Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

21ஆம் திகதி ஒட்டாவா உரிமைப்போரினில் நடந்தது என்ன?

Featured Replies

இருட்டறையில் வாழ்ந்துகொண்டு ஏதுடா கனவு :unsure:

அருட்டுவதை உணர்ந்துகொண்டு ஆளுவாய் நனவு

மருட்டிவிடும் மாயையை மறந்துவிடு

நீ மாறிவிடு மாறிவிடு மாறிவிடு

தத்துவங்கள் பேசி - வீணே காலத்தை ஓட்டி

பித்துப் பிடித்தது போல் பிதற்றல்கள் போதும்

சித்தன் போல எண்ணி அறிவுரைகள் சொல்லி

பித்தர் எமக்கிங்கு சினங் கிளப்ப வேண்டாம்!

:mellow:

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

கத்த கத்த கேட்காத உலகம்,

கதற கதற செவிமடுக்காத சர்வதேசம்,

அமைதி வழி நின்று அனைத்தையும் முயன்றும் அழிவு செய்பவனுக்கு பின்னால் அணிதிரளும் இந்த பாழாய் போன நாசமறுந்த நாடுகள்,

எல்லாம்

இனி

சிங்களவர்களின் பிணங்கள் தெற்கில் குவிந்தால் மட்டுமே

எம்மை நோக்கி திரும்பும்

போதும் இனி சர்வதேசம், மனித உரிமை, நியாயதிக்கப் போராட்டம் என்று குத்தி முறிந்தது எல்லாம் போதும். நல்ல பிள்ளையாக இருந்தால் ஒரு மயிரையும் புடுங்கேலாது. தலிபான் வைத்தியம் தான் சாலச் சிறந்தது

சிங்களவர்களின் பிணங்கள் தெற்கில் குவிந்தால் மட்டுமே Kukule Ganga Dam explore mor then 5 million sinkales going putham karnam kassamy :unsure::mellow:

  • தொடங்கியவர்

ஆஹா அற்புதம்...வசி சுதா...

எல்லாம் சர்வ மயம் எல்லாம் சர்வ மயம் எனும் மாயை நம்மை விட்டால் தான் அவர் கூறுவதும் நடக்கும்.

நாங்கள் கோவிக்க என்ன இருக்கிது. அவர்கள் அரசியல்வாதிகள் தானே. தங்கள் உண்மையான முகங்களை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களால செய்யக்கூடியது தங்கள் கதிரைகளை காப்பாற்றிக்கொள்வதும், தங்கள் கதிரைகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடந்துகொள்வதும்தான். இதனால் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள். மனித உரிமைக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும் மதிப்புகொடுக்கும் ஜனநாயக நாடு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். இந்த ஜனநாயகவாதிகள் Talk Showவில் கலந்துகொள்வதற்கு மட்டும்தான் லாயக்கு. ஜனநாயகமும், ஜனநாயகவாதிகளும் வாழ்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ருத்ர தாண்டவத்தை அவதாராக வைத்துக் கொண்டு மனம் துவழாது என்ன செய்யலாம் என்று கூறுங்கள்.

ஒரு மூத்த வீரர் கண்ணீர் விட்டே வளர்த்தோம் என்ற உண்மைக் கதையை எழுதியிருந்தார். வாசிக்க வேண்டியவர்கள் வாசித்தால் நான் முன்னர் சொன்ன வாசகத்தின் அருத்தம் புரியும். எண்பதுகளிற்குப் பின்னர் பலருக்கு என்ன நடக்குது என்று தெரிய வாய்ப்பில்லை. பூனை கண்ணை மூடிக்கொண்டு பால்குடிப்பதுபோல் ஒருசிலர் நடக்கின்றனர்.

நாங்கள் மனம் துவழவில்லை. அம்மன் எங்களை மனம்துவழ விடமாட்டாள். பயனற்ற காரியங்களில் எங்களுக்கு நாட்டம் இல்லை. இந்துக் கடவுளர்களின் மகிமையை முற்றிலும் உணர்ந்தவர்கள் நாம். நாங்கள் 100 வீதம் தன்னலம் கொண்டவர்களல்ல. எங்கள் பின்னூட்டு(reply) மட்டுறுத்தலுக்கு(moderation) உள்ளாகிறதால் வேறுசில விடயங்களைச் சொல்லாது தவிர்க்கிறேன். இந்துக் கோயில் சென்று கும்பிடுங்கள் பலன் கிட்டும்.

