Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிர்வாகத்திடமும் உறுப்பினர்களிடமும் ஒரு வேண்டுகோள்

Featured Replies

நிர்வாகத்திடம் வேண்டுகோள்:

என்னுடைய திரி ஒன்றிலும் கேட்டு, தனி மடலிலும் கேட்டு, கேட்க கூடிய எல்லா விதங்களிலும் கேட்டுவிட்டு இப்போது இங்கும் யாழ் நிர்வாகத்தினை நோக்கி கேட்கின்றேன்

சிங்களவர்களினதும், பேரினவாத அரசின் இனவழிப்புக்கு துணை போகின்றவர்களினதும் கருத்தியல் போரை எதிர் கொள்ள ஒரு திரியை அல்லது களத்தினை ஒதுக்க முடியுமா?

பல இணைய தொலைக்காட்சி ஊடகங்களில் எம் மீதான ஆதரவு / எதிர்ப்பு ஆக்கங்கள் பிரச்சாரங்கள் இடம் பெறுகின்றன. அவற்றை தகுந்த விதத்தில் சிங்களவர்கள் எதிர் கொள்கின்றனர். அழிபட்டுக் கொண்டு இருக்கும் நாம் அவர்களிலும் மேலாக அதி தீவிரமாக எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு இடம் பெறும் விவாதங்களின் இணைப்பினை publish பண்ண ஒரு பகுதி ஒதுக்க முடியுமா? அல்லது, அவற்றை ஏற்கனவே இருக்கின்ற கவனயீர்ப்பு பகுதியில் வந்து போட இடம் தர முடியுமா? ஏற்கனவே நான் அப்படி போட்ட ஒரு பதிவை இலகுவில் உறுப்பினர்கள் பார்க்க முடியாத பகுதிக்கு நகர்த்தியமையால் இந்த வேண்டுகோளை விடுகின்றேன்.

உறுப்பினர்களிடம் வேண்டுகோள்

எமக்கிடையே ஒரு குழு போன்ற ஒன்றை அமைத்து எம் போராட்டம் தொடர்பான பதிவுகள் ஊடகங்களில் வரும் போது அதன் கருத்துகளுக்கு ஏற்றவாறு பதில்களை எழுதுவோமா? இதற்கு ஒன்றும் பெரிய ஆங்கில புலமை தேவையில்லை. ஒரு 6 வரியில் கூட எம் கருத்தை எழுதலாம்.

எதிரி எம்மை அழித்து, எம் இளம் குருத்துகளை கத்தரித்து, எம் பெண்களை தம் வக்கிர காமப் பசிக்கு இரையாக்கி கொண்டு அவற்றை நியாயப் படுத்து எல்லா இணைய தளங்களிலும் எழுதுகின்றான்....ஆனால் இவற்றை எதிர்கொள்ளும் நாம் பேசாமல் இருக்க போறோமா?

Edited by நிழலி

வணக்கம் நிழலி அண்ணா

உண்மை இதை நாங்கள் உடனே செய்யவேண்டும். அதேநேரம் தேவைக்கேற்ப ஒரு சில மாதிரிக்கடிதங்களை இணைத்து அனுப்பவேண்டிய முகவரி அந்த ஊடகத்தில் வந்த விடயம் போன்றவற்றை இணைத்து விட்டால் நம் உறவுகள் ஒவ்வொருவரும் தமது மின் அஞ்சலூடாக நிச்சயம் அனுப்புவார்கள். ஒரேநேரத்தில் பல நாடுகளிலிருந்து குறிக்கப்பட்ட ஊடகத்திற்கு அனுப்ப முடியும்.

ஆனால் இடையில் நடக்கும் சதிகளைத் தடுக்க இவை அனைத்தும் ஒருவரின் மேற்பார்வையின்கீழ்தான் நடக்கவேண்டும்.

நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வையில் நடப்பதே மிகச்சிறந்தது.

