Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ என்னை தேடி வந்த தேவதையடி

Featured Replies

வீடே நிறைந்திருந்து..

எல்லாரும் கலகலப்பாய் பேசி சிரித்து கொண்டார்கள்..

ராகவனுக்கு பெண் பார்த்து விட்டு வந்து இருந்தார்கள் சுந்தரம் பிள்ளையின் குடும்பம்..

ராகவன் எத்தினை நாள் நிக்க போகுறாய்..

அப்பா நான் போகணும் கல்யாணம் முடிந்த உடன் பெண்ணை கூட்டி கொண்டு..

ஏன் ராகவன் இந்த அம்மாவோட ஒரு மாதம் நிக்க கூடாதா?

இல்லை அம்மா வேலைக்கு போகணும் அம்மா அதுதான்..

அடுத்த முறை வரும் போது நான் நிக்குறன் அம்மா.. அப்ப மாதவியய் ஒரு மாதம் எங்க கூட விடன் ராகவன்.. நீ எங்களுக்கு ஒரே பிள்ளை எவ்வளவு காலம்தான் நாங்கள் உன்னை விட்டு பிரிந்து இருக்குறது...

என்னம்மா நாடு சரி வந்தால் நான் உங்கள் கூடதான் அம்மா வந்து இருப்பன்..அதுதான் சொல்லுறன் நீங்கள் இரண்டு பேரும் என் கூட வந்து விடுங்களன்..

இல்லை ராகவா எங்களுக்கு அந்த குளிர் நாடு சரி வாரது..

நீ சந்தோசமாய் இருக்கணும் ..அதுதான் நாங்கள் உன்னை லண்டன் அனுப்பி படிக்க வத்தம்.. நீ சந்தோசமாய் இருந்தால் அதுவே போதும் எங்களுக்கு...

சரிப்பா இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு உன் கல்யாணத்துக்கு எல்லா வேலையும் பாக்கணும் நீ போயு படுப்பா..

சரி அப்பா...

ராகவன் உள்ளுக்குள் அழுதான்..

என்னை மண்ணித்து விடு நித்தி... நீ உன் காதலை சொன்ன போது எனக்கு உன்மேல் விருப்பம் இருந்தது.. ஆனால் அப்பா அம்மா அவங்கள் விருப்பத்துக்கு தடை சொல்ல முடியாமல் போயுட்டுது.. நான் எந்த பெண்ணையும் பாக்குறது இல்லை என்று இருந்தன்.. ஆனால் உன்னை பாத்தவுடன்

என்னால் உன்னை பாக்கமல் இருக்க முடிய வில்லை.. நித்தி நீ நல்லவள் உனக்கு என்னை விட நல்லவன் கிடைப்பான்..

அப்பா அம்மாவின் விருப்பம்தான் என் சந்தோசம்.... நீ சந்தோசமாய் இருப்பாய் நித்தி..

என்னப்பா ராகவா இரவு எல்லாம் சரியாய் துங்கவில்லையா நீ கண்ணு சிவந்து இருக்கு...

இல்லை அம்மா அப்படி ஒன்றும் இல்லை..

ராகவன் மாதவி விட்டுக்கு போனான்

மாமா நான் மாதவி கூட பேசணும்..

நான் இன்றைக்கு வெளியில் கூட்டி கொண்டு போகட்டுமா மாமா..

சரி மாப்பிளை..

வா மாதவி நாம்ம கோவில்லை போயு பேசலாம்..

என்னங்க மாப்பிளை மாதவி கூட என்ன பேச போறார்.. இந்த பொண்ணு என்ன உளறி வக்குதோ தெரிய வில்லை..

அடி என்னோட பொண்ணு புத்தி சாலி அவள் எல்லாம் பார்த்துப்பாள் பேசாமல் இரு..

சரிங்க எல்லாம் நல்லா நடந்தால் சரிதான்..

மாதவி இறங்கு நம்ம கோவில் உள்ளை போயு பேசலாம்..

மாதவி உனக்கு தெரியும் நம்ம குடும்பத்தை பற்றி.. நான் ஒரே பிள்ளை அம்மா அப்பாவுக்கு..

