ன அதுவரைக்கும் சோறு போட்டு, உடுப்பு எடுத்து, தங்க இடமும் குடுத்ததால அடிமையா அவையளை வச்சிருக்கல்லாம் எண்டு சொல்லுறியளோ? என்னைப் பொறுத்த வரைக்கும் பெற்றோர் ஆலோசனைகளைத் தாராளமா வழங்கலாமே தவிர, நீ அவனைக் காதலிக்கக் கூடாது, உனக்கு இன்னொரு மாப்பிளை பாத்து நாங்கள் கட்டி வைக்கிறம் எண்டு சொல்லுறது அநியாயம்.

சரி கல்யாணம்தான் தங்கட இஷ்டத்துக்கு கட்டி வைக்கினம் எண்டால், முதலிரவும் அவையளிண்ட இஷ்டப்படிதான் நடக்குது. இங்க கிட்டடியில ஒரு கல்யாணம் நடந்தது. அதில பிரச்சினை வந்திட்டுது. அது ஒரு காதல் கல்யாணம். வெளிநாடு எண்டதால பெற்றோர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியதாப் போச்சுது. இந்தக் காதல் ஊரில நடந்திருந்தால் சோடியளுக்கு வேற வேற கல்யாணம்தான் நடந்திருக்கும். அது எப்பிடியோ.. கல்யாணம் எல்லாம் ஏற்பாடாகி முதலிரவு எங்க எப்பிடி நடத்திறது எண்டதில பிரச்சினை வந்திட்டுது. கடைசியில ஹொட்டலில வச்சவை. நானா இருந்திருந்தால் அதுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் இண்டைக்கு என்ன மாதிரி எண்டு கேட்டிருப்பன். :rolleyes: எங்கட பெற்றோரின்ர மிகப்பெரிய பலவீனமே தங்களுடைய வரம்பு எது எண்டு அறியாமல் இருப்பதுதான்.

இப்ப காதலை விடுவம். ஏ.எல் வரைக்கும் நல்லாப் படிச்சிட்டு யூனியில போய் பெடியன் குழப்பியடிச்சா பெற்றோரால என்ன செய்ய முடியும்? ஒண்டும் செய்ய ஏலாது. ஊராரிட்ட ஓடி ஓடிப் போய் அவனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்கோ எண்டு அழாக்குறையாக் கெஞ்ச வேண்டியான். ஆனால் இதே காதலெண்டால்.. அடேயப்பா, விசுவரூபம் அல்லே எடுக்கினம்?

பெற்றோர் இப்பிடி நடக்கினம் எண்டால் அதுக்கு அவை மட்டும் காரணம் இல்லை. அவன் என்ன சொல்லுவானோ, இவன் என்ன நினைப்பானோ எண்டிற எண்ணம்தான் அவையளை இப்பிடியெல்லாம் நடக்கத் தூண்டுது. நான் சொல்லுற அந்த அவனும் இவனும் எங்கட சமுதாயம் தானே. எங்கட சொந்தக்காரர் ஒருவர் வேற சாதியில கட்டிப்போட்டார் எண்டு அவையளின்ர வீட்டு விசேசத்துக்குப் போக வேண்டாம் எண்டு சொன்னவை. அவைதான் இந்தப் பாழாய்ப்போன சமுதாயம்.

உன்னை திருத்து உலகம் திருந்தும் என்பதை போல நம்மில் பிழையை வைத்துக்கொண்டு சமுதாயத்திலும் பெற்றோரிலும் பிழை சொல்வது அவ்வளவு நன்றாகவா உள்ளது

நீங்கள் சொன்ன பழமொழி மிகச்சரி. ஆனால் ஆனால் அதை பெற்றோருக்குத்தான் பாவிக்க வேணும். பெற்றோர்கள் தாங்கள் சின்ன வயசில என்ன செய்தவையள் எண்டு சர்வ சாதாரணமா மறந்து போயிடுனம். எல்லோரையும் சொல்லவில்லை, ஆனால் பெரும்பான்மையானவர்கள்.. குறிப்பாக அப்பாமார். பிறகு பிள்ளையளுக்கு தாங்கள் ஏதோ பதின்ம வயதில சாமியார் மாதிரி வாழ்ந்த தோரணையில ப்பீலா விடுவினம். முனிவர் நீங்கள் கொஞ்சம் ஆசிரமத்தை விட்டு வெளி உலகத்தையும் காண வேண்டும். வெளியில தெரியிறது எல்லாமே உண்மைகள் அல்ல. :(

ஒர்மோன்கள் பதின்மூன்று வயதிலும் சுரக்கும் அதை கடக்கவில்லையா நாம் :)

முனிவர்.. இரண்டு விதமான சூழ்நிலைகளை உங்களுக்குத் தாறன். யோசிச்சுப் பாருங்கோ.

