Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழப் புற நிலை அரசு

Featured Replies

சுகன்

புறநிலை அமைப்பு நிச்சயமாக தேவையானதொன்று, காரணம் தனிய போராட்டம் வெற்றி எல்லாத்துக்கும் மேல் இனி வரும் காலங்களில் சர்வதேசத்தை கையாள இது தேவைப்படுகிறது. எமது ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களால் நாம் சாதித்தது ஏது? அதனால் சில தூரம் போகமுடிந்ததே ஒழிய முக்கியமான எதையும் சாதிக்க முடியவில்லை.

சரி இனியும் புலிகள் திரும்பவும் வருவார்கள் என்று வைத்துக்கொள்வோம்.... இவ்வளவுகாலமும் புலிகளின் சர்வதேச தொடர்புகளாலும் காய் நகர்த்தல்களாலும் கடைசியில் அரசியல் துறைத்தலைவரையே காப்பாற்ற முடியாமல் போனதே?

தமிழ் நாடளுமன்ற உருப்பினர்களின் கையரு நிலைதான் நாங்கள் காலாகாலமாக பார்த்தாச்சே... அவர்களும் சாய்க்கப்பட்ட பொளுது எவர்தான் குரல் கொடுத்தார்கள்?

எல்லாத்துக்கும் மேலாக சர்வதேச ரீதியில் எமக்கான குரல் எங்களுக்காக தோற்ருவிக்கப்படவேண்டும். இது சவால் மிக்கதுதான் ஆனால் மலைச்சவன் மலை ஏறமாட்டான். ஒன்ருமட்டும் உறுதி தாயகம் அன்னியனின் ஆதிக்கத்தில் இருக்கும் போது அங்கிருந்து சுத்ந்திரமான கருத்துக்கள் வரமுடியாது.

இன்னும் இதை பற்றி விவாதிக்கலாம்.

நீங்கள் சொல்வதன் முக்கியத்துவம் விளங்குகின்றது. அதே நேரம் நாம் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் செய்வது இன்றியமையாதது. இது ஆரம்பமாக அமையும்

மூன்றாம் தரப்பு கண்காணிப்பை ஏற்பாடு செய்யக்கோருவது

போர் குற்றத்துக்கு நீதியான விசாரணையை கோருவது

ஊடகங்களின் சுதந்திரமான அனுமதியை கோருவது

மக்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று வாழ அனுமதி கோருவது

இராணுவ பிடியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோருவது

எமக்கும் எமது உறவுகளுக்குமான சுதந்திரமான உறவாடலை கோருவது

இவைகள் தற்போது அவசியமானது. இதுவே ஆரம்பமும் ஆகும். இவ்வாறான கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது. இந்தக் கோரிக்கைகளுக்காக நாம் முதலில் ஒன்றுபட வேண்டும். எமக்குரிய ஜனநாயக அத்திவாரம் இவ்வாறு தான் யாதார்த்த தேவைகளுடன் போடப்பட வேண்டும் அதன்மேலே தான் புறநிலை அரசு என்ற அமைப்பு கட்டி எழுப்பப்பட முடியும். இவ்வாறான கோரிக்கைகளும் அதற்கான இலங்கையின் நிராகரிப்புகளும் எமக்கு சாதகமான சூழலை உருவாக்கி தரவல்லது. இதுவே நான் முன்வைக்கும் கருத்து தவிர இந்த புறநிலை அரசுக்கான கருத்தை நிராகரிக்கவில்லை.

மேலும் எமது அடித்தளம் இவ்வளவு காலமும் போராடிய சக்திகள் சம்மந்தப்பட்டதாக இருக்கும் போதே முரண்பாடு நிறைந்த எமது இனத்தை ஒருமுகமாக வைத்ததிருக்க முடியும். இவ்வாறான ஒரு அவசியத்தை கருதி விரைவில் இதற்கொரு வழிகாட்டி வருவார் அல்லது சுட்டிக்காட்டப்படுவார் என்று நம்புகின்றேன்.

