Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்கள் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ண பாவம். சுப்பண்ண.. அவர்கள் (பெண்கள்) சொல்லுறதை வேதவாக்கா கேட்டு அடங்கிப் போயிடுங்க. நீங்கள் சொல்லி அவர்களுக்கு புத்தில ஏறும் எண்டு நான் நினைக்கல்ல. :rolleyes:

பெண்கள் தங்களை தாங்களே திருத்திக் கொள்ள நிறைய விடயம் இருக்குது. அதைவிட்டிட்டு.. ஆண்கள் மீது பழி பாவத்தைப் போட்டிட்டு.. தப்பிக்கிறது.. அவர்களின் வளர்ச்சிக்கு அணு அளவும் உதவாது. எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கூட அவர்களிடம் இல்லை..! ஆண்களுக்கு குறைந்தது சொல்வதை கேட்கும் பக்குவமாவது இருக்கிறது. அதனால் தான் பல குடும்பங்கள் இன்னும் விவாகரத்தின்றி இயங்க முடிகிறது..! :unsure:

Edited by nedukkalapoovan

  • Replies 61
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

எப்பண்ணா வந்ததென்னு எனக்கும் தெரியலை என்னார்

எப்பண்ணா வந்ததென்னு எனக்கும் தெரியலை என்னார்

அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள்தானா அண்ணா

அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள்தானா அண்ணா

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

மாடிவீட்டை பார்த்ததுண்டு மாடிப்படி ஏறியதில்லை

மாடிவீட்டை பார்த்ததுண்டு மாடிப்படி ஏறியதில்லை

பூட்டிவைக்க நோட்டும் இல்லே மாட்டிக்கிட்டு முழிச்சதில்லே

பூட்டிவைக்க நோட்டும் இல்லே மாட்டிக்கிட்டு முழிச்சதில்லே

சாலையிலே துண்டைவிரிப்போம் காலையிலே கண்ணைவிழிப்போம்

சாலையிலே துண்டைவிரிப்போம் காலையிலே கண்ணைவிழிப்போம்

மூலையிலே வாழ்வுநடக்குது பிள்ளை பிறக்குது வஞ்சனை இல்லாமே

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

தாயிடத்தில் பாலுமில்லை தந்தைமுகம் பார்க்கும்பிள்ளே

தாயிடத்தில் பாலுமில்லை தந்தைமுகம் பார்க்கும்பிள்ளே

காய்ந்துவிட்ட பொஞ்சாதியை கண்கலங்கிப்பார்க்கும் தந்தை

காய்ந்துவிட்ட பொஞ்சாதியை கண்கலங்கிப்பார்க்கும் தந்தை

ஊர்முளுக்க வாடுதப்பா ஒண்ணு ரெண்டு வாழுதப்பா

ஊர்முளுக்க வாடுதப்பா ஒண்ணு ரெண்டு வாழுதப்பா

சோசலீசபாடலை கேக்கிறோம் பானையை பாக்கிறோம் ஒன்னையும் கானோமே

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

நாம ஒரு மூச்சுவிட்டா நாடு எங்கோ பறக்குமப்பா

நாம ஒரு மூச்சுவிட்டா நாடு எங்கோ பறக்குமப்பா

காலம் ஒன்று பிறக்குமப்பா காலில் வந்துவிழுகுமப்பா

காலம் ஒன்று பிறக்குமப்பா காலில் வந்துவிழுகுமப்பா

ஆனவரைவேலைசெய்வோம் ஆண்டவனைவேண்டீயிருப்போம்

ஆனவரைவேலைசெய்வோம் ஆண்டவனைவேண்டீயிருப்போம்

நல்லவர்கள் கெட்டதுமில்லே பட்டதுமில்லே நம்பிக்கைகொள்வோமே

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

Edited by பாடகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களுக்கு சரி சமமாக பெண்களும் சாதனை செய்கிறார்கள் நான் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் ஆண்களின் சாதனையோடு ஒப்பிடுகையில் பெண்களின் சாதனைகள் ஒப்பிட்டளவில் குறைவு என்று தான் சொல்கிறேன்.

நான் சொன்ன கருத்துக்கள் எதற்குமே நீங்கள் பதில் தர தயாராகவில்லை ஓன்று நீங்கள் அந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் இல்லை நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று இருக்கவேண்டும்.பெண்களின் சாதனைகள் ஒப்பீட்டளவில் குறைவு என்றால் நாங்கள் என்ன செய்வது அதை பெண்கள் தானே சரி செய்யவேண்டும் பல பெண்களுக்கு முகத்துக்கு அது இது பூசி உதட்டுக்கு ஒவ்வொரு கலர் அடித்து விதம் விதமாக காலனி அணிந்து வித்தியாசமான ஆடைகள் என்று சொல்லப்படும் கஞ்சாடைகள் அணியவே நேரம் சரியாக இருக்கிறதுபோல அதனால பெண்கள் சாதனை செய்யவில்லையாக்கும்.இதற்கும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ண பாவம். சுப்பண்ண.. அவர்கள் (பெண்கள்) சொல்லுறதை வேதவாக்கா கேட்டு அடங்கிப் போயிடுங்க. நீங்கள் சொல்லி அவர்களுக்கு புத்தில ஏறும் எண்டு நான் நினைக்கல்ல. :lol:

பெண்கள் தங்களை தாங்களே திருத்திக் கொள்ள நிறைய விடயம் இருக்குது. அதைவிட்டிட்டு.. ஆண்கள் மீது பழி பாவத்தைப் போட்டிட்டு.. தப்பிக்கிறது.. அவர்களின் வளர்ச்சிக்கு அணு அளவும் உதவாது. எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கூட அவர்களிடம் இல்லை..! ஆண்களுக்கு குறைந்தது சொல்வதை கேட்கும் பக்குவமாவது இருக்கிறது. அதனால் தான் பல குடும்பங்கள் இன்னும் விவாகரத்தின்றி இயங்க முடிகிறது..! :icon_idea:

அடங்கி எல்லாம் போகேலாது நெடுக்ஸ், :) உண்மையை நியாயத்தை சொல்வது கடமை அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் விடுவதும் அவர்கள் விருப்பம்.எது விளங்கினாலும் அதை அவர்கள் ஏற் றுக்கொள்ளமாட்டர்கள் என்று எங்கு நன்றாக தெரியும்.ம் பெண்கள் தம்மை மாற்றிக்கொள்ள நிறைய இருக்கிறது

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு

பாடகா இந்த பாடலை முன்பும் எங்கோ கேட்டதாக நினைப்பு,நன்றி. அதுசரி இந்த பாட்டை இங்க ஏன் சொன்னீர்கள் :unsure: ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணா நான் இப்பவும் சொல்கிறேன் பெண்களின் பிரச்சனைக்கு பெண்களும் ஒரு காரணம் என்றால் அந்த பெண்கள் பின்னால் கோழையாக ஒளிந்திருக்கும் ஆண்களும் ஒரு காரணமாகும்.

இத்துடன் இத் தலைப்பை முடித்து கொள்வோம் தேவையில்லாமல் எமக்குள் சண்டை வேண்டாம்.நான் எழுதியது உங்கள் மனதை பாதித்திருந்தால் என்னை மன்னிக்கவும்.

//நீங்கள் ஊரில் ஏதோ கிராமத்தில் இருப்பிங்கள் ஆனால் கேட்கிறது கனடா மாப்பிள்ளை //

நீங்களும் பர்சனலாகத் தான் எழுதினிங்கள் ஆனால் நான் கோவிக்கவில்லை அத்தோடு நான் கனடாவிலும் இல்லை.

Edited by rathy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடகா இந்த பாடலை முன்பும் எங்கோ கேட்டதாக நினைப்பு,நன்றி. அதுசரி இந்த பாட்டை இங்க ஏன் சொன்னீர்கள் :unsure: ?

Edited by பாடகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடகா இந்த பாடலை முன்பும் எங்கோ கேட்டதாக நினைப்பு,நன்றி. அதுசரி இந்த பாட்டை இங்க ஏன் சொன்னீர்கள் :unsure: ?

