Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரித்தானியாவின் Press tv இல் ஒளிபரப்பாகிய கருத்து மன்றம்

Featured Replies

யாரது தேனி உடைஞ்சிட்டுது என்று சொல்லி வசம்பண்ணாவின் கோபத்தை கிளறியது??? :lol:

  • Replies 66
  • Views 4.3k
  • Created
  • Last Reply

நீங்கள் சொல்வது சரியானதுதான் தூயவன். ஆனாலும் நான் நினைக்கிறேன் வசம்பு அவர்கள் சொல்ல வருவது எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசிய அரசியல் கட்சி இல்லாதது என்பதை. அதாவது இரண்டு கட்சிகளும் சிங்கள இனவாத கட்சிகளே அதில் தமிழர்கள் அங்த்தவர்களாக இருந்தார்கள்தான் ஆனால் அதை அவர்கள் தமது இனவாத்ததை மறைக்க பயன்படுத்தினார்களே தவிர தேசியம் என்பது இல்லாமல் இருந்தது என்பதை தான் அவர் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

நன்றி மருதங்கேணி. நீங்களாவது நான் சொன்னதைப் புரிந்து கொண்டதற்காக. இங்கு தயாவும் தூயவனும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். ஏதோ பெயருக்கு ஒன்றிரண்டு தமிழர்கள் சிங்களக் கட்சிகளில் இருந்து விட்டால் அவை தேசியக் கட்சிகள் ஆகிவிட முடியுமா ?? அத்துடன் நான் அனைத்து இனங்களும் இணைந்த எல்லா மாவட்டங்களிலும் பொதுப்படையாக இயங்கக் கூடிய நிலையிலுள்ள தேசியக் கட்சி பற்றிய கருத்தையே தெரிவித்திருந்தேன்.

இது உண்மைதான் நுணாவிலான். சிங்கள பெளத்தர் மட்டும்தான் ஜனாதிபதியாக வரமுடியும்.

நடா இது சட்டரீதியாகவில்லை. ஆனால் சிங்கள மக்கள் ஒரு சிங்களப் பெளத்தன் தலைமைக்கு வருவதை விரும்புகின்றார்கள் என்பதை வைத்து அதைச் சட்டரீதியானது என்று தவறாக எண்ணுகின்றீர்கள். ஜெயவர்த்தனா முழுமையான பெளத்தனாக மாறியிருந்தால், எப்படி அவர் யூலியட் ரிச்சார்ட் ஜெயவர்த்தனா என்ற கிறிஸ்தவப் பெயரைக் கூறி சத்தியப் பிரமானம் எடுக்க முடிந்தது.

அத்துடன் நான் அனைத்து இனங்களும் இணைந்த எல்லா மாவட்டங்களிலும் பொதுப்படையாக இயங்கக் கூடிய நிலையிலுள்ள தேசியக் கட்சி பற்றிய கருத்தையே தெரிவித்திருந்தேன்.

வசம்பண்ணா ,அது கனவிலும் கற்பனையிலும் தான் நடைபெறும்.இல்லை என்றால் சிறிலன்கா இராணுவத்தின் துப்பாக்கி முனையில் தேர்தல் நடாத்தி வடக்கில் இருந்து தெற்கு வரை தேசிய கட்சி அரசு நடத்தலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது கூட நீங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தந்து உங்களை நியாயப்படுத்தப் பார்க்கின்றீர்களே தவிர, தவறுகளை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

தேனீ இணையத்தளம் இரண்டாக உடையவில்லை. அதன் பெயரிலேயே கொம் என்பதை நெற் என மாற்றி வேறு சிலர் மற்றொரு இணையத்தை தொடங்கியிருந்தனர். அது பற்றிய கேள்வி ஒன்றைக் களத்தில் கேட்ட கருத்தாளர் ஒருவர் "தேனி இணையத்தளம் தற்போது மனம் மாறி விட்டதா புலிகளுக்கு ஆதரவான செய்திகள் எல்லாம் தருகின்றார்களே" என்று கேட்டிருந்தார். அதற்கு தேனியின் பெயரில் தற்போது போலியாக ஒரு இணையத்தளம் தொடங்கியுள்ளதாக சுட்டிக் காட்டியிருந்தேன். அது உங்களைப் போன்றவர்களுக்கு வித்தியாசமாகத் தான் தெரியும். நிதர்சனம் இணையத்தளத்தின் பெயரிலும் இன்னொரு இணையத்தளம் புலிகளுக்கு எதிராகச் செய்திகள் எழுதி வருகின்றதே. அப்படியாயின் நிதர்சனமும் இரண்டாக உடைந்து விட்டதென்றா அர்த்தம். உங்களின் தவறான விளக்கஞ்களுக்காக மற்றவர்களில் பழி போட முயலாதீர்கள்.

