Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக வலைப்பூப் பதிவர்களின் ஒன்றுகூடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 27.12.2008

இந்த ஆண்டின் கடைசி வலைப்பதிவர் சந்திப்பு என வர்ணிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று (27.12.2008) மாலை 5 மணிக்கு தியாகராய நகர் நடேசன் பூங்காவில் ஆரம்பிப்பதாக நிகழ்ச்சி நிரல். எனது மின் ரயில் வண்டி மாம்பலம் ஸ்டேஷனுக்கு வரும்போது மாலை 04.55. ரங்கநாதன் தெருவை தாண்ட அடுத்த 10 நிமிடங்கள் ஆயிற்று. நான் சமீபத்தில் 1979 முதல் 1981 வரை வசித்த மோதிலால் தெரு, மற்றும் ராமானுஜம் தெரு வழியாக சென்று நடேசன் பூங்காவை அடையும்போது சந்திப்பு ஆரம்பம் ஆகிவிட்டிருந்தது.

நான் இம்முறை நோட்டு புத்தகம் ஏதும் கொண்டு செல்லாததால் எல்லாவற்றையும் நினைவிலிருந்து எழுத வேண்டிய கட்டாயம். வந்தவர்களின் பெயர் விவரங்கள் முழுமையானதாக இருக்காது என அஞ்சுகிறேன். ஆகவே பெயர் விட்டு போனவர்கள் பின்னூட்டம் மூலம் தத்தம் பெயர்களையோ தம் நண்பர்கள் பெயரையோ கூறினேல் அவற்றையும் லிஸ்டில் ஏற்றுவேன்.

நான் பார்த்தவர்கள் அக்கினி பார்வை, லக்கிலுக், பாலபாரதி, தாமிரா, கடலையூர் செல்வம், அதிஷா, நர்சிம், முரளி கண்ணன், சென்சிபிள் சென், ஜோசஃப் பால்ராஜ், அப்துல்லா, திரு, மதுரை கணேஷ், அத்திரி, இளவஞ்சி, கேபிள் சங்கர், தராசு, குகன், கார்க்கி ஆகியோர். சில பெயர்களை எனக்கு டெலிஃபோனில் நான் கேட்டபோது ஞாபகப்படுத்திய லக்கிலுக்குக்கு நன்றி.

ஒரு மாறுதலுக்காக முரளி கண்ணன் அவர்கள் தனது பதிவில் விளையாட்டாக குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலை எடுத்து பேசலாம் என விளையாட்டாக தீர்மானிக்கப்பட்டு மணமானவ்ர்கள் புலம்பலை தாமிரா அவர்கள் ஆரம்பிப்பார் என கூறப்பட அவர் தயங்க, சமீபத்தில் 1970களில் திருமணம் செய்துகொண்ட பதிவர்களும் இதுதொடர்பாக தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன் என தனது பதிவில் எழுதியிருந்த லக்கிலுக் ஆரம்பித்தார். கல்யாணம் அவசியமா என்பதிலிருந்து ஆரம்பித்து விவாதம் சென்றது. கல்யாணத்தைவிட சேர்ந்து வாழ்வதில் சமௌரிமை பேணப்படுகிறது என பாலபாரதி (?) கூறினார். அம்மாதிரி சேர்ந்து வாழ்வது பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்காது என நான் தெளிவாக கூறினார். முந்தைய தலைமுறை வாழ்க்கை பற்றி என்னைக் கேட்க எனக்கு வயது 26 மட்டுமே ஆவதால், வேறு யாராவது வய்க்ஷதானவர்களை கேட்குமாறு ஆலோசனை கூறினேன். தாம்பத்திய பிரச்சினைகள் எல்லா காலத்திலும் உண்டு என்றும் ஜொள்விடும் ஆண்கள் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கென்றனர் என்றும் கூறி சமீபத்தில் 1981-ல் விகடனில் வந்த சிவசங்கரி அவர்கள் எழுதிய பாலம் என்னும் தொடர்கதையில் வந்த ஒரு நிகழ்ச்சியை (கதைப்படி 1907-ல் நடந்தது) எடுத்து கூறினேன். அவ்வளவு காலமாக இருந்து வந்திருக்கிறது என்பதால் இந்த பழக்கவழக்கங்கள் அப்ப்டியே வைத்திருக்க வேண்டுமா என பால பாரதி கேட்டதற்கு நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுபாட்டுக்கு இருக்கும் என கூறினேன். எது எப்படியானாலும் துணை அவசியம் என முடிவுக்கு எல்லோரும் வர ஒருபதிவர் ஆணுக்கு ஆண் துணையாக இருக்கக் கூடாதா என்ற நெருப்பு போன்ற யோசனை கூற “அவனா நீயி” என அவரிடமிருந்து சற்றே ஒதுங்குவது போல பாவனை செய்யப்பட்டது.