அவங்களை நம்மதான் பார்த்துக்கணும்.. நீ அவங்களுக்கு ஒரு பொண்ணாய் இருப்பாய் என்று நினைக்குறன்..

நிச்சயாமாய் என் அப்பா அம்மா போல பார்த்துப்பன்..

றொம்ப நன்றி மாதவி..

வா போகலாம் மாதவி விட்டில எல்லாம் தேட போறங்கள்...

சரிங்க..

இப்பதான் எனக்கு சந்தோசமாய் இருக்கு நம்ம பிள்ளைக்கு விடிந்தால் கல்யாணம்..

ஆமடி நம்ம நினைத்த மாதிரி நல்ல பொண்ணு கிடைத்து இருக்கு நம்ம பிள்ளை சந்தோசமாய் இருக்கணும்..

கல்யாணமும் நடந்து முடிந்தது இரண்டு குடும்பமும் சந்தோசமாய் இருந்தது..

என்னை நம்பி வந்த பெண்ணை நல்ல படியா வத்து இருக்கணும்.. நான் இனி நித்தி பத்தி நினைக்க கூடாது... என்று நினைத்தான் ராகவன்

மாதவி நீ ஒரு மாதம் என் அப்பா அம்மா கூட இரு.. நீயும் இப்ப வந்து விட்டால் அம்மா அப்பா என்னை பிரிந்த சோகம் கவலை படுவங்கள்.. நான் ஒரு மாதம் போன பிறகு உன்னை வந்து கூட்டி போறேன் அதுக்கு இடையில் விசாவும் சரி வந்து விடும் சரியா மாதவி..

மாதவி நினைத்தாள் இந்த கிழடு கட்டையளுக்காக நம்ம சந்தோசத்தை அளித்து விட்டு போறார்..

கோபம் வந்தது மாமியர் மாமனார் மேல்..

ராகவன் விடை குடுத்து போனான் லண்டன்..அவன் போயு ஒரு மாதம் போனது

மாமா நான் அப்பா அம்மா கூட போயு நின்று விட்டு வாறனே..அவர் இல்லாமல் எனக்கு கவலையாய் இருக்கு மாமா..

சரி மாதவி போயுட்டு சிக்கிரம் வந்து விடு அம்மா.. நீ இங்க இருக்குறது எங்களுக்கு நம்ம மகன் இருக்குற மாதிரி இருக்கு...

சரி மாமா...

என்னடி உன் புருசன் போனவுடன் இங்க வந்து விட்டாய்..

அந்த கிழடு கட்டை கூட யார் இருக்குறது.. நான் சந்தோசமாய் இருக்க கல்யாணம் பண்ணினா? இல்லை இந்த கிழடு இரண்டுக்கு சமைத்து போட கல்யாணம் பண்ணினா?

அடி மாதவி இப்ப எதுகும் பேசினால் உன் புருசன் அப்புறம் உன்னை கூப்பிட மாட்டான்..கொஞ்சம் கொஞ்சம் ஆகதான் பிரிக்கணும்..

சரிம்மா நீ சொல்லுற படியே கேட்குறன்...

சரிம்மா நான் அங்க போறன் அந்த கிழடு கட்டை போட்டு குடுத்துட போகுது..

என்னங்க ஒவ்வரு நாளும் போன் எடுங்க.. எனக்கு உங்களை விட்டு பிரிந்து இருக்க முடிய வில்லை..

என்னங்க நான் வேற ஒன்றும் சொல்லணும் கோபிக்க மாட்டிங்காளா? இல்லை என்னம்மா மாதவி..

இல்லை உங்கள் அப்பா அம்மா றொம்ப செலவு பண்ணுறாங்கள்.... நீங்கள் கஸ்ர பட்டு உழைக்குறிங்கள் என்னு நினைக்க மாட்டன் என்குறாங்கள்..

மாதவி அவங்கள் என்னை வழத்தவங்கள்.. அவங்கள் தெரியாமல் ஒன்றும் பண்ண மாட்டாங்கள்....

நீ அப்பாவிடம் போனை குடு நான் பேசணும்..