உறவுகளே உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள் மோகன் அண்ணா இதற்கான ஒழுங்குகளைச் செய்துதருவார் என நம்புகிறேன.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதோர் முயற்சி நானும் இனைய விரும்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக நிழலி. யூ ரியூப்பிலே சிங்கள காடைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

தமிழர்களோடு ஒப்பிடுகையில் சிங்களவர்கள் குறுகிய அளவு உலகெங்கும் பரந்திருந்தாலும் அவர்களது பிரச்சார முறியடிப்புத்திறன் தமிழர்களை விட பன்மடங்கு வேகமானதாகவும் விவேகமானதாகவும் உள்ளது. சர்வதேசப் பத்திரிகைகளில் எமது படுகொலைகளை செய்தியாகக் கொண்டுவருவதற்கு எத்தனையோ கடும்போராட்டங்களை செய்யவேண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்க வேண்டியுள்ளது. ஆனால் சிங்களவர்கள் இவ்வளவு அராஜகங்களையும் செய்து கொண்டு அதே நேரம் கணணி முன்னால் குந்தியிருந்து இவ்வாறான செய்திகளை வலுவிளக்கச் செய்யும் கருத்துப்போரில் வெற்றி பெறுகின்றனர். எந்த ஒரு மேற்கு நாட்டின் ஊடக செய்தியானாலும் நாங்கள் பார்வையிடமுன்னம் அங்கே பத்து சிங்களவர்கள் கருத்தெழுதி இருப்பார்கள். தனியே சிங்களவர்கள் என்ற முகமூடி மட்டுமின்றி வேற்றினத்தவரின் பெயரில் நுளைந்தும் கருத்தெழுதுகின்றனர்.

புலம்பெயர் மக்கள் இவ்வளவு தூரம் போராட்டம் செய்தும் அதன் தாற்பரியத்தை உறுதியாக நிலைநாட்ட முடியாத தூரதிஸ்டவசமான நிலமை இதனால் தொடர்கின்றது. இந்த விசயம் மிக முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்ட யாழ்களத்தில் இருந்து 20 உறுப்பினர்கள் உறுதியாக இந்த கருத்துப்போரை எதிர்கொண்டாலே பெரும் வெற்றி கிடைக்கும். ஒரு தனித் தலைப்பை தொடங்கி அந்த தலைப்பில் சர்வதேச ஊடகங்களில் வரும் செய்திகளை உடனுக்குடன் இணைத்து அதை எவ்வாறு எதிர்கொள்வது, என்ன விதமான கருத்துக்களை முன்வைப்பது என்று கருத்தாடல் செய்தால் ஏனையவர்கள் தளங்களுக்கு சென்று தமது கருத்தை எழுத முடியும். பின்னூட்டம் வாயிலாக பல செய்திகளையும் நுழைக்க முடியும். சர்வதேச செய்தி நிறுவனங்களின் பின்னூட்ட வாய்ப்பை நாம் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக சிபிசி யில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டபோது புலிகளின் இறுதி நகரத்தையும் பிடித்துவிட்டார்கள் என்ற செய்தியே வெளியிடப்பட்டது.

http://www.cbc.ca/world/story/2009/01/26/s...#socialcomments

இதற்குரிய பின்னூட்டத்தில் தமிழ்நெற்றில் வந்த செய்தியை முழுமையாக நுழைத்திருந்தேன்.

// More than 300 civilians feared killed, people bleed to death on streets

[TamilNet, Monday, 26 January 2009, 15:30 GMT]

கனடாவில் இப்போது கூட சிபிசி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறுகின்றது. எமது மக்கள் கொடுமைகளுக்கு எதிராக கடும் குளிரிலும் இறங்கி போராடுவதில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு தமது கவனயீர்ப்பு சிறு அளவில் என்றாலும் செய்திகளில் வரவேண்டும் என்பதே. அவ்வாறு பெரும் உழைப்பின் பின் வெளியிடப்படும் செய்திகளை கணணிமுன்னால் குந்தியிருந்து முறியடிக்கும் சிங்களத்தின் கருத்துப்போரை எதிர்கொள்ளாவிடில் அதைவிட கொடுமை எதுவும் இருக்காது. விரைந்து செயற்படுவோம். கணனி முன்னால் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் எமது மக்களுக்காக பயன்படுத்தக் கூடிய தருணத்தில் இருக்கின்றோம்.

