Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் இசை விழா....!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் போர்...

கனடாவில் கலை நிகழ்ச்சி?

இக்கட்டில் தவிக்கும் யுவன்!

கம்போசிங்கிற்காக பலமுறை கடல் தாண்டிய யுவன், முதன் முதலாக இசைக்கச்சேரி ஒன்றுக்காக கடல் தாண்டுகிறார். ஏப்ரல் 25 ந் தேதி கனடாவில் நடைபெறப் போகும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி யுவன்சங்கர்ராஜாவுடையது.

இந்த நிகழ்ச்சி குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் யுவன். "ஐம்பது பேர் கொண்ட என்னுடைய இசைக்குழுவுடன் கனடா செல்லப் போகிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெறப்போகும் எல்லா பாடல்களும் நான் இசையமைத்த படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவைதான். முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்பாவும் (இளையராஜா) ஒரு பாடலை பாடப்போகிறார்! அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸ் என்றார். யுவனின் தீம் மியூசிக்கும் இந்த இசைநிகழ்ச்சியில் இடம் பெறப்போகிறதாம்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ஸ்ரீ, புலம் பெயர்ந்த தமிழர். நிகழ்ச்சியின் சிறப்புகள் குறித்து நிறைய பேசினார் ஸ்ரீ. சனாகான், மீனாட்சி, தாரிணி போன்ற நடிகைகள் வருகிறார்களாம். மேடை நடனமும் உண்டு. இவர்களோடு முக்கியமான ஹீரோ ஒருவரையும் அழைத்துச் செல்ல பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றார். யுவனுக்கும் சனாகானுக்கும் உற்ற நண்பர் சிம்புதான். ஒருவேளை இவர் சொல்லும் பெரிய ஹீரோ சிம்புவாக இருப்பாரோ?

கலகலப்பான பிரஸ்மீட்டுக்கு நடுவே சீரியசாக ஒரு கேள்வி பாய்ந்து வந்தது.

"இலங்கையில் இவ்வளவு உக்கிரமாக போர் நடந்து வரும் வேளையில், புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பி நடத்தப்படும் இந்த கொண்டாட்டங்கள் முறையானதுதானா?"

"நீங்கள் கேட்பது நியாயம்தான். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இப்படி ஒரு நிகழ்ச்சிக்கான வேலைகளை துவங்கிவிட்டோம். கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டோம். இப்போது நிகழ்ச்சியை நடத்தாமல் நிறுத்தினால் பல கோடி நஷ்டம் ஏற்படும். இந்த நிகழ்ச்சி நடைபெறும் போது இலங்கையில் அமைதி திரும்பிவிடும் என்று நம்புகிறோம். இறைவன் அதற்கு துணை நிற்பான் என்றார் ஸ்ரீ கவலையாக! அதே கவலையோடு "எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்" என்றார் யுவனும்

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...uary/220109.asp

  • Replies 57
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் எம்மில் பலர் இன்னும் வன்னி அவலத்தை மனதார உணரவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப்பட்டவர்கள் வன்னியில இருக்கோனும் அப்பத்தெரியும் நிலமை. மனித ஜென்மங்கலென்டால் ஓரளவுக்கென்டாயென்ன சொந்தஅறிவுஇருக்கும் இவங்களுக்கு என்ன ? வந்திட்டம் இருக்கிறம் இருப்பம் என்டு இருக்காமல் நாளைக்கு எங்களுக்கு என்ன நடக்குமென்டு உறுதியில்ல அப்படியிருக்கேக் இந்தக்கொண்டாட்டம் தேவையா இப்போதைக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தேவையில்லை என்பது என்னோட கருத்து

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தேவையில்லை என்பது சரிதான். ஆனால், காது குத்தல் விழா, தொட்டிலில் போடுதல் விழா, பிறந்த தின வைபவம், கல்யாண வைபவ பெரு ஆடம்பர விழா, பூ புனித நீராட்டு ஆட்டு என்று ஆட்டும் விழா போன்றவையை என்ன செய்யலாம்? அவற்றை அப்படியே தொடர்ந்து கொண்டு, இவற்றை மட்டும் விமர்சிப்பதால் ஆகும் பயன் ஒன்று இல்லை.

