Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரசூற் மூலம் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டு வீச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரசூற் மூலம் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டு வீச்சு

திகதி: 24.12.2008 // தமிழீழம் // [வன்னியன்]

கிளிநொச்சி மருத்துவமனையை அண்டிய பகுதிகளில் சிறிலங்கா வான்படை விமானங்கள் ‘பரசூற்' மூலமாக சர்வதேச ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகளை இறக்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. கொத்தணிக் குண்டுகளை இறக்கப்பயன்படுத்தப்பட்ட ‘பரசூற்' தற்போது அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

cluster20parasut1la6.jpg

கடந்த மாதம் 29ம் திகதி கல்லாறு இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையினர் கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தியே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை அப்பகுதியில் கிடந்த குண்டுச் சிதறல்கள் மற்றும் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதும் படையினரால் சர்வதேச ரீதியாகத் தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகள் வன்னிப்பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது பரவலாகப் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ‘பரசூற்' முலமாக கிளிநொச்சிப் பொது மருத்துவமனையை அண்டிய பகுதிகளில் இக்கொத்தணிக்குண்டுகள் இறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

cluster20parasut2ri4.jpg

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கள் மீது கடந்த மாதம் விமானங்களில் இருந்து கிளஸ்ரர் குண்டுகள் வீசப்பட்டதும், அதில் குழந்தைகள் உட்பட ஐவர் பலியாகி பலர் காயமடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சங்கதி

Edited by கறுப்பி

கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் முல்லைத்தீவு வீதியிலுள்ள தேவாலயத்தின் மீது (Holy Cross Convent) சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாளை கிறிஸ்மஸ் நடைபெறவுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற தேவாலயத்தின் கூரையில் பாதுகாப்பு இடங்களிற்கான செஞ்சிலுவை அடையாளம் காணப்படுகின்ற போதிலும், சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது பல மீற்றர்கள் தூரத்திலுள்ள பட்டியில் 85 மாடுகளும் கொல்லப்பட்துடன், அருகில் இருந்த கரைச்சி கிழக்கு பலநோக்குக் கூடடுறவுச் சங்கத்தின் கட்டிடமும் சேதமடைந்துள்ளது.

இவை மட்டுமன்றி பரந்தன், மற்றும் குமாரபுரததிலுள்ள கடைகள், மற்றும் பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. நேற்றிரவு மட்டும் மூன்று தடவைகள் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்புத்தேடி வேறு இடங்களுக்கு மீண்டும் இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று புதன்கிழமை காலையும் 7:30 மணியளவில் பரந்தனில் இரண்டு தடவைகள் சிறீலங்கா வான் படையின் குண்டுவீச்சு வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

கடுமையான மோதல் இடம்பெறும் குஞ்சுப்பரந்தன் பகுதியிலும் இன்று காலை வான்வழித் தாக்குதல் இடம்பெற்றது.

படங்களை பார்க்க..........

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

அட இதெல்லாம் அமெரிக்கப்படைகள் இராக் ஆப்கானிஸ்தான்ல பாவிக்கிறது..

ஒண்டு மட்டும் விழங்குது.. இந்தமுறை சிங்களவன் ரெண்டில ஒண்டு பார்க்கிற எண்டு தான் வெளிக்கிட்டிருக்கிறான்..

புலிகள் உலகம் அதைச்சொல்லும் இதைச்சொல்லும் எண்டுபாக்காம உவங்களை எல்லாவளத்தாலையும் போடவேணும்..

உலகவாழ் தமிழரெல்லாம் பழைய பிரச்சனைகளை மறந்து பொது எதிரியை நிர்மூலுமுலமாக்கோணும்

:lol::huh::rolleyes::lol: அடங்கொக்கா....

விடமாட்டாங்கள்போல இந்தமுறை...???

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் தமிழ் மண்னில் பிறந்ததற்க்காக மிருகங்கள் கூட வதம் செய்யப்படுகின்றது.......படங்களை பார்கவே பரிதாபமாக இருக்கு..

ம்ம் யுகே பொடி விதம் விதமா எல்லாம் எடுத்து விடுறாங்கள்.....