1) நீங்கள் படிச்சுக்கொண்டிருக்கிறியள். அப்ப உங்களுக்குப் பிடிச்சமாதிரி ஒரு பெண்ணைப் பாக்கிறீங்கள். அவவுக்கும் உங்களை நல்லாப் பிடிக்கிது. அப்ப உங்களுக்கு ஒரு யோசனை குறுக்கிடுது. உங்களுக்கு வருமானம் இல்லை. பெற்றோரின்ர காசிலதான் படிக்கிறியள். உங்களுக்கு தங்கச்சி அக்காமார் இருக்கினம். படிச்சாலும் நல்ல வேலை கிடைக்குமோ தெரியாது. உங்கட காதலியும் வசதியான ஆளில்லை. ஆளும் சினேகா, திரிசா கணக்கில இல்லை. இந்தக் கட்டத்தில என்ன செய்வியள்?

2) நீங்கள் படிச்சுக்கொண்டிருக்கிறியள். அப்ப உங்களுக்குப் பிடிச்சமாதிரி ஒரு பெண்ணைப் பாக்கிறீங்கள். அவவுக்கும் உங்களை நல்லாப் பிடிக்கிது. காசுக்கும் பிரச்சினை இல்லை. அம்மா அப்பா தராட்டிலும் அரசாங்கம் தரும். படிக்காட்டிலும் பரவாயில்லை. வேலை ஏதாவது கிடைக்கும். மிஞ்சினால் அரசாங்கக் காசை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கலாம். இப்ப என்ன செய்வியள்?

உண்மையைச் சொல்ல வேணும். சொல்லீட்டன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Danguvaar Posted நேற்று, 07:32 PM

முனிவர்.. ஒரு 18 வயதுக்கு மேல எல்லோராலயும் ஓரளவுக்காவது சிந்திக்க முடியும். அதுதான் சட்டப்படி திருமண வயதாக ஒரு குறிப்பிட்ட வயதையும் வச்சிருக்கினம். அந்த வயதை அடைந்த பிள்ளைகள் காதலித்தால் அதைக் கண்டிக்க பெற்றோருக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ன அதுவரைக்கும் சோறு போட்டு, உடுப்பு எடுத்து, தங்க இடமும் குடுத்ததால அடிமையா அவையளை வச்சிருக்கல்லாம் எண்டு சொல்லுறியளோ? என்னைப் பொறுத்த வரைக்கும் பெற்றோர் ஆலோசனைகளைத் தாராளமா வழங்கலாமே தவிர, நீ அவனைக் காதலிக்கக் கூடாது, உனக்கு இன்னொரு மாப்பிளை பாத்து நாங்கள் கட்டி வைக்கிறம் எண்டு சொல்லுறது அநியாயம்.

சரி கல்யாணம்தான் தங்கட இஷ்டத்துக்கு கட்டி வைக்கினம் எண்டால், முதலிரவும் அவையளிண்ட இஷ்டப்படிதான் நடக்குது. இங்க கிட்டடியில ஒரு கல்யாணம் நடந்தது. அதில பிரச்சினை வந்திட்டுது. அது ஒரு காதல் கல்யாணம். வெளிநாடு எண்டதால பெற்றோர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியதாப் போச்சுது. இந்தக் காதல் ஊரில நடந்திருந்தால் சோடியளுக்கு வேற வேற கல்யாணம்தான் நடந்திருக்கும். அது எப்பிடியோ.. கல்யாணம் எல்லாம் ஏற்பாடாகி முதலிரவு எங்க எப்பிடி நடத்திறது எண்டதில பிரச்சினை வந்திட்டுது. கடைசியில ஹொட்டலில வச்சவை. நானா இருந்திருந்தால் அதுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் இண்டைக்கு என்ன மாதிரி எண்டு கேட்டிருப்பன். எங்கட பெற்றோரின்ர மிகப்பெரிய பலவீனமே தங்களுடைய வரம்பு எது எண்டு அறியாமல் இருப்பதுதான்.