தமிழ் கூட்டமைப்புப் பற்றி நான் சொல்லாததை சொன்னதாக மீண்டும் மீண்டும் புரளி ககிளப்பி விடலாமென்று பார்க்கின்றீர்கள். 2004ஆம் ஆண்டிலிருந்து களத்தில் நான் எழுதிய கருத்துகளெல்லாம் இங்கு அப்படியே இருக்கின்றன. முடிந்தால் நீங்கள் சொல்வதை இணைத்து விடுங்களேன்.

இந்த யாழ்கழத்தின் நிர்வாகம் உடைந்து புதிதாக இன்னொன்றை துவங்குகின்றாரகள் என்றால், இந்த நிர்வாகத்தில் உள்ள ஒருவரால்த்தான் இந்தத்தகவல்லின் உண்மைத்தன்மையை 100 விதம் அடித்துச் சொல்ல முடியும். சாமானியர்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்ற வகையில்தான் கருத்தைச் சொல்ல முடியும். அந்த வகையில் நீங்கள் எடுத்துக் கொண்ட உரிமையும், அவசரமும் உங்கள் பற்றிய தவறான உருவகத்தைச் செய்கின்றது.

500 000 இலங்கைவாழ் இந்தியத்தமிழர்களை சிங்களம் நாடுகடத்திய விவகாரம் யாழில் சூடு பிடித்த போது, அதற்கு ஈழத்தவர்களும் பொறுப்பு என்ற வகையில் உங்கள் வாதத்தை முன்வைத்தீர்கள், இலங்கை அரசியலில் தமிழர் சக்தி சிங்களத்தை அண்டிப் பிழைக்கும் ஒன்று என்பதை நீங்கள் அறியாமல் சொல்கின்றீர்கள் என்று நான் நினைத்திருக்க வில்லை. ஏன் தமிழ்நாட்டு அரசியல் சக்திகளால் கூட தமது மத்தியின் முடிவை மாற்ற முடியாத போது, ஈழத்தமிழர்களின் தலையில் அந்த பாவத்தை பொறுக்க வைப்பது, ஒரு தீய உள்நோக்கம் கொண்டதாகவே நான் நினைத்திருந்தேன். அப்படி என்றால் அது தமிழ்நாட்டு தமிழரின் தலைகளும் சமமுக்கு மேலான பாவத்தை சுமக்கும் பொறுப்பு கொண்டது அல்லவா?

உங்களுக்கு தெரியாததாக இருக்க வாய்ப்பில்லை இங்கே பிள்ளையான் அரசியலுக்கு சற்று முன்னேற்றமான ஒரு அரசியல் தான் தமிழ் நாட்டினதும். ஈழத்தவர்களை தீயவர்களாக தமிழ்நாட்டுக்கு படம் காட்ட வேண்டிய தேவை சிங்கள அரசியலுக்கு மிக உயர்ந்த பலனைத் தரவல்லது. நீங்களுமேன் இது போன்ற செயல்களுக்காக உழைக்க வேண்டும்,

இப்படி பலவிடயங்கள் என் ஞாபகதாள்களில் விவகாரமானவர்கள் பற்றிக் கிடக்கின்றது. யாழ்களத்தில் அவற்றை தேடி எடுப்பது என்பது இலகுவான விடயமே அல்ல. எனவே என் கருத்துக்களில் இருக்கும் நம்பகத்தன்மை ஒறே ஆதாரமாகின்றது. இல்லை என்றால் உங்கள் கருத்துப்படி ஈழத்தேசியத்திற்கு தீங்கான கருத்தாளன் நான் என்றால், உங்கள் கருத்துக்கள் உள்வாங்குபவர்களால் என்பதிவுகள் நம்ப முடியாதவையாக இருந்தால் பாதகம் இல்லை, இருந்தும் இயலாமைக்கு வருந்துகின்றேன்.

