Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சன் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் தொலைக்காட்சியை பகீஷ்கரிப்போம்!!

Featured Replies

உந்த புறக்கணி ... பகிஸ்கரி . . .உதெல்லாம் வேலைக்கு ஆவாது.

அதுவும் மானாட மயிலாட பார்க்கிற கோஸ்டியிட்ட போய்...

நடக்கிற காரியமா?

காசுதான் எல்லாத்துக்கும் கால்.

எனவே மக்களே . . .

புலம்பெயர் மண்ணில இருந்து உந்த தொலைக்காட்சிகளை அப்புறப்படுத்திறதுதான் ஒரே வழி.

அதுக்கு . .அதுக்கு . . .

காசில்லாமா பார்த்தா அவன் தன்ட பாட்டில பூட்டிக்கொண்டு போயிடுவான் . . .

சும்மா ஈமெயில் அனுப்பிறது . . . போன் அடிக்கிறது . .. கையெழுத்து வேட்டை இதலெம்லாம் நேர விரயம் . . காசும் செலவு.

ஐரோப்பாவில் சன் - கலைஞர் ஒளிபரப்பை நிறுத்தினால் . . GTV தீபம் மாதிரி தமிழரும் புதுசா 4 தொலைக்காட்சி தொடங்கலாம்.

எமது செய்திகளை ஒளிபரப்புரான் இல்லை எண்டு ஒப்பாரி வைக்கத் தேவையில்லை

எங்கட கலைஞர்களை வளர்த்துவிட்ட மாதிரி இருக்கும். அதேநேரம் 4 பேருக்கு வேலை குடுத்த மாதிரியும் இருக்கும்.

ஏற்கனவே சட்டி பூட்டி படம் பார்க்கிற ஆக்கள் உந்த கார்ட் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சு போட்டு

hi@nallatv.co.cc இதுக்கு மெயில் போடுங்கோ.

எல்லாம் பார்க்க ஆவன செய்யப்படும்.

நன்றி.

நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்.

web1.jpg

Edited by Saniyan

  • Replies 51
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

"தற்போதைய காலகட்டத்தில் ஊடகங்களுடன் எம்மவர் முட்டிமோதுவதைப்போல் ஒரு முட்டாள்த்தனம் வேறோன்றுமில்லை....................

.ஐயா குமார சாமியார் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். நல்லதும் தீயதும் வெளி வருவது ஊடகங்களால் தான்.

அதை விடுத்து ,முட்டி மோதுவது ......

..எதற்காகவோ ? எதயோ செய்யாதது போல ........நம்மகுள்ள அறிவை payan ் படுத்தி ஆராய்ந்து அறிவதே மெய் ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா நிர்வாகத்தினரே .. எதோ எனக்கு மண்டேக்க தோன்றின விசயங்களை வெளியில சொன்னான்...ஆனால் இங்க டிஎம்கே,எடிஎம்கே விசுவாசிகள் , கொண்டக்க மண்டக்க பேசி என்ன பேசுறம் எண்டு தெரியாமலே பேசி தனக்கும் விளங்காம மற்றவனையும் குழப்ப நிறைய பேர் இருக்கினம் எண்டதையும் மறந்து போனான்.. பேசமா இந்த பந்தியை மூடி விடுங்கோ..இல்லடி அழித்து விடுங்கோ...

சன் குழுமம் நிறைய திரைப்படங்கள் வெளியிடுகின்றது...... சன் குழுமம் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து முதுகில் குத்த நினைத்தால் ... அவர்கள் வெளியிடும் திரைப்படங்களை ஈழத்தமிழர்கள் புறக்கணிக்க நேரிடலாம் என்று அவர்கள் அஞ்சும்படி செய்தால் போதும் .

மாறிவிடுவார்கள்!!!

