Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

120,000 பேர் டொரண்டோ மத்தியில மனிதச்சங்கிலி செய்தால் மட்டும் போதுமா?

Featured Replies

வணக்கம்,

120,000 தமிழ்மக்கள் டொரண்டோ மத்தியில மனிதச்சங்கிலி செய்தால் மட்டும் போதுமா? இது சம்மந்தமாக கனடாவின் பிரதான ஊடகத்தில செய்த் வந்து இருக்கிது. எம்மவர்கள் படுத்து கிடக்கின்றார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி சிறீ லங்கா அரசாங்கம் பொய்ப்பரப்புரைகளை செய்கின்றது. தயவு செய்து உங்கள் கருத்துக்களை அங்கு தொடர்ந்து உரத்துக் கூறுங்கள்.

  1. 32 Tamil Tigers die in army push to take enclave: Sri Lankan military:
    http://www.cbc.ca/world/story/2009/03/13/s...mil-tigers.html
  2. Toronto Tamils slow traffic in latest Sri Lanka protest:
    http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html
  3. Tamil flags flown at protest legal, Toronto police say:
    http://www.cbc.ca/canada/toronto/story/200...tamil-flag.html
  4. Toronto police to probe whether Tamil protest flags broke law:
    http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html

நாங்கள் CBC ஊடகம் எமது செய்திகளை போடுவது இல்லை என்று ஆர்ப்பாட்டம் செய்தோம். இப்போது எமது செய்திகளை போடுகின்றார்கள். ஆனால் நாங்கள் பின்னூட்டல் போடுகின்றோமா? தயவுசெய்து உங்கள் கருத்துக்களை அங்கு கூறுங்கள்.

நன்றி!

தயவுசெய்து முடியுமானவர்கள் இங்கு பின்னூட்டல் போடுங்கோ. கனடா சீ.பீ.சி கனேடிய அரசாங்கத்தின் உதவிப்பணத்துடன் நடாத்தப்படும் அரச ஊடகம். நாங்கள் 120,000 பேர் கூடி மனித சங்கிலியில கலந்துபோட்டு பிறகு ஊடகத்தில பின்னூட்டல் போடாமல் இருந்தால் ஒரு பயனும் இல்லை.

நிறையச் சிங்களவன்கள் முழுநேரமாக இதுக்குள்ளேயே இருந்து பின்னூட்டல் போட்டுக்கொண்டு இருக்கிறாங்கள். வெள்ளைகள் மாதிரியும், கனேடியர்கள் மாதிரியும் கள்ள முகத்தை உருவாக்கி எமது தாயகத்தையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துறதோட... சிறீ லங்கா அரசின் பொய்ப்பிரச்சாரத்தை இதுக்க முடுக்கி விட்டு இருக்கிறாங்கள்.

தயவு செய்து உங்கள் கருத்துக்களை இதுக்க தொடர்ந்து போட்டுக்கொண்டு இருங்கோ. நாங்கள் இந்த விசயத்தில ஓயக்கூடாது. ஓய்ந்து களைப்பு அடைவது மிகவும் பாரிய பின்னடைவுகளை ஊடக ரீதியாய் கொண்டு வரும்.

இணைப்புக்கள்: (எல்லாத்திலையும் பின்னூட்டல் போடுங்கோ, நன்றி!)

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் அனுபவம் உள்ளவை மேல்குறிப்பிட்ட இணையத்தளங்களிற்கு சென்று உங்களது கருத்துக்களை பதிவுசெய்வதும் ஒரு கடமையாகும் அதாவது அறவழிப்போராட்டத்தில் இதுவும் தேவையாக கருதவேண்டும்.

உண்மை. ஒரு செயற்பாடு முடிந்தவுடன், அது வெற்றியடைந்துவிட்டது என்ற முடிவில் மிதப்பது எதிரிக்குச் சாதகமாக வழிவிடுதல் போன்றது. ஒவ்வொரு செயற்பாட்டின் பின்பும் தொடர்புள்ள அடுத்த செயற்பாட்டைத் தொடருதல் அவசியம்.

