Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது! - கலைஞர் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!

இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது!

"ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!

"இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது!

இது பற்றி திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறுகையில்:

"தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மனசாட்சியின் பேச்சைக் கேட்பவர்! அதனால் தான் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல், திடீரென்று அதிகாலையில் எழுந்து, அண்ணா சமாதிக்குச் சென்று உண்ணாவிரதம் இருந்தார்! இப்போதும் அதே மனசாட்சியின் படித் தான் இந்த அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளார்!

"ஈழத் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் கலைஞர் ஒரு துரோகி" என்று தன்னை அபாண்டமாகச் சித்தரித்த எதிர்க்கட்சிகள், தேர்தலில் மண்ணைக் கவ்வி விட்டாலும்...கலைஞர் நெஞ்சில் ஏற்பட்ட அந்த வடு மட்டும் இன்னும் நீங்கவில்லை! தீயினாற் சுட்ட புண் உள்ளாறும்! ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற குறளோவியத்தின் படி நடந்து கொண்டுள்ளார் கலைஞர்!

ஐம்பதாயிரம் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி திமுக செயற்குழு கூடி முடிவெடுக்கும்!" - இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் நிருபர்களிடம் கூறினார்!

"பிரபாகரன் குறித்து ஏதேனும் கோரிக்கை வைப்பீர்களா?" என்று நிருபர்கள் கேட்டதற்கு....

"கோரிக்கையைப் பிரபாகரனிடமும் வைக்க வேண்டும் அல்லவா? இது வரை அவரிடம் தமிழகத் தலைவர்கள் யாரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லையே!"

"அப்பாவி மக்கள் வெளியேறினால் அவர்களைத் தடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத் தம்பி பிரபாகரனிடம் வைப்போமே தவிர, அவரைப் பற்றிய கோரிக்கையை அரசிடம் வைக்க மாட்டோம்! இது அப்பாவிப் பொதுமக்களுக்கான கோரிக்கை மட்டும் தான்! அவர்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு உத்தரவாதம் கொடுத்தால் மட்டும் போதுமானது!" என்று பேராசிரியர் அன்பழகன் மேலும் விளக்கம் அளித்தார்!

ஈழத் தமிழருக்காக ஏற்கனவே ஆட்சி இழந்த கலைஞர், இந்த முறை ஈழத் தமிழருக்காக ஆட்சியே வேண்டாம் என்று சொல்லி இருப்பது மிகுந்த அதிர்ச்சியை உலகெங்கும் ஏற்படுத்தி இருக்கிறது!

டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங், தமிழக முதல்வருடன் அவசரம் அவசரமாகத் தொலைபேசியுள்ளனர். ராகுல் காந்தியும் தொலைபேசியில் கலைஞரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனாலும் கலைஞர் தன் முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது!

கலைஞரின் இந்த முடிவுக்கு தமிழகம் முழுதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது!

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கலைஞரைச் சந்தித்து, ஆளுயர மாலை அணிவித்து, முதல் ஆளாக வாழ்த்தி விட்டுக் கண் கலங்கினார்.

இயக்குனர் சீமான் மற்றும் பாரதிராஜா ஆகியோர் கலைஞரின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவினை வரவேற்றுள்ளனர்!

இது வரை கலைஞரைப் பற்றித் தவறாகப் பேசியமைக்கு அவர்கள் பகிரங்கமாகப் பொது மன்னிப்பு கேட்டுள்ளனர்!

இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், பாட்டாளி மக்கக் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கலைஞரின் இந்த முடிவினை ஆத்மார்த்தமாக வரவேற்பதாகக் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். கலைஞர் இந்த முடிவில் உறுதியுடன் இருந்தால் அவருக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருப்போம் என்று அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் "இது பற்றி உடனடியாக கருத்து சொல்ல முடியாது என்றும், என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். "கலைஞர் சில சமயம் அவரையும் அறியாமல் சில நல்லது செய்வார். அதில் இது ஒன்று" என்றும் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மட்டும், "இது கருணாநிதியின் திட்டமிட்ட நாடகம்! சட்டசபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்தி, அமோக வெற்றி பெற்று, ஸ்டாலினிடம் வலுவான ஒரு ஆட்சியை ஒப்படைக்க, கருணாநிதி இந்த நாடகம் நடத்துகிறார்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்!

இருந்தாலும், கலைஞரின் முடிவு தமிழக மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது!

வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம் என்று சொல்லி இருந்தாலும் கூட, டெல்லியில் ஆட்சி அமைக்கும் வேலைகளில் சற்றுப் பின்னடைவு ஏற்படத் தான் செய்துள்ளது!

