Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக உறவுகளின் குரலாக கனடியத் தமிழர் சமூகத்தின் மனிதச்சங்கிலி பேரெழுச்சி, பணிப்புறக்கணிப்பு, கதவடைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா கொடூர அரசு வன்னியில் எங்கள் மக்களை அகதிகளாக்கி வகை தொகையின்றிக் கொண்டு குவித்து வருகின்றது. அகதிகளுக்கான பாதுகாப்பு வலயமென்ற மகிந்த அரசின் மக்கள் தங்கிடங்கள், அவர்களின் கொலைக்களமாக ஆக்கப்பட்டுள்ளது. வுரலாற்றில் எழுத்துக்களால் விபரிக்க முடியாத மனதப் பேரவலத்துள் எமது உறவுகள் சுமார் நான்கு இலட்சம் பேர் சிக்கியுள்ளனர்.

இவர்களின் பரிதாப நிலையை வெளிக்கொணரவும் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க சர்வதேசத்தை நிர்பந்திக்கவும் மற்றும் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தாயகம் தழுவிய முழுக்கதவடைப்பிற்கு ஆதரவளிக்கும் முகமாகவும் கனடியத் தமிழர் சமூகத்தினால் மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரெழுச்சி சனவரி 30ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கனேடியத் தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கனடியத்தமிழர்கள் பல்லாயிரமாகவும் இலட்சமாகவும் கூடி எமது பலத்தைக் காட்டவேண்டிய காலம் இது. எனவே அனைத்துத் தமிழ் வியாபார நிலையங்களையும் அன்றைய தினம் மூடுவதோடு மாணவர்களும், தொழிலக ஊழியர்கள் மற்றும் சகல அலுவலர்களும் அன்று விடுப்பு எடுத்து எல்லோரும் ஒன்றாக திரண்டெழுவதுடன்

எமது வியாபார நிலையங்களிலும் வாகனங்களிலும் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிடுவோம் எனவும் அனைத்து கனேடியத் தமிழர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ரொறன்ரோவில் மனிதச்சங்கிலி இடம்பெறும் இடம்:

ரொறன்ரோ நகரின் மத்தியிலுள்ள

யூனியன் சப்வேயை மைய்யப்படுத்தி

சென்.ஜோர்ஜ் சப்வே வரை செல்லும் மஞ்சல் நிற சப்வே வீதிகள்.

நேரம்: மதியம் 12:.00 மணியிலிருந்து பிற்பகல் 6:00மணி வரையும்

சனவரி 30 ‘நாம் தமிழர்’ நாளாகட்டும்!

புலத்தின் பலமே களத்தின் வளம்!

http://www.seithy.com/briefEventDetail.php...;language=tamil

Edited by Nitharsan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான பேரூந்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து உதவிகள் தேவையானவர்கள் தொடர்பு கொள்ள முடியும்.

இன்னும் கொஞ்சநேரத்தில நாங்களும் இறங்கிறம். நிறையப்பேர் Eaton Centre இல 11.15 சொச்சம் இருந்து காத்து இருக்கிறீனம். இண்டைக்கு ஏராளம் தமிழ்மக்கள் ஒன்றாகச்சேருவீனம் எண்டு எதிர்பார்க்கப்படுகிது. பார்ப்பம் என்ன நடக்கிது எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

முரளியும் கலந்து கொள்வதால் போராட்டம் நிச்சயம் வெற்றியளிக்கும் .

ஏனென்றால் முரளியிடம் , கனடிய பொதுமக்களை , அரசியல்வாதிகளை சென்று சேர்க்கக்கூடிய புதிய யோசனை வைத்திருப்பார் . :rolleyes:

பிரதான செய்தியாக The Star இல் போட்டுள்ளார்கள். எனக்கு தெரிந்து இது தான் முதல் தடவை என்று நினைக்கின்றேன்

http://www.thestar.com/

உங்களால் முடிந்தால் தயவு செய்து comments எழுதி போடுங்கள். நன்றியை தெரிவியுங்கள். ஒரு 5 நிமிடம் போதும் இதனை செய்ய. ஊடக உறவுகளை வளர்க்க வளர்க்க எமகான நிலையான ஆதரவு தளம் உருவாகும்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பிரதான செய்தியாக The Star இல் போட்டுள்ளார்கள். எனக்கு தெரிந்து இது தான் முதல் தடவை என்று நினைக்கின்றேன்

http://www.thestar.com/

உங்கள் தகவலுக்கு நன்றி நிழலி .

