Jump to content

பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்...


நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா?  

28 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா?

நடுவர்கள் : , சண்முகி , சோழியன்

உற்சாகப்படுத்துகின்றது என்ற அணியில்:

வசம்பு -அணி தலைவர்

குறும்பன்

ஈஸ்வர்

விக்டோர்ப்

குளக்காட்டான்

மழலை

நடா

குருவி

மதுரன்

சோம்பேறியாக்கின்றது என்ற அணியில்:

சியாம் -அணி தலைவர்

சிம்ரன்2005

வியாசன்

ஈழப்பிரியேன்

நிதர்சன்

நிலவன்

இளைஞன்

சாத்திரி

மதன்

திரையின் பின்னால் : இராவணன், மோகன்

நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : "பபா" தூயா. :P

ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலம். அணி தலைவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் கருத்து எழுதலாம். நடுவர்கள் மட்டும் வேண்டிய நேரத்தில் கருத்து எழுதலாம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவீனமும் தொழில் நுட்பமும் மனிதனை சோம்;பேறியாக்குகின்றது உதாரணத்திற்கு முன்னர் ஒருவர் செய்திகளை அறிய வேண்டுமானால் காலையிலெழுந்து பத்திரிகை வாங்க கடைக்கு போக வேண்டும். எனவே அவர் நேரத்தோடு எழுந்து பல் துலக்கி குளித்:தோ முகம் கழுவியோ வெளிக்கிட்டு கடைக்கு போய் போகும் வழியில் தெரிந்தவர்களைப்பார்த்து கதை;த்துகடையில் பத்திரிகையை வாங்கிவருகிறார். இதில்பலநன்மைகள்உண்டு

1)காலை நேரத்தோடு தன்னை சுத்தமாக்கி கொள்கிறார்

2)கடைக்கு போக வர நடப்பதால் அவர் உடல் நலத்திற்கு நல்லம்

3)போய் வரும்போது தெரிந்தவர்களுடன் கதைப்பதால் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறதென்கிற செய்திகளை அறிவதுடன் அவர்களினுடனான உறவு பேணப்படுகிறது.

அதைவிட்டு காலை எழுந்ததும் கணணியை போட்டால் முகம் கழுவுவதுமில்லை எழும்பி நடக்கிறதுமில்லை

Link to comment
Share on other sites

நன்றி திரு.சியாம் அவர்களே...இப்பொழுது இல்லை என்ற அணியில் இருந்து யாரவதுஒருவர் பேசலாம்.[தலைவரை காணாத காரனத்தால்]..

Link to comment
Share on other sites

திரைக்குப் பின்னாலிருந்து எம்மை உற்சாகமூட்டும் அன்புள்ளங்களே மேன்மை தங்கிய நடுவர்களே உற்சாகமாக என்னணியில் வாதாட வந்திருக்கும் உடன் பிறப்புக்களே எதிரணியில் சோம்பேறிகளாக உட்காந்திருக்கம் சோதரர்களே உங்கள் எல்லோருக்கும் எனது அன்பான வணக்கம்.

பொதுவாகவே எமது தாய் தந்தையர் காலத்திலே பல விடயங்களை செய்து முடிப்பதற்கே பல நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது அதே விடயங்களை ஒரு சில மணித் துணிகளிலேயே முடித்து விட முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விடயம் கொழும்பிலுள்ளவர் அறியும் முன்பே வெளிநாட்டிலுள்ளோர் அறிந்து விடுகின்றனர் என்றால் சுட்டு விரலுக்குள் உலகத்தை கொண்டு வந்த நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் தானே காரணம். எதிரணித் தலைவர் கூறியது போல் ஒருவர் தனது காலைக் கடன்களை செய்யாமல் தனது அன்றாட வேலைகளை செய்யத் தொடங்குகின்றாரெனின் அது அவருடன் பிறந்த சோம்பேறித்தனமே தவிர வேறொன்றுமில்லை. முன்பு ஒருவரை சந்திக்க வேண்டுமாயின் ஒரு நாள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இப்போது தொலைபேசி கணணி போன்றவற்றால் வீட்டிலிருந்தபடியே சந்திப்பை நடத்தி விடலாம். அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் சத்திரசிகிச்சை செய்து கொண்டிருக்கும் ஒரு வைத்தியர் நெற் மீற்றிங் மூலம் அமெரிக்காவிலுள்ள இன்னொரு வைத்தியரிடம் ஆலோசனை பெறலாம். ஏன் மேலதிகமாக இந்தப் பட்டிமன்றமே மேடையின்றி நடைபெறுவதெப்படி?? இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே மற்றவர்களின் வாதத்திற்கும் வழிவிட்டு மீண்டும் தொடர்கின்றேன். நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ் உறவுகளே!

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? என்ற தலைப்பில் தூயா அவர்கள் இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்தியுள்ளார். அவரது இம்முயற்சிக்கு எல்லோரும் ஒத்துழைத்து, இப்பட்டிமன்றமானது மிகவும் சிறப்பாகவும் தரமாகவும் நிகழ ஆதரவு வழங்குவார்கள் என நம்புகிறேன்.

மேலும், தினமும் விஞ்ஞான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் மனிதகுல மேம்பாட்டுக்கு சாதனைகளையும்ää கூடவே சோதனைகளையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை எமது வாழ்வில் கண்டுகொண்டு வருகிறோம். அந்த வகையிலே விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உட்சாகப்படுத்துகின்றதா அல்லது சோம்பேறியாக்குகின்றதா என்ற தலைப்பில் இடம்பெறும் தரவுகள் ஒருகணமாவது வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டினால், இப்பட்டிமன்றம் தனது நோக்கத்தில் வெற்றியடைந்தது எனக் கருத இடமுண்டு. அந்தவகையில் இரு அணிகளிடமிருந்தும் காத்திரமான கருத்துகளை விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.

முதலில் கருத்துகளை முன்வைத்த ஷியாம் அவர்கள், பத்திரிகை வாங்க காலை எழுந்து செல்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மையை கணனி தடைசெய்து, மனிதனை சோம்பேறியாக்குகிறது என்று தனது கருத்தை வைத்து, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற தனது வாதத்தை ஆரம்பித்துள்ளார்.