16,17,18,19,20,21........................... வயசு பிறந்த தினம் எல்லாம் மண்டபத்தில நடக்குது, மூஞ்சி புத்தகத்தில சுட சுட படம் வேற உடன போடிகினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

16,17,18,19,20,21........................... வயசு பிறந்த தினம் எல்லாம் மண்டபத்தில நடக்குது, மூஞ்சி புத்தகத்தில சுட சுட படம் வேற உடன போடிகினம்

இப்படிப்பட்டவர்களை குறைகூறழ அவர்கள் திருந்தப்போறது என்பது கிடையாது. காச்சலும் தலைவலியும் தனக்குவந்தால் தான் தெரியும் வேதனையெல்லாம் வன்னிக்குத்தான். எங்களுக்கில்ல என்டு பதில் அளிக்கிறாக்களும் இருக்கினம் சரி விடுவம் காலம் என்ற ஒண்டு இருக்குது அது எப்பவுமெ ஒரே மாதிரி இருப்பதில்லை எப்பவும் எந்த நேரத்திலும் மாறும் அப்போதுதான் தெரியும் வேதனையென்றால் என்ன என்று.

எல்லாம் அழிந்தபின் அவர்கள் மாறி என்ன பிரியோசனம்? எம்மைப்போன்றவர்கள் தான் இந்த சூழ்நிலையில் அவர்களை மாற்றவேண்டும். நாங்கள் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் ஏனெண்டு வந்து உங்களை கேக்கமாட்டினமே?

இதில் இன்னொரு விடயமும் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்

இவ்வாறு வைபவங்கள் / விழாக்கள் வைக்கும் மிகப் பலர், தம்மால் இயன்ற அளவுக்கு தமிழ் தேசிய போராட்டத்திற்கும் வள ரீதியிலான ஆதரவினை நல்குபவர்களாகவும் இருக்கின்றனர். அதில் அனேகமானோர் சர்வதேசத்தினை நோக்கி நடக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளிலும் தமக்கு நேரம் கிடைக்கும் போது கலந்து கொள்வதுண்டு.

நான் இப்ப அதத்தப்பென்டு சொல்லவரேல்ல அவே ஆதரவ தர்றவேயல்தான் தேவையான நேரத்தில இல்லாமல் பேந்து தந்து என்னபிரயோசனம் சொல்லுங்கோ பாப்பம். ஒண்டே ஒண்டு நாங்கள் புலம்பெயர் நாடுகளில போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் கவனயீர்புநிகழ்வுகள் எனப்பலவற்றை அந்த அந்த நாட்டுக்குள்ள நடத்தி எங்கட நாட்டில இனப்படுகொலைகள் நடக்கு செல்லடிக்கிறான் சுடுறான் என்டெல்லாம் சொல்லிப்போட்டு இசைநிகழ்ச்சி நடத்தி ஆட்டம் பாட்டமா இருந்தால் பார்க்கிற வெள்ளைகள் என்ன மனதுக்க நினைக்கும் சொல்லுங்கோ பாப்பம் இவையல் என்ன சந்தோசமாய் தான இருக்கினம் என்டுதான் நினைப்பாங்கள் ஓமோ இல்லையோ. அப்படி நடத்திறவே கொஞ்சமாவது சிந்திச்சால் பிரியோசனமாய் இருக்கும்

இதில் இன்னொரு விடயமும் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்

இவ்வாறு வைபவங்கள் / விழாக்கள் வைக்கும் மிகப் பலர், தம்மால் இயன்ற அளவுக்கு தமிழ் தேசிய போராட்டத்திற்கும் வள ரீதியிலான ஆதரவினை நல்குபவர்களாகவும் இருக்கின்றனர். அதில் அனேகமானோர் சர்வதேசத்தினை நோக்கி நடக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளிலும் தமக்கு நேரம் கிடைக்கும் போது கலந்து கொள்வதுண்டு.

இவ்வாறான நிகழ்வுகள் மூலமம் வருவதிலிருந்து பலர் பங்களிப்பு செய்கிறார்கள் தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிறியளவான களியாட்டங்களும் நிறுத்தப்பட்டு ஒட்டுமொத்த மக்களையும் தாயகத்தின் பால் ஒருங்கிணைக்கவேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றதல்லவா?

