Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தாண்டு பலன்கள் 2009 - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

p69apy9.jpg

மேஷம்:

பளிச்சென்று பேசுபவர்களே! உங்கள் ராசிநாதன் அங்காரகனின் அவிட்ட நட்சத்திரத்திலும் உங்களுக்கு லாப ராசியிலும் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதி ஓங்கும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வருமானம் உயரும். கணவரின் அனுசரணை அதிகரிக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் அடுத்தடுத்து விசேஷம் நடக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை சூரியன் வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. மே, ஜூன், ஜூலை மாதங்களில் உங்கள் ராசிக்கு குரு பகவான் லாப வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, வி.ஐ.பி-க்களின் ஆதரவு, கௌரவப் பதவிகள் கிட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.

ஏப்ரல், மே மாதத்தில் செவ்வாயும், சூரியனும் வலுவிழந்திருப்பதால் செலவு, அலைச்சல் அதிகரிக்கும். உடல் உபாதை, சகோதரருடன் மனத்தாங்கல் ஆகியவை வரலாம். ஆகஸ்ட், செப்டம்பர் மாத மத்திய பகுதி வரை சூரியன் பாபகிரக சேர்க்கை பெறுவதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். 26.9.2009 முதல் சனி 6-ம் வீட்டுக்கு செல்வதால் பழைய கடன் பிரச்னை தீரும். 27.10.2009 முதல் கேது வலுவடைவதால் எதிர்பாராத வெற்றி உண்டு. வியாபாரத்தில் திட்டமிட்டபடி லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு.

இந்தப் புத்தாண்டு இடையிடையே சிக்கல்களையும் செலவுகளையும் தந்தாலும் உங்களை சாதிக்கவும் வைக்கும்.

--------------------------------------------------------------------------------

ரிஷபம்:

மனதில் இருப்பதை மறைக்காதவர்களே! உங்களுக்கு 10-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பல வகையிலும் பணம் வரும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் எதிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கணவருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாமியார், மச்சினர் வகையில் இருந்த குழப்பம் தீரும். மகளின் திருமணம் சிறப்பாக முடியும். சொத்து பிரச்னை தீரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். இருந்த வீட்டை விற்று புது வீடு வாங்குவீர்கள். செப்டம்பர் மாத முற்பகுதி மற்றும் டிசம்பர் மாத பிற்பகுதியில் எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாக முடியும்.

ஆனால், வருடம் பிறக்கும்போது செவ்வாயும் சூரியனும் 8-ல் மறைந்து கிடப்பதால் உடன்பிறந்தவர்கள், உறவினர்களால் அலைச்சலும், செலவும் ஜனவரி மாதத்தில் வந்து நீங்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு 10-ம் வீட்டுக்குச் செல்வதால் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமையும், வீண் பழியும் வந்தாலும் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். செப்டம்பர் 15 முதல் வாகனத்தால் செலவு ஏற்படலாம். 26.9.2009 முதல் சனி பகவான் 5-ம் வீட்டுக்குள் நுழைவதால் கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. 27.10.2009 முதல் ராகு-கேது இடம் மாறுவதால் கணவருடன் சண்டை வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் கூட்டுத் தொழில் பிரச்னைகள் தீரும். வேலையாட்களால் அனுகூலம் உண்டு. வேற்று மதத்தவர், மொழியினர் உதவுவார்கள்.

இந்த 2009-ம் ஆண்டு உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

--------------------------------------------------------------------------------

மிதுனம்:

எதிலும் வெற்றியை விரும்புபவர்களே! உங்கள் யோகாதிபதியான சுக்ரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வளங்கள் சேரும். மார்ச் மாதம் மத்தியிலிருந்து குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஓயும். கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். முடிக்க முடியாதென கைவிட்ட காரியங்களைக் கூட கச்சிதமாக முடிப்பீர்கள். வேலை மாறுவீர்கள். வருட மத்தியில் குரு சாதகமாக இருப்பதால் சொத்து வாங்குவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நீண்ட நாளாக நடந்த வழக்கில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல முடிவு ஏற்படும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாடு செல்வார். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். புது வண்டி வாங்குவீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாமனார், மச்சினர், சகோதர வகையில் அலைச்சலும் மனஸ்தாபங்களும், கணவருடன் மன உளைச்சலும் வந்து நீங்கும். ஜூலை 15 முதல் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வருடப் பிற்பகுதியில் பெரியவர்களின் உடல் நிலை பாதிக்கப்படலாம். தங்க ஆபரணங்கள் இரவல் தர வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரலாம். இடமாற்றம் உண்டு.