  • தொடங்கியவர்

தமிழர் ஆக ஓர் இரண்டு பேர்தான் அதுக்க எழுதுறாங்களப்பா. மிச்சம் எல்லாம் புதினம் பார்க்கிறதோட சரி. தயவுசெய்து நேரம் கிடைக்கும்போது அதுக்கபோய் உங்கட கருத்துக்களை சொல்லுங்கோ. பின்னூட்டல் போடுங்கோ. முக்கியமாக செய்யவேண்டிய வேலையைவிட்டுப்போட்டு படங்கள் புறக்கணிக்கிறதும் புறக்கணிக்காமல் விடுறதுமான வாதத்துக்க நிக்காதிங்கோ. நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாய் எனக்கு ஆங்கிலம் வாசிக்கவும் தெரியாது எழுதவும் தெரியாது

தயவுசெய்து இரண்டொரு மாதிரிகடிதங்களை எழுதி பார்வைக்குவிட்டியளண்டால் என்னைப்போல ஆக்களுக்கு பேருதவியாயிருக்கும்

கலைஞன்,

உங்களுக்கு இந்த இணைப்புகளில் கருத்து எழுதுவது முக்கியமாகப்பட்டால், அதை செய்வது பற்றிய கருத்துகளை வையுங்கள்.

உங்களுக்கு இங்கே கருத்து எழுதுவது முக்கியமாகப் படுகிறது. எமக்கு எம்முடைய எதிரிகளுக்கு எங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகத் தெரிகிறது.

உங்களுக்கு சரி என்று படுவதை நீங்கள் செய்யுங்கள். எமக்கு சரி என்று படுவதை நாம் செய்கின்றோம்.

இந்தத் தளங்களில் கருத்துகள் எழுதுவதால் என்ன நன்மை என்று கேட்டு எதிர்க் கருத்துகள் வைப்பது எனக்கு ஒன்றும் கடினமான விடயம் அன்று.

ஆனால் இன்னொருவர் செய்கின்ற செயற்பாட்டை கொச்சைப்படுத்தும் சிறுபுத்தி யாருக்கும் வேண்டாம்

உங்களுக்கு இங்கே கருத்து எழுதுவது முக்கியமாகப் படுகிறது. எமக்கு எம்முடைய எதிரிகளுக்கு எங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகத் தெரிகிறது.

எதிரிகள் யார் என்பதில் தான் பிரச்சனை. நீங்கள் ஒருவரை காட்டி அல்லது ஒரு நிறுவனத்தினைக் காட்டி எதிரி என்று சொல்லும் போது அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? ஆட்டு மந்தைகளாக மக்களை நினைத்து உங்களை தலைவர்களாகவும் நினைத்து நீங்கள் செய்ய சொல்லும் எல்லாவற்றுக்கும். உங்களின் விரல் சுட்டி நிற்கும் அனைத்துக்கும் எந்த எதிர்ப்பும் இன்றிய கருத்துகள் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

மற்றவர்களை சிறுபுத்தி என்று மட்டம் தட்டி அதன் மூலம் ஆத்திரத்தினை உருவாக்கி ஆரோக்கியமற்ற விதத்தில் விவாததினை கொண்டு செல்ல முயல்கின்றீர்கள்.

தமிழர் ஆக ஓர் இரண்டு பேர்தான் அதுக்க எழுதுறாங்களப்பா. மிச்சம் எல்லாம் புதினம் பார்க்கிறதோட சரி. தயவுசெய்து நேரம் கிடைக்கும்போது அதுக்கபோய் உங்கட கருத்துக்களை சொல்லுங்கோ. பின்னூட்டல் போடுங்கோ. முக்கியமாக செய்யவேண்டிய வேலையைவிட்டுப்போட்டு படங்கள் புறக்கணிக்கிறதும் புறக்கணிக்காமல் விடுறதுமான வாதத்துக்க நிக்காதிங்கோ. நன்றி!

நான் உங்களது தலைப்பை பார்த்து கருத்து அங்கு எழுதினேன்... ஆனால் நான்கு இடங்களிலும் 3ல் தான் போட்டு இருக்கிறார்கள்...

