Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர்.

இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் சிறிலங்கா படையினர் பெருமளவிலானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மேலதிக விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

source: PUTHINAM.COM

  • Replies 84
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு

திகதி: 01.02.2009 // தமிழீழம் // [வன்னியன்]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59வது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் சிறிலங்கா படையினர் பெருமளவிலானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மேலதிக விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

sankathi

"At least 3 Main Battle Tanks (MBTs) of the SLA were destroyed, LTTE officials have told media. "

http://www.tamilnet.com/

பெருமெடுப்பில் கவச வாகனங்கள் உபயோகிக்கபட்டதாக சொன்னர்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

Tigers launch preemptive strike in PTK

[TamilNet, Sunday, 01 February 2009, 07:05 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) forces Sunday morning launched a preemptive strike on Sri Lanka Army (SLA) offensive units that were prepared for an all out assault on to Puthukkudiyiruppu (PTK). The SLA has suffered heavy casualties, initial reports from Vanni said.

At least 3 Main Battle Tanks (MBTs) of the SLA were destroyed, LTTE officials have told media. நன்றி தமிழ்நெட்

Edited by ragunathan

நடந்தவைகள் நன்றாகவே நடந்தன! நடப்பவைகள் நன்றாகவே நடக்கின்றன! நடக்கப்போவதும் நன்றாகவே நடைபெறும்! ஆனால் தயவு செய்த வதந்திகளை பரப்பி மக்களை பரபரப்பாக்குவதை மட்டும் நடத்தாமல் இருப்போம்! செய்திகளை இணைப்போம்! அனைவரும் வாசிப்போம்! அது போதும்! ஆனால் மீண்டும் ஒரு கல்மடு வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்

(2ம் இணைப்பு)

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 3 டாங்கிகள் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 3 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர்.

இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் சிறிலங்கா படையினர் பெருமளவிலானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் 3 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் தொடரும்...

www.tamilwin.com

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

பெருமெடுப்பில் கவச வாகனங்கள் உபயோகிக்கபட்டதாக சொன்னர்கள்.....

3 டாங்கிகள் அழிப்பான் அண்ண

வாங்கிய அடியில் அவசரஅவசரமாக பக்கத்து நாட்டிலிருந்து போனவர்களும் இருக்கின்றார்களோ என்னவோ.

இதற்காகத்தான் அவசரமாக ஆளும் வர்க்கம் அனுப்பி வைச்சிருப்பினம்

களமாடுகின்ற புலிவீரர்களுக்கு எனது பாராட்டுக்கள்

படைகொண்டு போர் செய்ய வந்தாயோ

புலிகள் வீரத்தை தாழ்வாக நினைத்தாயோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடப்பது நல்லதாக நடக்கட்டும் நாம் இங்க செய்பவற்றை சரியாச் செய்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பை கைப்பற்றும் நோக்கில் இருந்த படையினர் மீது புலிகள் கடும் தாக்குதல் 5 கவச வாகனமும் தாக்கியழிப்பு

புதுக்குடியிருப்பை கைப்பற்றும் நோக்கில் 59 ஆவது டிவிசன் படையினர் பெரும் தயார் நிலையில் முன்னேற்ற முயற்ச்சிகளை மேற்கொள்ள இருந்த சமயம், திடீர் என புலிகள் பெட்டியடித்தும் , மற்றும் ஊடறுத்து அதிர்ச்சி தாக்குதல் ஒன்றை இன்று ஞயிற்றுக்கிழமை நடத்தியுள்ளனர்.

தற்போதும் நடைபெற்றுவரும் இத்தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 5 கவச வாகனங்களும் தாக்கியழிக்கப் பட்டதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவம் சற்றும் எதிர்பாராத வகையில் தீடீர் என நடந்த இந்த அதிர்ச்சி தாக்குதலில் சேதவிபரங்கள் குறித்து விடுதலைப் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.athirvu.com/

Edited by kuddipaiyan26

இது உன்மை தானா? அல்லது அப்படித் தானா?

தயவு செய்து கிடைக்கின்ற சில செய்திகளை வைத்து வதந்திகளை பரப்ப வேண்டாம்....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....டாங்கி குண்டு தான் போடும்... குட்டி போடாது.. அப்படி போட்டாலும்.. டாங்கி குட்டி தான் போடும்......தவிர..கவசவாகனக் குட்டி போட வாய்ப்பு இல்லையே....

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வளர்ச்சி

இனி நாம் சிங்களவன் சொல்லுவதையும்

அவனால் உறுதிப்புடுத்தப்பட்டவற்றைய

பொய் வதந்திகளை பரப்பி இறுதியில்

நம்மை நாமே கிள்ளிப் பார்த்து

உண்மையா எனும் நிலை

Tigers launch preemptive strike in PTK

[TamilNet, Sunday, 01 February 2009, 07:05 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) forces Sunday morning launched a preemptive strike on Sri Lanka Army (SLA) offensive units that were prepared for an all out assault on Puthukkudiyiruppu (PTK). The SLA has suffered heavy casualties, initial reports from Vanni said.