அப்பா நான் உங்கள் எல்லாரயும் இங்க கூட்டி வந்து விடலாம் என்று இருக்கன்.. நீங்கள் மறுக்காமல் என் கூட வரணும் அப்பா.. என்னால உங்களை தனியாய் அங்க விட முடியாது.. நாடு சரி வந்தால் நம்ம எல்லாரும் அங்க போயு இருப்பம் அப்பா..இப்ப இங்க வாங்க அப்பா..அம்மாவிடம் எடுத்து சொல்லுங்கள் அப்பா..

சரிப்பா உன் விருப்பம்..

எல்லாரும் கிழம்பி லண்டன் வந்தார்கள்..

மாதவிக்கு மட்டும் சந்தோசாமாய் இருக்க முடிய வில்லை.. நம்ம பிரித்து விடலாம் என்னு இருந்தம்..

இந்த கிழடு கட்டையும் இங்க வந்து விட்டுதே.

எல்லாம் என் தலை விதி..என்று நினைத்தாள் மாதவி

இப்படியே ஒரு வருடம் போனது... ராகவனுக்கு குழந்தையும் ஒன்று வந்தது.. எல்லாரும் சந்தோசமாய் இருந்தார்கள்... மாதவிக்கு மட்டும் புடிக்க வில்லை.. எப்ப இந்த கிழடு கட்டை சாகும் என்று நினைத்தாள்.

என்னங்க உங்கள் அப்பா அம்மாவை என்னால் பாக்க முடியாது என்கையவது கொண்டு போயு விடுங்கள்.. இவர்கள் துணி எல்லாம் என்னால் துவைக்க முடியாது வயசு அக இவர்கள் தொல்லை தாங்க முடிய வில்லை..

இதோ பார் என் அப்பா அம்மா இங்கதான் இருப்பார்கள் உனக்கு புடிக்க வில்லை என்றால் நீ எங்கையவது தனியாய் போ..

என் அப்பா அம்மாவை நான் தான் பார்ப்பன்....

இப்படியே இருவருக்கும் இடையில் சின்ன சின்ன சண்டை..

என்னம்மா ராகவனை காணம் இன்றைக்கு ஒருக்க போன் பண்ணி கேளன் மாதவி..

உங்கள் பிள்ளை எங்க போனார் என்று எனக்கு என்ன தெரியும்..வேணும் என்றால் நீங்கள் போன் பண்ணி கேளுங்கள்.. நான் துங்க போறேன்..

ஒரு பத்து மணி இருக்கும்..ராகவன் நண்பன் போன் பண்ணினான்.. அம்மா நீங்கள் எல்லாரும் வெளிக்கு இட்டு இருங்கள்.. நான் உங்களை மருத்துவமனை கூட்டி கொண்டு போறான்.. உங்கள் பிள்ளைக்கு சின்ன விபத்து அம்மா..உயிருத்து ஆபத்து இல்லை..

ராகவா என்று கதறி அழுதாள் அம்மா.. மாதவி நீ எல்லாம் கேட்டியா? நான் கேட்டு கொண்டுதானே இருந்தன் உங்கள் பிள்ளை என்ன செத்த போயுட்டார்..

எல்லாரும் மருத்துவமனை போனார்கள்..

ராகவனுக்கு ஒரு கால் முறிந்து போனது.. அப்பா அம்மாவும் கதறி அழுதார்கள்.. மாதவி எதுகும் பேச வில்லை அவனை கவனிக்கவும் இல்லை..

எல்லாரும் பார்க்க வந்தார்கள்.. நித்தியும் வந்தாள்... ராகவனை பார்த்து அழுதாள்..

என் உயிரே

உன்னை இந்த நிலமையில பார்க்கவா

கடவுள் எனக்கு கண்களை தந்தான்..

இதை விட கண்கள் இல்லாமல் இருப்பது மேல்..