மற்றும் படி உங்களின் வேண்டுகோளை யாரும் ஏற்கவில்லை எண்று எண்ணிவிடாதீர்கள்...

Edited by தயா

நிழலி,

என்னுடைய கருத்தை சரியாகப் படியுங்கள். யாரும் யாரையும் மட்டம் தட்ட வேண்டாம் என்றுதான் எழுதியுள்ளேன். அப்படி மட்டம் தட்டுவது சிறுபுத்தி என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

கலைஞனுக்கு இணையத் தளங்களில் கருத்து எழுதுவது ஒரு முக்கிய செயற்பாடாகத் தெரிகிறது. எனக்கு சன் குழுமத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பது முக்கியமாகத் தெரிகிறது. இன்னொருவருக்கு வேறொன்று முக்கியமாகத் தெரியலாம்.

இதில் யாரும் யாரையும் மட்டம் தட்ட வேண்டாம் என்று சொன்னேன்.

இது கலைஞன் எழுதியது. இதற்கே என்னுடைய பதிலை எழுதியிருக்கிறேன்.

முக்கியமாக செய்யவேண்டிய வேலையைவிட்டுப்போட்டு படங்கள் புறக்கணிக்கிறதும் புறக்கணிக்காமல் விடுறதுமான வாதத்துக்க நிக்காதிங்கோ. நன்றி!

அயன் புறக்கணிப்பு உட்பட நான் என்ன சொல்கிறேன் என்பது புரியாமலேயே பலர் கருத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அவசரபுத்தியும் வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நாங்கள் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் தவறுகளை செய்வதே எங்களுக்கு வாடிக்கையாகி விட்டது. உண்மையிலேயே கடந்த 16 ந்தேதி கனடாவில் எம்மவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடி எழுச்சி என்பது கனடாவின் வரலாற்றிலேயே இடம்பிடித்த ஒன்றாக உணரப்படுகிறது. எதனால் இவ்வளவு எழுச்சி கொண்டோம்?

நாளாந்தம் தாயகத்தில் சிங்களபேரினவாத அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைகள்தானே எம்மை இவ்வளவு தூரம் கொதித்தெழ வைத்தது. ஒருநாள் சாதித்ததில் இனப்படுகொலைகளை அடியோடு நிறுத்தக்கூடிய அளவிற்கு அனைத்துலகம் சிறிலங்காவுக்கு ஏதேனும் தடைகள் விதித்து சட்டங்கள் இயற்றிவிட்டதா நாம் ஆறி அமர்வதற்கு? மலைபோல கண்முன்னே சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட கைக்கூலிகள் எம்மினத்தின் விடுதலைக்கு எதிராகச் சர்வதேசத்தின் தெளிந்த பார்வைகளைத் தடுக்க முயல்கிறார்கள். இது சிங்களத்தினால் மட்டுமல்ல இந்திய வல்லாதிக்கத்தாலும் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை. ஒரு நாள் எழுந்தோம். களைத்துப்போனோமோ?

