Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரகுமானுக்கு ஆஸ்கார்! ஆழ்ந்த அனுதாபங்கள் !

Featured Replies

இந்து தேசியவெறியும்

இசுலாமியர் எதிர்ப்பு வெறியும்

பூத்துக்குலுங்கும் ‘ரோஜாவின்’

பார்ப்பன மணம் பரப்பி,

சிவசேனையின் செய்திப்படம்

மணிரத்தினத்தின் கரசேவை

பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி,

இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவில்

வந்தே மாதிரத்தை

காந்தியின் கைராட்டை சுதியிலிருந்து

கழற்றி வீசி

சோனி இசைத்தட்டில் சுதேசி கீதம் முழக்கி,

ஒரு வழியாக இசைப்புயல்

அமொரிக்க கைப்பாவைக்குள் அடங்கிற்று.

மும்பைக் குடிசைகளின் இதய ஒலியை

ரகுமான் “ஜெய் ஹோ! ஜெய் ஹோ!” என பிய்த்து உதறிவிட்டார் என

தெருவில் வந்து கூத்தாடும் தேசமே!

பீகார் தொழிலாளிகளை ராஜ்தாக்ரே கும்பல்

பிய்த்து உரித்தபோது.. ” அய்யகோ..!” என்று அலறியபோது

எங்கே போனது இந்தியப் பாசம்?

அல்லா ரக்கா ரகுமானின்

ஆர்மோனிய சுரப்புகளை அலசி ஆராய்ந்து

உள்நுணுகி உருகி விவாதிக்கும் அன்பர்களே,

இசுலாமியர்களின்

ஹார்மோன் சுரப்பிகளையும் கருவறையிலேயே தாலாட்டுகளையும்

திரிசூலங்கள் குதறி எடுத்தபோது,

இந்த அளவு இறங்கி வந்து விவாதித்ததுண்டோ நீங்கள்?

இசையிலே கொண்டுவந்து ஏன்

அரசியலை நுழைக்கிறீர்கள் என்று ஆதங்கப்படுகிறீர்களோ!

ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் பாடலுக்கு மட்டுமல்ல

அவர் மௌனம் காக்கும் அரசியலுக்கும் சேர்த்தே

ஆடுகிறது உங்கள் தலை.

மழலைச் சொல்லை தீய்த்த எறிகணை…

கருச்சிதைந்த பெண்ணோடு தெறித்த கரும்பனை..

இறந்த பின்னாலும் பெண்னை புணர்ந்திடும் இனவெறி…

ஈழத்தின் துயரத்தை இசைக்க முடியாமல்

காற்றும் மூர்ச்சையாகும்…. இந்தச் சூழலில்

ஒரு தமிழனென்ற முறையில் தமிழில் பேசிய இசைப்புயல்

ஈழமக்கள் எரியுமிந்த வேளையில்

விருது வேண்டாமென்று கூட அல்ல…

வருத்தத்தோடு வாங்கிக்கொள்கிறேன் என்றாவது

பேசியிருக்கலாம்தானே!

“எல்லா புகழும் இறைவனுக்கே” என்பவர்

ஆஸ்கார் புகழுக்காக அடக்கி வாசிக்காமல்

“வராக நதிக்கரையோரம்” உருகும் இசைப்புயல்

இசுரேல் இனவெறியால் மேற்கு கரையில்

உயிர் உருகி உருக்குலையும் பாலஸ்தீன மக்களுக்காக

அமெரிக்க மேலாதிக்கத்தால்

நரம்புகள் அறுக்கப்பட்ட இசைக்கருவிகளாய்

தமது மூச்சையும் இசைக்கமுடியாமல் பலியாகும்

ஈராக்கிய மக்களுக்காக….. ஒரு இசுலாமியன் எனுமடிப்படையில்

ஆஸ்கர் விருதை வேண்டாம் என்று கூட அல்ல…

ஆழ்ந்த சோகத்தோடு ஏற்கிறேன் என்றாவது

சொல்லலாம் தானே?

இந்த… சாதி, , இனம், அரசியலுக்கெல்லாம்

அப்பாற்பட்டது ரகுமானின் இசை அனுபவம் என்போரே!

சரிதான்!

இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு

உலகமயத்தின் சரக்காக இசைப்புயல்…

சரக்கு சந்தையைப் பற்றியல்லாமல்

வேறு எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை

உண்மைதான்!

வினவு தளத்திலிருந்து: http://vinavu.wordpress.com/2009/02/26/arrahman1/

இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/02/26/arrahman1/#respond

தொடர்புடைய பதிவுகள்

காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

Edited by வினவு

இரத்தச் சூடேற்றத்திற்கு அரிவாள்கள் பதில் சொல்லா, எரிவாளும் சொல்லும் என்றென்றும் கரிநாக்காத்திடார் வரும்வேளை பார்த்திரார் எண்ணற்ற மனதின் ஓரங்களை நீர்தொடார். எவ்விடம் ஏகினும் அவ்விடம் நோக்கிடார் புகழுக்காக தம் பிறந்தபூமியை என்றுமே தூக்கிவைத்திடப்பின் நிற்கார். தமிழன் குருதி ஓடும்வேளை தமிழனாக ஒருவார்த்தை அந்தச் செந்நிறக்குருதிக்கு நாவிடை சொன்னாலே பெரும் கீதம் ஒலித்திடும் உலகத்தின் திசைஎல்லாம் ஈழத்தை நோக்கியே... கல்லல்ல மனமே கொல் என்று சொல்லும் பாரத தேசம் என்றும் அறிந்திடா ஈழத் தமிழனின் குருதியை எல்லாமே பயங்கரவாத முலாம் பூசப்பட்டு கொல்லட்டும், ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்கட்டும் அப்போது இசை மீட்டும் ஒரு இனம் அழிந்ததடா சந்தோசம் பூபாளம் என் குரலில் தொடங்குதடா என்று....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரத்தச் சூடேற்றத்திற்கு அரிவாள்கள் பதில் சொல்லா, எரிவாளும் சொல்லும் என்றென்றும் கரிநாக்காத்திடார் வரும்வேளை பார்த்திரார் எண்ணற்ற மனதின் ஓரங்களை நீர்தொடார். எவ்விடம் ஏகினும் அவ்விடம் நோக்கிடார் புகழுக்காக தம் பிறந்தபூமியை என்றுமே தூக்கிவைத்திடப்பின் நிற்கார். தமிழன் குருதி ஓடும்வேளை தமிழனாக ஒருவார்த்தை அந்தச் செந்நிறக்குருதிக்கு நாவிடை சொன்னாலே பெரும் கீதம் ஒலித்திடும் உலகத்தின் திசைஎல்லாம் ஈழத்தை நோக்கியே... கல்லல்ல மனமே கொல் என்று சொல்லும் பாரத தேசம் என்றும் அறிந்திடா ஈழத் தமிழனின் குருதியை எல்லாமே பயங்கரவாத முலாம் பூசப்பட்டு கொல்லட்டும், ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்கட்டும் அப்போது இசை மீட்டும் ஒரு இனம் அழிந்ததடா சந்தோசம் பூபாளம் என் குரலில் தொடங்குதடா என்று....