நடை பிணாமாய் வீடு வந்தாள் நித்தி

அம்மாவிடம் சொல்லி அழுதாள்.. தாயின் அன்பில்தான் நித்தி வழ்ந்தாள்.. எதுவாய் இருந்தாலும் தன் தயிடம் ஒரு நண்பியய் போல் சொல்லுவாள்.....மகளை ஆறுதல் படுத்தினாள் தாய்..பெத்த மனசு பிள்ளையின் நிலமை கண்டு உள்ளம் துடித்தது..

ராகவன் எல்லாம் முடிந்து வீடு வந்து சேந்தான்...

என்னால உங்கள் கூட வழ முடியாது என்று மாதவி சொன்னாள் ராகவனிடம்..

மாதவி நீ விரும்பினால் என்னை பிரிந்து போ... இப்படி சந்தோசம் இல்லாமல் இருப்பதை விட. பிரிந்து போவது இரண்டு பேருக்கும் நல்லது . ஆனால் என் மகனை என்னிடம் விட்டு இட்டு போ..

நீ வேற கல்யாணம் பண்ணுறதாய் இருந்தால் பண்ணு..

எனக்கு விசா இருக்குது தானே நானே எங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லி கல்யாணம் பண்ணுறன்..

அவள் அப்பா அம்மாவிடம் சொன்னாள்.. என்னை காதலித்த ரவி இங்கதான் இருக்கன் அவன் கூட நான் போறன் அம்மா என்றாள்.. அவர்கள் எதுகும் பேச முதல் போனை வத்து விட்டு ராகவன் விட்டை விட்டு ரவி கூட மாதவி சென்றாள்..

ராகவன் கவலை பட்டான் எனி நான் என்ன பண்ண போறன்.. வயது ஆன அப்பா அம்மா என் குழந்தை..என்னாலயும் எழுந்து நடக்க நாள் ஆகும் கடவுளே என்றான்..

அப்போது ஒரு குரல் உள்ள வராலாமா?

யார் அம்மா நீ

அம்மா ராகவனுக்கு எல்லாம் தெரியும் அவருக்கு நண்பி நான்.. உங்கள் எல்லாரயும் பார்த்துட்டு போகாலம் என்று வந்து இருக்கன்.. மருத்துவமனைக்கு கூட வந்து இருந்தன் அம்மா..

சரி வாம்மா..

நித்தி நீ எங்க இங்க..

ராகவா நான் எல்லாம் கேள்வி பட்டன்.. என்னால பார்த்துட்டு இருக்க முடிய வில்லை ராகவா...

நான் உங்க விட்டுக்கு பக்கத்திலயே வீடு பார்த்து வந்து விட்டன்..

நீங்கள் எவ்வளவு கஸ்ர படு விங்கள்..அதுதான் நான் இங்க பக்கத்தில் வந்தன் ராகவா..

நித்தி நான் உன்னை துக்கி எறிந்தவன்.. உன் காதலை ஏத்து இருந்தால் எனக்கு இந்த நிலமை வருமா?

வேணாம் நித்தி நீ கல்யாணம் பண்ணி சந்தோசமாய் இரு.. நான் என்னவும் பண்ணுறன்..

ராகவா எத்தினை ஜென்மம் எடுத்தாலும் நீங்கள்தான் என் கணவன்..

நான் உங்களை கல்யாணம் பண்ண விட்டாலும் நான் இப்படியேதான் இருப்பன்..எத்தினை ஜெனமம் எடுத்து வந்தாலும் நீங்கள்தான் என் கணவன்..

இதை எல்லாம் நித்திக்கு பழ ரசம் குடுக்க வந்த ராகவனின் அம்மா கேட்டு கொண்டு இருந்தாள்...

நித்தி அழுத படி வீட்டுக்கு போக கிழம்பினாள்..

நித்தி ஒரு நிமிசம் நில்லு அம்மா... ராகவா நான் உன்கூட பேசணும்..

ராகவா நான் நீயும் நித்தியும் பேசிட்டு இருந்தை கேட்டு கொண்டுதான் இருந்தன்

ஏன் ராகவா இதை எல்லாத்தையும் எங்கள் கிட்ட இருந்து மறைத்தாய்..