இந்த புத்தாண்டு மையப் பகுதி வரை மகிழ்ச்சியையும், இறுதிப் பகுதியில் சிறுசிறு ஏமாற்றங்களையும் தருவதாக அமையும்.

--------------------------------------------------------------------------------

கடகம்:

கள்ளம் கபடம் இல்லாமல் பேசுபவர்களே! குரு உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் தொடக்கமே நன்றாக இருக்கும். எதிர்பாராத திடீர் திருப்பம் உண்டாகும். பதுங்கி பயந்திருந்த நீங்கள், இனி பளிச்சென எல்லோர் கண்ணிலும் படுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களை நம்பி மாமனார், மாமியார் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் சேரும். மகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். 26.9.2009 முதல் ஏழரைச் சனி முழுமையாக விலகுவதால் அன்றிலிருந்து எதிலும் ஏற்றம் உண்டு. நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். 27.10.2009 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் தலைச் சுற்றல், முன்கோபம், சோம்பல் யாவும் நீங்கும். வியாபாரம், உத்யோகம் திருப்தியாக இருக்கும்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மத்திய பகுதி வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைச்சல், உடல் நலக் கோளாறு ஏற்படலாம். மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் குரு 8-ம் வீட்டுக்கு சென்று மறைவதனால் சுப செலவுகள், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். 7.10.2009 முதல் செவ்வாய் உங்கள் ராசிக்குள் நீச்சம் பெற்று அமர்வதால் கூடா நட்பை தவிர்ப்பது நல்லது.

உங்களுக்கு இந்தப் புத்தாண்டு புதுப் பொலிவையும் வெற்றியையும் தரும்.

--------------------------------------------------------------------------------

சிம்மம்:

தயங்காமல் அள்ளித் தருபவர்களே! உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத வெற்றிகள் உண்டு. சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தடைபட்ட திருமணம் முடியும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்து தனஸ்தானத்தை பார்ப்பதால் பணப்புழக்கம் குறையாது. கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். கணவர் உங்களின் புது முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு 7-ம் வீட்டுக்கு செல்வதால் குழந்தை பாக்கியம் கிட்டும். சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். வியாபாரம் லாபம் தரும். உத்யோகத்திலும் உயர்வு உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. செப்டம்பர் மாத இறுதியில் ஜென்ம சனி விலகுவதால் உடல் உபாதை விலகும். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். அக்டோபர் மாத இறுதியில் ராகுவும்-கேதுவும் சாதகமாக மாறுவதால் பழைய கடனைத் தீர்க்க புது வழி கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.

ஏப்ரல் மத்திய பகுதியிலிருந்து மே இறுதிப் பகுதி வரை மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செவ்வாயின் போக்கு சரியில்லாததால் உறவினருடன் மனத்தாங்கல் வரலாம். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஜூலை மத்திய பகுதியிலிருந்து உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனமடைவதால் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு புதுப் பாதையை அமைத்துத் தரும்.