  • Replies 102
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் இங்கு (தாயகம் அல்லது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் உள்ள மக்கள்) இருந்து எதையும் எதிர்பாக்காதீர்கள் எதுவுமே செய்ய முடியாத நிலைதான் இங்கு உள்ளது இங்க இருந்து ஒன்றை மட்டும் செய்யமுடியும் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் மற்றும் சில எதிர்கால தேவைக்கான செயற்பாடுகள்தான் அதுவும் மறைமுகமாகதான்.சம்ப+ர் தொடக்கம் முள்ளிவாய்கால்வரை மக்கள் கொல்லப்படும்வரை வெளிப்படையான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்யமுடியாத கையேறு நிலையிலேதான் நாம் இருந்தோம் இது வெளிப்படையான உண்மை இதுதான் இனியும் தொடர்ரும்..............!

ஆகவே...,

என்னுடைய கருத்துபடி புலம்பெயர் மக்களிடம்தான் எம் எதிர்காலஅரசியல் கையளிக்கப்பட்டுள்ளது குறிப்பாக நான் நம்புவது இளையோர் அமைப்புக்களைதான் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள இளையோர் அமைப்புகளும் அந்த நாட்டிலுள்ள சட்டங்களுக்கு அமைவாக ஒரு.... அரசியல் அமைப்பாகவோ அல்லது "தமிழீழ தமிழ்" என்று தொடங்கும் பெயரினை கொண்ட பதிந்து பின்னர் அனைத்து நாட்டிலுமுள்ள இளையோர் அமைப்புகளும் இணைந்து அனைத்துலகரீதியாக பலம்வாய்ந்த கட்டமைப்பை அமைக்கவேண்டும் இதற்கு சட்டவல்லுனர்களையும் உள்ளீர்த்து கொள்ளாலம். (திருமதி அடல் பாலசிங்கம் அவர்களின் உதவியையும் நாடலாம் அவருக்கு எமது போராட்டம் பற்றிய பட்டறிவு உண்டு முள்ளிவாய்காலில் இருந்து கூட இறுதியாக ஏதும் தகவல் பரிமாற்றம் இடம்பெற்று இருக்கலாம்...இது என் கருத்து.)

குறிப்பாக தமிழ்தேசியம் எனக்கூறி துரோகசெயலில் ஈடுபடுபவர்களை ஈடுபடும் அமைப்புகளை கண்டறிந்து அவர்களை தவிர்ங்கள்!!!!!!

தாயகத்தில் இருந்து செயற்பட நான் தயார்!

இணைய நன்பர்களே தங்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன்.....

புதுப்பாதை தனை எங்கள் தலைவனே தந்தான் புலியாகி எழுவேமே வாருங்கள்!!!!!!

மூன்றாம் தரப்பு கண்காணிப்பை ஏற்பாடு செய்யக்கோருவது

போர் குற்றத்துக்கு நீதியான விசாரணையை கோருவது

ஊடகங்களின் சுதந்திரமான அனுமதியை கோருவது

மக்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று வாழ அனுமதி கோருவது

இராணுவ பிடியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோருவது

எமக்கும் எமது உறவுகளுக்குமான சுதந்திரமான உறவாடலை கோருவது

இவைகள் தற்போது அவசியமானது. இதுவே ஆரம்பமும் ஆகும். இவ்வாறான கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது. இந்தக் கோரிக்கைகளுக்காக நாம் முதலில் ஒன்றுபட வேண்டும். எமக்குரிய ஜனநாயக அத்திவாரம் இவ்வாறு தான் யாதார்த்த தேவைகளுடன் போடப்பட வேண்டும் அதன்மேலே தான் புறநிலை அரசு என்ற அமைப்பு கட்டி எழுப்பப்பட முடியும். இவ்வாறான கோரிக்கைகளும் அதற்கான இலங்கையின் நிராகரிப்புகளும் எமக்கு சாதகமான சூழலை உருவாக்கி தரவல்லது. இதுவே நான் முன்வைக்கும் கருத்து தவிர இந்த புறநிலை அரசுக்கான கருத்தை நிராகரிக்கவில்லை.