நண்பரே... பந்தியை மூட தேவை இல்லை... ஒவ்வொரு வாதத்திற்க்கும் எதிராகவோ இல்லை ஆதரித்தோ வரும் கருத்துக்கள் அந்த வாதத்தினையும் அதனூடாக நமக்கு ஏற்படும் புரிதலையும் செழுமைப்படுத்துகின்றது.... முதலில் லோயர் அவர்கள் புறக்கனிக்கச் சொன்ன போது நானும் அதே கருத்தைத்தான் கொண்டிருந்தேன்... பின்பு தலைவர் சொன்னவைகள் அனைத்தும் முற்றிலும் உண்மை...மற்றும் பல...இவை முதற்கூறிய கருத்திற்கு எதிராயிருக்கிறது என்பதைவிட அதனைச்செழுமையாக்கி இருக்கிறது என்பதே உண்மை...அப்படீன்னு எனக்கு தோனுகிறது... புதியவன்.. தப்பிருந்தால் மன்னிக்கவும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கருத்தை கூறினால் அதில் தெளிவு தேவை சன் மற்றும்கலைஞர் தொலைக்காட்சியை நமது மக்கள் புறக்கணிப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனெனில் இலங்கையில் இருந்துவரும் பொருட்களை நுகர்வதை தவிர்க்குமாறு ஏலவே எத்தனையோ தடவைகள் முன் வைத்த கோரிக்கைகள் செவிடன் காதுச் சங்கு.மேலும் தனது கருத்தில் அப்படி நாடகங்கள் பார்க்கத்தான் வேண்டுமெனில் இணையத்தளங்களில் பார்க்குமாறு கோரும் இவர் இணையத்தளத்திற்கு எப்படி இந்த நாடகங்கள் தரவேற்றப்படுகின்றதென்பதை அறியாரா?தயவுடன் கருத்துக்களை தெளிவான பார்வையின் பால் விளக்கமாக எழுதவும்.எல்லாம் போக விடுதலையின் பால் தமதான பங்களிப்ப்புக்களை காலக்கிரமத்தில் செய்யவேண்டியதை ச் செய்திருந்தால் இன்றைய அவலம் தோன்றியிருக்குமா?ஓவ்வொருவரும் தங்கள் சுயத்தை கரைத்துவிட்டு இனியாவது வெளியில் வருவார்களா?புலம்பெயர் தமிழர் எப்போதும் சுயநலமிகளாகவே தொடர்ந்தும் வாழப்போகிறார்களா?முடிவுகளை புலம் பெயர் சமுதாயம் சொல்லாமல் செயலில் காட்டட்டும் இன்னமும் காலம் கைமீறிப்போகவில்லை.நமதாகும் காலம் விரைவாட்டும்.இன்றைய நிலைக்கு நாமும் ஓர் காரணம் என்ற நினைப்பு காலம் பூரா எம் காதுகளில் மங்காமல் ஒலிக்கட்டும். :):wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தவன் மாறுவானா? நம் சமுதாயம் திருந்துமா? என்ற கேள்விகளை வைத்து மற்றவர் மீது பழிபோடாமல் 'மாற்றங்களை உங்களில் இருந்தே தொடங்குங்கள்" சமுதாயம் மாறவேண்டுமானால் அந்த மாற்றம் உன்னில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்" -மகாத்மா காந்தி.

தற்போதுள்ள நிலமை முற்றிலும் வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் அப்படியே உலகம் திருந்திவிடாது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் தானே?

சன்/கலைஞர் தொலைகாட்சிக்கு எடுத்து உங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதோடு இனி அவர்களது தொலைக்காட்சிக்கு ஆதரவு இல்லை என்பதையும் உணர வையுங்கள்.

