Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடேசன் அண்ணா, சார்ள்ஸ் அன்ரனி உட்பட 4 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் நோக்கிய பயணம் உலகத்தமிழரிடம் இப்போது தரப்பட்டிருக்கிறது. இப்பயணத்தின் குறை, நிறை எல்லாவற்றுக்கும் இனி நாங்களே பொறுப்பு.

நூற்றுக்குநூறுவீதம் உண்மை

கவனம் இதற்குள்ளும் தமிழக,ஈழ அரசியல் சாத்தான்கள் புகுந்துவிடும்.

  • Replies 80
  • Views 14.8k
  • Created
  • Last Reply

இப்படியான ஒரு முடிவா எமக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஒரு முடிவா எமக்கு?

முடிவு நமக்கல்ல..! பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்கள, ஹிந்திய, சோனிய கூட்டணிக்கு..! அவர்களது வியூகத்தை வைத்தே அவர்களை சிதறச் செய்யும் முயற்சி இது.

நமது மாவீரச் செல்வங்களின் தமிழீழக் குறிக்கோள் நிறைவேறும். ஆயிரக்கணக்கான நம் தமிழ் உறவுகள் சிந்திய குருதிக்கு பலன் இல்லாது போகாது.

தமிழரின் தாகம் தமிழீழ்த் தாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நமது தலைவரும் எனைய மூத்த தளபதிகளும் கொல்லப்பட்டதாக சிங்களம் தான் சொல்கிறது. இது சரியா இல்லையா என்றுகூடத் தெரியவில்லை. அதற்குள் ஆளாளுக்கு ஒரு கருத்து எழுதுகிறோம். தலைவர் வாகனத் தொடரணி ஒன்றில் சென்றுகொண்டிருந்தாராம், தாம் அந்த வாகனங்களை நோக்கித் தாக்குதல் நடத்தினார்களாம், தலைவர் இருந்த அம்புலன்ஸ் வண்டி தப்பிப் போக எத்தனித்த போது தாம் சுட்டதில் அது தீப்பற்றி எரிந்ததாம். அப்படியானால், வெறும் 200 மீற்றர் அகலமும் 300 மீற்றர் நீளமும் கொண்ட ஒரு சிறிய ஒழுங்கையளவு பகுதியில் ஒரு வாகனத் தொடரணி போவது எப்படிச் சாத்தியம்? இதில் மறைந்திருக்கும் உண்மை என்னெவென்றால், தலைவரின் உடலைக் காட்ட வேண்டிய தேவை இப்போது சிங்களத்துக்கு இல்லாமல் போய்விட்டது. அவர் இருந்த வாகனம் எரிந்துவிட்டது என்று சொல்வதன் மூலம் அவரின் உடலைக் காட்டவேண்டிய தேவையும் சிங்களத்துக்கு இல்லாமல்ப் போய்விட்டது. சிலவேளை தலைவர் இருப்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டால் அதைப் பொய் என்று காட்டுவதற்கும் சிங்களம் எத்தனிக்கும் என்பது திண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகங்கள் ஒருவரின் உடலலையாவது காட்டாமல் இருப்பதிலிருந்தே இது பொய்ச்செய்தி என்று ஊகிக்கமுடியும்.

  • தொடங்கியவர்

இந்த செய்தியில் எந்தவிதமாகவேனும் நம்பக் கூடிய ஒன்ற்ம் இல்லை. எல்லாப் பக்கமும் ஆமி நிற்கையில் வாகனத்தில் தப்ப முயன்றனர் என்பதை ஒரு பூனை கூட நம்பாது. ஆனால் நடேசன் அண்ணா உட்பட பலர் இறந்து 100% உண்மம

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகங்கள் ஒருவரின் உடலலையாவது காட்டாமல் இருப்பதிலிருந்தே இது பொய்ச்செய்தி என்று ஊகிக்கமுடியும்.