இனி பரசூட்டோட ஆக்கள தான் இறக்கபோறங்கள் போல....

இன்னும் கைவசம் நிறைய வித்தைகள் வைச்சிருப்பாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கிலே பஸ்ஸுகளும் தாறு மாறாய் ஓடுதாம். ஒருக்கால் நிற்பாட்ட வேணும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குண்டு வேறு நாட்டில் விழுந்திருந்தால் , உலகில் உள்ள பிராணிகள் அமைப்பு கூட குரல் கொடுத்திருக்கும் . :lol:

தமிழன் மண்ணில் விழுந்து , தமிழ் மிருகங்கள் தானே செத்தது என்று பேசாமல் இருக்கிறார்களோ ......... :rolleyes:

தெற்கிலே பஸ்ஸுகளும் தாறு மாறாய் ஓடுதாம். ஒருக்கால் நிற்பாட்ட வேணும். :rolleyes:

நிச்சயமாக

:lol::D:D:rolleyes::lol::lol::huh: ஜஙரழவந யெஅநஸ்ரீ'ளுருNனுர்யுடு' னயவநஸ்ரீ'னுநஉ 24 2008இ 03:01 Pஆ' pழளவஸ்ரீ'472169'ஸ

ம்ம் தமிழ் மண்னில் பிறந்ததற்க்காக மிருகங்கள் கூட வதம் செய்யப்படுகின்றது.......படங்களை பார்கவே பரிதாபமாக இருக்கு..

ம்ம் யுகே பொடி விதம் விதமா எல்லாம் எடுத்து விடுறாங்கள்.....

இனி பரசூட்டோட ஆக்கள தான் இறக்கபோறங்கள் போல....

இன்னும் கைவசம் நிறைய வித்தைகள் வைச்சிருப்பாங்களோ?

ஜஃஙரழவநஸ

ஆமாம் நண்பரே..

எயார் மொபைல் பிரிகேட் எண்டு சொல்லி உந்த பாரசூட்டில பாஞ்சு அடிக்கிற அணியிருக்கு ஆமிட்டை..

ஆனால் கடந்காலங்களில முகமாலைப்பக்கம் அடிக்கடி விசிட்பண்ண வந்து நாரிமுறிய பொடியளிட்டை வாங்கி இப்ப நடக்கேலாம வரணிக்கை இருக்காம்... இப்ப அவேன்டை நிலை மிகக்கேவலமான நிலை.. ஏனென்ட அவைக்கு பயிற்சிகுடுத்த நாடுகளுக்கு லங்கா எயார்மொபையில் பிரிகேட் படை ஒவ்வொருமுறையும் முகமாலையில மூக்கு நல்லரத்தமும் இடிச்ச இடியில கு¤வும் வாறதால குழம்பிப்போய் இருக்கினமாம்... என்னமோ நல்லாத்ன் நடக்குது எல்லாம்...

இந்த குண்டு வேறு நாட்டில் விழுந்திருந்தால் , உலகில் உள்ள பிராணிகள் அமைப்பு கூட குரல் கொடுத்திருக்கும் . :lol:

தமிழன் மண்ணில் விழுந்து , தமிழ் மிருகங்கள் தானே செத்தது என்று பேசாமல் இருக்கிறார்களோ ......... :rolleyes:

உண்மை தான்...

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் சர்வதேசம் சர்வதேசம் சர்வதேசம் .. நோர்வைய தவிர வேறு எந்த நாடும் எங்ட பிரச்சனைய தட்டி கேட்டது இல்லை

..உலக வர படத்தில இந்தியா இருக்கும் வரை .. ஈழ தமிழன்ட வாழ்க்கேல இப்படி தொடர்ந்து நடந்து கொன்டெ இருக்கும்..

குன்டுதாக்குதல் கொலை .

இனி சர்வதேசத்தை நம்பி ஒன்டும் செய்ய எலாது.. சர்வதேசம் எங்களுக்கு உதவி பன்னும் என்று நினைச்சு கொன்டு இருந்தொம் என்ரா கடசில எங்களை தான் mendel hospitalளுக்கு ஏத்தனும்

இவர்கள் சும்மா பயங்கரவாதி..பயங்கரவாதி என்று சொல்கின்றனர் .....

