Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

இவர்கள் மட்டும் தங்களின் காப்பாளர்களின் பெயர்களை தெரிவிக்கமாட்டார்களாம். ஆனால் சாத்திரி தன்னுடைய பெயரை, முகவரியை தெரிவிக்க வேண்டுமாம். என்ன நியாயம் இது. எழுத்தாளர்(?) ஒன்றியத்தில் உள்ள யாருமே புனை பெயரில் எழுதியதே இல்லையா?

சாத்திரியின் விமர்சனத்திற்கு (சொந்த இணையத்தளம் இல்லை, சரியான பரப்புரை இல்லை போன்றவை) ஆக்கபூர்வமான பதிலை கொடுப்பதை விட்டுவிட்டு, அவரை சாடுவதாகத்தான் இந்த பதில் இருக்கிறது. இவர்கள் உண்மையான எழுத்தாளர்களாக இருக்க முடியாது என்பதற்கு, இவர்களின் பதில் கடிதமே சாட்சி.

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply

எந்த ஒரு சுயதம்பட்டத்தையோ..சுய புகழ்ச்சியோ...விரும்பமால்... எழுதுவதற்க்கா....எழுதுபவர்கள்.

....தான் உண்மையான எழுத்தாளர்கள்...

புனைபெயரில் எழுதி .......பாராட்டு பெற்றவர்கள்........இந்த உலகத்தில்......எவ்வளவோ பெயர்...

பேராசிரியர் பட்டமோ... ...ஆக்களுக்கு பின்னால் போடுற பட்டமோ... எதுவும்......எழுத்தாளனின் ஆற்றலை தீர்மானிப்பதில்லை...

வணக்கம்,

இது என்னுடைய முதலாவது கருத்துப் பதிவு. கவலை அளிக்கும் விதமாக என்னுடைய நண்பர்கள் குறித்து எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதனராசா குறிப்பிட்டிருக்கும் அனைவரையும் நான் அறிவேன்.

இந்த எழுத்தாளர் ஒன்றியத்தில் அங்கம் வகிப்பவர்கள் குறித்து சொல்வது என்றால், திரு முருகதாசன் ஜேர்மனியில் பல எழுத்தாளர்கள் உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மற்றவர்கள் தங்களின் எழுத்துத்திறனை வளர்ப்பதை ஊக்கப்படுத்திய அவர், தன்னுடைய எழுத்துத்திறனை வளர்ப்பதற்கு எதுவுமே செய்யாது விட்டுவிட்டார் என்பது என்னுடைய கவலை.

கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களைப் பற்றி சொல்வது என்றால், அவர் 20 வருடமாக கவிதை எழுதி வருவதாகச் சொல்லிக் கொள்பவர். ஒன்றியத்தின் பதிலறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று அவரது முழு நேரத் தொழிலாகவும் கவிதை எழுதுவது இருக்கிறது. ஆனால் அவரது கவிதைகளில் ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டால் யாருமே சொல்ல மாட்டார்கள். 20 வருடமாக தொடர்ச்சியாக கவிதை எழுதி வருகின்ற இவரின் கவிதைகளோ அல்லது வெறு எழுத்துக்களோ இலக்கியத்துறையில் எவ்விதமான தாக்கங்களையும் ஏற்படுத்தவில்லை. வெறுமனே பட்டங்களை சுமப்பதுதான் இவர் கண்ட பலன்.

இந்த பதிலறிக்கையில் பொதுப்பணியாளராக குறிப்பிடப்பட்டிருக்கும் கனகலிங்கம் இதுவரை எதையுமே எழுதியதில்லை. சில வேளைகளில் ஊருக்கு கடிதம் எழுதியிருப்பார்.

இப்படித்தான் இந்த எழுத்தாளர் ஒன்றியம் இருக்கிறது. இந்த ஒன்றியத்தில் இருப்பவர்கள் என்ன செய்தார்கள் என்பது இருக்கட்டும். இவர்களின் எழுத்துக்கள் என்ன செய்தன என்பதுதான் கேள்வி.

ஆனால் அதே வேளை மதனராசாவின் கருத்து மிகவும் அநாகரீகமான முறையில் அமைந்திருக்கிறது. தனிப்பட்டரீதியான தாக்குதல்களாக இருக்கின்றது. இதை அவர் தவிர்க்க வேண்டும்.

அத்துடன் விடுதலைப்புலிகளை முன்பு எதிர்த்தவர்கள் தற்பொழுது ஆதரிப்பதில் தவறு ஏதும் இல்லை. எனக்கு தெரிந்தவரை பாக்கியநாதன் அவர்கள் இங்கே இருக்கும் பணியாளர்களுடன் முரண்பட்டிருந்தாரே தவிர, விடுதலைப்புலிகளை எதிர்த்ததில்லை. பின்பு புரிந்துணர்வு ஏற்பட்டு இணைந்து வேலை செய்கிறார். எனக்கும் வெளிநாடுகளில் நடைபெறும் சில விடயங்கள் குறித்து அன்றும், இன்றும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அவைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டிக்காட்ட நான் தவறியதில்லை. இதனால் என்னை புலி எதிர்ப்பாளன் என்று சொல்ல முடியுமா?

ஆகவே இது போன்ற தாக்குதல்களை விடுத்து, அவர்களிடம் அவர்களின் எழுத்துக்கள் பற்றி கேள்வி எழுப்புவோம். எழுத்தாளர் ஒன்றியத்தில் இருப்பவர்களை எழுதுவதற்கு ஊக்கம் கொடுப்போம்

இப்படித்தான் இந்த எழுத்தாளர் ஒன்றியம் இருக்கிறது. இந்த ஒன்றியத்தில் இருப்பவர்கள் என்ன செய்தார்கள் என்பது இருக்கட்டும். இவர்களின் எழுத்துக்கள் என்ன செய்தன என்பதுதான் கேள்வி.