சுப்பண்ணை,

இதை நான் இணைத்தது நானும் பாத்துகொண்டுதான் இருக்கேன் என்றுதான்...................!

இது சம்மந்தபட்டவருக்கு தெரியும்! ஒரு பெண் எழுத்தாளர்!!!??? ஒரேபெயரில் எழுதாமல் வேறுபெயரில் எழுதுவது எதற்கு? ஒண்டு ஒண்டரை பேப்பர்களில் "புலம்பெயர் நாடுகளில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை அவலங்களை தான்தான் வெழிக்கொண்டுவருவதாக

நினைக்கும் இவர்!"

இவர் யார்? என்று யாழ்இணையத்தில் எல்லோருக்கும் தெரியும்!

பச்சோசாந்தி அக்காக்களை அடையாளம் காணுங்க சுப்பண்ணை :icon_idea:

என்னது சாந்தியா? சொல்லுங்கோ வேறு என்ன சொல்லப் போறீங்க சொல்லுங்க கருத்தை கருத்தால் வெல்ல முடியாத உங்களை போன்ற ஆண்கள் இது தான் செய்வார்கள். உங்களாலே முழு ஆண் வர்க்கத்திற்கும் அவமானம்.பெண்ணுரிமை பற்றி சாந்தி மட்டும் தான் கதைக்கோனுமா மற்றவர் கதைக்க கூடாதா? நான் ரதி தான். நான் யாழில் ரதி என்ர பேரில் மட்டும் தான் எழுதிறேன்.உங்களை மாதிரி இரு பேரில் எழுதும் அவசியம் எனக்கு இல்லை.மற்றவர்களை அவமானப் படுத்துவதற்காகவே இரண்டாவது பெயரைப் பயன்படுத்துவீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணா நான் இப்பவும் சொல்கிறேன் பெண்களின் பிரச்சனைக்கு பெண்களும் ஒரு காரணம் என்றால் அந்த பெண்கள் பின்னால் கோழையாக ஒளிந்திருக்கும் ஆண்களும் ஒரு காரணமாகும்.

எல்லா பெண்களின் பின்னுக்கு கோழையாக ஒளிந்திருப்பது ஆணா?? :icon_idea:

பிள்ளை ரதி பெண்களை பற்றி கூறினீர்கள் ஆனால் அவர்கள் திருமணமானவர்களா? அல்லது திருமணமாகதவர்களா? திருமணம் ஆகவில்லையானால் அந்த பெண்ணில் பின்னால் ஒளிந்திருப்பது யாரு?????

திருமணம் ஆகவில்லையாயின் அவர் பின்னால் ஒளிந்திருபது யாருங்கோ :unsure:

திருமணமானவளாக இருந்தால் அவளுக்கு பின்னால் இருப்பதுவும் அவள்தான் ஏனென்றால் திருமணமான பின்பு எடுக்கும் முடிவுகள் யாவும் அவளை சார்ந்தவையாக இருக்கும் உதாரணம் நகைகடைக்கு போய் ஒரு நகைவேண்டிவருவது அடுத்த நாள் அந்த நகையின் விலை குறந்தால் வீட்டில் இருந்து புலம்புவது கூட பெண்த்தான் பாருங்கோ கல்யாணம் கட்டியபின்பு சில ஆண்கள் பொண்டாட்டிகளாகவும் சில பெண்கள் கணவர்களாகவும் நடந்து கொள்கிறர்கள் பின்னர் தனக்கு ஏதும் நிகழும் போது ஆண்கள் மீது குற்றம் சாட்டுவது நல்லா இருக்கே உங்கள் கதை சும்மாவா சொன்னான் பெண் புத்தி பின் புத்தி என்று :icon_idea::huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது சாந்தியா? சொல்லுங்கோ வேறு என்ன சொல்லப் போறீங்க சொல்லுங்க கருத்தை கருத்தால் வெல்ல முடியாத உங்களை போன்ற ஆண்கள் இது தான் செய்வார்கள். உங்களாலே முழு ஆண் வர்க்கத்திற்கும் அவமானம்.பெண்ணுரிமை பற்றி சாந்தி மட்டும் தான் கதைக்கோனுமா மற்றவர் கதைக்க கூடாதா? நான் ரதி தான். நான் யாழில் ரதி என்ர பேரில் மட்டும் தான் எழுதிறேன்.உங்களை மாதிரி இரு பேரில் எழுதும் அவசியம் எனக்கு இல்லை.மற்றவர்களை அவமானப் படுத்துவதற்காகவே இரண்டாவது பெயரைப் பயன்படுத்துவீங்களா?

என்ன கொடுமையடா :lol:

கருத்தை கருத்தால் வெல்லமுடியாதா :icon_mrgreen:

யாரு உங்களுடனா? மேலே சுப்பண்ணை உங்களை கேட்ட கேள்விகள் பல... ஏதாவது ஒன்றுக்கு சரியான பதில் சொல்லியிருக்கீங்களா?

நீங்களே போய் உங்கள் பதில்களை பாருங்க!!!

இப்படியான சொதப்பல் திலகத்துடன் எப்படி கருத்தாடுவது :lol:

கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தருவதாயின் நானும் உங்களுடன் கருத்தாட வருவேன்!

மற்றும் நான் இரண்டு பெயரில் வருவதாக சொன்னீங்க?

நீங்கள் சொல்வது உண்மைதான் ஒத்துக்கொள்கிறேன்.

அதேநேரம் இப்படியான சூழலை எனக்கும் பலருக்கு உருவாக்கிகொடுத்தது உங்களைபோல் தான்பிடித்தமுயலுக்கு மூனுகால் என்பவர்களால்தான் :blink:

ஒரு எழுத்தாளன் தனது ஆக்கத்தை இங்குபிரசுரிக்கும்போது பலவிமர்சனங்கள் வரும் அதை எதிர்கொள்ளத்தைரியம் இல்லை எனில் அதை ஏன் இங்கு இணைக்கனும் :wub:

யாழில் இணையத்தில் நடப்பதென்ன?

தனது ஆக்கத்துக்கு தானே வேறு பெயரில் வந்து வாழ்த்துச்சொல்வது!

தனக்கு தெரிந்தவரிடம் தனது ஆக்கத்தையே அடிக்கடிபோய் பார்க்கும்படி சொல்வது.

அப்படி பார்த்தால் எப்பவும் ரொப் 10 இல் முதலாம் இடத்தில் இருக்கும்! எல்லோரும் பாப்பார்கள் என்பது!!

மாற்று கருத்து எழுதினால் அவரது Profile போய்பார்பது தனிமடலில் மிரட்டுவது!!

இல்லையேல் வேறு பெயரில் வந்து திட்டிஎழுதுவது!

இப்படி எழுத்தாளர் திலகங்களே செய்யும்போது! நான் சர்வசாதாரனமானவன் என்னால் முடிந்ததை செய்தேன்!!! :wub:

ம்ம்ம் சாந்தமான அக்கா எனி புத்தகமும் கையுமாய் வந்து என்ன சொல்லபோறாங்களோ?!!! :lol::lol::lol:

[]

நான் முதல் இதை தொடங்கியது அன்னையர் தினத்தில் அன்னைக்கு வாழ்த்து சொல்லத் தானே தவிர ஆண் பெரிசா? பெண் பெரிசா என்று அல்ல.அதில் முதல் விதண்டவாதம் புரிய வந்தது ஆண்களாகிய நீங்களே தவிர நான் இல்லை.