இந்த யாழ்கழத்தின் நிர்வாகம் உடைந்து புதிதாக இன்னொன்றை துவங்குகின்றாரகள் என்றால், இந்த நிர்வாகத்தில் உள்ள ஒருவரால்த்தான் இந்தத்தகவல்லின் உண்மைத்தன்மையை 100 விதம் அடித்துச் சொல்ல முடியும். சாமானியர்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்ற வகையில்தான் கருத்தைச் சொல்ல முடியும். அந்த வகையில் நீங்கள் எடுத்துக் கொண்ட உரிமையும், அவசரமும் உங்கள் பற்றிய தவறான உருவகத்தைச் செய்கின்றது.

உங்களின் கருத்துப்படி பார்த்தாலே நீங்கள் தான் அந்த இணையத்தளம் உடைந்து இரண்டாகப் பிரிந்து அதே பெயரில் இன்னொரு இணையத்தளம் ஆரம்பித்துள்ளளதாக வாதாடுகின்றீர்கள். அந்த வகையில் அவர்கள் பற்றிய தகவல்களை நீங்கள் தானே அடித்துக் கூறுகின்றீர்கள். இப்போது நீங்களே அவர்கள் நிர்வாகத்தில் முன்பு இருந்தவர் என்று ஒப்புக் கொள்கின்றீர்களா ?? நான் அதே பெயரில் போலியாக ஒரு இணையத்தளம் வந்திருப்பதாகவே சொல்லியிருந்தேன். அத்துடன் நிதர்சனம்இணையத்தளம் பெயரிலும் இன்னொரு போலி இணையத்தளம் வந்திருப்பதையும் சுட்டிக் காட்டினேன். அந்த வகையில் நான் தவறு என்று சுட்டிக் காட்டியயதை, இல்லை அதுதான் சரியென்று வாதாடும் உங்களுக்கு அதிகம் தெரிந்திருப்பது எதனால் என்பதையும் இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. அதற்கு உங்கள் விளக்கமும் எனக்கு உதவியிருக்கின்றது.

உங்களைப் போன்ற சிலருக்கு கருத்தாடல்கள் செய்ய முடியாது போகும் போது மற்றவர்கள் பற்றிய போலியான தகவல்களை புரளிகளாக்கிச் சுகம் காண்பதே வேலையாகி விட்டது. இதற்கு பல உதாரணங்களை இந்தப் பக்கதத்திலேயே காணலாம். இப்டியானவர்களை ஊக்கப்படுத்துவதாலேயே களத்திற்கும் சீப்பாக விளம்பரம் தேடலாம் என்று நிர்வாகமும் நினைக்கின்றது போலும். நான் ஏற்கனவே இதே களத்தில் பலமுறை எழுதியும் உள்ளேன். நான் எனது சொந்தப் பெயரில் வந்து இதே களத்தில் ஆக்க பூர்வமாக கருத்தாட தயார். போலியாக புரளிகளைக் கிளப்பும் எவருக்காவது துணிவிருந்தால் அவர்களும் தங்கள் சொந்தப் பெயரில் வந்து இங்கு என்னுடன் கருத்தாடல் செய்யத் தயாரா?' அப்போது தெரியும் யாரின் முகமூடிகள் கிளித்தெறியப்படும் என்று...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி கதைத்திருக்கலாம் இப்படி சொல்லியிருக்க வேண்டும் இதை தவற விட்டுட்டார் என்று பட்டியலிடுவதை நிறுத்தி உங்கள் வீரத்தை விசைப்பலகையில் காட்டாமல் வாங்கோ வெளியில.

உங்களுக்கு பகிரங்கமாக வெளியில தமிழ் மொழி தவிர்ந்த மற்ற மொழிகளில் வாதாட திறமையிருந்தால் தைரியமிருந்தால் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்.