இல்லை அம்மா நித்தி இங்க வழந்த பெண் எப்படி இருப்பளோ என்று தெரிய வில்லை..உங்களை பார்த்துப்பாளா என்னு தெரியாமல் அப்புறம் உங்கள் விருப்பம் நான் ஊர்ல இருந்து கல்யாணம் பண்ணனும் என்று சொன்னிர்கள் அதுதான்....

ஜாதி மதம் அத்தஸ்து என்னு பார்பிர்கள்...அதுதான் வேணாம் என்று சொன்னன்..

ஏன் ராகவா அவள் முகத்தை பார்த்து உனக்கு புரிய வில்லையா?இந்த நிலமையிலும் நீதான் கணவன் என்று சொல்லும் பெண்ணின் மனது புரிய வில்லயா?

ராகவா நீ எங்களட்ட சொல்லி இருந்தால் நங்கள் பண்ணி வத்து இருப்பம்..

எங்க இருந்தலும் வழற முறை ஒன்று இருக்குது இல்லை.. அது அந்த பெண் கண்ணில தெரிய வில்லை ராகவா . ...

ராகவா நீ நித்தியை கல்யாணம் பண்ணு.. அந்த பெண் பாவம்..இதுவரை நடந்தது கெட்ட கனவாய் நினைத்து மறந்து விடு...

அம்மா என்று நித்தி அழுத படி ராகவனின் தாயின் காலின் விழுந்து அழுதாள்..

நீங்கள்தான் என் தெய்வம் என்றால் நித்தி மாமியாரிடம்...

இல்லை நித்தி அம்மா நாங்கள் செய்த தப்பை சரி பண்ண குடுத்த ஒரு வாய்ப்பு.. நீ எங்கள் வீடு தேடி வந்த மகலக்ஸ்மி நித்தி அம்மா..

இதை பார்த்த ராகவன் அழுதான்..

ராகவன் மனதுக்கு நினைத்தான் நித்தி நீ என்னை தேடி வந்த தேவதையடி

Edited by preethi82

  • கருத்துக்கள உறவுகள்

பிரீதி நல்ல ஒரு கரு உள்ள கதை ....சற்று எழுத்து நடை ,ஒழுங்கு முறை குழம்பி இருக்கிறது. குழந்தையிடம் கதை கேட்ட சந்தோசம் .

நன்றாக் புத்தகங்கள் வாசியுங்கள் இது உண்மை கதையாக இருக்கலாம் பதிவுக்கு நன்றி சற்று திருத்தினால் இன்னும்

சிறப்பாக இருக்கும் கதையின் கரு மிக சிறந்தது. .அக்காவின் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள். நட்புடன் நிலாமதி அக்கா..

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி அக்கா.. நீங்கள் சொன்னது உண்மை இது நடந்த கதைதான்.. நான் எழுதும் போது பயந்தேன்.. இதை இந்த கதைக்கு உரியவர்கள் பார்த்தால் என்னை தேடி அடிக்க வர மட்டார்களா என்று..எழுதாமல் இருக்க முடிய வில்லை..அதுதான் எழுத்தினன்..திருத்த முயற்சி பண்ணுறன்.. நீங்கள் எங்க பிழை என்று சொல்லி இருந்தால் திருத்த உதவியாய் இருந்து இருக்கும்.. நன்றி அக்கா..

கதை நன்றாக இருக்கிறது. மொழி நடையை செம்மைப் படுத்தினால் இன்னும் சிறப்பாக அமையும்.வாழ்த்துக்கள் பிரீத்தி.

திருமணம் கூட இவ் உலகில் விளையட்டகி போனதை நினைத்தால் வேதனையாக உள்ளது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ப்ரித்தீ வாழ்த்துகள். ஆனால் கதைக்கிற பாசையில் அதாவது பேச்சு நடையில் எழுதாமல் எழுத்து நடையில் அதாவது வசன நடையில் எழுதுங்கள்.உதாரணத்திற்கு அப்பா நான் கல்யாணம் முடித்த உடன் பெண்ணை கூட்டிக் கொண்டு ஊருக்கு போக வேண்டும் என எழுதுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.

  • தொடங்கியவர்

கதை நன்றாக இருக்கிறது. மொழி நடையை செம்மைப் படுத்தினால் இன்னும் சிறப்பாக அமையும்.வாழ்த்துக்கள் பிரீத்தி.

