Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகள் பணம்..'' கொதித்துக் கிளம்பும் எஸ்.ஆர்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொதித்துக் கிளம்பும் எஸ்.ஆர்.பி.

''தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகள் பணம்..''

'விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் ஏகத்துக்கும் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் சினிமாவை இப்போது ஆட்டிப்படைப்பது புலிகள்தான்!'' - இப்படி ஒரு தடாலடி ஸ்டேட்மென்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.

குன்னூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது இந்த குண்டைப் போட்ட எஸ்.ஆர்.பி., 'தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசம்' என்று மாநில அரசையும் அட்டாக் செய்திருக்கிறார். கருணாநிதி ஆதரவாளரான ஜி.கே.வாசன் கோஷ்டியில் இருந்து கொண்டே எஸ்.ஆர்.பி. செய்த விமர்சனங்கள், அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. இந்த நிலையில் எஸ்.ஆர்.பி-யைச் சந்தித்தோம்.

''இந்தி சினிமாவை மும்பை நிழல் உலக தாதாக்கள் ஆட்டிப்படைக்கிற மாதிரி, தமிழ் சினிமா விடுதலைப்புலிகளோட கையிலதான் சிக்கிக் கிடக்குது. கொஞ்ச

வருஷத்துக்கு முன்னாடி மலேசியா, சிங்கப்பூர்லதான் தமிழ் சினிமாவுக்கு வரவேற்பும் ஆதரவும் இருந்துச்சு. இப்போ ஐரோப்பிய நாடுகளிலேயும், கனடா உள்ளிட்ட அமெரிக்க நாடுகளிலேயும் தமிழ் சினிமாவுக்கு செல்வாக்கு பெருகியிருக்கு. காரணம், இலங்கைத் தமிழர்கள் பல பேரு இந்த நாடுகள்ல செல்வச் செழிப்போட இருக்காங்க. இவங்கள்ல சிலரின் முக்கிய வேலையே விடுதலைப்புலிகளுக்காக வேண்டிக் கேட்டோ மிரட்டியோ பணம் வசூலிக்கிறதுதான். அவர்கள் நேரடியாவும், மறைமுகமாகவும் தமிழ் சினிமாவைத் தயாரிப்பது,விநியோகம் பண்றது போன்ற வேலைகளையும் பார்க்கிறாங்க. தமிழ் சினிமா உலகத்துல விடுதலைப்புலி ஆதரவாளர்களோட பணம் கோடி கோடியாப் புரளுது. குறிப்பிட்டுச் சொல்லணும்னா, மூன்றில் ஒரு பங்கு இந்த நபர்களின் பணம்தான்னு தகவல் வந்திருக்குது. அதாவது ஒரு வருஷத்துக்கு நாலாயிரம் கோடி ரூபாய். பணம் போடுறவனுக்கு ஒரு பிரச்னை வந்தா, பலன் அடையுறவங்களெல்லாம் ஆதரவாக் கொடி பிடிச்சு தானே ஆகணும். அதனாலதான் இப்போ தமிழ்சினிமா உலகத்துல இருந்து கொத்துக் கொத்தா விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குரல் எழுந்திருக்கு. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுக் குரல் கொடுக்காத ஹீரோக்களோட படங்கள் ஓடும் வெளிநாடு தியேட்டர்கள் துவம்சம் செய்யப்படுது. இதுக்கு பயந்து நடுங்கி நிற்கவேண்டிய சூழல் நம்ம ஊர் ஹீரோக்களுக்கு வந்தது பெரிய பரிதாபம்!'' என்று நிறுத்தியவரிடம்,

''தமிழக சட்டம்- ஒழுங்கு நிலை பத்தி காட்டமாகப் பேசுகிறீர்களே...'' என்று கேட்டோம்.

''நான் பொய் பேசலையே? தமிழகத்துல சட்டம்- ஒழுங்கோட நிலை பயத்தைத் தருது. கொலை, கொள்ளை, வழிப்பறின்னு மாநிலத்தோட நிலைமை ரொம்ப மோசமாப் போயிட்டிருக்குது. அதிலும், தமிழக அமைச்சர்கள் சிலரே கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், நிலஆர்ஜிதம் மாதிரியான விவகாரங்களில் சிக்குறதைப் பார்க்கிறப்போ, பகீர்னு இருக்கு. தட்டிக் கேட்க வேண்டிய போலீஸோட நிலைமை அதை விட மோசம். வருவாய்த் துறை, பத்திரப்

பதிவு, போக்குவரத்துத் துறைகளிலேயும் ஊழல் புகார்கள். இதுக்காக நான் முதல்வரை விமர்சிக்கிறதா எடுத்துக்கக் கூடாது. நம்ம முதல்வர் இந்த நேரத்துல ஒரு மருத்துவரைப் போல செயல்பட்டு நிர்வாகப் புண்ணுக்கு சிகிச்சை தரணும்!'' என்றார்.

