Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கானாபிரபா எழுதிய கம்போடியா - பயண நூல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cam-225x300.jpg

நட்பு, பகைமை, குரோதம், நம்பிக்கைத் துரோகம், ஆட்சிக் கவிழ்ப்பு, நில ஆக்கிரமிப்பு, அரச பயங்கரவாதம். ஒரு யுத்த பூமியில் இவையெல்லாம் சர்வ சாதாரணம். உலகமெங்குமான பொது வழமை.

கம்போடியா மட்டும் விலகியோட முடியுமா. அங்கும் அதுதான் நடந்தது. இரத்தம் தோய்ந்த இம்மண்ணில் எழுதியதற்கான வினையை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கம்போடிய நாணத்தின் பெறுமதி அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. வாழ்க்கைத் தர படு மோசமாகி விட்டது. கை கால் முடமான சந்ததியும், அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் யாரென்றே தெரியாத பரம்பரையுமாக மக்கள் வாழ்வினை இழந்திருக்கிறார்கள். போரின் வடுக்கள் இன்னமும் முற்றாக அழிந்து விடவில்லை.

பதவி வெறியும், என்னை விட்டால் யாரிங்கே உண்டு என்று எகத்தாளம் இட்ட ஆட்சியாளரும் அவர் தம் அடிப்பொடிகளும் இன்று காணாமல் போனோர் பட்டியலிலும், சிறைக்கதவுகளின் பின்னாலும் இருக்கின்றனர்.

இப்போது தான் ஏதூ அமைதிச் சுவாசத்தை ஏற்றி கொண்டிருக்கிறது அம்மண்.

கம்போடியாவின் யுத்த வரலாறு நீண்டது. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் அது ஆரம்பிக்கிறது. அதுவரையான கம்போடிய மன்னராட்சி இரண்டாம் ஜெயவர்மனின் கைமர் பேரரசுக் காலத்துக்கு மாறியது. அது தான் புள்ளி. அத்தோடு கம்போடியாவின் ஆளுகை வந்தேறி வென்றார்களிடம் கைமாறியது.

கி.பி 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் தாய்லாந்து மன்னர்கள் அவ்வப்போது படையெடுத்து மதம் பரப்பினார்கள். தேரவாத பெளத்தம் அப்போது தான் ஆரம்பிக்கிறது.

கம்போடியா ஒரு மத்தளம் போல. இரண்டு பக்கமும் அடிவாங்கிக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் வியட்னாம். அப்பால் தாய்லாந்து. இரண்டு பேருமே மாறி மாறி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரையான இந்தக் காலம் கம்போடியாவின் கறை படிந்த காலம்.

1890 இல் கம்போடியா ஒரு பெரும் போரைச் சந்தித்தது. பெரும் போர். பேரவலத்தைத் தந்த போர். அதுவரை வீரத்தில் வீறு நடை போட்ட கம்போடியாவின் கால்களை முடமாக்கிப் போட்ட போர். கம்போடியாவின் வீரம் இந்தப் போரின் பின் காணாமல் போனது. அரசியல் ஸ்திரம் ஆட்டம் காணத் தொடங்கியது.

பக்கத்து நாடுகள் விடுவார்களா. ஆளுக்காள் நாட்டைக் கூறு போட முனைந்தனர். ஏதாவது செய்தாக வேண்டும். அப்போதைய கம்போடிய மன்னன் Norodom க்கு வேறு வழி தெரியவில்லை. பக்கத்து நாட்டுக்காரர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எங்கோ இருந்த பிரான்ஸ் நாட்டின் காலில் விழுந்தான். காவலன் என்ற பெயரில் பிரான்ஸ் உள் நுழைந்தது.

சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையென்பார்களே. அதுதான் கம்போடியாவில் நடந்தது. பிரான்ஸ் தொடர்ந்து தொன்னூறு ஆண்டுகள் கம்போடியாவில் ஆதிக்கம் செலுத்தியது. இல்லை. கபளீகரம் செய்தது.

கோயில்களில் புதைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் குவியல் குவியலாக திருடப் பட்டன. அற்புதமான சிற்ப சிலைகள் உடைத்தும் பெயர்த்தும் எடுக்கப் பட்டன.