இனி, இதை வெட்டிக் கருத்துக் கூறுவதோடு, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதற்கு வலுச்சேர்க்கும் கருத்துகளை முன்வைக்க, 'உற்சாகப்படுத்துகின்றது' என்ற அணியிலிருந்து வசம்புவை அல்லது அவரது அணியிலிருந்து ஒருவரை அழைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாகவே எமது தாய் தந்தையர் காலத்திலே பல விடயங்களை செய்து முடிப்பதற்கே பல நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது அதே விடயங்களை ஒரு சில மணித் துணிகளிலேயே முடித்து விட முடிகின்றது
,வசம்பு)

தந்தையர்காலத்தில் என்ன எம்தாத்தா காலத்திலும் ஒரு வேலையை செய்ய மனிதவலு அதிகம் பயன்பட்டது எனது தாத்தா அதிகாலை 5 மணிக்கு எழுந்து தோட்டத்திற்கு போய் தண்ணீருற்றி 3 4 சாக்கு கத்தரிக்காய் மிளகாய் என்று பிடுங்கி மாட்டு வண்டிலில் சந்தைக்கு கொண்டு போய் விற்று காலை நான் பாடசாலைக்கு புறப்படும்போது 7.30ற்கு பணத்தை வீட்டில் கொடுத்துவிட்டு உணவருந்திவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு போய்விடுவார். அவர் இறக்கும் போது 81 வயது அதுவும் வருத்தத்தால் அல்ல யுத்தத்தால் செல் விழுந்து. 81 வயது வரை அவரிற்கு பெரிய வருத்தம் எதுவும் வந்தில்லை காரணம் அவரின் உடல் உழைப்பு.

இன்று 50 போர் செய்யும் வேலையை ஒரு இயந்திரம் செய்து விட்டு போகிறதுஅதனால்

1)மனிதவலு கூடிய சனத்தெகை கூடிய நாடுகளின் எதிர் காலம் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றன

2)எல்லாநாடுகளிலும் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கின்றது

3)வேலை வாய்ப்பின்மையால் குற்ற செயல்கள் அதிகரிக்கின்றன

இவைகளால் எதிரணியினரைபோல் வேலையற்றமனிதன் வீடின்றி வீதிகளில் சோம்பேறிகளாய்.படுத்துறங்கி கொண்டிருக்கிறான்.

Link to comment
Share on other sites

அன்பின் சியாம் நீஙகளும் நானும் மட்டும் கருத்தெழுதுவது சரியல்ல. இனிநாமிருவரும் இறுதியில் மட்டும் தான் எமது கருத்துக்களை தொகுத்து வழங்கலாம். எனவே எனது அணியிலிருந்து யாராவது ஒருவர் வந்து தனது கருத்தை எழுதலாம்.

மன்னர் ஹரி அவர்களே தாங்களே இப்படிச் செய்யலாமா??? விதிமுறைகளை கவனிப்பதில்லையா??

Link to comment
Share on other sites

அன்பின் சியாம் நீஙகளும் நானும் மட்டும் கருத்தெழுதுவது சரியல்ல. இனிநாமிருவரும் இறுதியில் மட்டும் தான் எமது கருத்துக்களை தொகுத்து வழங்கலாம். எனவே எனது அணியிலிருந்து யாராவது ஒருவர் வந்து தனது கருத்தை எழுதலாம்.

மன்னர் ஹரி அவர்களே தாங்களே இப்படிச் செய்யலாமா??? விதிமுறைகளை கவனிப்பதில்லையா?? விதிமுறைகளை மதித்துதான் நான் எந்தவீத கருத்தும் எழுதாமல் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் பட்டிமன்றத்தை உற்சாகப்படுத்துவதற்கே கரகோஷம் செய்தேன்! தவறு இருந்தால் மன்னிக்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லார்க்கும் வணக்கமுங்கோ....

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? என்ற இந்த பட்டிமன்றத்தில தலைபோற வேலையை தலமறைவா செய்துண்டு இருக்கும் சண்முகியக்கா... கோழியன்... ச்சீ... சோழியன் அண்ணாவுக்கும் எனது சகபாடிகளுக்கும் மற்றும் சோம்பறியாக்கிறது என்று படுக்கைகளுடன் சோம்பல் முறிக்காமல் நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் பேச வந்திருக்கும் எதிர்குழுவினர்க்கும் மீண்டுமொருமுறை வணக்கம் போட்டுக்கிறன்.

எதிர்கட்சி அண்ணாச்சி சொன்னார்... அந்தகாலத்துல அவங்கள் உடம்பு வேர்க்க விறுவிறுக் வேலை செஞ்சாங்களாம்.... 81 வயசு வரைக்கும் நோய் நொடியில்லாம இருந்தாங்களாம். அத நான் இல்லையெண்டு சொல்லிங்கோ. எப்பவாவது நவின தொழில்

நுட்பம் சொல்லிச்சுதா மனிசனை ஆரோக்கியமில்லாம இருக்கச்சொல்லி.

மனுசனுடைய, உலகத்தின் தொழிற்பாடுகளை, தொடர்புகளை இலகுபடுத்தத்தான் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சி அடைஞ்சுண்டு வருது. இதுவும் இல்லாம அந்த காலத்தில நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் அவங்க அப்புடித்தான் இருந்திருப்பாங்க என்பதுக்கு என்ன உத்திரவாதம். இப்பவும் கூட இலங்கை போன்ற நாடுகளில தொழில்நுட்பம் வளர்சி அடையாதாலதான் சுனாமி பற்றிய எச்சரிக்கையை தகவலை சரியாக கணித்து பயன்படுத்த முடியவில்லை. வாத்தியாரோட பாடல் ஒண்டு சொல்லலாம்.... அதாவது திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்... திருடனாப் பாத்து திருந்தணும். அதமாதிரி.... விஞ்ஞான வளர்ச்சி பற்றியும் அதுபற்றிய தேவைகள் பற்றியும் சரியான விரிவான விளக்கம் இல்லாதவர்கள் உலகத்தின் புதிய பரிணாமத்தினை ஏற்கும் பக்குவமற்ற சோம்பேறிகள் போல...

சோம்பேறிகளா பார்த்து சோம்பலை முறிச்சாத்தான் உண்டு.... அல்லாவிட்டால் நாங்கள் என்னதான் கூக்குரல் எழுப்பினாலும் செவிடன் காதுல ஊதின சங்குதான்.

இப்போ கால ஓட்டத்தில் நேரத்தை மிச்சப்படுத்தவே ரொக்கேட் தேவைப்படுது. இதுக்கு பெரிதும் உதவியா இருப்பது விஞ்ஞான வளர்ச்சி. அதனோட வளர்ச்சியின் வீச்சுக்கு மனிதனால் சிறிது நேரம் ஈடு கொடுக்க முடியாது போகும்போதுதான் வேலையின்மை போன்ற இதர பிரச்சனைகள் உருவாகுகின்றது. பிளான் போடமல் பிள்ளை பெத்துக்கிறதில்லையா.. அதுபோலதான் இது. இதுவும் நாளடைவில் சரியாகும். ஆகவே நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவனுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கு குரங்கு கையில் பூமாலை போலதான்.