தற்போது தினமும் கேள்விப்படும் செய்திகளுக்கு மத்தியிலும் பலருக்கு கோலமும், ஆனந்தமும், மானாட மயிலாடவும் தான் தேவைப்படுகின்றது என்றால்!!!!!!!!!!!!!!...இதற்கு மேல் எதைச்சொல்லியும் பயனில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கருத்தை கூறினால் அதில் தெளிவு தேவை சன் மற்றும்கலைஞர் தொலைக்காட்சியை நமது மக்கள் புறக்கணிப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனெனில் இலங்கையில் இருந்துவரும் பொருட்களை நுகர்வதை தவிர்க்குமாறு ஏலவே எத்தனையோ தடவைகள் முன் வைத்த கோரிக்கைகள் செவிடன் காதுச் சங்கு.மேலும் தனது கருத்தில் அப்படி நாடகங்கள் பார்க்கத்தான் வேண்டுமெனில் இணையத்தளங்களில் பார்க்குமாறு கோரும் இவர் இணையத்தளத்திற்கு எப்படி இந்த நாடகங்கள் தரவேற்றப்படுகின்றதென்பதை அறியாரா?தயவுடன் கருத்துக்களை தெளிவான பார்வையின் பால் விளக்கமாக எழுதவும்.எல்லாம் போக விடுதலையின் பால் தமதான பங்களிப்புக்களை காலக்கிரமத்தில் செய்யவேண்டியதைச் செய்திருந்தால் இன்றைய அவலம் தோன்றியிருக்குமா?ஓவ்வொருவரும் தங்கள் சுயத்தை கரைத்துவிட்டு இனியாவது வெளியில் வருவார்களா?புலம்பெயர் தமிழர் எப்போதும் சுயநலமிகளாகவே தொடர்ந்தும் வாழப்போகிறார்க்களா?முடிவுகளை புலம் பெயர் சமுதாயம் சொல்லாமல் செயலில் காட்டட்டும் இன்னமும் காலம் கைமீறிப்போகவில்லை.நமதாகும் காலம் விரைவாகட்டும்.

நாங்கள் தெளிவாத்தான் இருக்கிறம். நடைமுறைக்கு சாத்தயம் அற்ரதெண்டு நீகள் சொல்லுறியல்...அதுக்க என்ன ஆதாரம்? முதலில் ஏதாவது பரீர்சார்த்தமாக செய்து பார்த்தீர்களா?? அதி விட்டுட்டு சும்மா எதோ அறப்படிச்ச மாதிரி பேசாதீங்கோ... எங்களுக்கு இருக்கிற சில ஆதங்களை / கருத்துகளையும் தெரிவிகதான் கருத்துக்களம் இருக்கு. இலங்கை தயாரிப்புக்களை பற்றி பேசுற நீகள்..சொந்த வாழ்வில் இலங்கை தயாரிப்புக்களை பயன்படுத்தாமல் இருந்து பார்த்தீர்களா?? அதை எத்தனை பேர் பல காலங்களாக கடைப்பிடிகிராரகள் தெரியுமா?? இணையத்தில இருக்கிற எப்படி தென்னிந்திய நிகழ்ச்சிகள் தரவேர்ரபடுகின்றது என்பது உங்களுக்குத்தான் புரியாத விடயமாக உள்ளது... அதில் எனக்கு மிகவும் பரீட்சம் உள்ளபடியால்தான் நான் அந்த கருத்தை முன்வைத்தேன்..

Do not just make a statement based on the people you know and based on the information you know. If you are asking other people not to be selfish can you prove that you are not one of them?? If you really want to do something from outside u won't not come here and talk rubbish. Thank You.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தினமும் கேள்விப்படும் செய்திகளுக்கு மத்தியிலும் பலருக்கு கோலமும், ஆனந்தமும், மானாட மயிலாடவும் தான் தேவைப்படுகின்றது என்றால்!!!!!!!!!!!!!!...இதற்கு மேல் எதைச்சொல்லியும் பயனில்லை.

