Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் வாசித்த, வாசிக்கும் புத்தகங்களும் நாவல்களும்: நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அ.முத்துலிங்கம் கதைகள்: http://noolaham.net/project/01/46/46.pdf

அக்கா: http://www.noolaham.net/project/13/1210/1210.pdf

அங்க இப்ப என்ன நேரம்: http://noolaham.net/project/01/47/47.pdf

திகட சக்கரம்: http://noolaham.net/project/01/85/85.pdf

மகாராஜாவின் ரயில்வண்டி: http://noolaham.net/project/02/132/132.pdf

வடக்குவீதி: http://noolaham.net/project/01/87/87.htm

வம்சவிருத்தி: http://noolaham.net/project/01/86/86.pdf

இணைப்பிற்கு நன்றி நூணாவிலான்

  • Replies 54
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி தொடர்ந்து எழுதுங்கள் இன்றுதான் இந்தத் திரியைப் பார்த்தேன் மிகவும் பயனுள்ள இணைப்பு.

யாழ் நூலகத்தில் நேரம் போவது தெரியாமல் வாசித்துக் கொண்டிருப்பேன். திடீரென்று சுதாரித்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தால் ரியுசனுக்கு நேரம் போய் விட்டிருக்கும். படக்காட்சி துடங்கிற நேரமாய் இருக்கம் பிறகென்ன படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போய் நல்ல பிள்ளை மாதிரி(குற்ற உணர்வு நெங்சை உறுத்தும்) இருக்க வேண்டியது.நான் கொஞ்சமாவது தமிழறிவு பெற்றதற்கு யாழ் நூலகமும் பிரதான பங்கிருக்கிறது.மற்றது என் அப்பா பள்ளிப் படிப்பு குறைவாயினும் சகல தமிழ்ப் பாடல்கள் (சினிமா பாடல்கள் அல்ல) கதைகள் எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.அவர் ஒரு நடமாடும் நூலகம்.அது ஒரு கனாக்காலம்.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் நூல் பகிர்வுப் பக்கத்தில் ஏதாவது எழுத வேண்டுமென்று நெடுநாள் முயற்சி. இப்போது வேலை ஓடாமல் கணணி முன் குந்தியிருக்கிற நேரத்தில் இது தான் பிரயோசனமான வேலையாகப் படுகுது.

புத்தகம்: The Shack (குடிசை அல்லது மரக் குடில் என்று தமிழில் சொல்லலாம்)

எழுதியவர்: வில்லியம் போல் யங் (2007)

கரு: நாவல், ஆன்மீகம்.

இந்த நாவலைப் படித்து முடிக்கும் எவருக்கும் எழும் முதல் கேள்வி இது உண்மையாக நடந்த கதையா அல்லது முழுக் கற்பனையா என்பது தான். நாவலாசிரியர் இது கற்பனை தான் ஆனால் சில சம்பவங்கள் மனிதர்கள் (அனேகமாக எல்லா நாவல்களிலும் வருவது போல) நிஜம் என்கிறார். ஒரு துன்பத்திலிருக்கும் மனிதன் கடவுளை ஒரு மரக்குடிலில் கண்டு ஒரு வார இறுதியை அவருடன் கழிப்பது தான் கதையின் கரு. 250 பக்கங்களில் நீளும் இந்த உரையாடல்கள் நடுவில் ஆழமான கிறிஸ்தவ இறையியல் கருத்துக்களைத் தொட்டுச் சென்றாலும், பெரும் பாலான பகுதிகள் சாதாரணமாக நானும் நீங்களும் கடவுளை நேரில் கண்டால் கேட்கக் காத்திருக்கும் கேள்விகளால் நிறைந்திருக்கின்றன. முள்ளிவாய்க்கால் அவலத்தைக் கண்டும் கடவுள் வாளாவிருந்தார் என்ற கோபத்திலும் தளர்விலும் என் தெய்வ நம்பிக்கை இருந்த நேரத்தில் இந்த நாவல் எனக்கு அறிமுகமானது. சில தெளிவுகளும் மேலும் சில கேள்விகளும் உருவாக இந்த வாசிப்பு உதவியது. கற்பனையான ஒரு புத்தகம் ஏன் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் (மில்லியன் கணக்கில் விற்கப் பட்டிருக்கிறது இந்த நாவல் இது வரை) என யோசிக்கும் போது சில விடயங்கள் தெளிவாகின்றன:

1. நாவலில் சம்பவங்களைக் கடந்து பலமான செய்தியொன்று தரப் பட்டிருக்கிறது. இந்த செய்தியின் முக்கியத்துவம் அது பின்னப் பட்டிருக்கும் சம்பவக் கோர்வையின் உண்மைத் தன்மையைப் பற்றிய சந்தேகங்களை பின் தள்ளி விடுகிறது.

2. எல்லாரும் கற்பனை பண்ணி வைத்திருக்கும் கடவுளின் உருவத் தோற்றத்தை மாற்றியமைக்கிற மாதிரி கடவுளை சித்திரித்திருக்கிறார் போல் யங். தண்டிக்கும் கடவுள், தியானத்திலிருக்கும் கடவுள், தனி மனித வாழ்வுக்குள் தலை போடாமல் எட்ட நிற்கும் கடவுள் என்ற கோட்பாடுகள் எல்லாம் சிதைக்கப் பட்டிருக்கின்றன நாவலில்.

3.கதை சொல்லும் பாத்திரமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் போல் யங் இந்தத் துன்பம் சார்ந்த கதையிலும் நகைச்சுவையை இடையிடையே ஓட விட்டிருக்கிறார். மிக எளிமையான மொழி நடை, "பப்" இல் (அல்லது எங்கள் ஊர் கள்ளுத் தவறணையில்) பக்கத்திலிருந்து ஒருவர் கதை சொல்வதான உணர்வைத் தருகிறது.

இறுதியாக, நாவலாசிரியர் போல் யங் பற்றிய சில தகவல்கள்:

இது அவரது முதல் நாவல். இதைக் கூட நாவலாக இல்லாமல் தன் குழந்தைகளுக்கு மட்டும் சொல்ல நினைத்த ஒரு தனிப்பட்ட டயரியாக எழுதியிருக்கிறார். எப்படியோ அது நண்பர்களுக்குத் தெரிய வர, ஒரு அருமையான ஆன்மீக நாவல் பல மொழிகளிலும் இப்போது உலாவருகிறது. கிறிஸ்தவ மிஷனரிகளாக இருந்த பெற்றோருக்குப் பிறந்த யங், நாடோடியாக பல காலம் அலைந்து திரிந்த பின்னர் இப்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு வசிக்கிறார். ஒரு நாவல் கொஞ்சம் விற்றாலே லொஸ் ஏஞ்சல்சுக்கு குடி பெயரும் சாதாரண எழுத்தாளர்கள் மத்தியில் வித்தியாசமானவராக இன்னும் தன் பழைய வாடகை வீட்டிலேயே குடியிருக்கிறார் போல் யங்.

(கடவுள் நம்பிக்கை இல்லாத நிழலியின் திரியில் ஆன்மீகம் பற்றி எழுதிய முதல் துணிவாளனாக விடை பெறுகிறேன்!).

  • கருத்துக்கள உறவுகள்

நீராவியடியில் செங்கைஆழியான் என நினைகின்றேன் அவர் தனது வீட்டில் ஒரு நூலகம் வைத்திருந்தார். ஏராளமான புத்தகங்கள் அங்கு இருந்தன. நானும் போகும் இடமெல்லாம் புத்தகங்கள் வாங்குவதுதான் முதல் வேலை. ஒரு வருடாமாய் வாசித்தலையே விட்டாச்சுது. அப்பப்ப யாழுக்கு வந்து பலதும் பத்தும் வாசிப்பது ஒரு ஆறுதல்.

