Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினரின் விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டுள்ளது?

Featured Replies

வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினரின் விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இந்த இராணுவ விமானம் சற்று முன்னரே வீழ்த்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது.

இது குறித்து சிறீலங்கா அரச தரப்பிலிருந்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தோ எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilseythi.com/srilanka/lanka-...2009-01-21.html

Sri Lankan fighter jet reported missing in Northern frontier

[TamilNet, Wednesday, 21 January 2009, 15:55 GMT]

A Sri Lanka Air Force (SLAF) MIG fighter jet was shot in the skies over Vanni on Wednesday, according to initial reports from journalists outside Sri Lanka, who cited a highly placed source in Vanni Sri Lankan Forces Headquarters (Vanni SF-HQ). The Liberation Tigers of Tamileelam (LTTE) officials were not available to comment on the reports.

There were 3 airmen inside the aircraft, according to the reports from the Sri Lankan side.

The Russian built bomber with a "crocodile nose," containing laser rangefinder, is capable of carrying large variety of bombs, unguided rockets, and missiles.

The fighter jet has been used to carry cluster bombs against LTTE and civilian targets in Vanni.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28086

என்ன பெஞ்சாதி பிள்ளை எண்டு விமானி குடும்பமாக இடங்காட்ட கூட்டிக் கொண்டு போனவரோ?

மிக்கில 2 பேர்தானே போகலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலதிக தகவல்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெய்லி மிரர் இப்படிச் சொல்லுது

Sri Lankan navy fires at suspicious aircraft

The Sri Lankan Navy has detected and fired at a suspicious aircraft flying at a very high altitude off Mullaitivu area last night, a military official said today.

தங்களுடைய விமானத்தையே மாறி சுட்டுவிட்டினமாக்கும் :rolleyes::lol:

வன்னயில் ஒபாமா கொடுத்த ஏவுகணைகளை பாவித்து புலிகள் சிறீ லங்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஒரு மிக் விமானத்தை சுட்டு வீழ்த்தினர்! என்று செய்தி வந்தாலும் வரலாம்!

மிக் விமானம் தலை மறைவாகி இருக்கலாம்...உடனடியாக விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக் விமானம் தலை மறைவாகி இருக்கலாம்...உடனடியாக விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்

அமைச்சிடவம் நீங்கள் அதன் தலைவரா இருக்கிறிங்களா சார்

அமைச்சிடவம் நீங்கள் அதன் தலைவரா இருக்கிறிங்களா சார்

வீட்டிலே இருந்து விசாரிக்கிறது தானே.. நானும் வாறன்.. சேர்த்துக்கொள்ளுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்புக்காரர் திரும்பவும் ஒண்டை வன்னிக்குள்ள இற‌க்கீட்டினமோ? :rolleyes:

பரபரப்புக்காரர் திரும்பவும் ஒண்டை வன்னிக்குள்ள இற‌க்கீட்டினமோ? :rolleyes:

:lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டிலே இருந்து விசாரிக்கிறது தானே.. நானும் வாறன்.. சேர்த்துக்கொள்ளுங்கோ!

அதத்தான பன்னிக்கொண்டிருக்கிறம்

அதுக்கென்ன.. நான் இருக்கிறன்..பிறகு நான் காணாமல் போனால் என்னை தேடுவதற்கு நீங்கள் குழு அமைக்கிறீங்களா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பவம் உண்மையெண்டால் மிக்க மகிழ்ச்சியெல்லே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுவமடு - தேராவில் - தேவிபுரம் - உடையார்கட்டு - சுதந்திரபுரம் பகுதிகளில் படையினரின் எறிகணைவீச்சில் மக்கள் 12 பேர் படுகொலை - 73 பேர் படுகாயம்

திகதி: 21.01.2009 // தமிழீழம் // [வன்னியன்]

விசுவமடு - தேராவில் - தேவிபுரம் - உடையார்கட்டு - சுதந்திரபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் மக்கள் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.73 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடு தேராவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்காப்படையினர் நடத்திய எறிகணைவீச்சில் 04 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் மூங்கிலாறில் இயங்கும் மல்லாவி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இவ் எறிகணைத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. வீட்டிலிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது வீட்டின்மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் 13 அகவை த.தயாகரன், 43 அகவை த.தவநேசன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை இன்று அதிகாலை 02.00மணியளவில் உடையார்கட்டு குரவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைகள் வீழ்ந்துவெடித்ததில் 05பேர் படுகாயமடைந்துள்ளனர்.