நான் கேட்ட கேள்விக்கெல்லாம் சுப்பண்ணா ஒழுங்காய் பதிலளிருத்திருக்கிறாரா என வாசித்துப் பாருங்கள். முதலில் இருந்து வடிவாய் வாசியுங்கள்.நான் ஏதோ கேட்க அவர் ஏதோ பதிலளிருத்திருக்கிறார்.உங்க

அடங் கொய்யாலே இஞ்சால பெரிய மகாபார்தப் போரே போகுது எனக்குத் தெரியாமப் போச்சுதே! ஆணடிமைய்யா? பெண்ணடிமையா? இல்லை தமிழனடிமையா? ஒரு பட்டிமன்றமே நடக்குது... இங்கு எத்தனை பெண்கள் இருக்கின்றார்கள் யாழ்க்களத்தில் ஆணுக்கு ஆண் தோள் கொடுப்பது போன்று ஏன் ஒரு பெண்ணாவது உங்களுக்குச் சார்பாக குரல்கொடுக்கவரவில்லை? அப்படியானால் நீங்கள் மட்டும் தான் வில்லங்கமா சிந்திக்கின்றீர்கள் ரதி... இல்லை உங்கள் பெண்கள் தரப்பு நியாயங்களைக் கொண்டுவர இங்கே யாழி இருக்கும் அனைத்துப் பெண்களையும் அழையுங்கள் கேளுங்கள் யார் யாருக்கு அடிமை? என்று... ஒரே ஒருவர் இணைந்திருப்பதைப் பார்த்தேன் நிலாமதி அக்கா... அவர்கூட கருத்துக் கூறவில்லைப் பின்னர் ஏன்? அப்படியானால் ஒரு பெண்ணுக்கு இன்னோர் பெண் உதவ முன்வரவில்லை என்பது வெளிப்பாடு... இதிலே எப்படி பெண்சுதந்திரம் பற்றிப் பேசமுடியும்?

சில எனக்குத் தெரிந்த பெண்களை இங்கே குறிப்பிடுகின்றேன் கேளுங்கள் அவர்களையும் வாதிடச்சொல்லிக் கேளுங்கள்...

சியா

சுஜி

அடடா முக்கியமான ஆளு நிலா

சுகானி

சரி ஏதோ தெரிந்த 4பேரைச்சொன்னேன். மீண்டும் சொல்கின்றேன் ஒரு கை ஓசை எழுப்பாது, ஓரணிதிரண்டால் உண்மை இருந்தால் உண்மையே ஜெயிக்கும்....

ஈழத்தவன் எண்டதால் ஒண்டைக் கேக்குறன், எதைச் சுதந்திரம் என்று பெண்களாகிய நீங்கள் கருதுகின்றீர்கள்? தொடைவரை ஆடை அணிவதையா? இல்லை மேற்துண்டு காய திரிவதையா? ஏன் ஆண்களும் தான் இருக்கின்றார்கள், பொது நிகழ்வுகளிலையோ மக்கள் நிறைந்த இடங்களிலையோ ஒழுங்காகத்தானே ஆடை அணிகின்றார்கள். ஏன் பெண்கள் ஆடை விடயத்தில் மெத்தனம்? சரி அதிலே எங்கே சுதந்திரம்? ஒட்டுமொத்த சுதந்திரம் தேவை என்றால் முற்றாக ஆடை அணியாமற் திரிவதே ஓ! அப்படியானால் அவ்வாறான சுதந்திரம் ஒன்றினைத்தான் பெண்கள் எதிர்பார்க்கின்றார்களா? எதனை சுதந்திரம் என பெண்கள் கருதுகின்றீர்கள்? எங்கே உங்களுக்கான அனுமதி இல்லை? எங்கே எந்தச் செயலை செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது? நீங்களே உங்களைத் தாழ்த்துவதால் நீங்கள் சிறுமைப்படவில்லை சிறுமைப்படுத்திக் கொள்கின்றீர்கள் உங்களையே... இதுதான் உண்மை. ஒரு உதாரணத்தை சொல்லவிரும்புகின்றேன் சாதிக்க ஒரு பெண் நினைத்தால் சாதிக்கலாம் இல்லை வேதனைதான் மீதி என்று தலையிற் கைவைத்தால் வேதனைக்கே மீண்டும் தலையிற் கைவைக்க வேண்டிவரும். அடக்குமுறை என்பது திணிக்கப்படும்போது ஆயுதம் கையேறுகின்றது, பாதை மாறிப்போகும்போதுதான் அதிகாரம் தோன்றுகின்றது, பெண்கள் சரியான பாதையில் என்றுமே போய்க்கொண்டு இருந்தால் ஆண்கள் என்றுமே அதிகாரமோ கட்டளைகளோ போடமாட்டார்கள்.

திருமணம் நடக்கிறது கணவன் மனைவியாக வாழ்கின்றனர் குழந்தையும் பிறக்கின்றது, வேலைக்குப் போகும் பெண் தனது கணவரது மகிழூர்ந்தைவிட பல இலட்சம் அதிகமான மகிழூர்ந்து வைத்திருக்கும் அவரது முதலாளி, பணப்பலம் படைத்த அவரின் வலையிற் சிக்கி பின் அவருடன் செல்கின்றார். இதனை முன்னமே கணவனுக்குத் தெரிந்து கேட்டால் சந்தேகம் என்மேலா எனக்கொதிக்கின்றார். இது உண்மையிலேயே ஈழத்துப் பெண் புலம்பெயர் வாழ்வு வாழும் ஒரு பெண்ணின் உண்மைக்கதை.

அவரைத் திருமணம் செய்து புலம்பெயர் நாட்டுக்கு அழைத்து வந்தவரும் அவருக்கான நிரந்தரக் குடியுரிமை வாங்கிக் கொடுத்தவரும், எந்த குடிப்பழக்கமோ பெண்கள் சகவாசமோ இல்லாத அவளது கணவன் இப்போ தினம் குடி. காரணம் யார்? ஆணா? பெண்ணா? அவள் படிப்பதற்கு கூட தனது ஊதியம் கொடுத்து படிக்கவைத்தது அவன் தப்பா இல்லை வேலைக்கு செல்லும்போது போகவேண்டாம் எனத் தடுக்காதது இவன் தப்பா? சரி உனக்குப் பிடித்திருக்கின்றது நன்றிக்கடன் என்று ஒன்று உள்ளதே அது எங்கே போனது? பணம் கொடுத்தாற் போகுமா? அப்பெண் கணவனிடம் கேட்டிருக்கின்றாள் எனக்கான மொத்தச் செலவையும் கூறுங்கள் கணக்கோடு நான் அதனை முழுவதுமாக செற்றில் பண்ணுறேன்... எதனை செற்றில் பண்ணப்போகின்றார் அந்தப் பெண்? இங்கே பெண்ணடிமை எங்கே இருக்கின்றது உண்மையில் ஆண் பெண்ணின் பாசத்தில் அடிமையாக்கப் பட்டுவிட்டான்.

Edited by யாழ்நிலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முதல் இதை தொடங்கியது அன்னையர் தினத்தில் அன்னைக்கு வாழ்த்து சொல்லத் தானே தவிர ஆண் பெரிசா? பெண் பெரிசா என்று அல்ல.அதில் முதல் விதண்டவாதம் புரிய வந்தது ஆண்களாகிய நீங்களே தவிர நான் இல்லை.

நான் கேட்ட கேள்விக்கெல்லாம் சுப்பண்ணா ஒழுங்காய் பதிலளிருத்திருக்கிறாரா என வாசித்துப் பாருங்கள். முதலில் இருந்து வடிவாய் வாசியுங்கள்.நான் ஏதோ கேட்க அவர் ஏதோ பதிலளிருத்திருக்கிறார்.உங்க

[

ஈழத்தவன் எண்டதால் ஒண்டைக் கேக்குறன், எதைச் சுதந்திரம் என்று பெண்களாகிய நீங்கள் கருதுகின்றீர்கள்? தொடைவரை ஆடை அணிவதையா? இல்லை மேற்துண்டு காய திரிவதையா? ஏன் ஆண்களும் தான் இருக்கின்றார்கள், பொது நிகழ்வுகளிலையோ மக்கள் நிறைந்த இடங்களிலையோ ஒழுங்காகத்தானே ஆடை அணிகின்றார்கள். ஏன் பெண்கள் ஆடை விடயத்தில் மெத்தனம்?