தாண்டவம் நடக்கும். நடக்கும்போது நீங்களே பாருங்கள். வெல்லும் தமிழ்! வெல்வார் தமிழர்! வெல்லும் இந்து மதம்!

ஓம் நமசிவாய

அம்மனே துணை

Edited by vengaayam

இதற்கு அரசியல்வாதிகளை நொந்து என்ன பலன்??? நாம் அவர்களைப் புரிந்து கொண்டதிலும் பார்க்க, அவர்கள் எங்களை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்கள். எமது கொடியைக் கிழே வைக்குமாறு சொன்னபோது நாம் மறுத்திருக்கவேண்டும். விட்டுக் கொடுத்ததினால்தான் எமக்கு இந்த நிலை. அதுசரி, தலைமைத்துவம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும். அதுவே தகிடத்திமி போட்டால், வேற்றுநாட்டு அரசியல்வாதிகள் எம்மாத்திரம்????

கனடாவில் உள்ள அரசியல் சாணக்கியன் நேருவே தேசியக்கொடியை தூக்கவேண்டாமாம் என்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் சாணக்கியம் பேசுகின்றார். மற்ற ஆக்களை குறை சொல்லி என்ன பயன்? :rolleyes:

கனடாவில் உள்ள அரசியல் சாணக்கியன் நேருவே தேசியக்கொடியை தூக்கவேண்டாமாம் என்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் சாணக்கியம் பேசுகின்றார். மற்ற ஆக்களை குறை சொல்லி என்ன பயன்? :D

:rolleyes::blink::lol: இன்னும் அவரை 'அரசியல் சாணக்கியன்' என்று நம்புகிறீர்களே கலைஞன் <_<<_<<_<

இப்போதுள்ள நிலைமையில், கனடாவில் கவனயீர்ப்பை நடத்துவதைவிட, அமெரிக்காவில் நடத்துவது அதிக பலனைத் தரும். அமெரிக்கா கொஞ்சமேனும் எமக்காகக் குரல் கொடுக்கிறது. ஆனால் கனடா??? நாம் இவ்வாறு செய்யும்போது கனடிய அரசியல்வாதிகளும் எங்கள் பக்கம் திரும்பப் பார்ப்பார்கள். அதோடை, அமெரிக்காவில் என்றால் கவனயீர்ப்புகள் உரியமுறையில் ஒழுங்காக நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனெடியத் தலைநகர் ஒட்டாவாவில் நடந்தது என்ன?

21 ஏப்ரல் 2009 பிற்பகல் கனெடியத் தலைநகர் ஒட்டாவாவில் ஆண்டவர் சந்நிதியில் மண்டியிட்டதுபோல் ஒரு மாணவ சமுதாயம் இனம் காக்க இரஞ்சி நின்றது.

இனத்தைக் காக்க எழுந்த இளையோரே! உங்கள் கைகளில் இருக்கிறது அனைத்தும். புதிய சரிதத்தை எழுதப்போகும் ஒரு புதிய தலைமுறையாய் தோற்றம் பெற்றுள்ளீர்கள். உங்கள் பின்னால் எங்கள் இனமே திரளும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

முற்றிலும் நீங்கள் சொல்லறது சரிதான் இங்குள்ள தலைமை யாரையும் ஆலோசிக்காது தான் எடுக்கும் முடிவே சரியானது என எண்ணுகிறது உண்மையானவர்களை புறம் தள்ளுகிறது.

ஏற்கனவே புலிகளுக்கு நிதிசேகரித்த நிகழ்வில் கலந்துகொண்டதாக குற்றசாட்டுக்கு முகம் கொடுத்திருக்கும் லிபரல் கட்சி நேற்றைய நிகழ்வில் கலந்து கொள்ளாததின் உண்மைக்காரணம்: சில வேளைகளில் விரைவில் கனடா ஒரு தேர்தலை சந்தித்தால் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு வராமல் தவிர்ப்பதற்காக நாசுக்காக கடைசி நேரத்தில் காலைவாரிவிட்டது.ஆனால் இச்சமயத்தில் இந்த நடவடிக்கை பொருத்தமானதாகவில்லை.இதே நேரம் பிரதமர் எட்மன்டனில் நடந்துகொண்ட முறை மிகவும் கேவலமானது,அவர் கலந்துகொண்ட நிகழ்வில் இருந்து பின்கதவால் சென்றது.பின்னர் உணவுச்சாலையை சென்றடைந்த மக்களை சந்திக்காது தவிர்த்து சென்றது இது கேவலமான பிரதமர் என்பதையும் சிங்கள ஆட்சிக்கு முண்டுகொடுப்பவர் என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளார்.இவர்களை நாம் என்னசெய்யலாம்