புகலிட தமிழர்கள் வேறு எவருடைய எழுததுக்களாவது ஏதாவது செய்திருக்கிறதா? அப்படியாயின் ஒன்று இரண்டை அறியத்தாருங்களேன்.. யாருடைய எழுத்துக்கள் என்ன செய்திருக்கிறது என்பதை.. :P

உடனடியாக மனதில் தோன்றுவதை சொல்வது என்றால், கனடாவில் திரு என்பவர் முழக்கம் பத்திரிகையை நடத்தி வருகிறார். பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்புகின்ற அவர், பிற்போக்குவாதம் நிறைந்த எமது சமூகத்தில் "முழக்கம்" பத்திரிகையை முன்னணிப் பத்திரிகையாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார். கடவுள் மறுப்பையும், சாதி மறுப்பையும் வெளிப்படையாகவும் காத்திரமாகவும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படுவதற்கு அவருடைய எழுத்துக்கள் ஒரு காரணம். "முழக்கம்" படித்து தெளிவு பெற்ற பலர் இருக்கிறார்கள்.

முன்பு ஈழமுரசில் மறைந்த ஆசைத்தம்பியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய வீச்சும் உங்களுக்குத் தெரியும்.

இன்னும் பலர் உண்டு. பெயர்கள் கூறுவது, விவாதம் திசை திரும்புவதற்கு வழிவகுக்கும்.

ஆகவே மீண்டும் எழுத்தாளர் ஒன்றியத்திற்கு வருவோம். அவர்களின் எழுத்துத்திறன் குறித்து நான் வைத்த கருத்துக்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?

நேசன் அவர்களுக்கு வணக்கம,

முழக்கம் பகுத்தறிவு சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்புகின்றது. ஆதே பத்திரிகை என்றால் என்ன? அதில் எவற்றை எழுத வேண்டும் என்பதை இந்த எழுத்தாளர்கள் மறந்துவிடுகின்றனர். அப்படி பார்க்ககையில், பலரை தமிழ் தேசத்துNருhகிகள் ஆக்கிய பெருமை முழக்கத்தை சாரும். என்றால் அது முpகையாhது. யார் வேண்டுமானாலும் எழுதலாம், யார் Nவுண்டுமாணலும் விமர்சனம் செய்ய முடியுமா? என்பது தான் இங்கே கேள்விக்குறி, விமர்சனம் என்பதற்க்குரிள வடிவத்தை கருத்தை அறியாமல் இங்கே பலர் விமர்சனம் செய்கின்றனர். இதில் எங்கள் சாத்திரியும் விதி விளக்கலல், தனது நண்பனின் ஆசைக்காக என்னை பற்றி பொய் பரப்புரையை பெய்தவர் தான் இந்த சாத்திரி, இருப்பினும் அவரின் சில நல்ல கருத்துக்களை உள்வாங்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சினைகளை அவர் வெளிக்கொணர முற்ப்படுகன்றார். உண்மையல் சர்வதேச பலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் பற்றி நான் சாத்திரியின் கட்டுரையின் பின்ன அறிந்தேன்...

தனி நபர் தாக்குதல்களாக இல்லாமல் புல எழுத்தாளரின் ஆக்கங்கள் எவ்வாறன தாக்கத்தை புலத் தமிழரிடயே ஏற்படுத்தின ,அவை என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தின,அவ்வாறு இல்லாதவிடத்து .எழுத்தாளர் ஒன்றியம் எவ்வாறு இதனை மாற்றலாம்,இன்னும் எவ்வாறு காத்திரமான பணியை அனைவரையும் உள்வாங்கி உலகளாவிய ரீதியில் செயற்படலாம் என்று எழுதுங்கள்.ஏன் நீங்கள் இணயத்தைப் பாவிப்பது குறைவு?இணயம் என்பது உலகளாவிய ரீதியில் வாசிக்கப்படுகிறது.ஏன் யாழ்க் களத்தில் கூட புல எழுத்தாளர்கள் எழுதலாம்.தமிழ் மேல் அக்கறை உள்ள பல புல இளஞர்களுக்கு நீங்கள் இங்கே எழுதுவது ஊக்கத்தைக் கொடுக்கும்.சாத்திரி எழுதிய கட்டுரையின் ஆதங்கம் அது தான் என்று எனக்குப் படுகிறது.மற்றப்படி அவர்கள் முன்னர் வேறு அரசியல் நிலைப்பாட்டில் இருந்திருக்கலாம் ஆனால் திருந்துவதும் ,அதனை மன்னித்து மேற் செல்லுவதும்

மனிதப் பண்பு.எங்களுக்குள் ஒற்றுமை மிக அவசியம். நாங்கள் எல்லாரையும் அரவணைத்து முன் செல்வது அவசியம்.ஆரோக்கியமான விமர்சனங்களை உள்வாங்குதலும்,வினைத்திறனுட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

இந்த பதிலறிக்கையில் பொதுப்பணியாளராக குறிப்பிடப்பட்டிருக்கும் கனகலிங்கம் இதுவரை எதையுமே எழுதியதில்லை. சில வேளைகளில் ஊருக்கு கடிதம் எழுதியிருப்பார்.

ஆனால் அதே வேளை மதனராசாவின் கருத்து மிகவும் அநாகரீகமான முறையில் அமைந்திருக்கிறது. தனிப்பட்டரீதியான தாக்குதல்களாக இருக்கின்றது. இதை அவர் தவிர்க்க வேண்டும்.

சபேசன் நீங்களும் கனகலிங்கத்தை நக்கலடித்திருக்கிறீர்கள்தா

கனகலிங்கம் விழாக்கள் போன்றவற்றில் ஓடியாடி வேலை செய்வார். சிறந்த உழைப்பாளி. அத்துடன் சில கருத்துக்களை துணிச்சலாக சொல்வார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் இதுவரை எதையுமே எழுதியதில்லை. அவர் ஒரு எழுத்தாளர் இல்லை. அவரை ஒன்றியத்தின் பதிலறிக்கையில் "பொதுப்பணியாளர்" என்று குறிப்பிட்டதன் காரணத்தாலேயே, அவர் உண்மையில் ஒரு எழுத்தாளர் இல்லை என்பதை சொல்ல வேண்டியதாயிற்று. ஆகவே எழுத்தாளர்கள் எழுதுவது குறித்தும் எழுதாதது குறித்தும் சிறிது நக்கல் செய்யலாம். அதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை.