1953 ஆம் ஆண்டு பிரான்ஸ் விடை பெற்றது. கொள்ளையடிப்பதற்கு ஏதும் மீதமிருக்கவில்லைப் போலும். அப்போதைய கம்போடிய மன்னன் Sihanouk , People’s Socialist Community (Sangkum Reastr Niyum) என்ற அரசியல் கட்சியையும் ஸ்தாபித்தான். 1955 இல் குடியாட்சி மலர்ந்தது. Sihanouk இவனே நாட்டின் தலைவனும் ஆனான். ஆனால் கோர யுத்தம் கம்போடியாவைத் தன் பிடியில் இருந்து விட்டு விடவில்லை.

1960 களில் நிலவிய வியட்னாமிய யுத்தத்தின் போது கம்போடியா நடுநிலைமையைத் தான் முதலில் பேணியது. சோவியத் நாட்டிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ சார்பற்ற நிலை அது. இடையில் என்ன நடந்ததோ. அமெரிக்காவுடனான இராஜ தந்திர உறவினை வெட்டி விட்டு வியட்னாமிய கம்யூனிஸ்ட் போராளிகளுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டினார் Sihanouk.

வியட்னாமியப் போராளிகளின் பாசறைகள் கம்போடியாவெங்கும் பரவின. ஆனால் துரதிஸ்டம் மீளவும் அமெரிக்காவோடு கை கோர்த்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தை வழங்கியது. கம்போடிய பொருளாதாரம் மீள முடியாமல் வீழத் தொடங்கியது. வியட்னாம் போராளிகளா? சொந்த நாட்டின் பொருளாதாரமா? வேறு வழியில்லை. அமெரிக்காவுடன் கை குலுக்கியே ஆக வேண்டும். பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அப்போதைக்கு அது ஒன்றே தெரிவு.

அமெரிக்காவோடு Sihanouk கூட்டுச் சேர்ந்தார். அமெரிக்காவின் கடைக் கண் பார்வை இப்போது உடனடித் தேவை. என்ன செய்யலாம். இருக்கவே இருக்கிறது கம்போடிய மண்ணில் வியட்னாம் போராளிகளின் பாசறைகள். காட்டிக் கொடுத்து விடலாம்.

-கம்போடியா இந்தியத் தொன்மங்களை நோக்கி நூலிலிருந்து

0 0 0

வலைப்பதிவில் எழுதப்பட்ட தொடர்கள் நூலுருவில் வெளியாவது இதற்கு முன்னரும் தமிழ்ச்சூழலில் நடந்திருக்கிறது. அவ்வாறே கானா பிரபா எழுதிய கம்போடியா பயணக் கட்டுரைத் தொகுப்பு தற்போது நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது.

75 க்கும் மேற்பட்ட வண்ணப் படங்களோடு இந்நூல் வெளியாகியிருப்பது ஒரு சிறப்பு. தவிரவும் இத்தொடர் வலைப்பதிவில் வெளியானபோது கருத்திட்டவர்களின் கருத்துக்களையும் இந்நூல் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இளையதம்பி,டாக்டர் எம் கே முருகானந்தன், யோகன்பாரிஸ், முத்துலட்சுமி கயல்விழி, ஆயில்யன், மது, புதுவை சிவா, சுடர்மணி, சதங்கா, சின்ன அம்மணி, ராமச்சந்திரன் உசா, ஜி.ராகவன், சித்தன், போதிவனம், கோபிநாத், சோமிதரன், வடுவூர்குமார், சுரேகா, சாத்திரி, நிஜமா நல்லவன், லோசன், சந்தனமுல்லை ஆகியோரின் பின்னூட்டங்கள் நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

0 0 0

கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன. காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார

கானாபிரபாவுக்கு இதயபூர்வமான வாழ்த்துகள்! உங்கள் படைப்புக்கள் தொடரட்டும். அடியேனும் இணையவழியூடாக ஓர் பிரதியை பெற்றுள்ளேன். நூல் எனது கையிற்கு கிடைத்ததும் நூல் பற்றிய எனது பின்னூட்டல்களையும் இங்கு தருகின்றேன்.