--------------------------------------------------------------------------------

கன்னி:

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பவர்களே! எதிர்ப்புகள் எல்லாம் அடங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவரின் வருமானம் உயரும். நீண்ட நாளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள் உங்களின் நல்ல மனதைப் புரிந்து கொள்வார்கள். விலை உயர்ந்த நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ஜனவரி மாதத்தில் சுக்கிரன் 6-ல் மறைவதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் வந்து நீங்கும். மே 22 முதல் ஜூலை 2 வரை 8-ல் செவ்வாய் இருப்பதால் முன்கோபம், சகோதரப் பகை, வீடு, மனை வாங்குவதில் சிக்கல்கள், உடல் உபாதை ஆகியவை ஏற்படலாம். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு 6-ல் மறைவதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகளும், அலைச்சல்களும் வந்து நீங்கும். செப்டம்பர் மாதப் பிற்பகுதியில் ஜென்ம சனி தொடங்குவதால் உணவில் கட்டுப்பாடு தேவை. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர் கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடித்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு சிறு சிறு கஷ்டங்களைத் தந்தாலும் சோர்ந்து கிடந்த உங்களை உற்சாகப்படுத்து வதாக அமையும்.

--------------------------------------------------------------------------------

துலாம்:

தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் ஓரளவு நல்லதே நடக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு உங்கள் ராசிக்கு 5-ல் அமர்வதால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். குருவருளால் நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். செப்டம்பர், அக்டோபர் மத்திய பகுதியில் பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு கட்டும் பணி முழுமையடையும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். உத்யோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். ராகு-கேது சாதகமாக வருடக் கடைசியில் மாறுவதால் பழைய பிரச்னைகள் தீரும்.

பிப்ரவரி முதல் மே மாதம் வரை உங்கள் ராசிநாதன் 6-ம் வீட்டிலேயே மறைந்து கிடப்பதால் கணவரின் உடல் நிலை பாதிக்கப்படலாம். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மத்திய பகுதி வரை செவ்வாய் 8-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல், வாகனப் பழுது வந்து நீங்கும். அக்டோபர் மத்திய பகுதி முதல் நவம்பர் மையப் பகுதி வரை சூரியன் உங்கள் ராசிக்குள் இருப்பதால் உடல் நலக் கோளாறு ஏற்படலாம். பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவுக்கு செலவுகள் இருக்கும். 26.9.2009 ஏழரை சனி தொடங்குவதால் மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

வேகத்தை விட விவேகம் தேவைப்படும் வருடமிது.

--------------------------------------------------------------------------------

விருச்சிகம்:

புரட்சிகரமான சிந்தனை உள்ளவர்களே! புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாமனார், மாமியார் புகழும்படி சில காரியங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சகோதர வகையில் உதவி கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வீடு மாறுவீர்கள். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் பழைய பிரச்னைகள் தீரும். மகளுக்குத் திருமணம் முடியும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. நவீன மின்னணு, மின்சார சாதனங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களின் அசாத்திய திறமையைக் கண்டு வியப்பார். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு 4-ம் வீட்டில் அமர்வதால் பணப்பற்றாக்குறை, வீண் அலைச்சல், உறவினருடன் கருத்து மோதல் வந்து நீங்கும். ஜூலை மாத மையப் பகுதியிலிருந்து, ஆகஸ்ட் மாத மையப் பகுதி வரை சூரியன் 9-ம் வீட்டில் இருப்பதால் மன உளைச்சல், உடல் உபாதை வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாகும். ஆகஸ்ட் மாத மையப் பகுதி முதல் அக்டோபர் மாத மையப் பகுதி வரை செவ்வாய் 8-ம் வீட்டுக்கு வருவதால் வாகனக் கோளாறுகளும் வழக்குச் சிக்கலும் ஏற்படும்.

இந்தப் புத்தாண்டு உங்களை விடாமுயற்சியால் வெற்றி பெற வைக்கும்.

--------------------------------------------------------------------------------

தனுசு:

தாராள மனசுக்காரர்களே! உங்கள் ராசிநாதன் குருபகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தடைபட்ட காரியங்கள் முடியும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் ஓயும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல சுற்றுப்புற சூழ்நிலை உள்ள இடத்துக்கு வீட்டை மாற்றுவீர்கள். பணவரவு திருப்திகரமாக அமையும். கடனை பைசல் செய்வீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. பிப்ரவரி, மார்ச், மற்றும் ஏப்ரல் மத்தியப் பகுதி வரை உள்ள காலகட்டம் திருப்திகரமாக அமையும். வாகனம் வாங்குவீர்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். உடல் நலக் கோளாறு விலகும். ஜூன் முதல் ஜூலை மத்தியப் பகுதிக்குள் சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். உறவினர்கள் மெச்சுவார்கள்.