Contact US

British Tamils Forum

165 The Broadway

Wimbledon

London

SW19 1NE

Telephone: (+44) 020 8808 0674

Web Site : www.tamilsforum.com

E-mail : admin@tamilsforum.com

http://www.tamilsforum.com/

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உம்மைப் போல் எல்லாவற்றையும் தெரியாவிட்டாலும், எல்லாவற்றையும் தெரரிந்தவர் போல் ஆமாப் போடும் ஆசாமியாக நான் இல்லைத் தான். அதனால் உண்மைகள் எப்போதும் சுடுவதால், என்னைப் பார்க்க உமக்கு விலல்லங்கமாகத் தான் தெரியும். :lol:

இந்தக்கருத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்

நாம் நமக்குள் மோதவேண்டாம் என்று ஒதுங்குவதை பதம் பார்க்கும் வார்த்தைகளை மீண்டும் பயன்படுத்தமாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்

அதேநேரம் எனது சொந்தப்பெயரில் நான் உவ்விடம் வரமுடியாமைக்கு உம்மைப்போன்றோரே காரணம்

இதை முதலில் தாங்கள் புரிய பின்னிற்பதே இத்தனைக்கும் காரணம்.........

அன்புடன் கள நிர்வாகத்தினருக்கு இங்கே இந்த யாழ் களம் எமது தாயக உறவுகளின் அவலத்தை துடைப்பதற்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது.இங்கே என்டாவென்றால் விதண்டாவதம் வித்துவச் செருக்கு உணர்வுகளை திசை திருப்ப முயற்சி என்று சில சித்து வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.தாயக உறவுகளின் அவலத்தில் அழுகுரல்களில் அரசியல் நடத்தி முதலைக் கண்ணீர் வடிக்கும் எவரையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் ஒரங்கட்டிவிடுங்கள்.தமிழ் தேசியத்தால் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அவ்வாறு ஒன்றுபடுத்த தடையாக இருப்பவர்களை ஓரங்கட்டுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவிடுதலையின் ஆரம்பம்முதலே அதனுடன் வழர்ந்தவன் நான்

எனவே அது பற்றி தங்களது விளக்கம் தேவையற்றது

என் பெற்றோரை

எனது சகோதரைரை

என் ஊரை

என் நாட்டை

எனக்கு யாரும் அறிமுகம் செய்யவேண்டிய அவசியமில்லை என்று சொன்னால் அதை புரிந்து கொள்ள பெரிதாக ஒரு அறிவும் தேவையில்லை

அன்புடன் கள நிர்வாகத்தினருக்கு இங்கே இந்த யாழ் களம் எமது தாயக உறவுகளின் அவலத்தை துடைப்பதற்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது.இங்கே என்டாவென்றால் விதண்டாவதம் வித்துவச் செருக்கு உணர்வுகளை திசை திருப்ப முயற்சி என்று சில சித்து வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.தாயக உறவுகளின் அவலத்தில் அழுகுரல்களில் அரசியல் நடத்தி முதலைக் கண்ணீர் வடிக்கும் எவரையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் ஒரங்கட்டிவிடுங்கள்.தமிழ் தேசியத்தால் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அவ்வாறு ஒன்றுபடுத்த தடையாக இருப்பவர்களை ஓரங்கட்டுவோம்

தங்களது கருத்துத்தான் என்னுடையதும்

ஆனால் அப்படி ஒதுங்குவதே இங்கு தப்பாக விமர்சிக்கப்படுகிறது

இருப்பினும்

நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிருப்பது என்ற அடிப்படையில் இத்துடன் இதற்கு பதில் எழுதுவதை நிறுத்துகின்றேன்

Edited by விசுகு

இந்தக்கருத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்

நாம் நமக்குள் மோதவேண்டாம் என்று ஒதுங்குவதை பதம் பார்க்கும் வார்த்தைகளை மீண்டும் பயன்படுத்தமாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்

அதேநேரம் எனது சொந்தப்பெயரில் நான் உவ்விடம் வரமுடியாமைக்கு உம்மைப்போன்றோரே காரணம்

இதை முதலில் தாங்கள் புரிய பின்னிற்பதே இத்தனைக்கும் காரணம்.........