யார் இப்படி திரியிறது நிலவன்.. :icon_mrgreen:

திருமணம் நடக்கிறது கணவன் மனைவியாக வாழ்கின்றனர் குழந்தையும் பிறக்கின்றது, வேலைக்குப் போகும் பெண் தனது கணவரது மகிழூர்ந்தைவிட பல இலட்சம் அதிகமான மகிழூர்ந்து வைத்திருக்கும் அவரது முதலாளி, பணப்பலம் படைத்த அவரின் வலையிற் சிக்கி பின் அவருடன் செல்கின்றார். இதனை முன்னமே கணவனுக்குத் தெரிந்து கேட்டால் சந்தேகம் என்மேலா எனக்கொதிக்கின்றார். இது உண்மையிலேயே ஈழத்துப் பெண் புலம்பெயர் வாழ்வு வாழும் ஒரு பெண்ணின் உண்மைக்கதை.

பெண்கள்தான் இப்படி பண்ணுறார்களா நிலவன் ஏன் ஆண்கள் பண்ண் வில்லையா? சும்மா பெண்ணை மட்டும் குறை சொல்லவது சரி இல்லை...

எத்தினையோ ஆணகள் இரண்டு பெண்டாட்டி வைத்து இருக்க வில்லையா>? என்ன ஒன்று பெண்கள் செய்வது வெளியில் வருகுது இதுவே ஆணகள் தப்பு பண்ணினால் அது ஆண் என்று உலகம் சொல்லுது.. :blink:

யார் இப்படி திரியிறது நிலவன்..

யார் திரிகின்றார்களா? யாராவது ஆண்கள் எந்த மொழியினத்திலாவது முழங்காலுக்கு மேலே ஆடையணிந்து பொதுவிழாக்களில் கலந்துகொள்கின்றார்களா? இல்லையே! ஏன் அப்படி இருக்க பெண்கள் மட்டும் தொடைதெரிய உடையும் தோள் தெரிய மடையும் என்று திரிகின்றார்கள்?

எத்தினையோ ஆணகள் இரண்டு பெண்டாட்டி வைத்து இருக்க வில்லையா>? என்ன ஒன்று பெண்கள் செய்வது வெளியில் வருகுது இதுவே ஆணகள் தப்பு பண்ணினால் அது ஆண் என்று உலகம் சொல்லுது..

ஆண்கள் இரண்டை வைத்திருக்கின்றார்கள் முழுதாக வெட்டிவிட்டுப் போகவில்லையே. அது சரி ஒரு மனைவியாக இருந்து அவனுக்குத் தேவையான இன்பமோ துன்பமோ கொடுக்காவிட்டால் கட்டி என்ன பயன்? மனைவி சரியாக அனுசரித்து நடந்தால் ஆண் வெளியிற் போகத் தேவை என்ன? கேளுங்கள் அந்த ஆணிடம் ஏன் இரண்டு வைத்திருக்கின்றாய் காரணம் என்னவென்று...ஆண்கள் இரண்டு வச்சிருந்தா என்ன மூன்று வச்சிருந்தா என்ன வெளியிற் தெரிந்தாலும் ஆணோ பெண்ணோ அது பற்றிப் பேசுவது ஓரளவு குறைவு ஏன் பெண்கள் மட்டும் ஓரளவு வழிதவறினாலும் ஊருக்கு தண்டோராப்போடுவதில் முன்னுக்கு நிற்பது பெண்கள் தானே? கோவிலில் கும்பிடப்போனாலும் ஊர்ப்பேச்சு, இல்லை சாறிப்பேச்சு அப்படி இல்லை எண்டா நகைப்பேச்சு அதை விடுத்து ஊரில சண்டை சனம் கஸ்டப்படுகுது, வியாபாரம் சம்பந்தமாப் பேச்சு எண்டதைக் கண்ணால காணுறதோ காதாலெ கேக்குறதே இல்லை நான். ஒருவேளை என்ர காது பிரச்சனையோ எண்டு நண்பர்களிடம் கேட்டால் அங்கும் அதே பதில்தான்....

Edited by யாழ்நிலவன்

யார் திரிகின்றார்களா? யாராவது ஆண்கள் எந்த மொழியினத்திலாவது முழங்காலுக்கு மேலே ஆடையணிந்து பொதுவிழாக்களில் கலந்துகொள்கின்றார்களா? இல்லையே! ஏன் அப்படி இருக்க பெண்கள் மட்டும் தொடைதெரிய உடையும் தோள் தெரிய மடையும் என்று திரிகின்றார்கள்?

எனக்கு தெரிந்து யாரும் அப்படி திரிவது இல்லை பொது இடம் வளி எல்லாம் அப்படி வருகுறார்களா? யார் சொன்னது நிலவன் இது புது கதை.. உண்மை சொல்ல போனால் பெண்கள் எல்லாரும் புலம் பெயர் நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் சாறி கட்டிதான் கோவிலுக்கு கல்யாணத்துக்கு வருகுறார்கள்.. ஆண்கள் என்றாவது ஒரு நாள் அப்படி வெட்டி கட்டி கொண்டு கோவிலுக்கு இல்லை கல்யாணத்துக்கே வந்து இருக்குறார்களா? :icon_mrgreen:

ஆண்கள் இரண்டை வைத்திருக்கின்றார்கள் முழுதாக வெட்டிவிட்டுப் போகவில்லையே. அது சரி ஒரு மனைவியாக இருந்து அவனுக்குத் தேவையான இன்பமோ துன்பமோ கொடுக்காவிட்டால் கட்டி என்ன பயன்? மனைவி சரியாக அனுசரித்து நடந்தால் ஆண் வெளியிற் போகத் தேவை என்ன? கேளுங்கள் அந்த ஆணிடம் ஏன் இரண்டு வைத்திருக்கின்றாய் காரணம் என்னவென்று...ஆண்கள் இரண்டு வச்சிருந்தா என்ன மூன்று வச்சிருந்தா என்ன வெளியிற் தெரிந்தாலும் ஆணோ பெண்ணோ அது பற்றிப் பேசுவது ஓரளவு குறைவு ஏன் பெண்கள் மட்டும் ஓரளவு வழிதவறினாலும் ஊருக்கு தண்டோராப்போடுவதில் முன்னுக்கு நிற்பது பெண்கள் தானே? கோவிலில் கும்பிடப்போனாலும் ஊர்ப்பேச்சு, இல்லை சாறிப்பேச்சு அப்படி இல்லை எண்டா நகைப்பேச்சு அதை விடுத்து ஊரில சண்டை சனம் கஸ்டப்படுகுது, வியாபாரம் சம்பந்தமாப் பேச்சு எண்டதைக் கண்ணால காணுறதோ காதாலெ கேக்குறதே இல்லை நான். ஒருவேளை என்ர காது பிரச்சனையோ எண்டு நண்பர்களிடம் கேட்டால் அங்கும் அதே பதில்தான்....

இப்படி சொல்லுவது ஒரு சாட்டு.. மனைவி ஒரு குழந்தை பிறந்து விட்டாள் அவள் அழகு இல்லாமல் போயு விடுறாள் என்ற நினைப்பு சில ஆண்கள் வர்க்கத்துக்கு.. அதால நல்ல அழகிய பெண்ணை தேடி போறார்கள்.. ஆண்கள் வெட்டி விடாமல் வைத்து இருந்தால் சரியோ.. அப்ப பெண்களும் அப்படி நினைத்தால் உங்கள் கெதி என்ன் ஆவாது...உங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா.. நம்ம எந்த நூறாண்டில் இருக்குறம் நிலவன்..யாரும் இங்க கோவிலுக்கு போயுட்டு இப்படியான பேசchu பேசுவது இல்லை.. யார் அப்படி பேசினார்கள் என்று நிருபியுங்கள்..

உங்கட கதையைப் பார்த்தா.. ஆண்கள் என்ன செய்தாலும் அதை எல்லாம் திருப்பி நீங்களும் செய்யனும் என்பதுதான் பெண் விடுதலை என்றால்.. நாங்க சேட்டைக் கழற்றிட்டுப் போவம்.. நீங்கள் போவியளா..??! முட்டாள் தனமா பெண் விடுதலைக்கு அர்த்தம் கொடுக்கக் கூடாது.