இத்தனையும் முதன்மையானதுதான் ஆனால் இன்று எக்கௌள்ள கட்டமைப்புக்களைக்கொண்டு இவைகளை செய்யமுடியுமா? எங்களுக்கு என்று இருந்ததெல்லாம் புலிகள் அமைப்புத்தான் அதை வைத்துத்தான் எல்லாகட்டமைப்புக்களும் இருந்தன. இதன் காரணத்தானோ என்னமோ தமிழர் புனர்வாழுக்களம் கூட சில தடைகளை எதிகொண்டது.

சிங்கள அரசின் அழுத்தங்கள் இல்லாமல் எங்கள் அரசியல் முன்னகர்வுகளை முனெடுக்க எமக்கு ஒரு பலமான ஒரு கட்டமைப்பு முக்கியம். அந்தக் கட்டமைப்பு தற்போதய உலக ஓட்டத்தினால் புறக்கணிக்கமுடியாததும் சட்டபூர்வமானதாகவும் இருக்கவேண்டும். எல்லாத்தையும் வைத்துப் பார்க்கும்போது இதுவே ஒரு நல்ல தெரிவாகப்படுகிறது.

கருத்தை வைத்து ஆடுங்கள் ஆடுங்கள்.கடந்த வருடம் தன்னும் இப்படியான கருத்தை வைத்து கருத்து ஆடி இருக்கலாம்.

பூனை அப்பம் பிரிச்ச கதைதான் நடக்கபோகுது.

முதல் வேலையாக வதை முகாமில் இருப்பவரை காப்பாத்துவதன் ஊடாக தமிழரின் அரசியலை அதாவது சிங்களவன் உடன் வாழ முடியாது என்பதை நிலை நிறுத்துவோம்.

வதைமுகாமில் உள்ளோரை எப்படி காப்பாத்துவது என்று கொஞ்சம் சொல்வீர்களா?

யார் வந்தாலும் விடமாட்ட எண்டு சிங்களவன் நிக்கிறான்.

நாமெல்லாம் செய்யாத ஆர்ப்பாட்டமா? அல்லது எல்லாத்தையும் விட்டுப்போட்டு ஓடிவிட்டமா?

  • தொடங்கியவர்

தாயகத்தில் அமைக்காது வெளிநாட்டில் அமைப்பதனாற்தான், இதற்கு புறநிலை அரசு என்று பெயர்.

உலக நாடுகளினால் உள்ளக இறைமை அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசு எம்மிடம் இருந்தது. இன்றைக்கு அதை நாம் இழந்து விட்டோம். தாயகத்தில் அமைக்க முடியாத நிலையில் இந்த அரசை வெளிநாட்டில் அமைப்போம்.

வெளிநாட்டில் ஒரு பாராளுமன்றம் இயங்குவதும், எமக்கு என்று சுழற்சி முறையில் வருகின்ற ஒரு பிரதமர் இருப்பதும், தேசியத் தலைவரின் தமிழீழ இலட்சியத்தை தொடர்ந்தும் பாதுகாக்கும்.

புறநிலை அரசு மக்களை ஒன்றுபடுத்தி வைத்திருக்கும். இன்றைக்கு நடக்கின்ற போராட்டங்களை மேலும் வீச்சுடன் நடத்தும்.

தாயகத்தில் மக்கள் மீள்குடியேற்றம், போராளிகளின் விடுதலை போன்ற விடயங்களுக்காகவும் அது பாடுபடும்.

இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போன்று புறநிலை அரசில் சில சிக்கல்கள் உள்ளன. ஆனால் எமக்குள் பிளவுகள் அதிகரித்து, எமது போராட்டம் நீர்த்துப் போய் கொண்டிருக்கும் நிலையில், புறநிலை அரசு என்று கட்டமைப்பில், அனைத்தையும் ஒருங்கிணைப்பதைத் தவிர எனக்கு மாற்று வழி தெரியவில்லை.

புலம்பெயர் நாடுகளில் எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு இல்லையென்றால், தீய சக்திகள் தமிழர்களின் பிரதிநிதிகள் ஆவதை எம்மால் தடுக்க முடியாமலும் போய்விடும்.