இதேபோல்.. தூயாவின் நூலையும் விரைவில் எதிர்பார்க்கின்றோம். நூல் உருவாக்கத்தில் பங்குகொண்ட சயந்தனுக்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளர்ந்த பல உறவுகளில் கானாவும் ஒருவர்.

இன்று இங்கு அவரை காணக்கிடைப்பதில்லை. :D

ஆனால் உலகளாவியளவில் அவர்களை தேடும் போது அவரது ஆக்கங்களுக்கு பஞ்சமில்லை. எங்கிருந்தாலும் வாழ்க :)

  • கருத்துக்கள உறவுகள்

கானாபிரபாவுக்கு இதயபூர்வமான வாழ்த்துகள்! உங்கள் படைப்புக்கள் தொடரட்டும்

  • 1 month later...

சயந்தன், இணையவழி நூலை வாங்கினேன். இன்னமும் கைகளிற்கு வந்து சேரவில்லை ஒரு மாதம் ஆகப்போகின்றது. தாயக நிலமை காரணமாக இந்த காலதாமதமா அல்லது இன்னமும் புத்தகம் வெளியிடப்படவில்லையா?

கானாபிரபாவின் கம்போடியா பயணநூல் இந்தியாவில் இருந்து நீண்டபயணம் செய்து இன்று வீடுவந்து சேர்ந்தது.

மேலோட்டமாக நூலை பார்த்ததோடு சில அத்தியாயங்களையும் வாசித்து பார்த்தேன். நான் கடைசியாக இப்படி புத்தகம் வாசித்தது யாழ்ப்பாணத்தில் இருந்தபோது என்று நினைக்கின்றேன். அப்போது யாழ் நூலகம் சென்று புத்தகங்களை இரவல் எடுத்து வாசிப்பேன். பல வருசங்களின் முன்னர் புத்தகம் வாசித்தபோது ஏற்பட்ட அதே துடிப்பான அனுபவம் பிரபாவின் புத்தகத்தை வாசித்தபோது ஏற்பட்டது.

தமிழைப்பற்றி சொல்வதானால்... முன்பு சயந்தன் தூயாவை செவ்வி கண்டு அதை ஒலிப்பதிவாக யாழில் இணைத்து, அதை நாங்கள் கேட்டு, பின்னர் தூயாவின் தமிழ் கதைக்கும் பாணியை விமர்சனம் செய்யவேண்டிய நிலை வந்தது.

கானாபிரபாவின் எழுத்தை பார்க்கும்போது இப்போது தூயாவின் பேச்சுவழக்கு பற்றி செய்தவிமர்சனத்தை வாபஸ் வாங்கவேண்டி வந்துள்ளது என்று சொல்லலாம்.

ஏன் என்றால்..

தமிழ்நாட்டு தமிழருக்கு என்று ஓர் எழுத்து, பேச்சுவழக்கு இருக்கின்றது.

ஈழத்தமிழருக்கு என்று ஓர் எழுத்து, பேச்சுவழக்கு இருக்கின்றது.

இதேபோல் புலம்பெயர்ந்துள்ள தமிழனுக்கும் ஓர் இரண்டும்கெட்டான் எழுத்து, பேச்சு வழக்கு இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் நாங்கள் பேசுகின்ற, எழுதுகின்ற எழுத்து - தமிழ் - தமிழ்நாடு அரைவாசி + தாயகம் அரைவாசி என்ற நிலையில் இருக்கின்றது.

இதை நான் பிழையான விடயமாக சொல்ல இல்லை. மேலும் இது எங்கள் தவறும் இல்லை.

கம்போடியா பயண நூல் விறுவிறுப்பாக செல்கின்றது. மிகுதி மிச்சம் வாசிச்சுவிட்டு நாளைக்கு சொல்லிறன். இணைய நண்பர்கள், வாசகர்கள் இட்ட பின்னூட்டல்களும் நூலில் இடம்பெற்று உள்ளது.