தங்களின் தவறுகளை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களை விமர்சிப்பதில் என்ன பயன். அடுத்தவரை வில்லங்கமானவர் என்று உம்மால் விமர்சிக்க முடியும். அதனைச் சுட்டிக் காட்டினால் உடனே கோபம் பொத்துக் கொண்டு வருகின்றது. ஆக மொத்தத்தில் உம்மைப் போன்றவர்கள் எவரையும் எப்படியும் விமர்சிக்கலாம். ஆனால் மற்றவர்கள் அதைச் சுட்டிக் காட்டினாலே தவறு. நல்ல தத்துவம். :lol::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பவர் எனில்

வேறு எங்கும் செல்லத்தேவையில்ல

இங்கு

நேற்றையிலிருந்து தங்களுக்கு கருத்து எழுதியவர்களின் கருத்தை மட்டும் திரும்பவும் வாசியுங்கள்

அதிலேயே தெரியும்

நான் எழுதிய வில்லங்கமானவர் என்பதன் அறுவடை

எப்படியாயினும் நிறுத்துகின்றேன்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் கருத்துப்படி பார்த்தாலே நீங்கள் தான் அந்த இணையத்தளம் உடைந்து இரண்டாகப் பிரிந்து அதே பெயரில் இன்னொரு இணையத்தளம் ஆரம்பித்துள்ளளதாக வாதாடுகின்றீர்கள். அந்த வகையில் அவர்கள் பற்றிய தகவல்களை நீங்கள் தானே அடித்துக் கூறுகின்றீர்கள். இப்போது நீங்களே அவர்கள் நிர்வாகத்தில் முன்பு இருந்தவர் என்று ஒப்புக் கொள்கின்றீர்களா ?? நான் அதே பெயரில் போலியாக ஒரு இணையத்தளம் வந்திருப்பதாகவே சொல்லியிருந்தேன். அத்துடன் நிதர்சனம்இணையத்தளம் பெயரிலும் இன்னொரு போலி இணையத்தளம் வந்திருப்பதையும் சுட்டிக் காட்டினேன். அந்த வகையில் நான் தவறு என்று சுட்டிக் காட்டியயதை, இல்லை அதுதான் சரியென்று வாதாடும் உங்களுக்கு அதிகம் தெரிந்திருப்பது எதனால் என்பதையும் இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. அதற்கு உங்கள் விளக்கமும் எனக்கு உதவியிருக்கின்றது.

உங்களைப் போன்ற சிலருக்கு கருத்தாடல்கள் செய்ய முடியாது போகும் போது மற்றவர்கள் பற்றிய போலியான தகவல்களை புரளிகளாக்கிச் சுகம் காண்பதே வேலையாகி விட்டது. இதற்கு பல உதாரணங்களை இந்தப் பக்கதத்திலேயே காணலாம். இப்டியானவர்களை ஊக்கப்படுத்துவதாலேயே களத்திற்கும் சீப்பாக விளம்பரம் தேடலாம் என்று நிர்வாகமும் நினைக்கின்றது போலும். நான் ஏற்கனவே இதே களத்தில் பலமுறை எழுதியும் உள்ளேன். நான் எனது சொந்தப் பெயரில் வந்து இதே களத்தில் ஆக்க பூர்வமாக கருத்தாட தயார். போலியாக புரளிகளைக் கிளப்பும் எவருக்காவது துணிவிருந்தால் அவர்களும் தங்கள் சொந்தப் பெயரில் வந்து இங்கு என்னுடன் கருத்தாடல் செய்யத் தயாரா?' அப்போது தெரியும் யாரின் முகமூடிகள் கிளித்தெறியப்படும் என்று...

நான் யாழ்களத்தில் உறுப்பினன் ஆக முன்பே நீண்டகால வாசகனாக இருந்தேன். எனவே என் வாசிப்பனுபவத்தில் பலரைப் பற்றிய குறிப்பீடுகள் இருக்கின்றது. மிகச் சிறியளவில் சேர்க்கப்படும் விசத்தை சாதாரணமாக அறிய முடியாது. என் அறிவிற்கு தெளிவாக தெரிந்தாலும் வாசகார்களுக்கு அறியச் செய்ய தொடராக கொட்டப்பட்ட விசத்தை அள்ளி மொத்தமாக அதன் பரிமாணத்தைக் காட்ட வேண்டி உள்ளது. மேலும் நான் பிறதளங்களுக்குச் சென்றால் கூட ஒரே முகத்தைத்தான் வைத்திருக்கின்றேன். மறுபேரில் வரும் கோழைத்தனம் எனக்கு அவசியமும் அல்ல. வசம்புவின் கருத்துக்களுடன் முரண்பாடு என் பதிவுகாலத் துவக்கத்தில் இருந்தே ஒரே வகையானது என்பதை வசம்புவும் நன்கறிவார்.

