Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைம் 100 என்ற பிரபல்யங்களில் ஒரு ஈழப்பெண்ணும் இடம்பிட்த்துள்ளார்

Featured Replies

நேற்று இடம் பெற்ற டைம் 100 என்ற பிரபல்யங்களின் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை மாயா என்கின்ற மாதங்கி அருட்பிரகாசம் சந்தித்துள்ளார். ஆஸ்கார் விருது வென்ற சிலம் டோக் மில்லியனர் படத்தில் பாடல்களை பாடியுள்ளவரும்,

உலக அளவில் ராப் பாடல்களை பாடி மிக பிரபல்யமாக இருக்கும் இலங்கைத் தமிழரான இவர் உலகில் உள்ள 100 மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கவுரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்சியை அமெரிக்க முதல் பெண்மணியும் பாரக் ஒபாமாவின் மனைவியுமான மிசேல் ஒபாமா தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வில் மிசேல் ஒபாமாவைச் சந்தித்து இலங்கை நிலைபற்றி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மிசேல் ஒபாமா மிக ஆர்வமாக மாயாவின் கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

தான் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்த அகதி என்பதை அவர் பலமுறை மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் புலிகளுக்கு சார்பாக பேப்பர் பிளேன்(காகித விமானம்) என்ற பாடலை வான் புலிகளுக்காக வெளியிட்டார் எனக்கூறி அமெரிக்க அரசு இவருக்கு விசா வழங்க மறுத்திருந்தது. தற்போது ஜோர்ஜ் புஷ் நிர்வாகம் அகன்று ஓபாமாவின் நிர்வாகம் இருப்பதால் அவர் அமெரிக்காவிலும் காலூன்றும் சாத்தியங்கள் காணப்படுகிறது .

அவருடைய காகித்தாள் விமானப் பாடலும், செவ்வியும் காணொளிகளாக இணைக்கப்பட்டுள்து.....

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள 100 மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கவுரவிக்கப்பட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் , மாயா அருட்பிரகாசம் .

உலகில் உள்ள முதல் 100 முக்கிய நபர்களில் ஒருவராக உங்களை டைம் சஞ்சிகை தேர்ந்தெடுத்ததில் நானும் தமிழன் என்னும் முறையில் பெருமைப்படுகின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இனைப்புக்கு தமிழச்சிக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது சொந்த நாட்டையும் தன் இனத்தையும் மறவாத தன்மானமுள்ள இந்த ஈழத்தமிழ் பெண்ணுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வில் மிசேல் ஒபாமாவைச் சந்தித்து இலங்கை நிலைபற்றி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது

ஈழத்தமிழ் பெண்ணுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்......

எனது மனமார்த்த வாழ்த்துக்கள். மென்மேலும் தழிழன் புகழ் தரனியில் பரவட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் பெண்ணுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்......

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மாதங்கி ஈழத்தமிழர்களின் அவல நிலையை உலகுக்கு தெரியப்படுத்துவதில் முன்னணியில் நிற்பது மாத்திமல்ல அவர்களின் திறமையை உலகிற்கு தெரியப்படுத்தியவரகளில் தாங்களும் ஒருவர் என்னும் போது பெருமையாக இருக்கிற:.தங்களுக்கு ஆஸ்கார் கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது.கிடைத்திருந்தால் நிச்சயம் அந்த மேடையில் தமிழரின் அவலங்களை நிச்சயம் சொல்லியிருப்பீர்கள்.தொடரும் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனமார்த்த வாழ்த்துக்கள். மென்மேலும் தழிழன் புகழ் தரனியில் பரவட்டும்.

As a result, your video has been blocked everywhere except in these locations:

American Samoa, Australia, Brazil, Canada, Christmas Island, Cocos (Keeling) Islands, Cuba, Fiji, France, Guam, Heard Island and McDonald Islands, India, Ireland, Israel, Italy, Japan, Kiribati, Mexico, Nauru, Netherlands, New Zealand, Niue, Norfolk Island, Northern Mariana Islands, Papua New Guinea, Puerto Rico, Solomon Islands, South Korea, Spain, Tokelau, Tonga, Tuvalu, United States, United States Virgin Islands, Vanuatu

http://www.youtube.com/watch?v=5t88KIiFgMs

Edited by purmaal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

த 2009 டைம் 100' வெளியிட்டுள்ள 2009 க்கான உலகின் செல்வாக்கு நிறைந்த 100 நபர்களில், ஈழத்தை சேர்ந்த, பிரபல பொப் நட்சத்திரம் மாயா அருள்பிரகாசமும் (M.I.A) இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமா, ருஷ் லிம்பங், ஜோர்ஜ் க்லூனி ஆகிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில், தமிழர் தாயகத்தை பிறப்பிடமாக கொண்டு, அகதியாக பிரித்தானியா சென்ற மயா அருள்பிரகாசமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது கடும் முயற்சியாலும், இசை ஆர்வத்தினாலும், தன்னை உலகம் முழுவதும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டவர் மாயா. சிறந்த பிண்ணனி இசைக்காக ஆஸ்கார் விருதினை தட்டிச்சென்ற 'ஸ்லம்டோக் மில்லியனர்' திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இவர் பாடிக்கொடுத்த பாடலும்பிரபல்யமானது.