:rolleyes::unsure:

http://elakricollection.blogspot.com/2009/...tonys-body.html

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் புலிகளை அழித்தால் எல்லாம் சரிவரும் என்று சொல்லித்திரிந்த தமிழ் வே.......மக்களும், இந்திய நாய்களும் சர்வதேசச் சனியங்களும் மகிந்தவிடம் எங்களுக்கென்று ஒரு சிறு கிராமமாவது கேட்டுப் பார்க்கட்டும். இந்தியா செய்ததெல்லாம் எங்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த புலிகள் எனும் பேரியக்கத்தை அழித்து சிங்களப் பேயிடம் உண்வாக எங்கலைத் தள்ளியதுதான். இனி எந்தத் தீர்வோ அல்லது முடிவோ இந்தியா சிங்களத்திடம் கேட்கப்போவதில்லை. தனது நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அது இனிச் சிங்களவன் மீதியைப் பார்க்கச் சொல்லிவிட்டு அகன்றுவிடும். புலிகள் அழியவேண்டும் என்று காத்திருந்த சர்வதேசச் சனியங்கள் இனி எல்லாம் முடிந்த திருப்தியில் திரும்பிப் போய்விடும். தனது இனம் அழிவதையே ரசித்துப் பார்த்திருந்த தமிழ் வயிற்றில்ப் பிறந்த காட்டேரிகள் இனித் தமது வேலைகளைப் பார்க்கப் போய்விடும். உலகத்தின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுக் கொன்று அடையளம் தெரியாமல் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான உண்மைத் தமிழ்த் தேசியவாதிகளும், தமிழர்க்கான தனிநாட்டு வேள்வியில் தம்மையே வெந்து உருக்கித் தீயில் சங்கமமான எமது இனிய போராளிகளும் இறைவனையே நிகர்த்த எமது அன்புத் தலைவரும்(உண்மையாக இருக்கக் கூடாது) இனித் தெரியாமல் போகும். நாம் மட்டும் அரசியல் அநாதைகளாய் பூமியில் பிணங்களாக வலம் வருவோம். சரித்திரத்தில் இலங்கையில் தமிழன் வாழ்ந்தான் என்று தொல்பொருள்சாலையில் சாட்சிப்படுத்தட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடேசன் அண்ணா, ஐ.நா விடம் தானும், புலித்தேவன் அவர்களும் இன்னும் 1000 ஊனமுற்ற போராளிகளூம் குறைந்தது 25,000 பொதுமக்களும் மட்டுமே அங்கு இருப்பதாகவும், தாம் எந்தவிதத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்றும், தம்மையும் மக்களையும் தயவுசெய்து பொறுப்பெடுக்குமாறும் இறைஞ்சியதாகக் கூறாப்படுகிறது. இந்தச் செய்தியை ஐ.நா வே சிங்கள அரசிடம் உடனே தெரிவித்ததாகவும், அதுவரையிலும் புலிகளின் தலைவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமலிருந்த சிங்களப்படை இந்தச் செய்தியைக் கேட்டவுடன் கடுமையான தாக்குதலை நடத்தி அவர்களைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. ஐ.நா வின் ஆசியுடந்தான் இந்த கூட்டுக்கொலை நடந்தேறியுள்ளது.

இன்னொரு விடயம், புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் பத்மனாதன் அவர்கள் சானல் 4 ற்கு வழங்கிய செவ்வி. வெறும் 200 மீற்றர் அகலமும், 300 மீற்றர் நீளமும் மட்டுமே கொண்ட பகுதியில் புலிகள் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிந்த பின்பும், தான் தலைவருடன் 4 மணித்தியாலங்கள் கதைத்ததாகவும் அவர் இன்னும் அங்குதான் இருப்பதாகவும் கூறியிருப்பது. இது எப்படிச் சாத்தியம்? தலைவர் அந்தச் சிறிய மைதானம் போன்ற பகுதியில்த்தான் இன்னும் இருக்கிறார் என்று பத்மனாதன் கூறியது உண்மையாக இருந்தால் அது சிங்கள ராணுவத்தின் வேலையை மிக இலகுவாக ஆக்கியிருக்குமா இல்லையா?ஆகவே ஒன்றில் அவர் கூறியது பொய்யாக அல்லது திசை திருப்பலாக இருக்க வேண்டும் அல்லது, புலிகளிடம் இன்னும் பெரிய நிலப்பரப்பு இருக்க வேண்டும். இதில் எது உண்மையென்பதை நாம்தான் விளங்கிக்கொள்ள வேண்டும். சிறிய மைதானத்தின் அளவை ஒத்த ஒரு பகுதிக்குள் தலைவர் இன்னும் இருக்கிறார் என்று சொல்லி அவரைக் காட்டிக்கொடுப்பது சாத்தியமா? அல்லது அவ்வளவிற்கு பத்மனாதன் அறிவு அற்றவரா?

அது சார்ள்ஸ் என்று யார் சொன்னது???