ட்ட்ட்ரிரிரிரிரிரிரிரிரிங்

Link to comment
Share on other sites

நான் மைக்கை விடுவதற்கு முன்னரே, மைக்கைப் பறித்து தனது வாதங்களை ஆரம்பித்துவிட்டார் 'உற்சாகப்படுத்துகின்றது' என்ற அணியையின் தலைவர் வசம்பு அவர்கள்.. விஞ்ஞானத்திற்கு உதாரணமாக இணையத்தை எடுத்து அதன் அனுகூலத்தை கூறினார். அடுத்து ஷியாம் அணியிலுள்ளவரை அழைப்பதற்கிடையில் குறக்கிட்ட குறும்பன் அவர்கள், மைக் பிடிப்பது புதுப்பழக்கமாதலால் ஆரம்பத்தில் கோழியான்.. சோழியான் எனத் தடுமாறினாலும்... குரங்கின் கைப் பூமாலையாக இல்லாமல் விஞ்ஞானமானது விளங்கிக் கொண்டவர்களால் பயன்பாடடைகிறது என்றுமட்டுமல்ல.. விஞ்ஞானத்தின் துரித வளர்ச்சியால் வேலையில்லாப் பிரச்சினைகள் தோன்றினாலும், அது நாளடைவில் சரியாகும் எனவும் எதிர்வு கூறினார்.

(சண்முகி பார்வையாளரின் ஏகோபித்த ஆதரவுடன் மேடைக்கு வந்துகொண்டிருக்கிறார்.. பார்வையாளரை விலத்தி வர தாமதமாகிறது போலுள்ளது.. அதை நான் பார்க்க.. வசம்பு அவர்களின் கருத்தால் உணுர்ச்சிவசப்பட்ட நிலையில் ஷியாம் அவர்கள் முந்திக்கொண்டுவிட்டார்.. எனினும் அவரது கருத்துகள் விதிமுறைக்கேற்ப கவனத்தில் எடுக்கப்படமாட்டா.. ஆனால் அதே கருத்தை அவரது அணியிலுள்ள வேறு யாராவது முன்வைக்கலாம்.. அல்லது ஷியாம் அவர்கள் இறுதியில் தனது தொகுப்புரையில் அவற்றை இணைத்துக் கொள்ளலாம்.)

தலைவர்கள் கவனிக்கவும்.. இறுதியில் தங்களுக்கு வரும் சந்தர்ப்பத்தை ஒரு தொகுப்புரையாக.. அதாவது அவரவர் அணியினர் முன்வைத்த கருத்துகளின் தொகுப்பாகவும்.. எதிரணியினரின் கருத்துக்கு முன்வைத்த பதில்களின் தொகுப்பாகவும் பயன்படுத்துங்கள்.. விவாதம் தொடரும்போது ஏற்கெனவே கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு, புதிதாக ஏதாவது கருத்து தோன்றினால்.. அவற்றை அடுத்து கருத்து முன்வைக்கும் அணி சார்ந்தவர்களுக்கு தனிச்செய்தியில்.. அல்லது மெயிலில் முன்வையுங்கள்.

பார்வையாளர்கள் பட்டிமன்றத்தின் போக்கை திசைதிருப்பாதவாறு உற்சாகப்படுத்தும் நோக்கில் கருத்துகளை முன்வைப்பதில் தவறில்லை. அவை பட்டிமன்றத்தில் பங்குபற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் கருத்துகளாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் தீர்ப்புக்கு அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

இனி.. விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் இருந்து ஒருவரது கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.. பொறுமையாக ஆறுதலாக ஆணித்தரமாக தங்களின் கருத்தை முன்வைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா.. அருமையாக இருக்கு பட்டி மன்றம்..... இன்று தான் பார்த்தேன் மிகவும் திறமையாக வாதாடுகிறார்கள்.. நடுவர்கள் .. மற்றும் கருத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்... நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறி ஆக்குகின்றதா உற்சாகப்படுத்துகின்றதா என்றதலைப்பை கருத்தில் கொண்டு கருத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஏன் என்றால் விஞ்ஞானம் , தொழில் நுட்பத்தால் மனிதன் பயன் பெறுகிறானா, இல்லையா என்பது போல் கருத்துக்கள் அமைகின்றன சில இடங்களில். எனவே உங்களுக்கு தந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் அடுத்த அணி அதனை தன் வாதமாக கொண்டு உங்கள் கருத்துக்களின் வீரியத்தைக் குறைத்துவிடும்.

நன்றி மிகப்பெரிய நடுவர்கள் இருவர் இருக்கிறார்கள் அவர்கள் தான் பெரிய சிக்கலில் மாட்டபோகிறார்கள். என்ன சொல்லி மழுப்பீனம் என்று பார்ப்போம்.

நன்றி :lol::D

இதனை ஒழுங்கமைத்த தூயாத்தங்கைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா குறிப்பிட்ட ஒரு விதியை மீறவேண்டிய நிலை இருக்கிறது. அவர் பெயர்களை வரிசையாக எழுதி அதன்படி கருத்துக்களை கூறவேண்டுமென்றார். ஆனால: அப்படி நடந்தகொள்வதால் இந்த பட்டிமன்றம் நீண்டநாட்களக நடைபெறும் அத்துடன் சுவராசியம் குறைந்துவிடும் அதனால் ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலாமென்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

சரி அப்படியே விதியை மாற்றி அமைக்கிறேன்.:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவர்களுக்கும் எனது வணக்கம் பட்டிமன்றத்தில் வாய்ப்பு தந்த தூயாவுக்கு எனது நன்றிகள்.