பாலகுமாரனின் புத்தகங்களும் "கொஞ்சம் கவர்சி இருக்கும்தான், தவிர்த்துப் பார்த்தால்" நிறைய நல்ல விடயங்கள் இருக்கும்.

இப்போது இடைக்கிடை தெய்வத்தின் குரல், ஸ்ரீ மந் நாராயணீயம் மட்டும் படிப்பது.

இது நல்லதொரு பக்கம். தொடருங்கள் நிழலி, வாழ்த்துக்கள்! :lol:

  • 1 year later...
  • தொடங்கியவர்

இந்த திரியை தொடராமல் விட்ட பின்னான இடைக் காலத்தில் கிட்டத்தட்ட 75 புத்தகங்களாவது வாசித்து இருப்பேன். ரொரன்டோ நூல் நிலையங்களின் உதவியுடன் பல வேறுபட்ட களங்களை பின்னணியாக கொண்ட நாவல்களை / பதிவுகளை வாசித்து இருப்பினும், என்னால் மிகவும் விரும்பப்பட்ட நாவல்கள் இரண்டை பகிர விரும்பி மீண்டும் இந்த பழைய திரியை தூசு தட்டுகின்றேன்

கடந்த சில வாரங்களாக மிக மெதுவாக ஒவ்வொரு வாக்கியத்தையும், வசனத்தையும் உள்வாங்கி வாசித்து பெருமளவு திருப்தி அடைந்த ஒரு நாவல் என்றால். அது 'ஆழி சூழ் உலகு' என்ற ஜே.டி. குரூஸ் இனால் எழுதப் பட்ட நாவல் தான்.

ஆழி சூழ் உலகு;

எழுதியவர்: ஜோ.டி. குருஸ்

மீனவர்களின் வாழ்க்கை, பரதவர்களின் (மீனவர்களின்) வாழ்க்கை முறையில் இருக்கும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சமூகச் சீர்கேடுகள், ஆண் பெண் உறவு, ஏனைய சாதிகளுடனான சண்டை மற்றும் ஒட்டுதல்கள்....என்று எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை அப்படியே உள்ளது உள்ள மாதிரி, பல கதாப்பாத்திரங்களுடன் சொல்ல முனையும் அற்புத நாவல்

 

--------------------------

 

1933 இல் இருந்து 1985 வரை தமிழக மீனவக் கிராமமான ஆமந்துறையில் வாழ்ந்த ஒரு சந்ததியின் வாழ்க்கையை நாவலாக எழுத முயன்று அதன் மூலம் ஒரு வரலாற்றை முன் நிறுத்தும் முயற்சியில் நாவலாசிரியர் ஈடுபடுகின்றார். அவரது பார்வையில் எதுவும் தப்பவில்லை. ஒரு சமூகம் என்ற அளவில், இருக்கும் அனைத்து பலம் பலகீனம், அன்பு, காதல், தியாகம் நிறைந்த நட்பு, துரோகிக்கும் சினேகிதம், சித்தியே மகனை படுக்கைக்கு இழுத்து ஆட்படுத்தும் சுயநல காமம், ஒரு கணம் மேலிடும் காமத்தால், ஒரு ஊமையின் மனைவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொன்ற பின் அவளது மகனை தன் பிள்ளைகளிலும் மேலாக வளர்த்து, அவனுக்காகவே உயிர் விடும் மனிதம்....அத்துடன் மிக முக்கியமாக....