நிழலி,

இதில் யாழ் இணைய நிர்வாகம் செய்வதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் கருத்துக்கள உறவுகள் இணைந்து இதனை செயற்படுத்தலாம். யாழ் செயலரங்கம் என்றொரு பகுதியுள்ளது. அதில் ஒரு புதிய பதிவைத் தொடங்கி, அதன்கீழ் விபரங்களை இணைத்து, ஒரு குழுவை உருவாக்கி, நீங்களாகவே செயற்படலாம். இதுபற்றி முன்னரும் களத்தில் கருத்தாடப்பட்டு, பின்னர் தொடரப்படவில்லை என்று நினைக்கிறேன். எனவே, வெறுமனே கருத்தாடிவிட்டு, கைவிட்டுவிடாமல் - ஒரு குழுவை அமைத்து நீங்கள் செயற்படலாம். கருத்துக்கள நிர்வாகத்தின் உதவி தேவைப்படும் போது நிச்சயமாகத் தொடர்புகொள்ளலாம். ஆக்கபூர்வமான விடயங்களுக்கு எங்களின் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் குறிப்பிட்ட எமது காணொளிக்கு எப்படியான பின்னூட்டம் சிங்களவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள். இப்படியான காணொளிகள் யாழ் வாசகர்கள் பார்வைக்கு விடப்பட்டும் கூட்டாக கருத்துகளை எல்லோரும் இடும் போது மிக இலகுவாக முறியடித்து விடலாம். அதற்காக யாழில் பெயரை இழுக்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு கொஞ்ச வாசகர்களை பின்னூட்டங்களை இட இது மிக உதவியாக இருக்கும் என்பது தனிப்பட்ட கருத்து.

உ +மாக சில பின்னூட்டங்கள் இதோ

http://www.youtube.com/watch?v=324wiE_qqck...re=channel_page

vishnuayyar (17 hours ago) LTTE supporters uwn appanyum attayum oru kuli pottu ayyanar okka..

chiliadeyes (1 day ago) Why don't U protest against the LTTE Terrorist for;

*holdin 120k Tamil civilians as human shields

*placin artillery in safe zones

*holdin 400 critically ill patients & UN & ICRC staff hostage

*lyin that 300 civilians killed (exposed by alleged author & AP News)

*firin shells into civilians to blame the SL Army

*declinin the 48hour safe passage 4 civilians

*usin child soldiers

*murderin Tamil politicians

*Usin suicide bombers on Tamil Refugees

*Shootin Tamil refugees fleeing LTTE Tyranny

chiliadeyes (1 day ago) These fellow r paying tribute to maniacs (LTTE Terrorists) who have & still r murdering Sri Lankan Tamils.

90% of Tamils live in peace & share equal rights with other nationalities in the rest of SL! The only place where Tamils have no rights is under the LTTE!

If these protesters really care for SL Tamil civilians in N-E Lanka more than they care about their REFUGEE VISA & CUSHY LIFE IN THE WEST, they should be protest under the banner "FREE THE TAMIL CIVILIAN HUMAN SHIELDS HELD BY THE LTTE!"

rambamax (1 day ago) Terrorists !!!!!!!!

நுணாவிலான்..கருத்துக்களை பார்வையிட்டபின் பிரசுரிப்பது என்ற பிரிவு யூடியூப் வீடியோ எடிட் பகுதியில் இருக்கு.. அவ்வாறு செய்துவிட்டால் நீங்கள் அனுமதித்த கருத்துக்கள் மட்டுமே வெளிவரும்.

மக்கள் அவலங்களை காட்டும் வீடியோக்களுக்கு வோட்போடும் பிரிவையும் மூடுதல் நல்லது. சில வீடியோக்களுக்கு கருத்து பகுதியையும் மூடிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி.. வலைஞன் சொல்வது போல் செயலரங்கம் பகுதியில் ஒரு திரியை ஆரம்பியுங்கள். உங்கள் முதல் கருத்தில் யாரெல்லாம் இதில் இணைய விரும்புகிறார்களோ அந்த பெயர்களை இட்டுக்கொண்டே வாருங்கள்..! எங்கே கருத்து எழுத வேணும் போன்ற இணைப்புகளை அங்கே கொடுத்துக்கொண்டே வருவோம்..