இயலுமென்றால் மற்றைய நிகழ்வுகளையும் தரப் பாருங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா ஊடகத்திலும் முதன்மைச்செய்தியாக வர வைக்கவேண்டும் அப்போதுதான் ஏதாவது நடக்கும் முயலுவோம் இன்னும் அதிகமாய்

கைக்குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு பலர் வந்திருந்ததைக் காண முடிந்தது. திறக்க வேண்டியவர்களின் கண்கள் திறக்குமா?

http://www.680news.com/

இந்தச் செய்தியில் நேர்த்தியான பாதசாரிகளுக்கோ போக்குவரத்துக்கோ சிரமந்தராத வகையிலான ஒழுங்கமைப்புக் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.

http://www.680news.com/

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றி ரீ வி இல மிகவும் வெற்றிகராமாக நடந்த மனிதச்சங்கிலி என வர்ணித்தனர். மிகவும் ஒழுங்காகவும் முடிந்தளவு பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறும் தங்கள் குரலைத் தெரிவித்ததாக கூறினார்கள். ஒழுங்கு படுத்திய மற்றும் பங்கு பற்றிய அணைவருக்கும்வாழ்துகளும் நன்றியும்.

முரளியும் கலந்து கொள்வதால் போராட்டம் நிச்சயம் வெற்றியளிக்கும் .

ஏனென்றால் முரளியிடம் , கனடிய பொதுமக்களை , அரசியல்வாதிகளை சென்று சேர்க்கக்கூடிய புதிய யோசனை வைத்திருப்பார் . :icon_idea:

என்ன நக்கலா? மதியம் பன்னிரண்டு மணிக்குப்போய் இப்பத்தான் வந்தன். ஆயிரம் ஆயிரம் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிச்சீனம். பார்க்கிற இடம் எல்லாம் எங்கட ஆக்களும், சுலோகங்களும், கோசங்களும்தான்.

நான் ஆரம்பத்தில பெரிய பதாதை ஒண்டை பிடிச்சுக்கொண்டு நிண்டுபோட்டு பிறகு ஆக்கள் சேர்ந்த உடனை அதை இன்னொருவரிட்ட குடுத்துப்போட்டு மனிதச்சங்கிலி நடந்த எல்லாப்பகுதிகளுக்கும் மற்ற ஆக்களோட நடந்து சென்று கோசம்போட்டு கத்திக்கொண்டு இருந்தம். சுமார் நாலு அரைக்கு யூனியன் ஸ்டேசனுக்குப்போய் அங்கிருந்த ஆக்களோட இணைஞ்சு கொண்டம். எங்கட கோசங்கள் வானைப்பிழந்திச்சிது. மேல உலங்கு வானூர்தியில இருந்தும் போராட்டத்தை அவதானிச்சுக்கொண்டு இருந்தாங்கள். டவுண்டவுனிண்ட ஏறக்குறைய எல்லாப்பகுதிகளும் ஒரு யூ வடிவில சுமார் 5 கிலோமீற்றர் நீளத்துக்கு எங்கட மனிதச்சங்கிலியால பிணைக்கப்பட்டு இருந்திச்சிது.

CBC, CITY TV எண்டு முக்கியமான எல்லா ஊடகங்களும் வந்து இருந்திச்சிதுகள். கத்தோ கத்து எண்டு கத்தி தொண்டை எல்லாம் இறுகிப்போச்சிது. காதும் அதைச்சுப்போச்சிது. நான் இரண்டு ஜக்கட்டுக்கள், பிறகு உள்ளுக்க ஒரு சுவட்டர், அதுக்கு உள்ள ரெண்டு முழுக்கை ரீசேட் எண்டு போட்டு, காலுக்கும் எல்லாம் பல லேயருகள் போட்டு, தொப்பியும் ஒண்டுக்கு மேல ஒண்டாய் ரெண்டு போட்டுக்கொண்டு போனதால குளிர் ஒரு பொருட்டாகவே இருக்க இல்லை.