கோசல்யா சொர்ணலிங்கம் பற்றிக் குறிப்பிட்டது கூட ஒரு நல்ல எண்ணத்திலேதான். இவரைப் போன்றவர்கள் தொடர்ச்சியாக எழுதியும், எழுத்துலகில் பெரிதாக குறிப்பிட்டு சொல்லுகின்ற மாதிரி எதையும் சாதிக்காமல் இருக்கிறார்கள் என்கின்ற கவலையில் சொன்னது. அருகில் துதிபாடிகளை மட்டும் வைத்திருப்பவர்களால் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. கோசல்யா சொர்ணலிங்கத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டங்களும், நடத்திய பாராட்டு விழாக்களும், அவரின் எழுத்துக்களின் வளர்ச்சியை பாதித்துவிட்டன. அவரை சாதித்துவிட்டதாக பொய்யாக நம்பச் செய்துவிட்டன. உண்மையான விமர்சனங்கள் அவரிடம் வைக்கப்பட்டிருந்தால், அவருடைய எழுத்தார்வத்திற்கும் முயற்சிக்கும், இன்று தமிழர்கள் மத்தியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பெண் கவிஞர்களில் ஒருவராக இருந்திருப்பார்.

ஆகவே இவர்களின் எழுத்துக்கள் பற்றிய விமர்சனங்களை சரியான முறையில் முன்வைக்கப்பட வேண்டும். எழுத்தோடு சம்பந்தப்படாத விடயங்கள் பற்றிய விமர்சனங்கள் வேண்டாம் அதே வேளை எழுத்தாளர் ஒன்றியத்திற்கு ஆதரவாக பேசுபவர்களும், எதிர் கேள்விகள் எதிர் குற்றச்சாட்டுகள் போன்றவற்றின் மூலம் அவர்களை காப்பாற்ற முனையாது, சரியான பதிலை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும்.

www.webeelam.com

நிறைய விவாதிக்கிறீங்கள்.. ஒருவனுடைய தனிப்பட்ட குறைகள் என்று ஆதாரமில்லாதவற்றை பொது இடத்தில் போட்டு நன்றாகவே உங்கள் காழ்ப்புணர்வுகளையும் மன்மதராசா வெளியிடுறீங்கள்.. விக்னா பாக்கியநாதன் தம்பதியினர் யேர்மனியிலே தமிழ் இலக்கியத்துறைக்கு செய்தது அதிகம்.. அவர்களால்தான் பலருக்கே தமிழ் இலக்கிய முயற்சிகளுக்கு சில தொண்டு நிறுவனங்களில் ஏதோ உதவி என்ற பெயரில் சிறு உதவிகளைப் பெறலாம் என்பதும் பலருக்கு தெரிந்தது. அதன் பயனாக பல சஞ்சிகைகள் பிறந்து, பின்பு அந்த உதவிகள் போதாமல் அவைகள் நின்றுபோனதும் உண்மை.

ஒரு தலைப்பில் வாதிக்கும்போது அதற்கு ஆதாரமில்லாத விடுதலைச் சாயம் பூசுவதன் மூலம் உண்மைகளுக்கு பூட்டு போடலாம் என விளககுமாறிட்ட எதிர்பாராதீங்க.. ஏனேனில் யேர்மனீல முதல் தோனறிய தமிழ் கல்வி அமைப்பு 'யேர்மன் தமிழ் கல்வி சேவை'. அதுதான் உண்மை. யேர்மனில் நடைபெறும் தமிழ் கல்வி நிலையங்களுக்கு பொதுவா கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உதவவும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அதுவும் உண்மை. அதற்காக அதற்கு பின் தோன்றிய கல்வி சம்பந்தமான அமைப்புகளை மன்மதராசா பாணீல 'தட்டிப்பறித்ததாக' கூற முடியுமா? யாரும் எதையும் தட்டிப் பறிக்கவில்லை.. எழுத்தாளர் சங்கம் தனது பாதையில் இயங்குகிறது.. ஒன்றியம் தனது பாதையில் இயங்குகிறது.. எவராலும் எதன் இயக்கமும் இன்றுவரை நின்றுவிடவில்லை.. இதை மறுபடியும் இல்லை என்று மன்மதராசா ஊத்தை கொட்டினா.. வாளியும் தண்ணியும் இருக்கு.. விளக்குமாறு தோய்க்க. கரைக்குறத்துக்கும் சாமான் இருக்கு.

நாரதர்.. உங்களின் சில கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்.. ஒன்றியம தனது நிலையை விரிவாக அறியத் தந்திருக்கிறது. இரு வருடங்களில் பல நிகழ்வுகளை நடாத்தியிருக்கிறார்கள். இவளவு நிகழ்வுகளையும் நிகழ்த்த அவர்கள் தமது நேரத்தையும் பணத்தையும் எவ்வளவு தூரம் செலவழித்திருப்பார்கள்.. அது எதற்காக என எண்ணிப் பார்க்க வேண்டும்.. பெயர் வேண்டும் என்றால் ஒரு கணனிக்கு முன்னால் இருந்து யாழுக்கு தட்டிக் கொண்டு இருக்கலாம்.. அல்லது வேறு எதற்காகவோ தட்டிக்கொண்டு இருக்கலாம்.. பொழுதும் போகும்.. சிலராவது பெயரை உச்சரிப்பார்கள்.

உதாரணமாக அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.. அவை பரவலானதால்தான் நூல்களை வெளியிட முடிகிறது.. பரவலாகாவிட்டால் ஒரு நூலுடன் நின்றுபோயிருக்குமே.. காசை வீணே கரைக்க அவர்கள் சிந்தனை அற்றவர்களா.. ஆக, சிலருக்கு பிடிக்காதவை பலருக்கு பிடித்திருக்கலாம்.

இந்த பட்டங்கள் புலத்திலே உருவானவை அல்ல.. அவை ஊரிலிருந்து வந்தவைதான். ஒரு எழுத்தாளனுக்கு அவையும் ஒருவித ஊக்க மருந்துதான். ஒரு சிலராவது தன்னை அங்கீகரிக்கிறார்களே என்று அவனை அடுத்த தேடலை நோக்கி நகர வைக்கும் சக்தி வாய்ந்தது என்றுகூடக் கூறலாம். ஆனா அவற்றின் வீக்கம் மலிவாக இருந்தாலும்.. உண்மைகள் உறங்காமலிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

உந்த மடல் போடும் வரைக்கும் புலத்தில் இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக எனக்குத் தெரியவே தெரியாது. எது என்னவோ உப்படிச் விவாதித்தாவது பிரபல்யப்படுத்திக் கொள்ளலாம். :wink: :P

விளக்குமாத்தண்ணை,

சாத்தியார் சொன்னது இந்த புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் எண்ட பெயருக்கும் அதன் செயற்பாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று.அவர்கள் தந்த பதிலில் தந்த தகவல்களும் இதனை உறுதி செய்கின்றன.இதற்க்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றியோ தனி நபர்களின் செயற்பாடுகள் பற்றியோ எனக்குத் தெரியாது.இங்கு இடப்பட்ட தகவல்களின் அடிப்படையிலயே எனது கருத்தை முன்வைக்கிறேன்.