பாடகர், நடிகர், தயாரிப்பாளர், டீ.ஜே, பேஷன் டிசைனர் என பன்முகங்களாக பரிமாணம் கண்டுள்ள மாயா, டைம்ஸின் 100 க்குள் வந்ததையிட்டு பெருமையடைகிறார். இது தொடர்பாக டைம்ஸ் க்கு அளித்த பேட்டியில்,

போரினால் பாதிக்கபப்ட்ட தனது கடந்த கால வாழ்வினை பகிர்ந்து கொள்கிறார். தன்னை போல் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினை பற்றி

தன்னால் வெளிஉலகத்துக்கு கொண்டு வர முடிவதற்கு, இசையுலகம் உதவிபுரிவதாக கூறும் மாயா, தனது ஒரு பாடலில் பிண்ணனி இசையில் துப்பாக்கி சத்தங்கள் கேட்கும், அது இசைக்காக அல்ல, உண்மையான சத்தங்கள், என்னால் அவற்றை உணர முடியும், காரணம் நான் உண்மையாக அவற்றை கேட்டுள்ளேன் எனக்கூறுகிறார். மேலும் சிறிலங்காவில் தொடரும் போரினால் தமிழ் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னமும் அங்கு சிக்கியிருக்கும் 300,000 தமிழ் மக்கள் உயிராபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், அவர்கள் ஒரு தவறும் செய்யவில்லையே என, உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்துள்ள போதும், அவரை தன்னை பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விட்டு விடாமல், இலங்கையில் நடக்கும் தமிழின அழிப்பை பற்றியும், தனது மக்கள் அங்கு படும் துன்பங்கள் பற்றியும், கூறுகிறார் மாயா.

நேற்று 'டைம் 100' அறிவித்தல் தொடர்பாக இடம்பெற்ற பிரபலங்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாயா, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவியான மிச்சேல் ஒபாமாவினையும், சந்தித்துள்ளார், அப்போது இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலை பற்றி அவரிடம் எடுத்துரைத்துள்ளார்.

'The 2009 TIME 100' தரப்படுத்தலில் கலை,கலைஞர்கள் பகுப்பில் இடம்பெற்றுள்ள மாயா அருள்பிரகாசம் (M.I.A) தனக்கு விருப்பமானதையும், தன்னிடமிருந்து தன்னுடைய ரசிகர்களுக்கு பிடித்தமானவற்றையும் மட்டுமே இசையில் கொண்டு வருபவர். அங்கோலாவை பிரதிநிதித்துவப்படுத்திய இசை அல்பம், பால்டிமோரில் செய்த டீஜே அல்பம், அவுஸ்திரேலிய சிறுவர்களினால் பாடப்படும் Rap அல்பம், போன்றவை இவருடைய புகழை உயர்த்தின.

இவரை பற்றி பிரலப இயக்குனரும், இசை அல்பங்கள், விளம்பரங்கள் செய்பவருமான ஸ்பைக் ஜோன்ஸ் (Spike Jonze) தெரிவிக்கையில் தனக்கு முன்னாள் என்ன நிகழ்கிறதோ அதையே தனது இசையிலும் கொண்டு வருபவர் மாயா, அவரிடம் தனித்தன்மை இருக்கிறது.

இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்,தன்னுடைய 10 வயது வரை ஆங்கில மொழியே தெரியாதவரி. எனினும், தன் முன்னே உள்ள எல்லா எல்லைகளையும் கடந்து, சிறுவயதில் இருந்தே தனக்கு பிடித்தமான அனைத்தையும் இசையில் கொண்டுவந்தார். கடந்த கோடை காலத்தில் பிலெடெப்பியாவில் தயாரிக்கபப்ட்ட ஆல்பத்தில், இராக் யுத்தத்திற்கு எதிராக, இராணுவ ஆடை அணிந்தர்வகளுடன் நின்று இவர் பாடிய பாடல் பல்வேறு விமர்சனத்துக்குள்ளாகிய போதும், எவ்வித தாக்கமும் மாயாவிடம் செல்வாக்கு செலுத்தவில்லை. ஏழ்மையிலும் வறுமையிலும் வாடும் மக்களுக்கானவர் அவர், என பெருமிதத்துடன் கூறுகிறார் ஜோன்ஸ்.

இலங்கையின் வடக்கில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்பிற்கான இராணுவ முன்னெடுப்புக்களில், இதுவரை 300,000 தமிழ் மக்கள் தமது அகதிகாளக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர், சிறிலங்கா இராணுவ முகாங்களுக்குள்ளும், தடுப்பு முகாங்களுக்கும், சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். உண்பதற்கு உணவில்லாமல், குடிநீர் இல்லாமல் தினந்தோறும் தடுப்புமுகாம்களில் செத்துக்கொண்டிருக்கும் இவ் அகதிகளில், சிறுவர்கள், இளைஞர்கள், அனைவருமே தனித்திறமை வாய்ந்த, தாயக மைந்தர்களே!