என் கருத்தும் இதே தான். அவர்களுக்கு லாபம் வரட்டும் நட்டம் வரட்டும், அதில்ல இப்ப முக்கியம். இப்ப கடைசி மிளகாயும் முனாகானா அரைக்க ஆரம்பிச்சிருக்கு, இன்னும் எங்கட ஆட்கள் அவர்கள் கோபிப்பினம் இவர்கள் புட்டுக்குவினம் எண்ட மாதிரிக் கருத்து எழுதுறதப் பார்த்தால் இவர்கள் எந்த லோகத்தில இன்னும் இருக்கினம் எண்டு கேள்வி வருகுது. சிறி லங்காவப் புறக்கணிக்கச் சொன்னம் செய்யேல்ல எண்டுற ஆக்கள் புறக்கணிக்கிற, மற்றவையையும் ஊக்குவிக்கிற எத்தினையோ புலத் தமிழர்களும் இருக்கினம் என்கிறதை நினைவில கொள்ள வேணும். அதை விட்டுப் போட்டு, நாங்க புறக்கணிச்ச உடன சிறி லங்காச் சாமான் விற்பனை படுக்க வேணுமெண்டு எதிர் பார்க்கிறது அறிவிலித் தனம். இந்த வாதமெல்லாம் ஒரு அறிவு பூர்வமான விஷயங்களத் தருகிற தொலைக் காட்சியப் புறக்கணிக்கச் சொல்லும் போது வாறது நியாயம். இந்த குடும்பச் சதி நாடகங்கள், கும்மாங்கூத்துகள் பகிஷ்கரிக்க இவ்வளவு பஞ்சி என்றால் எங்கட ஆட்கள் "உம்மைத் தாங்கும் தோள்களாய் நாம் இருப்போம்' அது இது எண்டு வசனமியற்றிப் பாட்டுப் பாடுவது வெறும் முனாகானா நடிப்புத் தான் போல. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

Do not just make a statement based on the people you know and based on the information you know. If you are asking other people not to be selfish can you prove that you are not one of them?? If you really want to do something from outside u won't not come here and talk rubbish. Thank You.

உங்களுக்குத் தெரிந்த ஆட்கள் விடயங்கள் மட்டுமே வைத்துக் கொண்டு அறிக்கை விடாதீங்கோ. மற்றவர்களை சுய நலமின்றி இருக்க அறிவுரை சொல்லும் உங்களால் நீங்கள் சுய நலமுள்ள ஒருவரல்ல என்று நிரூபிக்க முடியுமா? உண்மையிலேயே நீங்கள் செயலாற்றக் கூடிய ஒருவரென்றால் இங்கே வந்து பயனில்லாதவை பற்றிப் பேசிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

(புறக்குராசியருக்குக் கோவம் வந்து ஆங்கிலத்தில திட்டிப் போட்டேர். அது உரியவரப் போய்ச் சேர வேண்டாமோ? அதான் தமிழில மாற்றிப் போட்டிருக்கிறன்) :wub:

உந்த புறக்கணி ... பகிஸ்கரி . . .உதெல்லாம் வேலைக்கு ஆவாது.

அதுவும் மானாட மயிலாட பார்க்கிற கோஸ்டியிட்ட போய்...

நடக்கிற காரியமா?

காசுதான் எல்லாத்துக்கும் கால்.

எனவே மக்களே . . .

புலம்பெயர் மண்ணில இருந்து உந்த தொலைக்காட்சிகளை அப்புறப்படுத்திறதுதான் ஒரே வழி.

அதுக்கு . .அதுக்கு . . .

காசில்லாமா பார்த்தா அவன் தன்ட பாட்டில பூட்டிக்கொண்டு போயிடுவான் . . .

சும்மா ஈமெயில் அனுப்பிறது . . . போன் அடிக்கிறது . .. கையெழுத்து வேட்டை இதலெம்லாம் நேர விரயம் . . காசும் செலவு.

ஐரோப்பாவில் சன் - கலைஞர் ஒளிபரப்பை நிறுத்தினால் . . GTV தீபம் மாதிரி தமிழரும் புதுசா 4 தொலைக்காட்சி தொடங்கலாம்.

எமது செய்திகளை ஒளிபரப்புரான் இல்லை எண்டு ஒப்பாரி வைக்கத் தேவையில்லை

எங்கட கலைஞர்களை வளர்த்துவிட்ட மாதிரி இருக்கும். அதேநேரம் 4 பேருக்கு வேலை குடுத்த மாதிரியும் இருக்கும்.

ஏற்கனவே சட்டி பூட்டி படம் பார்க்கிற ஆக்கள் உந்த கார்ட் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சு போட்டு

hi@nallatv.co.cc இதுக்கு மெயில் போடுங்கோ.