Edited by eelamlover

இந்த நிகழ்ச்சியை ஒழுங்குசெய்தவர் கனடாவில் இரவுநேரத்தில் ஒலிபரப்பாகிற ஒரு AM வானொலி நிர்வாகி எண்டு கேள்விப்பட்டன். அண்மையில கனடாவில் இருக்கும் ஊடகங்கள் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன. அதில கலந்துகொண்ட ஒருத்தர், இப்பிடியாக முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை இடைநிறுத்தினால் ஒழுங்குசெய்தவருக்குப் பெரியளவில் நட்டம் ஏற்படும் என்பதால், அதை நிறுத்தாமல் தேசியத்துக்கு ஆதரவான, தமிழீழ மக்களுடைய நியாயத்தை வலியுறுத்துகிற நிகழ்வாக மாற்றலாம் எண்டு சொல்லியிருந்தார். அந்த யோசனையும் சரியாத்தான் இருக்குது.

இந்த நிகழ்ச்சியைக் கைவிடுவது நட்டப்படுத்தும் எண்டு அவர் நினைச்சால் தேசியத்துக்கு ஆதரவான ஒரு நிகழ்வாக மாற்றலாம். செய்வாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் உண்மை

அதில்கூட எமக்காக எவ்வாறு பயன்படுத்தலாம்

எவ்வாறு பலன் பெறலாம்

எவ்வளவு நிதியுதவி பெறலாம் என்பதே முக்கியம்

மாறாக இதைத்தடுப்பதால் எந்த நன்மையுமில்லை

ஒன்றை நட்டப்படுத்தியதோடு நாமும் நட்டப்பட்டு

வரவிருந்த பலவிடயங்களையும் இழந்தோம் என்பதை தவிர..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நிப்படின போல கனடாவில இருக்கிற எல்லாம் எதோ தேசிய உணர்வோட இருக்க போகினம் எண்டு இல்லை..... எல்லாத்தை அனுசரிச்சு அதற்குள்ளாக சில விசயங்களை மக்களுக்கு தெரிய படுத்தின நல்லது எண்டு நினைகிரன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை நிப்படின போல கனடாவில இருக்கிற எல்லாம் எதோ தேசிய உணர்வோட இருக்க போகினம் எண்டு இல்லை..... எல்லாத்தை அனுசரிச்சு அதற்குள்ளாக சில விசயங்களை மக்களுக்கு தெரிய படுத்தின நல்லது எண்டு நினைகிரன்

அதுதான் இன்று தேவை

சும்மா வீராவேசவசனங்களல்ல

10 பேருக்கு இதன்மூலம் வயிறு நிறையுமென்றால்..........

இது தப்பே அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணத் தேவைக்காக எதையும் செய்யலாம் என்று இல்லை. ஒரு இனத்தின் ஒரு பகுதி மக்கள் பேரவலத்தில் இருக்கும் போது ஒரு பகுதி மக்கள் கூத்தும் கும்மாளமும் அடிப்பது இனத்தின் ஒட்டுமொத்த எழுச்சியையும் இனவுணர்வையும் பாதிக்கும் செயலாகும்.

குறிப்பிட்ட இந்த நபர் வருடா வருடம் தென்னிந்திய சினிமாப் பாடகர்களை அழைத்து நிகழ்வு செய்வதை வழமையாகக் கொண்டவர். தாயகமே சுடுகாடு ஆனாலும் தத்தம் செயற்பாடுகளைச் சிலர் நிறுத்த மாட்டார்கள். என்னைப் போல மந்தைகள் இருக்கும் வரைக்கும் இவர்களின் லாபக்கணக்குகள் அந்த மாதிரி......... :D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வீடியோவில் இறந்து கிடக்கும் நபர் உங்கள் தந்தையாகவோ அல்லது நெருங்கிய உறவினராகவோ இருந்தால் கூத்து கும்மாளம் பற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியுமா?