குளிர்க்காலமாகையால் சட்டென்று இருள் சூழ்ந்தது. கூட கொசுத்தொல்லை வேறு. ஓரிடத்திலிருந்து பூங்காவின் இன்னொரு இடத்துக்கு போனாலும் அங்கும் தொல்லைதான்.

அடுத்த ஐட்டமாக வரும் பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக பேச்சு வந்தது. இதையும் லக்கிலுக்கே துவக்கி வைத்தார். ஓரிரு மாதங்களுக்கு முன்னால் திமுகவுக்கு 40 இடங்களிலும் தோவி என்று தனக்கு தோன்றியதாகவும் ஆனால் பாதிக்கு பாதி என்ற அளவுக்கு நிலைமை தேறியிருப்பதாகவும் அவர் கூறினார். மத்தியில் பாஜக வரும் வாய்ப்பு இருக்கலாம் என கூறப்பட்டாலும் தமிழகத்தில் அதற்கு சங்குதான் என கூறப்பட்டது. பாஜக அனுதாபியான என்னிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது நானும் தமிழகத்தை பொருத்தவரை பாஜக அனாதைதான் என உறுதி செய்தேன்.

“ஏதாவதுசெய்யணும் பாஸ்” என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தை நர்சிம் தொடங்கி வைத்து பேசினார். பீச்சு பதிவர் கூட்டத்தை பற்றிய அவரது பதிவில் ஒரு அனானி நீங்கள் கூடி என்ன கிழித்தீர்கள் என அவருக்கு பின்னூட்டமிட்டதாகவும், அவருக்கு அப்போது தக்க பதிலை கூறினாலும் நிஜமாகவே நாம் ஏதாவது செய்ய வேண்டாமா என அவர் கேள்வி கேட்க, அதெல்லாம் சிறு சிறு குழுக்களாக செய்வதுதான் பிராக்டிகல் என்று கூறிய பாலபாரதி என்றென்றும் அன்புடன் பாலா மற்றும் செந்தழல் ரவி ஆகியோர் ஏற்கனவே செழ்து வரும் தொண்டுகளையும் குறிப்பிட்டார்.

இதற்குள் நேரம் 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. கொசுத்தொல்லை தாங்க முடியலை நாராயணா என்பதால் இடத்தை காலி செய்து பூங்காவுக்கு பின்னால் உள்ள டீக்கடைக்கு சென்றோம். அங்கு பல குழுக்களாக பிரிந்து டிஸ்கஷன் நடந்தது. பதிவர் தராசு திடீரென வந்து என்னிடம் மன்னிப்பு கோரினார். முதலில் திகைத்த நான் அவரிடம் விவரம் கேட்க அவர் எனது ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது என்ற தலைப்பில் நான் இட்ட பதிவுக்கு தான் இட்ட பின்னூட்டத்தை எனக்கு நினைவுபடுத்தினார். இதெல்லாம் ஒன்றுமேயில்லை என நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அதே சமயம் செக்‌ஷன் 498-A துர் உபயோகம் செய்யப்படுவதை எதிர்த்து பதிவுபோட்டவர் தனது உதாரணங்களில் ஜாக்கிரதையாக இல்லாததால் அவர் தனது கேசை தானே பலவீனப்படுத்தினார் என்பதை மறுபடியும் வலியுறுத்தினேன். இதே மாதிரித்தான் சாதிக்கொடுமைக்கு எதிராக எழுதுபவர்கள் எல்லா குழப்பங்களுக்கும் பார்ப்பனரே காரணம் என எழுதுவதன் மூலம் விவாதம் திசைதிரும்பிப் போவதையும் நான் அவரிடம் குறிப்பிட்டேன். அவ்வாறு செய்வதால் அவர்கள் கேசுகளுக்கு பார்ப்பனர் தர்க்கூடிய ஆதரவு கிடைக்காமல் போகிறது எனக் கூறி நான் எழுதிய சகபதிவாளர்களே உங்களுக்கு வேண்டியது என்ன என்னும் பதிவில் எழுதிய “சிலர் கூறலாம் நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல. பார்ப்பனியம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்ச்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர். இதே போல ஒரு பதிவர் தமிழிசைக்கு ஆதரவாக பதிவுபோடும்போது தேவையின்றி "தமிழில் பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று கொச்சையான தலைப்பை வைத்து பார்ப்பனரை இப்போதைய நிலைக்கு பொறுப்பாக்க முயற்சி செய்ததில், தமிழிசைக்கு ஆதரவு தெரிவிக்கும் குரல்கள் அப்பதிவில் அந்த அளவுக்கு பலமிழந்தன” என்னும் கருத்துக்களை இன்னொரு முறை வலியுறுத்தினேன்.