நான் உங்களை முரண்படுவதற்கு என்ன காரணம் உங்களால் முன்வைக்க முடியும்? ( நீங்கள் ஒரு உண்மையான ஈழத்தேசிய ஆதரவாளன் என்ற நிலை உண்மையானது என்று கொண்டால் )

1. என்னுடைய போக்கு ஈழத்தேசியத்திற்கு எதிர் நிலையானது என்ற அறிதலினாலா?

2. சகபாடியின் பெருமையை தாங்க முடியாத பொறாமையினாலா?

நான் உங்களை முரண்பட என்ன அடிப்படை இருக்கும் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இங்கு இப்படிப் பதில் அளித்திருக்கலாம். அப்படிப் பதில் அளித்திருக்கலாம் என்று சொல்கினம்.

என் கண்ணிற்கு தெரிந்த அளவு... இவ் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் தமிழர் தரப்பில் இருத்து வரும் கருத்துக்களை முழுமையாக சொல்வதற்கு அனுமதிக்க வில்லை... சிங்களரை அனுமதித்துள்ளார்...

குறிப்பாக கடைசியாக கொடுக்கப் பட்ட 20 வினாடிகளில் சுறேந்திரன் அவர்கள் தனது கருத்தனை சொல்லிக்கொண்டு இருக்கும் போது இடைறே நிறுத்துp விடுகிறார். அதே 20 வினாடிகள் சிங்கள தரப்பு வெள்ளையனுக்கு கொடுக்கும் போது அவரின் கருத்து 20 வினாடிகளையும் தான்டி செல்லும் போது அனுமதிக்கிறார்!

;இருந்தாலும் ஒட்டு மொத்தமாக தமிழதரப்பு தனது கடமையை சிறப்பாக செய்துள்ளது!!!!

எனக்கும் இவ்வாறே தெரிந்தது. தமிழர் தரப்பு ஒதுக்கப்பட்ட நேரங்களில் சிறப்பாகப் பதில் அளித்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இங்கு இப்படிப் பதில் அளித்திருக்கலாம். அப்படிப் பதில் அளித்திருக்கலாம் என்று சொல்கினம்.

எனக்கும் இவ்வாறே தெரிந்தது. தமிழர் தரப்பு ஒதுக்கப்பட்ட நேரங்களில் சிறப்பாகப் பதில் அளித்திருக்கிறது.

அட.. நம்ம கந்தப்புவே சொல்லுறாரே எண்டு இப்பதான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்..! :huh: நான் முதலில் பதிஞ்ச கருத்து கனேடிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. :D சிலர் தமிழர்தரப்பின் வாதங்கள் சரியாக இல்லை என்று இங்கு எழுதியதால் எதுக்கு வீணா பிரசரை ஏத்தவேணும் எண்டு பார்க்காமலே விட்டிருந்தன்..! :D

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், சுரேந்திரன் தனது கருத்துக்களை சரியாகவே எடுத்து வைத்திருக்கிறார். ரொபேர்ட் எவன்சின் கருத்துக்களும் பார்வையாளர்களின் பங்களிப்பும் திறம்பட இருந்தது..! சிங்களவரின் பல்லவி பெருமளவில் எடுபடவில்லை. லோர்ட் நேஸ்பி எண்டவரைத்தான் இன்னும் மடக்கியிருக்க வேணும்..! ஆனால் நேரமும் நிகழ்ச்சியின் போக்கும் பெரிதாக ஒத்துழைக்கவில்லை.

நிகழ்ச்சியை வழிநடத்தியவர் என்னைப்பொறுத்த வரையில் திறம்படவே செயற்பட்டிருக்கிறார்..! கேட்ட கேள்வியை விட்டு பதில் விலகிச் சென்றபோது இழுத்து வழிக்கு கொண்டுவருவது தானே அவரின் வேலை.

