Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அருமை தொடருங்கள்...........

  • 6 months later...
  • Replies 58
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே அண்மைகாலமாக யாழ்களத்தில் ஒரே அரசியல் விவாதங்களே நடந்து கொண்டிருப்பதால் அரசியல் பற்றி ஆர்வம் இல்லாதவர்கள் களப்பக்கம் வருவது குறைந்த மாதிரி ஒரு உணர்வு இந்த நேரம்பாத்து முகத்தான் வேறை ஊருக்கு போட்டான் அதாலை நான் நகைசுவை எண்ட பெயரிலை எழுதின நாடகத்தை தூசு தட்ட வேண்டி வந்திட்டிது புதிதாக இந்த பக்கத்தை படிப்பவர்கள் இதனை ஆரம்பத்தில் இருந்து படிக்கும்படி கேட்டுக்கொண்டு தொடர்கிறேன்

சின்னாவை சங்கிலிகளால் கை மற்றும் கால்கள் பிணைத்தபடி (சேதுபடத்தில் விக்ரத்தை போல)கொண்டு வந்து காவலர்கள் வீதியின் ஒரத்தில் ஒருமரத்தில் கட்டிவிட்டு பக்கத்திலிருந்த பெட்டிகடைக்கு ரீ குடிக்க போய்விட்டசமயம் அந்தவழியால் வந்தநாரதர் சின்னாவின் காதில் மின்னி கொண்டிருந்த வைரகடுக்கனை கண்டுவிட்டு அதை எப்படியாவது சுட்டுவிட எண்ணி ஒரு பாட்டுடன் சின்னாவை நோக்கி வருகிறார்.

நாரதர். (பாடுகிறார்) உள்ளத்தில் கள்ள உள்ளம் உறங்காதென்பது வள்ளுவன் வகுத்ததடா கறுணா வருவதை எதிர் கொள்ளடா

சின்னப்பு.( மெல்லதலையை தூக்கி பாத்து) எவண்டா அவன் நான் நாப்பது தரம் பாத்த கர்ணன் பட பாட்டை பிழையா படிக்கிறது

நாரதர். நாராயணா நாராயணா

சின்னா. ஏன்டாப்பு யாரவன் ஒருபெயரை உனக்கு இரண்டு தரம் வைச்சது

நாரதர். மகனே அது எனது பெயர் அல்ல அது எம்பெருமான் கிருஸ்ணணின் மறுபெயர்

சின்னா . நான் உனக்கு மகனா குடும்பத்துக்கை குழப்பத்தை உண்டு பண்ணினா உன்னை தொலை பண்ணிடுவன் அதுசரி நீர்யார் எங்கையிருந்து வாறீர் இப்பிடி கோமாளி மாதிரி வேசத்தோடை

நாரதர். அய்யனே கோவம் வேண்டாம் நான் தேவலோகத்திலிருந்து வருகிறேன் இந்திரன் என்னை இங்கு அனுப்பியிருக்கிறான்

சின்னா (ஆச்சரியமாக) உண்மையாவா? இல்லை வேசம் போட்டுகொண்டு வந்து கதை வுடுறியா?

நாரதர். எம்பெருமான் நாராயணன் மேல் ஆணை நம்புங்கள்.நான் இந்த வழியால் வந்துகொண்டிருந்தபோதுதான் தங்களை கட்டி போட்டிருந்ததை கண்டேன்.என்ன நடந்தது என்று எனது ஞானகண்ணால் கண்டு அறிந்துகொண்டேன் அததான் உமக்கு உதவ வந்தேன்.

சின்னா. ஞானகண்ணால் கண்டீரா? உமக்கு இருக்கிறதே ஒண்டரை கண் இதுக்கை ஞானகண்வேயறயா சரி எப்பிடி எனக்கு உதவபோறீர்.