ஜனவரி மாதத்தில் உங்கள் ராசி நெருப்பு கிரகங்களின் பிடியில் வருவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். தூக்கமின்மை, களைப்பு வந்து நீங்கும். ஏப்ரல் மத்தியிலிருந்து மே மாதத்தின் மையப் பகுதி வரை சூரியன் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் உடன்பிறந்தவர்களுடன் உரசல் வரலாம். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு உங்களை தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெற வைக்கும்.

--------------------------------------------------------------------------------

மகரம்:

மாசற்ற மனசுள்ளவர்களே! உங்களின் தன வீட்டான 2-வது ராசியில் இந்த வருடம் பிறப்பதால் முணுமுணுத்துக் கொண்டிருந்த நீங்கள் முன்னேற புது வழி கிடைக்கும். மார்ச் மாத மத்தியிலிருந்து வருமானம் உயரும். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் இந்த வருடம் முழுக்க வலுவாக இருப்பதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். கடனில் ஒரு பகுதியையாவது பைசல் செய்ய வழி பிறக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு உங்கள் ராசியை விட்டு விலகுவதால் திடீர் பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தடைபட்ட திருமணம் முடியும். கணவருக்கு சம்பளம் கூடும். வேலை மாறுவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சொத்துத் தகராறு தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்டம்பர் இறுதிப் பகுதியிலிருந்து அஷ்டமத்துச் சனி விலகுவதால் எதிர்மறை எண்ணங்கள் விலகும். அக்டோபர் பிற்பகுதியிலிருந்து ராகு, கேது சாதகமாவதால் வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். நோய் குணமாகும்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாமனார், மாமியாரிடம் அனுசரித்துப் போங்கள். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. அக்டோபர் மாதத்தில் யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் கடன் வாங்கி முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் ஏற்பட்டாலும் அனுசரித்துப் போவது நல்லது.

இந்தப் புத்தாண்டு பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வைப்பதுடன், தைரியத்தை தருவதாகவும் அமையும்.

--------------------------------------------------------------------------------

கும்பம்:

கூடி வாழ நினைப்பவர்களே! உங்களின் சுக பாக்யாதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்கள் லட்சியத்தை எட்டிப் பிடிப்பீர்கள். ஜனவரி மாதத்தில் எதிர்பார்த்த பணம் வரும். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சமாவதால் கணவர் உங்களை மதிப்பார். தாம்பத்யம் இனிக்கும். விலையுர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். ஏப்ரல் மாத மத்தியிலிருந்து ஆகஸ்ட் மாதத்தின் மத்தியப் பகுதி வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் உயரும். சகோதரர் உதவி கிட்டும். உறவினர்கள் உதவுவார்கள். அக்டோபர் 7-ம் தேதியிலிருந்து செவ்வாய் 6-ம் வீட்டில் மறைவதால் வழக்கு வெற்றியடையும். சொத்து வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் பொறுப்பாக நடந்து கொள்வார். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்கு கூடும். ஆனால், சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும்.

பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 13 வரை உங்கள் ராசியை நெருப்பு கிரகங்கள் சூழ்வதால் உடல் உபாதை, முன்கோபம் வந்து விலகும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் உங்கள் ராசிக்குள்ளேயே குரு நுழைவதால் கணவன்- மனைவிக்குள் ஈகோ பிரச்னை ஏற்படலாம். பழைய சம்பவங்களை பேசிக்கொண்டிருக்க வேண்டாம். செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து அஷ்டமத்துச் சனி வருவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், நினைத்ததை முடிக்கும் அளவுக்கு மன உறுதியைத் தருவதாக அமையும்.

--------------------------------------------------------------------------------

மீனம்:

நன்றி மறவாதவர்களே! உங்கள் ராசிநாதன் லாப வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவரின் பிடிவாதம் விலகும். பழைய கடன் தீரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நாத்தனாருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மழலை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். கமிஷன் மூலம் பணம் வரும்.

ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திடீர் யோகம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். வாகன வசதி பெருகும். தடைபட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வுடன், பதவியும் உயரும். மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை ராசிக்குள் சூரியன் செல்வதால் முன்கோபம், உடல் உபாதை, எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். மார்ச் 6 முதல் மே 22 வரை செவ்வாயின் போக்கு சரியில்லாததால் சகோதரர்களுக்கிடையே மனஸ்தாபம் ஏற்படலாம். அந்தக் காலக்கட்டத்தில் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

இந்த 2009-ம் ஆண்டு உங்களை வளமான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்.

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

வாற வருசம் ஏழரைச்சனி முடிவது , மிக்க சந்தோஷம் .

இந்த ஏழரைச்சனி , பொல்லாத சாமான் . என்னை போட்டு சிப்பிலி ஆட்டிப்போட்டுது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாற வருசம் ஏழரைச்சனி முடிவது , மிக்க சந்தோஷம் .

இந்த ஏழரைச்சனி , பொல்லாத சாமான் . என்னை போட்டு சிப்பிலி ஆட்டிப்போட்டுது .

வாரவருசம் சிறப்பாய் வாழ வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

வாரவருசம் சிறப்பாய் வாழ வாழ்த்துகள்

நன்றி . நம்பிக்கை தானே வாழ்க்கை . உங்களுக்கும் வாழ்த்துகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள் என்று போட்டிருக்கு. அப்ப கட்டாயம் A9 பாதையால் பயணித்து யாழ் போகச் சாத்தியம் உண்டு என்று தெரிய வருகின்றது. நல்லதுதான்..

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஏதோ கொட்டப்போகுதாம் உப்பிடித்தான் எல்லாரும் சாதகம் பார்த்து ஒவொருமுறையும் சுப்பண்ணை நீ எங்கயோ போயிடுவாய் இருந்து பாரன் என்று சொல்லுவினம் சொன்னதுதான் தாமதம் எனக்கு ஒரு இடத்தில இருக்கக்கூட நேரம் கிடைக்காது.நான் இப்ப கனநாளா ஒரு சாத்திரியை தேடிட்டு இருக்கிறன் அவன் மட்டும் கையில அம்புட்டால் அவ்வளவுதான் :(

KaRuPpi Keep watch on me. :(

சுப்பண்ணை நீ எங்கயோ போயிடுவாய் இருந்து பாரன் என்று சொல்லுவினம்

நான் இப்ப கனநாளா ஒரு சாத்திரியை தேடிட்டு இருக்கிறன் அவன் மட்டும் கையில அம்புட்டால் அவ்வளவுதான் :(

யார் யாழிலுள்ள சாத்திரி அண்ணையையோ சொல்றீங்கள் சுப்பண்ணை. அவர் சொன்னதுசரி தானே.. உங்களை கொஞ்சநாள் இந்தப் பக்கம் காணேல்ல. எங்கேயோ போய்ட்டு வந்திட்டீங்கள். :(:(

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் யாழிலுள்ள சாத்திரி அண்ணையையோ சொல்றீங்கள் சுப்பண்ணை. அவர் சொன்னதுசரி தானே.. உங்களை கொஞ்சநாள் இந்தப் பக்கம் காணேல்ல. எங்கேயோ போய்ட்டு வந்திட்டீங்கள். :(:(

நீங்கள் வேற.... மல்லி நான் அந்த சாத்திரியை சொல்லேல அதுவேற சாத்திரி. இந்த சாத்திரி பயோடேட்டா மட்டும் தான் சொல்லுவார் ஆனால் அந்த சாத்திரி முழுடேட்டாவும் சொல்லுவார் :(

Edited by suppannai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாற வருசம் ஏழரைச்சனி முடிவது , மிக்க சந்தோஷம் .

இந்த ஏழரைச்சனி , பொல்லாத சாமான் . என்னை போட்டு சிப்பிலி ஆட்டிப்போட்டுது .