ஆணோ பெண்ணோ.. ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் நிலையில் தான் குடும்பம் என்ற அலகு பலம்பெறும். அதற்காக ஆணோ பெண்ணோ பொருளாதார ரீதியில் பங்களிக்காமல் இருக்கனும் என்றில்லை. ஒரு குடும்பத்தில் பொருளாதாரம்.. அது ஆண் கொண்டு வந்தால் என்ன பெண் கொண்டு வந்தால் என்ன பொதுவில் வைக்கப்பட வேண்டும். அப்பதான் அந்தக் குடும்பம் விளங்கும்.

ஆனால் பெண்கள் பலர் நாங்கள் உழைக்கிறம்.. எங்கட வழியைப் பார்க்கிறம்.. நீ உன்ர வழியைப் பார் என்ற கதையாத்தான் அளந்து விடினம். முட்டாள் பெண்களே.. ஒன்றைச் சிந்தித்துப் பாருங்க.. அப்ப குடும்பம் என்றதை எவன்.. பொருளாதாரம் கொண்டு கவனிக்கிறது. அன்று தொட்டு இன்று வரை ஆண்கள் தான் குடும்பப் பொருளாதாரத்தைப் பெருதும் தாங்குகின்றனர். அதனால் தான் அவர்களால் பெண்களின் சேட்டைகளை அதிகம் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

எந்தப் பெண்ணாவது தன்ர சொந்த உழைப்பில்.. தாய் தகப்பனை தங்கையை சகோதரத்தை வாழ வைச்சிருப்பாளா..??! இல்லை. தானே உழைச்சு.. தாங்களே தங்களை அழகு படுத்திக் கொண்டு.. மேனியை மிணுக்கிக் கொண்டு.. ஆண்களை கவர்ந்து இழுத்து.. உடல் சுகங்களையும் அனுபவிச்சுக் கொண்டு.. வாழுறாங்க. அதையே ஒரு ஆண் செய்யத் தலைப்பட்டு விட்டால்.. ஆண்கள் அப்படிச் செய்யுறாங்க.. ஏன் நாங்க செய்யப்படாது என்ற கேள்வி. ஆண்கள் அப்படிச் செய்ய நீங்கள் தானே வழிகோலுறீங்க. பிறகென்ன.. நீங்க செய்யுறது.

நான் அறிந்திருக்கிறேன்.. உண்மையில் ஒரு பையன்.. பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பில் அதைப் புரிந்து கொண்டு வளர்ந்தவன். அவனை ஒருத்தி விரும்பிறன் என்று விரும்பிட்டு.. அவளிடம் படிப்பும்.. பணமும் வந்தவுடன் அவனைக் கழற்றி விட்டிட்டு இன்னொருத்தன் கூட ஓடினாளோ.. இன்னும் பலருடன் ஓடினாளோ தெரியா ஓடிட்டாள். காதலென்றால் என்னென்று கூட அறியாத அந்த பையனின் எண்ணத்தில் அதை விதைச்சு விருட்சமாக்கிட்டு.. அதை தானே தறிச்சிட்டு.. ஓடிட்டாள். இன்று அவன்.. பல பெண்களை ஏமாற்றும் பேர் வழியாக மாறி இருக்கிறான். இதற்கு யார் அடிப்படைக் காரணம் ஒரு பெண் தான். இப்படித்தான் குடும்ப அலகில் ஆண்கள் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் பெண்ணும் நம்பிக்கைக்குரியவளாக.. நல்லவளாக.. ஒத்துழைப்பவளாக இருக்கவில்லை என்றால்.. நிச்சயம் ஆண்கள் தவறு செய்ய வாய்ப்பு ஏற்பட்டே ஆகும்.

திருமணமான மனைவி 7 மணிக்கு கிளப்புக்குப் போறாள் என்றால்.. நீ போய் கூத்தடிச்சிட்டு வாம்மா.. நான் காத்திருக்கிறன் என்று ஒரு கேணப்பயலும் இருக்கமாட்டான். அவனும் அதையே தான் செய்வான். இந்தச் சூழலில் எப்படி குடும்ப அலகு பலம் பெறும்.

அரசாங்கங்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் பணம் கொடுக்கிறது.. சார்ந்து வாழக்கூடாது என்பதற்கல்ல. இங்கு கருத்தெழுதிய பெண்கள் பலர் இன்றைய பெண்கள் உழைக்கிற படியா அரசாங்கப்பணத்தில வாழ முடிகிற படியா ஆண்களைச் சார்ந்து இருக்கத் தேவையில்லை என்று எழுதினம். குடும்பம் என்ற அலகில் பொருளாதார சுயதன்மை என்பது அந்தக் குடும்பத்தின் நிலையை உயர்த்த தனி நபர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்நிலையில் வைச்சிருக்க வழங்கப்படுகிறதே அன்றி.. மினிக்கிக்கிட்டு.. பல ஆண்களோடு சேர்ந்து கூத்தடிக்க அல்ல. ஆண்களுக்கும் அதே தான்.

ஆனால் பார்த்த அளவில் ஆண்கள் தாங்களா தவறு செய்வதிலும்.. பெண்களால் தூண்டப்பட்ட நிலையில் தவறு செய்வதே அதிகம். ஆனால் பெண்கள்.. தாங்களாகவே தன்னை நம்பிய ஆணுக்கும் அவனை சார்ந்து உருவாக்கிய குடும்பத்துக்கும் துரோகம் செய்பவர்களாக அதிகம் இருக்கின்றனர். அதனாலேயே பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. இதற்கு பெண்களின் சிந்தனையில் நான் உழைக்கிறன்.. அரச பணம் வருகுது நான் எதைச் செய்தாலும் யார் கேட்கிறது அது என்ர சுதந்திரம் என்ற சுதந்திரத்திற்கான தவறான அர்த்தப்படுத்தலே ஆகும். இப்படியே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நினைப்பின் உலகின் மனித சமூகக் கட்டமைப்புக்குரிய குடும்பம் என்ற அலகு இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகில் இருக்காது.

தாய் எது தந்தை எது என்று உணரா ஒரு உலகமே இங்கிருக்கும். அங்கு மனிதமும் இருக்காது.. மனிதனும் மனிதனாக இருக்கமாட்டான். இதையா பெண்கள் விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பும் வழி ஒன்றும் ஆண்களுக்கு கசப்பானதல்ல. நாங்களும் அப்படி வாழ தயாராகவே இருக்கிறோம். கண்டவளோடும்.. புணர்ந்து.. கைவிட்டு வாழ எங்களுக்கும் வழி தெரியும். நாங்களும் உழைக்கிறம்.. அரச பணத்தை பெறுறம்.. அதற்காக.. வரையறைகளை தாண்டி.. சீரழிய விரும்புவதில்லை. காரணம்.. எல்லையிட்ட சட்டைக்குத்தான் அழகும் அளவும் பார்க்கலாம். எல்லையில்லா தூணியில அளவும் பார்க்க முடியா அதை அணிந்து அழகும் பார்க்க முடியா..???!

இல்லாத சுதந்திரத்தை அனுபவிப்பதாக எண்ணிக் கொண்டு.. பெண்கள் சீரழிவுப் பாதையில் செல்வதை தவிர்க்க அவர்கள் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திப்பார்களாயின் பல ஆண்களின் எண்ணங்களிலும் அந்தச் சிந்தனை வளரும். ஒரு ஆணும் தன்னை நம்பினவளை.. தனக்கு ஒத்துழைப்பவளை.. தன்னை உண்மையாக நேசிப்பவளை கைவிட்டுப் போனதில்லை. போகவும் மாட்டான். அதுதான் மனித இயல்பு. ஆனால் பெண்கள் அப்படியன்று. நகைக்கும்... பகட்டுக்கும்.. உடல் சுகத்துக்கும்.. பணத்துக்கும்.. உடலை விற்கக் கூட தயங்கமாட்டார்கள் என்பதை அவர்கள் மத்தியில் பெருகி வரும் விபச்சாரத் தனமான விடுதலைச் சிந்தனை உலகுக்கு காட்டி நிற்கிறது..! இந்த நிலை மாறனும்... அழகான சிறிய குடும்பங்களால் ஆன உலகை மனித சமூகத்தை நாம் பார்க்கனும்..! அங்கு ஆணும் பெண்ணும் சண்டையின்றி உரிமையோடு.. ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழும் நிலையை நாம் பார்க்கனும். உழைக்கும் உழைப்பும்.. அரச பணமும் பகிர்ந்து அனுபவிக்கப்படனுமே தவிர தான் மட்டும் அதை அனுபவிக்கனும் என்ற சிந்தனை பெண்களிடத்தில் நீங்கனும். அப்பதான்.. அவர்களின் சிந்தனையில்.. நடத்தையில்.. நல்ல மாற்றங்களைக் காணலாம். அது ஆண்களையும் நல்ல வழியில் சிந்திக்க வைக்கும்.. செயற்படவும் வைக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இந்த விளக்கம் போதாதே இன்னும் கொஞ்சம் தூக்கலாக வேண்டும்