இப்ப காதலை விடுவம். ஏ.எல் வரைக்கும் நல்லாப் படிச்சிட்டு யூனியில போய் பெடியன் குழப்பியடிச்சா பெற்றோரால என்ன செய்ய முடியும்? ஒண்டும் செய்ய ஏலாது. ஊராரிட்ட ஓடி ஓடிப் போய் அவனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்கோ எண்டு அழாக்குறையாக் கெஞ்ச வேண்டியான். ஆனால் இதே காதலெண்டால்.. அடேயப்பா, விசுவரூபம் அல்லே எடுக்கினம்?

பெற்றோர் இப்பிடி நடக்கினம் எண்டால் அதுக்கு அவை மட்டும் காரணம் இல்லை. அவன் என்ன சொல்லுவானோ, இவன் என்ன நினைப்பானோ எண்டிற எண்ணம்தான் அவையளை இப்பிடியெல்லாம் நடக்கத் தூண்டுது. நான் சொல்லுற அந்த அவனும் இவனும் எங்கட சமுதாயம் தானே. எங்கட சொந்தக்காரர் ஒருவர் வேற சாதியில கட்டிப்போட்டார் எண்டு அவையளின்ர வீட்டு விசேசத்துக்குப் போக வேண்டாம் எண்டு சொன்னவை. அவைதான் இந்தப் பாழாய்ப்போன சமுதாயம்.

QUOTE

உன்னை திருத்து உலகம் திருந்தும் என்பதை போல நம்மில் பிழையை வைத்துக்கொண்டு சமுதாயத்திலும் பெற்றோரிலும் பிழை சொல்வது அவ்வளவு நன்றாகவா உள்ளது

நீங்கள் சொன்ன பழமொழி மிகச்சரி. ஆனால் ஆனால் அதை பெற்றோருக்குத்தான் பாவிக்க வேணும். பெற்றோர்கள் தாங்கள் சின்ன வயசில என்ன செய்தவையள் எண்டு சர்வ சாதாரணமா மறந்து போயிடுனம். எல்லோரையும் சொல்லவில்லை, ஆனால் பெரும்பான்மையானவர்கள்.. குறிப்பாக அப்பாமார். பிறகு பிள்ளையளுக்கு தாங்கள் ஏதோ பதின்ம வயதில சாமியார் மாதிரி வாழ்ந்த தோரணையில ப்பீலா விடுவினம். முனிவர் நீங்கள் கொஞ்சம் ஆசிரமத்தை விட்டு வெளி உலகத்தையும் காண வேண்டும். வெளியில தெரியிறது எல்லாமே உண்மைகள் அல்ல.

QUOTE

ஒர்மோன்கள் பதின்மூன்று வயதிலும் சுரக்கும் அதை கடக்கவில்லையா நாம்

முனிவர்.. இரண்டு விதமான சூழ்நிலைகளை உங்களுக்குத் தாறன். யோசிச்சுப் பாருங்கோ.

1) நீங்கள் படிச்சுக்கொண்டிருக்கிறியள். அப்ப உங்களுக்குப் பிடிச்சமாதிரி ஒரு பெண்ணைப் பாக்கிறீங்கள். அவவுக்கும் உங்களை நல்லாப் பிடிக்கிது. அப்ப உங்களுக்கு ஒரு யோசனை குறுக்கிடுது. உங்களுக்கு வருமானம் இல்லை. பெற்றோரின்ர காசிலதான் படிக்கிறியள். உங்களுக்கு தங்கச்சி அக்காமார் இருக்கினம். படிச்சாலும் நல்ல வேலை கிடைக்குமோ தெரியாது. உங்கட காதலியும் வசதியான ஆளில்லை. ஆளும் சினேகா, திரிசா கணக்கில இல்லை. இந்தக் கட்டத்தில என்ன செய்வியள்?

2) நீங்கள் படிச்சுக்கொண்டிருக்கிறியள். அப்ப உங்களுக்குப் பிடிச்சமாதிரி ஒரு பெண்ணைப் பாக்கிறீங்கள். அவவுக்கும் உங்களை நல்லாப் பிடிக்கிது. காசுக்கும் பிரச்சினை இல்லை. அம்மா அப்பா தராட்டிலும் அரசாங்கம் தரும். படிக்காட்டிலும் பரவாயில்லை. வேலை ஏதாவது கிடைக்கும். மிஞ்சினால் அரசாங்கக் காசை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கலாம். இப்ப என்ன செய்வியள்?