நண்பர் வசம்பு வம்பாக கூறினார் விஞ்ஞானத்தால் நாங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று விஞ்ஞானத்தால் நாங்கள் மேடையில்லாமல் பட்டிமன்றம் நடத்துகின்றோம் என்று. ஆமய்யா நாங்கள் இந்த 25 வீத நன்மையை பெறுவதற்கு 75வீத எதிர்பயனை பெறுகிறோம்..ஒரு தொலைக்காட்சி நிகழ்வை பாத்துக்கொண்டிருக்கிறோம் அடுத்த நிகழ்வை பார்ப்பதற்கு எழுந்து செல்லவேண்டிய அவசியமில்லை இருந்தபடியே மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஒரு மனிதனை சுறுசுறுப்பில்லாமல் சோம்பேறியாக்கும் ஒரு நிகழ்வுதான் ;இது. இந்த விஞ்ஞானத்தின் வளர்ச்சிதான் மனிதனை மிகவும் துயரத்தில் கொண்டுசெல்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இந்த இலத்திரனியல் சாதனங்களினால் எவ்வளவு கதிர்வீச்சுக்கள் இடம்பெறுகின்றன என்பதை வசம்பு அறியமாட்டாரா இல்லை அறிந்தும் தன்னுடைய பக்கத்துக்காக விதண்டாவாதம் செய்கிறாரா? இந்த கதிர்வீச்சுக்களால் மூளைபாதிக்கப்பட்டு மனிதன்சோம்பலாகின்றான் என்று இவர் சார்ந்த விஞ்ஞானமே கூறுகின்றது

சில காலத்துக்கு முன்னர் பிரிட்டனிலிருந்து மாட்டிறைச்சி இறக்குவதற்கு மற்றைய நாடுகள் தடைசெய்தன அதற்கு காரணம் மாடுகளுக்கு இறைச்சி

யில் தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுத்து மாடுகளை நன்கு கொழுக்கவைத்தனர் இதனால் பெரும்இலாபம் கிடைத்தது. இந்த இறைச்சிகளை உண்டவர்கள் நோய்களினால் பாதிக்கப்படத்தொடங்கினர். நோய் வாய்ப்பட்டவர்கள் என்ன உற்சாகமாகவா இருப்பார்கள். என்னுடைய அணித்தலைவர் சியாம் குறிப்பிட்டதுபோல விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்தில் மக்கள் உடலுளைப்பால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் வயதுபோனவர்கள்கூட சுறுசுறுப்பாக இருந்தார்கள். அவர்கள் இயற்கை உணவுகளை உண்டார்கள் இன்றோ அதிக உற்பத்திக்காக கண்ட கண்ட இரசாயனப்பொருட்களை பயன்படுத்துகின்றார்கள் அதனால் ஆராக்கியமற்ற ஒரு சமுதாயம் உருவாகிறது. பழங்கள் கூட சுவைகளை இழந்துவிடுகிறது. அடுக்குமாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாவிட்டால் மாடிப்படிகளில:; ஏறுவதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றார்கள்.அவர்கள

Link to comment
Share on other sites

வியாசன் அவர்கள் அருமையாகக் கூறினார்.. மாடிப்படியேற இளைஞர்கள் இளைத்து மூச்சிழுக்கும்போது, முதியவர்கள் துள்ளித் துள்ளி ஏறிவிடுகிறார்கள் என்று.. துலா மிதித்து தோட்டம் செய்ததால் ஏற்பட்ட பயிற்சியாகக்கூட இருக்கலாம்.. அல்லது குரக்கன் புட்டும் ஒடியல் கூழும் தந்த தைரியமாகக்கூட இருக்கலாம்.. ஆனால் வியாசன் அவர்கள் அப்படியல்ல.. விஞ்ஞானம் அதிகளவு வசதிகளைக் கொடுத்து மனிதனைச் சோம்பேறி ஆக்கி, அவனது ஆரோக்கியத்தை ஆக்கிரமிக்கிறது என்றார். விஞ்ஞானமானது 25 வீதம் நன்மையைத் தரும்போது 75 வீதம் தீமைகளைப் பக்க விளைவாகத் தருகிறது என்று அடித்துக் கூறுகிறார் வியாசன் அவர்கள்..

ஆக, 'உற்சாகப்படுத்துகிறது' என்ன அணியைச் சேர்ந்தவர்கள் இதற்கு என்ன பதிலை கூறப்போகிறார்கள்.. மேலும் என்ன கருத்துகளை முன்வைக்கப் போகிறார்கள் என்று எனக்கு யோசனையாக இருக்கிறது..

அடுத்து, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்ற கருத்துகளுக்காக .. அந்த அணியிலிருந்து ஒருவரை அழைக்கிறேன்..!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் எனது வணக்கங்கள் .தூயாவுக்கு எனது நன்றிகள். நான் பட்டிமன்றத்தில் பழக்கப்பட்டவன் அல்ல.இங்கு ஏதோ என்னால் முடிந்த கருத்துக்களை வைக்கின்றேன்..

ஆனாலும் வியாசனுக்கு ரொம்பவும்ஏற்றம்தான் ஐயா நான் மற்வர்கள் ஏதாவது சொல்வார்கள் என்று காத்திருந்தேன்.அவர்கள் வர தாமதமாவதால் அவசரத்துக்கு உள்ளுர் மேளத்தை பயன்படுத்துவதுபோல நான் வந்திருக்கின்றேன்.

நான் வியாசனைப்போல அதிகம்தெரிந்தவன் அல்ல ஐயா வியாசரே நீங்கள் கூறும் திடகாத்திர மனிதர்களே கூறியிருக்கினர்றார்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று. அதனால்தான் விஞ்ஞானனிகள்; புதிது புதிதாக எதையாவது கண்டு பிடிக்கின்றார்கள். எந்த ஒரு செயலுக்கும் இரண்டுபக்க விளைவுகள் உண்டு நன்மையும் தீமையும் கலந்து இருக்கின்றது. மின்சாரத்தை கண்டு பிடித்தார்கள் அதனால் பெரிய நன்மைதான் அதில் சிறிய தீமையும் இருக்கலாம்..அதற்காக மின்சாரத்தை ஒதுக்கிவிடமுடியாது. இந்த மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் மனிதன் சோம்பேறியாகிவிடவில்லை. அதை வைத்து இன்னமும் சாதிக்க வேண்டும் என்று உற்சாகமாக போராடுகிறான். மனிதனை போராட தூண்டுகிறது விஞ்ஞானம்.. சுனாமி வருவதற்கு முன்னரே விஞ்ஞானத்தினால் கண்டு பிடிக்கமுடிந்திருக்கிறது. அது விஞ்ஞானத்தின் சாதனை. ஆனால் அதை தெரியப்படுத்தாமல் விட்டது உங்கள் பழமை வாதம். அது உடனடியாக தெரியப்படுத்தப்பட்டு உயிழப்புக்கள் இல்லாதிருந்தால் எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்.