இப்போ தான்் தேடி எடுத்து பார்த்தேன் என்ன நட்சத்திரம் எண்டு. அடுத்த வருசம் ஏழரைச்சனி ஆரம்பம் என்றிருக்கு.

அப்படிஎண்டால் என்ன என்னையும் சிப்பிலி ஆட்டப்போகுதோ?

நீங்கள் வேற.... மல்லி நான் அந்த சாத்திரியை சொல்லேல அதுவேற சாத்திரி. இந்த சாத்திரி பயோடேட்டா மட்டும் தான் சொல்லுவார் ஆனால் அந்த சாத்திரி முழுடேட்டாவும் சொல்லுவார் :lol:

அப்ப அந்த சாத்திரிக்கு சனி என்று சொல்லுறீங்களோ சுப்பண்ணை :wub:

இப்போ தான்் தேடி எடுத்து பார்த்தேன் என்ன நட்சத்திரம் எண்டு. அடுத்த வருசம் ஏழரைச்சனி ஆரம்பம் என்றிருக்கு.

அப்படிஎண்டால் என்ன என்னையும் சிப்பிலி ஆட்டப்போகுதோ?

என்ன சிப்பிலி ஆட்டம் ஆட்டினாலும்

நீங்கள் வாழுற நாட்டில பசியோட இருக்க மாட்டீங்க. :o

நல்லா உடுப்பீங்க

பள்ளிக்கூடம் போய் படிப்பிப்பீங்க

செய்தி போடுவீங்க

வீட்டாரோடு சந்தோசமா இருப்பீங்க

சனி ஆட்டினாலென்ன

ஞாயிறு முதல் வெள்ளி வரை

நீங்க சந்தோசமாக இருக்க

வாழ்த்துகள் கறுப்பி.

புத்தாண்டில் இதுகளை நினைக்காமல் இருங்க. :)

  • கருத்துக்கள உறவுகள்

என்டை ராசிக்கு முழுக்க பெண்களுக்குதான் போட்டிருக்கு.கணவன் மதிப்பார்(மதிக்காட்டால் மிதியெல்லோ கிடைக்கும்)விலை உயர்ந்த ஆடைகள் வாங்குவீர்கள்(இது எல்லா வருசமும் தான் நடக்குது தோ இந்த வருசம்தான் நடக்கப்போற மாதிரி) :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் வாற வருடம் ஏழரைச்சனி தொடங்கப்போகிறதென்று இப்போதுதான் படித்தேன். ஆனால் நான் எப்போதோ தொடங்கிவிட்டது என்றுதான் எண்ணியிருந்தேன்.

இப்போ இலண்டனிலே சாத்திரிமார் பலர் வந்திறங்கியுள்ளார்கள். ஈழத்தமிழனின் பணம் எத்தனை பேருக்குப் போகிறது.

எனக்கு சென்ற வருடம் பண அதிஸ்டம் இருக்கிறது பெருமளவில் வரும் என்றார். ஆனால் சென்ற வருடத்தைப்போல் நான் ஒருநாளும் பணக்கஸ்டம் பட்டதில்லை.

சாத்திரத்தில் நம்பிக்கை உண்டு ஆனால் சிலவற்றைப் படிக்க உள்ள நம்பிகையும் குறைகிறது.

சாத்திரம் பார்த்தாலென்ன பார்க்காவிட்டலென்ன நடக்கிறது எப்போதும் நடந்தே தீரும்.

எனக்கும் ஏதோ கொட்டப்போகுதாம் உப்பிடித்தான் எல்லாரும் சாதகம் பார்த்து ஒவொருமுறையும் சுப்பண்ணை நீ எங்கயோ போயிடுவாய் இருந்து பாரன் என்று சொல்லுவினம் சொன்னதுதான் தாமதம் எனக்கு ஒரு இடத்தில இருக்கக்கூட நேரம் கிடைக்காது.நான் இப்ப கனநாளா ஒரு சாத்திரியை தேடிட்டு இருக்கிறன் அவன் மட்டும் கையில அம்புட்டால் அவ்வளவுதான் :wub:

KaRuPpi Keep watch on me. :)

ஏன் அவர்தான் சுப்பண்ணைக்குத் திருமணப் பொருத்தம் பார்த்தவரோ???? :lol::o:o

இந்த சாத்திரத்தை நம்புகிறவர்கள், ஒருக்கா 2007, 2008 பலன்களைத் திரும்பப் போய் வாசித்தால் எல்லாம் விளங்கும்.

