Jump to content

நெஞ்சில் உள்ள சோகம் ஒன்று .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நெஞ்சில் உள்ள சோகம் ஒன்று ...........

புலம் பெயர் மண்ணில் , ஒரு மாசி மாத நாளிலே . மதியும் கணவனும் இரு பிள்ளைகளும் நெருங்கிய உறவினர் வீட்டுக்கு பயணித்தார்கள். அவர்களுக்கு அன்பளிப்பாக ,ஒரு சிறு உணவுப்பொருளை அருகிலிருந்த கடையில் வாங்கி கொண்டு , பயணத்தை தொடர்ந்தார்கள் . இவர்கள்வயது ஒத்ததா இரு சிறுவர்களும் அவ்வீடில் இருந்தார்கள். கனடாவின் ,பனிப்புயல் ,வீசியடித்து ஓரளவு ஓய்ந்து இருந்த காலம்,இன்னும் சில இடங்களில் இறுகிய கல்லாகவும் சில இடங்களில் வீட்டு தாழ்வார குழாய் மூலம் உருகி சொட்டு சொட்டாக ... வடிந்து கொண்டு இருந்தது .இவர்கள் அவ்வீட்டை அண்மித்ததும் ,சிறுவர்கள் இருவரும் இறங்கி ஓடி விட்டனர், மதியும் கணவனும் காரை விட்டு இறங்கி , ஒரு அடி எடுத்து வைத்தவள் , கதவு இறுக சரியாக பூட்ட பட்டதா என் மீண்டும் பார்த்தவள் ,கதவை நோக்கி சென்று உறுதி படுத்தியபின் ,இரண்டு அடி வைத்து இருப்பாள் வாயில் படியை நோக்கி "அம்மா" என்ற சத்தம் கேட்டு கணவன் திரும்பி பார்த்தான் . மதி வழுக்கி விழுந்து விடாள்.

, ஒரு முழங்கால் மடக்கியபடி , விழுவதை தவிர்க்க , முழங் கால் ஊன்றி இருக்கிறாள் , எழும்ப முடியவில்லை , ஒருவாறு தூக்கி வீடினுள் செல்ல முயற்சிக்கையில் ,முடியாமல் போகவே ,மீண்டும் காரினுள் இருத்தி ,வைத்திய சாலைக்கு பயணித்தார்கள்.

அங்கு ,அவசர சிகிச்சை பிரிவில் உடனடியாக வா பார்ப்பார்கள் குறைந்தது ...இரு மணி நேரம் செல்லும், நோய்காவி வண்டியில் சென்று இருந்தால் ஒருவேளை உடன் பார்ப்பார்கள். காத்திருப்பு நேரம் செல்ல செல்ல வீங்க தொடங்கிவிட்டது.

கதிவீச்சு படம் எடுத்தபோது ,முழங்கால் சில்லு நொறுங்கி விட்டதாகவும் , அங்கு கட்டில்வசதியில்லை என்று மாவு கட்டு (..Plaster of paris....) போட்டு விடார்கள். மறு நாள் சத்திர சிகிச்சை ,செய்ய வரும்படி . நேரம் மணியாக இரவு விடிந்து ,அதிகாலை எழு மணிக்கு வைத்திய சாலை சென்றார்கள். அங்கு சென்றதும் உதவி ,சிகிச்சை யாளர் , ஏன் இங்கு வந்தீர்கள். கட்டில் இல்லை, இடமில்லை என்று அல்லவா சொன்னோம் .... என்று காலை அருச்சனை கிடைத்தது. ஒருவாறு அவர்களுக்கு சற்று பழக்கமான தாதி ஒருத்தி மேலிடத்தில் கதைத்து , அவர்களை காத்திருக்க சொன்னாள் , மதியம் இரண்டு மணியாகியது. ஒருவாறு ,சிகிச்சை ஆரம்பமானது. சத்திர சிகிச்சை என்பதால் வெறும் வயிறு ,வேறு , தா .... உணவு ,என்று கேட்டு கொண்டிருந்தது. ஒருவாறு சத்திர சிகிச்சை முடிய மாலை ஐந்து மணி அவள் கண்திறந்து பார்த்தபோது. .........