இது பற்றிக் கலைஞரிடம் நேரடியாகப் பேச, சோனியாவின் செயலர் அகமது படேல் இன்னும் சில மணி நேரங்களில் சென்னை வருகிறார்.

http://madhavipanthal.blogspot.com/2009/05/blog-post_17.html

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் பெயரை ச்சா ஒபமா பெயரை கேட்டாலே சும்மா அதீர்ர்ர்ர்தில்லா...... :unsure:

இன்னுமாய்யா நம்புறீங்க ..................... நாங்க நம்பிக்கெட்டது போதும் .

அமைச்சரவையில் நல்ல இடம் தர மாட்டேன்னு கேள்விபட்டிருப்பார் அதான் இப்படி மிரட்டலா இருக்கும் ,

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பலம் அதிகம் .

ஆதலால் இப்போது எதனையும் அங்கு வலுவாக கேட்டு பெறமுடியாது .

ஈழத்தமிழன் , " ஐயா ...... கலைஞரே என் உயிரை காப்பாற்று " என்று கதறிஅழுது உயிர்ப்பிச்சை கேட்ட போது கண்டு கொள்ளாதவர் ,

அவன் தெருத்தெருவாக இறந்து , அடக்கம் செய்ய ஆளில்லாமல் அழுகிக்கொண்டிருக்கும் நிலையில் , இனி எம்மைப்பற்றி கதைப்பது எல்லாம் காலம் கடந்த ஞானம் .

பறவைகள் , மிருகங்கள் கூட தன் இனத்தில் ஒன்று இறந்தால் வேதனைப்படும் . ஆனால் நாம் தமிழரல்லாவா எங்களுக்கு அதற்கு எங்கே நேரம் .

Edited by தமிழ் சிறி

பிரதமர் பதவி வேணும் என்று அடம் பிடிக்கிறார் போல

பொதுமக்களை பிடித்து இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் அடைப்பது தான் பாதுகாப்பாக மீட்பதா? அப்படியென்றால் அது ஒருசில நாட்களில் நடைபெறலாம். அதுக்கு பிறகு ஆயுசுக்கும் இதை கூறி அரசியல் செய்யலாம்

இரண்டு முறை ஆட்ச்சியை இழந்ததாக கூறுவதுடன் இதையும் கூறலாம்.

Edited by Subiththiran

7 அமைச்சர் பதவி கேட்கும் திமுக-அழகிரிக்கு ரயில்வே

டெல்லி: புதிய அமைச்சரவையில் திமுக ஏழு அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளதாகத் தெரிகிறது. மு.க.அழகிரிக்கு ரயில்வே அல்லது சுகாதாரத் துறையைக் கேட்கவும் திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே திமுக வசம் உள்ள நெடுஞ்சாலைத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முன்பு தன் வசம் இருந்த சுற்றுச்சூழல துறை உள்ளிட்ட முக்கிய துறைகளையும் தங்கள் வசமே மீண்டும் தர வேண்டும் என திமுக கோரவுள்ளது.

மதுரையில் அபார வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ள மு.க.அழகிரிக்காக ரயில்வே அல்லது சுகாதாரத் துறையைப் பெறவும் திமுக திட்டமிட்டுள்ளது.

சுகாதாரத் துறை இதுவரை பாமக வசம் இருந்தது. ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். பாமக இப்போது செயலிழந்து போய் விட்டது. லாலுவும் கூட மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளார். எனவே இந்த முக்கியத் துறைகளை தங்கள் வசம் எடுத்துக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது.

டி.ஆர்.பாலு, ராசா ஆகியோருக்கு மீண்டும் கேபினட் பதவி உறுதி என்றாலும் ராசா வசமுள்ள தகவல் தொழில்நுட்பத்துறை மீண்டும் தயாநிதி மாறனுக்குத் தரப்படலாம் என்று தெரிறது. ராசாவுக்கு முன்பு அவர் வகித்த சுற்றுச்சூழல்துறை கிடைக்கலாம்.

இதுதவிர கனிமொழிக்கும் இம்முறை அமைச்சர் பதவியை திமுக பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு முக்கிய துறையின் இணையமைச்சர் பதவியை திமுக வழங்கலாம்.

மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வர தமிழகத்தில் திமுக மாபெரும் பங்கு வகித்துள்ளதாலும் தொல்லை தராத தலைவர் என்பதாலும் முதல்வர் கருணாநிதி கேட்கும் துறைகளை சோனியாவும் பிரதமரும் வழங்குவர் என்று தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2009/05...ts-alagiri.html

மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வர தமிழகத்தில் திமுக மாபெரும் பங்கு வகித்துள்ளதாலும் தொல்லை தராத தலைவர் என்பதாலும் முதல்வர் கருணாநிதி கேட்கும் துறைகளை சோனியாவும் பிரதமரும் வழங்குவர் என்று தெரிகிறது
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வர தமிழகத்தில் திமுக மாபெரும் பங்கு வகித்துள்ளதாலும் தொல்லை தராத தலைவர் என்பதாலும் முதல்வர் கருணாநிதி கேட்கும் துறைகளை சோனியாவும் பிரதமரும் வழங்குவர் என்று தெரிகிறது.