இங்கிருந்து அகதியாக சென்ற மாயாவினால் உலகின் பிரபல்யம் வாய்ந்த 100 நபர்களுக்குள் வர முடிகிறது எனின்,பெற்ற தாய் தந்தையை, சகோதரனை இழந்தும் தனது தாயக மண்ணை இழந்தும்,முட்கம்பிகளுக்குள் சிறைபிடிக்கபப்ட்டும் வாழ்ந்து கொண்டு, தமது எதிர்கால நம்பிக்கைகளையும், இலட்சியத்தினையும் மட்டும் கரங்களில் அழுத்தி வைத்துக்கொண்டு, வெளி உலகை எட்டிப்பார்க்க விரும்பும் தமிழீழ இளைஞர்களும், சிறார்களும் வெளிவந்தால்..

- ஸாரா

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...30--100-300000-

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடத்திலும்

எந்த உயரத்தில் இருந்தாலும்

தன் இனம் பற்றி பேச மறவாத அந்த சகோதரிக்கு தலைவணங்குகின்றேன்

அவரது இந்த எடுத்துக்காட்டை எம்மவர் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றேன

நன்றி

வாழ்த்துக்கள்

…..இவர் புலிகளுக்கு சார்பாக பேப்பர் பிளேன்(காகித விமானம்) என்ற பாடலை வான் புலிகளுக்காக வெளியிட்டார் எனக்கூறி அமெரிக்க அரசு இவருக்கு விசா வழங்க மறுத்திருந்தது…..

…..போரினால் பாதிக்கபப்ட்ட தனது கடந்த கால வாழ்வினை பகிர்ந்து கொள்கிறார். தன்னை போல் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினை பற்றி

தன்னால் வெளிஉலகத்துக்கு கொண்டு வர முடிவதற்கு, இசையுலகம் உதவிபுரிவதாக கூறும் மாயா, தனது ஒரு பாடலில் பிண்ணனி இசையில் துப்பாக்கி சத்தங்கள் கேட்கும், அது இசைக்காக அல்ல, உண்மையான சத்தங்கள், என்னால் அவற்றை உணர முடியும், காரணம் நான் உண்மையாக அவற்றை கேட்டுள்ளேன் எனக்கூறுகிறார்…..

…..இவரை பற்றி பிரலப இயக்குனரும், இசை அல்பங்கள், விளம்பரங்கள் செய்பவருமான ஸ்பைக் ஜோன்ஸ் (Spike Jonze) தெரிவிக்கையில் தனக்கு முன்னாள் என்ன நிகழ்கிறதோ அதையே தனது இசையிலும் கொண்டு வருபவர் மாயா, அவரிடம் தனித்தன்மை இருக்கிறது…..

……இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்,தன்னுடைய 10 வயது வரை ஆங்கில மொழியே தெரியாதவரி. எனினும், தன் முன்னே உள்ள எல்லா எல்லைகளையும் கடந்து, சிறுவயதில் இருந்தே தனக்கு பிடித்தமான அனைத்தையும் இசையில் கொண்டுவந்தார். கடந்த கோடை காலத்தில் பிலெடெப்பியாவில் தயாரிக்கபப்ட்ட ஆல்பத்தில், இராக் யுத்தத்திற்கு எதிராக, இராணுவ ஆடை அணிந்தர்வகளுடன் நின்று இவர் பாடிய பாடல் பல்வேறு விமர்சனத்துக்குள்ளாகிய போதும், எவ்வித தாக்கமும் மாயாவிடம் செல்வாக்கு செலுத்தவில்லை. ஏழ்மையிலும் வறுமையிலும் வாடும் மக்களுக்கானவர் அவர், என பெருமிதத்துடன் கூறுகிறார் ஜோன்ஸ்……

கன விமர்சனங்கள் இவரைப் பற்றி முன்னம் அறிந்துள்ளேன் ஆணால் இவைகள் இன்றுதான் அறிகிறேன் நன்றி

அருமை MIA :o உம்மைப்போல் நாமும் அந்த உணர்வில் ஒவ்வொருவடிவில் எழுவோம் இன்னும்... இன்றும்... என்றும்.... :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாதங்கியின் பெற்றோரைப்போல் இன்னும் நிறைய பெற்றோர்கள் புலம்பெயர்நாடுகளில் உருவாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாதங்கியின் பெற்றோரைப்போல் இன்னும் நிறைய பெற்றோர்கள் புலம்பெயர்நாடுகளில் உருவாக வேண்டும்.

தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இளையோரைப்பார்கும்போது....

இதில் நாம் பலமடங்கு வெற்றி பெற்றிருக்கிறோம்

அவர்களை நன்றாக ஒழுங்கமைத்து வளர்த்திருக்கின்றோம் என்று பெருமைப்படுவதுண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.