எல்லாம் பார்க்க ஆவன செய்யப்படும்.

நன்றி.

நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு சந்தோசம் என்பது போல, நீங்களும் இதுக்கை உழைக்கலாமெண்டு நினைக்கிறியள். :lol: ஐரோப்பாவில் சண், கலைஞர் ஒளிபரப்பை நிறுத்திப் போட்டு 4 என்ன 40 தொலைக்காட்சியும் தொடங்கலாம். பிறகு நிகழ்ச்சிகளுக்கு அங்கை தானே கையேந்தணும். :unsure: சாட்சிக்காரன் காலிலை விழுறதைவிட சண்டைக்காரனின் காலில் விழுறது பறுவாயில்லை எண்டு எங்கட சனம் நினைக்குது பாருங்கோ :o

எச்சூச்மீ வசம்பு...

உதில எங்க உழைப்பு கிடக்கு?

4 பேருக்கு நல்லது செய்வம் எண்டா . . .

என்னடா கஸ்டமா இருக்கு.

பார்ப்பதேயில்லை....எம்மவர்கள் அழிந்து கொண்டிருக்க தொலைக்காட்சி ஒரு கேடா??

ஓரே ஒரு விடயம்இ ஐரோப்பாவில் என்ன நடக்கிறதோ தெரியாது. வட அமெரிக்காவில் சன் குழுமத்தை புறக்கணிப்பதால் அவர்கள் நட்டமடையப் போவதில்லை. நன்மையே அடைவார்கள்இ 100க்கு 90 வீதமானவர்கள் சன்குழும நிகழ்ச்சியை கனவாகத்தான் பார்க்கிறார்கள்.

அதை விட முன்னர் யாரோ குறிப்பிட்ட்டது போல நாடகங்களையும் தமிழக தொடர்களையும் நம்பியே எமது ஊடகங்கள் இயங்குகின்றன. அதையும் நீங்கள் கெடுப்பது போலாகிறது இந்த பகிஸ்கரிப்பு.

.........

நாடகங்களும் தொடர்களும் சன் குழுமத்தாலயோ அன்றி கலைஞர் தொலைக்காட்சியினாலேயோ தனியே தயாரிக்கப்படுவதில்லை. அவை பல்வேறு நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்டு இத் தொலைக்காட்சி நிறுவனங்களினால் வாங்கப்படுகின்றன. சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நிலையங்களானால் தயாரிக்கப்படுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்குத் தெரிந்த ஆட்கள் விடயங்கள் மட்டுமே வைத்துக் கொண்டு அறிக்கை விடாதீங்கோ. மற்றவர்களை சுய நலமின்றி இருக்க அறிவுரை சொல்லும் உங்களால் நீங்கள் சுய நலமுள்ள ஒருவரல்ல என்று நிரூபிக்க முடியுமா? உண்மையிலேயே நீங்கள் செயலாற்றக் கூடிய ஒருவரென்றால் இங்கே வந்து பயனில்லாதவை பற்றிப் பேசிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

(புறக்குராசியருக்குக் கோவம் வந்து ஆங்கிலத்தில திட்டிப் போட்டேர். அது உரியவரப் போய்ச் சேர வேண்டாமோ? அதான் தமிழில மாற்றிப் போட்டிருக்கிறன்) :icon_mrgreen:

நன்றி ஜஸ்டின்.. கொஞ்சம் கீட் ஆகினா அப்பிடித்தான்.. யாழில இதெல்லாம் சகஜமப்பா..

எச்சூச்மீ வசம்பு...

உதில எங்க உழைப்பு கிடக்கு?

4 பேருக்கு நல்லது செய்வம் எண்டா . . .

என்னடா கஸ்டமா இருக்கு.