எங்களால முடியுமான அளவுக்கு மக்கள்படும் அவலத்தை வெளி உலகுக்கு எடுத்துக்கொண்டு வந்து இருக்கிறம். என்ன நடக்கிது எண்டு பொறுத்து இருந்து பார்ப்பம். இன்றைய நிகழ்வில ஆயிரக்கணக்கில மிக இளம் வயது ஆக்களும் கலந்து சிறப்பித்து இருந்திச்சீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய உறவுகளுக்குப் பாராட்டுகள். நான் வேலை நேரத்திலேயே இங்க நேரடி ஒலி பரப்பு உலகத் தமிழ் வானொலியில கேட்டுக் கொண்டிருந்தனான். என்ன கேக்கிறாய் எண்டு கேட்டு வந்த அமெரிக்க நண்பருக்கு எல்லாம் காட்டி ஒரு அறிமுகம் கொடுக்க வாய்ப்புக் கிடைச்சது. ஆனாலும் சி.பி.சி யில "புலிகளை எதிர்த்து இலங்கை போரிடுவதை எதிர்த்து, தமிழர்கள் போரட்டம் நடத்தினார்கள்" எண்டு தான் செய்தி துவங்குது. அதோட சிலர் (கனேடியர்கள் போலத் தான் தெரியுது, நிச்சயமில்ல) அந்தச் செய்தியின் கருத்தாடல் பகுதியில இலங்கைப் பிரச்சினைக்கு எங்களுக்கென்ன எண்ட மாதிரி எழுதியிருக்கிறார்கள். அப்படிப் பட்ட ஒரு கருத்துக்கு மிக உயர்ந்த எண்ணிக்கையான சிபார்சும் கிடைச்சிருந்தது. நான் முடிந்தளவு இந்தக் கருத்துகளுக்கு பவ்வியமாக பதில் எழுதினேன். ஆனால் இந்தக் கருத்துகளைப் பார்க்கிற போது, நாங்கள் எங்களை மட்டும் தான் நூறு வீதம் நம்பியிருக்க வேணும் எண்ட உண்மை முகத்தில அறையுற மாதிரி விளங்குது. ஆனால் எங்கள் ஒற்றுமை குறித்து பெருமை.

ஜஸ்ரின், நீங்கள் கூறுவது மிகவும் சரி. கவனயீர்ப்பிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, என்னையும் ஒரு கனேடியர் இப்படித்தான் கேட்டார். கனேடிய அரசாங்கம் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு என்ன செய்துவிடமுடியும் என்றும், நீங்கள் இப்படிப் போராட்டம் நடத்துவது வீண் என்றும் கூறினார். ஆனால், சிறுதுரும்பும் பல்லுக்குதவும். அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யாவிட்டாலும், சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவாமலும், ஆதரவாகவும் இல்லாமல் இருந்தாலே போதுமானது. எங்களுக்கு நாங்களேதான் உதவியே தவிர, எங்களுக்காக யாரும் வரமாட்டார்கள் என்பபது நிதர்சனமான உண்மை. தமிழ்மக்களின் விடிவு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களின் கைகளிலேயே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நக்கலா? மதியம் பன்னிரண்டு மணிக்குப்போய் இப்பத்தான் வந்தன். ஆயிரம் ஆயிரம் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிச்சீனம். பார்க்கிற இடம் எல்லாம் எங்கட ஆக்களும், சுலோகங்களும், கோசங்களும்தான்.

நான் ஆரம்பத்தில பெரிய பதாதை ஒண்டை பிடிச்சுக்கொண்டு நிண்டுபோட்டு பிறகு ஆக்கள் சேர்ந்த உடனை அதை இன்னொருவரிட்ட குடுத்துப்போட்டு மனிதச்சங்கிலி நடந்த எல்லாப்பகுதிகளுக்கும் மற்ற ஆக்களோட நடந்து சென்று கோசம்போட்டு கத்திக்கொண்டு இருந்தம். சுமார் நாலு அரைக்கு யூனியன் ஸ்டேசனுக்குப்போய் அங்கிருந்த ஆக்களோட இணைஞ்சு கொண்டம். எங்கட கோசங்கள் வானைப்பிழந்திச்சிது. மேல உலங்கு வானூர்தியில இருந்தும் போராட்டத்தை அவதானிச்சுக்கொண்டு இருந்தாங்கள். டவுண்டவுனிண்ட ஏறக்குறைய எல்லாப்பகுதிகளும் ஒரு யூ வடிவில சுமார் 5 கிலோமீற்றர் நீளத்துக்கு எங்கட மனிதச்சங்கிலியால பிணைக்கப்பட்டு இருந்திச்சிது.