இப்படி செச்னியா புறனிலை அரசு இயங்கிக்கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்...

திபெத் ...

ஈழம் மற்றும் வெளியிலும் ஆக இரண்டு இடங்களிலும் போராட்டம் நடந்தால் தான் வழி பிறக்கும்!

தற்போதைய சூழலின் தேவை கருதி. உடனடியாக ஒரு உலகளாவிய இறுக்கமான, தமிழர் நலன் அமைப்பு உலகின் பார்வைக்கும், எமது மக்களின் சுதந்திர வாழ்விற்கும் உடன் தேவை....

அது துடிப்புள்ள இளம் சமுதாயத்தின் முன்னெடுப்புடன், அனுபமுள்ள்வர்களின் வழிகாட்டல்களுடன்(பல புத்தியீவிகள் ஒதுங்கி வாழ்கின்றனர்) செயல்படவேண்டும்..

எமது போகவேண்டிய பாதை, இலக்கு எந்த சூழலிலும் மாறாத இலட்சியங்களுடன், செல்லக்கூடியதாக எல்லா உறுப்பினர்களும் உறுதி மொழி எடுத்து சரியான விளக்கங்கள், கொள்கைகள் அடிக்கடி கொடுக்கப்பட்டு இறுக்கமான அமைப்பாக இயங்கவேண்டும்... எமது நலன்களில் அக்கரை உடைய எந்த அமைப்பையும் அரவணைத்து எமது பாதை மாறாமல் எமது தமிழ்மக்கள் எதிர்கால நலனை எப்போதும் இலக்காகவும் சுய நல, சுய விளம்பர, தனி நபர் செல்வாக்குக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்வேண்டும்..

இது எல்லவற்றிற்கும் வழிகாட்டியாக ஒர் இரயில் இஙின் ஆக இருக்க வேண்டிய காலத்தின் தேவை...

இதன் வேலைத்திடங்கள் வெளீ நாட்டு அரசுக்கள், ஊஉடகவியளாளர்கள் தொண்டு, உலக நிறுவனஙள் எல்லாவறுடனும் நல்ல தொடர்பாடல்களை பேணவேண்டும்..

இதன் உருவாக்கம் செயல்திட்டஙள் உடன் தொடக்கப்பட்டு உலக தமிழ் நலன் காக்கும் சேவையாக உலகின் கண்களுக்கு கொண்டு செல்லவேண்டும்..

பின்னர் அடுத்த கட்டமாக அதாவது பலப்படுத்திவரும் போது தமிழிழ புற அரசை நீங்கள் வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள்..அதாவது எடுத்த எடுப்பிலே தடை அமுஙாமல்...

எந்த விடையங்களும் நன்றாக திட்டமிட்டு உணர்ச்சிகளுக்கு அடிமையாகமல் நல்ல அத்திவாரமாக அமைந்தால் சிறந்த பலன் எப்போது கொடுக்கும்.. குழப்பிகளும் குறுகிட்டு எல்லாம் குழம்பி கடைசியில் மேலே சொன்ன மாதிரி பூனைகள் பங்கிட்டமாதிரிதான் அமையும்...

இந்த அமைப்பு உஅலக நாடுகள் உத்தியோக பூர்வமாக அங்கிகரிக்க கூடியதாக விரைவில் செயல்பட்வேண்டும்.. அதற்கு ஆவண உடன் செய்தல் வேண்டும்..

முதலிம் நாம் 4 மில்லியனுக்கு குறைந்த சனத்தொகையுடைய ஒரு சமூகம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்தியதமிழர்களுடைய சகவாசத்தை சுத்தமாக துண்டிக்கபடவேண்டும்.. உதவியை உபத்திரவம் தான் அதிகம்.

மற்றும்..

உலகம் புலிகளை எப்படி மதித்தார்களோ அதே மரியாதைதான் எந்த ஈழவனுக்கும் கிடைக்கபோகிறது..