தொடர்கிறது ஏழரை ,............ஒரு மாதம் இருக்கும் மீண்டும் ........தையல் அவிழ்ப்பு........நாடகம் அரங்கேற்ரம் . கிட்ட தட்ட முப்பத்தியிரண்டு கிளிப் ( staple கிளிப் ) போன்ற ஒரு வகை . அதை விறைப்பு இல்லாமல் ,எடுப்பார்கள் . வேதனை உயிர் போய் வரும் . ........

..இதோடு விட்டதா சனி இல்லவே இல்லை . ...............மீண்டும் மறுபடி ,அது ஏற்பு ஆக்கி ,.............இவ்வாறாக அவளுக்கு ஐந்து தடவை , .........சத்திர சிகிச்சை , ...........அதே இடத்தில் ...அதே வைத்தியசாலை........... அவளுக்கு மாமியார் வீடு போல ,

ஒரு தடவை அவளுக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக பேசிக்கொண்டார்கள். . அதனால் தான் புண் மாற வில்லை என்று.வைத்திய சாலையில் ஒருவாரம் . பின் வீடில் , குழாய் மூல மருந்து ஏற்றல் ,விசேட தாதி மூலம். வீடு வைத்திய சாலை ஆனது .

ஒருவருட வாழ்கை கட்டிலிலே ..கழிந்து ஒரு வாறு ........தலை நிமிர்ந்தாள்.இப்படியான் நிலை என் எதிரிக்கு கூட வர கூடாது . நோயின் வலியை விட , குளிப்பது, காலைக்கடனுக்கு எழுந்து செல்வது , இருக்க.... எழும்ப ....பட்ட துயர் எழுத வேறு புத்தகமே வேணும் .

சோதனை மேல் மேல் சோதனை ..........உனக்கும் கீழே உள்ளவர் கோடி ..நினைத்து பார்த்து நிம்மதி நாடு ..........

.காலம் பனிக்காலம் ......கண்ணின் மணிகளே கவனம் .

கதை நிஜம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறிவுரையோடு வந்த கதை அழகு.

மறு நாள் சத்திர சிகிச்சை ,செய்ய வரும்படி . நேரம் மணியாக இரவு விடிந்து ,அதிகாலை எழு மணிக்கு வைத்திய சாலை சென்றார்கள். அங்கு சென்றதும் உதவி ,சிகிச்சை யாளர் , ஏன் இங்கு வந்தீர்கள். கட்டில் இல்லை, இடமில்லை என்று அல்லவா சொன்னோம் .... என்று காலை அருச்சனை கிடைத்தது.

வெளிநாட்டில் கூட இப்படி சொல்லக்கேட்பது வேதனையான விசயம்தான்.

மூட்டுகளில் கைவைத்தால் இப்படித்தான் அதே இடத்தை பலதடவைகள் கத்தி வைக்கும் நிலை சற்று அதிகமாகவே இருக்கிறது.

Posted

கனடாவில் வைத்தியசாலைக்கு அவசரபிரிவுக்கு போனால் 10மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்கனும் வைத்தியரை பார்ப்பதற்க்கு :wub:

Posted

அட கடவுளே! கனடாவில் இப்படியா நிலமை? யேர்மனி வாழ்க!! :wub:

Posted

கனடாவில் வைத்தியசாலைக்கு அவசரபிரிவுக்கு போனால் 10மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்கனும் வைத்தியரை பார்ப்பதற்க்கு :wub:

கனடாவில் என்று பொதுவாக அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கி சொல்லமுடியாது. சில மாநிலங்களில் அதி குறைவான (ஒப்பீட்டளவில்) நேரத்தில் வைத்தியர்களை அணுகக்கூடியவாறு உள்ளது. மற்றும் ஒன்ராரியோ மாநிலத்தின் ரொறன்ரோ பகுதியில் தற்சமயம் காத்திருக்கும் நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பு குறைந்தது 6 மணித்தியாலத்திற்கு மேலாக இருந்த நேரம் தற்போது ரொறன்ரோவின் சில பகுதிகளில் 30 நிமிடம் என்னும் அளவிற்குக் குறைந்துள்ளது. ரொறன்ரோ நகரின் மத்திய பகுதியில் அவசர சிகிச்சைப் பகுதியில் அண்மையில் 20 நிமிடங்களில் வைத்தியரை அணுகக்கூடியவாறு உள்ளது.