நாரதர். நீர் போதையின் பாதையில் போய் பாவங்கள் பல செய்திருக்கிறீர் அதற்கு பரிகாரமாக உமது காதில் இருக்கும் கடுக்கனை என்னிடம் தந்துவிடும் உமது பாவங்கள் போய் உம்மை விடுதலை செய்து விடுவார்கள்

சின்னா. அட்ரா அட்ரா அதுதானே பாத்தன் என்னடா எனக்கு உதவ போறாராம் எண்டு .நான் பாவம் எல்லாத்தையும் கடுக்கனா செய்து காதிலை மாட்டி இருக்கிறனா அதை கழட்டின உடைனை பாவம் போறத்திற்கு.அதெல்லாம்கழற்ற ஏலாது என்னை எப்படியும் என்ரை சின்னாச்சி வந்து காப்பாத்துவாள். சரி அதைவிடும் அங்கை தான் ரம்பா ஊர்வசி மேனகா எண்டு நல்ல வடிவான பிகருகள் இருக்காமே பாத்திருக்கிறீரா அவங்களை(எண்டு ஜொள்ளுவடிய கேக்கிறார்)

நாரதர் .அடடா லொள்ளைபார் உம்மை கட்டி போட்டிருக்கூடாது வெட்டிபோட்டிருக்கவேணும்

சின்னா. நீர் உண்மையாவே தேவலோகத்திலிருந்ததான் வாறீரா எண்டு பாக்கதான் கேட்டனான்

நாரதர் .ஒ அப்படியா அந்தசோகத்தை ஏன் கேக்கிறீர்

சின்னா. அங்கையும் சோகமா?

நாரதர். சும்மாகுறுக்கை பேசகூடாது நான் சொல்லுறதைகேளும் இந்த அழகிகளின் ஆட்டத்தையே பாத்து பாத்து அலுத்து போன எங்கள் அரசன் இந்திரன் அவர்கைளை சில காலம் பூலோகத்திற்கு போய் அங்கு எம் தமிழர்களிற்கு அவர்களது கலைசேவையை செய்துவரும்படி அனுப்பி விட்டான்

சின்னா.அடங்கொக்கா மக்கா எனக்கு தெரியாமல்போச்சே

நாரதர். ஆமாம் அவர்கள் இங்கு வந்து தமிழ் சினிமாவில் சேர்ந்து கலைச்சேவை செய்து கொண்டிருந்தபோது ஊர்வசி மார்கட்டு டல்லாகி சான்ஸ் இல்லாமல் கேரளா பக்கம் ஒதுங்கிட்டார் ரம்பாவும் அதுபோல தெளுங்கு பக்கம் போட்டார் ,இந்த மேனகா மட்டும் தனரை பெயர் ராசியில்லையெண்டு மெளனிசா எண்டு பெயரை மாத்தி வைச்சு கொண்டு தொலைகாட்சி தொடரிலை காலத்தை ஓட்டிகொண்டு இருக்கிறா இதையெல்லாம் பாத்து நானும் சோகத்திலை திரும்பவும் தெவலோகம் போக மனமில்லால் இங்கையே சுத்திகொண்டு திரியிறன்

சின்னா . அடசெ இவங்கதானா அந்த ரம்பா ஊர்வசி நானும் ஏதோ பெரிசா கற்பனை பண்ணி வைச்சிருந்தன் இவங்களைவிட என்ரை திரிசா எவ்வளவோ ஆயிரம் மடங்கு அழகு

( என்று கூறிகொண்டு கண்களை மூடி திரிசாவை கற்பனை பண்ண அததான் சமயம் என்று நாரதர் பாய்ந்து சின்னாவின் காதிலிருந்த கடுக்கனை கழற்றி கொண்டு ஓடகிறார்)

சின்னா . அடபாவிபயலுகளா இந்த உலகிலைதான் களவும் கொள்ளையுமெண்டா தேவலோகத்திலை இருந்து வேறை களவெடுக்க வாறாங்களய்யா என்ன கொடுமை சரி சரி அது ஏதோ ஒறிசினல் வைரம் எண்டு நினைச்சு கழட்டி கொண்டு ஓடுறான் விக்க போற இடத்திலை கட்டிவைச்சு அடிக்கபோறாங்கள் அப்ப தெரியும்.நேரமும் போய்கொண்டிருக்கு இவள் சின்னாச்சி வந்து எப்பிடியும் காப்பாத்துவாள் எண்டு நம்பி கொண்டிருக்கிறன் அவளையும் காணேல்லை கடைசிலை தூக்குதான் போலை கிடக்கு

காட்சி மாறுகிறது மன்னரின் அரண்மனை

மன்னர். மந்திரியே சாத்திரிவேறு சமத்திலை சமையல்காரன் சின்னாவை தூக்கிலை போட சொல்லிட்டார் அதுவரை நித்திரை வராமல் இருக்க ஏதாவது விழையாட்டு விழையாடலாமா?

