Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிந்த தாக்குதலைத் தொடங்குவதற்கு உரிய நேரத்துக்காகக் காத்திருக்கிறோம் - புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும்.

அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிபந்தனையை நிராகரிக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் அதாவது ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட்டு விட்டு சரணடைய வேண்டுமென்று கோரி வரும் நிலையில் பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியம் அல்ல.

போரில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்ட போதும் இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்காகும். எமது தற்காப்புத் தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதி இலங்கையின் பொருளாதாரத்தை நிர்மூலப்படுத்துவதும் ஆகும். பொருளாதாரம் நிர்மூலமாக்கப்படும் போதுதான் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் இனப்படுகொலையும் பலவீனப்படுத்தப்படும்.

கிளிநொச்சி போர்க்களத்தில் படையினருக்கு நாங்கள் பாடம் கற்பிப்போம். எமது வலிந்த தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு உரிய நேரம், இடத்துக்காகக் காத்திருக்கிறோம். 2008ஆம் ஆண்டில் 2,250 போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் எமக்கு எதுவித சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் எமக்கு எதுவித சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

அது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் எமக்கு எதுவித சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

அது

மேற்கண்ட சொல்லாடலைப்பார்க்கும்போது 'தமிழ்ச்செல்வன் அண்ணா சொன்னது நினைவுக்கு வருது.

அவை கடனுக்கு ஆயுதம் வாங்கட்டும் நாங்கள் அவையிற்றை இருந்து எடுத்துக்கொள்ளுவம் 'என்று அதையும் சிரிச்ச முகத்தோடவே சொன்னார். இதைப்படிக்கும் போது அந்தப்புன்னகை முகத்தின் வரிகள் கண்ணில் நீரை வார்க்கின்றன.

அந்த புன்னகை மன்னனை யார் தான் மறப்பினம் அக்கா

நான் கூட எத்தைனையே நாள் எனக்குள்ள அழுது இருக்கிறேன் அவரை நினைச்சு..முந்தி அவரது படத்தை என்ர ரோம்மில மாட்டி வச்சு இருந்தேன் .. பிறக்கு அந்த படத்தை சாமி ரோமில கொன்டு போய் வச்சுடென்.. படத்தை பாக்க என்ர மனசு தாங்கள..

IMG5139-1230062407.jpg

http://www.imeem.com/people/Xu2z-Hn/music/...S/kaviyamaimp3/

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் அழவைச்சிட்டீங்களே தம்பி,

தாங்கவே முடியாத பேரிழப்பு இது! "பொது இடங்களில் ஓரளவு அழுகையைக் கட்டுப்படுத்திக்கொள்ளுவேன் ஆனால் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் நினைவுநாளின் போதுமட்டும் என்னையும் மீறி அழுகை வந்துவிடும்.

இறை தந்த வரங்கள் எம் மண்ணுக்கான உரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகநாடுகளின் ஆதரவுகள் எங்கள் எதிரிக்கு இருக்கும்வரை எங்களது ஆயுதவளத்திற்கும் குறைவிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அழவைச்சிட்டீங்களே தம்பி,

தாங்கவே முடியாத பேரிழப்பு இது! "பொது இடங்களில் ஓரளவு அழுகையைக் கட்டுப்படுத்திக்கொள்ளுவேன் ஆனால் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் நினைவுநாளின் போதுமட்டும் என்னையும் மீறி அழுகை வந்துவிடும்.

இறை தந்த வரங்கள் எம் மண்ணுக்கான உரங்கள்.

உண்மை தான் அக்கா..

நவம்வர் 2ம் :unsure: திகதி தமிழ் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாள் அது...

போரில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்ட போதும் இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்காகும். எமது தற்காப்புத் தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதி இலங்கையின் பொருளாதாரத்தை நிர்மூலப்படுத்துவதும் ஆகும். பொருளாதாரம் நிர்மூலமாக்கப்படும் போதுதான் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் இனப்படுகொலையும் பலவீனப்படுத்தப்படும்.

தாயகத்து தமிழ் மக்களுக்காக (AFP) செய்தி சேவைக்கு அரசியல் துறை பொறுப்பாளர் சொன்னதை எங்கள பன்னாடை ஊடகங்கள் வெளியிட்டு முக்கிய புலநாய்வு தகவலை எதிரிக்கு வளங்குதுகள்... - இப்பிடி ஒருத்தர் வழமையாக அங்கலாப்பாரே ஆள் எங்கை..??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்காகும். எமது தற்காப்புத் தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதி இலங்கையின் பொருளாதாரத்தை நிர்மூலப்படுத்துவதும் ஆகும். பொருளாதாரம் நிர்மூலமாக்கப்படும் போதுதான் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் இனப்படுகொலையும் பலவீனப்படுத்தப்படும்.