வியாசன் குறிப்பிட்டிருந்தார் புதிதுபுதிதாக நோய்கள் உருவாகுவதாக ஐயா வியாசரே நீங்கள் பத்தாம் பசலி கருத்துக்ளை வைத்திருக்கின்றீர்கள். அம்மை மலேரியா காசநோய் போன்ற கொடிய நோய்களை வருவதற்கு முன்னே தடுப்பதற்கான வகைகளை கொடுத்தது இந்த விஞ்ஞானம். நோய்களால் சோர்ந்திருந்த மனிதனை நோய்களிலிருந்து வருமுன்னரே தடுத்துமனிதனை உற்சாகப்படுத்துகின்ற விஞ்ஞானத்தை நீங்கள் குறை கூறுவது கீழேயிருந்து ஏணிமூலம் ஏறி மேலே சென்றுவிட்டு இந்த ஏணி சரியில்லை என்று சொல்வதுபோல இருக்கின்றது. இருட்டிலே இருந்த மனிதனை இன்று வாழ்க்கையை இரசிக்கின்ற அளவுக்கு அவனுக்கு தேவையானவற்றை கண்டு பிடித்து கொடுத்துக்கொண்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

தன்னை அழகு படுத்திகொண்டே பட்டிமன்றத்தையும் ஒழுங்கு படுத்திய தூயாவிற்கும் மற்றும் நடுவர்களில் அடிக்கடி வந்து குடும்பியை ஆட்டிஉற்சாகம் அளிக்கும் சோழியனிற்கும் இதுவரை இந்தபக்கமே எட்டிப்பாக்காத சண்முகிக்கும்.மற்றும் எழுந்து இன்னமும் களத்துபக்கம் வந்து கருத்து கூறகூட முடியாமல் விஞ்ஞாத்தின் வளர்ச்சியால் சோம்பேறியாகி போயிருக்கும் எதிரணியினருக்கும் வணக்கங்கள்.

எதிரணியில் வசம்புவும் குறும்புவும் சில விற்றமின் குளிசைகளை போட்டுக்கொண்டுவந்து விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் தாங்கள் உற்சாகமாக இருப்தாக கூறிவிட்டு போனார்கள் பாவம் நடா என்பவர் கடிதத்தை காலில் பிடித்தபடி வந்து நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் வைத்திய துறை முன்னேறி விட்டது என்கிறார்.

நான் கேட்கிறேன் நோய்கள் பெருகியது எப்படி இந்த விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளால் தானே. இன்கு எமது தாயக பிரதேசத்தில் 10ல் ஒருவருக்கு புற்றுநோய். எதனால் வந்தது வீஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பான மனிதனை அழிக்கும் குண்டுகளின் கதிர் வீச்சுகளினால்.அதற்கு மாற்றாக மனிதன் வைத்திய துறையிலும் கண்டு பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்

அடுத்ததாக மனிதன் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட மதத்தை வீஞ்ஞானம் விட்டுவைத்ததா? இல்லை.முன்பு கேவிலுக்குமனிதர் போவதாக இருந்தால் விதரமிருந்து குளித்து சுத்தமாகி கேவிலுக்கு போனதும் பாதணி மேல்சட்டை என்பனவற்றை களற்றி கடவுளைநினைத்து தேவாரம்பாடியபடி பணிவாககும்பிடுவான். கடவுளை நம்பாத நாத்திகன் கூட அந்த ஆலயத்தில் நுழைந்ததும் தன்னில் ஒரு மாற்றத்தை உணருவான்.அதில் மனிதன் சுத்தத்தை பணிவை மன ஒருமைப்பாடு என பல நன்மைகளை அடைந்தான். ஆனால் இப்போ கணணியிலேயே உங்களிற்கு செவ்வாய் குற்றமா?பரிகாரம் செய்ய இங்கே கிளிக் பண்ணவும். உங்களிற்கு சனி தோசமா? சனிபகவானிற்கு பரிகாரம் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்.பிள்ளையாரை கும்பிட வேண்டுமா இங்கே கிளிக் பண்ணவும். என்றுஇருக்கும் .கணணியிலேயே நீங்கள் வீட்டிலிருந்தபடியேஎல்லா கடவுளையும் கும்பிடலாம்.கணணியின் ஒரு ழூலையில் யாழ் அரட்ரையரங்கம் போய்க்கொண்டிருக்கும்.மறுமுல

Link to comment
Share on other sites

.

தூயவின் முயற்சிக்கு வந்தனம் சொல்லி...........அத்துடன் உற்சாகமாக தலமை தாங்கும் சோழியன் அண்ணா திரைமறைவில் இருக்கும் சண்முகி அக்கா மற்றும் சக பாடிகள்......... எதிரணி சோம்பேறிகள் அனைவருக்கும் வணக்கம்.

இங்கு சாத்திரி தனது சோம்பேறி சாத்திரி வேலை பறி போகும் அவலத்தில் இறுதியில் சம்பந்தா சம்பந்தமில்லாது புலம்பி சென்றுள்ளர்

இங்கு தலைப்பு விஞ்ஞானம் மனிதனை உற்காகபடுத்துகிறதா சோம்பேறி ஆக்குகிறதா என்பதே.

விஞ்ஞானம் தந்த விமானத்திலேறி புலம் வந்து அதன் பயனாக கிடைத்த இணையத்தில் இவ்வளவு உற்சாகமக பட்டி மன்றத்தில் அது சோம்பலை தருகிறது எனும் எதிரணி நண்பர்களை பார்த்தால் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.

இன்று பல அலுவல்களை விரைவில் முடித்து வேறு அலுவல்களில் கவனம் செலுத்த முடிகிறதே. உதாரணத்துக்கு 5 கிலேத மிற்றர் துரத்தில் இருக்கும் ஒருவரிம் அலுவலுக்கு போடி நடையில் போய் கதைத்து முடித்து வர பாதி நாள சென்றுவிடும் அதையே இப்பொது தொலை பேசி மின்னஞ்சல் மெசஞ்சர் என நிமிடத்தில் அந்த அலுவலை முடிக்க முடியும். ஏன் நேரில சந்திக்க வேண்டியிருந்தாலும் வாகனத்தில் போய்சந்தித்து வர 1 மணி நேரம் போதும் இதனால் வினைத்திறன் கூடுகிறது.

பாட்டன் காலத்தில் சிறு பரப்பில் விவசாயம் செய்தார் அதனால் துலா போதும் .இன்று பல ஏக்கர் கணக்கில் உழவு இயந்திரத்தையும் தண்ணீர் பமபியையும் கொண்டு விவசாயம் செய்ய முடிகிறது . வருமானம் பெருகுகிறது . அது தந்த உற்சாகத்தில் மேலும் அதிக பரப்பில் விவசாயம் செய்ய துண்டுகிறது. ஒரு உழவு இயந்திரம் வைத்திருந்தவர் இன்னுமொன்று வாங்குகிறார். அதற்கு மேலாக அரிசியாலை திறக்கிறர் இப்படி மேலும் மேலும் உற்சாகமாக முன்னேறிய பலர் ஊரிலும் உண்டு உலகத்திலும் உண்டு.