அதைத்தான் நானும் கேட்கின்றேன். இன்றுவரை சாள்ஸ் யார் என்று முழுiமாக யாருக்கும் தெரியாது. எல்லோருக்கும் தெரிந்த நடேசன் அண்ணா புலித்தேவன் படங்களை போடவில்லை. யாருக்கும் தெரியாத சாள்ஸ் படம் போட்டிருக்கின்றார்கள். இதுதூன் அரசின் பிரச்சாரம் இதில் அவர்கள் வெல்லப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அது சார்ள்ஸ் என்று யார் சொன்னது???

எலகிரி சொல்லுது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் மற்றும் மகன், நடேசன் அண்ணா அனைவரும் நலமுடன் இருப்பதாக செ.பத்மநாபன் சேனல் 4க்கு செய்தி அளித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக செய்தி சில மணிகளில் வெளிவரும்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி சிங்கள செய்திகளில் வரவில்லையே என கேட்டிருந்தார் அது தான் சிங்கள இணைப்பை கொடுத்தேன் மன வருத்தத்துடன். வி.புலிகள் சொல்லும் வரை எச்செய்தியையும் நான் நம்ப தயாரில்லை.

Edited by nunavilan

என் விழி என்னையறியாமலேயே ரத்தம் கசிக்கின்றது

மனது சொல்கின்றுது அண்ணை எப்பவும் எமமுடன்தான் இருப்பார்

தலைவர் மற்றும் மகன், நடேசன் அண்ணா அனைவரும் நலமுடன் இருப்பதாக செ.பத்மநாபன் சேனல் 4க்கு செய்தி அளித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக செய்தி சில மணிகளில் வெளிவரும்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு, இந்தப் பேட்டி எப்போது வந்தது? நேற்று 4 மணித்தியாலங்கள் தலைவருடன் பேசினேன் என்று பத்மனாதன் கூறியதைத்தான் சொல்கிறீர்களா? அல்லது புதிய பேட்டியா? சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள ஊடகங்கள் ஒருவரின் உடலலையாவது காட்டாமல் இருப்பதிலிருந்தே இது பொய்ச்செய்தி என்று ஊகிக்கமுடியும்.

டன் தொலைக்காட்சிக்காரன் தான் இல்லாதது பொல்லாதது எல்லாத்தையும் போட்டு குடல்வெளியை வராக்குறையாய் வாந்தியெடுக்கிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுத்தறிவு, இந்தப் பேட்டி எப்போது வந்தது? நேற்று 4 மணித்தியாலங்கள் தலைவருடன் பேசினேன் என்று பத்மனாதன் கூறியதைத்தான் சொல்கிறீர்களா? அல்லது புதிய பேட்டியா? சொல்லுங்கள்

சற்று முன் வந்த செய்தி என லக்கிலுக் என்னிடம் சில நிமிடங்கள் முன் தெரிவித்தார்.

சேனல் 4 இல் அப்படி செய்தி இல்லையே நண்பரே

  • கருத்துக்கள உறவுகள்

நுணா , நீங்கள் தற்போது இந்தப் படங்களை இணைத்ததன் அர்த்தம் என்ன?செய்தி உண்மை என்கிறீர்களா அல்லது பொய் என்கிறீர்களா? அல்லது இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று காட்ட விளைகிறீர்களா? ஒன்றும் புரியவில்லையே?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி வெளிவரும் வரை பொறுமை காப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

லக்கி லுக் என்பவர் யார்? எங்கிருந்து அவர் இந்தச் செய்தியை எடுத்தார்? இதை உறுதிப்படுத்த முடியுமா நண்பரே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் என்பவர் யார்? எங்கிருந்து அவர் இந்தச் செய்தியை எடுத்தார்? இதை உறுதிப்படுத்த முடியுமா நண்பரே?

தமிழகத்தில் ஊடகத்தில் இருக்கும் ஒரு பிரபல வலைபதிவாளர். அவர் கொடுத்தச் செய்தி அது. ஊடகங்களில் சிறிது நேரத்தில் வெளிவரும் எனக்கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே உங்கள் செய்தி உண்மையாக இருக்க வேண்டும். அது தெரியும் வரை உறங்காமல் விழித்திருப்பேன். நன்றி.

ரகுநாதன்...!

உண்மை இன்னும் அமைதியாய்த்தானுள்ளது, அது விரைவில் வெளிவரும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.