Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஹ்மானும், ஆஸ்கரும்... ஒரு பிரார்த்தனையும்!

Featured Replies

ரஹ்மானும், ஆஸ்கரும்... ஒரு பிரார்த்தனையும்!

விடிந்தால் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ பட்டியல் தெரிந்துவிடும். நம்ம 'மெட்ராஸ் மொசார்ட்'டுக்கு விருது உண்டா இல்லையா என்ற சஸ்பென்ஸும் நீங்கி விடும்.

ஆனால் அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சுருட்ட ஒரு கும்பல் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான புதுப்புது இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ள இவர்கள், ஸ்லம்டாக் மில்லியனேர் எத்தனை ஆஸ்கர் விருதுகள் வாங்கும்... என்னென்ன பிரிவுகளில் வாங்கும்? ரஹ்மானுக்கு விருது உண்டா இல்லையா? என சூதாட்டம் நடத்தி பணம் பறித்துக் கொண்டுள்ளன.

இன்னொரு பக்கம், ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தே தீர வேண்டும்... அவர் தகுதிக்கு முன் ஆஸ்கர் ஒரு பொருட்டே அல்ல, என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன, தமிழகத்தின் பக்கத்து மாநிலமான புதுவைப் பகுதியிலிருந்து.

காரைக்காலைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தே தீர வேண்டும் என்ற கூட்டுப் பிரார்த்தனாயில் ஈடுபட்டுள்ளனர். தேவாலயங்கள், அம்மன் கோயில்கள், மசூதிகளில் பிரார்த்தனைகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.

அது என்ன ரஹ்மான் மீது மட்டும் இந்த தமிழர்களுக்கு இத்தனை பாசம்?

2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியை உலகம் உள்ளளவும் மறந்துவிட முடியாது. அன்றுதான் இயற்கை சுனாமி வடிவில், தான் படைத்த மனித சமுதாயத்தையே பெருமளவு விழுங்கி கோபம் தணித்துக் கொண்டது.

அரசு ஆயிரம் உதவிகள் தந்தாலும், அந்த மனிதப் பேரவலத்திலிருந்து மக்கள் மனம் அத்தனை சுலபத்தில் இயல்புக்குத் திரும்பவே இல்லை.

அந்த சூழலில்தான் இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் தனது குழுவினருடன் காரைக்காலுக்கு அருகில் உள்ள கோட்டுச்சேரிமேட்டில் வந்திறங்கினார். அவருடன், அவரால் பிரபலமடைந்த இசைக் கலைஞர்கள் ஹரிஹரன், கார்த்திக், சின்மயி மற்றும் டிரம்மர் சிவமணி ஆகியோரும் வந்திருந்தார்கள்.

திறந்த வெளி மணல்பரப்பையே மேடையாக்கி ரஹ்மானும் அவரது குழுவினரும், சுனாமியால் நைந்து போயிருந்த அந்த கடல்புரத்து மக்கள் மனங்களை தங்கள் இசையிழைகளால் நெய்தார்கள்... ஆம்... நெய்தலில் ஒரு இசை நெய்தல் நடத்தினார் ரஹ்மான்.

இரண்டரை மணி நேரம்... அந்த மக்கள் இழந்த எதையோ ஒன்றைத் திரும்பப் பெற்றதாய் சந்தோஷம் கொண்டார்கள்.

இந்த உலகில் வேறு யாரும் செய்ய முடியாத அரிய சாதனை அது. கடவுளால் மட்டுமே கொடுக்க முடிந்த ஆத்ம சந்தோஷத்தை ரஹ்மான் என்ற கலைஞர் தந்தார், சுனாமி பாதித்த அந்த மக்களுக்கு.

அந்த தருணத்தையும், ரஹ்மான் தங்களுக்குத் தந்த அந்த அன்பு இசைப் பரிசையும் மக்கள் அத்தனை சுலபத்தில் மறந்துவிடவில்லை.

இதோ... அடுத்த 24 மணி நேரத்தில் ஆஸ்கர் மேடையில் ரஹ்மானும் நிற்கக் கூடிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்த, எல்லாம் வல்ல இறைவனை நோக்கி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கடல்புரத்து மக்கள் அனைவரும்.