திருமணம் கூட இவ் உலகில் விளையட்டகி போனதை நினைத்தால் வேதனையாக உள்ளது.

நன்றி

நிகே றொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு.. உண்மைதான் திருமணம் சிலருக்கு விளையாட்டா

போசுதான்.. உண்மை சொல்ல போனால் அந்த பெண்ணின் புருசனுக்கு இடுப்புக்கு கிழ உனட்சி இல்லாமல் போயுட்டுது... அந்த பெண்ணை அவள் காதலித்த பெண் கூடவே சேர்த்து வத்தார் அவர் புருசன்...

நல்ல கதை ப்ரித்தீ வாழ்த்துகள். ஆனால் கதைக்கிற பாசையில் அதாவது பேச்சு நடையில் எழுதாமல் எழுத்து நடையில் அதாவது வசன நடையில் எழுதுங்கள்.உதாரணத்திற்கு அப்பா நான் கல்யாணம் முடித்த உடன் பெண்ணை கூட்டிக் கொண்டு ஊருக்கு போக வேண்டும் என எழுதுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.

ரதி றொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு.. எழுத்து நடையில் எழுத முயட்சி பண்ணுறேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தேடி வந்த தேவதை

அது உயிருக்கே தந்த வதை ...

சிறப்பான ஆக்கம் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

என்னை தேடி வந்த தேவதை

அது உயிருக்கே தந்த வதை ...

சிறப்பான ஆக்கம் வாழ்த்துக்கள்

வனங்கமுடி றொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

பிரிதி கதை நன்றாக உள்ளது. உண்மைச்சம்பவத்தை உறைக்கும்படி சொன்னீர்கள் மற்றப்படி எல்லாரும் சொல்லுற மாதிரி பெரிய குறை ஒன்றும் இல்லை.

என்ன கதைக்குரிய நளினமான நடை தவறிவிட்டது அவ்வளவுதான்.

விஷயத்தை சொனன்ன விதம் பாராட்டப்பட வேண்டியது. எல்லாம் எழுத எழுதப் பழகிவிடும்.

நிலாமதி சொன்னமாதிரி முடிந்தவரை நிறைய வாசியுங்கள். புதிய சொற்களைத் தேடுங்கள். நடையை மெருகூட்டுங்கள்.

றதியின் கருத்தை நான் நிராகரிக்கிறேன்

ஏனெனில் ஒரு சிறுகதை அல்லது கதை எழுதப்படுகின்றபோது அதன் உயிர்நாடியே பாத்திரங்களின் சித்திரிப்புத்தான்

பாத்திர ஊடாட்டம் என்பது கதையின் பிரதான கூறு,

கதையில் எழுதப்படுகின்ற எழுதப்படாத சாத்தியப்பாடுகளை பாத்திரங்களின் அசைவுகள் மூலம்தான் வெளிக்கொண்டுவர முடியும்.

எனவே பாத்திரப்படைப்பில் பேச்சு வழக்கு என்பது இன்றியமையாதது.

பேச்சுநடையில் கதை எழுதப்படுகின்றபோதுதான் மண்வாசனையின் உச்சப்பட்ச தன்மையினை எம்மால் சுவாசிக்க முடியும் என்பது கதைக்கான சொல்லப்படாத விதி.

எனவே பேச்சுநடைதான் கதையின் உயிர்நாடி அதை மாற்ற முனையாதீர்கள் பிரிதீ.

டானியல் கதைகளில் சாதியை மீறிய யாழ்ப்பாணப் பேச்சு நடையின் தாக்கம்தான் அவரை உலகறிய வைத்தது.

புதுமைப்பித்தனின் நெல்லைத் தமிழும் சென்னைத்தமிழும் கலந்த பாணி அவருக்கு சிறுகதை மாமேதை பட்டத்தை கொடுத்தது.

ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் நாவல் உலகநாவல்களுடன் இணையாக பேசப்பட கொங்கு மண்ணின் பேச்சுத் தமிழே காரணமாக அமைந்தது.