அடுத்த தேர்தலுக்கு ஒருதமிழரை எப்படியாவது பாராளுமன்றம் அனுப்பவேண்டும்

தமிழர் நினைத்தால் ஸ்காபுரோ,ஈரோபிக்கோ,மிஸிசாகா இதில் ஏதாவது ஒரு தொகுதில் என்.டி.பி யை அமரவைக்கலாம்.இனிமேல் ரோசத்துடன் NDP யை எல்லோரும் இணைந்து ஆதரிப்போம்

  • தொடங்கியவர்

சிலர் சாணக்கியனாக வலம் வரலாம் அதற்க்கென்று இந்த இழிநிலைக்கு தள்ளியவர்களை சாணக்கியனாக அழைப்பது பொருத்தமில்லை. அகம்பாவமும் கர்வமும் அவர்களை மட்டுமல்ல உடன் இருக்கும் நல்லவர்களையும் சேர்த்தே அழிக்கிறது.

ஆட்டு மந்தையையும் மாடுகளையும் பட்டியில் இருந்து அவிழ்த்து காட்டுக்குள் விட்டது போல் தான் இந்த 14 நாட்களும் நடந்தது. ஒரு முழுமையான வழிகாட்டுதல் தர சாணக்கியம் இல்லை எனில் மற்றவர்களுக்கு விட்டு கொடுக்கும் தன்மை - தாரளம் வேண்டும் ஏன் அதிகாரம் செய்கின்றீர்கள்? இதுதான் எங்கள் தேசிய தலைவரிடம் இருந்து நீங்கள் கற்ற பாடமா?

மற்றவரை மதித்து வாழுங்கள். மனம் நோக செய்யாதீர்கள்.

இன்று வரை சிகாகோ நடை பயண மாணவர்களை ஆதரித்தீர்களா?

11நாள் உண்ணா நோண்பு இருந்தவர்களை காட்சி பொருளாகத்தானே நடத்தினீர்கள் அவர்களின் உறவுகளுக்கு என்ன பதில் சொன்னீர்கள்?

14 நாட்கள் தங்களை தியாகம் செய்து ஊழியம் செய்த தொண்டர்களை என்ன செய்தீர்கள்?

உங்கள் மேல் குறைகள் உள்ளன ஏனெனில் முறையான திட்டமிடலில் இருந்து தவறிவிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள்....இயலவில்லை எனில் விலகுங்கள் இளைய சமுதாயத்திற்கு வழியும் முடிந்தால் நல்ல ஆலோசனைகளயும் தாருங்கள் கனடா வாழ் தமிழ் மக்கள் மிகுந்த ஒத்துழைப்பை இதுவரை தந்துள்ளனர் அவர்களின் மனம் எல்லாம் அல்லலில் துன்புறும் வன்னி மக்கள் பாதுகாப்பும் தமிழ் தேசியமும் தான். இந்த நல்ல உள்ளங்களை நோகடிக்காதீர்கள்...

  • தொடங்கியவர்

http://gkanthan.wordpress.com/index/eelam/kadavul/

பகட்டான கோயில் அமைத்தோமே -நாம்

பங்கரில் வாழ்வது தெரியவில்லையா

பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று

பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா

பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை

பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா

பண்டிகையும் திருவிழாவும் செய்தோமே -நாம்

குண்டினால் சாவது தெரியவில்லையா

தேரில் வைத்து இழுத்தோமே -நாம்

தெருவில் நிற்பது தெரியவில்லையா

பன்னீரால் தீர்த்தம் கொடுத்தோமே -நாம்

செந்நீரில் தோய்வது தெரியவில்லையா

பூங்காவனத் திருவிழா செய்தோமே - இன்று

தூங்காத எம்துயர் தெரியவில்லையா

நமசிவாய என்று துதித்தோமே - காற்றில்

நச்சுவாயு வருவது தெரியவில்லையா

மேளமும் தாளமும் இசைத்தோமே -இன்று

மரணஓலம் இசைப்பது தெரியவில்லையா

கண்மூடி நீயும் இருப்பதேனோ -வெறும்

கல்லன்றி வேறில்லை என்பதாலோ

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் புலிக் கொடி பிடிக்கவில்லை என தெரிந்து கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் புலிக் கொடி பிடிக்கவில்லை என தெரிந்து கொள்ளலாமா?