உண்மையைச் சொல்ல வேணும். சொல்லீட்டன்.

டங்கு அந்த பிள்ளைக்கு கல்யாண வயதாகலாம் தன் படிப்பை முடித்திருந்தால் இன்று அந்த நிலமை வந்திருக்குமா.இன்று அவர்கள் திருட்டு கல்யாணம் பண்ணியுருந்தால் கூட அவள் தன்படிப்பை வைத்துகொண்டு ஏதாவது வேலை எடுத்திருக்கலாம்.பெற்றோர்கள

  • கருத்துக்கள உறவுகள்

பணம், பொருள் என்று வசதியாய் இருந்தால் காதலிப்பதில் பிரச்சினையில்லை. அன்றாடம் காய்ச்சிகளுக்கு காதல் கூடாது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பணம், பொருள் என்று வசதியாய் இருந்தால் காதலிப்பதில் பிரச்சினையில்லை. அன்றாடம் காய்ச்சிகளுக்கு காதல் கூடாது. :rolleyes:

அதேன் மனிசருக்கு மட்டும் தான் காதல் என்பது பணம்.. பொருள்.. வசதி.. வாய்ப்பைப் பார்த்து மலருது. மற்ற உயிரினங்களுக்கு.. மரம்.. செடி.. கொடி... கூடின இனமா வாழுறதுகளோடதான் காதல் என்று வருகுதில்லையே..!

என்ன மாயமோ தெரியல்ல.. காதலுக்கும் காசுக்கு வாங்கலாம் என்ற நிலைக்கு வந்திட்டுது..! ^_^:(

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு அந்த பிள்ளைக்கு கல்யாண வயதாகலாம் தன் படிப்பை முடித்திருந்தால் இன்று அந்த நிலமை வந்திருக்குமா.இன்று அவர்கள் திருட்டு கல்யாணம் பண்ணியுருந்தால் கூட அவள் தன்படிப்பை வைத்துகொண்டு ஏதாவது வேலை எடுத்திருக்கலாம்.பெற்றோர்கள
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Danguvaar Posted இன்று, 06:51 PM

முனிவர்..

காதலிக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் சொன்னார்கள், ஆனால் வேறு மாப்பிள்ளை பார்க்க இல்லை. சரி, இதில உள்குத்து என்ன?

1) படிக்கேக்குள்ள காதல் வேண்டாம். பிறகு கட்டித் தாறம்.

இது நடக்கிற காரியமா? காதல் இருக்கத்தானே செய்யும்? இரண்டு பேரும் சந்திக்காமல் வேண்டுமானால் இருக்கலாம். இப்பிடிச் சொல்லியிருந்தால் அவர்கள் ஏன் ஓடிப்போகப் போகிறார்கள்?

2) அவன் சரிப்பட மாட்டான்.

இப்பிடிச் சொல்லியிருந்தால் அவர்கள் தாங்களாகவே திருமணம் செய்வது தவிர வேறென்ன வழி? காசு இருந்தால் பெண்கள் விடுதியில் தங்கி காதலுடன் படிப்பையும் தொடரலாம். அது இல்லாத போது என்ன செய்வது? பெற்றோரே பிள்ளைகளை இக்கட்டில் தள்ளி விடுவது. பிறகு குய்யோ முறையோ எண்டு கத்திறது. இதால நட்டம் எல்லாருக்கும்தான். அதாலதான் சொன்னன் பெற்றோர் நிதானமாக நடக்க வேணும் எண்டு. பிள்ளைகளால் அந்த வயதில் நீக்குப் போக்காக நடக்க முடியாது. அது அவர்களது உடலியல் சம்பந்தப்பட்டது.

18 வயதுக்கு மேல் சரியான முடிவு எடுப்பார்கள் எண்டு நான் சொல்ல வரவில்லை. அவர்களால் ஓரளவுக்கு சிந்திக்க முடியும் எண்டுதான் சொல்லியிருக்கிறேன். 16 வயதில் திருட்டு வேலை செய்பவனுக்கும், அதையே 18 வயதில் செய்பவனுக்கும் சட்டமே வெவ்வேறு தண்டனைகள் வழங்குகின்றது. ஏன்?