இப்போது இப்பதிவை நான் போடுவதற்கான உண்மை காரணத்துக்கு வருகிறேன். உண்மை கூறப்போனால் முதலில் பதிவுபோடும் எண்ணம் என்னிடம் சுத்தமாகவே இல்லை. ஆனால் கடலையூர் செல்வம் அவர்கள் நாடி ஜோசியம் பற்றி தனது அனுபவத்தைக் கூறினார். மனிதர் அந்த அனுபவத்தில் ஆடிப்போயுள்ளார். தான் டெக்ஸ்டை டெக்னாலஜியில் வேலை செய்வது உட்பட பல விஷயங்கள் அவர் பெயருக்கு கிடைத்த ஓலையில் இருந்ததாகக் கூறி அதிசயித்தார். தான் பெரியார் பாசறையை சேர்ந்தவர் என்றும் நம்பிக்கையில்லாமலேயே சென்றதாகவும் இப்போது என்ன நினைப்பது எனத் தெரியவில்லை என்றும் கூறினார். அக்கினி பார்வையும் தனது அனுபவத்தை கூறினார். அவரது ஓலை திருச்சியில்தான் இருக்கும் என கூறப்பட்டதாகவும் தான் இன்னும் போய் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். சிங்கை பதிவர் ஜோசஃப் பால்ராஜ் அவர்களும் நாடி ஜோசியத்தில் தனது தாயின் முழுப்பெயரும் கூறப்பட்டது என்று அதிசயத்துடன் கூறினார். பேச்சு இப்போது “சிதம்பர ரகசியம்” சீரியல் பற்றி திரும்பியது. இந்திரா சவுந்திரராஜன் அவர்கள் எழுதியது. அதுவரை இந்த சந்திப்பைப் பற்றி பதிவு வேண்டான்மெனெ நினைத்தவன் போட்டு வைப்போம் என துணிந்தேன். ஆக இந்த அறுவை பதிவுக்கு கடலையூர் செல்வமே பொறுப்பு என கத்துகிறான் முரளி மனோஹர்.

உலகத் தரம் வாய்ந்த படங்கள் பற்றி பேச்சு வந்தது. பருத்திவீரன் என்னும் படம் கண்டிப்பாக உலகத் தரம் வாய்ந்தது என லக்கிலுக் கூறினார். என்ன, பாடல்களை மட்டும் எடுத்து விட வேண்டும் என்றார். கில்லி படத்தில் த்ரிஷா ஓடி வந்து விஜய் மேல் தாவி ஏறுவதை 20 டேக்குகள் எடுத்தார்கள் என ஒரு பதிவர் அலுப்புடன் கூறினார். சண்டைக்காட்சி ஷூட்டிங் பார்க்க ஆசை தெரிவித்தார் இன்னொருவர்.