42 அகவை சிவராஐ

27 அகவை பிரபாகரன்

18 அகவை மதியரசன்

18 அகவை ரவீந்திரன்

47 அகவை கி.தங்கம்மா

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றுகாலை 6.00 மணியளவில் விசுவமடு இளங்கோபுரத்தில் எறிகணைகள் வீழ்ந்துவெடித்ததில் இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.16 அகவை கோமதி என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

சிறிலங்காப்படையினர் இன்று பிற்பகல் 2.00 மணிவரை முல்லைத்தீவு தேவிபுரம், சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள்மீது தொடர்ச்சியாக நடத்திவரும் எறிகணைத்தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 08 பேர் படுகாயமடைந்த நிலையில் வள்ளிபுனத்தில் இயங்கும் முல்லைத்தீவு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்;பகல் 12.30 மணிக்கு சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள்மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 53 அகவை கனகரத்தினம்-பாலசுந்தரம் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் துணைவியாரான 53 அகவை பாலசுந்தரம்-மகாலட்சுமி படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை தேவிபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது பி.ப 1.30 மணிக்கு சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

29 அகவை ந.பிரபாகரன்

27 அகவை ராஜீவ்குமார் - துஸ்யந்தினி

19 அகவை மரியாம்பிள்ளை-விஜீதா

16 அகவை சபாரட்ணம்-சிவமாலினி

17 அகவை மரியாம்பிள்ளை-ஜீவிதா

48 அகவை கறுப்பையா-சுப்பிரமணியம்

18 அகவை ஜீ-அருள்மதி

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் பகுதியில் ஸ்ரீலங்கா படையினரின் பல்குழல் வெடிகணைத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இன்று முற்பகல் 10மணியளவில் ஸ்ரீலங்கா படையினர் தேவிபுரம் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று நண்பகல் மற்றும் பிற்பகல் வேளையில் தேவிபுரம் புதுக்குடியிருப்பு-மூங்கிலாறு குரவில் உடையார்கட்டு இடம்பெயர்ந்தோர் மக்கள் குடியிருப்புக்கள் மீது ஸ்ரீலங்கா படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் தேவிபுரத்தில் 60 அகவை சந்திரசேகரம் சிவமணி என்பவர் படுகாயமடைந்தார். இவர் கேப்பாபுலவிலிருந்து இடம்பெயர்ந்தவராவார்.

நேற்று ஸ்ரீலங்கா படையினர் நடத்திய எறிகணைத்தாக்குதல்களில் 16 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.68 பேர் படுகாயமடைந்தனர். இன்று பிற்பகல் தேராவில்-குரவில்-சுதந்திரபுரம் பகுதிகளில் ஸ்ரீலங்கா படையினர் நடத்திய எறிகணைத்தாக்குதலில் 31 பேர் காயமடைந்துள்ளனர்.

24 அகவை செல்வரூபி

28 அகவை சத்தியவதனி

24 அகவை மே.இராகவன்

30 அகவை செல்லம்மா

30 அகவை முத்துலட்சுமி

27 அகவை லீன் றெஜினா

29 அகவை அனுசாந்தினி

42 அகவை சிவராசா

48 அகவை இந்திராணி

26 அகவை மயூரன்

29 அகவை லோ.அஜந்தா

28 அகவை சுஜிகரன்

47 அகவை ரவீந்திரன்

30 அகவை தமிழ்த்தேவி

21 அகவை நந்தா

20 அகவை இளமதி

23 அகவை ரோகினிமலர்

28 அகவை ஜெகன்

22 அகவை லக்ஸ்ராஜா

19 அகவை குகநாதன்

17 அகவை கேசவன்

23 அகவை இளநாதன்

29 அகவை சத்தியன்

23 அகவை ராஜ்குமார்

17 அகவை காண்டீபன்

19 அகவை தி.கிருஸ்ணா

09 அகவை மைந்தகன்

38 அகவை விமலநாதன்

25 அகவை தேன்மதி

27 அகவை சந்தனக்குயில்

ஆகியோர் படுகாயமடைந்தனர். விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் இரண்டு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 02 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று பி.ப 3.00 மணிக்கு இத்தாக்குதல் நடந்துள்ளது.

இதில்

45 அகவையுடைய காரைநகரைச் சேர்ந்த செல்வரத்தினம்

35 அகவையுடைய சற்குணராஜா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை செல்வரத்தினம் - ரதிமலர் அ.செல்வி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

உடையார்கட்டு குரவயல் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத்தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 06 பேர் காயமடைந்துள்ளனர். இன்று பி.ப 01.00 மணிக்கு இத்தாக்குதல் நடந்துள்ளது.