மேலும் இணயத்தைப் பற்றியும் யாழ்க் களத்தைப் பற்றிய்ய உங்கள் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. நீங்களும் இந்த குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டிற ஆள்ப்போல.யாழ்க் களத்திலயே இணயத்தின் வலிமையைப் பற்றி கனக்க எழுதிக் கிடக்கு ,வாசியுங்கோ.அதுவும் இளயவர்கள் எழுதினது. நீங்கள் ஒரு வட்டத்துக்கை நிண்டு கொண்டு ஆள் ஆளுக்கு முதுகு சொறின்ச்சா அது எங்க தமிழ் கூறும் நல் உலகத்திற்குத் தெரியப் போகுது. நூலகம் எண்டு ஒரு முயற்ச்சி இணயத்தில இப்ப நடக்குது தெரியுமோ?ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஆக்கங்கள் உலகெங்கும் வாளும் எமது தமிழ் சந்ததியினர் காலம் காலமாக படித்துப்பயன் பெற மின்னூலாக்கப் பட்டு தர வேற்றப் படுகுது.உதெல்லாம் என்ன வேலை மினக்கட்ட வேலையே?

ஏன் நீங்கள் ஜேர்மனியயே சுற்றி வர வேணும்.உலகத் தமிழர் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள் அவர்கள் எல்லாரையும் நீங்கள் மிக இலகுவாக அடய வேண்டுமெனில் இணயம் ஒரு அவசியமான ஊடகம் ஆகிறது அல்லவா?

உந்தப் பட்டங்கள் எவ்வளவு பொய்மை ஆனவை என்று எல்லாருக்கும் தெரியும்,சபேசன் சுட்டிக் காடியது போல் இவை ஒருவரின் உண்மயான ஆக்கத்திறனை அடிப்படயாக வைத்து வழங்கப்படுவன அல்ல. இப்படி இருக்கும் போது ஒருவர் இவற்றில் மயங்குகிறார் என்றால் அவரின் ஆளுமையை,அறிவை என்னென்று சொல்வது?

தமிழ்நாட்டில் அருணகிரி என்று ஒரு நண்பர் இருக்கிறார். சிறந்த எழுத்தாளர். மதிமுகவில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும் கூட. அவர் எழுதிய ஒரு நூலில் ஒரு அருமையான கருத்தை கூறியிருந்தார்.

"ஆரம்பத்தில் மனிதன் கல்லில் உளி கொண்டு எழுதினான். அப்பொழுது அவன் 10 விரல்களை உபயோகித்தான்

பின்பு ஓலைச்சுவடியில் எழுத்தாணியை இறுகப்பற்றி எழுதிய பொழுது 5 விரல்களை உபயோகித்தான்.

அதற்கு பிறகு பேனாவால் காகிதத்தில் எழுத 3 விரல்களை உபயோகித்தான்.

ஆனால் தற்பொழுது மீண்டும் 10 விரல்களால் எழுதுகின்ற காலம் வந்து விட்டது. கணணியில் எழுதுகின்ற காலம் இது. ஆகவே 10 விரல்கள் கொண்டு எழுதப் பழகு தமிழா!"

இப்படி எழுதியிருந்தார்.

இதுதான் உண்மை. பேனா வந்த பொழுது ஓலைச்சுவடியில் எழுத்தாணியால்தான் எழுதுவேன் என்று யாரும் அடம்பிடிக்கவில்லை. எழுத்தாளர்கள் விஞ்ஞான மாற்றத்தை ஏற்று 10 விரல்களால் எழுதப் பழக வேண்டும். இல்லையென்றால் காணாமல் போய்விடுவார்கள்.

எனக்கு ...உண்ணாணை....அசல் சிக்கு மாக்கு என்னென்டு வடிவா தெரியாது...இதிலை எழுதிற வாசிக்கக்கை... தாங்கள் ஏதோ....எழுத்தாள கொம்புகள் என்ற மாதிரி...யாழ் களத்தில் எழுதிறவை அடிச்சு விளையாடறவை மாதிரி கதைவிட பார்க்கினம் .....யாரோ பெரியாக்காளாம்...அவையை பற்றி யாழ்களத்தில் எழுதினால் அவை தரம் குறைந்தவையா போயிடுவினமாம்....

...உடையார் வீட்டு நாய் மட்டை படலை இலை ஏறி நின்று தான் குரைக்குமாம்........நிலத்தில் நின்று குரைச்சால் மரியாதை இல்லாமால் போயிடுமாம்....... என்ற மாதிரி கிடக்கு அவையின்ரை கதை...

பண்டய தமிழன் பத்து விரல்களால் கல்லில எழுதின கல்வெட்டுக்களில இருந்து தான் நாங்கள் எங்கள் வரலாற்றை அறிந்துகொள்கிறோம்.ஓலைச் சுவடுகளில் எழுதினதும்,காகிதத்தில் எழுதினவையும் அழிந்து கொண்டு வருகின்றன அல்லது முற்றாக அழிந்து விட்டன.இணயத்தில் தரவேற்றுவை உலகெங்கும் காலம் காலமாக இருக்கப்போகின்றன.

மேலும் உங்களுக்கு ஒரு சிறு பரிசோதனையைச் சொல்கிறேன்.கூகிள் தேடற் பொறியில் போய் தமிழில் எதாவது ஒரு விடயத் தலைப்பை எழுதி தேடிப்பாருங்கள்.வரும் தரவுகளில் எத்தினை தரவுகள் யாழ்க் களத்திலை இருந்தும் மின்னூல் திட்டத்தில் இருந்தும் வருகின்றன என்று.