இது சத்தியமான உண்மை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் வரபோகும் மாநில தேர்தலுக்கு இப்பவே பெருசு தயாராகிட்டுது .

ஜெயலலிதாட்ட இருக்கிற ஈழம் என்கிற ஆயுதத்தையும் பிடுங்க அறிக்கை விடுகுது .

ஆனா அதுவரை உயிர் உடம்பில இருக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வர தமிழகத்தில் திமுக மாபெரும் பங்கு வகித்துள்ளதாலும் தொல்லை தராத தலைவர் என்பதாலும் முதல்வர் கருணாநிதி கேட்கும் துறைகளை சோனியாவும் பிரதமரும் வழங்குவர் என்று தெரிகிறது.

உண்மைதான்...தாயும் தனயனும் துடித்துச் சாவதை படுத்தபடியே ரசித்த புண்ணியவான், நிச்சயம் தொல்லை தராதவர்தான். இவனை,தமிழர்கள் இம்முறையும் ஆதரித்த பாவத்திற்கு, கைமாறு சீக்கிரம் போனியாவிடமிருந்து வருமோ?

பெரியவர் உங்கள் திட்டம் புரிகிறது. உங்களை நாம் அறிவோம் உங்களுக்கு இருக்கும் பலத்தையும் அறிவோம், கட்சி நலன், குடுப நவன் என்பதற்கு நீக்கள் முக்கியத்துவம் குடுத்து ஒட்டு மொத்த தமிழரின் இருப்பை விலைபேசாதீர்கள். இன்றும் உங்கள் கையில்தான் இருக்கின்றது. தமிழரின் இருப்பு. உங்கள் ஒவ்வொரு நகர்வும், நீங்கள் நகராது இருப்பது நாம் அறிவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென்று காலங்கார்த்தால எழும்பி உண்ணாவிரதத்துக்குப் போறார் எண்டாலே அறளை பெயர்ந்துட்டுது எண்டு அர்த்தம். எம்ஜிஆர் கடைசிக் காலத்தில இருந்த கட்டத்துக்கு பெரிசு வந்திட்டுதோ? :(

பெருசு சட்ட சபைத்தேர்தலுக்கு நடிக்குது போல கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிசன்ரை செய்திகளை இங்கு ஏன் பதிவுசெய்கின்றீர்கள்?

வலதுகுறைஞ்ச மனிசன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஐயோ எனக்கு இப்பவே கண்ணை கட்டுதே .

.கருணாநிதி நாடகங்களை மேடை ஏற்றி தானே அரசியலுக்கே வந்தவர். இதெல்லாம் அவருக்கு சகஜமப்பா.

போடா எல்லாம் விட்டு தள்ளு பழசை(பழசுகளை) எல்லாம் சுட்டு தள்ளு

புலியா எப்பவும் இருப்போம் என்று எண்ணி கொள்ளடா

Edited by eelini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இவை தங்களுக்கு தாங்களாவே சொல்லி கொள்ளுறீனமோ

நானும் பார்க்கிறேன்

உலகம் அதிர்ச்சியடைஞ்சிட்டு அதிர்ச்சியடைஞ்சிட்டு எண்டு இவை மட்டும் தான் சொல்லுறீனம்

உலகம் சொல்லேலை

நாங்கள் நம்பேலையப்பா இந்தக் கிழவரை

தமிழகத்திலயே நம்பிக்கை விட்டுப்போச்சு

காசுக்காக ஓட்டு

நல்ல பாடம் கற்றோம்

மிக்க நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி ஏன் வேறு ஒரு இணையதளத்திலயும் வரவில்லை?

இந்த செய்தி ஏன் வேறு ஒரு இணையதளத்திலயும் வரவில்லையென்றால் உண்மையில் இது ஒரு செய்தியே அல்ல. இது ஒரு தனிநபரின் வலைப்பதிவில் உள்ள தனிப்பட்ட அவரது கற்பனை.

]அதன் மூலப் பதவில் கீழே சிறிய எழுத்தில்

இது வதந்தி இல்லீங்க! யோசனை!

இதைப் படிக்கும் போதே இனிக்கிறதே! அதுவும் கடைசிப் பகுதி! கலைஞருக்கும் அவருக்குப் பின்னால் வரப் போகிறவர்களுக்கும் ஒரு நிலையான அடிப்படை...

அதான் கலைஞருக்கு இப்படி ஒரு ஐடியா! சுயநலத்திலாவாது கொஞ்சம் பொதுநல யோசனை செய்யட்டுமே அவர்!

என்று விள்க்கம் வேற கொடுத்திருக்கு

Edited by forlov

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.