மந்திரி. நன்று மன்னா அதைதான் நானும் யோசித்தேன் எல்லாரும் சங்கீத கதிரை விழையாட்டு விழையாடுவோமா? அரண்மயனயிலுள்ள கதிரைகள் எல்லாத்தையும் எடுத்து வட்டமாக அடுக்கி ........

மன்னர் . நிறுத்தும் எனக்கு தெரியும் உமக்கு எனது சிம்மாசனத்தில் கன காலமா ஒரு கண் அதில் எப்பிடியும் ஒருக்கா அமர்ந்துவிட துடிக்கிறீர் அது நடக்கது வேறு விழையாட்டு விழையாடலாம்

மந்திரி. அய்யொ அப்பிடியெல்லாம் இல்லை மன்னா அப்ப நிங்களே ஒரு நல்ல வழையாட்டா சொல்லங்கள் வழையாடலாம்.

மன்னர். ம்.......ஆ ஒளித்து பிடித்து விழையாடலாம் நாங்கள் ஓடிப்போய் ஒளிக்கிறோம்மந்திரி நீர் கண்டு பிடியும் வா அல்லி நாங்கள் அரண்மனையின் அடிவளவில் போய் ஒளிக்கலாம்(என்று கூறி அழகி அல்லியின் கையை மன்னர் பிடிக்க)

மந்திரி. மன்னா இந்த விழையாட்டில் சட்டப்படி சோடியாக ஒளிக்ககூடாது தனிதனியாக தான் ஒளிக்கவேண்டும்

மன்னர். ஆமா இது பெரிய ஒலிம்பிக் விழையாட்டு இதுக்கு சட்ட திட்டம் எல்லாம் பாக்க யோவ் நான் இந்த நாட்டு மன்னன் சொல்லுறன் நான் அல்லியோடைதான் போய் ஒளிப்பன் நீர் கண்ணை மூடி 500 வரை எண்ணிட்டு அதக்கு பிறகு ஒரு அரைமணித்தியாலம் கழிச்சு தேட தொடங்கும்

(மன்னர் அல்லியின்கையை மீண்டும் பிடிக்க அரண்மனை ஆராச்சிமணி ஒலிக்கிறது அனைவரும் வாசல் பக்கம் பார்க்க திரை விழுகிறது)

சாத்திரி உங்கள் நகைச்சுவை நாடகம் நன்றாகவுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா!!

ஏற்கனவோ பெண்களால் உமக்குப் பல பிரச்சனைகள். அது கண்டு திருந்த மாட்டீரா??? :wink: :P

சாத்திரியண்ணா நன்றாக இருக்கின்றது. தொடருங்கள். பழைய யாழ் மறுபடி கலகலக்கட்டும்.

சாத்திரி உங்கள் தொடர் நாடகம் அருமை. நகைச்சுவையாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி உங்கள் நாடகம் அருமை தொடர்ந்து எழுத எனது வாழ்த்துகள்.

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் அண்ணா   என்ன  ஒரு களவு  என்னால பிடிபடும்  அம்புட்டுத்தான்  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் அண்ணா   என்ன  ஒரு களவு  என்னால பிடிபடும்  அம்புட்டுத்தான்  :D

 

நந்து இந்த நாடகத்தை நானே மறந்து விட்டிருந்தேன். நியானி இதை தூசி தட்டி முகப்பில் போட்டிருந்தார். நாடகத்தை முடிக்கவில்லை  பொறுத்த இடத்திலை  நிப்பாட்டிட்டன்  அல்லிக்கு என்ன நடந்தது என்று  அறிய ஆவலாயிருப்பிங்கள் :lol: எனவே  முடிக்க முயற்சிக்கிறேன். :icon_mrgreen:

அருமை சாத்திரியார் ..இப்போ தான் பார்க்கக் கிடைத்தது .. அல்லியை இழுத்துக் கொண்டு மன்னர் போய் "விழையாட்டு" வேண்டாம் .."விளையாட" விடுங்கள் :D

Edited by எல்லாள மகாராஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.