மணி ஒன்பது ஆனதும் ஒவ்வொருவராக விடைபெற்று செல்ல நானும் எனது மின் ரயில் வண்டியை பிடித்து மீனம்பாக்கம் சென்றேன். பதிவு ஆரம்பித்த நேரம் இரவு 10.23. இப்போது நேரம் 11.47. குட் நைட்.

அன்புடன்,

டோண்டு ராகவன்.

http://dondu.blogspot.com/2008/12/27122008.html

-------------------

***

சக வலைப்பதிவரின் கருத்துக்கும் மதிப்பளித்து.. ஒற்றுமையை வலியுறுத்தும் ஒன்றுகூடல். நமக்குத் தெரியாததை.. அவர்கள் செய்வதைக் காண்கிறீர்கள்..! :rolleyes:

Edited by nedukkalapoovan
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா கண்டத்தில அமெரிக்க எகாதிபத்தியம் என்றால் ...இந்திய உபகண்டத்தில பார்ப்பாணியம் .......என்று சொல்லிறியள் நீங்கள் சரியான சமத்து.......

நல்லதா 4 பேர் சந்திச்சு பேசியிருக்காங்க. மகிழ்ச்சி. வாழ்த்துகள்

உந்த "டோண்டு" எண்டவர்தானே ஈழத்து அட்டை பிகருகள் எண்டு, எங்கடை பிள்ளைகளை கேலி சொல்லி எங்கடை சாத்திரியாரை சூடாக்கினவர்...!!

டோண்டு வுக்கு ஒரு நண்றியை போதிக்க வேணும்...!! இந்திய பிராமணனை அடிச்சு கொலை செய்தால் தவறு இல்லை எண்டு என்னை ஏற்று கொள்ள வைத்து போட்டார்...!!

  • கருத்துக்கள உறவுகள்

உந்த "டோண்டு" எண்டவர்தானே ஈழத்து அட்டை பிகருகள் எண்டு, எங்கடை பிள்ளைகளை கேலி சொல்லி எங்கடை சாத்திரியாரை சூடாக்கினவர்...!!

டோண்டு வுக்கு ஒரு நண்றியை போதிக்க வேணும்...!! இந்திய பிராமணனை அடிச்சு கொலை செய்தால் தவறு இல்லை எண்டு என்னை ஏற்று கொள்ள வைத்து போட்டார்...!!

தயா அது அட்டைபிகர் இல்லையாம் அட்டு பிகராம். பின்னர்தான் விளக்கம் கிடைத்தது. அடுத்ததாய் அப்படிச்சொல்லி சூடாக்கினவர் முரளி என்பவர். ஆனால் டோண்டு சொன்னது புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தார் அதனால்தான் நான் அவருடன் சூடாகவேண்டி வந்தது.இப்பவந்து தான் ஒரு பிராமணி எண்டதை எல்லாரிற்கும் மார்தட்டி சொல்லுறார் அவ்வளவுதான்.

தயா அது அட்டைபிகர் இல்லையாம் அட்டு பிகராம். பின்னர்தான் விளக்கம் கிடைத்தது. அடுத்ததாய் அப்படிச்சொல்லி சூடாக்கினவர் முரளி என்பவர். ஆனால் டோண்டு சொன்னது புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தார் அதனால்தான் நான் அவருடன் சூடாகவேண்டி வந்தது.இப்பவந்து தான் ஒரு பிராமணி எண்டதை எல்லாரிற்கும் மார்தட்டி சொல்லுறார் அவ்வளவுதான்.

என்னையா கொடுமை இது. சாத்திரி அண்ணை முரளி எண்டு சொல்ல யாராச்சும் அது நான் எண்டு நினைக்கப்போகினம். அப்பிடி எண்டால் எண்ட பெயரை திரும்பவும் மாத்துறது நல்லது போல இருக்கிது. ஊறிப்பட்ட முரளிகள் வலையுக்க உலாவுது போல. :lol:

தயா அது அட்டைபிகர் இல்லையாம் அட்டு பிகராம். பின்னர்தான் விளக்கம் கிடைத்தது. அடுத்ததாய் அப்படிச்சொல்லி சூடாக்கினவர் முரளி என்பவர். ஆனால் டோண்டு சொன்னது புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தார் அதனால்தான் நான் அவருடன் சூடாகவேண்டி வந்தது.இப்பவந்து தான் ஒரு பிராமணி எண்டதை எல்லாரிற்கும் மார்தட்டி சொல்லுறார் அவ்வளவுதான்.