வாற வருசம் ஏழரைச்சனி முடிவது , மிக்க சந்தோஷம் .

இந்த ஏழரைச்சனி , பொல்லாத சாமான் . என்னை போட்டு சிப்பிலி ஆட்டிப்போட்டுது .

இல்லை ... இப்பத்தான் ..தொடங்கியிருக்கூ...

அது சரீ... கறுப்பியக்கா... எப்பொதிருந்து யோதீட சீகா மணியாயிட்டீங்கா... எனி வே வாழ்த்துக்கள்.... உங்கள் ... நல் வாழ்விற்கு.....

-வாழ்த்துகளுடன் எல்லாள மஹாராஜா

எனக்கும் வாற வருடம் ஏழரைச்சனி தொடங்கப்போகிறதென்று இப்போதுதான் படித்தேன். ஆனால் நான் எப்போதோ தொடங்கிவிட்டது என்றுதான் எண்ணியிருந்தேன்.

இப்போ இலண்டனிலே சாத்திரிமார் பலர் வந்திறங்கியுள்ளார்கள். ஈழத்தமிழனின் பணம் எத்தனை பேருக்குப் போகிறது.

எனக்கு சென்ற வருடம் பண அதிஸ்டம் இருக்கிறது பெருமளவில் வரும் என்றார். ஆனால் சென்ற வருடத்தைப்போல் நான் ஒருநாளும் பணக்கஸ்டம் பட்டதில்லை.

சாத்திரத்தில் நம்பிக்கை உண்டு ஆனால் சிலவற்றைப் படிக்க உள்ள நம்பிகையும் குறைகிறது.

சாத்திரம் பார்த்தாலென்ன பார்க்காவிட்டலென்ன நடக்கிறது எப்போதும் நடந்தே தீரும்.

ஓமோம்...ம்... 007 செல்லமுத்து ஐயா... இப்பத்தானே நாங்கள் வந்து இறங்கியிருக்கிறம்.... நான் சாத்திரிமாரைச் சொல்லவில்லை.....

-எல்லாள மஹாராஜா

ஆங்கில புது வருடப் பிறப்புக்கு கூட பலாபலன் சொல்லத்தொடங்கி விட்டார்களா? எப்படியும் எல்லோரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டும் என வெளிக்கிட்டால் ஆங்கில புது வருடப் பிறப்பென்ன தமிழ் புது வருட பிறப்பென்ன !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அந்த சாத்திரிக்கு சனி என்று சொல்லுறீங்களோ சுப்பண்ணை :icon_mrgreen:

இல்லை அஜீ அவர் என்ட சாதகத்தை எப்ப கையில எடுத்தாரோ அப்பவே அவருக்கு சனி தொடங்கிட்டுது. ^_^

ஏன் அவர்தான் சுப்பண்ணைக்குத் திருமணப் பொருத்தம் பார்த்தவரோ???? :o:lol::lol:

அதையேன் கேட்கிறிங்கள் தமிழச்சி, சரி பொருத்தம் தான் ஏதோ பார்த்தான் விடுவம் என்று பார்த்தல் பொம்பிளை எப்பிடி என்று கேட்டதுக்கு சொன்னனே ஒரு பதில் கடவுளே................ ம் என்று நீ சொன்னால் சொன்ன இடத்தில நிப்பாள், நீ கிணத்துக்க குதி என்று சொன்னால் அடுத்த கதை கதைக்காள்(இப்ப என்னை தள்ளிவிடத்தான் நிக்கினம்) மொத்தத்தில உனக்கு கிடைத்த வாரம் என்று சத்தமா சொன்னான் அப்பவே நான் உசாராக இருந்திருக்கவேண்டாமா போச்சே எல்லாம் போச்சே :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.