நான் அறிந்திருக்கிறேன்.. உண்மையில் ஒரு பையன்.. பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பில் அதைப் புரிந்து கொண்டு வளர்ந்தவன். அவனை ஒருத்தி விரும்பிறன் என்று விரும்பிட்டு.. அவளிடம் படிப்பும்.. பணமும் வந்தவுடன் அவனைக் கழற்றி விட்டிட்டு இன்னொருத்தன் கூட ஓடினாளோ.. இன்னும் பலருடன் ஓடினாளோ தெரியா ஓடிட்டாள். காதலென்றால் என்னென்று கூட அறியாத அந்த பையனின் எண்ணத்தில் அதை விதைச்சு விருட்சமாக்கிட்டு.. அதை தானே தறிச்சிட்டு.. ஓடிட்டாள்

இது நான் அறிந்த உன்மை என்பதை விட எனக்கு நடந்தது நன்றி நெடுக்ஸ் :icon_idea:

சுஜி Posted Today, 05:58 AM

இப்படி சொல்லுவது ஒரு சாட்டு.. மனைவி ஒரு குழந்தை பிறந்து விட்டாள் அவள் அழகு இல்லாமல் போயு விடுறாள் என்ற நினைப்பு சில ஆண்கள் வர்க்கத்துக்கு.. அதால நல்ல அழகிய பெண்ணை தேடி போறார்கள்.. ஆண்கள் வெட்டி விடாமல் வைத்து இருந்தால் சரியோ.. அப்ப பெண்களும் அப்படி நினைத்தால் உங்கள் கெதி என்ன் ஆவாது...உங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா.. நம்ம எந்த நூறாண்டில் இருக்குறம் நிலவன்..யாரும் இங்க கோவிலுக்கு போயுட்டு இப்படியான பேசchu பேசுவது இல்லை.. யார் அப்படி பேசினார்கள் என்று நிருபியுங்கள்

சுஜி ஒரு ஆண் அவன் நேசிக்கும் பெண்ணை எவ்வளவு விரும்பிகிறான் என்பது அவனுக்கே தெரியாது பாருங்கோ நீங்கள் சொல்வதை பார்த்தால் ம்ம்ம்ம்ம்ம் ஒரு குழந்தை பிறந்தால் அழகு குறைந்து போகும் என்று உன்மையிலே நினைப்பது யாருங்கோ நாங்களா இல்லை நீங்கள் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் தன் அழகு குறைந்துவிடும் என்று நினைத்துக்கொள்வதும் நீங்கள்தானுங்கோ :blink:

மற்றும் கோவில்களில் நடக்கும் விசயங்களை நிருபித்தால் பலபேரின் குடும்ம்பம் சந்திக்கு வந்திடும் இது தேவையா நமக்கு [[அங்க பாருடி அவள் கட்டியிருக்கும் பட்டு புடவையை]] :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஆனோ,பெண்ணோ ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் போது தான் குடும்பம் பலம் பெறும் அதை நான் ஒத்துக் கொள்கிறேன்.புலம் பெயர் நாட்டில் இருவரும் வேலைக்கு போவதால் சமாளிக்க கூடியதாய் இருக்கும்.ஆனால் பெண் வேலைக்கு மட்டும் போக இல்லை அத்தோடு குடும்பத்தை சுமக்கும் பொறுப்பும் அவளிடம் தான் உள்ளது. குடும்பத் தலைவன் என்பவன் தனியே உழைத்து கொடுப்பதோடு தன் பொறுப்பு முடிந்து போய் விட்டது என நினைக்கிறான்.ஆனால் பெண் வேலைக்கு போய் விட்டு வந்து அநேகமாக வீட்டு வேலை செய்து[சில இடங்களில் ஆண்களும் உதவி செய்கிறார்கள் அவர்களை விடுங்கோ அவர்களை பற்றி இங்கு கதைக்கவில்லை]பிள்ளைகளை ரீயுசனுக்கு கூட்டிப் போய் வந்து படிப்பித்து அதற்கு மேலாக வீட்டு நிர்வாகம் பெரும்பாலும் பெண்களின் கைகளிலேயே இருக்கும்.அநேகமான வீடுகளில் இப்படித் தான் நடக்கும் சில வீடுகளில் விதி விலக்கு உண்டு.முடிவு எடுப்பதை பெரும்பாலும் பெண்களின் கைகளிலே விடுகிறான் சேர்ந்து முடிவு எடுப்பதில்லை..பெண்கள் ஏதாவது முடிவு எடுத்து பிழைத்த உடன் பெண்களை நோக்கி குற்றம் சாட்டி விட்டு பேசாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் இருவரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.ஆனால் பெரும்பாலன குடும்பங்களில் பெண்ணே முடிவு எடுக்கிறாள்.உதாரணமாக முனிவர்ஜி சொன்ன மாதிரி நகைக் கடைக்குச் சென்றாலும் பெண் ஒரு விலை கூடிய நெக்லஸ் ஆசைப் பட்டு கேட்டால் ஆண் உடனே வாங்கி கொடுத்து விடுவான் இல்லாவிட்டால் தன்னைப் பற்றி அப் பெண் குறைவாக நினைத்து விடுவாள் என்பதால்[அடுத்த நாள் நகையின் பெறுமதி குறைந்தால் புலம்புவதும் பெண் தான்].ஆண் தைரியமாய் முடிவு எடுப்பது இல்லை என்பது தான் நான் கண்ட உண்மை ஏன் அந்த பெண்ணிடம் உறுதியாக என்னிடம் இவ்வளவு பணம் தான் உள்ளது அதற்கு ஏற்ற படி வாங்கு என சொல்ல முடியாமல் உள்ளனர் ஒன்று அம்மாவின் பேச்சை கேட்பார்கள் அல்லது மனைவியின் பேச்சை கேட்பார்கள்.

நீங்கள் சொல்வது சரியான தப்பு நெடுக்ஸ் எனக்கு தெரிந்த எத்தனையோ பெண்கள் தங்கள் குடும்பத்தை மாத்திரம் அல்ல தனது கணவன் குடும்பத்துக்கு கூட தாங்கள் உழைத்து அனுப்பி இருக்கிறார்கள்.ஏன் புலிக்கு கூட கொடுத்து இருப்பவர்களை எனக்கு தெரியும்.ஆண் உதவி செய்தாலும் கூட பெண் தனது வருமானத்தில் குடும்பத்தை பார்ப்பதால் தான் ஆணால் மற்றவர்களுக்கு உதவ முடியும்.

நான் பெண் உழைக்கிறாள்,அரசு காசு கொடுக்குது என எழுதியது சுப்பண்ணா எழுதிய ஒரு பதிவுக்கு பதிலாகத் தான் அதாவது புலம் பெயர் நாட்டில் ஆண்[கணவன்] சரியில்லை என்றாலும் அவர்களால் வாழ முடியும் என சொல்வதற்கு தான் நீங்கள் வடிவாய் வாசித்து இருப்பீர்கள் நெடுக்ஸ்.

தவறு பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்களும் தான் செய்கிறார்கள். ஆனால் உங்கள் கருத்தைப் பொறுத்த வரை நெடுக்ஸ் பெண்கள் தவறு செய்தால் அது பெண்களின் பிழை ஆனால் ஆண்கள் தவறு செய்தாலும் அது பெண்களின் பிழை என்றால் அப்ப ஆண்களால் சுயமாய் முடிவு எடுக்க முடியாது என ஒத்துக் கொள்கிறீர்களா?