இவற்றையெல்லாம் மனதில் கொள்ளுங்கள்.

இனி....

நம்மிடையே உள்ள மரபான கதைசொல்லும் முறைகளினையும் நமது நிலவியல்சார் தொன்மங்களினையும் வரலாற்றின் தடங்களையும் நுகர்வுக் கலாசாரத்தின் எதிர்பார்ப்பையும் எதிர்கொள்ள வேண்டிய தேவை இன்றைய நவீன சிறுகதை எழுத்தாளர்களிடம் நிறையவே உள்ளது.

‘கதை சொல்லுதல் மரணத்துடனான விளையாட்டு’ என்கிறது அரேபிய தொல் கதை மரபு.

யதார்த்தமாக பார்த்தால் வாழ்தல் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமோ அதுவரை கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

ஏனெனில் பொதுவாகக் கதைகள் ஓரிடத்தில் தங்குவதேயில்லை. அவை எவர் வாயிலாவது அல்லது எந்த வழியிலாவது சொல்லப்பட்டு விடுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ரோரை இழக்காமல் வைத்திருக்கும் அந்த ராகவனுக்கு ஆயிரம் நன்றிகள் :rolleyes:

வாழ்த்துக்கள் பீரீத்தி கதைக்கு உரை நடையே சிறந்தது

கல்யாணம் என்பது பெண்களுக்கு ஒருவிளையாட்டு போல் ஆகிவிட்டது என்னோட யாரும் சண்டைக்கு வாரது இல்ல ஆமா சொல்லிபோட்டன் :icon_idea::lol:

றொம்ப நன்றி தியா உங்கள் கருத்துக்கு...எனக்கு தமிழ் சரியா வராது தியா..எனக்கு தமிழ் சரியா வரும் போது நல்ல வடிவாய் எழுதுறன்.. எனக்கும் ஆசைதான் நல்ல மெருகேற்றி கதை எழுதனும் என்று என்னால் என்னால் முடிந்த வரை நல்ல எழுதுறன் தியா நன்றி உங்கள் கருத்துக்கு

பெற்ரோரை இழக்காமல் வைத்திருக்கும் அந்த ராகவனுக்கு ஆயிரம் நன்றிகள் :rolleyes:

வாழ்த்துக்கள் பீரீத்தி கதைக்கு உரை நடையே சிறந்தது

கல்யாணம் என்பது பெண்களுக்கு ஒருவிளையாட்டு போல் ஆகிவிட்டது என்னோட யாரும் சண்டைக்கு வாரது இல்ல ஆமா சொல்லிபோட்டன் :icon_idea::lol:

றொம்ப நன்றி முனிவர் உங்கள் கருத்துக்கு.. என்ன முனிவர் இப்படி சொல்லி விட்டிர்கள்..எல்லா பெண்களும் ஒரு மாதிரி இல்லை முனிவர்... யார் கிட்டயோ அடி வங்க போறிர்கள்... நன்றி முனிவர்..

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி நீங்கள் தீயா சொற்படி கேட்டு எழுதுங்கள் எனக்கு கதை எழுத தெரியாது ஆனால் தீயா கதை எழுதுபவர் என நினைக்கிறேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சுஜி நீங்கள் தீயா சொற்படி கேட்டு எழுதுங்கள் எனக்கு கதை எழுத தெரியாது ஆனால் தீயா கதை எழுதுபவர் என நினைக்கிறேன்.

நன்றி ரதி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரதி கோபித்துக் கெண்டீர்களா?

சாதாரணமாக ஒரு விமர்சனம்தான் நான் சொன்னேன் தவறெனில் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரதி கோபித்துக் கெண்டீர்களா?

சாதாரணமாக ஒரு விமர்சனம்தான் நான் சொன்னேன் தவறெனில் மன்னிக்கவும்.

தியா இதில் கோபிப்பதற்கு என்ன இருக்கு நான் கதை எழுதுவது இல்லை நீங்கள் கதை எழுதும் அனுபவம் பெற்றவர் அது தான் உங்கள் சொற்படி கேட்டு எழுதும் படி சொன்னேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.