:o:lol::lol::lol: என்ன நடக்குது :lol::):(

:o:lol::lol::lol: என்ன நடக்குது :lol::):(

பின்ன என்னண்ண, தெருவோரம் வாழ்வாக கடலோரம் சாவாக கட்டுண்டு அழுகிறதுக்க தவிடுவச்சு மாடு பிடிக்கிறவைய என்னண்டு சொல்லுறது. தமிழனெண்டா தெருவோரம் கிடக்குற நாய் கூட தள்ளிப்படுக்குது, ஒரு தமிழன் ஆஸ்கார் மெடையில எங்கட தமிழினம் அழியுது ஒருக்கா திரும்பி பாருங்கோ எண்டு ஒருவசனம் சொன்னா என்னத்தை குறஞ்சு போடுவார் இல்ல எண்டுதான் கேக்குறன் உனக்கு உண்மையிலயே தமிழினம் மேல பற்றிருந்தா எங்கயாச்சும் ஒருக்கா வந்தனீயே? இல்ல எங்காவது தான் வாயத் திறந்தனீயே? பாராட்டத்தான் வேணும் தமிழன் விருது வாங்குறான் எண்ட பெருமையில ஆனா அதுக்காக வாயக்கிழிச்சு வக்காளத்து வேண்டேலாது கண்டீங்களே :lol :D

இப்படிப் புகைச்சலில் புலம்பும் வினவுவின் பதிவைப் பார்க்க, வினவுவில் தான் அனுதாபமாக இருக்கின்றது. :D

பின்ன என்னண்ண, தெருவோரம் வாழ்வாக கடலோரம் சாவாக கட்டுண்டு அழுகிறதுக்க தவிடுவச்சு மாடு பிடிக்கிறவைய என்னண்டு சொல்லுறது. தமிழனெண்டா தெருவோரம் கிடக்குற நாய் கூட தள்ளிப்படுக்குது, ஒரு தமிழன் ஆஸ்கார் மெடையில எங்கட தமிழினம் அழியுது ஒருக்கா திரும்பி பாருங்கோ எண்டு ஒருவசனம் சொன்னா என்னத்தை குறஞ்சு போடுவார் இல்ல எண்டுதான் கேக்குறன் உனக்கு உண்மையிலயே தமிழினம் மேல பற்றிருந்தா எங்கயாச்சும் ஒருக்கா வந்தனீயே? இல்ல எங்காவது தான் வாயத் திறந்தனீயே? பாராட்டத்தான் வேணும் தமிழன் விருது வாங்குறான் எண்ட பெருமையில ஆனா அதுக்காக வாயக்கிழிச்சு வக்காளத்து வேண்டேலாது கண்டீங்களே :lol :)

முதலில் கொஞ்சம் வெளியுலகத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆஸ்கார் என்பது சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் ஓர் உயரிய விருது. விருது வாங்குபவர் அங்கு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்க முடியாது. தனக்கு விருது கிடைத்ததற்கு நன்றியோ அல்லது அதற்குக் காரணமானவர்களுக்கு நன்றியோ தெரிவித்துக் கொள்ளலாமேயொழிய, அதனை அரசியல் மேடையாக்க முடியாது. அத்துடன் இசை என்பது இனம், மொாழி, மதம் கடந்து எல்லோராலும் இரசிக்கப்படுவது. அதனால் அந்தக் கலைஞன் தனி ஒரு இனத்திற்காக மட்டும் எப்படிக் குரல் கொடுக்க முடியும். தமிழர்கள் செய்யும் சாதனைகளை உங்களைளப் போல சில தமிழர்களே விமர்சிக்க முயல்வதால், உங்களைத் தான் நீங்கள் சிறுமைப்படுத்திக் கொள்கின்றீர்கள். நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டிய நிலையில் ரஹ்மானுமில்லை, நீங்கள் வக்காலத்து வாங்கினால்க் கூட எவருக்கும் ஆஸ்கார் விருது கிடைக்கப் போவதுமில்லை :blink:

முதலில் கொஞ்சம் வெளியுலகத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆஸ்கார் என்பது சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் ஓர் உயரிய விருது. விருது வாங்குபவர் அங்கு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் வக்காலத்து வாங்கினால்க் கூட எவருக்கும் ஆஸ்கார் விருது கிடைக்கப் போவதுமில்லை :blink:
மகிந்தாவுக்கும் கொடுக்கமாட்டினமோ?அவரும் நல்லாத்தான் நடிக்கிறார் உலக அரங்கில்.

ஜக்கிய நாடுகள் சபையில் மகிந்தாவும், ஆஸ்கார் மேடையில் ரகுமானும் தமிழில் பேசி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்,ஆகவே இவர்கள் இருவருக்கும் நாங்கள் கோயில் கட்டி தமிழ் தெய்வங்கள் என்று வழிபடவேண்டும்

இப்படிப் புகைச்சலில் புலம்பும் வினவுவின் பதிவைப் பார்க்க, வினவுவில் தான் அனுதாபமாக இருக்கின்றது. :D

முதலில் கொஞ்சம் வெளியுலகத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆஸ்கார் என்பது சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் ஓர் உயரிய விருது. விருது வாங்குபவர் அங்கு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்க முடியாது. தனக்கு விருது கிடைத்ததற்கு நன்றியோ அல்லது அதற்குக் காரணமானவர்களுக்கு நன்றியோ தெரிவித்துக் கொள்ளலாமேயொழிய, அதனை அரசியல் மேடையாக்க முடியாது. அத்துடன் இசை என்பது இனம், மொாழி, மதம் கடந்து எல்லோராலும் இரசிக்கப்படுவது. அதனால் அந்தக் கலைஞன் தனி ஒரு இனத்திற்காக மட்டும் எப்படிக் குரல் கொடுக்க முடியும். தமிழர்கள் செய்யும் சாதனைகளை உங்களைளப் போல சில தமிழர்களே விமர்சிக்க முயல்வதால், உங்களைத் தான் நீங்கள் சிறுமைப்படுத்திக் கொள்கின்றீர்கள். நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டிய நிலையில் ரஹ்மானுமில்லை, நீங்கள் வக்காலத்து வாங்கினால்க் கூட எவருக்கும் ஆஸ்கார் விருது கிடைக்கப் போவதுமில்லை :blink:

அப்ப ஈழத்தமிழன் வாழ்வு உங்களுக்கு அரசியலாத்தான் படுகுதோ? திரையுலகம் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தீச்சினம், இந்தியாவில எத்தனையோ கோடி சனம் தமிழருக்கு எதிராக் குரல் கொடுக்கீனம். ஏன் உங்களுக்கு தெர்யாதக்கும் மலேசியாவில உயர்ந்த பட்டம் கொடுக்கப்பட்டபோது அது அமெரிக்கனால் கொடுக்கப்படுவதாக் கூறி ஒருவர் அப்பட்டத்தையே வாங்க மறுத்தது ஏனெனில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செஞ்சதுக்காக. நான் அப்பிடிச் சொல்லேல்ல கண்டீங்களே, நான் சொன்னது ஒரு வார்த்தை ஈழத்தமிழரை கண்திறந்து பாருங்கள் எண்டு சொன்னா என்ன மனுசன் குறைஞ்சுபோடுமோ? இல்ல குடுக்குற விருதைத் தான் குடுக்காம விட்டுத்தாங்களோ? உங்களுக்கு ஒண்டு தெரியோணும் ஆஸ்கார் விருது எண்டது அமெரிக்காவில்னால் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கே கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அவர் ஒரு முஸ்லீம் தானே, சரி எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டாம் பாலஸ்தீனத்தில் அவரிண்ட இனம் அழிக்கப்படுகுது அவர்களுக்காச்சும் குரல் கொடுத்திருக்கலாம் தானே? அப்ப மொத்ததில மனுசனுக்கு மனிதநேயம் இருக்கா எண்டது விடைகிடைக்கும் வினாவாகும்....

