Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று நாள் மோதலில் புதுக்குடியிருப்பில் 610 படையினர் பலி; 700 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் பல முனைகளில் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் நகர்வுகளுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்நாளும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 402 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் இன்றும் உக்கிர மோதல் நடைபெற்றது.

இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 208 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையிலானோர் காயமடைந்துள்ளனர்.

மோதல்களின் போது சிறிலங்கா படையினர் அதிகளவிலான வெடிபொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என சமர்-கட்டளை மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது இவ்வாறிருக்க, புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விபரம் எதனையும் சிறிலங்கா படைத்தரப்பு வெளியிடவில்லை.

http://www.puthinam.com/full.php?2b1VoKe0d...d434OO3a030Mt3e

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிப் போடு! போடு!!

good score.. but not enough... :D

நியூட்டனின் விதி: ஒரு தாக்கத்திற்கு சமனும் எதிருமான மறுதாக்கம் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நியூட்டனின் விதி: ஒரு தாக்கத்திற்கு சமனும் எதிருமான மறுதாக்கம் இருக்கும்

ஓம்

நன்றி

குறிப்பிட்டதற்கு

ஏனென்றால்

நாங்கள் எறிந்தால்தான் தாக்கம் மறுதாக்கம் கதையெல்லாம்

எறியாமலே வந்து விழுந்து கொண்டிருந்தால்

தொடர்ந்து தடுப்பு மட்டும்தானா???

இதையும் கேட்பவர் நீங்களே?

ஓம்

நன்றி

குறிப்பிட்டதற்கு

ஏனென்றால்

நாங்கள் எறிந்தால்தான் தாக்கம் மறுதாக்கம் கதையெல்லாம்

எறியாமலே வந்து விழுந்து கொண்டிருந்தால்

தொடர்ந்து தடுப்பு மட்டும்தானா???

இதையும் கேட்பவர் நீங்களே?

அடடா... ஐயாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துட்டு போல...

சிங்களவர்களின் இனவழிப்புக்கு ஆதரவான கருத்துகளுக்கு எதிராக கருத்துகள் எழுதுவோம் வாருங்கள் என்று கூவி கூவி அழைத்தும், ஒரு banner செய்து முகப்பில் போட்டு link தந்து வசதி செய்து கூப்பிட்டு பார்த்தும், போதாக் குறைக்கு திண்ணையில் வந்து ஒட்டிப் பார்த்தும் எந்த கருத்தினையும் எழுதாத வராதவர்கள்.. ஆகக் குறைந்தது சிங்களவனின் கருத்துகளுக்கும் வீடியோ இணைப்புகளுக்கும் சென்று negative points தர கூட நேரம் செலழிக்க மனம் இடம் கொடாதவர்கள் ஒரு இராணுவ ஸ்கோர் நிலவர பதிவுக்கு மட்டும் விழுந்தடிச்சு வந்து கருத்து எழுதிவினம் ...

சிங்களவனின் கருத்துகளுக்கு வராத ரோசமும் கோபமும் இராணுவ score பற்றிய பதிவில் யாராவது தமக்கு பிடிக்காததை போட்டால் மட்டும் வருகுதாக்கும்....

கடைசி சிங்கள ராணுவவீரனும் எம் தாயகத்தில்தான் மரணிப்பான்!

  • கருத்துக்கள உறவுகள்

இதில மகிழ்ச்சிப்பட ஏதும் இல்லை பாருங்கோ. தமிழ் நெட் செய்திப்படி கடைசி பாதுகாப்பு வலயப்பகுதிக்குள்ளும் இராணுவ துப்பாக்கிச் சன்னங்கள் வருகுதாம். தேங்காய் பொறுக்கப் போன 18 மக்களை காணேல்லையாம். இராணுவமோ 14 உடலங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறி இருக்கிறது.

ஆக இராணுவம் புதுமாத்தளன் பகுதி நோக்கி நெருங்கி நிற்கிறது.

வவுனியாவில நின்ற இராணுவம்.. புதுமாத்தளனில நிற்கிறதுக்கு இப்படி இழக்கிறது ஒன்றும் அவர்களைப் பாதிக்கப் போறதில்ல. அவங்க கிட்ட சனமும் இருக்கு.. பணமும் இருக்கு.. நாடுகளின் பலமும் இருக்குது.

எங்கட நிலையோ எனி இழக்க ஏதும் இல்லை என்ற நிலை. சிந்தியுங்கள்.. சிரிக்க முதல்..! :D

Edited by nedukkalapoovan

good score.. but not enough... :D

நீங்கள் அடுத்தமுறை புலிகளுக்கு என்னும் நல்லா ப்ராக்டிஸ் குடுத்து அனுப்புங்கோ..நல்லா ஸ்கோர் பண்ணுவாங்க.