எச் சூச் மீ ( உங்கடை பேரைச் சொல்ல ஒரு மாதிரி இருப்பதாலே )

:icon_mrgreen: இது தமிழ் பொடியங்களின் தயாரிப்பு என்று சட்டியின் படமும் ரிசீவரின் படமும் போட்டுள்ளீர்கள். அவற்றை சும்மாவா கொடுக்கின்றீர்கள். :unsure: ஏற்கனவே செய்த ரிசீவரில் சில மென்பொருள்களை புகுத்தி அதனூடாக இணையத்திலிருந்து அனைத்துத் தொலைக்காட்சிகளைப் பார்க்கச் செய்வது தயாரிப்பாகி விடுமா ?? இதை ஏற்கனவே வேற்று நாட்டவர்களே செய்துள்ளார்களே ?? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களில் முட்டி கொள்வதை தவிர்த்துகொள்ளுங்கள் அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நஞ்சை விதைக்கலாம் எற்கனவே அங்கு மெகா ரீ வி இருந்து கொண்டு ஈரை பேனாக்கி பேனை பெருச்சாளி அக்கி கொண்டிருக்கிறது அதனால வேண்டாமே

இதோ சங்குமான்கள் [கள உறவுகள் ] ராமேஸ்வரத்தில் நடிகர்கள் நடத்திய கூட்டத்தை ஒளிபரப்பியதும் சன் டீவிதானே அப்போது ?? :icon_mrgreen:

நாடகங்களும் தொடர்களும் சன் குழுமத்தாலயோ அன்றி கலைஞர் தொலைக்காட்சியினாலேயோ தனியே தயாரிக்கப்படுவதில்லை. அவை பல்வேறு நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்டு இத் தொலைக்காட்சி நிறுவனங்களினால் வாங்கப்படுகின்றன. சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நிலையங்களானால் தயாரிக்கப்படுகின்றன.

எல்லாத் தொலைக்காட்சிகளும் அநேக நிகழ்ச்சிகளை வெவ்வேறு தயாரரிப்பு நிறுவனங்களிடமிருந்து தான் வாங்குகின்றன. ஆனால் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படும் போதே அந்நிகழ்ச்சி இன்ன தொலைக்காட்சிக்கென்றே தயாரிக்கப்படுகின்றது. அதுபோல் தொலைக்காட்சி நேரடியாகத் தயாரிக்கும் நிகழ்ச்சிகளைக் கூட இயக்குவது வெளியாட்களே. ஆனால் சண், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகளின் பிரபலம் நிகழ்ச்சிகளின் தரவரிசைகள் உயர்வவதற்கு உதவியளிக்ககின்றது. இதனால் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தனது அடுத்த நிகழ்ச்சியின் விலையை கணிசமாக உயர்த்த முடிகின்றது. ஆனால் குறிப்பிட்ட அந்நிகழ்ச்சிகளை எம்மவர் தொலைக்காட்சிகள் மீள் ஒளிபரப்புச் செய்வதற்கு எந்த தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பப்பட்டதோ, அத்தொலைக்காட்சியிடம் இருந்து தான் வாங்கி ஒளிபரப்ப முடியும்.

ஊடகங்களில் முட்டி கொள்வதை தவிர்த்துகொள்ளுங்கள் அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நஞ்சை விதைக்கலாம் எற்கனவே அங்கு மெகா ரீ வி இருந்து கொண்டு ஈரை பேனாக்கி பேனை பெருச்சாளி அக்கி கொண்டிருக்கிறது அதனால வேண்டாமே

இதோ சங்குமான்கள் [கள உறவுகள் ] ராமேஸ்வரத்தில் நடிகர்கள் நடத்திய கூட்டத்தை ஒளிபரப்பியதும் சன் டீவிதானே அப்போது ?? :icon_mrgreen:

சில விடயங்களை சொல்லி புரிய வைக்க முடியாது. பட்டுத்தான் தெளிய வேண்டுமென சிலர் நினைத்தால் என்ன செய்ய முடியும் ??