இப்படிப் புகைச்சலில் புலம்பும் வினவுவின் பதிவைப் பார்க்க, வினவுவில் தான் அனுதாபமாக இருக்கின்றது. :D

முதலில் கொஞ்சம் வெளியுலகத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆஸ்கார் என்பது சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் ஓர் உயரிய விருது. விருது வாங்குபவர் அங்கு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்க முடியாது. தனக்கு விருது கிடைத்ததற்கு நன்றியோ அல்லது அதற்குக் காரணமானவர்களுக்கு நன்றியோ தெரிவித்துக் கொள்ளலாமேயொழிய, அதனை அரசியல் மேடையாக்க முடியாது. அத்துடன் இசை என்பது இனம், மொாழி, மதம் கடந்து எல்லோராலும் இரசிக்கப்படுவது. அதனால் அந்தக் கலைஞன் தனி ஒரு இனத்திற்காக மட்டும் எப்படிக் குரல் கொடுக்க முடியும். தமிழர்கள் செய்யும் சாதனைகளை உங்களைளப் போல சில தமிழர்களே விமர்சிக்க முயல்வதால், உங்களைத் தான் நீங்கள் சிறுமைப்படுத்திக் கொள்கின்றீர்கள். நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டிய நிலையில் ரஹ்மானுமில்லை, நீங்கள் வக்காலத்து வாங்கினால்க் கூட எவருக்கும் ஆஸ்கார் விருது கிடைக்கப் போவதுமில்லை :blink:

வசம்பு அண்ணா. ஒஸ்கார் மேடையில் அரசியல் பேசுவது புதிதுமல்ல கௌவரக்குறைச்சலும் அல்ல. ஏற்கனவே சிலர் ஈராக் பிரச்சினைபற்றியும் வேறு பல பிரச்சினைகள் பற்றியும் பேசியுள்ளார்கள். உதாரணத்திற்கு சில

நடிகர் Marlon Brando அவருக்கு ஓஸ்கார் விருது கிடைத்தபோது அதை வாங்க மறுத்து செவ்விந்திய மக்களுக்காக குரல் கொடுத்தார்.

இந்த விடீயோவை பாருங்கள்.

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவு கவிதை யதார்த்தத்தை சொல்லும்படியாக உள்ளது..

இதை தப்பாக புரிந்துகொண்ட எதோ அவர் வேண்டினது எங்களுக்கு எரிசல் எண்டு நினைக்க வேண்டாம் ...எல்லாம் வலியின் ஆதங்கம்..

யாழ்நிலவன்..உங்கள் கருத்துகள் முற்றிலும் வரவேற்க படவேண்டியவை..

உதாரணங்கள் தந்த வசிசுதவுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ரகுமான் தமிழில் பேசிய போது மிக சந்தோசமாக இருந்தது. அவர் ஒரு தமிழராக இறந்து கொண்டிருக்கும் ஈழ தமிழ் மக்களுக்காக ஒரு செய்தியை சொன்னால் ஒன்றும் குறைந்திருக்காது. இறக்கும் மக்களை காப்பாற்றுங்கள் போன்ற செய்தியை அரசியல் செய்தியாக நோக்காமல் ஒரு மனிதாபிமான உலகிற்கான செய்தியாக நோக்கலாம் தானே? " மனமுண்டால் இடமுண்டு."

அவர் சைவ மத்டகில் இருந்துன் இஸ்லாம் மத்திற்கு மாறியவர், :):D:D இப்படிப்பட்டவரிடம் இன உணர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இன்னும் சொல்லப் போனால் இவர் எம் இனத்தவர் அன்று, இப்போது இவர் ஒரு முஸ்லிம். இவரது இயற்பெயர் திலிப்குமார், இப்போது அல்லா (A) ரெக்கா ® ரகுமான். :unsure::unsure::)

உண்மையச்சொன்னா கோவிக்குறாங்கள் பொய்யைச் சொன்னா நம்புறாங்கள். காலமடா காலம் இது ஆண்டவன்ர நேரம்

கலை வேறு அரசியல் வேறு அல்ல...அரசியல் அற்ற கலை மக்கள் கலையும் அல்ல. எந்த கலைஞனுக்கும் அரசியல் நிலைப்பாடும் பிரக்ஞையும் இருக்கு, இருக்க வேண்டும். என்று ரஹுமான் வந்தே மாதரம் பாடினாரோ அன்றே அவர் இந்திய இந்து மேலாதிக்கத்தினை ஏற்றுக் கொண்டவராக அதன் ஊடுபோக்கிற்கு இசைய தன் இருப்பை பேணிக்கொள்பவராக காட்டி கொண்டு (அல்லது 'கொடுத்து') விட்டார்

ஒரு ரசிகனாக அவரின் பாடல்களை மிக விரும்புகின்றேன். அவரின் சாதனையை ஒரு ரசிகனாக வரவேற்று கைகளை உரக்க தட்டுகின்றேன். ஆனால் அவரை ஒரு தமிழனாக என்னால் இனங்காணவோ அவரின் இசை வெற்றியினை ஒரு சக தமிழனின் இசை வெற்றியாகவோ கொண்டாட முடியவில்லை. அவர் தமிழ் இசையை அல்லது இந்திய மக்களின் இசையை பிரதிபலித்து சாதனையை அடையவில்லை. அவர் அமெரிக்க இசையை, மேற்கத்தை இசையை வரித்து கொண்டு சாதனை அடைந்துள்ளார். அவ் வெற்றிக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவு,யாழ்நிலவன் உங்கள் ஆதங்கம் நியாயமானதே.

நுணா அண்ணா சொல்வது போல் 'மனம் உண்டானால் இடமுண்டு"

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்கு இசை ரஹ்மான் தானே?! கொஞ்சமாவது படத்தை உணராமலா இசைத்திருப்பார்?

முத்தமிழ் குழுமத்தில் வைத்தியர் : சங்கர் குமார் எழுதிய ஆதங்கக்கவிதை ஒன்று:

தமிழனுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக, இசைப்புயல் திரு.ஏ.ஆர்.ரஹமான்

இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று நம் நாட்டுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

விருதுகளை வாங்கும்போது, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” எனச் சொல்லித் தமிழையும்

உலக அரங்கில் ஒலிக்கச் செய்தது எமக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது.

அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

அதே சமயம், நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு சொல் அவரிடமிருந்து வராததில்

எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் என இங்கே பதிய விழைகிறேன்.

கோடானுகோடி மக்கள் உலகெங்கிலும் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கணங்களில், ஒரு

தமிழன் என்கிற முறையில் அவர் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டார் எனக்

கருதுகிறேன்.

இது போன்ற உலகக் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில் துணிச்சலோடு தமது கருத்துகளைச்

சொன்ன நிகழ்வுகள், ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி பல அரங்குகளில் நிகழ்ந்திருக்கின்றன.

அப்படி ஒரு வாய்ப்பு தமிழரான ரஹமானுக்கு வாய்த்தபோது, அவர் அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்!

எனது மனவருத்தத்தை அவரே இசையமைத்த ‘உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்துவிடு’

என்னும் மெட்டில் ஒரு பாடலாக இங்கு அளிக்கிறேன்.

நன்றி.

தமிழே! இசையே! நீ ஏன்செய்யத் தவறிவிட்டாய்

தமிழா! ரெஹமான்! ஏன் ஒருவார்த்தை சொல்லவில்லை!

அமிழ்தாம் தமிழால் நீ அரியணையில் ஏறிநின்றாய்

இனிமைத் தமிழில் நீ இறைவனுக்கு நன்றி சொன்னாய்

[தமிழே! இசையே!]

தமிழ்நாட்டில் பிறந்தாய் தமிழாலே வளர்ந்தாய்

தமிழிசைக்குப் புகழ் சேர்த்தாய்

தமிழ்நாடு தாண்டியும் புகழ்பெருகச் செய்தாய்

உலகுன்னை வாழ்த்துதின்று

நீ ஒரு வார்த்தை தமிழ்கூறி உலகோரைக் கவர்ந்தாய்

அதற்காகப் பாராட்டுவேன்

உலக அரங்கத்தில் தமிழ்மொழியின் இனிமை

உலகோரும் அறியச் செய்தாய்

ஆனால்.... ஆனால்.... நீ ஒரு வார்த்தை சொல்லமறந்தாய்

[தமிழே! இசையே!]