அங்க ஒவ்வொரு நாளும் பிறந்த குழந்தை துவக்கம் 50- 100 சனம் சாகுது..இங்க நாங்க ஒரு 100 ராணுவம் செத்தவுடன பொப்கோன்னோட அடி பத்தாது ஸ்கோர் காணாது என்டு வியாக்கியானம் வேற..பூனைக்கு விளையாட்டு எலிக்கு சீவன் போகுது என்றது இதை தான் போல கிடக்கு.

இவ்வளவு ஆமி செத்தது என்று போடவேண்டாம் எனக்கு ஒரே கவலையா இருக்கு... :D மகிந்த வாழ்க

நீங்கள் அடுத்தமுறை புலிகளுக்கு என்னும் நல்லா ப்ராக்டிஸ் குடுத்து அனுப்புங்கோ..நல்லா ஸ்கோர் பண்ணுவாங்க.

அங்க ஒவ்வொரு நாளும் பிறந்த குழந்தை துவக்கம் 50- 100 சனம் சாகுது..இங்க நாங்க ஒரு 100 ராணுவம் செத்தவுடன பொப்கோன்னோட அடி பத்தாது ஸ்கோர் காணாது என்டு வியாக்கியானம் வேற..பூனைக்கு விளையாட்டு எலிக்கு சீவன் போகுது என்றது இதை தான் போல கிடக்கு.

ம்ம்ம்...மக்களை கொல்லும் சிங்களவனை.........நேராக போய் அழித்தால் அது பயங்கரவாதம்...அதே சிங்களவனை....போரில் அழித்தால்... அது வெற்றி....

இவ்வளவு அவலம் நடந்தும்... கண்டுக்காத இந்தியா....தமிழனுக்கு நல்லது செய்வான் எண்டு உங்களை மாதிரி நானும் நம்ப தயார் இல்லை....தலைவர் கையால் அடிக்கும் போது... அதிகமாகும் போதுதான்....இந்தியா இல்லை... எல்லா உலக நாடுகளும்...குறைந்த பட்சம் திரும்பி பார்பார்கள்..

எனவே. தமிழனின் தீர்வு...ஆமியின் சாவு எணிக்கையில் தான் தற்ப்பொழுது தங்கியிருக்கிறது...மக்களின் சாவு எண்ணிக்கையில் அல்ல.... மக்கள் அதிகமாக இறக்கும் போது கவலை படுவது தமிழ் மக்கள் மட்டும் தான்... அது போல சிஙகளவன் சாகும் போது சந்தோசபடுவதும்.. தமிழ் மக்கள் தான்..

நானும் தமிழன் தானே... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

604 SLA killed in 3 days - LTTE media

[TamilNet, Tuesday, 17 March 2009, 17:53 GMT]

The Voice of Tigers, the radio broadcast of the Liberation Tigers of Tamileelam (LTTE) in its evening broadcast on Tuesday said that 604 Sri Lanka Army (SLA) soldiers were killed in heavy fighting in Puthukkudiyiruppu. Several hundred soldiers were wounded in the fighting, according to the VoT.

There were also reports of a Black Tiger mission, the radio said.

Meanwhile, ambulances were seen rushing casualties to the hospitals in Colombo.

தற்போதைய நிலையில் புலிகள் ஊடுறுவல் கடும் தாக்குதல் நடத்துகிறார்கள்.. மிகப்பல இழப்பு இராணுவத்திற்கு ஏற்பட்டாலும் இராணுவம் பின் வாங்கும் நிலை ஏற்படவில்லை..

இது கரணம் தப்பினால்.. மரணம் நிலைமை... ஆனால் மக்கள் இராணுவராத்தின் கையில் அகப்படாமல் இருக்க அதிசயங்கள் எதுவும் திடீர் என நடந்தால்தான் உண்டு...

கடைசி செய்திகளின் படி புலிகள் ஆனையிறவு ஊடுடுவி உள்ளார்கள் என அதிர்வு இணையத்தளத்தில் செய்தி உள்ளது..

தமிழர்களின் நிலைமை அழிவின் உச்சத்தில் இருக்கிறது.. ஆக்கிரமிப்பு தனது பழைய வரலாறுகளின் பாடங்களிலிருந்து மிகப்பலமாக உலக நாடுகளின் சதி, ஆயுத உதவிகளினால் இந் நிலை..

எம்மக்கள் எதற்கும் எந்த எதிர்பாராத செய்திகள் எந்த நேரமும் எதிர்பார்க்கலாம்...

எமக்கு சாதகமாக எப்போதும் நினைத்திருப்போம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.