கானாபிரபாவின் கம்போடியா பயணநூல் இன்றுவரை இருபது அத்தியாயங்கள் வாசித்து இருக்கின்றேன். இதுவரை புத்தகத்தை வாசித்தபோது ஏற்பட்ட ஏனைய எண்ணங்கள்:

இணையத்தில் ஒரு விடயத்தை பார்ப்பதற்கும், அதேவிடயத்தை புத்தகமாக பார்ப்பதற்கும் இடையில் ஏராளம் வேறுபாடுகள் இருக்கின்றது. உண்மையில் புத்தகமாக ஒரு விடயத்தை வாசிக்கும்போது இருக்கின்ற அனுபவம் இணையத்தில் வாசிக்கும்போது வராது.

கானாபிரபாபின் எழுத்துக்களை ஏற்கனவே இணையத்தில் பார்த்து இருந்தாலும், அதை நூலுருவில் பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கின்றது. சில நல்ல விசயங்கள், அதேபோல சில குறைகள் என்று சொல்லலாம்.

நல்ல விசயங்கள் என்று சொன்னால்.. நூல் விறுவிறுப்பாக செல்கின்றது. அத்தியாயங்கள் சில பக்கங்களில் முடிவதால் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கின்றது.

குறைகள் என்று சொன்னால்... புத்ககத்தை மீள்பார்வை செய்வதில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. மேலும் அதிக புகைப்படங்களை இணைத்து இருக்கலாம். எனக்கு தமிங்கிலம் சிக்கல் இல்லை. நானும் அதிக அளவில் தமிங்கிலம் பயன்படுத்துவேன். ஆனாலும், பிரபாவின் எழுத்துக்களிலும் கணிசமான அளவு தமிங்கிலத்தை கண்டது ஆச்சரியமாக இருந்தது.

பிரபாவின் இந்தப்பயணநூல் ஆய்வாளர்கள், மற்றும் மாணவர்களிற்கு நிச்சயம் பயனுள்ள ஓர் பொக்கிசமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். குறிப்பாக இந்து நாகரீகம் பற்றி படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். எனவே அடுத்த பதிப்பை இன்னும் அதிக புகைப்படங்கள் அடங்கியதாகவும் ஆய்வு செய்பவர்களுக்கு இன்னும் உதவும் வகையிலும் அமைத்தால் நல்லது என்று நினைக்கின்றேன்.

மேலும், பிரபா பல்கலைக்கழகத்தில் எந்தத்துறையில் கல்விகற்றார் என்று எனக்கு தெரியாது. ஆனால்... சில ஆய்வுகள், ஆவணப்படுத்தல் சம்மந்தமான குறுகிய / நீண்டகால கற்கைநெறிகளை பயில்வது பிரபா எதிர்காலத்தில் சற்று கனதியான வேலைத்திட்டங்களில் ஈடுபட உதவியாக இருக்கும்.

புத்ககத்தில் எனக்கு விளங்காத ஓர் விடயம்... கோயில்களை கட்டிய அரசர்களின் பெயர்கள் தமிழ்பெயர் போல இருக்கின்றது. ஆனால்.. கோயில்களின் பெயர்கள் வாயினுள் உச்சரிக்க முடியாத மொழியில் வரும் பெயராய் இருக்கின்றது.

தெரியாத பல விடயங்களை இந்த நூலை வாசித்ததன் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. பல சுவாரசியமான குறிப்புக்களும் பிரபாவின் நகைச்சுவைகளும் இடையிடையே வந்து போகின்றது.மிகுதி மிச்சம் புத்தகத்தை வாசிச்சு முடிச்சுப்போட்டு நாளைக்கு சொல்லிறன்.

கானாபிரபா எழுதிய கம்போடியா பயணநூலை நேற்று வாசித்து முடித்தேன். கானாபிரபா யாழில் முன்பு எம்முடன் கருத்துக்கள் பகிர்ந்து இருந்தார். யாழ் கள உறவு ஒருவர் தனது ஆக்கத்தை நூலுருவில் கொண்டுவருவது மகிழ்ச்சியை தருகின்றது.