உலகளாவிய ரீதியில் பல்கலைக் கழகங்களில் இனி வருங்காலத்தில் நடை பெறும் ஆய்வுகள் இவ்வாறான தேடற் பொறிகளின் தயவில் தான் நடக்கும். நீங்கள் இணையத்தில் இல்லை என்றால் இந்த உலகத்தில் இனி இருக்க முடியாது.யாழ்க் களத்தினதும்,மின் நூல் திட்டத்தினதும் ,கூகிள் தேடற்பொறியினதும் யுனி கோடினதும் மகத்துவம் விளங்கினாச் சரி.இல்லை எண்டால் மண்ணோடு மண்ணாக வேண்டியது தான்.

***இக்கருத்து நீக்கப்பட்டுள்ளதால்' date=' தணிக்கை செய்யப்பட்டுள்ளது. -வலைஞன்

மதனராச, இதைப்பற்றி ஆதாரங்களுடன் விபரமாக எழுதுங்கோ. கீழ்தரமான விமர்சனங்கள், வசனநடைகள் இல்லாட்டி இங்கு தணிக்கை செய்யப்படத் தேவையில்லை.

இதைப் பற்றி கேப்பதற்கு காரணம் இரட்டை வேடதாரிகள் ஆபத்தானவர்கள். எதிர்தரப்பிற்கு வெற்றியை பெற்றுத் தந்த பிரச்சார யுத்தங்களுக்குரிய தகவல்கள் இப்படியும் சென்றடைகிறது. உதாரணத்திற்கு ஆழிப்பேரலை வரமுதல் இருந்த திட்டங்களின் படி கொடுக்கப்பட இருந்த அதிர்ச்சி வைத்தியம் பற்றி பேனாவிபச்சாரி விலாவாரியாக எழுதியிருந்தார். அந்தத் தகவல்களை அவருக்கு வழங்கியது யார? வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் என்று பங்கு பற்றியவர்களில் ஒருவர் தானே?

ஒருவரையும் கண்மூடித்தனமாக குற்றம் சாட்டவோ கீழ்தரமாக விமர்சிக்கவோ வேண்டாம். உங்களிடம் உள்ள ஆதாரங்களை உள்ளதை உள்ள படியே வையுங்கள். உரியவர்கள் தங்களை நியாயப்படுத்தட்டும் பின்னர்.

உடனடியாக மனதில் தோன்றுவதை சொல்வது என்றால், கனடாவில் திரு என்பவர் முழக்கம் பத்திரிகையை நடத்தி வருகிறார். பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்புகின்ற அவர், பிற்போக்குவாதம் நிறைந்த எமது சமூகத்தில் "முழக்கம்" பத்திரிகையை முன்னணிப் பத்திரிகையாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார். கடவுள் மறுப்பையும், சாதி மறுப்பையும் வெளிப்படையாகவும் காத்திரமாகவும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படுவதற்கு அவருடைய எழுத்துக்கள் ஒரு காரணம். "முழக்கம்" படித்து தெளிவு பெற்ற பலர் இருக்கிறார்கள்.

முன்பு ஈழமுரசில் மறைந்த ஆசைத்தம்பியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய வீச்சும் உங்களுக்குத் தெரியும்.

இன்னும் பலர் உண்டு. பெயர்கள் கூறுவது, விவாதம் திசை திரும்புவதற்கு வழிவகுக்கும்.

ஆகவே மீண்டும் எழுத்தாளர் ஒன்றியத்திற்கு வருவோம். அவர்களின் எழுத்துத்திறன் குறித்து நான் வைத்த கருத்துக்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?

எழுத்தாளர் ஒன்றியத்தை விமர்சிப்பது வேறு.. அதிலுள்ள எழுத்தாளர்களது எழுத்தாற்றலை விமர்சிப்பது வேறு.. அத்தோடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது.. அவை ஒரே மாதிரியாக அமையும் என்றும் எதிர்பார்ப்பதற்கில்லை.

இங்கே ஒன்றியத்தைப்பற்றி விமர்சிப்பதுதான் ஆரோக்கியமானது. அதிலுள்ளவர் எழுத்தாளர்களா இல்லையா என்பதுபற்றி விமர்சிப்பதானால்.. புதிய தலைப்பில் அவர்களது எழுத்துக்கள் சிலதையாவது முன்னிறுத்தி விமர்சிப்பதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

எழுத்தாளர் ஒன்றியத்தில் இருக்கின்ற பலர் எழுத்தாளர்கள் இல்லை எனபதும், எழுத்தாளர்களாக இருக்கின்ற மற்றையவர்களில் பெரும்பாலானவர்களின் எழுத்துக்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதும் உண்மையாக இருக்குமாயின், அதை "எழுத்தாளர்" ஒன்றியம் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை என்று ஆகிவிடும் அல்லவா?

கொஞ்சம் கடுமையாக சொல்வதாயின் ஓரளவு பாடக் கூடிய சிலரும் கத்த மட்டும் தெரிந்த பலரும் இணைந்து பாடகர் சங்கம் அமைத்திருக்கிறார்கள்.

இந்த எழுத்தாளர் ஒன்றியத்தின் பொறுப்பாளரையே எடுத்துக் கொள்வேம். அவரும் இதுவரை பெரிதாக எதையும் எழுதியதில்லை. அவர் ஆசிரியராக இருந்த ஏலையா சஞ்சிகையில் கூட "ஆசிரியர் தலையங்கம்" தவிர வேறு எதையும் எழுதியதில்லை. சில வேளைகளில் சாத்திரி போன்று புனை பெயரில் சில ஆக்கங்களை எழுதியிருக்கலாம். பாக்கியநாதன் தம்பதியினர், கோசல்யா சொர்ணலிங்கம் போன்றோர் சில நூல்களையாவது வெளியிட்டுள்ளனர். ஆனால் இதுவரை இவர் அவ்வாறு எதையும் செய்தது இல்லை.

தமிழ்நாட்டிலோ இல்லது தமிழீழத்திலோ இருந்து வருகை தரக்கூடிய ஒரு தமிழறிஞர் இவரிடம் "பொறுப்பாளர்களாக இருக்கின்ற நீங்கள் இதுவரை என்ன எழுதியிருக்கிறீர்கள்" என்று கேட்டால், இவர் என்ன பதில் சொல்வார் என்று நான் பல முறை சிந்திப்பது உண்டு. ஆசிரியர் தலையங்கமும் ஒருசில கவிதைகளும் எழுதியிருக்கிறேன் என்று "அனைத்து நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழுகின்ற எழுத்தாளர்களின் பொறுப்பாளர்" பதில் சொன்னால் அவர்கள் மற்றைய எழுத்தாளர்கள் குறித்து என்ன நினைப்பார்கள் என்றும் எனக்கு தெரியவில்லை.