ஓ.. நண்றி சாத்திரி...

அதுதானே பாத்தன், எங்கட பிள்ளையளை அட்டை எண்டு எதை வச்சு சொன்னாங்கள் எண்டு சந்தேகம் இருந்துது.. அட்டை எண்டால் ஒட்டுறது எல்லோ..?

ஐயராத்து பிகர் கள் கோயிலிலை சனம் குடுக்கிற பாலையும், தயிரையும் நெய்யையும் திண்டு நல்ல தளுக்கு மொழுக்காதான் இருப்பினம்... எங்கட பிள்ளையள் அளவாக சாப்பிட்டு உடல் உழைப்பாலை வலுவான உடல் அமைப்போடை இருப்பவர்கள்.. அப்பிடி பாத்தால் ஐயர் சொன்னது உண்மைதானே..?

வாங்கி( மேசைக்கு கீழாலையும்) தின்னுறவைக்கு வாய்கொழுப்பு அதிகம் தான்...!!

என்னையா கொடுமை இது. சாத்திரி அண்ணை முரளி எண்டு சொல்ல யாராச்சும் அது நான் எண்டு நினைக்கப்போகினம். அப்பிடி எண்டால் எண்ட பெயரை திரும்பவும் மாத்துறது நல்லது போல இருக்கிது. ஊறிப்பட்ட முரளிகள் வலையுக்க உலாவுது போல. :D

அவனா நீங்க..?? எனக்கு அந்த சந்தேகம் வந்து கன நாள்... :lol:

இது என்ன வம்பாப்போச்சிது. அவர் இந்தியாவில இருக்கிறார். நான் கனடாவில இருக்கிறன். திரும்ப மாப்பிளை எண்டு எனது பெயரை மாத்துறது நல்லது போல இருக்கிது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா கொடுமை இது. சாத்திரி அண்ணை முரளி எண்டு சொல்ல யாராச்சும் அது நான் எண்டு நினைக்கப்போகினம். அப்பிடி எண்டால் எண்ட பெயரை திரும்பவும் மாத்துறது நல்லது போல இருக்கிது. ஊறிப்பட்ட முரளிகள் வலையுக்க உலாவுது போல. :lol:

முரளி நீங்கள் பயப்படத்தேவையில்லை உங்கடை நல்ல மனசுதான் எல்லாருக்கும் தெரியுமே ..உங்களிற்கு எங்கள் பெண்களை பார்த்து அட்டு பிகர் என்று கேவலமாய் சொல்ல மனசு வருமா?? வராதே.. :D:huh: இது தமிழ்மணத்திலை வருகிற இந்தியாவிலை உள்ள முரளி என்பவர்தான் அப்படி சொன்னது :D

கனடாவில், யாழ் சந்திப்பில், சோடி சோடியா கலந்து கொண்ட அந்த அட்டை.. அட்டு பிகருகளைப் பற்றி டோண்டுவும் முரளியும் எழுதனும்.. அப்பதான் இந்த சந்தியாசிகளின் பழைய விரோதத்தைக் காவித்திரியும் வியாதி தீரும்..! யாழும் உருப்படும்..! தூங்குவது போல் நடிக்கும் அதன் நிர்வாகமும் சில உறுப்பினர்களும் விழித்தெழுவார்கள்.

http://kundumani.blogspot.com/2008/12/blog-post_31.html

அங்கேயும் அதே குருவிகள் தான்..அதே யாழ் வாசகன் தான்..இங்கிருந்து மற்ற தளங்களுக்கு காவி திரியும் அதே நபர் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் முகம் தெரியாமலே ஒரு ஓரமாய் இருந்து விடுவதே நல்லது என்கிற என்னுடைய முன்னைய அபிப்பிராயம்தான் சிறந்தது என்று தோன்றுகிறது. நம்மை மட்டும் வாரினால் பரவாயில்லை. குடும்பத்தையே அல்லவா வம்புக்கு இழுத்து சந்தி சிரிக்க வைக்கிறார்கள்...! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.