இன்று புலத்திலுள்ள பலரும் வேண்டிய நேரத்தில் ஊரில உள்ள உறவுகளுடன் கதைத்து அவர்களது முகத்தையும் பார்க்க உதவுவது எது? இதே 10 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்து எப்போது கடிதம் வரும் என காத்து கிடந்த நாட்களை எண்ணிபாருங்கள். இன்றோ வேலை முடிந்து வரும் களைப்பும் ஊரிலிருக்கும் உறவினரின் குரலை கேட்டதும் காற்றோடு பறக்க செய்து உற்சாகத்தை தருவது எது இன்றைய விஞ்ஞானம்.

ஆதியில் உயிர் கொல்லி நோய்களான குக்கல் அம்மை போலியோ போன்றவை உலகிலிருந்து நீங்கும் நிலை வந்துள்ளதே. இதையே தெய்வ குற்றம் என்று பல குழந்கைகளை இழந்தொர் எண்ணிய காலம் போய் பிறக்கும் குழந்தைகளின் உயிர் உத்தரவாதப்படுத்தபடுகிறதே.......

Link to comment
Share on other sites

பட்டி மன்றம் அருமையாக செல்கிறது.

மேலும் தொடருங்கள்...

தூயாவுக்கு விசேஷ நன்றிகளும் வாழ்த்துக்களும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவீன தொழிநுட்பம் மனிதனை சோம்போறியாக்கிறதா? உற்சாகப்படுத்துகிறதா? நல்லதொரு தலைப்பு ஆ ஊ என்பதற்கிடையில் இணையத்துக்கு சென்று பார்த்து செய்தி சொல்லும் காலமிது...சிறிலங்காவில் இருக்கும் பெரும்பாலனா வானொலிகளுக்கு பிரதேச ரீதியான செய்தியாளர்கள் உள்ளனர். அனால் எங்கள் நாட்டு (கனடா) தமிழ் வானொலிகளுக்கு தனியான செய்தியாளர்கள் இல்லை காரணம் தொழிநுட்ப வசதி. அவர்கள் இணையத்தில் வரும் செய்திகளை அப்படி பிரதி செய்து போடுகின்றனர். இதற்க்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லாம் என்று நினைக்கின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர். புதினம் இல்லை என்பதால் அவர்களால் செய்தியை சுயாதீன மாக வெளியிட முடியவில்லை இது தொழிநுட்ப்பத்தால் வந்த சோம்பொறித்தனமாகும். அடுத்து தொலை பேசியை எடுத்துக் கொண்டால்... இப்போது மக்களால் தொலைபேசிகள் தொல்லை பேசிகள் என்று அழைக்கப்படுகின்றது. காரணம் குடும்பச்சண்டைமுதல் குழுச்சண்டைகள் வரை தொலைபேசியால் தான் வருகின்றது. அதை விட காதலர்களைக் கூட இது சோம்பொறிகளாக்குகிறது. பொதுவாக எமது நாட்டில் காதலர்கள் பூங்கா மற்றும் வேறு இடங்களில் அடிக்கடிச்சந்திப்பார்கள் ஆனால் இங்கு இரவு பத்து பதினொரு மணிக்கு பிறகு நித்திரை கூட கொள்ளாமல் தொலைபேசியில் கதைப்பாங்கள்.. இது எதனால்.. தொலை பேசி இல்லை எனில் அவர்கள் நேரடியாக சென்று தமது அன்பு வார்த்தைகளை பகிர்ந்து கொள்வார்களே! அடுத்து இணைய அங்காடி மனிதனைசொம்பொறியாக்ககும் மிகப்பெரும் சக்தி எனலாம். முன்பு நேரடியாக வார்த்தக நிலையத்தக்கு சென்று தமக்கு பிடித்த பொருட்களை வாங்கு வார்கள் இப்போது இணையத்தில் சென்று விண்ணப்பித்து விட்டு கடனட்டைகள் மூலம் பணம் செலுத்தி விட்டு வீட்டிலே காத்திருக்கின்றனர்.. இது எதனால் தொழிநுட்பத்தால் தானே!

அதை விட் வீட்டுக்குரிய பாதுகாப்பு ஓலி பெருத்துவது என்பது மனிதன் தனது பொருட்கள் மீது அக்கறைப்படாமலிக்க வைக்கும் ஒரு பொருள் எனலாம்... அது பொருத்தா விட்டால் வீட்டில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் போன வேலைகளை விரைவாக முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவார்கள் ஆனால் அது பொருத்திய பின் வீதியில் நிற்போர் வருவோர் ஏன் அங்கால நாலு வீட்டுக்கு போய் 1 மணி நேரத்தில் செய்யும் வேலையை 5 மணிநேரத்தில் செய்கின்றனர்.. இது அவர்கள் சோம்பொறித்தனத்தை காட்டுகின்றது... இதெல்லாத்தையும் தெரிந்து கொண்டு எதிர்தரப்பில் இருக்கும் வாதிகள் "நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன" என்ற மாதிரி பேச வெளிக்கிட்டாச்சு எதையாவது பேசுவோம் என்று பேசிக் கொண்டீக்கின்றார்கள்.... அடுத்து நம் வாழும் நாடுகளில் ஒரு 100 மீற்றர் எவராவது நடக்கின்றீர்களா? எதற்கெடுத்தாலும் மகிழுந்து அல்லது பேரூந்து என்று நாங்கள் போய் கொண்டே இருக்கின்றோம் வளந்து வரும் விஞ்ஞானத்தால் மனிதன் வேலையின்றி சோம்பொறியாய் இருக்கபோகிறான்....அதன் காராணத்தால் உலகில் சனத்தொகை அதிகரிக்கப்போகிறது.. முதல் ஒரு நண்பர் எதிர்வு கூறியிருந்தார் தொழிநுட்ப வளர்ச்சியால் வேலையில்லாப்பிரச்சினை ஏற்ப்படாது என்று... அனால் அது கனவுலகில் தான் நடக்குமே தவிர நிஜத்தில் அப்படியல்ல தொழிநுட்ப வளர்ச்சியால் தொழிவாய்பு அருகி வருகிறது குறிப்பிட்டு சொல்லப்போனால்..ஒரு 10 பேர் செய்யும் வேலையை ஒரு இயந்திரம் செய்கிறது அப்படி செய்யும் போது 10 பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர்... இதனால் என்ன ஏறப்படும்?...ஆளில்லா விமானங்கள் (விமானியற்ற) மற்றும் மின்னியல் தொடரூந்த என்பவற்றால் எத்தனை பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர் எனபது எதிர்தரப்பில் இருக்கும் சோம்பொறிகளுக்கு தெரியவில்லை போலும்....அது தெரியமல் போவதற்க்கும் அவர்களுக்கு தொழிநுட்பம் தந்த சோம்பொறித்தனமே காரணம் ஏனெனில் எதையும் தமது பாட்டில் ஆராயும் திறன் அற்றவர்கள் தான் தொழிநுட்பத்தை நம்பி சோம்பொறிகளாய் உள்ளனர்...