இவர்களுக்கு உண்மையிலே பயங்கரவாதி எப்படி இருப்பான் என்று காட்டவேணும்......

கொழும்பில் ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல் கேட்கவேண்டும்.....

KUGGOO

Rating: 1

View Member Profile

post Today, 02:23 PM

Post #12

Advanced Member

***

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 422

Joined: 16-February 07

Member No.: 3,610

இதற்கு எல்லாம் ஒரே ஒரு வழி..எங்கிருந்து புறப்படுகிறதோ..அங்கேயே சமாதிகட்டினால் தான் சரி.. பேசி, கவலைப்பட்டு, உலகிற்கு காட்டி களைத்து விட்டது.. நீதி பக்கசார்பாக, சிங்களத்தின் பக்கமே உலகம் இருக்கிறது.. கழுகுசின்ன நாடும் அயல்னாடும் கண்மூடித்தனமாக உள், வெளியாதரவு கொடுப்பதால் மற்றைய நாடுகள் விளங்கியும் மௌனமாக இருக்கின்றன...

தமிழரின் போர் வெற்றியே இனி எமக்கு ஆதரவைக்கொண்டு வரும்.. இரக்கம் என்ற சொல் சிறிது காலத்திற்கு தமிழர் அகராதிyil இருக்கக்கூடாது...

காலதாமதம் எம்மின முழுஅழிவிற்கு நாமே கொடுக்கும் சம்மதம்... குண்டுகளும், குண்டுகாவுதலும் இல்லாமல் போகவேண்டும்.. வந்து இறங்கும் இடங்கள் எல்லாம் அழித்துதுடைத்தால் உலகம் மீண்டும் அமைதியாக எமது நியாயப்பக்கம் தலை சாய்க்க முயலும்... இது தான் உலகம். இன்று பசு மாடுகள் நாளை என்ன இக்கணம் மக்கள் தான் அவனுக்கு குறி?...தோல்வியை மக்களில் காட்டும் நவீன பேடிகள்.. அரசபயங்கரவாத துச்டர்கள்... நாளை நமதே... தோவியில் ஓட ஓட அடித்து

எல்லைவரை என்ன அதனைவிட உள்ளவும் துரத்தி அழித்து சீன பெரும் தடுப்பு சுவர் எல்லை முழுவதும் கட்டி எம்மண் எங்களின் சொந்த மண் என்பதை நிலை நாட்டும் தூரம் அதிகமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

நாளை பாலன் பிறப்பைக் கொண்டாட இருந்த மேரி அன்னைக்கே இந்தக் கதி..

24_12_08_paranthan_05.jpg

24_12_08_paranthan_06.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27824

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதை இங்கே போடுவதைவிட

போடவேண்டிய இடங்களின் கண்களில் போடவழி செய்யமாட்டீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்

இதை இங்கே போடுவதைவிட

போடவேண்டிய இடங்களின் கண்களில் போடவழி செய்யமாட்டீர்களா???

சர்வதேச ஊடகவியலாளர்கள் விசிட் அடிக்கும் தமிழ்நெட்டில் போட்டிருக்கிறார்கள்..! நானும் எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழி அனுப்பி வைத்துள்ளேன். பிற நாட்டினர் உட்பட..! :rolleyes:

Holy Mother died..! என்று தலைப்பிட்டு அனுப்பி இருக்கிறேன்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் அனுப்பியுள்ளேன்

வன்னியில் தேவாலயம் மீது வான்வழி வானூர்தித் தாக்குதல்-நூற்றுக் கணக்கான பசுக்களும் இறப்பு...Vedio

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

______________________________

http://Vaththirayan.blogspot.com/

Edited by jaalavan

நாசங்கள் செய்வதில் வல்லவர்களாகப் போய்விட்டார்கள். அதற்கு மௌனமே இதுவரை உலக நாடுகளின் பதில். செஞ்சோலை வழாகத்தின் மழலைகளுக்கும் இதே மௌனம், குஞ்சுப்பரந்தன் பசுக்களுக்கும் இதே மௌனம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாசங்கள் செய்வதில் வல்லவர்களாகப் போய்விட்டார்கள். அதற்கு மௌனமே இதுவரை உலக நாடுகளின் பதில். செஞ்சோலை வழாகத்தின் மழலைகளுக்கும் இதே மௌனம், குஞ்சுப்பரந்தன் பசுக்களுக்கும் இதே மௌனம்.