ஆண்கள் சேற்றை மிதிப்பார்கள், தண்ணியில் கழுவுவார்கள், ஆனால் பெண்களால் அப்படி இருக்க முடியாது எண்டு எழுதியிருக்கிறீர்கள். அதாவது ஆண் ஊர் மேயலாம். ஆனால் பெண்கள் மட்டும் யோக்கியமாக இருக்க வேண்டும். இது என்னைப் பொறுத்தவரைக்கும் பால் ரீதியிலான பாகுபாடு (Gender Discrimination). இது சரியில்லை. சொல்லீட்டன் ஆமா..!

QUOTE

நான் சொன்ன பழமொழி பெற்றோர்களூக்கு அல்ல அந்த காதலர்களுக்குத்தான் உனக்கு பின்னால் வரும் சந்ததி அது உனது குழந்தையாக கூட இருக்கலாம் நாளை இதே வேலையை செய்யாது என்று உறுதி கூறமுடியுமா இல்லைதானே நீ ஒழுங்காக ஒழுக்கமான முறையில் இருந்தால் நாளை வரும் அச் சந்ததி ஒரு நல்ல சந்தத்தியாக இருக்கும் என்பதில் எந்த ஜயமுமில்லை..

எது ஒழுக்கக் கேடு? காதலித்தால் ஒழுக்கக் கேடா? சுய விருப்பக் கல்யாணம் செய்தால் ஒழுக்கக் கேடா? ஆனால் பெற்றோராப் பார்த்து கட்டிவைத்தால் (ஆட்டில விடுறது) மட்டும் மிக ஒழுக்கமோ?

முனிவர் நான் உங்களுக்கு கேட்ட இரண்டு கேள்விகளின் நோக்கம், பதின்ம வயதில் ஒழுக்கமாக (??) ஆரும் நடந்துகொள்வதன் பின்னணி என்ன என்பதை கோடியிட்டுக் காட்டுவதற்கு. எதிகாலம் குறித்த நிச்சயத்தன்மை இருக்கும்பட்சத்தில் முடிவு ஒருவாறு இருக்கும். அது இல்லாதபோது வேறுமாதிரி இருக்கும். இதுதான் ஊரில் உள்ள இளையவர்கள் பெரும்பாலும் காதல் விவகாரத்தில் தங்கள் மன ஓட்டத்துக்கு எதிராக (செயற்கையாக) நடந்துகொள்வதற்கும் புலம்பெயர் நாடுகளில் தம் மனம் போன போக்கில் நடந்துகொள்வதற்கும் காரணியாக அமைகிறது. ஊரில அடக்க ஒடுக்கமா இருந்த சண்முகவேல் லண்டனுக்கு வந்து ஷண் ஆன உடன பெண் நண்பி பிடிக்கிறது இதனாலதானே..!

என்ன டங்குவார் உள்குத்து வெளிகுத்து பற்றியெல்லாம் பேசுறீங்கள் :(:unsure:

1)படிக்கேக்குள்ள காதல் வேண்டாம். பிறகு கட்டித் தாறம்.

ஏன் நடக்கது தன் பிள்ளையின் சந்தோசத்தை ஏற்பவர்களாயின் அந்த காதலையும் கல் யாணத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் தன் பிள்ளையின் படிப்பு முடியும் வரை பொறுத்திருமகள் என்று கூட சொல்லியிருக்கலாம் அல்லவா ஆனால் இவர்கள் செய்தது என்ன வீட்டை விட்டு சென்றது சந்தேகம் நடக்குமா அல்லது நடக்காதா என்ற சந்தேகம் தான் பெற்ரோரை நம்மவில்லை

2)அவன் சரிப்பட மாட்டான்.

அப்படியும் சொல்லியிருக்கலாம் தங்கள் பிள்ளையின் எதிர்க்காலத்தை கருத்திற்கொண்டு சொல்லியும் இருக்கலாம் எந்த வேலையும் அற்ற ஆண் அவர் எப்படி உன்னை கரைசேர்ப்பான் என்றும் கூட கேட்டிருக்கலாம் அது தான் எல்லா பெற்றோர்கள் கவலையும் கூட தெரிந்தே தன் பிள்ளையை பாழ் கிணற்றில் தள்ள நினைப்பார்களா??