ஏணியால் நாங்கள் ஏறி விட்டு ஏணி சரியில்லை என்று சொல்ல வில்லை அதற்க்கு முன்னரே நாங்கள் சொல்லி விட்டோம். கேட்காமல் நீங்கள் ஏறி விட்டீர்கள் உங்களை பத்திரமாக இறக்க வேண்டியது எங்கள் கடமையாகி விட்டது... தொழிநுட்ப சாக்கடைக்குள் நீங்கள் நீந்துவதால் அதன் விளைவுகள் உங்களுக்கு இப்பொது புரியப் போவதில்லை காரணம் அதனால் நீங்கள் சோம்பொறியாய் இருக்கின்றீர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு நீங்கள் உங்கள் தொழிநுட்பத்தையே புதியன எனக் கொண்டால் அது முத்தோரின் பிழையல்ல.. அதே நேரம் இந்த வார்த்தையை நான் எதிர்ப்பவன் காரணம் இந்த வார்ததை எதற்காக சொல்லப்படுகின்றது? பழையன கழிதல் என்றால் கட்டிய பழைய மனைவியையோ! அல்லது பெற்றவர்கள் வயதான பின் அவர்கள் பழையவர்கள் என்று ஒதுக்குவதற்காய் சொல்லப்பட்டதா? அல்லது ஏகபத்தினி விரதன் என்று பழைய காலத்தில் இருந்து வஇப்போது வரை வரும் அந்த தத்துவத்தை புதியதாக்கி உங்கள் விஞ்ஞானயுகத்தில் இன்றொன்று நாளை ஒன்று என்று வாழ்வதா?

இருட்டிலே மனிதன் வாழ்கையிலே மிகவும் உற்சாகமாக நிலவொளியில் வேலை செய்தான் ஆனால் இன்று நிலவொளியை காணமுடியாதபடி உங்கள் மின்னொளிகள் மறைத்து இயற்கையை கொன்று விட்டிருக்கின்றது. சுனாமி வந்ததை தொழிநுட்பம் கண்டு பிடித்ததாம்.. ஆமாம் கண்டு பிடித்ததால் தான் இத்தனையாயிரம் பேர் இறந்தனரோ? நான் இங்கு நன்மை தீமைகளை பற்றி பேச வராததால் சிலவற்றைபற்றி விரிவாக பேசமுடியாமல் உள்ளது. நாங்கள் நுனி மரத்தில் இரந்து மரத்தை வெட்டுவதற்க்கு என்று ஆராயமல் உங்களை போல் தொழிநுட்பத்தை நம்பி இருப்பவர்கள் அல்ல ஆனால் நுனி மரத்தில் இருந்துதான் வெட்ட வேண்டும் என்ற கட்டாயம்் அதனால் தான் வெட்டுகின்றோம்...தொழிநுட்ப

Link to comment
Share on other sites

விஞ்ஞானம் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்ற அணியிலிருந்து வந்த நடா அவர்கள் நன்றாகவே கேட்டார்.. பழையன கழிதலும் புதியன புகுதலும் என முன்னோர்களே கூறியுள்ளார்கள்.. மின்சாரத்தைக் கண்டுபிடித்தார்கள்.. அதனால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? சுனாமியின் வருகையைக்கூட விஞ்ஞானம் அறிவித்தீருக்கிறது.. அதை அறியாமல் விட்டது உங்களின் பழமை வாதம்.. மலேரியா காச நோய் போன்றவற்றை தடுத்திருக்கிறது.. 10000 கிலோ மீற்றருக்கு அப்பால் உங்களுடைய பெற்றோர் தும்மியதை தும்மி முடிந்த ஒரு விநாடியில் உங்களால் அறியமுடிகிறது... ஆக, இருட்டிலே இருந்த மனிதனை இன்று வாழ்க்கையை இரசிக்கின்ற அளவுக்கு அவனுக்கு தேவையானவற்றை கண்டு பிடித்து கொடுத்துக்கொண்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

அடுத்து, சாத்திரி அவர்கள் சத்தான கருத்துகளை முன்வைக்கிறார்... நோய்கள் பெருகியது எதனால்? குண்டுகளும் கதிர்வீச்சுத் தாக்கங்களும் மலிந்தது எதனால்? புனிதமாகப் போற்றப்பட வேண்டிய மத அனுட்டானங்கள்கூட கணனிவரை வந்திருக்கிறதே.. எதனால்? விஞ்ஞானம் சோம்பேறியாக்குகிறது.. அதனால் என்கிறார்.

வெற்றிலையில் போடும் மைத்துளியிலே பூனைக் கண்காரர்களுக்க தெரிபவை எல்லாத்தையும் யாகூவிலும் கூகிளிலும் தேடுகிறார்கள் என்கிறார்.. சாமிகளைக் கும்பிட கணனியில் வசதி இருக்கென்றவர்.. உண்டியல் பணம் எப்படி செலுத்துவதென்பதை சொல்லவில்லை.. உண்டியல் பணம் செலுத்தும் இணையம் செய்யத் தெரிந்தவர்கள் எனக்கொன்று செய்து தந்தால் நன்றாக இருக்கும்..

விஞ்ஞானத்தால் சோம்பேறியானவர்களால் சாஸ்திரி அவர்களின் தொழிலும் பட்டுப்போச்சு.. அடுத்து வருபவர் என்ன கூறுகிறர் என்பதைப் பார்ப்போம்..!!