கானாபிரபாவின் முயற்சி இணையத்தில் எழுதுகின்ற பலருக்கு நிச்சயம் ஓர் முன்னோடியாக இருக்கும். என்னதான் இணையத்தில் எழுதினாலும் வாசித்தாலும்... நூலாக அதை உருவாக்குவது, நூலாக அதை வாசிப்பது என்பது ஓர் இனிமையான, மற்றும் வித்தியாசமான ஓர் அனுபவம்.

பிரபா நூலின் இறுதியில் 19.03.2008 மாலை 3.00 மணியை குறித்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார். அன்றுதான் அவர் தனது கம்போடிய பயணத்தை நிறைவுசெய்துகொண்டு விமானத்தில் ஏறினார் என்று நினைக்கின்றேன். இந்த நேரத்தை என்னாலும் வாழ்வில் நிச்சயம் மறக்க இயலாது. ஏன் என்றால் அந்த நேரத்தில், அதே நாளில்தான் அன்புக்கும், மதிப்புக்கும் உரிய Sir Arthur C Clarke அவர்கள் இயற்கை எய்தினார்!

சில ஆலோசனைகள் என்று சொல்லப்போனால்..

இணையத்தில் உள்ள விடயத்தை நூல் உருவில் கொண்டுவரும்போது சில மாற்றங்களை ஏற்படுத்தவேண்டி இருக்கின்றது. இணையத்தில் உள்ளதை அப்படியே வெட்டி ஒட்ட முடியாது. நூல் என்று வரும்போது அதற்கு என்று சில தனித்துவமான அம்சங்கள் இருக்கின்றது. அந்த அம்சங்கள் இணையத்தில் இருக்கும் ஓர் விடயத்தை அப்படியே முழுதுமாக மாற்றங்கள் ஏற்படுத்தாது கொண்டுவரும்போது இருக்காது.

எனவே, பிரபாவும், மற்றும் பிரபாபோல் இணையத்தில் தாங்கள் உருவாக்கிய ஆக்கங்களை நூலாக பதிப்பிக்க விரும்புவோரும் நூலுக்கு என்று உள்ள சில அம்சங்களை உள்வாங்கி, சில மாற்றங்களை செய்தபின் இணையத்தில் உள்ள தங்கள் ஆக்கங்களை பதிப்பிப்பது சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

கானாபிரபா எதிர்காலத்தில் இன்னும் பல பயனுள்ள பொக்கிசங்களான நூல்களை படைக்க வாழ்த்துகள்! பிரபாவின் முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த அவர் மனைவி, மற்றும் நண்பர்கள், குறிப்பாக சயந்தனுக்கும் பாராட்டுக்கள்! நான் பிரபாவின் புத்தகத்தை வாசித்து முடித்தபோது ஏற்பட்ட ஓர் எண்ணம் என்ன என்றால்... எங்காவது ஓர் கண்காணாத தேசத்துக்கு சென்று வருவதற்கு அல்லது விசயங்களை அறிவதற்காக எங்கள் சார்பாக ஓர் பயணத்தை மேற்கொள்வதற்கு ஒருவரை தேர்வு செய்வது என்றால் அது பிரபாவாக இருக்கவேண்டும் என்று கூட சொல்லலாம்.

இந்தவகையில்... பிரபாவின் சுவாரசியமான இந்த நூலை நீங்களும் வாங்கி, வாசித்துமகிழ்ந்து உங்கள் பங்களிப்பையும் கொடுத்து எதிர்காலத்தில் இன்னும் பல திரவியங்களை தமிழில் பிரபா கொண்டுவந்து சேர்க்க உங்கள் ஆதரவையும் கொடுங்கள். நன்றி! வணக்கம்!