இதில்

15 அகவையுடைய வி.கஜந்தன்

18அகவையுடைய அ.வரதராசா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை

25 அகவையுடைய அருட்செல்வன்

22 அகவையுடைய தவராசா

42 அகவையுடைய உதயகுமார்

36 அகவையுடைய கருணா

43 அகவையுடைய சுப்ரமணியம்

36 அகவையுடைய சிவதாஸ்

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடு மயில்வாகனபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 1மணிக்கு ஸ்ரீலங்கா படையினர் நடத்திய எறிகணைத்தாக்குதலில் சிறுவர் உட்பட மக்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் பெண்களாவர். இவர்களில் ஒருவர் 15 அகவை விஜிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மற்றையவர்க

  • கருத்துக்கள உறவுகள்

ரானுவத்திடம் ஆயுதத்தட்டுப்பாடு நிலவுகிறது போல, அதுதான் இப்படியொரு புனைகதையை கட்டிவிட்டிட்டு ஆயுதப்பிச்சைக்கு வெளிக்கிடப்போயினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரானுவத்திடம் ஆயுதத்தட்டுப்பாடு நிலவுகிறது போல, அதுதான் இப்படியொரு புனைகதையை கட்டிவிட்டிட்டு ஆயுதப்பிச்சைக்கு வெளிக்கிடப்போயினம்.

என்னன்டுதான் யோசிக்கிறாங்களோ

smartiger_34611.jpg

வன்னி ஆகாயப்பரப்பில் இலங்கை அரசிற்குச் சொந்தமான ஜெற்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அந்த விமானத்தில் 3 வானோடிகள் இருந்ததாக இலங்கை அரசதரப்புத் தகவல்கள்; தெரிவிக்கின்றன.

முதலை மூக்கு வடிவத்தைக் கொண்ட இந்த ருஸ்யத் தயாரிப்பு குண்டு வீச்சு விமானம் பல்வேறு வகையான குண்டுகள் ரொக்கற்றுக்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றைத் தாங்கிச் செல்லும் வலிமை கொண்டது. இந்தப் போர்விமானம் மக்களுடையதும் புலிகளுடையதும் இலக்குகள் மீது கிளஸ்ரர் குண்டுகளை வீசப் பயன்படுத்தப்பட்டது.

வன்னிப் பிரதேசத்தில் ராணுவ விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இந்த விமானம் சற்று முன்னரே வீழ்த்தப்பட்டதாக அந்த உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது. எனினும் இது குறித்து அரச தரப்பிலிருந்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தோ எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

மேலதிக செய்திகள் விரைவில்........

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

Edited by தராக்கி

ம்ம்ம்ம்ம்ம்........ அள்ளிக்கொடுக்கிறதுகளுக்கு விளைவுகள் தெரியத் தொடங்கியுள்ளது!

இலங்கை விமானப்படை வைற்றர் ஜெற் ரக விமானம் வன்னி போர்முனையில் காணாமல் போயுள்ளது

இலங்கை விமானப்படையினரின் மிக் வைற்றர் ஜெட் ரக போர் விமானம் ஒன்று இன்று புதன்கிழமை வன்னிப் போர்முனையில் பறப்பில் ஈடுபட்டிருந்த சமயம் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி வான்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இந்த தகவலுக்கு வன்னியில் உள்ள வன்னிபடைத் தலைமையகத்தை கோடிட்டுள்ளனர்.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை

சம்பவம் இடம்பெற்ற வேளையில் மூன்று விமானப்படையினர் விமானத்தில் இருந்துள்ளனர்.

ரஸ்ய தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் குரொக்கடைல் நோஸ் என்ற லேசர் கருவியையும் கொண்டுள்ளது.

அத்துடன் ரொக்கட், ஏவுகணைகள் மற்றும் பல்வகைப்பட்ட பெருந்தொகையான குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடியது.

அண்மையில் வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதும், விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீதும் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுவீச்சுகளும் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/

காணாமல்...

காயாமாகி...

காலமாகிப்போன

காலன் என்று சொல்லலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்........ அள்ளிக்கொடுக்கிறதுகளுக்கு விளைவுகள் தெரியத் தொடங்கியுள்ளது!

அது இன்னும் இன்னும் வேகப்படுத்தப்படவேண்டும்

அதுதவிர இந்த அநியாயங்களை நிறுத்த எந்த கொம்பனும்வரப்போவதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புஸ்பாவிஜி,

அந்த மகிந்த படத்தை எங்கிருந்து சுட்டீர்கள்?

புஸ்பாவிஜி,

அந்த மகிந்த படத்தை எங்கிருந்து சுட்டீர்கள்?

பாவம் அவருக்கு பிடிபடாம சுடத்தெரியலை விடுங்கோ :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.