"எம்தமிழரங்கே விதிசெய்த சதியால்

தினந்தோறும் சாகின்றார்

உணவில்லை நீரில்லை உடுத்திடவும் உடையில்லை

இருப்பதற்கோர் இடமுமில்லை

இவர் துயர்தீர உலகோரே குரல்கொடுப்பீர்!" என்று

ஒருவார்த்தை சொல்லி யிருந்தால்

வரும் எதிர்காலம் உன்புகழை தினம் பாடும் அன்றோ

இதுவேனோ புரியவில்லை

அடடா! அடடா! நீ உன் கடமை செய்யமறந்தாய்!

தமிழே! இசையே! நீ ஏன்செய்யத் தவறிவிட்டாய்

தமிழா! ரெஹமான்! ஏன் ஒருவார்த்தை சொல்லவில்லை!

அமிழ்தாம் தமிழால் நீ அரியணையில் ஏறிநின்றாய்

இனிமைத் தமிழில் நீ இறைவனுக்கு நன்றி சொன்னாய்

[தமிழே! இசையே!]

வாழ்த்துகள் திரு ரெஹமான்! மேன்மேலும் விருதுகள் உங்களை வந்து சேரட்டும்!!

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணங்கள் காட்டினால் ஓடி ஒழிந்து கொள்வார்கள் திரும்பவும் வேற இடத்தில் அண்டகிரவுண்டில் இருந்து முளைப்பார்கள், இது தான் நடக்குது இங்க "தேசிய வாதிகளின் முகமூடி கிழிக்கும்" நபர்களால். விருது எதுவும் இல்லாமல் இசை பற்றிப் பேச PBS இல் அழைத்த போது தான் MIA எங்கள் இனக்கொலை பற்றி பேசியது, அதன் பிறகு தான் பாலித கோகன விடம் PBS ராவிஸ் ஸ்மைலி என்ன நடக்கிறது என்று பேட்டி எடுத்தது. இப்படி சந்தர்ப்பங்கள பாவிக்கிறத விட்டுப் போட்டு, "அது எண்டால் அது தான் செய்வன், இது எண்டால் இது தான் செய்வன்" எண்டு வாதாடுற ஆக்கள் தங்களுக்கு உலக அறிவு இருக்கிறதா நம்பினால்? அது கொஞ்சம் ஓவரான நம்பிக்கை தான் போங்கோ! :unsure:

Edited by Justin

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவுவின் கவிதைக்கு நன்றிகள் எனது அதங்கமும் இதுதான் ஏன் ரகுமானும் நம் தமிழ் உறவுகளுக்காக இந்த விருதை உதறியிருக்ககூடாது அப்படி நடந்திருந்தால் அது ஆயிரம் ஒஸ்கருக்கு சமமானதாக இருந்திருக்கும் லட்சம் மக்களின் உயிரை காப்பாற்றியவர் ஆக இருந்திருப்பார் இருந்தாலும் ஒரு தமிழன் என்ற ரீதியில் தமிழை உயர்த்திய அவருக்கு எனது நன்றிகள்

Edited by சேகுவாரா

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட ஒரு மினி மாநாடு மாதிரி கூட்டம்... வந்திருந்தவர்கள் அனைவருமே பத்திரிகையாளர்கள். ஒரு நிமிடம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானே அசந்துவிட்டார்.

அதற்கடுத்த அரை மணிநேரம் ரஹ்மானால் எதுவும் பேச முடியவில்லை. ரசிகர் மன்ற கண்மணிகளைவிட தீவிரமாக புகைப்படக்காரர்கள் நடந்து கொள்ள கொஞ்சம் டென்ஷனாகி விட்டார் ரஹ்மான்.

இருந்தாலும் மாறாத புன்னகையுடன் ஆஸ்கர் விருதுகளுடன் போஸ் கொடுத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு விருது கிடைக்கும் என நம்பினீர்களா?

உண்மையில் ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று 5 சதவீதம் மட்டுமே நம்பிக்கை இருந்தது. ஆனால் இரண்டு விருதுகள் கிடைத்துவிட்டன.

அது மிகவும் த்ரில்லிங்கான அனுபவம். ரொம்ப சந்தோஷப்பட்டேன். உண்மையில் ஆஸ்கர் விருது வாங்கியபோது இருந்ததை விட, அந்த ஜெய்ஹோ பாடலைப் பாட மேடையில் நின்றபோதுதான் நான் மிகவும் நெர்வஸாக இருந்தேன்.

எவ்வளவு பரிசு கிடைத்தது?

ஆஸ்கர் விழா முடிந்ததும் நிறைய பேர் எனக்கு பாராட்டு தெரிவித்து ஷாம்பைன் பாட்டில்கள் கொடுத்தனர். திரும்ப அவர்களிடமே கொடுத்து விட்டேன். விருது மூலம் பரிசாக 500 டாலர் கிடைத்துள்ளது. அதற்கும் வரிவிலக்கு கொடுத்துள்ளது அரசு.

மைக்கேல் ஜாக்சன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க் என நிறைய ஹாலிவுட் கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ரஜினி சார், கமல் போன்றவர்கள் உடனே வாழ்த்துச் சொன்னார்கள். ஆஸ்கர் விருது கிடைத்ததும், இயக்குனர் மணிரத்தினத்திற்குதான் முதலில் போன் செய்தேன், இணைப்பு கிடைக்கவில்லை. பிறகு அவரே எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இளையராஜா வாழ்த்து...

இசைஞானி இளையராஜா வாழ்த்துச் சொன்னாரா?

இளையராஜாவும் அவரது மகன்கள் இருவரும் எஸ்.எம்.எஸ். மூலம் உடனே வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் எனக்கு இந்த விருது கிடைத்ததற்காக இளையராஜா பெரிதும் மகிழ்ந்ததாக இமெயில் மூலம் தனது வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார்.

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தை ஒரு இந்தியர் இயக்கியிருந்தால் இத்தனை பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்குமா?

அந்த இயல்பு மாறாமல், திரைக்கதையின் உணர்வு மாறாமல் படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் விருது கிடைத்திருக்கும். ஆனால் படமெடுத்தால் மட்டும் போதாது. அதை சிறப்பான முறையில் அங்கே வெளிக்காட்ட வேண்டும்.

ஸ்லம்டாக்கைப் பொறுத்தவரை அந்தப் பெரும் பொறுப்பை பாக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இந்தப் படம் ஆஸ்கருக்குப் போகக் காரணம், அமெரிக்காவில் இந்தப் படம் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்தப்பட விதம் என்பதை மறுக்க முடியாது.

பாக்ஸ் நிறுவனம் சொன்னது இதுதான்: படத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். அந்த அணுகுமுறை இருந்தால் இந்திய இயக்குநரின் படங்களும் ஆஸ்கர் போகும்.

இந்தியக் கதைக் கருவை மையமாக வைத்து இந்தியாவிலேயே எடுக்கப்படுகிற இந்தியப் படங்களுக்கும் ஆஸ்கர் கிடைக்குமா?

அடிப்படையில் ஆஸ்கர் விருதுக் குழுக்கு ஒரு படம் போக சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பூர்த்தி செய்யும் விதததில் இருந்தால் நிச்சயம் ஆஸ்கர் விருதுத் தேர்வாளர்கள் இந்தியப் படங்களையும் தேர்வு செய்வார்கள்.

இந்த விருது உங்கள் இசைக்கு வழங்கப்பட்டது குறித்து சில சர்ச்சைகள் உள்ளனவே... உங்கள் திறமைக்கான அங்கீகாரமா இது?

ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இது என் திறமைக்கான விருது அல்ல... நான் அப்படி நினைக்கவுமில்லை. காரணம், இந்தப் படத்துக்கு என்ன இசை வேண்டுமோ அதைச் சரியாக செய்ததற்கு எனக்குக் கொடுத்துள்ள விருது இது அவ்வளவுதான். என்னுடைய டேலண்டுக்கு தரப்பட்டதல்ல.

இளையராஜாவுக்கு இந்த விருது கிடைக்காமல் உங்களுக்குக் கிடைத்துள்ளது பற்றி சிலர் பேசுகிறார்களே...