அடுத்து பெற்றோர்களா இவர்களை இக்கட்டான நிலமைக்கு தள்ளிவிடுவது இல்லை இவர்கள் தானே முடிவெடுத்து ஓடிச்சென்றது சென்று விழுந்து நொந்து போவது பேந்து பெற்றோர்களை குற்றம் சாட்டுவது இதனால் நீங்கள்சொன்னது போல எல்லோருக்கும் தான் நஸ்ரம்

பிள்ளைகள் அந்த வயதில் நீக்கு போக்காக நடக்க முடியாது [அப்படி எல்லோரயும் எடுத்துகொள்ள முடியாது]

எத்தனை வயதில் செய்தாலும் திருட்டு திருட்டு தானே டங்குவார் ஆனால் தண்டனைகள் தான் வேறு

ஆண்களை பொறுத்தவரையில் [ஒரு சிலர்] பல பேரை காதலிப்பார்கள் ஆனால் தனக்கு கிட்டியதை கல்யாணம் கட்டி கொண்டு சென்று விடுவார்கள்

ஆனால் பெண்களோ அப்படியில்லை தன் பெயரை அவனுடன் இணைத்து[காதலித்து வேற ஒரு பெண்ணை கல்யாணம் முடித்து சென்றவனுடன்] இணைத்து கதைப்பார்கள் ஆனால் அடுத்து அவளுக்கு கிடைக்கிற புருசன் ஆயிரம் தொந்தரவுகள் கொடுப்பான் இதுக்குத்தான்பெண்கள் எதுக்குமே அவசரப்படகூடாது எதையும் சுயமாகவும் சிந்த்தித்து முடிவெடுக்க வேண்டும்

அப்போ காதல் கல்யாணம் சிறந்தது என்றால் இன்று நீதி மன்றங்களில் அதிக படியான வழக்குகள் இந்த காதல் வழக்குகள் தான் விவாகரத்து பற்றிய விசாரணைகள் :):)

அது சரி அந்த ஷண்முகத்தை கொஞ்சம் காட்டுங்கோவன் உள் குத்து குத்தவேண்டும் :rolleyes:^_^

உண்மையிலேயே பெற்றோர் பிறகு கட்டித்தாறம் எண்டு சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லையாயின் அது அவருடைய மூடத்தனம். அவரால் தெளிவாகச் சிந்திக்கத் தெரிந்திருக்கவில்லை. அதற்கு அவரே முழுப்பொறுப்பு. சிந்திக்கத் தெரியாமல் ஒரு பிள்ளையை வளர்த்தெடுத்த பெற்றோரிலும் தவறு உள்ளது.

2)அவன் சரிப்பட மாட்டான்.

அப்படியும் சொல்லியிருக்கலாம் தங்கள் பிள்ளையின் எதிர்க்காலத்தை கருத்திற்கொண்டு சொல்லியும் இருக்கலாம் எந்த வேலையும் அற்ற ஆண் அவர் எப்படி உன்னை கரைசேர்ப்பான் என்றும் கூட கேட்டிருக்கலாம் அது தான் எல்லா பெற்றோர்கள் கவலையும் கூட தெரிந்தே தன் பிள்ளையை பாழ் கிணற்றில் தள்ள நினைப்பார்களா??

நீங்கள் சொல்லியிருந்தீர்கள் அந்த ஆண் வெளிநாட்டிலிருந்து சென்றவர் என்று. அப்படியென்றால் அவர் வேலையில் இருப்பவர் என்று நினைத்தேன். அவ்வாறு இல்லாவிட்டால், பெற்றோர் ஆலோசனை வழங்குவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் தக்க வயதடைந்த பெண்ணைக் கண்டிக்க உரிமை ஏதும் அவர்களுக்கு இல்லை. அவர் கல்யாணம் செய்ய விரும்பினால் அது அவரது சுதந்திரம். விளைவுகளுக்கும் அவரே பொறுப்பு.

அடுத்து பெற்றோர்களா இவர்களை இக்கட்டான நிலமைக்கு தள்ளிவிடுவது இல்லை இவர்கள் தானே முடிவெடுத்து ஓடிச்சென்றது சென்று விழுந்து நொந்து போவது பேந்து பெற்றோர்களை குற்றம் சாட்டுவது இதனால் நீங்கள்சொன்னது போல எல்லோருக்கும் தான் நஸ்ரம்

பிள்ளைகள் அந்த வயதில் நீக்கு போக்காக நடக்க முடியாது [அப்படி எல்லோரயும் எடுத்துகொள்ள முடியாது]

அவர்கள் தாங்களா எடுக்கும் முடிவுக்கு அவர்களே பொறுப்பு. பெற்றோர் ஆலோசனைகளைத் தாராளமாக வழங்கலாம். பரிவுடனும் பாசத்துடனும் வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர் ஆலோசனைகளைக் கேட்கும் வாய்ப்புகள் மிக அதிகம். காதலைக் கண்டவுடன் பிள்ளைகளைத் துச்சமென மதித்து அவதூறுகளை அள்ளி வீசும் பெற்றோர்கள் மிக அதிகம். இந்த அணுகுமுறை எதிர்வினையையேஏற்படுத்தும்.