இந்த பிரச்சனை வரும் எண்டுதான் நான் கேபிள் லைனை எடுக்காமல் விட்டது சக்தி T.V காணும் எண்டு இருந்தன் அதையும் எரிச்சபிறகு பெரிசா செய்திகள் சொல்லுறது இல்லை (பயம்தான்)இதானை பேசாம ரூபவாஹினியை பாக்கத் தொடங்கியிட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

Vasampu Posted Today, 07:25 PM

சில விடயங்களை சொல்லி புரிய வைக்க முடியாது. பட்டுத்தான் தெளிய வேண்டுமென சிலர் நினைத்தால் என்ன செய்ய முடியும்

வசம்பண்ணை உன்மையே களத்தில் வெற்றி செய்தியை கண்டதும் துள்ளுவதும் தோல்வியை கண்டால் துவண்டு போவதும் பிறகு ஒப்பாரி வைப்பதும் நம்ம சனங்களின் கைவந்த கலை இன்று இந்த தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை பார்த்து நம் சனங்கள் தடைபண்ண வேண்டும் என்றும் பார்க்ககூடாது என்றும் பேசிக்கொள்கின்றனர் ஆனால் ஒரு ஜரோப்பாவில் இருக்கும் தொலைக்காட்சியில் பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி போனது ஆடும் பாப்பாக்களுக்கு கிந்தி பாட்டு .........பார்ரா எப்படி

அடுத்து தொலைக்காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் யாருக்கு விசு வாசி கீழ் கட்டு பட்டு [ஜால்ரா] அடிக்கிரானோ அதுப்படித்தான் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் இதனால் நன்மையும் உண்டு தீமையும் [ தீமை அம்மக்களால் அடித்து நொருக்கப்படலாம்] ............அந்த செய்தி பொய் என்று எல்லோருக்கும் தெரிந்த உன்மை காரணம் இன்று தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பேசப்படுவது நமது ஈழப்பிரச்சினைதான் அதை புரிந்து கொள்ள வேண்டும்

எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் நமக்கு சாதமாக இருக்காது உதாரணம் [மெகா டீவி]

அடுத்து அங்குள்ள தொலக்காட்சி நிறுவனங்களுக்கு எங்கோ ஒரு மூலையில் இருக்கும் தமிழன் தான் உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்கிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஒரு வேற நாட்டு க்காரனோ அல்ல ஆகையால் ஒளிபரப்பும் நிகழ்ச்சி ஒரு தூண்டு கோலாகத்தான் இருக்கவேண்டும் என்பதை கூறி கொள்ளவிரும்புகின்றேன்

சனம் கஸரப்படுற நேரம் எங்களுக்குக் களியாட்டம் தேவையில்லை எண்டுறது தான் என்றுடைய தனிப்பட்ட நிலைப்பாடும். இதனால, கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள ஒளிபரப்புற எங்கட (தமிழ்வண்) தொலைக்காட்சி உரிமையாளரிட்டயும் இதப்பற்றி ஒருநாள் கதைச்சன். நான் அவரோட பேசிக்கொண்டிருந்த ஒரு 4 நிமிசத்தில 10 தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. அவ்வளவும் உங்கட தொலைக்காட்சி இணைப்பை எடுக்க எவ்வளவு முடியும்?, என்னென்ன நாடகம் போடுறியள் எண்ட விசாரிப்புக்கள் தான். இத்தனைக்கும், அன்றையதினம் வன்னியில் ஒரேநாளில் 300 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாங்கள் தங்கியிருக்காத நிலை ஏற்படும் வரை இந்தத் தாக்கத்திலிருந்து நாம் மீள முடியாது. அதேநேரம், சுய தயாரிப்பு நிகழ்ச்சிகளை மட்டும் வழங்கக்கூடிய நிலையில் எங்களுக்கான ஊடகச் சந்தையும் இல்லை என்பதுதான் உண்மை. பகிஸ்கரிப்பு என்பதைவிட தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரும் தாங்களாகவே உணர்ந்து தவிர்த்துக்கொள்வதுதான் இப்போதைக்கு சாத்தியமான வழி.