இளையராஜா இசை ரொம்பப் பெரிய விஷயம். சர்வதேச அளவில் பெரிய ரீச் இருக்கு அவரோட இசைக்கு. சிம்பொனி, திருவாசகம்னு நிறைய புராஜக்ட் பண்ணியிருக்கார் சர்வதேச அளவில்.

அவர் ஆஸ்கருக்கு அப்பாற்பட்டவர். அவரது இசையும் அப்படித்தான்... அவருக்கும் சர்வதேச வாய்ப்பு வந்து, அந்த இசை பாக்ஸ் மாதிரி ஒரு நிறுவனத்தின் மூலம் அகாடமிக்கு கொண்டு போகப்பட்டிருந்தால் நிச்சயம் விருது கிடைத்திருக்கும்.

ஆஸ்கார் மேடையில் தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

என் தாய் மொழியை அந்த இடத்தில் பேசவேண்டும் என்று விரும்பினேன். பேசினேன்.

ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற தலைப்பு, மற்றும் இந்தப் படத்தின் மூலம் இந்திய ஏழ்மையை ஹாலிவுட்டில் விற்று காசு பார்த்ததாக எழுந்த விமர்சனங்கள், குறிப்பாக அமிதாப் கூறியது குறித்து...

இந்த சர்ச்சைகள் தேவையில்லை. நாம்தான் நாயை இழிவாக நினைக்கிறோம். வெளிநாட்டில் நாய் செல்லப் பிராணி. நிறைய செலவு செய்து வாங்கி வளர்க்கின்றனர். படத்தில், குடிசைப் பகுதியில் வாழும் இளைஞன் சிரமப்பட்டு எப்படி வெற்றி பெறுகிறான் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. பிரச்னைக்குரிய கருத்துக்கள் ஏதும் சொல்லப்படவில்லை. ஒரு பெரிய வல்லரசு நாட்டில் நிலவும் ஏழமைப் பிரச்சினைகளை, இளைஞர்கள் எப்படி தாண்டி வந்து சாதிக்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறோம். இதில் தவறாக ஒன்றுமில்லை.

இசை மூலம் மக்களிடையே வேற்றுமைகளை களைவதே நோக்கம். ஜாதி மதம், இனம் தாண்டி இசை இருக்கவேண்டும். பேதம் கூடாது. அன்புதான் முக்கியம். அன்பால்தான் எந்த தடையும் உடைத்தெறிய முடியும்.

அடுத்த நீங்கள் என்னென்ன படங்கள் செய்கிறீர்கள்...?

இரண்டு ஹாலிவுட் படங்களில் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளேன். நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் கவனமாகத்தான் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. ஆஸ்கர் கிடைத்திருப்பதால் வந்துள்ள பயம் அது.

தமிழில் மணிரத்னம் படம், ரோபோ... எந்திரன், கவுதம் மேனன் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்கிறேன். இந்தியில் ப்ளூ என்ற படத்துக்கு இசையமைக்கிறேன்.

இதைத் தவிர, திருக்குறளை இசைப்படுத்தியுள்ளேன். குணங்குடி மஸ்தான் பாடல்களை இசைப்படுத்த உள்ளேன். உலகத் தமிழர்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதும் பாடலை, அவர் எழுதி முடித்ததும் இசையமைத்து கொடுப்பேன்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி படங்களில் இசையமைக்கும்போது, எந்த மொழி படத்தில் உங்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது?

உண்மையில் இசைக்கு மொழி பேதம் கிடையாது என்பதால் எந்த மொழியில் இசையமைப்பதிலும் பிரச்சனை இல்லை. என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழ் படங்களில் இசையமைக்கும்போதுதான் அதிக சுதந்திரம் இருந்ததாக உணர்ந்தேன்.

இசைப்புயல், ஆஸ்கர் தமிழன் - எதை நீங்கள் விரும்புகிறீர்கள்?

இரண்டையுமே விரும்பவில்லை. இந்தப் பட்டம் சூட்டுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நீங்களே ஹீரோ மாதிரி இருக்கிறீர்கள்... சினிமாவில் நடிப்பீர்களா?

(பலத்த சிரிப்புடன்) அப்படியா?... எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. இசைத்துறையில் மட்டுமே எனது முழுக் கவனமும்.

ஆஸ்கர் விருது வாங்கியதை கெளரவித்து எம்.பி. பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

உங்கள் இசையில், `சிம்பொனி' எப்போது வரும்?

அதற்கு இன்னும் `டைம்' ஆகும்.

ஆஸ்கார் கேட்'டை நீங்கள் திறந்து விட்டு இருக்கிறீர்கள். தொடர்ந்து தமிழ் பட கலைஞர்கள் ஆஸ்கார் விருது பெறுவார்கள் என்று நம்புகிறீர்களா?

நிறைய பேர் வாங்கப் போகிறார்கள்.

ஸ்லம் டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருந்தது?

ஸ்பீல்பெர்க் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஆஸ்கார் விருது வாங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

இதற்கு முன்பு இத்தாலி, ஜப்பான், ஜெர்மன், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கிறார்கள். இது, இந்தியாவின் `டைம்.' `ரோஜா' படத்துக்காக தேசிய விருது பெறும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ, அவ்வளவு சந்தோஷப்பட்டேன், ஆஸ்கார் விருது பெறும்போது...

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு யாரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்.

உங்கள் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்?

உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையை போக்க ஆசைப்படுகிறேன். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே இசையமைத்த படங்களில், ஆஸ்கார் விருதுக்கு தகுதியான படம் என்று எந்த படத்தை கருதினீர்கள்?

லகான்.

ஆஸ்கார் விருது பெற்றது பற்றி உங்கள் குழந்தைகள் என்ன சொன்னார்கள்?

என் மூன்று குழந்தைகளும் எனக்கு இ-மெயில் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

உங்கள் அடுத்த இலக்கு என்ன?

தமிழ் சினிமாவின் இசையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். ஆனால் அது என் ஒருவனால் மட்டுமே முடிகிற காரியமல்ல. அனைவரும் இணைந்து செயவ்பட வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர்வேன். தொடர்ந்து இளஞர்களுக்கு வாய்ப்பளிப்பேன்.

நன்கு திட்டமிட்டு எடுத்து, உரிய முறையில் சந்தைப்படுத்த வேண்டும். இன்னொரு பக்கம் ஆஸ்கர் போன்ற விருதுக் கமிட்டிகளை முறையான வழியில் அணுக வேண்டும். நிச்சயம் அப்போது தமிழிலும் இந்தியாவிலும் என்னை தொடர்ந்து பலர் ஆஸ்கர் விருது வாங்கும் நிலை ஏற்படும் என்றார் ரஹ்மான்.

thanks thats tamil

Edited by rathy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விருது கிடைப்பதற்கு முன்னதாகவே பேட்டியொன்றில் ஜெய் கோ விற்கு கிடைக்கலாம் என்ற கணிப்பை வெளியிட்டு ரகுமான் மியாவின் நம்பிக்கையில் மண்ணை அள்ளி

கொட்டிவிட்டார்

ராவிஸ் ஸ்மைலி பேட்டியில் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் எம் பிரச்சனையை ஆரம்பித்து அதுவே பேட்டியின் மையப்பொருள் ஆக்கி விட்ட மியா அருள் பிரகாசம்

பாராட்டிற்குரியவர்..

உந்தன் தேசத்தின் குரல் தொலைதூரத்தில்.........பாட்டின் மூலம் ரகுமான் மீதிருந்த அபிமானம் ஆஸ்கார் வென்ற போது ஒரு தமிழன் வென்றான் என்ற பெருமிதம் இலேசாக

மனதில் வந்தாலும்,நாளுக்கு நாள் ஏற்படுமிழப்புகளை எண்ணுகையில்,அருகில் கூப்பிடு தூரத்தில் ஒரு மாநிலம், தமிழ்நாடு அதன் முதலமைச்சர் ,ஆறரைக்கோடி தமிழர்

இருந்தும் கையாகாலாத்தனத்தை எண்ணி உளம் வருந்தியே மனம் புண்ணாகி விட்டது .