At least 3 Main Battle Tanks (MBTs) of the SLA were destroyed, LTTE officials have told media.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28249

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அட்டாக்: 1000ராணுவத்தினர் பலி!

இது நக்கீரனில் வெளிவந்துள்ள செய்தி

தொடங்கீட்டங்கையா தொடங்கீட்டாங்க... கிளம்பீட்டங்கையா கிளம்பீட்டாங்க.. வதந்தியைக் கிளப்ப.

உறுதிப்படுத்தல் அற்ற தகவல்களை இணைப்பதைத் தவிர்க்கலாமே வசி..! நக்கீரனின் இந்தச் செய்தி இப்போ வரை உறுதிப்படுத்தல் அற்றதாகவே இருக்கிறது..! :icon_idea:

இப்படியான செய்தி என்றால் கோத்தபாயவுக்கு ரெம்ப சந்தோசமா இருக்கும். தமிழ் மக்களை கொல்லுறதைச் சொன்னாத்தான்.. கோபம் புட்டுக்கிட்டு வரும்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ்.. நான் போடவில்லை செய்தி நக்கீரன் போடடுள்ளது.. அதை வெளிப்படுத்தத்தான் இங்கு இணைக்கிறேன்....

இதை நக்கீரனில் எவ்வளவு பேர் பார்த்திருப்பினம்??

Edited by vasisutha

இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முயன்றபோது விடுதலைப்புலிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.புலிகளின் இந்த பதிலடியில் 1000 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். மேலும் பெருமளவிலான ராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்

ராணுவத்தின் 3 டாங்கிகளும் அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் இலங்கை அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், “ சமீபத்தில் புலிகளுக்கு தாய்லாந்திலிருந்து பெரிய அளவு ஆயுதங்கள் வந்திறங்கியுள்ளன. அந்த ஆயுதங்களுடன் ஏற்கனவே பதுக்கி வைத்திருக்கும் ஆயுத பலத்தோடு ராணுவத்தை எதிர்கொள்கின்றனர்” என்கிறார்கள்.

நன்றி நக்கீரன்

Edited by தேசம்

(2ம் இணைப்பு)புதுக்குடியிருப்பில

கடந்த 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது ராஜபக்சே அரசு. ஆனால் போர் நிறுத்த நேரத்திலும் தாக்குதல் நடத்தி 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களை இலங்கை ராணுவம் கொன்றதாக சொன்னது புலிகள் அமைப்பு.

போர் நிறுத்த காலத்தில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துவிடும்படி தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார் ராஜபக்சே. ஆனால் இந்த அறிவிப்புக்கு தமிழ்மக்கள் ஆதரவு தரவில்லை. ஏற்கனவே ராணுவ பாதுகாப்பு வலைய பகுதியில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் 300 பேர் உயிரை எடுத்த ராணுவத்தை நம்பி போகமாட்டோம் என புலிகள் பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

ராணுவத்தின் பாதுகாப்பில் உயிர் பிழைத்து சித்ரவதைகள் அனுபவிப்பதை விட புலிகளுடன் இணைந்து ராணுவத்தை எதிர்கொள்வோம் என முடிவெடுத்த பெரும்பாலான மக்கள் அதற்கு தங்களை தயார் படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முயன்றபோது விடுதலைப்புலிகள் பதிலடி கொடுத்துள்ளனர். அவர்களுடன் பயிற்சி பெற்ற பொதுமக்களில் சிலரும் ராணுவத்துடன் சண்டையிட்டனர்.

புலிகளின் இந்த பதிலடியில் 1000 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். மேலும் பெருமளவிலான ராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். ராணுவத்தின் 3 டாங்கிகளும் அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் இலங்கை அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், “ சமீபத்தில் புலிகளுக்கு தாய்லாந்திலிருந்து பெரிய அளவு ஆயுதங்கள் வந்திறங்கியுள்ளன. அந்த ஆயுதங்களுடன் ஏற்கனவே பதுக்கி வைத்திருக்கும் ஆயுத பலத்தோடு ராணுவத்தை எதிர்கொள்கின்றனர்” என்கிறார்கள்.

புலிகளுடன் களம் இறங்கியிருக்கும் பொதுமக்களோ, 1000 பேரை கொன்றதை நாங்கள் பெரிய வெற்றியாக கருதவில்லை. இந்த பின்னடைவால் மேலும் மூர்க்கத்தனமான தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்தும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை சாவுக்குத் தயாராக இருக்கிறோம் என்கிறார்கள்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2817

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தீபன் அண்ணா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.