இவர்கள் வைத்திருக்கின்ற பதவிகளுக்கும் பட்டங்களும் (படித்துப் பெற்றவைகளை நான் குறிப்பிடவில்லை) இவர்கள் எழுதுவது மிகக் குறைவானது என்பதையே நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

சபேசன் wrote:

உடனடியாக மனதில் தோன்றுவதை சொல்வது என்றால், கனடாவில் திரு என்பவர் முழக்கம் பத்திரிகையை நடத்தி வருகிறார். பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்புகின்ற அவர், பிற்போக்குவாதம் நிறைந்த எமது சமூகத்தில் "முழக்கம்" பத்திரிகையை முன்னணிப் பத்திரிகையாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார். கடவுள் மறுப்பையும், சாதி மறுப்பையும் வெளிப்படையாகவும் காத்திரமாகவும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படுவதற்கு அவருடைய எழுத்துக்கள் ஒரு காரணம். "முழக்கம்" படித்து தெளிவு பெற்ற பலர் இருக்கிறார்கள்.

ஓ இப்படியும் எழுதிவிட்டு கோவில் நடத்துவதால் நல்ல வருமானம் வருகின்றது அதனால் கோவில் நடத்துவது தப்பேயில்லை என்று சப்பைக்கட்டும் கட்டுவீர்கள். பிறகு என்ன மூடநம்பிக்கை பற்றி சாத்தான் வேதம்?? உங்கள் வசதிக்கேற்றவாறு எதை வேண்டமானாலும் எழுதலாம் தான்.

வசம்புவிடம் ஒரு வேண்டுகோள்

நீங்கள் எழுதியதற்கு பதில் எழுதுவது இங்கே நடக்கின்ற விவாதத்தை திசை திருப்பும். ஆகவே தயவு செய்து இதை "ஜெயதேவனின் நேர்மை" என்னும் பகுதியில் எழுதுங்கள். அதில் கோயில்கள் குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும். அப்பொழுது நிச்சயமாக பதில் எழுதுகிறேன்.

சபேசன்

உங்கள் பதிலை எதிர்பார்த்து இதனை நான் எழுதவில்லை. உங்கள் பதிலும் எப்படி அமையும் என்பது எனக்குத் தெரிந்தது தான். உங்கள் எழுத்தாற்றல் மகிமையைக் காட்டவே இங்கே அதனைப் பதிந்தேன்.

வசம்பு,

உங்கள் கருத்துக்கான பதிலை "ஜெயதேவனின் நேர்மை" என்னும் பகுதியில் இணைத்துள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம்

இங்கு நான் ஒரு பேப்பருக்கு எழுதியத கட்டுரைக்கு எனது ஆக்கத்திறகான பதில் என்று சோழியன் ஒரு பதிலை இணைத்துள்ளார. மதலில் இதனை இங்கு இணைத்த சோழியனுக்கு எனது நன்றிகள்.

எனது அந்த கட்டுரைக்கான மறு அறிக்கை ஒன்று தாயாரிப்பதற்காக சர்வதேச எழுத்தாளர் ஒன்றிய அங்கத்தவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள் என்கிற செய்தி எனக்கு கிடைத்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்(அங்கு போன பல அங்கத்தவர்களிற்கு தாங்கள் ஏன் ஒன்றுகூடலுக்கு கூப்பிட பட்டோம் என்று போனபின்னர்தான் தெரிந்ததாம் அது வேறு விடயம்) அட ஒன்றியமே ஒண்றுகூடி உருப்படியா முதன் முதல் ஒரு அறிக்கை தயாரிக்க போகினம் என்று அதன் அறிக்கைகாக காத்திருந்தேன் அறிக்கை வழைமை போல சோழியனின் தமிழமுதத்திலும் பின்னர் அதனை சோழியனே யாழிலும் இணைத்திருந்தார் படித்தேன்.எனது எதிர் பார்ப்பு ஏமாற்றமானதில் கவலையடைந்தேன்.

மறுப்பறிக்கை ஒன்றை எதிர் பார்த்திருந்த எனக்கு அவர்கள் பதிலடி என்று தலையங்கமிட்டு ஏதோ நேர்முக பரீட்டைக்கு அவர்களது விபரங்களை கேட்டது போல அதிலும் பக்கம் பக்கமாய் தங்கள் பட்டங்கள் பதவிகள் என்று சுயபுராணம் பாடி இடையிடை ஆசைக்கு என்னையும் செல்லமாய் திட்டி ஒரு அறிக்கை . படித்தபோது சிரிப்பிற்கு பதில் கவலைதான் வந்தது.

நான் எழுதியது தான் கட்டுரை போல இல்லாவிட்டாலும் இத்தனை பட்டங்கள் பதவிகள் வகித்த இவர்களிற்கு மறுப்றிக்கை என்கிற சொற்பதத்தை பாவிக்க முடியாமல் ஆத்திர அவசரத்தில் பதிலடி என்று தலையங்கம் தீட்டி விட்டார்கள். சில நேரம் அந்த ஒன்றியத்தில் சில ஆசிரியர்களும் இருப்பதால் அடி குட்டு கொடுத்து பழக்கபட்டதால் பதில் அறிக்கை என்னபதற்கு பதிலாக பதில் அடி என்று போட்டிருக்கலாம்.

அடுத்ததாக சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் என்ற பெயரை துணிவுடன் கூறத் தயங்கிய அல்லது பயந்த சாத்திரியார் என்று எழுதியுள்ளார்கள் நான் கூற தயங்கவோ பயப்படவோ இல்லை அப்படி எழுதினதற்கு காரணம் இப்படி ஒரு அமைப்பே இருப்பது பலரிற்கு தெரியாத போது அப்படி ஒரு அமைப்பு இயங்குகிறது என்று கேள்விபட்டு அதன் சில நடவடிக்கைகளை கவனித்து மற்றும் சிலரின் விபரங்களை சேகரித்து தெரிந்து கொண்டு எழுதியதால் அந்தஅமைப்பில் சிலர் ஊடக துறையிலும் இருந்ததால் தான் சர்வதேச ஊடக மற்றும் எழுத்தாளர் ஒன்றியம் என்று எழுதினேன்.