இத்தனை வலுவிருந்தும் சுயநலத்தால் செய்ய துணியாத கருணை அற்ற நிதியை பாருங்கள்,ரகுமானை மறந்து விடுங்கள்.

உந்தன் தேசத்தின் குரல் தொலைதூரத்தில் அதோ, செவியில் விழாதா

சொந்த நாடு உனை அழைக்குதடா தமிழா............

வசம்பு அண்ணா. ஒஸ்கார் மேடையில் அரசியல் பேசுவது புதிதுமல்ல கௌவரக்குறைச்சலும் அல்ல. ஏற்கனவே சிலர் ஈராக் பிரச்சினைபற்றியும் வேறு பல பிரச்சினைகள் பற்றியும் பேசியுள்ளார்கள். உதாரணத்திற்கு சில

இதையெல்லாம் சொல்வதால் ரகுமானை எதிர்க்கிறோம் என்று அர்த்தமல்ல.. எல்லாம் ஒரு ஆதங்கம்தான். அவர் மட்டும் ஒரு குரல் கொடுத்திருந்திருந்தால் உலக மக்களின் கவனம் எங்கள் பக்கம் வந்திருக்கும்.

நன்றி வசி உங்கள் கருத்திற்கு. பொதுவாகவே ரஹ்மான் கூச்ச சுபாவமுள்ளதோடு அதிகம் பேசாதவர். முதன்முதலில் ஒஸ்கார் மேடையில் அவர் விருது வாங்கும் போது அவரது பதட்டம் எந்தளவில் இருந்திருக்கும் என்பதை மனிதனாகவுள்ள எவரும் புரிந்து கொள்ள முடியும். அவரே தனது நிலையைப் பற்றி “நிகழ்ச்சிக்கு முதல்நாள் சரியாகத் தூங்கவுமில்லை, அத்துடன் முதலில் 4 மணி நேரம் பின்பு 2 மணி நேரமுமாக மொத்தம் 6 மணி நேரம் பயிற்சி எடுத்திருந்ததாக“ கூறியுமுள்ளார். இந்த நிலையில் அவர் எம்மைப் பற்றி குரல் கொடுக்கவில்லை என எப்படி எதிர்பார்க்கலாம்.

நீங்கள் இணைத்த காணொளியில் ஒரு இனத்திற்காக குரல் கொடுத்தவர்களின் கருத்தால், அந்த இனத்திற்கு அதனால் ஏதாவது விடிவு கிடைத்து விட்டதா?? அவ்வளவு பிரபலமானவர்கள் குரலிற்கே இந்த நிலையென்றால் ரஹ்மானின் குரல் எம்மாத்திரம்??

மேலும் ஒரு இனத்திற்காக குரல் கொடுத்தவர்கள் கூட தாமாக விரும்பியே அதனைச் செய்திருக்கின்றார்கள். எவரினதும் திணிப்பாலோ அல்லது மிரட்டலாலோ அதைச் செய்யவில்லை. ரஹ்மான் எமக்காக் குரல் கொடுத்திருக்கலாமென்ற ஆதங்கத்தை வேண்டுமானால் எமது வருத்தமாகத் தெரிவித்திருக்கலாம். ஆனால் இங்கு வினவு உட்பட சிலர் செய்வதென்ன?? ரஹ்மானுக்கு விருது கிடைத்த போது எமக்காக குரல் கொடுக்கவில்லையென்பதற்காக கிண்டல் செய்திருக்கின்றார். இதன் மூலம் அவரின் ஆதரவை நா ம் பெற்றுவிட முடியுமா?? மாறாக எதிர்ப்பைத் தான் உருவாக்குகின்றோம். முரளி முதல் ரஹ்மான் என்று இந்தப் பட்டியல் தொடரத் தான் போகின்றது. இதனால் நாம் என்ன சாதித்தோம். மாறாக எங்கள் அணுகுமுறையில் உள்ள தவறுகளை ஏன் சிலர் சிந்திக்க மறுக்கின்றார்கள். இன்று எமக்காக குரல் கொடுக்க எவரும் முன்வரவில்லையென்றால் ஏதோ எம் அணுகுமுறையில் தவறு உண்டென்று தானே அர்த்தம். உலகில் எந்த ஒரு இனத்திற்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டதில்லையே. ஒவ்வொரு இனத்தின் போராட்டத்தின் போதும் ஏதாவதொரு நாடோ அல்லது பல நாடுகளோ உதவியது தான் வரலாறு. ஆனால் எமக்கு?? முதலில் எமது தவறுகளைத் திருத்துவோம், பின்பு அடுத்தவர் தவறுகளைச் சுட்டிக் காட்டலாம்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு இனத்தின் போராட்டத்தின் போதும் ஏதாவதொரு நாடோ அல்லது பல நாடுகளோ உதவியது தான் வரலாறு. ஆனால் எமக்கு?? முதலில் எமது தவறுகளைத் திருத்துவோம், பின்பு அடுத்தவர் தவறுகளைச் சுட்டிக் காட்டலாம்.

மிக மிக ஆத்மார்த்தமான பதில்... எப்போதும் இன்னொருவரில் குறைகாண்கிறதே நம் வேலையாக தற்காலங்களில் நடக்கிறது. அவர் அந்தளவு அவருக்கெதிராக எத்தனை பிரச்சனைகள் கிளம்பியபோது (பம்பாய் திரைப்படம்) ஈழத்தமிழர்கள் என்ற போர்வையில் என்ன செய்தீர்கள்??? முரளிக்கு அவுஸ்திரேலியாவில் பிரச்சனை எழுந்தபோது யார் கண்டனம் தெரிவித்தீர்கள்??? ஒரு அறிக்கையாவது?????????ஃ

நாம் எதுவும் செய்யமாட்டோம். ஆனால் எதிர்பார்ப்புக்களை மட்டும் அடுக்கிக்கொண்டே போவோம்.......... நல்லாயிருங்கப்பா........

ஒரு தமிழ் வரி உலக அரங்கில் ஒலித்திருக்கிறது. சந்தோசப்படுவதை விடுத்து ஆதங்கப்படுகிறீர்களே... இது தான் மறத்தமிழனின் மாண்போ????

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற விவாதம். ஆதங்கங்கள் இருக்கலாமே தவிர, வினவு போன்று வெறுப்பினை உமிழ்வது சரியல்ல. இன்று செய்யவில்லையெனில் நாளை செய்யப் பரிந்துரைப்போம். அது தான் நமக்குத் தேவை.

மிக மிக ஆத்மார்த்தமான பதில்... எப்போதும் இன்னொருவரில் குறைகாண்கிறதே நம் வேலையாக தற்காலங்களில் நடக்கிறது. அவர் அந்தளவு அவருக்கெதிராக எத்தனை பிரச்சனைகள் கிளம்பியபோது (பம்பாய் திரைப்படம்) ஈழத்தமிழர்கள் என்ற போர்வையில் என்ன செய்தீர்கள்??? முரளிக்கு அவுஸ்திரேலியாவில் பிரச்சனை எழுந்தபோது யார் கண்டனம் தெரிவித்தீர்கள்??? ஒரு அறிக்கையாவது?????????ஃ

நாம் எதுவும் செய்யமாட்டோம். ஆனால் எதிர்பார்ப்புக்களை மட்டும் அடுக்கிக்கொண்டே போவோம்.......... நல்லாயிருங்கப்பா........

ஒரு தமிழ் வரி உலக அரங்கில் ஒலித்திருக்கிறது. சந்தோசப்படுவதை விடுத்து ஆதங்கப்படுகிறீர்களே... இது தான் மறத்தமிழனின் மாண்போ????