தமிழக சட்டம்- ஒழுங்கு மீதான எஸ்.ஆர்.பி-யின் சாடல் குறித்து தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிசாமியிடம் கேட்ட போது, ''கூட்டணிக் கட்சிப் பிரமுகரான எஸ்.ஆர்.பி-யின் இந்த விமர்சனம் கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிவது போலத்தான் இருக்கிறது. அவர் சொல்லுமளவுக்கு தமிழ் நாட்டின் நிலை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்தமாகக் குற்றம் சாட்டக் கூடாது!'' என்றார்.

இதற்கிடையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பாக, வெளிநாட்டில் இருந்து தமிழ் சினிமாவில் முதலீடு செய்யும் நபர்கள், அதன் மூலம் இதுவரை வெளிவந்த படங் கள், அவர்களிடம் இருந்து பலன் பெறும் திரைத் துறையினர் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய சி.டி. ஒன்று தயாராகிக் கொண்டுஇருக்கிறதாம்.

எஸ்.ஆர்.பி-யின் குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜாவிடம் போனில் தொடர்புகொண்டு கருத்துக் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

எனவே, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணனிடம் கேட்டோம்.

''இதுவரைக்கும் யாருமே யோசிக்காத, சொல்லாத ஒரு கருத்தை எஸ்.ஆர்.பி கூறியிருக்கறது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. பாரம்பரியமான படத்தயாரிப்பு நிறுவனங்களான ஏவி.எம்., சிவாஜி ஃபிலிம்ஸ், ஆஸ்கார் ஃபிலிம்ஸ் எல்லாம் இலங்கைத் தமிழர் நிறுவனமா என்ன? ஒரு வருஷமா பிரமிட் சாய்மீரா நிறுவனம் பிரமாண்டமான படங்களைத் தயாரிக்குது. அவங்க சிலோன்காரங்களா? மற்றபடி, மதுரை, திருச்சி,சேலம்னு தமிழ்நாட்டுல பல பகுதியிலேர்ந்து கோடம்பாக்கம் வந்து சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கிற தயாரிப்பாளருங்க பலர் இருக்காங்க. அவங்க ளெல்லாம் சினிமாவுக்காக வீட்டையும், காடு, கழனியையும் வித்து சினிமா தயாரிக்கிறாங்க. பலபேர் போட்ட பணத்தை எடுக்க முடியாம நிர்க்கதியா நிற்கிறாங்க அதுதான் நிஜம். இது தெரியாம ஆளாளுக்கு ஒண்ணு சொல்லிகிட்டு இருந்தா எப்படி?'' என்றார்.

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

அடடே அப்ப சங்கரின் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'எந்திரன்' படத்தை தயாரிப்பது த.வி.பு. ஆ?? :D

அப்ப புலம்பெயந்த பணக்காற தமிழர்கள் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்களோ...???

அடடே அப்ப சங்கரின் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'எந்திரன்' படத்தை தயாரிப்பது த.வி.பு. ஆ?? :D

ஒரு எழுத்தைத் தவற விட்டீர்கள்.

அடடே அப்ப சங்கரின் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'எந்திரன்' படத்தை தயாரிப்பது த.வி.பு. ஆ?? :D

அதை சண் திரைப்பட பிரிவு எப்பவோ வாங்கீட்டுது...

அப்ப ஐங்கரனுக்கு தமிழ் நாட்டிலை ஆப்பு இருக்கி எண்டுறீயள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுத்தைத் தவற விட்டீர்கள்.

அதற்காக வழக்கு ஒன்றையும் போட்டுவிடாதீர்களய்யா.. :D

அப்ப எப்படி வரனும்??? 'தமிழீழ விடுதலை புலிகள்' [த.வி.பு]

Edited by Danklas

நன்றாக திட்டமிட்டு ஈழத்தமிழருக்கும்... புலிகளுக்கும் எதிராக.... எதிரானவர்களும்.... துரோகிகளும்... வடிவாக.... காய்களை நகர்துகின்றார்கள்.... நாம் அவதானமாக விழித்தௌவேண்டும். :D:lol::(

இவருக்கு மட்டுமா புலிக்காச்சல்..?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.ஆர்.பி இன்னுமொரு சுப்பிரமண்யசுவாமி.