  • தொடங்கியவர்

ஊக்கம் எடுத்து பதில் தந்த அனைவருக்கும் நன்றிகள்

வலைஞன் சொல்வது போன்று ஒரு தனித் திரியினை செயலரங்கத்தில் ஆரம்பித்து அதன் மூலம் ஒரு குழுவை உருவாக்கி இயங்க முடியும். அவ் திரியில் தொடர்ச்சியாக Links உடனுக்கு உடன் கொடுப்பதன் மூலம் அதில் உள் சென்று பதில் எழுத முடியும். நல்ல யோசனை. ஆனால் அதில் இருக்கும் ஒரு குறை, குறைந்த அளவானவர்கள் தான் அதனை பார்வையிடவும், பதில் எழுதவும் முடியும் என்பது. குழுவில் ஒரு 20 பேர் இணைந்து கொண்டால் கூட எண்ணிக்கையின் அடிப்படையில் அது குறைவாகவே இருக்கும். வழங்கப் படும் இணைப்புகளுக்கு உள் சென்று 20 பேரும் பதில் எழுதினால் கூட சிங்களவர்களின் பதில்களின் எண்ணிக்கையை முந்துவது கடினம்

எனவே, நாம் செயலரங்கில் ஒரு திரி திறந்து உறுப்பினர்களை சேர்த்து பதில்கள் எழுதும் அதே வேளையில், அதற்கு சமாந்திரமாக எல்லோரும் வாசிக்க கூடிய இடத்திலும் (Guests உட்பட) அந்த இணைப்புகளை (எம்மைப் பற்றி வரும் ஊடக இணைப்புகள்) வழங்கி அனைவரையும் பதில் எழுத தூண்ட வேண்டும். இதன் மூலம் காத்திரமான அளவு பதில்களின் எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்க்கின்றேன். இதற்கு(ம்) நிர்வாகத்தின் ஆலோசனையும் உதவியும் தேவை. எல்லோரும் பார்க்க கூடிய இடத்தில் இடப்படும் திரிகளை எந்த பகுதியில் இணைப்பது? அவ்வாறு இடப்படும் திரி யாழ் முகப்பில் (ffront page இல்) தெரியக் கூடியதாக இருக்குமா?

அனைவரும் இது பற்றிய கருத்துகளையும் உங்களின் ஆலோசனைகளையும் விரைவாக தந்தால் நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

யாழ் செயலரங்கம் பகுதியில் யாருக்கெல்லாம் அனுமதி உண்டென எனக்குத் தெரியவில்லை. உறுப்பினர் எல்லோருக்கும் உண்டென்றுதான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி இல்லையாயின், இந்தத்திரியிலேயே ஆர்வமுள்ளவர்களின் பெயர்களை சேகரித்து அவர்களை மட்டும் செயலரங்கத்தில் ஒரு தனிப்பட்ட திரியை பார்க்கும் வகையில் செய்யலாம். இந்தை நிர்வாகம்தான் செய்துதர வேண்டும். கண்டவர்களும் இந்த நடவடிக்கையைக் காணாமல் ஒரு பாதுகாப்பான நிலையை இது உருவாக்க உதவும்் என்பதுதான் என் எண்ணம்.

நிழலி,

நாம் தோள்கொடுக்க காத்திருக்கின்றோம், முதலில் ஆரம்பியுங்கள். மோகன் அண்ணா யாழ்.நெற் இணையத்தளத்தில் ஒரு இடம் ஒதுக்கிக் கொடுக்க முடியுமா என்பதனையும் ஒருமுறை சிந்தியுங்கள், அத்தோடு யாழ்.நெற் இணையம் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் இருப்பதாக தோன்றுகின்றது, அதனையும் வளர்க்க எல்லோரும் முயற்சிகள் எடுக்கவேண்டும், முக்கியமாக எமது கருத்துக்களை நாம் தமிழிழ் தெரிவிப்பதனை தவிர்த்துக்கொண்டாலே மீதி உலகத்தினர் புரிந்துகொள்வார்கள், கருத்துக்களை அவர் அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் எழுத்துப்பிழை, கருத்துப்பிழை இன்றி தெரிவித்தால் நல்லது, தமிழிழ் நாம் கருத்து தெரிவிக்கும்போது நம்மவர்கள் மட்டுமே படிப்பார்கள். இதனைத் தவிர்த்து அனைத்து மொழிகளில் புலமை உள்ளவர்களும் இணையவேண்டும், மோகன் அண்ணா ஒரு சிறு வேண்டுகோள் எம்மவர்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு சில தமிழ் சொற்களுக்கான வேற்றுமொழிச் சொற்கள் சரியாகக் கிடைப்பதில்லை, எனவே தமிழ் மொழிச் சொல்லினை இடும் பட்சத்தில் மொழி தெரிந்தவர்கள் அதற்கான சரியான மாற்று மொழிச் சொல்லினை தெரிவிக்கவும் உதவினால் நன்று, இயன்றளவு ஒரு மின்னஞ்சலை இணைத்து அதனை யே எல்லோரும் அனுப்புவதை தயவுசெய்து குறைத்துக்கொள்ளுங்கள், காரணம் ஒரே செய்தியை எத்தனை தரம் தான் படிப்பது நீங்களே ஒரு முறை சிந்தித்துப்பாருங்கள்... முயற்சிகள் தொடரட்டும் நான் என்னால் ஆன உதவிகளை கண்டிப்பாக செய்வேன்...