நான் ஒன்றும் குடும்பம் என்ற பந்தத்தை விட்டு ஒருவரையும் வெளியே வர சொல்ல இல்லை.நெடுக்ஸ் நான் எழுதியது உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன்.புரியாத முறையில் எழுதி இருந்தால் என்னை மன்னிக்கவும்.

நான் ஆண்களுக்கு சமமாய் பெண்களும் சாதனை செய்ய வேண்டும் என எழுதி இருந்தேன் குறிப்பாக விகிதாசர அடிப்படையில் பெண்கள் ஆண்களிலும் பார்க்க குறைவாகவே சாதனை புரிகின்றனர் அந்த சாதனை புரியும் வீதம் தான் அதிகரிக்க வேண்டும் என எழுதியிருந்தேன்.அதற்காகவே அரசியலை எடுத்துக் காட்டியிருந்தேன் 90% ஆண்கள் பாரளுமன்றத்தில் இருந்தால் 10% பெண்கள் தான் பாரளுமன்றத்தில் இருக்குறார்கள் என உடனே சுப்பண்ணா 10% பெண்கள் தானா விபச்சாரம் செய்கிறார்கள் எனக் கேட்டார் ஏன் அரசியலில் பெண்கள் நுழைய கூடாதா? இதைத் தான் ஆண் அடிமைத்தனம் என்பார்கள் இதைத் தான் வேண்டாம் எனச் சொல்கிறேன்.

நான் ஒன்றும் பெண் சுதந்திரம் என்று எல்லாவற்றையும் அவிட்டு போட்டு விட்டு திரிய சொல்லவில்லை.பெண் சுதந்திரம் என்றால் உடனே உங்களுக்கு ஞாபகம் வருவது எல்லாத்தையும் அவிட்டு போட்டு திரிகிறது தான்.உங்களைப் பொறுத்த வரை பெண் என்றால் போகப் பொருள்.தன்னை உண்மையாக நம்பிய எந்த பெண்ணையும் எந்த ஒரு ஆணும் விட்டுப் போகவில்லை என எழுதியிருந்தீர்கள் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் ஆண்களால் பாதிக்கப் பட்ட எந்தவொரு பெண்களையும் நீங்கள் இது வரை சந்திக்கவில்லையா? ஒன்று நீங்கள் சின்னப் பிள்ளையாக இருக்க வேண்டும் அல்லது ஆண்களுக்காக கதைப்பதால் நீங்கள் அதை மறைக்கிறீர்கள்.என்னைப் பொறுத்த வரை இருபாலரிலும் தப்பு செய்பவர் இருக்கார்கள். இருமணம் சேர்வது தான் திருமணம்.நாங்கள் இங்கு ஆண் பெரிசா,பெண் பெரிசா எனக் கதைக்க இல்லை.காதலித்து ஏமாற்றுபவர்களில் இரு பாலரும் உள்ளனர். நான் எனது முதலாவது பதிவில் பெண் அடிமை விலங்கை உடைத்து முன்னேற வேண்டும் என சொன்னேனே தவிர ஆண்களுக்கு எதிராக வர வேண்டும் எனச் சொல்லவில்லை. ஆண்களுக்கு சமமாக வர வேண்டும் எனத் தான் சொன்னேன் இதில் என்ன பிழை என எனக்கு விளங்கவில்லை.எனது பிழை முதல் பதிவை வடிவாய் எழுதாமல் விட்டது தான் அதற்காகவே மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கோய் அடுத்த அவதாரமா?

முடியல்லே!!!

மனைவி ஒரு குழந்தை பிறந்து விட்டாள் அவள் அழகு இல்லாமல் போயு விடுறாள் என்ற நினைப்பு சில ஆண்கள் வர்க்கத்துக்கு.. அதால நல்ல அழகிய பெண்ணை தேடி போறார்கள்..

காரணம் அதுவல்ல! இறுக்கம் இல்லை என்பதுதான்!! :lol:

அதாவது நீங்கள் இறுக்கமான அன்பை உங்கள் கணவருடன் வைத்திருக்கவில்லை என்பதுதான்!!! :icon_idea:

ஆனால் ஒரு ஆண்மகன் வேறு பெண்ணை தேடிப்போகும்போது! அங்கே தானாகவே வலியவந்து நிற்பவள் பெண்!! :)

அப்படியாயின் ஆணில் தப்பா? அல்லது பெண்ணில் தப்பா? :blink:

இங்கு பெண்ணியம் பேசுகிறோம் என்னும் சாட்டில் பெண்ணாகிய நீங்களே பெண்களை கேவலப்படுத்துகிறீர்கள் :lol:

இதுதான் யுதார்த்தம்....நீங்கள் திருந்தாதவரை இதுக்கு முடிவே இல்லை !!!!! :blink:

உங்கட கதையைப் பார்த்தா.. ஆண்கள் என்ன செய்தாலும் அதை எல்லாம் திருப்பி நீங்களும் செய்யனும் என்பதுதான் பெண் விடுதலை என்றால்.. நாங்க சேட்டைக் கழற்றிட்டுப் போவம்.. நீங்கள் போவியளா..??! முட்டாள் தனமா பெண் விடுதலைக்கு அர்த்தம் கொடுக்கக் கூடாது.

நெடுக்கு அண்ணா நான் அப்படி சொல்ல வில்லை அவர்கள் செய்வதை எல்லாம் நாங்கள் பண்ணனும் என்று கூற வில்லை.. :blink:

ஆணோ பெண்ணோ.. ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் நிலையில் தான் குடும்பம் என்ற அலகு பலம்பெறும். அதற்காக ஆணோ பெண்ணோ பொருளாதார ரீதியில் பங்களிக்காமல் இருக்கனும் என்றில்லை. ஒரு குடும்பத்தில் பொருளாதாரம்.. அது ஆண் கொண்டு வந்தால் என்ன பெண் கொண்டு வந்தால் என்ன பொதுவில் வைக்கப்பட வேண்டும். அப்பதான் அந்தக் குடும்பம் விளங்கும்.

இதை நானும் சரி என்றுதான் சொல்லுறன் :lol:

ஆனால் பெண்கள் பலர் நாங்கள் உழைக்கிறம்.. எங்கட வழியைப் பார்க்கிறம்.. நீ உன்ர வழியைப் பார் என்ற கதையாத்தான் அளந்து விடினம். முட்டாள் பெண்களே.. ஒன்றைச் சிந்தித்துப் பாருங்க.. அப்ப குடும்பம் என்றதை எவன்.. பொருளாதாரம் கொண்டு கவனிக்கிறது. அன்று தொட்டு இன்று வரை ஆண்கள் தான் குடும்பப் பொருளாதாரத்தைப் பெருதும் தாங்குகின்றனர். அதனால் தான் அவர்களால் பெண்களின் சேட்டைகளை அதிகம் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

நல்ல பெண்கள் யாரும் அப்படி சொல்ல மட்டார்கள் நாங்கள் உழைக்குறம் உன் வழியை பார் என்று

எந்தப் பெண்ணாவது தன்ர சொந்த உழைப்பில்.. தாய் தகப்பனை தங்கையை சகோதரத்தை வாழ வைச்சிருப்பாளா..??! இல்லை. தானே உழைச்சு.. தாங்களே தங்களை அழகு படுத்திக் கொண்டு.. மேனியை மிணுக்கிக் கொண்டு.. ஆண்களை கவர்ந்து இழுத்து.. உடல் சுகங்களையும் அனுபவிச்சுக் கொண்டு.. வாழுறாங்க. அதையே ஒரு ஆண் செய்யத் தலைப்பட்டு விட்டால்.. ஆண்கள் அப்படிச் செய்யுறாங்க.. ஏன் நாங்க செய்யப்படாது என்ற கேள்வி. ஆண்கள் அப்படிச் செய்ய நீங்கள் தானே வழிகோலுறீங்க. பிறகென்ன.. நீங்க செய்யுறது.