விடுதலைப்புலிகளிடம் இருந்து தமிழ்திரையுலகினர் பணம் பெற்றதாக பேசிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிராஜா கோவையில் நேற்று கூறினார்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி தலைவர் மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 3 பேரையும் சினிமா டைரக்டர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள்.

பின்னர் டைரக்டர் பாரதிராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் எல்லா குடிமகன்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. அந்த வகையில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக, தொப்புள்கொடி உறவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு விடிவு வேண்டும் என்பதற்காக உணர்வுகளை வெளிப்படுத்தி சீமான் போன்றவர்கள் குரல் கொடுத்தார்கள். அதற்காக அவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு முரண்பாடாக இருந்ததாக சொல்லி அரசு தரப்பில் அவர்களுடைய கடமையை செய்திருக்கிறார்கள்.

ஒரு தோழனாக, உணர்வுள்ள, இனப்பற்றாளனாக சீமான், அவருடைய கடமையை செய்து உள்ளார். கொளத்தூர் மணியும், மணியரசனும் சொந்த விஷயத்துக்காக இங்கு வரவில்லை. ஒரு பொதுநலத்துக்காக மொழியின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில் ஏற்பட்ட உணர்வின் அடிப்படையில் மகிழ்ச்சியாக இந்த சிறைக்கு வந்திருக்கிறார்கள். தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. சீமான் உள்ளிட்டோர் மீதான பிரச்சினை தற்போது வழக்கில் உள்ளது. எந்த அடிப்படையில் அவர்கள் பேசினார்கள் என்ற விபரங்கள், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபிறகுதான் தெரியவரும்.

விசாரணை முடிந்து அவர்கள் வெளியில் வந்துவிட்டார்கள் என்றால் அது பற்றி அப்போது விமர்சிக்க முடியும். இப்போது விமர்சிக்க முடியாது. சீமான் உள்ளிட்டோருக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும். அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இலங்கை பிரச்சினையில் திரைப்படத்துறையினர் மட்டும்தான் பேசவேண்டும் என்பதில்லை. இன உணர்வுள்ள யார்வேண்டுமானாலும் எந்த மேடையிலும் பேசலாம். இது தமிழனின் பிரச்சினை.

இலங்கை தமிழர் பிரச்சினை தீர, நிச்சயமாக இன உணர்வுள்ள தமிழர்களை ஒன்றிணைத்து அப்படிப்பட்ட மேடையை ஏற்படுத்தலாம். இலங்கை தமிழர் பிரச்சினைக்காக நாங்கள் முதல்வரை சந்திக்கவில்லை. சினிமா தொழில் சம்பந்தமாக பலமுறை சந்தித்து பேசியிருக்கிறோம். சீமானை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முதல்-அமைச்சரிடம் முன்வைக்கவில்லை. நீதிமன்றத்தில்தான் அந்த கோரிக்கையை வைப்போம். முதல்-அமைச்சரிடம் வைக்கமாட்டோம். வழக்கை சட்டரீதியாக வழக்கறிஞர்கள் எதிர்கொண்டு சீமான் உள்ளிட்டோரை வெளியில் கொண்டுவருவார்கள்.

தமிழக திரைப்பட துறையினருக்கு விடுதலைப்புலிகள் பணம் தருவதாக காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியிருப்பது தமிழ் திரையுலகத்தினருக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உளவுத்துறை பிரமாதமாக உள்ளது. அவர்கள் கண்களை எல்லாம் மூடிவிட்டு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இப்படி சொல்கிறார் என்றால் இது திரையுலகினருக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை அவர் நிரூபித்து காட்ட வேண்டும். அவ்வாறு நிரூபித்து காட்டி, பணம் வாங்கியவர்களை தண்டிக்க வேண்டும்.

அவர் பொறுப்புள்ள அரசியல் தலைவராக இருந்தால் தமிழ்த்துறையினர் பணம் வாங்கியதை நிரூபித்து அதற்கான தண்டனையை வாங்கி தர வேண்டும். இல்லையென்றால் திரையுலக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

http://www.tamilseythi.com/tamilnaadu/bara...2009-01-07.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.