 

இந்தியா சுதந்திரமடையும் முன் மற்றும் சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலங்களில் இலங்கை (கொழும்பு)க்கும் தமிழக மீனவர்களும் இடையில் இருந்த நெருங்கிய தொடர்பு, யாழ்ப்பாணத்தவர்கள் தமிழக வியாபாரிகள் மீது வைத்து இருந்த பொறாமையும் அதனால் ஏற்பட்ட கொலைகளும், இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள் எப்படியான பாதிப்பை தமிழக மீனவ (பரதவர்) சமூகத்தில் ஏற்படுத்தியது போன்ற விடயங்களும் நாவலின் கதாப்பாத்திரங்களினுடாக சொல்லப்படுகின்றன

 

தலித்துகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியமை, அதன் பின் வந்த கிறிஸ்தவ பாதிரியார்களின் தியாகமும் பின், அதே வழி வந்த பாதிரிகளின் கேவல வாழ்க்கை முறையும், அரசியல் வாதிகளுக்கு நிகராக கிற்ஸ்தவ பாதிரிமார் செய்யும் கூத்தும், அவற்றை உணர்ந்தும் தமக்கிடையான ஒற்றுமையின்மையால் எதையும் தட்டிக் கேட்க வலுவின்றி இருக்கும் அறிவீனமான மீனவர் சமூகமும், பின் திறந்த பொருளாதாரத்தால் சர்வதேச சந்தையில் கடலுணவுக்கு ஏற்படும் கிராக்கியால் வரும் பொருளாதார மாற்றமும் என.....பல நூறு தளங்களில் விரிந்து நாவல் செல்லுகின்றது....

 

ஒரு சமூகம் பற்றி எந்த வித சமரசமும் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு நல்ல படைப்பு

**************************************

எப்பவும் பரதவர் வாழ்க்கை அதிகார வெறியில் இருப்பவர்களின் கையில் சிக்கியே இருக்கின்றது. எல்லாராலும் கைவிடப்பட்ட சமூகமாகவே அவர்கள் அன்றும் இன்றும் வாழ்கின்றனர் எம் மண்ணில். எவர் எவர் ஆட்சியை தம் பக்கம் வைத்து இருக்க ஆசைப்படுகின்றனரோ அவர்கள் பரதவர்களை மனிதர்களாக மதிப்பது இல்லை. அணுகுவதற்கு மிகக் கடினமான ஒரு சமூகமாக தம்மை வெளி உலகுக்கு காட்டும் இவர்கள், உண்மையில் எல்லா அதிகார சக்திகளாலும் பந்தாடப்படும் ஒரு பாவப்பட்ட சமூகம்

----------------------------------------------------------------------------------------------------------

ஒரு மாலையில், வழக்கம் போல

நானும் நண்பர்களுமாக பாசையூர் கடற்கரையில் நிற்கின்றோம். பாசையூர் புனித அந்தோணியாருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி விட்டு நண்பன் செமியோன் எம்முடன் இணைகின்றான்

உப்புக் காற்றும், உவர்க்கும் சுவையும் என அலாதியான அனுபவங்களுடன் இருக்கும் போது, தெருவில் பலர் ஒரே திசை நோக்கி ஓடினர்

இலங்கை நேவி, 30 இற்கும் மேற்பட்ட பாசையூர்/ குருநகர் மீனவர்களை மண்டை தீவில் வைத்து வெட்டியும் சுட்டும் கொன்று போட்டனர் என்றும், ஈபிஆர் எல் எப் அவர்களின் உடலைக் கொண்டு வந்து குருநகர் தேவாலயம் அருகில் போட்டுள்ளது என்றும் கூறினர்.

செமியோன் வீரிட்டு அழுதான்

நாமும் ஓடிச் சென்று பார்த்தோம். செமியோனின் அப்பாவின் உடலில் கைகளிலும், கால்களிலும் வெட்டப்பட்டு இருந்தது, அவரின் குஞ்சாமணி இருக்கும் இடத்தில் வெறும் இரத்த நாடிகளின் குவியலை போன்ற ஒன்று இருந்தது

-----------------

மீண்டும் அதே கடற்கரையில் 2004 இல் நிற்கும் போதும், செமியோனின் நினைவும் மனதில் வந்து போகின

 

பி.கு

செமியோன் பின் துரோகி என புலிகளால் றக்கா வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தான்

----------------------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.