அடுத்ததாக தமிழ்த் தேசியத்தைப் பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் சாத்திரியார் எமக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்த் தேசியத்தைப் பற்றியும் தமிழர் வரலாறு பற்றியும் அறிந்து வைத்திருக்கும் வயதையும் அனுபவத்தையும் உடையவரகள் நாங்கள். தமிழர் தேசியம் பற்றி இந்த அமைப்பு கதைப்பது வேடிக்கை அதை இங்கு விலாவாரியாக விபரிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை காரணம் இந்த கட்டுரை இங்கு போட்டதிலிருந்தே பலரும் இவர்களது தமிழர் தேசிய பற்றை பற்றி உரித்து காட்ட தொடங்கியிருக்கிறார்கள் . அதனால் அந்த வேலை எனக்கு மிச்சம். தமிழர் வரலாறு பற்றி இவர்கள் எத்தனை ஆராச்சி கட்டுரைகள் வெளி விட்டுள்ளனர் என்று தெரியவில்லை இதிலிருந்து இவர்களது அறியாமையும் தலைகனமும் நன்றாகவே புரிகிறது.

அடுத்து ஒரு வசனம் ஒன்றியத்தின் தலைமைக்கு தலைவர் என்ற பெயர் இல்லை. பொறுப்பாளர் என்ற பெயரே உண்டு. என்று வருகிறது இங்கு தலைவரிற்கும் பொறுப்பாளறிக்கும் என்ன பெரிய வித்தியாசம் எனபதனை அந்த பண்டிதர்களே தான் வந்து விழக்கம் தரவேண்டும்.

அவ்வப்போது தமிழீழத்தில் நடக்கும் படுகொலைகளை, சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியததின் ஆலோசகரும், மொழி மாற்றீட்டாளருமான திருமதி.தேவிகா கெங்காதரன் அவர்களின் மொழிமாற்றீட்டு உதவியுடனும், இளந்தலைமுறைப் படைப்பாளிகள் உறுப்பினரான செல்வி.வித்யா பாக்கியநாதன் அவர்களின் மொழமாற்றீட்டு உதவியுடனும் அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என்பதைப் பிரபல்யப்படுத்த வேண்டும் என்றில்லை.

நல்ல விடயம்அனுப்ப வேண்டிய இடம்என்று நீங்கள் சொல்லும் அந்த இடம் எது அதை பகிரங்கமாக சொல்வதில் என்ன தயக்கம் சரி உங்கள் மொழி மாற்றீடு செய்த தமிழீழத்தின் படுகொலை பற்றிய ஒரு கட்டுரையாவது சர்வதேச (ஏன் அவ்வளவு தூரம் போவான் ) யெர்மனிய தேசிய பத்திரிகை ஏன் ஏதாவதொரு பிரந்திய பத்திரிகையில் வந்ததா???????? காட்டங்கள் காட்டினால் மகிழ்சியே.

இதையெல்லாம் படித்த போது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது ஊரில் படித்த காலத்தில் 5 ம் வகுப்பில் எங்களிற்கு ஒரு கணக்கு ஆசிரியை இருந்தார் அவர் எனக்கு ஒரு உறவுமுறைதான் அவர் வகுப்பிற்கு வரும் போது கதை புத்தகத்துடன் தான் வருவார். வந்ததும் வகுப்பில் யாராவது கணக்கில் கெட்டிகார மாணவனை பார்த்து(அது சத்தியமாக நான் இல்லை) புத்தகத்தில் உள்ள கணக்குகளை கரும்பலகையில் எழுத சொல்லிவிட்டு மற்றைய மாணவர்கள் அந்த கணக்கை பார்த்து எழுதி விடைகளையும் எழுத சொல்லி விட்டு தன் பாட்டில் பேசாமல் கதை புத்தகத்தை படிக்க தொடங்கி விடுவார்.

கணக்ககள் செய்து முடிந்ததும் அதே கெட்டிகார மாணவனின் கொப்பியை சரி பார்த்து விட்டு அவனிடமே மற்றவர் கொப்பியையும் திருத்த சொல்லி விட்டு தனது கதையை தொடருவார். அவர் எனது உறவினர் என்பதால் ஒருநாள் அவர் வீட்டிற்கு போன போது அவரிடமே கேட்டேன் ரீச்சர் நீங்கள் பாடசாலையில் இப்பிடிசெய்தால் எப்படி என்னை மாதிரி கணக்கு விழங்காத ஆக்கள் படிக்கிறது என்றதும்

. அந்த ஆசிரியைக்கு வந்ததே கோபம் என்னை பார்த்து டேய் எனது அப்பா அதிபர் அம்மா ஆசிரியர் எனது குடும்பத்திலும் பலர் அசிரியர் நான் பேராதனை பல்கலை கழகத்தில் பட்டதாரி அதுவும் எம். ஏ பட்டதாரி என்னை பார்த்து நீ எப்படி கேள்வி கேக்கலாம் என்று கத்த நான் பயத்தில் ஓடிவிட்டேன் . நான் கேட்ட கேள்விக்கு ஒன்றில் அவர் தனக்கு உங்களிற்கெல்லாம் படிப்பிக்க விருப்பம் இல்லையென்று சொல்லியிருக்கலாம் அல்லது தனக்கு படிப்பிக்கவராது என்று சொல்லியிருக்கலாம் அதை விட்டு தனது குடும்ப விபரம் தனது பட்டம் படிப்பு எல்லாத்தையும் சொல்லி நீ யார் கெள்வி கேக்க என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்......