பிடிச்சா கை நோகும் என்றபடியால்....

  • தொடங்கியவர்

என்.டி.பி. முனைந்து கொண்டுதான் இருக்கிறது...அதன் முன் தமிழர்களுக்கு நல்ல வழிகாட்டி தேவை. அரசியலில் சுயலாபம் தேடாத தமிழர்கள் உள்ளனர் விட்டு கொடுப்பும் அர்பணிப்பும் தற்போதைய ஆட்களுக்கு வரவேண்டும்.

ஏனென்றால் இவர்கள்( சாணக்கியர்கள் ) அரசியல் இராசதந்திரம் செய்து வருகின்றோம் எங்கள் பணியை பழுதாக்காது சொல்வதை செய்யுங்கள் என வேண்டியதால்....

உண்மையான உண்ணா நோன்பினையும் சேர்த்தல்லவா காயப்படுத்தினார்கள்.

இருபது வருடங்களாகச் செய்யமுடியாததை இப்போது செய்யப்போகிறார்களாமா? அப்படியென்றால், இவ்வளவு ஆண்டுகளும் என்னத்தைப் புடுங்கினார்களாம். அவர்களை நம்புவதைவிடுத்து, இளைய தலைமுறை தம்வழியில் செல்வதே சிறந்தது. அப்படி நீங்கள் நம்புவீர்களேயானால் உங்கள் உழைப்புகள் அனைத்தும் தேசியத்திற்கெதிரானதாகத்தான

  • தொடங்கியவர்

இவரைப் போன்று எத்தனையோ இளையோர்கள் தம்மை அர்பனிக்க காத்திருக்கும் வேளையில் இந்த பெயரிடப்படாத தலைமை ஒரு தன்னல கும்பலிடம் சிக்கிக் கொண்டுள்ளது வேதனை.

இவரைப் போன்று எத்தனையோ இளையோர்கள் தம்மை அர்பனிக்க காத்திருக்கும் வேளையில் இந்த பெயரிடப்படாத தலைமை ஒரு தன்னல கும்பலிடம் சிக்கிக் கொண்டுள்ளது வேதனை.

ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்களே. அவர்கள் குளிர்காய்வது, ஆயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்களின் மீதும், லட்சக்கணக்கான மக்களின் அழிவுகளின் மேலும் என்பதை மறந்து விடுகிறார்கள். தலைமை என்பது தலைமைத்துவத்தைக் கொண்டது. அவ்வாறான இடத்திலிருப்பவர்கள் நினைத்தால் எதனையும் செய்து முடியும். ஆனால், அவரும் தன்னலவாதியாக இருப்பதனாலேயே எமக்கு இந்த நிலை. ஆனால், இவற்றிற்கெல்லாம் நிச்சயம் விரைவில் ஒரு முடிவு வரும். அப்படி வந்தாலும் ஒரு பிரியோசனமும் இருக்கப்போவதில்லை. காரணம் அதற்குள் எல்லாம் முடிந்துவிடும். ஆனால் ஒன்று, இவற்றுக்கான விலையை அவர்கள் நிச்சயம் கொடுத்தேயாகவேண்டும். ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகமும், மக்களின் சாபமும் இவர்களைச் சும்மா விடும் என்று நான் நினைக்கவில்லை.

  • தொடங்கியவர்

தலைமை என நான் குறிப்பிடுவது நீங்கள் கூறிய தலைமைத்துவம் தான்...தனி ஆள் இல்லை...

தேசிய தலைவரின் பொறுமையை பாருங்கள் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அவர் ஆசானுக்கும் ஆசான்...

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்...

லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

மலையோ அது பனியோ நீ மோதி விடு

  • தொடங்கியவர்

உண்மையிலும் உண்மை....

  • தொடங்கியவர்

கனேடிய மாணவர் சங்கத்தினரின் குரல் ஹார்பருக்கு கேட்கலயா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.