உண்மைதான் அன்பன்.

ஏகப்பட்ட தவறுகளை நாம் செய்கிறோம்.

இருந்தாலும் அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள நினைப்பது கூட இல்லை.

ஆனால் அதை நியாயப்படுத்த மீண்டும் மீண்டும் தவறுகளை தொடர்ந்து செய்கிறோம்.

ரகுமான் விடயத்தில் மட்டுமல்ல பல விடயங்களில்?

தற்போது சண் மற்றும் கலைஞர் தொலைக் காட்சியை புறக்கணியுங்கள் என்பதும்

மற்றொரு முட்டாள் தனமான செயல்.

ஈழத் தமிழருக்கு ஆதரவான பலர் இந்த தொலைக் காட்சிகளில் பணிபுரிகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஆதரவுக் குரல்களுக்கு சார்பாக எதையும் காட்ட முடியாது இருந்த போதும்

எதிராக அவர்கள் இல்லாமல் இருப்பது நமக்கு பெரிய ஆறுதல்?

அதையாவது காப்பற்ற அறிவு வேண்டும்.

அப்படியான ஒரு நிலையை

நாம் எதிர்ப்போர் நமக்கு எதிராக எடுத்தால்

நிச்சயம் கல்லும் கரையும் என்பது போன்ற நிலைக்குத் தள்ளப்படும்.

ஊடகவியலாளர்களால் எதையும் செய்ய முடியும்.

அது தொலைக்காட்சியால் இல்லாவிட்டாலும்

வேறு ஒரு பகுதியால் : அதாவது பத்திரிகை - சஞ்சிகை போன்றவற்றால்

அப்படியான நிலையை அவர்களால் உருவாக்க முடியும்.

எல்லாமே ஒன்றுக்குள் ஒன்றுதான்.

நாம் விரும்புவதை அடுத்தவன் செய்ய வேண்டும் எனும் மனம் கொண்டவர்கள் நாங்கள்.

உலகம் மாறிவிட்டது.

என் விருப்பம் உன் விருப்பமல்ல.

உனக்கு விரும்பியதை நீ செய் எனும் நிலை.

எனவே வினவு போன்றவர்கள் எமக்கு ஆதரவானவர்கள் என்பதால்

அவர்கள் சொல்வதெல்லாம் தேவ வாக்காக முடியாது.

அப்படியான அனைத்து கருத்துகளுக்கும்

தலையாட்டுவது ஆபத்தானது?

ரகுமான் ஈழத் தமிழருக்கு எதிராக ஏதாவது பேசினாரா?

இல்லையே?

நமக்காக பேசவில்லை என ஆதங்கப்படுகிறோம்.

ஈழத்தில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று

நாம் சாப்பிடவில்லையா?

கொண்டாட்டங்களை நடத்தவில்லையா?

தொலைக் காட்சி பார்க்கவில்லையா?

அழுது கொண்டேயிருக்கிறோமா?

எத்தனை காலமாக இது தொடர்கிறது?

அண்மையில் ஜெனிவாவில் நடந்த நிகழ்வை

தொலைக் காட்சியில் பார்த்த போது

மனது வெறுத்துப் போனது.

ஐநா முற்றத்தில் கூட எமக்கு உதவுங்கள்

எமது மக்களை காப்பாற்றுங்கள் என்று கோஸமிடச் சென்றவர்கள்

பாட்டு போட்டு ஆடுகிறார்கள்?

என்ன கொடுமை?

தவிரவும் ஐநாவை மன்னிப்பு கேட்க வைப்போம் என்று வேறு பேசுகிறார் ஒரு இளைஞர்.

ஐநா என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள் ஐநா முற்றத்தில் நின்று எதை சாதிக்க முடியும்?

வல்லரசுகளே ஐநாவின் அனுமதி பெற்றே சிலவற்றை செய்கின்றன.

அப்படியிருக்கும் போது நமது அரசியல் ஞானம் எங்கே இருக்கிறது?

கவனயீர்ப்பு போராட்டத்தில்

ஆடப் போறீங்களா?

பாட்டு போடவா என்று கேட்டு ஆடுகிறார்கள்.

ஆனால் அந்த செயலின் தாக்கம் என்பது

அங்கு சாகும் மக்களை நினைத்து

இவர்கள் சந்தோசப்படுகிறார்கள் போல என

மேலத் தேசத்தவர்களை நினைக்க வைக்கக்கூடும்.

அவர்கள் அனைத்தையும் அவதானிக்கிறார்கள் என்பதை மறக்கலாகாது.

இதேபோல

நாம் ஒரு காலத்தில் தென் இந்திய திரைப்படங்களை தடை செய்தோம்.

பின்னர் அதை மாற்றிக் கொண்டோம்.

அதை அவர்கள் மறந்து விட்டார்கள்.

அதனால்தான் கலைஞர்கள் ஈழத்தமிழருக்காக பேசுகிறார்கள்.

நாம் எதையும் மறப்பதுமில்லை. மன்னிப்பதுமில்லை.

பழி வாங்குவதே நமது குறிக்கோள்.

அது ஆதரவை விட எதிர்ப்புகளையே உருவாக்குகிறது.

அதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

காலம் கடந்து சிந்திப்பதில் எதுவித பலனுமில்லை.

அதை இப்போதே சிந்திக்க வேண்டும்.

ஒரு கலைஞனது வளர்ச்சிக்காக யாரும் உதவுவதில்லை.

ஏன் தனி மனிதன் தொடர்பாகவும் இதே கருத்துதான்.

ஆனால் அவன் ஏதாவது வென்ற பிறகு

அவன் எமக்காக இல்லை என அவனை தாக்க முற்படுகிறோம்.

அண்மையில் மாயா குறித்த கருத்துகள் யாழ் களத்தில் வந்தன.

என்னென்னவோ பேசினார்கள்....

அவர் வெற்றி பெறவில்லை என்ற போது

யாரும் பேசவேயில்லை?

இதுதான் உலகம்? :unsure:

எதிரிகளை உருவாக்குவதை விடுத்து

நண்பர்களை உருவாக்க முயலுவோம்.

நாம் பலமாக இருப்பதாக நினைத்து செய்த தவறுகளை

இனியாவது தொடராது இருப்போம்.

அதுவே நாளைக்கு பலன் தரும்.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவன்...மற்றவையால் பிழை பிடிக்கினம் எண்டு சொல்லுற நீரே ..இவ்வளவு பந்தி பந்திய எழுதினது முழுக்க முழுக்க பிழைபிடிப்பு தானே.??

ஊரில அதிபர் வேலையே பார்த்தநீர்??..

கவன ஈர்பில சில தேவைப்படாத விடயங்கள் நடந்தால் அதை உடனடியாக அதை ஒழுங்கு செய்தவர்களின் கவனத்திருக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்,,,அதைவிட்டு இங்கவந்து கவலைப்படுவது எதுக்குமே லாயக்கில்லாத வேலை..

இதில வினவு என்னத்தை பிழையா சொல்லிப்போட்டார்??

அது அவருடைய ஆதங்கம்..இது ரகுமானின் கவனத்திற்கும் போகபோவது இல்லை...

அவருடைய ஆதங்கத்தை மட்டும்தான் வெளிப்படுத்தி உள்ளார்..எதிர்ப்பை அல்ல...

அதை நீர் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஐநா வுக்கு முன்னால கொஞ்சம் அறிவு குறைஞ்ச ஆக்கள் போகினம் எண்டா...உங்களை மாதிரி கொஞ்சம் அறிவு கூடின ஆக்கள் போய் நிக்க வேண்டியது தானே??

எல்லாவற்றிலும் குற்றம் குறை கண்டு பிடிப்பது சரியான எளிது..அன்ன ஒரு நூறு பேரை வச்சு ஒரு சின்ன ஒரு விழாவோ அல்லது ஒரு கவன ஈர்போ செய்து பாரும்,.,பிறகு தெரியும்..