இதனை போலவே இந்த ஒன்றிய காரரையும் நான் கேட்டது உங்கள் செயற் பாடுகள் ஏன் விவேகம் இல்லாமலும் வேகமின்றியும் இருக்கின்றது இங்கு தொழில் நுட்ப மற்றும் எவ்வளவோ வசதிகள் இருந்தும் ஏன் சுற்றி சுற்றி உங்களிற்குள்ளேயெ புகை படங்களிற்கு கொடி பிடித்து படம் போட்டு கொண்டும் அறிக்கை விட்டு கொண்டும் இருக்காமல் இன்னும் கொஞ்சம் விபரமாய் விவேகமாய் வெளி உலகிற்கும் மற்றை நாட்டவர்களிற்கும் எங்கள் விபரங்கள் பிரச்னைகள் என்பனவற்றை வெளிப்படுத்லாம் தானே?? என்பதே அதற்கு நீங்கள் உங்கள் பட்டம் பதவிகளை இங்கு அள்ளி போட்டு உங்களை யாரும் கேள்வி கேக்க முடியாது சொல்லி விட்டீர்கள் .

ஆனாலும் இறுதியாய் ஒன்று இந்த கட்டுரையை நான் ஒரு பேப்பரிலும் மற்றும் யாழ் வேறு தளங்களிலும் போட்டதாலும் இய்கு யாழில் நடந்த கருத்தாடலினாலும் இன்று உலகில் பலதமிழருக்கும் உங்களைபற்றி தெரிய வந்துள்ளது என்பது உண்மை எனவே இனி அவர்கள் உங்களை உன்னிப்பாக கவனிப்பார்கள் ஆகவே உங்கள் செயற்பாடுகளையும் ஆரோக்கியமானதாக மாற்றி கொண்டால் நன்மை எமது இனத்திறகே.......

அதைவிட நான் எழுதிவிட்டு ஒழிப்பவனுமல்ல ஒழித்திருந்து எழுதுபவனுமல்ல நீங்கள் கேட்டது போல எங்கும் உங்களை நான் சந்திக்க தயார் நான் யெர்மனிக்கு சோழியன் வசிக்கின்ற பிறீமன் நகர். இந்த ஒன்றியத்தின் தலைவர் மன்னிக்க பொறுப்பாளர் முருகதாசன் வசிக்கின்ற ஒபகொளசன்.ஒன்றியத்தின் ஒலி பெருக்கி (அதானுங்க பேச்சாளர்) திருமதி கெளசல்யா வசிக்கின்ற முல்கைம் பாக்கியநாதன் வசிக்கின்ற டோட்மன் நகர்களிற்கு அடிக்கடி வருபவன் எனவே என்னை தாராளமாக யாரும் எங்கும் சந்திக்கலாம். அல்லது நிங்கள் வேண்டுமானால் பிரான்சிலுள்ள நீஸ் நகரிற்கு வாருங்கள் சந்திக்கலாம்

நன்றி அன்புடன் சாத்திரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எனது மேலதிக விபரங்கள் ஒன்றியத்திற்கு தேவைபடின் யாழில் ஓடியோடி ஊழியம் செய்யும் சோழியனிடம் எனது தொலை பேசி இலக்கம் மற்றும் வpலாசம் அனுப்பி வைக்கிறேன் கேட்டு பெற்று கொள்ளலாம் அல்லது எனது மின்னஞ்சல் முலமும் தொடர்பு கொள்ளலாம் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்

அன்புடன் சாத்திரி : :P :P :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரின் கட்டுரையைப் பார்த்தபின்னே இப்படி ஒரு அமைப்பு இயங்குவது தெரியும்.

இவ்வமைப்பு வெளியிட்டிருக்கும் பதிலடிக் கட்டுரையிலேயே தமது முன்னைய கருத்துக்கு மாறாகச் செயற்பட்டு உள்ளார்களே!! :roll: :roll:

அதற்கு வேறு பெரும் வீராப்பு வசனங்கள்.

என்ன ஒரு கட்டுரையிலேயே அவர்களின் பெயர்களை உரத்துக்கூறவேண்டிய யாதார்த்த நிலை வந்துவிட்டதா. :roll:

இப்பொழுது யார் பொய் பேசுகிறார்கள் என்று கூறுவது :roll: :roll:

இது ஒரு தனிநபர் தாக்குதலல்ல.

தமிழ் எழுத்தாளர்கள் என்று கூறிக்கொண்டு தாம் எழுதும் தமிழ் தமக்கே விளங்காது எழுதுகிறார்களா என்னும் எனது நியாயமான சந்தேகத்திற்கு விளக்கம் கேட்கிறேன் அவ்வளவு மட்டுமே. :wink:

சாத்திரியின் எட்டுப் பந்திகளை உள்ளடக்கிய கட்டுரையில் தகவற் குழறுபடிகள் நிறையவே உண்டு. உண்மை பேசுபவன் தான் பேசியதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் ஒன்றையே கூறுவான். ஆனால் பொய் பேசுபவன் தான் பேசியதை வலிந்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய பரிதாபகரமான நிலை உண்டு.

*****************************************

நாம் இப்பொழுது சாத்திரியின் சின்னத்தனத்தை உலகிற்கு காட்ட விரும்புகிற காரணத்தால் எம்மாலும் தமிழர்களாலும் மதிக்கப்படுகின்ற பெருந்தகைகளின் பெயர்களை இக்கட்டுரையில் குறிப்பிட மாட்டோம். அதே போன்று நமது இலக்குப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தின் பேராசிரியர், சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் குழுவினர் ஆகியோரின் பெயர்களையும் அவர்களின் சமூக மதிப்புக் காரணமாகவும், கல்வியியலாளர் என்ற காரணத்தாலும் அந்தப் பெருந்தகைகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட மாட்டோம்.

எம்மோடு இணைந்து நின்று எமக்கு அறிவுரை சொல்லி வழிநடத்திச் செல்லுகின்ற அந்தப் பெருந்தகைகளை பணிந்து நின்று பணியாற்றுபவர்கள் நாங்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் யதார்த்த சூழ்நிலையில் அவர்களின் பெயர்களை உலகிற்கு உரத்துச் சொல்லுவோம்

***************************************

பொருளாளராக இருப்பவர் திரு.சில்லையூர் சிங்கராஜா அவர்கள். எழுத்தாளராகவும் கவிஞராகவும் இருப்பவர். நல்ல பேச்சாளர். நமது இலக்குப் பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருப்பவர்களில்,

(2)திரு. இ.க.கிருட்ணமூர்த்தி அவர்கள் ஐரோப்பிய வாசகர் வட்டத்தை நடத்தியவர்.

தமிழ் ஆசிரியப் பணி செய்பவர். நமது இலக்குப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.