Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத்தை தோற்கடிக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக யசுசி அகாசி தெரிவிப்பு

Featured Replies

[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009, 01:18.34 PM GMT +05:30 ]

பயங்கரவாதத்தை தோல்வியடைய செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் இன்று மேற்கொண்ட சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். மிக விரைவில் இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடனான ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசுசி அகாசி, நாளையதினம் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகாசியை சந்திக்கவுள்ள போதும் இன்னும் அதற்கான நேரம் குறிப்பிடப்படவில்லை என காங்கிரஸி;ன் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சிறிலங்காவில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் முடிவுற்று சமாதானம் நிலைபெறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சமாதான தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிற்கான ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவங்சவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது உரையாற்றிய யசூசி அகாசி, ஜப்பான் அரசாங்கம் சிறிலங்காவின் சமாதானத்திற்காக எந்த சந்தர்ப்பத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என குறிப்பிட்டார்.

அத்துடன் மோதல்கள் நிறைவுற்றதன் பின்னர் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகவோ, வேறு முறைகளிலோ துரித தீர்வுகளை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

அக்காசி தெளிவாய் தான் இருக்கின்றார்.

இந்த ஆள் இலங்கைக்கு வர முன்னர் மனிதவுரிமைகளைப்பற்றி பேசிவிட்டு வந்த பின் இலங்கைக்கு நிதியுதவி, பயஙகரவாத ஒழிப்பு என சொல்லி போவது வழமையான பாணி,,, நல்ல இளசுகளைகாட்டி கவனிக்கிறங்கள் போல... போகும் போது நன்றிக்கு இப்படியாக எதாவது உளறிவிட்டு போகிறார்.....இன்று போய் மீண்டும் வருவார்..... யப்பானின் சலவைசெய்யப்பட்ட சாக்கடைகள்......

கிழடுபத்தினாலும் பகிடி விட்டுப்போகவில்லை.

இதைசொல்ல ஏன் இங்க வருவான்?... அங்க இருந்தே சொல்லி இருக்கலாம் தானே?....

இணைத்தலைமை நாடுகள் எதிர்பார்த்த அனைத்தும் ஈடேறுகின்றன. ஜப்பானின் இந்திய சமுத்திர ஆதிக்க ஆசை மட்டும் தான் நிறைவேறுகின்றது இல்லை பாவம்

இந்தியாவின் இன்றைய நிலைப் பாட்டிற்கும், ஜப்பானின் இந்து சமுத்திரம் மீது செல்வாக்கு செலுத்த முனைவதற்கும் நிறைய தொடர்புகள் உண்டு. எம் பிராந்தியத்தில் இலங்கை மட்டும் தான் அதனுடைய மிக நெருங்கிய கூட்டாளின் என்பதனை கவனிக்க

புலிகளுக்கு மாற்றாக வேறு ஒரு போலித் தலைமையிடம் புல்லுப் புடுங்க மட்டும் அனுமதி உள்ள ஒரு தீர்வுத் திட்டத்தினை முன்வைத்து ஆடப் போகும் அடுத்த நாடகத்தினை ஆரம்பிக்க ஆயத்தம். அடுத்த வரும் பொதுத் தேர்தலின் பின் த.தே.கூட்டமைப்பு ஒன்றில் முற்றாக கலைந்து போகும் அல்லது பிள்ளையானை (கவனிக்க: முரளிதரனை அல்ல) தலைவராக சுவீகரிக்கும்.

இந்த செய்தி இலங்கை அரசின் ஊது குழல்களிலும், HINDU விலும் மட்டும்தான் வந்து இருக்கிறது... நேரில் கேட்ட சுயாதீனமானவர்கள் யாரும் இல்லை என்பதுதான் உண்மை...

தமிழ் மக்களை உளவியலில் பலவீன படுத்தும் செய்தியாக இருக்கலாம் ( அனேகமாக அப்படித்தான்)

  • தொடங்கியவர்

சரி அப்ப அவர் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து குசலம் விசாரிக்கும் வரை கொஞ்சம் பொறுங்கோ... !

ஆனா எங்கடை சம்பந்தன் ஐயா சந்திப்பு திருப்தி என்றுதான் சொல்லுவார்.. !

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மனிதாபிமானம் பற்றி கதைக்க வரவில்லை திருமலை புல்மோட்டைபற்றி கதைக்கவந்தவர்..... வாங்கோ வரவேற்கிறம்... இது தமிழனின் பண்பாடு. உபத்திரம் செய்யாதையுங்கோ புல்மோட்டையிலும் மீண்டும் வெடிக்கும்! இது கரிகாலன் வாழும் தேசம்!

சரி அப்ப அவர் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து குசலம் விசாரிக்கும் வரை கொஞ்சம் பொறுங்கோ... !

ஆனா எங்கடை சம்பந்தன் ஐயா சந்திப்பு திருப்தி என்றுதான் சொல்லுவார்.. !

இன்னும் அவர் அப்படி ஒண்டையும் பத்திரிகைகளுக்கு சொல்ல இல்லை. இலங்கையில் இப்போ மாலை நேரம். இன்னுமா சொல்ல இல்லை.?

எவ்வளவு நாள் காக்க வேண்டும்.?

Special Envoy Akashi expressed his satisfaction at the efforts undertaken by the Sri Lanka Government to safeguard the civilian population in the north. He expressed his confidence in the All Party Representative Committee (APRC) as a viable mechanism through which to bring about devolution of power and to build a pluralistic Sri Lankan society. He stated that Japan was fully conscious of the Sri Lanka government’s commitment to finding a political solution to the conflict, and expressed the hope that the political process would continue.

Referring to the concerns expressed by the international community, Ambassador Akashi emphasized that the LTTE should not be allowed to use civilians as a human shield.

He also stated that he looked forward to observing first hand the situation of the internally displaced person during his stay in Sri Lanka.

The Ambassador of Japan in Sri Lanka H.E. Kiyoshi Araki and officials of the Japanese Foreign Ministry accompanied the Special Envoy to the meeting, Foreign Secretary Palitha Kohona, and senior officials of the Foreign Ministry were also associated with the meeting.

Ministry of Foreign Affairs.

Colombo.

பயங்கரவாதம், கியங்கரவாதம் ஒண்டையும் காணேல்லயே ?

http://www.news.lk/index.php?option=com_co...5&Itemid=44

  • கருத்துக்கள உறவுகள்

அக்காசி தெளிவாய் தான் இருக்கின்றார்.

அப்படி தெரியவில்லையே யாரோ ஏதோ கொடுத்த மாதிரி தெரியுது :):o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.