தோல்வியின் தோற்றப்பாடா இது?

அல்லது

கடைசி வித்தையா?

அல்லது

தமிழனின் ஊழ்வினையா??????

தோல்வியின் தோற்றப்பாடா இது?

அல்லது

கடைசி வித்தையா?

அல்லது

தமிழனின் ஊழ்வினையா??????

ஊழ்வினையை ஏன் நொந்து கொள்ள வேண்டும். அங்குள்ள மக்களை அச்சமூட்டி வெளியேற்றுவதற்காக எடுக்கப்படும் முயற்சியிது. எதிரயின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கு சர்வ தேசங்களும் முண்டு கொடுக்கின்றன. இன்றைய ஆளணியைவிடவும் ஆயுத வலிமைதான் எதிரிக்குக் கைகொடுக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

நாசங்களை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கும் நாடுகளே ஆதரவாளர்களாகவும் எதிரிக்கு உதவுகிறார்கள்.புலம் பெயர் உறவுகள் வான்வழித்தாக்குதலை முறியடிப்பதற்கான உதவிகளை வழங்கினாலே போதும், இதுபோன்ற நாசங்களைத் தடுத்துவிடலாம். தமிழர்களை அழிப்பதில் எதிரி முனைப்புடன் நிற்கின்றான் என்றாலும், அதனை எதிர் கொள்வதில் களம் மனத்திடத்துடனுள்ளது. அதனை வலுப்படுத்தும் திடம் நம்மிடமிருக்க வேண்டும். இன்றைய ஒரே பணியும் அதுதான். அரசியல் நிகழ்வுகள் இரண்டாம்பட்சமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் சிறிலங்கா படையினர் பரவலாக 'பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர்.

சிறிலங்கா வான்படையினர் நடத்தும் இந்த புதிய வகை 'பரசூட்" கொத்து குண்டுகள் நிலத்திலிருந்து 50 மீற்றர் உயரத்தில் வெடித்துச் சிதறி பொதுமக்களுக்கு பாரிய சேதங்களை உண்டாக்குகின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமையும் இன்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இரண்டு தடவைகள் 'பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

நேற்றிரவு இரவு 10:15 நிமிடமளவில் ஒரு தடவையும் இன்று காலை 8:00 மணியளவில் இன்னொரு தடவையும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் அப்பகுதியில் இருந்த கத்தோலிக்க கன்னியர் மடம், பொதுமக்களின் பல வீடுகள், வணிக நிலையங்கள் என்பன சேதமடைந்துள்ளதுடன் கால்நடைகள் பலவும்

IMG5139-1230153245.jpg

http://www.tamilwin.com/view.php?22cWnB203...d4b6QH4b0dLLSce

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாடு கூட சோகத்தில இருக்குது.. பாவம் அதுக்கு வேர காலில காயம்

படத்தை பாக்க அந்த மாட்டுக்கு உடன மருந்து கட்டனும் போல இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

இவை உலகத்தின் கண்களுக்குள் விட்டு துலாவப்படவேண்டியவை

தயவு செய்து அவற்றில் திறமையுள்ளோர் ஆரம்பித்துவைத்தால் நாங்கள் தொடரலாமே.........

  • கருத்துக்கள உறவுகள்

IMG5139-1230153245.jpg

படத்தை பார்க்க வேதனையாக உள்ளது , குட்டிப்பையா .

எனக்கு அந்த காயம்பட்ட மாடு ,

இந்த நீளமான கொம்பால் , நாலு ராணுவத்தினரையாவது குத்தி குடல் எடுக்க வேண்டும் என்று யோசிப்பது போல் தெரிகின்றது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.