'எங்களின் பிரார்த்தனையை கடவுள் நிச்சயம் கேட்பார்... நல்ல பிரார்த்தனைகளுக்கு தோல்வி கிடையாது', என்கிறார்கள் கோட்டுச்சேரிமேடு மக்கள் கேரஸாய்.

இது கோட்டுச்சேரிமேடு மக்களின் பிரார்த்தனை மட்டுமல்ல... ஒட்டுமொத்த தேசத்தின் பிரார்த்தனையும் கூட!

நன்றி: தற்ஸ்தமிழ்

"]

Edited by r.raja

இணைப்புக்கும் தகவலுக்கும் நன்றி ராஜா.

a_r_rahman.jpg

எமது பிராத்தனைகளும் எமது கலை மகனுக்கு......

நன்றி ராஜா உங்கள் இணைப்பிற்கு.

மககள் பிரார்த்தனையும், ஆண்டவன் அருளும் என்றும் ரஹ்மானுக்கு உண்டென்பது உறுதியாகி விட்டது. மனமார்ந்த வாழ்த்துகள் ரஹ்மான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள் ஏ.ஆர் ரகுமான் அவர்களே. எப்பாட்டு எனக்கு பிடிக்கும் என்று சொல்ல முடியாத அளவுக்கு தெரிவுகள். என்றாலும் இப்பாடல் ஒரு தனி ரகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்கு 3 ஒஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன.

ரகுமானுக்கு 2ம் ஒலிக்கலவையாளர் பூகுட்டிக்கு 1 என்று 3 விருதுகள் கிடைத்துள்ளன.

2009: AR Rahman - best original score

2009: AR Rahman and Gulzar - best original song

2009: Resul Pookutty - sound mixing

இருவருக்கும் திறமை எங்கிருப்பினும் அதற்கு மதிப்பளிக்கும் ஒஸ்காருக்கும் எனது பாராட்டுக்கள்.

ரகுமான் பல எதிர் விமர்சனங்களுக்கு மத்தியில் தனது இசைப் புயலைக் கிளப்பி.. இன்று உலக சினிச் சிகரத்தை எட்டியுள்ளார். :unsure:

Edited by nedukkalapoovan

ரஹ்மானின் மனிதநேயத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கமல் நடித்த நம்மவர் திரைப்படதத்தின் இசையமைப்பாளர் புற்றுநோயினால் இறந்து போனார். அதனால் அவர் பெயரிலேயே ஒரு புற்றுநோய் நிதியுதவி அறக்கட்டளையை நிறுவ கமல் உட்பட சில சினிமாப் பிரபலங்கள் விரும்பினார்கள். அவர்கள் ரஹ்மானைத் தொடர்பு கொண்டு ஒரு இசைநிகழ்ச்சி நடத்தித் தர கேட்டபோது, தனது பரபரப்பான இசையமைப்புக்களின் இடையேயும் அதற்குச் சம்மதித்து இலவசமாகவே நடத்திக் கொடுத்தார். நுழைவுச்சீட்டு விற்பனையில் நிதியும் குவிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் புகழும் இறைவனுக்கே "அல்லா ஒருவனே துனை நமக்கு துனை நமக்கு"

"எல்லாப் புகழும் இறைவனுக்கே"

ஆஸ்கர்... ஆங்கிலப் படங்களுக்கு வழங்கப்படும் விருது என்பதை அறிந்திருந்த போதிலும், நம்மவருக்குக் கிடைக்காதா என்று நம்மில் பலரும் ஏங்கியிருந்திருக்கிறோம்!

அந்த ஏக்கத்தைத் தணித்து இரண்டு ஆஸ்கர்களை வென்று இரட்டிப்பு ஊக்கத்தை அளித்திருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஒவ்வொரு இந்தியரின் சொந்தக்காரருமான நமது ஏ.ஆர்.ரஹ்மான்!

இசையில் உலகளாவிய சாதனைகளை படைத்துள்ள இந்த இளைஞருக்கு வயது 43 மட்டுமே!

ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் அடியெடுத்து வைத்த அவரது பாதங்கள், கடந்து வந்த பாதை வலிகளெனும் முட்கள் நிரம்பியவை என்பது அவரது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கக் கூடும்.

இசையுலகின் முதல் வழிகாட்டியான தன்னுடைய தந்தையை தனது 11-வது வயதில் இழந்தார் ரஹ்மான்.

கணவரின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டே தனது குடும்பத்துக்கு அடுப்பில் உலை வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார், ரஹ்மானின் தாயார் கரீமா பேகம்.

அதன்பின் தனது அயராத முயற்சிகளால் ஆஸ்கரில் வெற்றிக் கொடி நாட்டும் வகையில் வாழ்க்கையை நேர்மறை எண்ணத்துடன் அணுகி வெற்றி கண்டிருக்கிறார், மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்!

ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான் தனது ஏற்புரையில், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் உரைத்தார்.

அப்போது, அரங்கில் இருந்த அனைத்துக் கலைஞர்களும், இந்நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் தங்களையும் மறந்து கரவொலியை எழுப்பினர்.

"இந்த விருதை இறைவனுக்கும், எனது அன்பு தாயார் கரீமா பேகத்துக்கும் சமர்ப்பிக்கிறேன்," என்ற மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ், "எனது வாழ்வில் எப்போதும் வெறுப்பை விலக்கி, அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன். அன்பைத் தேர்ந்தெடுப்பதின் பலனாகத்தான் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்," என்றார்!

தனது அன்பு மகன் ஆஸ்கர் விருது பெற்று, தாயகத்துக்கு பெருமை சேர்த்த அற்புத நிகழ்வை, பார்வையாளர் பகுதியில் அமர்ந்து கொண்டு ஆனந்தக் கண்ணீருடன் ரசித்துக் கொண்டிருந்தார், ரஹ்மானின் தாயார் கரீமா பேகம்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அனைத்துக் கலைஞர்களும், அவர்களது துணைவர், துணைவியர்களும் ஆடம்பரம் ஜொலிக்க அணிகலன்களையும் அதிக விலைமதிப்புள்ள ஆடைகளையும் அணிந்து வலம் வர, தமிழகத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் வழக்கம் போல் மிக எளிமையாக சிகப்பு கம்பளத்தில் வலம் வந்தது, இந்திய ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியது!

ஆம்...

ரஹ்மானின் சாதனையால் ஆனந்தத்தில் திளைக்கும் அதேவேளையில், அவரது அர்ப்பணிப்பு வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொள்வதே, நமது இளைய சமுதாயத்தின் முழுமுதற் கடமை!

விடா முயற்சி, தொழில் மீது தீராத காதல், வறுமையைக் கண்டு அஞ்சாத துணிவு, ஒழுக்கம், தாய்மொழிப்பற்று, தாய்நாட்டுப் பற்று, புகழ் பெருகும் போது அடக்கம்....

இப்படி ரஹ்மானிடம் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

அந்தப் பல்கலைக் கழகத்திடம் இருந்து ஒரு சில பாடங்களைக் கற்றுக்கொண்டாலே, உலகில் தத்தமது துறைகளில் சாதித்துவிடலாம் என்று சொன்னால், அதில் எள்ளவும் மிகையில்லை!

நன்றி விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்புயலுக்கு இனிய வாழ்த்துfs;!!!

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம்

டெல்லியிலுள்ள அலிகார் முஸ்லீம் பல்கலை கழகம், ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. மார்ச் 25ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. ஏ.ஆர். ரகுமானுடன் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா, வேளாண் விஞ்ஞானி எம்,எஸ் சாமி நாதன் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4050

  • கருத்துக்கள உறவுகள்

8ஆஸ்கர் விருது பெற்ற படத்தை பார்க்க ஒபாமா விருப்பம்

இந்தியாவில் தயாரான ஸ்லம்டாக் மில்லியனார் படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார்.

உலகம் எங்கும் பரபரப்பாக பேசப்படும் இப்படத்தை பார்ப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4002

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.