ஆனால் புலம்பெயர் எம்மவரின் செயற்பாடுகள் சிங்களத்தின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதாகவல்லவா உள்ளது.

எங்களுக்கு போரட்டத்தை காட்டிலும் லக்ஸ் சோப்பும், மலிபன் பிஸ்கற்றும், ஆனை மார்க் சோடாவும், சிலோன் விளை மீனும், .... தானே முக்கியம்?

சரி இந்த நுகர்வுப் பொருட்கள் மாத்திரம் தானா? கொழும்பில் புலம் பெயர்ந்தோரின் முதலீடுகள் எத்தனை கோடிகள்?

உண்மையில் நாம் சுதந்திரம் வேண்டி நின்றால், எம்மிடையே அனைத்து விடயங்களிலும் புரட்சி உருவாவதென்பது மிக மிக அவசியம்.

இதனை சொல்லும் நான் கூட சில வேளைகளில் மலிபன் பிஸ்கற் வாங்குவதுண்டு. இன்றிலிருந்து அதையும் தவிர்க்க போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை சொல்லும் நான் கூட சில வேளைகளில் மலிபன் பிஸ்கற் வாங்குவதுண்டு. இன்றிலிருந்து அதையும் தவிர்க்க போகிறேன்.

நான் எப்போதோ நிற்பாட்டிவிட்டேன்

கொழும்பில் புலம் பெயர்ந்தோரின் முதலீடுகள் எத்தனை கோடிகள்?

83ல புறக்கோட்டை வர்த்தகத்துக்கு நடந்த கெதிதான் தற்போதைய கொழும்பு முதலீடுகளுக்கும் விரைவில்.. :(

***

அந்த புன்னகை மன்னனை யார் தான் மறப்பினம் அக்கா

நான் கூட எத்தைனையே நாள் எனக்குள்ள அழுது இருக்கிறேன் அவரை நினைச்சு..முந்தி அவரது படத்தை என்ர ரோம்மில மாட்டி வச்சு இருந்தேன் .. பிறக்கு அந்த படத்தை சாமி ரோமில கொன்டு போய் வச்சுடென்.. படத்தை பாக்க என்ர மனசு தாங்கள..

தயவுசெய்து தமிழ்ச்செல்வனின் அண்ணாவின் இழப்பை திரும்பவும் நினைவுட்டி பலரையும் கண்கலங்க வைக்காதீர்கள் ....... கண்கலங்கினாலும் மறுநிமிடமே உறுதி கொள்ள வைக்கக்கூடிய அவரது நட்பு பழகியவர்களிற்கே புரியும்......

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

நிச்சயமாக தோழர்களே..

தமிழ்ச்செல்வன் அண்ணாவை விட வேறொரு இனிமையான ஒரு அண்ணாவுடன் பழகமுடியாது..

ஒரு சின்ன நிகழ்வு.

இந்தியபடைகள் போனபின் தலைவர் காட்டிக்கொடுத்த இயக்கத்தினரை புலிகள் தேடிப்பிடித்த காலம்.. எங்கள் வீட்டுப்பின்புற காட்டு முகாமிலிருந்து புலிகளுக்கெதிராக இந்தியராணுவத்தோடு செயற்பட்ட இயக்கத்தினர் வேறுவழியில்லாமல் ஆயுதங்கயுடன் மக்களிடம் வந்து சரணடைந்தநேரம.; தினேஸ் (தமிழ்ச்செல்வன் அண்ணா) வந்திருந்தார் கனரக ஆயுதந்தாங்கிய புலிவீரர்கயுடன் அவர்களைப்பிடித்துச்செல்ல.. அங்கு குழுமியிருந்த மக்கள் பெடியளுக்கு அடிக்காதேயுங்கோ தம்பி என்று ஒரு பெரியவர் கேட்டதை மதித்து அவர்களை மிகவும் நல்லமாதிரியாக அழைத்துச்சென்று அதே நாள் ஒருசில மணிநேரங்களில் விடுவித்துவிட்டார்... புலிகளைக்கண்டவுடன் பயத்திலிருந்து மாற்று இயக்கத்தவரை சாப்பிடச்சொல்லி நின்று தான் போனார்...நான் கண்ணால்கண்டதும் விசாரித்து அறிந்ததும். இப்படி எதிரியையும் தங்களுக்கு எதிராக சதிசெய்தவனைக் ¤ட மன்னித்து மதித்த மேதை தமிழ்ச்செல்வன் அண்ணா... அவரைக் கொன்ற அரக்கர்களுக்கும் அவர் குலத்துக்கும் மீட்சியேயில்லை வாழ்வில்.