Posted

பகிர்வுக்கு நன்றி அக்கா.

Posted

கனடாவில் வைத்தியசாலைக்கு அவசரபிரிவுக்கு போனால் 10மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்கனும் வைத்தியரை பார்ப்பதற்க்கு :icon_mrgreen:

அது உங்கள் நோயின் தீவரத்தைப் பொறுத்திருக்கிறது. பலர் சும்மா வயிற்றுவலிக்குக்கூட அவசரப்பிரிவுக்குத்தான் ஓடுவார்கள். அப்படியானவர்களுக்குத்தான் இவ்வாறான நெடுநேரக் காத்திருப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிஜத்தை கதையாக தந்த நிலாமதிக்கு நன்றிகள்

Posted

அது உங்கள் நோயின் தீவரத்தைப் பொறுத்திருக்கிறது. பலர் சும்மா வயிற்றுவலிக்குக்கூட அவசரப்பிரிவுக்குத்தான் ஓடுவார்கள். அப்படியானவர்களுக்குத்தான் இவ்வாறான நெடுநேரக் காத்திருப்பு.

கனடாவில் எப்படியோ தெரியாது.. யேர்மனி பிறேமனில்.. அவசர வைத்தியத்துக்கு என தனியான வைத்தியசாலை உள்ளது. பிரதம வைத்தியர்கள் சிலரைத் தவிர.. தனிப்பட தொழில் புரியும் வைத்தியர்கள் சுழற்சிமுறையில் கடமையாற்றுகிறார்கள்.. எனவே அவர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும்பொருட்டு சிறந்த மருத்துவ வசதிகளை துரிதமாக அளிக்கிறார்கள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தகவல்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி, பல புதிய தகவல்கள் தான்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெஞ்சில் உள்ள சோகம் ஒன்று ...........

அங்கு ,அவசர சிகிச்சை பிரிவில் உடனடியாக வா பார்ப்பார்கள் குறைந்தது ...இரு மணி நேரம் செல்லும், நோய்காவி வண்டியில் சென்று இருந்தால் ஒருவேளை உடன் பார்ப்பார்கள். காத்திருப்பு நேரம் செல்ல செல்ல வீங்க தொடங்கிவிட்டது.

மனித உயிர்கள்கள் மீதான பரிவென்பது உலகில் குறைவடைந்து வருவதையே, சில சம்பவங்கள் சுட்டி நிற்கின்றது.................... இது எனது சொந்த அனுபவமொன்று, அன்று ஒரு வேலைநாளொன்று. மிகவும் பரபரப்பான வாழ்க்கைக்குள் லண்டன் நகரம். நான் எனது உறவினர் ஒருவரின் வீட்டில் நின்று கொண்டிருக்கின்றேன். திடீனெரத் தொம் என்றொரு சத்தம், தொடர்ந்து அம்மா ! என்ற ஒரு அவலக் குரல். ஓடிச் சென்று வெளியிலே பார்த்தபோது, வீட்டின் வாகனத் தரிப்பிடத்தின் மேற் சுவர் இடிந்து விழுந்து வேதனையோடு…….. உடன் அவசர சேவைப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கிறோம். பல்வேறு கேள்விகள். பின் அனுப்புகிறோம் உதவிப் பிரிவை என்றனர். ஆனால் நிமிடங்கள் மணித்தியாலமாகியது. காணவில்லை. மீண்டும் அழைக்கிறோம் ஒரு மணி நேரத்தின் பின். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்தே வந்தனர் வந்தவர்கள் வழங்கிய மருத்துவ உதவியின் வேகம் இன்னும் மோசமானது

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.