காட்டாறு இதையெல்லாம் இங்க கனக்க மரமண்டைகள் இருக்கு அதுகளுக்கு ஈமெயில் பண்ணேலும் எண்டா பண்ணிவிடுங்கோ

ஆராவது எனக்கு இந்தக் கனடாவில இருக்கிற ஊர்ச்சங்கங்களுந்த ஈ.....மெயில் அட்ரஸ் இருந்தா தாங்கப்பா. எல்லாருக்கும் இந்தக் கிளிப்புகளை அனுப்பிவிடுவம்.

இரவு வாயடி ரேடியோவின் ஆதரவு ஊது குழல்களும் சிலது இதுக்குள்ள ..ஊதுதுகள் ..போல... சினிமாப்பாட்டும் ..சிலுக்கு நடனமும் ஆடுற நிகழ்ச்சியை எப்பிடி விடுதலை ஆதரவு நிகழ்ச்சியாக்கலாம் எண்டு அவை ஒருக்காச் சொன்னால் நல்லம்....

என்னத்தைத்தான் சொன்னாலும் இப்ப சனங்கள் ஊரை விட்டுமட்டுமில்லை... உணர்வை விட்டும் தூரத்தில தான் நிக்குதுகள்....

அதுக்கு அதுகளை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை... ஊருக்கு உழைச்ச சண்டப்பிரசண்டன்களைப்பற்றிய

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடத்துக்கு முன்னால் மட்டும் ஈழத்தில் தேனும் பாலுமா ஓடிக்கொண்டிருந்தது ? இதே சதையும், ரத்தமும் தானே?? பணப்பிசாசுகள் !! தாங்கள் பணம் பண்ணுவதை மட்டுமே குறியாகக் கொண்டு அலையும் கீழ்த்தரமான மனிதர்கள். அது எப்படி, அவரது இசை நிகழ்ச்சி முடியும் போது ஈழத்தில் போரும் நின்று விடுமாம் ! நீயென்ன, சமாதானத்துக்கு யாகமா நடத்துகிறாய்? உனது இனம் தானே வன்னியில் ஒவ்வொருநாளும் குதறப்பட்டு வீதிகளிலும், காடுகளிலும் எறியப்படுகிறது ? நீயெல்லாம் ஒரு தமிழன், உனக்கு கருத்தெழுதிய நான் அதை விடத் தமிழன் !

சீ....சீ........கேடு கெட்ட சனம் !

சனம் கஸ்டப்படுகுது என்டுவிட்டு நீங்கள் மட்டும் செய்யுற வேலையை விட்டு விட்டு தெருவில பிச்சை எடுத்தா வாழுறியள்? அவர் தன்ரை தொழிலைச் செய்யுறார். கரும வீரன்.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறவுகள்

உவர் செய்யிற வேலையைப் பார்க்கிலும் பிச்சை எடுக்கிறது பரவாயில்லை !

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுள்ள மக்கள் என்றால் நிகழ்ச்சிக்கு ஒருக்கால் போகாமல் விடுங்கோ பார்ப்போம். அடுத்த முறை நிகழ்சி நடத்துபவர் ஒரு முறைக்கு பல முறை யோசிப்பார். ஆட்கள் போக நினைக்கும் போது நடத்துபவரை நொந்து என பலன்.

நாட்டை நேசிப்பவர்கள் என்று கூறுவோரும் இப்படியான நிகழ்சிகளை நடத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். லாபத்தை எடுத்து அகதிகளுக்கு கொடுக்கின்றோம் என்று சொல்லலாம். களியாட்டம் என்று வரும் போதுமேற்கூறிய இரண்டு நிகழ்வும் ஒன்றாக தான் தெரிகிறது.

எங்களைப்போல விடைப்பலகை வீரர்கள் அள்ளிக்குடுத்தாலே 1000 தாண்டாது. அவர் கிள்ளிக்குடுத்தாலே லட்சம் தாண்டும்.

911 இற்குப்பிறகு சோர்வடைந்திருந்த மக்களுக்கு அமெரிக்க அதிபர் தொலக்காட்சியில் தோன்றி பழையபடி வழமையான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மன்றாடினார். மக்கள் கவலையுடன் வீடுகளுக்குள் முடங்கினால் பொருளாதாரம் படுத்துவிடும்.

மகாபாரதத்தில் கண்ணன் அருசுனனுக்கு சொன்னதை நினைவில் இருத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நிகழ்வை நடத்தலாம் என்கிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.