ஊக்கம் எடுத்து பதில் தந்த அனைவருக்கும் நன்றிகள்

வலைஞன் சொல்வது போன்று ஒரு தனித் திரியினை செயலரங்கத்தில் ஆரம்பித்து அதன் மூலம் ஒரு குழுவை உருவாக்கி இயங்க முடியும். அவ் திரியில் தொடர்ச்சியாக Links உடனுக்கு உடன் கொடுப்பதன் மூலம் அதில் உள் சென்று பதில் எழுத முடியும். நல்ல யோசனை. ஆனால் அதில் இருக்கும் ஒரு குறை, குறைந்த அளவானவர்கள் தான் அதனை பார்வையிடவும், பதில் எழுதவும் முடியும் என்பது. குழுவில் ஒரு 20 பேர் இணைந்து கொண்டால் கூட எண்ணிக்கையின் அடிப்படையில் அது குறைவாகவே இருக்கும். வழங்கப் படும் இணைப்புகளுக்கு உள் சென்று 20 பேரும் பதில் எழுதினால் கூட சிங்களவர்களின் பதில்களின் எண்ணிக்கையை முந்துவது கடினம்

எனவே, நாம் செயலரங்கில் ஒரு திரி திறந்து உறுப்பினர்களை சேர்த்து பதில்கள் எழுதும் அதே வேளையில், அதற்கு சமாந்திரமாக எல்லோரும் வாசிக்க கூடிய இடத்திலும் (Guests உட்பட) அந்த இணைப்புகளை (எம்மைப் பற்றி வரும் ஊடக இணைப்புகள்) வழங்கி அனைவரையும் பதில் எழுத தூண்ட வேண்டும். இதன் மூலம் காத்திரமான அளவு பதில்களின் எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்க்கின்றேன். இதற்கு(ம்) நிர்வாகத்தின் ஆலோசனையும் உதவியும் தேவை. எல்லோரும் பார்க்க கூடிய இடத்தில் இடப்படும் திரிகளை எந்த பகுதியில் இணைப்பது? அவ்வாறு இடப்படும் திரி யாழ் முகப்பில் (ffront page இல்) தெரியக் கூடியதாக இருக்குமா?

அனைவரும் இது பற்றிய கருத்துகளையும் உங்களின் ஆலோசனைகளையும் விரைவாக தந்தால் நல்லம்

நீங்கள் குறிப்பிடும் பதிவு சரியான முறையில் இயங்கத் தொடங்கும்போது முதல் பக்கத்தில் இணைப்புக் (banner) கொடுத்துவிட முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே அனைவரும் எங்கு எங்கு பதில் கருத்துக்களை ( உதாரணம் பிபிசி ) தெரிவிக்கபோகின்றார்களோ அதனை புதுத்திரியை ஆரம்பித்து உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்வேண்டும் ஆங்கில அறிவு என்னை மாதிரி மந்தமானவர்களுக்கு கள உறுப்பினர்கள் உதவவேண்டும். நான் இங்கிருக்கும் நாட்டு மொழியில் பதில் கருத்து எழுதுவேன் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். சும்மா கதைக்காமல் தயவு செய்து தொடங்குவோம்

  • தொடங்கியவர்

செயலரங்கில் திரியை ஆரம்பித்துள்ளேன்... பார்க்கவும்

link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.