Link to comment
Share on other sites

ஆடத்து குளக்காட்டான் கருத்துக்களை அள்ளிக்கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்.. விஞ்ஞானம் தந்த விமானத்தில் புலம் வந்து.. (ம்.. பலர் விமானத்தால் மட்டுமா வந்தார்கள்.. கையால் விசா கீறி.. படம் ஒட்டியும் வந்தார்கள்) இணையத்தில் பட்டிமன்றம் நடாத்திக்கொண்டு சோம்பேறியாக்குகிறது என்றால் என்னையா அர்த்தம் என்று ஆரம்பிக்கிறார்.. தொலைபேசியைப் பற்றி சொன்னார்.. விவசாய உற்பத்திப் பெருக்கத்தைப்பற்றி விபரித்தார்... நோய்களால் ஏற்படும் இழப்புகளின் குறைப்பை சுட்டிக்காட்டினார்... விஞ்ஞானம் வசதிகளைத் தந்திருக்கிறது.. அதற்காக மனிதன் புலம்பெயர்கிறான்.. விஞ்ஞானத்தின் விளைவுகளால் மனிதனின் தேடல் அதிகரிக்கிறது.. தேடல் மனிதனை உற்சாகப்படுத்துகிறதே ஒழிய சோம்பேறியாக்கவில்லை என்று ஆணித்தரமாக கருத்தை முன்வைத்த குளக்காட்டானுக்கு நன்றிகள்.. இதற்கு அடுத்த அணியிலிருந்து என்ன கருத்து வருகிறது என்று பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

அடுத்து நிதர்சன் அவர்கள் வானொலிகளுடன் வருகிறார்... 'கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர்.' ஆக, விஞ்ஞானம் ஊடகங்கவியலாளர்களையும் சோம்பேறியாக்குகின்றது என்கிறார்..

நானும் ஒரு வானொலி கேட்டேன்.. செய்தி வாசிக்கும்போது பின்னணி இசை போகிறது.. தலைப்புச் செய்திகள்.. சிறிதுநேரம் இடைவெளி.. ஆனால் பின்னணியில் இசை.. பிறகு ஒவ்வொரு செய்திகள்.. இடையில் வரும் இடைவெளியில் பின்னணி இசை.. பிறகுதான் தெரிந்தது.. புதினம் முன்பக்கத்திலுள்ள செய்திகளை தலைப்பு செய்திகளாக வாசிக்கிறார்கள்.. மெளசால் அதற்குரிய பக்கங்களை அழுத்தி.. விரிவான செய்திகளை வாசிக்க எடுக்கும் நேர தாமத்தை பின்னணி இசையால் நிரவி சமாளிக்கிறார்கள்.. பேப்பரில்லாமல் பேனை இல்லாமல் அலைச்சலில்லாமல்... நல்ல முன்னேற்றம். :D

தொலைபேசி காதலர்களை சோம்பேறியாக்குகிறது.. அருமையாகச் சொன்னார்.. காதலின் மென்மையே முகபாவங்களில்தானே குவிந்திருக்கிறது.. அதை இந்த விஞ்ஞானம் தொலைபேசியால் தொலைத்துவிட்டது.. தென்றல்வீசும் பூங்காவில் பறந்தாடும் கூந்தல் வாசத்தில் கிறங்கிக் கதைபேசும் கணங்களை.. விஞ்ஞானம் தந்த சோம்பேறித்தனம் தூக்கி எறிந்துவிட்டது என்று அனுபவித்தவர்போலச் சொல்கிறார்.. :lol:

அதுமட்டுமா.. சோம்பேறித்தனத்தால் உலகின் சனத்தொகை அதிகரிக்கப் போகிறது என்று ஒரு குண்டையும் தூக்கிப் போடுகிறார்? சோம்பேறிகளால் எதையுமே செய்ய முடியாதே.. எப்படி ஐயா சனத்தொகைமட்டும் அதிகரிக்கும்.. அவரது அணியிலுள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்ப்போம்.. :D

தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலையில்லாதோர் தொகை அதிகரிக்கிறது.. அதேபோல அவர் முன்பு கூறியவாறு சனத்தொகை அதிகரிப்பாலும் வேலையற்றோர்தொகை அதிகரிக்கிறது.. ஆக விஞ்ஞானம் வேலையற்றோர் தொகையை அதிகரிக்கச் செய்து மனிதனைச் சோம்பேறியாக்குகிறது என்கிறார்..

அதுமட்டுமா..

"ஏணியால் நாங்கள் ஏறி விட்டு ஏணி சரியில்லை என்று சொல்ல வில்லை அதற்க்கு முன்னரே நாங்கள் சொல்லி விட்டோம். கேட்காமல் நீங்கள் ஏறி விட்டீர்கள் உங்களை பத்திரமாக இறக்க வேண்டியது எங்கள் கடமையாகி விட்டது... தொழிநுட்ப சாக்கடைக்குள் நீங்கள் நீந்துவதால் அதன் விளைவுகள் உங்களுக்கு இப்பொது புரியப் போவதில்லை காரணம் அதனால் நீங்கள் சோம்பொறியாய் இருக்கின்றீர்கள்."

இதுமட்டுமா?

"இருட்டிலே மனிதன் வாழ்கையிலே மிகவும் உற்சாகமாக நிலவொளியில் வேலை செய்தான் ஆனால் இன்று நிலவொளியை காணமுடியாதபடி உங்கள் மின்னொளிகள் மறைத்து இயற்கையை கொன்று விட்டிருக்கின்றது."

இறுதியாக,

"விமானம் ஏறி மட்டுந்தான் வெளி நாடு வரவேண்டும் என்று எதிர்தரப்பில் குளக்கோட்டன் குதர்கமாக கூறியிருந்தார். ஆனால் அந்த காலத்தில் கப்பலோட்டி தமிழர் பிரித்தானியா வரவில்லையா?" என்றும் கேட்டிருக்கிறார்.

அடுத்து, 'உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியிலிருந்து என்ன கருத்துகள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி கருத்துகளை முன்வைக்க, 'உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியிலிருந்து ஈஸ்வர், விக்டோர்ப், அம்மு, வசி ஆகிய நான்கு யாழ் கள அன்புறவுகளும்... 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து சிம்ரன்2005, ஈழப்பிரியன், நிலவன், இளைஞன், மதன் ஆகிய ஐந்து யாழ் கள அன்புறவுகளும் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து அணித்தலைவர்கள் தமது தொகுப்புரையை வழங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.

(விழா அமைப்பாளர் தூயா அவர்கள் அவசரமாக மேடைக்கு அழைக்கப்படுகிறார்.. மேடைக்கு சோடாப் போத்தல்கள் இன்னும் வந்து சேரவில்லை.. அவை வந்தால்தான் வீடீயோவுக்கு வடிவா இருக்கும்.. :P :D )

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.