இது பொய் எத்தினை பெண்கள் புலம் பெயர் நாட்டில் அவங்களோட சகோதரத்தையும் எடுத்து தானும் வாழுறார்கள்.. தெரியாமல் பேசதங்கள் நெடுக்கு அண்ணா

எனக்கு தெரிந்த ஒரு அக்கா அவதான் கள்ளமாய் தனோட பாஸ்போட் முலமாய் தன் சகோதரிகளை கொண்டு வந்தது அதை விட அவங்கள் வீட்டில் இருக்குற இரண்டு பெடியனையும் அந்த் அக்காதன் எடுத்தார்கள் ஏன் அதை விட குடும்பத்தையே அவங்கதான் எடுத்தார்கள்..

அதை விட இன்று கல்யாணம் பண்ணி அவங்க புருசன் கூட வாழமால் அவங்கள் சகோதரத்துக்காக உழக்குறாங்க.. குடும்பத்தை ஒரு வழி பண்ணி விட்டுதான் அவங்க புருசன் கூடயே வாழ போறங்க.. எந்த புண்ணியவனோ நல்லவனாய் இருந்த படியால் விட்டான்.... அவங்க குடும்பத்துக்காக உழைத்து இரவு வேலையால வரும் போது ஒரு காலும் பாதிக்க பட்டு இருக்கு..

எத்தினையோ குடும்பங்கள் இன்று நல்லா இருக்க காரணம் பெண்கள்தான்.. ஆண்கள் எல்லாரும் நினைப்பத்து பெண்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில இருக்குறது என்று அப்படி நினைத்தால் தப்பு... :icon_idea:

நான் அறிந்திருக்கிறேன்.. உண்மையில் ஒரு பையன்.. பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பில் அதைப் புரிந்து கொண்டு வளர்ந்தவன். அவனை ஒருத்தி விரும்பிறன் என்று விரும்பிட்டு.. அவளிடம் படிப்பும்.. பணமும் வந்தவுடன் அவனைக் கழற்றி விட்டிட்டு இன்னொருத்தன் கூட ஓடினாளோ.. இன்னும் பலருடன் ஓடினாளோ தெரியா ஓடிட்டாள். காதலென்றால் என்னென்று கூட அறியாத அந்த பையனின் எண்ணத்தில் அதை விதைச்சு விருட்சமாக்கிட்டு.. அதை தானே தறிச்சிட்டு.. ஓடிட்டாள். இன்று அவன்.. பல பெண்களை ஏமாற்றும் பேர் வழியாக மாறி இருக்கிறான். இதற்கு யார் அடிப்படைக் காரணம் ஒரு பெண் தான். இப்படித்தான் குடும்ப அலகில் ஆண்கள் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் பெண்ணும் நம்பிக்கைக்குரியவளாக.. நல்லவளாக.. ஒத்துழைப்பவளாக இருக்கவில்லை என்றால்.. நிச்சயம் ஆண்கள் தவறு செய்ய வாய்ப்பு ஏற்பட்டே ஆகும்.

அவன் எமத்துறதுக்கு இது ஒரு சாட்டு ஒரு பெண் தப்பு பண்ணினால் மற்ற பெண்களுமா அப்படி.. அப்படி பெண்கள் நினைத்தால் உங்கள் கெதி என்ன ஆவது.. நெடுக்கு அண்ணா என் நண்பி ஒருதனை காதலித்தாள் அவள் ஒரு அப்பாவிப் பெண்தான்.. அவன் அவளிடம் காசு இல்லை என்பதுக்காக அவளை விட்டு இட்டு போயுட்டான் அதுக்காக அவள் ஊர் ஊராய் போயு பெடியன்கள் எல்லாரயும் ஏமத்தலாமா.. இது நியாயம்.. நான் போயு மற்றவர்களை ஏமாத்தி விட்டு சொல்லலாமா? அவன் அப்படி பண்ணினான் அதனால்தான் நான் மற்ற பெடியன்கள் எல்லாருக்கு பண்ணுறன் என்று.. :lol:

நெடுக்கு அண்ணா நான் யாரயும் குறை சொல்ல வர வில்லை.. பெண்கள் சுகந்திரம் பத்தியும் பேச வர வில்லை.. நிலவன் சொன்னார் உடுப்பு ஒழுங்காய் உடுத்துறது இல்லை என்று.. அதை பெண்கள் எல்லாரும் தப்பனவர்கள் ஆண்கள்தான் நல்லவர்கள் மாதிரி உங்கள் பேச்சு இருக்கு.. இரண்டு பேரில் தப்புகள் இருக்கு .. இரண்டு பக்கமும் பார்ககணும் ஒருவரை மட்டும் குறை மட்டும் சொல்லவது இது எங்க கொண்டு போயு தலை அடிக்குறது என்று தெரிய வில்லை..

Edited by சுஜி

நெடுக்கர் இந்த விளக்கம் போதாதே இன்னும் கொஞ்சம் தூக்கலாக வேண்டும்

இது நான் அறிந்த உன்மை என்பதை விட எனக்கு நடந்தது நன்றி நெடுக்ஸ் :icon_idea:

சுஜி ஒரு ஆண் அவன் நேசிக்கும் பெண்ணை எவ்வளவு விரும்பிகிறான் என்பது அவனுக்கே தெரியாது பாருங்கோ நீங்கள் சொல்வதை பார்த்தால் ம்ம்ம்ம்ம்ம் ஒரு குழந்தை பிறந்தால் அழகு குறைந்து போகும் என்று உன்மையிலே நினைப்பது யாருங்கோ நாங்களா இல்லை நீங்கள் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் தன் அழகு குறைந்துவிடும் என்று நினைத்துக்கொள்வதும் நீங்கள்தானுங்கோ :blink:

மற்றும் கோவில்களில் நடக்கும் விசயங்களை நிருபித்தால் பலபேரின் குடும்ம்பம் சந்திக்கு வந்திடும் இது தேவையா நமக்கு [[அங்க பாருடி அவள் கட்டியிருக்கும் பட்டு புடவையை]] :lol::lol:

நான் மனைவிக்கு அழகு போயுடும் என்று சொல்ல வில்லை.. அப்படி ஆண்கள் நினைக்குறார்கள்.. பெண்கள் எப்பவும் அழகுடந்தான் இருக்குறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் மனைவிக்கு அழகு போயுடும் என்று சொல்ல வில்லை.. அப்படி ஆண்கள் நினைக்குறார்கள்.. பெண்கள் எப்பவும் அழகுடந்தான் இருக்குறார்கள்

இதபார்டா..! இந்த நினைப்பு வேறையா? :blink::icon_idea:

இதபார்டா..! இந்த நினைப்பு வேறையா? :lol::blink:

உண்மை சொன்னால் சிலருக்கு புடிக்காதே :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை சொன்னால் சிலருக்கு புடிக்காதே :icon_idea:

உண்மைதான் சுஜி,

நான் எழுதியதற்கு... நீங்கள் பதில் எழுதாதபோதே நினைத்தேன்! :blink::lol::lol:

உண்மைதான் சுஜி,

நான் எழுதியதற்கு... நீங்கள் பதில் எழுதாதபோதே நினைத்தேன்! :blink::lol::lol:

என்ன உண்மை? நான் பெண்ணின் சுகந்திரம் பற்றி பேச வில்லை.. பெண்களை மட்டும் குறை சொல்லுவது புடிக்க வில்லை?ஆண்களும்தானே தப்பு பண்ணுறார்கள் இதில் பெண்களை மட்டும் என்ன குறை சொல்லுவது.. எல்லாரும் ஒவரு விதத்தில் அழகுதான்.. இதில் என்ன அவர் அழகு இல்லை இவர் அழகு இல்லை என்று பேசுவது.. நல்ல மனைவிமார் எல்லாம் அன்பகாதன் கணவனிடம் இருக்குறார்கள்.. ஆண்களும் மனைவியை தலையில தூக்கி வக்கமால் இருந்தால் அதுவே நல்லா இருக்கும்..அப்புறம் மனைவி ஒடுறாள் என்று பேசுறது :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.