CBC, CITY TV எண்டு முக்கியமான எல்லா ஊடகங்களும் வந்து இருந்திச்சிதுகள். கத்தோ கத்து எண்டு கத்தி தொண்டை எல்லாம் இறுகிப்போச்சிது. காதும் அதைச்சுப்போச்சிது. நான் இரண்டு ஜக்கட்டுக்கள், பிறகு உள்ளுக்க ஒரு சுவட்டர், அதுக்கு உள்ள ரெண்டு முழுக்கை ரீசேட் எண்டு போட்டு, காலுக்கும் எல்லாம் பல லேயருகள் போட்டு, தொப்பியும் ஒண்டுக்கு மேல ஒண்டாய் ரெண்டு போட்டுக்கொண்டு போனதால குளிர் ஒரு பொருட்டாகவே இருக்க இல்லை.

எங்களால முடியுமான அளவுக்கு மக்கள்படும் அவலத்தை வெளி உலகுக்கு எடுத்துக்கொண்டு வந்து இருக்கிறம். என்ன நடக்கிது எண்டு பொறுத்து இருந்து பார்ப்பம். இன்றைய நிகழ்வில ஆயிரக்கணக்கில மிக இளம் வயது ஆக்களும் கலந்து சிறப்பித்து இருந்திச்சீனம்.

முரளி , இப்படியான விடையங்களில் நான் நக்கல் பண்ண மாட்டேன்.

நீங்கள் அப்படி கேட்டது எனக்கு மனவருத்தத்தை தருகின்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகப்பெருமையாக இருக்கின்றது.

நம் ஒற்றுமை தான் மிகப்பலம்.

முரளி, உங்களைப்பற்றி ஏன் நீங்களே தாழ்வாக நினைக்க வேண்டும். ஸ்ரீ அண்ணை கேட்டதைத்தான் நானும் கேட்டிருப்பேன்.உங்களைப்போன்

எங்க வீட்டில அனைவரும் எழுச்சியில் பங்கெடுத்து கொண்டுள்ளனர்..

இப்போது தான் சிட்னி உண்ணாநிலை நிறைவு பெற்றது...தொடர்ந்தும் வேறு விதமான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளனர்..

கனேடிய அரசாங்கம் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு என்ன செய்துவிடமுடியும் என்றும், நீங்கள் இப்படிப் போராட்டம் நடத்துவது வீண் என்றும் கூறினார்.

அடுத்த முறை கேளுங்கள், அப்ப ஏன் எங்கோ இருக்கும் மத்திய கிழக்கு விடயத்தில் அக்கறை காட்டுறீங்கள் என? அப்ப ஏன் இவ்வளவு அழிவுகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ் மக்களுக்காய் போராடும் ஒரே அமைப்பான புலிகளை கனடா தடை செய்தது என. என்று அவர்கள் புலிகளை தடை செய்தனரோ அன்றே அவர்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்பது தான் அர்த்தம். அதனால் தான் இந்த கவனயீர்ப்பு போராட்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிகரமாக, நடைபெற்று முடிந்த கனேடிய தமிழினத்தின் எழுச்சி போராட்டம் தூங்கி கிடந்த ஊடகங்களையும் அதனால் தெளிவடையாது இருந்த கனேடியர்களையும் தெளிவடைய வைத்துள்ளது என்று பல வேற்றினத்தவர்களுடன் பேசியதன் அடிப்படையில் அறிய முடிந்தது.

முதலாவதாக, நேர்த்தியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க ஆதரவு வழங்கிய மக்களுக்கும், அவர்களை நெறிப்படுத்திய தொண்டர்களுக்கும், வருகை தந்து கொண்டிருந்த மக்களை வழிப்படுத்திய வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும், கனடாவில் இயங்கும் சகல சமூக அமைப்புக்களுக்கும் தமிழன் என்ற முறையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.!

இவ்வாறான ஓரு கவனயீர்ப்பை முன்னரே நடத்தியிருக்கலாமோ என்று தோன்றுமளவுக்கு எம்மக்களின் எழுச்சி இருந்தது.

சின்னஞ் சிறு குழந்தைகளும், வயது முதிந்தோரும் வரிசையாக நின்றது இன்னும் எம் மக்கள் கைவிடப்படவில்லை என்பதை மீண்டும் மீண்டும் உரத்து சொன்னது எனலாம்.