பரப்புரை என்பது மிகவும் அவசியமான ஒன்று சிங்களர்கள் எங்களுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்களை உருவாக்கி எங்களின் நிதானத்தை உடைக்க முயல்வது கண்கூடு. எங்களைக் கோபப்படுத்துவதுபோல் சீண்டி எங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளார்கள். அவர்களுக்கு இலங்கை என்ற தீவு ஒரு சிங்களப்பெளத்த நாடாக மட்டுமே ஆக்கவேண்டும் என்ற பேராசையில் தமிழினத்தையே அழிக்கும் கொடூரமான உச்சக்கட்டத்தில் நிற்கிறார்கள். அவர்களின் இந்த உச்சக்கட்டந்தான் இலங்கைத்தீவு என்பது இரண்டு நாடுகளைக் கொண்ட ஒரு தீவு என்பதை உலகிற்கு உணர்த்தவதற்கு பெரும் சாட்சியாக மாறி இலங்கைத் தீவின் வரலாறுகளைத் தோண்டிப் பார்க்கும் புதிய பரிமாணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தப் புதிய பரிமாணத்தை அனைத்துலக ரீதியில் வெளியே கொண்டு வந்து கொண்டிருக்கும் பாரியபணியைப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பணியில் அண்மைக்காலங்களில் பெருவெற்றிபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில் சிங்களத்தின் பேராசை தவிடுபொடியாவதும், சிங்களத்தினூடாக இந்தியப் பிராந்திய வல்லாதிக்கத்தின் கனவும் சிதைவதும் ஒரே சமயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் நாளாந்தம் ஒவ்வொரு படியாக ஏறி வருகிறோம் கண்ணக்கெட்டிய தூரத்தில் தான் இலக்கு இருக்கிறது. இப்போத உள்ள மூச்சை இன்னும் கொஞ்சம் அதிகரிப்போம் இது காலத்தின் தேவை என்று பட்டும் படாமலும் சொல்வதைக் காட்டிலும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து உரிமையோடு செயற்படுவோம்.

எங்கள் உறவுகளை அழிக்கப் புறப்பட்டவர்கள் சளைக்கவில்லை. இன்னும் சாகடிப்பதற்கு ஆயிரம் வழிகளை ஆராய்கிறார்கள் செயற்படுத்துகிறார்கள். குரல் கொடுக்கவேண்டியவர்கள் எங்கள் எங்கள் குறுகிய சுயதேவைகளைப் பூர்த்தி செய்ய காலப்பணிகளை புறம்தள்ளிவிட்டு நடக்க முயல்கிறோம். விருந்துகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் ஒரு மணிநேரம் தாயகவிடுதலைக்கான பணிக்கு ஒதுக்குவதால் எவரும் குறையப்போவதில்லை.

  • தொடங்கியவர்

பின்னூட்டல்கள் போடுகின்ற எல்லாருக்கும் உளம்கனிந்த நன்றிகள்!

சிங்களவன்களின்ட வலைத்தளங்கள் எண்டாலும் பரவாயில்ல. பேசாமல் இருக்கலாம். நாங்கள் 400,000க்கு மேற்பட்ட தமிழர் கனடாவில இருக்கிறம். நாங்கள் வாய் பொத்திக்கொண்டு இருகேக்க சிறீ லங்காவில இருந்து சிங்களவன்கள் எங்களை மிகவும் கேவலமாக எங்கட கனேடிய அரச ஊடகங்களில கருத்துக்கள் எழுதுறதை பார்க்க, அதுகளை வாசிக்க வயிறு பத்தி எரியுது.

எனவேதான் கொஞ்சம் உருக்காமான வேண்டுகோளை இதில விடுத்தன். யாருக்காவது இதனால் மனக்கசப்பு ஏற்பட்டு இருந்தால் மன்னிச்சு கொள்ளவும்.

நன்றி!

சிங்கள பரதேசிகள் சிறீ லங்காவில இருந்து cbc கும் SBS கும் பின்னோட்டம் போடுறாங்கள்....SBSஇல் இப்ப சிங்களவனின் பின்னோட்டம் அதிகமாக இருக்கிறது அது அவர்கள் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை தயாரிப்பதை பாதிக்கும்..தயவு செய்து எங்களுக்குள் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டாமல் அங்கே போய் சிங்களவனை மட்டம் தட்டுவோம்..வாருங்கள் பிளீஸ்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் கலைஞன்!

நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. நீங்கள் அல்லறும் மக்கள் மீது வைத்துள்ள அக்கறையின் நிமிர்த்தம், அல்லது இரக்கம் காரனமாக உங்கள் கோரிக்கையில் வார்த்தைப்பிரயோகம் சிலவேளை காரசூரமாக இருந்திருக்கலாம்.

உங்களைப்போல், அதே மக்கள்மீது அக்கறையுள்ளவர்களை இந்த வார்த்தைப்பிரயோகத்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த சந்தர்ப்பம் இல்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் கடமையை நீங்கள் தொடர்ந்து செய்ய உதவியாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.