Edited by மாப்பிள்ளை

வணக்கம் அன்பின் மாப்பிள்ளை

உங்களின் விமர்சனத்தை முழுவதும் வாசித்தேன், உண்மையில் நீங்கள் கூறிய குறைகளை நிச்சயம் உள்வாங்கிக் கொள்வதோடு, அடுத்த பதிப்பில் இந்த விடயங்களில் மேலும் கவனமெடுப்பேன். என் உயர்தர வகுப்பில் நான் இந்து நாகரீகத்தை ஒரு பாடமாக எடுத்திருந்தேன், அப்போது ஒரு வரியில் தான் கம்போடியாவில் தளைத்தோங்கிய இந்து மதம் பற்றிய குறிப்பு இருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ பூர்வ ஜென்ம பந்தமோ விட்டகுறை தொட்டகுறை போலவோ என் கம்போடியப் பயணம் அமைந்துவிட்டது, அது சயந்தன் போன்ற நண்பர்கள் முயற்சியால் நூலாக வந்து விட்டது. வரலாற்றினை உறுதிப்படுத்தித் தகவல்களைத் தரவேண்டும் என்ற முனைப்பு இருந்த அதே வேளை நீங்கள் சுட்டிய எழுத்துப் பிழைகளைக் கவனமெடுக்காதது பெரும் குறை தான். அதற்காக வருந்துகிறேன். ஆங்கில மூலம் வரும் காத்திரமான பயண நூலாக குறைந்தது 500 படங்களுடனாவது இது வரவேண்டும் என்றே ஆசைப்பட்டேன், ஆனால் எமது சமூகத்தில் பெரும் செலவு செய்து இப்படியான நூலைக் கொண்டு வந்து வெளியிடுவது அவ்வளவு ஒன்றும் எளிதான செயல் அல்ல என்பதாலேயே முக்கியமான படங்களோடு மட்டும் வந்து விட்டது. மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா, அமெரிக்கா பக்கம் எப்போ இந்நூல் (புத்தகசாலைகளுக்கு) வரும்?

Edited by nunavilan

கனடா, அமெரிக்கா பக்கம் எப்போ இந்நூல் (புத்தகசாலைகளுக்கு) வரும்?

வணக்கம் நுணாவிலான்

கனடா, அமெரிக்காவிற்கு கடைகளில் அனுப்பும் விநியோகச் சிக்கல் இருக்கின்றது, இணையம் மூலம் அதிக பட்சம் 20 நாட்களில் கிடைத்து விடும்.

வணக்கம் பிரபா, நீண்டகாலத்தின்பின் யாழில் உங்களைச் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்து இருங்கள், எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும், நான் ஆலோசனைகள் என்று கூறியதை தவறாக விளங்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் நூல் உருவில் உங்கள் இணைய ஆக்கத்தை கொண்டுவந்ததே படைப்பியல் ரீதியாக உங்களுக்கு கிடைத்த ஓர் வெற்றி என்று சொல்லவேண்டும். தொடரப்போகும் உங்கள் நூல்கள் இன்னும் தரம் மிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆவலும், எதிர்பார்ப்பும். எனது இதர ஆலோசனைகளை உங்களுடன் தனிப்பட தொடர்பு கொள்ளும்போது கூறுகின்றேன்.

நுணாவிலான், பிரபாவின் இந்தநூலை கனடாவில் யாழ் கள உறவான சினேகிதியிடம் இருந்து பெறமுடியும் என்று அறிந்தேன். உங்களுக்கு இணையம் மூலம் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லையென்றால்.. கனடாவரும்போது சினேகிதியை சந்தித்து நூலைப்பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன்.

Edited by மாப்பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

கானாபிரபாவுக்கு வாழ்த்துகள்! உங்கள் படைப்புக்கள் தொடரட்டும்.............

மாப்பிள்ளை

உங்கள் கருத்தை ஆக்கபூர்வமானதாகவே ஏற்றுக் கொண்டேன்.

குமாரசாமி, புத்தன், கறுப்பி

மிக்க நன்றி

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கானாபிரபா

உங்களுடைய நூல் புதிய பாட்டையில் நடைபோடுகிறது. வாழ்த்துக்கள்

கே.எஸ்.பாலச்சந்திரன்

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

  • 1 month later...

எனது தந்தையாரும் கானாபிரபாவின் நூலை வாசித்து இருந்தார். தனக்கும் கம்போடியா, அயல் நாடுகளில் இந்துமதம் இருப்பது நூலை வாசித்தபிறகுதான் தெரியும் என்று சொன்னார். நூலின் எழுத்துநடையும் வாசிப்பதற்கு இலகுவாக இருப்பதாகவும், பயனுள்ள நூல் என்றும் சொன்னார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.