தூங்கி கிடந்த கனேடிய ஊடகங்கள் எல்லாம் இப்போது தான் துயலெலுந்திருக்கின்றன போல இருக்கின்றது. அவர்களின் வருகையும், நேரடி ஒளி, ஒலி பரப்புக்களும் போராட்டத்தின் நியாயப்பாட்டை கனேடிய தமிழ் சமூகங்களுக்கு எடுத்தியம்பியிருக்க வேண்டும்.

மீண்டும், கடும் குளிரின் மத்தியில் தங்கள் உடல் நலத்தை பாராது தாயக மக்களின் வதைகளுக்கு நீதி கேட்டு ரொரன்ரோவின் வீதிகளின் வந்த மக்களுக்கு தலைசாய்க்கிறேன்.!

முரளி , இப்படியான விடையங்களில் நான் நக்கல் பண்ண மாட்டேன்.

நீங்கள் அப்படி கேட்டது எனக்கு மனவருத்தத்தை தருகின்றது .

மன்னிக்கவும் தமிழ்சிறி. நான் என்னால் முடியுமான அளவு நேற்று குரல்கொடுத்து இருந்தேன். நாங்கள் சுமார் 11.45 மணியளவில் ஆரம்பித்தபோது 20 - 30 வரையான மக்கள்தான் குறிப்பிட்ட இடத்தில் நின்றார்கள். சிறிதுநேரத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் குழுமத்தொடங்கினார்கள். நான் அவதானித்த கவலையீனமான அம்சம் எல்லோரும் வாயைமூடிக்கொண்டு மெளனிகளாக நின்றார்கள்.

ஆனால்... நான் சிறிதுநேரத்தில் உரத்து கோசம்போடத்தொடங்க என்னுடன் பல இளையவர்கள் இணைந்து கொண்டார்கள். எமது கோசம் சில நிமிடங்களிலேயே உச்சத்தொனியில் அதிகரித்து அந்த இடத்தில் சிறிதுநேரத்தில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. நாங்கள் பெரியதொரு பாததையை தாங்கியபடி முக்கியமான ஒரு சந்தியை அடைந்தபோது எமது உரத்தகோசம் மூலம் பலநூற்றுக்கணக்கான வேற்றின மக்களின் கவனத்தை திசைதிருப்ப முடிந்தது.

நான் கத்ததுவங்க உடனடியாக ஒரு கனேடிய தொலைக்காட்சி ஊடகம் (நம்மவருடையது அல்ல) எமது பதாதையையும் எம்மையும் மிக அருகாக வந்து, முகத்துக்கு முன்னால் பிடித்து ஒளிப்பதிவு செய்தார்கள். நாங்களும் எங்கட கத்தலை அதிகரிச்சம். பயப்படவோ, கூச்சப்படவோ இல்லை. அங்க வன்னியில சனங்கள் படுகிற அவலங்களை அப்போது நினைக்க, நினைக்க துணிவும், உறுதியும் தானாக வந்துவிட்டிது. ஒவ்வொரு கோசத்தை போட்டபோதும் வன்னியில் இறந்த மக்களின், காயப்பட்ட மக்களின் புகைப்படங்களை மனதில நினைச்சுக்கொண்டு ஆக்கிரோசமாக எதிர்ப்பை காட்டினம்.

தவிர, தெருத்தெருவாக கோசம்போட்டபடி சென்றபோது ஊடகங்கள் எங்கள் பக்கம் கமராவை திருப்பி அக்கறையுடன் ஒளிப்பதிவு செய்தார்கள். மற்றும்படி, நான் தனிப்பட ஊடகங்களுடன் ஏதும் உரையாடவில்லை. அவர்கள் எழுந்தமானமாகவே கவனயீர்ப்பில் கலந்துகொண்ட மக்களை பேட்டி கண்டு இருந்தார்கள்.

Edited by முரளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனேடிய ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்.

http://ca.youtube.com/watch?v=LSNxkG2b4Tg

http://ca.youtube.com/watch?v=VxwedboIs0o

CP24 ல் நேற்று மதியத்தின் பின்னர் எமது போராட்டம்தான் Breaking News ஆக இருந்தது. மேலும் எமது போராட்டம் மற்றும் இலங்கை பிரச்சனை குறித்து 30 நிமிடம் வரையிலான ஒரு நிகச்சியும் நடைபெற்றது. நான் ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்ததினால் அதனை முழுமையாக பதிய முடியவில்லை. அந்த video வை சிறிது நேரத்தின் பின்னர் தரவேற்றுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.