சிரிப்பாலே எதிரியை வீழ்த்திவிடும் மாவீரன் தமிழ்ச்செல்வன்

தமிழீழம் என்றும் துதி பாடும் அய்யா

சோழியன் குடுமி சும்மா ஆடாது.. ஹி ஹி ஹி

சரியாச்சொன்னியள்.. அப்ப உந்த சுதந்திர வர்த்தக நிலையம் ..எயாபோட் எண்டு நல்லாத:தான் கட்டிவச்சிருக்கனை வெளிநாட்டவனை ஏமாத்திறதுக்கு... இஞ்சை தமிழரர்டை வீடுகளை குண்டுபோட்டு அழிக்கிறது...

தலைவர் இதுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவேணும்...

கொழும்பு கண்டி வாழ் பணமும் இனவாதமிக்க சிங்களவரெல்லாம் சிரச சுப்பஸ்டார் பார்க்கிற நேரம் இடைவேளைக்கை எத்தினை கொட்டியை ஆமிதூக்கினதெண்டு சானலை மாத்தி நியுஸ் பாத்து கடலை சாப்பிடுகினமாம்...

இந்தக்கொடிய தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைக்கு போரை அவங்கட வீட்டுவாசலுக்கும் கொண்டுபோகவேணும் ..ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதாரத்தை குறிவைப்பதும் யுத்தத்தின் ஒரு அம்சம் -பா.நடேசன்

வீரகேசரி இணையம் 12/24/2008 3:30:32 PM - இலங்கையின் பொருளாதாரத்தை குறிவைப்பதும் தமது பாதுகாப்பு யுத்தத்தின் ஒரு அம்சம் என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார். ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கியிருக்கும் செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“நிலங்களை இழப்பதும், அவற்றை மீண்டும் கைப்பற்றுவதும் வழமையாக நடைபெறும் நிகழ்வு. நாம் வெற்றிபெறும்வரை அல்லது எமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும்†என நடேசன் ரொய்டர்ஸ் செவ்வியில் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு வரமுன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விதித்திருக்கும் நிபந்தனையை நிராகரித்திருக்கும் நடேசன், அண்மைய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குச் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் இலங்கையின் பொருளாதாரத்தில் 32 மில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

“பொருளாதாரத்தை அழிப்பதும் எமது பாதுகாப்பு யுத்தத்தின் ஒரு பகுதி. பொருளாதாரம் அழிக்கப்படும் பட்சத்தில் பலவீனமடைந்திருக்கும் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பு மோதல் நிறுத்தப்படும்†என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ரொய்டர்சுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

“கிளிநொச்சி யுத்தத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் அதற்கான நேரத்தையும் இடத்தையும் எதிர்பார்த்து காத்திருந்து தக்க பதில் தாக்குதல் நடத்துவோம்†என அவர் கூறியுள்ளார்.

புலிகளின் வலிந்த தாக்குதல் எப்பவெண்டு கேட்டு சிங்களவங்கள் நக்கலடிக்கிறாங்கள் தான்...

ஆனால் அதுக்காகவும் புலம்பெயர்ந்த ஆக்கள் மூஞ்சையை நீட்டிகினயை எண்டு சும்மா எல்லாம் சாதகமில்லாத இடத்தில போய் வாங்கிக்கட்டேலாது..

உங்களை நம்பியிருக்கிறோம் மலைபோல் வீரர்களே..

நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள்.

Edited by UK_podiyan

தாயகத்து தமிழ் மக்களுக்காக (AFP) செய்தி சேவைக்கு அரசியல் துறை பொறுப்பாளர் சொன்னதை எங்கள பன்னாடை ஊடகங்கள் வெளியிட்டு முக்கிய புலநாய்வு தகவலை எதிரிக்கு வளங்குதுகள்... - இப்பிடி ஒருத்தர் வழமையாக அங்கலாப்பாரே ஆள் எங்கை..??

அவர் அங்காலை லாய்க்கிறார் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.