அதைவிட, ஒரு ஊடகத்தோடு முரண்படுவது மிகவும் ஆபத்தானதாக முடியும். காரணம் சாதாரண பொதுமக்கள் ஊடகங்கள் சொல்லக்கூடிய பொய்யையும் உண்மையென்றே நம்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சிகளை பார்க்காமல் புறக்கணித்தல் என்பது மக்கள் தாமகவே முன் வந்து பார்க்காமல் விட வேண்டும்.எல்லா மக்களும் ஓவ்வொரு நாளும் தாயக செய்திகளை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள்.எல்லோருக்கும் கணணி பாவிக்க தெரியாது ஆகவே அவர்கள் தொலைகாட்சியிலே தங்கியுள்ளனர்.

நீங்கள் இந்தியா தொலைக்காட்சிகளை புறக்கணியுங்கள் என கூற இலங்கை அரசு இலவசமாக தொலைக்காட்சி விடும் மக்கள் அதை தான் பார்ப்பார்கள்.அதை விட தற்போது இன்டநெற் ஊடாகவே எல்லாவற்றையும் பார்க்கலாம் காசு கட்டி சன்,கலைஞர் ரீவி பார்க்கோனும் என்று இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனம் கஸரப்படுற நேரம் எங்களுக்குக் களியாட்டம் தேவையில்லை எண்டுறது தான் என்றுடைய தனிப்பட்ட நிலைப்பாடும். இதனால, கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள ஒளிபரப்புற எங்கட (தமிழ்வண்) தொலைக்காட்சி உரிமையாளரிட்டயும் இதப்பற்றி ஒருநாள் கதைச்சன். நான் அவரோட பேசிக்கொண்டிருந்த ஒரு 4 நிமிசத்தில 10 தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. அவ்வளவும் உங்கட தொலைக்காட்சி இணைப்பை எடுக்க எவ்வளவு முடியும்?, என்னென்ன நாடகம் போடுறியள் எண்ட விசாரிப்புக்கள் தான். இத்தனைக்கும், அன்றையதினம் வன்னியில் ஒரேநாளில் 300 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாங்கள் தங்கியிருக்காத நிலை ஏற்படும் வரை இந்தத் தாக்கத்திலிருந்து நாம் மீள முடியாது. அதேநேரம், சுய தயாரிப்பு நிகழ்ச்சிகளை மட்டும் வழங்கக்கூடிய நிலையில் எங்களுக்கான ஊடகச் சந்தையும் இல்லை என்பதுதான் உண்மை. பகிஸ்கரிப்பு என்பதைவிட தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரும் தாங்களாகவே உணர்ந்து தவிர்த்துக்கொள்வதுதான் இப்போதைக்கு சாத்தியமான வழி.

அதைவிட, ஒரு ஊடகத்தோடு முரண்படுவது மிகவும் ஆபத்தானதாக முடியும். காரணம் சாதாரண பொதுமக்கள் ஊடகங்கள் சொல்லக்கூடிய பொய்யையும் உண்மையென்றே நம்புகிறார்கள்.

நக்கீரன் ஐயா நாங்கள் செய்த முதல்வேலையே தமிழ்வண்" ஐ நிற்பாட்டினதுதான். கலைஞர் தொலைக்காட்சியும் சன் தொலைக்காட்சியும் இங்குள்ள செய்திகள் எதனையும் ஒலிபரப்புவதில்லை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எங்களுக்குச்சாதகமான நிலமையையும் மழுங்கடிக்கினம்.

சன் தொலைக்காட்சியோடு கலைஞர் கோவமா இருக்கும் போது சன் எல்லா நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பியது இப்ப சேர்ந்திட்டினம் அதனால அவையும் சேர்ந்து குழி தோண்டுகினம்.

இனிச்சொல்லி என்ன அவரவர் திருந்தவேணும்.

நீங்கள் செய்ததும் சொல்வதும் நியாயம்தான். இப்படியான உணர்வு நிலை ஏற்படும்போது தொலைக்காட்சி நிறுவனங்கள் தாமாகவே சில மாற்றங்களைச் செய்யவேண்டி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

அதேவேளை, நான் பார்த்த வரையில் கலைஞரோ சன் தொலைக்காட்சியோ தமிழக மக்கள் குறித்த உண்மையான பல செய்திகளையே வெளியிடுவதில்லையே? பின் எப்படி எங்களைப்பற்றிக் கவனிப்பார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.