எத்தனை வயதில் செய்தாலும் திருட்டு திருட்டு தானே டங்குவார் ஆனால் தண்டனைகள் தான் வேறு

ஏன் தண்டனைகள் மட்டும் வேறு? சிந்திக்கத் தெரிந்தும் தவறிழைக்கிறான் என்பதால்தானே? அதேபோல, சிந்திக்கும் தகைமை இருந்தும் காதல் சோடிகள் சில முடிவுகளை எடுக்கிறார்கள் என்றால் அதன் விளைவுகளுக்கும் அவர்களே முழுப்பொறுப்பு. பிறகு கஷ்டப்பட்டால் யாரும் ஒண்டும் சொல்ல ஏலாது.

ஆண்களை பொறுத்தவரையில் [ஒரு சிலர்] பல பேரை காதலிப்பார்கள் ஆனால் தனக்கு கிட்டியதை கல்யாணம் கட்டி கொண்டு சென்று விடுவார்கள்

ஆனால் பெண்களோ அப்படியில்லை தன் பெயரை அவனுடன் இணைத்து[காதலித்து வேற ஒரு பெண்ணை கல்யாணம் முடித்து சென்றவனுடன்] இணைத்து கதைப்பார்கள் ஆனால் அடுத்து அவளுக்கு கிடைக்கிற புருசன் ஆயிரம் தொந்தரவுகள் கொடுப்பான் இதுக்குத்தான்பெண்கள் எதுக்குமே அவசரப்படகூடாது எதையும் சுயமாகவும் சிந்த்தித்து முடிவெடுக்க வேண்டும்

அது ஏன் ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கும் மற்றொரு நியாயம்? இது சமுதாயத்தின் பார்வையில் உள்ள கோளாறு இல்லையா? அதை உடைத்தெறிவது தானே நல்ல விடயமாக இருக்க முடியும். எமது பார்வையை ஆவது நாம் திருத்திக் கொள்ளலாமே.

அப்போ காதல் கல்யாணம் சிறந்தது என்றால் இன்று நீதி மன்றங்களில் அதிக படியான வழக்குகள் இந்த காதல் வழக்குகள் தான் விவாகரத்து பற்றிய விசாரணைகள் :):)

பெரும்பாலும் காதல் கல்யாணம் செய்தவர்களுக்கு சமுதாய ஆதரவு பெருமளவில் இருப்பதில்லை. எங்க எப்ப பிரிவு வரும் எண்டு எல்லாரும் கண்கொத்திப் பாம்பா பார்த்துக்கொண்டு இருப்பினம். காதலித்துக் கல்யாணம் செய்தவர்களுக்கும் தங்கள் பொறுப்பின் முழுப்பரிமாணம் விளங்குவதில்லை. குறிப்பாக ஆண்கள் சிலர் தங்கள் காதல் மனைவியின் ஆதரவற்ற தன்மையைப் பயன்படுத்தி வேறு சில்மிசங்களில் ஈடுபடுவினம். அந்தக் காதல் முறிய வேண்டியதுதான். பிறகு அந்த ஆண் இன்னொரு துணையத் தேடுவார். புதுப் பெண்ணும் அந்த ஆசாமியின் பழைய பெண்ணினத் துரோகத்தை மறந்து கட்டிக் கொள்வார். இதெல்லாம் பெண்களின் விழிப்புணர்வின்மையால் வருவது. பெண்களை தண்ணீராகவும் ஆண்களைப் பாலாகவும் சித்தரிக்கும் சமூகம் மாறாத வரையில் இவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

அது சரி அந்த ஷண்முகத்தை கொஞ்சம் காட்டுங்கோவன் உள் குத்து குத்தவேண்டும் :rolleyes:^_^

எத்தினை நூறு ஷண் ஐயா.. ஆரையெண்டு காட்டிறது? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.