நாளை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை நிலைவரம் தொடர்பாக விவாதம்

இலங்கையில் மோதல் பகுதியில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகளில் கடும் கவலை தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை நிலைவரம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, யுத்தநிறுத்த அழைப்புக்கு 24 மணி நேரத்திற்குள் இலங்கை அரசாங்கம் பதிலளிக்காவிடின் பொது நலவாயத்திலிருந்து இலங்கையை இடைநிறுத்துவதற்கான அழைப்பை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் விடுக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி.ஜோயன் ரியான் தெரிவித்திருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான "சண்டேரைம்ஸ்' நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

இது இவ்வாறிருக்க, இலங்கையின் வட, கிழக்கு கடற்கரையில் (முல்லைத்தீவு) காப்பாற்றப்படுவதற்காக காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் காத்திருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகளை மேற்கோள் காட்டி "சண்டே ரைம்ஸ்' சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த தமிழ் குடும்பங்கள் ஷெல் தாக்குதல்களுக்கு

அஞ்சி புதுமாத்தளன் கடற்கரையில் வெளியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.

அப்பகுதியிலிருந்து கடந்தவாரம் காயமடைந்த 460 பேரையும் அவர்களின் குடும்பத்தவர்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட "கிரீன் ஓசன்' கப்பலுக்கு உள்ளூர் மீனவர்களின் மர டிங்கிப்படகுகள் மூலம் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காக சனிக்கிழமை இரவு மீண்டும் கப்பல் அப்பகுதிக்கு திரும்பிச் செல்லவிருந்தது.

"நிலமை மிகவும் கவலைக்கிடமானது. தேவையிலும் பார்க்க மிக குறைந்த மட்டத்திலேயே ஆட்களை வெளியே அப்புறப் படுத்தக் கூடியதாக உள்ளது. யார் அதிகளவு காயமடைந்தவர்கள், எவர் சிறியளவு காயமடைந்திருக்கிறார்கள் என்றும் நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது' என்று இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதி சோபி ரோமனன்ஸ் கூறியள்ளார்.

ஷெல், விமானத் தாக்குதல்களாலும் அல்லது மருத்துவ பராமரிப்பு இல்லாமலும் அல்லது உணவு, தண்ணீர் இல்லாமலும் பொதுமக்கள் பலியாவதாக உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன.

அப்பகுதியிலிருந்த இறுதியான ஆஸ்பத்திரியும் மூடப்பட்டுவிட்டது.

புதுமாத்தளனில் ஒரேயொரு மருந்தகத்தில் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அங்கு காயமடைந்தவர்கள் தடித்த போர்வைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். மரக்கிளைகளில் கட்டப்பட்டு மருந்து ஏற்றப்படுகிறது. கடற்கரை வழியாக வெளியேற முயற்சிப்போர் தொகை கடந்த வாரம் அதிகரித்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களில் சிலர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த ஹியூகஸ் ரொ போர்ட்ஸே அங்குள்ள ஒரேயொரு வெளிநாட்டு மருத்துவ நிபுணராவார். 960 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும

  • 1 month later...

வசம்பு அண்ணாவை கனகாலமாக காண இல்லை என்று நினைத்துவிட்டு இன்றுபோய் அவரது Profileஐ பார்த்தேன். இந்த தலைப்பில் yarlல் பெரியதொரு விவாதம் போனதை இன்றுதான் காணமுடிந்தது.

தவிர, மிகவும் முக்கியமான இந்த தொலைக்காட்சி விவாதத்தையும் முழுமையாக பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.

தமிழர் தரப்பிற்காக கதைத்தவர்களில் ஆங்கிலேயர் அந்தமாதிரி எமக்காக கதைத்து இருந்தார். எம்மவரின் ஆற்றல் திருப்திகரமாக இல்லை. இதேநிலமையே எதிர்தரப்பிலும் காணப்பட்டது. சிங்களவரை விட வக்காளத்து வாங்கிய ஆங்கிலேயர் ஆற்றல் மிக்கவராக தென்பட்டார்.

இப்படியான விவாதங்களில் போகமுன்னர் நம்மவர்கள் கடுமையான பயிற்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். முறையான பயிற்சி இல்லாமல் போனால் சொதப்பலில்தான் முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.