இப்படி கூட அறிவு ஜீவிகள் மாதிரி கதைக்கிற உங்களை மாதிரி ஆக்கள் அடுத்தவனை குறை சொல்லாம தலைமைத்துவத்தை நீங்கலாக எடுத்துக்கொண்டு மற்றவைகளை வழி நடத்துவதுதான் உருப்படியான வேலை......

தலைவன்...மற்றவையால் பிழை பிடிக்கினம் எண்டு சொல்லுற நீரே ..இவ்வளவு பந்தி பந்திய எழுதினது முழுக்க முழுக்க பிழைபிடிப்பு தானே.??

ஊரில அதிபர் வேலையே பார்த்தநீர்??..

கவன ஈர்பில சில தேவைப்படாத விடயங்கள் நடந்தால் அதை உடனடியாக அதை ஒழுங்கு செய்தவர்களின் கவனத்திருக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்,,,அதைவிட்டு இங்கவந்து கவலைப்படுவது எதுக்குமே லாயக்கில்லாத வேலை..

இதில வினவு என்னத்தை பிழையா சொல்லிப்போட்டார்??

அது அவருடைய ஆதங்கம்..இது ரகுமானின் கவனத்திற்கும் போகபோவது இல்லை...

அவருடைய ஆதங்கத்தை மட்டும்தான் வெளிப்படுத்தி உள்ளார்..எதிர்ப்பை அல்ல...

அதை நீர் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஐநா வுக்கு முன்னால கொஞ்சம் அறிவு குறைஞ்ச ஆக்கள் போகினம் எண்டா...உங்களை மாதிரி கொஞ்சம் அறிவு கூடின ஆக்கள் போய் நிக்க வேண்டியது தானே??

எல்லாவற்றிலும் குற்றம் குறை கண்டு பிடிப்பது சரியான எளிது..அன்ன ஒரு நூறு பேரை வச்சு ஒரு சின்ன ஒரு விழாவோ அல்லது ஒரு கவன ஈர்போ செய்து பாரும்,.,பிறகு தெரியும்..

இப்படி கூட அறிவு ஜீவிகள் மாதிரி கதைக்கிற உங்களை மாதிரி ஆக்கள் அடுத்தவனை குறை சொல்லாம தலைமைத்துவத்தை நீங்கலாக எடுத்துக்கொண்டு மற்றவைகளை வழி நடத்துவதுதான் உருப்படியான வேலை......

நாங்கள் இங்கே யார் தவறு என்று குற்றப் பத்திரிகை தயாரிக்க வரவில்லை.

நாம் தொடர்ந்தும் தவறு செய்யக் கூடாது என்று ஒரு கருத்தை மட்டுமே முன்வைத்திருக்கிறேன்.

இதில வினவு என்னத்தை பிழையா சொல்லிப்போட்டார்??

அது அவருடைய ஆதங்கம்..இது ரகுமானின் கவனத்திற்கும் போகபோவது இல்லை...

அப்படியா?

அப்போ அதை அவர் தனியே எழுதிப் படிக்கட்டும்.

இங்கே ஏன் பிரசுரிக்க வேண்டும்.

அதை படிக்க எங்களுக்கு என்ன தேவை? :)

ஐநா வுக்கு முன்னால கொஞ்சம் அறிவு குறைஞ்ச ஆக்கள் போகினம் எண்டா...உங்களை மாதிரி கொஞ்சம் அறிவு கூடின ஆக்கள் போய் நிக்க வேண்டியது தானே??

இதுதான் நமது பிரச்சனை.

ஜனநாயகம் பேசும் நாங்கள் அடுத்தவன் பேசக் கூடாது என கடும் கருத்துகளை வைக்கிறோம்.

ஆனால் நமக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது என்று கத்துகிறோம்?

நாங்கள் சொல்லுறதை மந்தை போல கேள்.

உன் கருத்து தேவையற்றது.

இதுதான் நமது நிலைப்பாடு என்கிறோம்.

இதுதான் நமக்கும் உலக அரசியலுக்கும் உள்ள வேறுபாடு?

இதனால்தான் நாம் யாருமில்லாமல் இன்று தனியாக கையை பிசைந்து கொண்டு நிற்கிறோம்?

ஒரு மனிதனை அடித்து உதவி பெறலாம் என்று நினைக்கிறோம்.

அது வெருட்டி அடிபணிய வைப்பது. அது தொடராது.

ஒரு சாதாரண மனிதனிடமே அன்பை பெற முடியாது.

அப்படி இருக்கும் போது இவை சாத்தியமா?

நான் அந்த நாட்டில் இல்லாததால்

தொலைக்காட்சியில் பார்த்ததை வைத்தே எனது கருத்தை முன் வைத்தேன்.

அங்கு இருந்தாலும் மேடையில் ஏறி அவர்களை பேசாதே என்று சொல்ல முடியாது.

அதை ஒழுங்கு செய்வோர் என்ன வரையறைக்குள் பேசுவது

என்ன செய்வது என தெரிந்து செய்ய வேண்டும்.

அல்லது

தமிழர் விடுதலைக் கூட்டணியினர்

ஆரம்ப காலத்தில் இளைஞர்களை தவறாக வழி நடத்தி

அதே இளைஞர்களால் கொல்லப்பட்டது போன்ற ஒரு நிலை

புலம் பெயர் தேசங்களிலும் தவறாக வழிநடத்துவோருக்கு உருவாகும்.

மேலத்தேசங்களில் அரசியல் கற்றோர் அரசியலில் இருக்கின்றனர்.

கண்டவன் நின்றவன் எல்லாம் அரசியல் பண்ணுவதில்லை.

நாம் இங்கே எங்கு நிற்கிறோம்?

நம் இளைஞர்களை நமது தேவைகளுக்காக பகடைக் காய்களாக பயன்படுத்த முனைகிறோம்.

இது ஒரு நாள் ஆபத்தில் முடியும்?

அந்த அரசியல் அறிவை அல்லது ஒரு கட்டுப்பாட்டை உருவாக்காது

செய்யும் கண்மூடித்தனமான உணர்வுகள் மிக ஆபத்தானவை.

அதை இப்போதே சரி செய்ய வேண்டும்.

பெரியோர்கள் அவர்களை வழி காட்ட வேண்டும்.

இதை பேசுங்கள். இப்படி நடங்கள் என போகு முன் அறிவுரை சொல்ல வேண்டும்.

அல்லது கூட்டத்தை கண்டதும் வரும் உணர்வுகள்

பேசும் பேச்சுகள்

நடைபெறும் வன்முறைகள்

இங்கும் எம்மை பேச விடாது தடுப்பதோடு மட்டுமல்லாமல்

புலம்பெயர் தமிழரின் அழிவாகவும் அமைந்துவிடும்.

இது நிஜம்.

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் தலைமைத்துவம் ஒன்றை உடையவனாகவே இருக்கிறான்.

ஒரு கணவன் குடும்பத் தலைவனாக இருக்கிறான்.

ஒரு தாய் தன் குழந்தைகளை தலைமை ஏற்று கவனிக்கிறாள்.

ஒரு ஆசிரியர் குழந்தைகளை நேர் வழியில் நடத்துகிறார்..............

ஒரு நிர்வாகத்தை ஒருவர் தலைமை ஏற்கிறார்.

இப்படி எத்தனை............தொடர்கிறது???????????

இதற்காக அரசியலில் மட்டும் தலைமை ஏற்போரை மட்டுமே தலைமையேற்பதாக எண்ணுவதா? :D

இது ஒன்றும் செய்தித் தளமில்லை. கருத்துக்களம்.

கருத்துகளை முன்வைக்க முடிகிறது.

தகுந்தவர் விரும்பினால் திருத்திக் கொள்ளட்டும்.

இல்லாவிட்டால் தொடரட்டும்.

அது அவரவர் விருப்பம்.

Edited by Thalaivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.