ஏன் என்றால்.. இவர்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் இல்லை... எமது இலக்கிற்க்கு எதிரானவர்கள்.

என்னைபொறுத்தவரை... வெளிக்கும்வரை காத்திருப்போம்...

அதேநேரம்... ஊரில் இருக்கும் சனத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும்தான் எமது வேலை.

அண்ணா மாரே சிலர் ஒரு அமைப்பு உருவாக்கவேணும் என்று வெற்றுக்கூச்சல் போடுகின்றார்கள். இருக்கும் அமைப்பு போதாதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னத்துக்கு உருவாக்கப்பெற்றது. அவர்களுக்கு ஒரு சில மாதம் குடுப்போம். அவர்களை வலுப்படுத்துவோம் அவர்களும் உயிரை பணயம் வைத்துத்தான் அரசியல் வேலை செய்து வந்தார்கள்.

நாம் வெளியில் பாதுகாப்பக இருந்து விசைப்பலகை வீரர்களாக இருப்பதை விட்டடு விட்டு தற்போது இருக்கும் கட்டமைப்பை பலப்படுத்துங்கோ.

சும்மா புதிசு புதிசா அமைப்பு. தொடங்கி அப்பம் பிரிக்கும் வேலை வேண்டாம்.

இருக்கும் அமைப்புகள் உருபடியா செயற்பட்டால் போதும.;

இப்ப இருக்கிறதை வைச்சுக்கொண்டு இதுவரைக்கும் என்னத்தை கிளிச்சோம்? இப்ப இருக்கிறதுகளை ஒரு பாட்டியலாவது இடமுடியுமா?

அதில் உள்ள ஒன்றையென்றாவது உலக தரத்துக்கு காட்டமுடியுமா? கனக்கவேண்டாம் சற்றுக்கொஞ்ச கிழமைகளுக்கு முன்னமே கிருபா ஜ்.நா மனிதவுரிமை

கவுன்சிலில் தனிய நின்று கத்தினாரே ஆதரவுக்குத்தனிலும் உங்கட இருக்கிறதுகளை கொண்டுபோய் இறக்கினீர்களா?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலை உங்களுக்கு தெரிந்துதான் கதைக்கின்றீகளா? 50000 மக்கள் சாகும்போது எது உபயோகப்படவில்லையோ

அதனால் இனி என்னத்தை புரட்டமுடியும்? கூட்டமைப்பிற்கே ஆப்பிறுக்கப்போறான் சிங்களவன் அதுக்கான எல்லா அலுவல்களும் முடிஞ்சாச்சு.

அதுபோ சிங்கள நாடாளுமன்ற தேர்தல் என்னும் வெகுதூரத்தில் இல்லை இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கு தேர்தல் முறைகேடுகளை யாரிட்டபோய் சொல்லுவீர்கள் எப்படி சொல்லுவீர்கள்? யாரைவைச்சு சொல்லுவீர்கள்? வேணுமெண்டா கோயில் நிருவாகங்களைவைத்து வேணுமெண்டா முயற்சிக்கலாம்.

அதுபோ இன்னும் காலதாமதமானால் இதுகூட வலு இழந்து போகும். காரணாம் சிங்களவன் உள்ளூராச்சித்தேர்தல் அது இது எண்டு தமிழ் மக்களின் சனநாயமும்

ஆட்சி அதிகாரமும் மீழவும் கிடைத்துவிட்டதாக காட்டுவான். உள்ளூராட்சி அதிகாரங்களை வைச்சு கக்கூசு வெள்ளைதான் அடிக்கலாம். விடுதலையையோ மக்களையோ, அல்லது சிங்களமயமாக்கலையோ ஒன்றும் செய்ய ஏலாது.

தமிழ்மக்களுக்கு ஒரு அரசமைப்பதற்கான உரிமை உலகதில் உள்ளது இப்ப உள்ள சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் இனியும் வராது.

எநத ஒரு திட்டங்களும் இல்லாமல் எதுக்கெடுத்தாலும் புறணி பாடாமல் ஆக்கபூர்வமா சிந்திக்கவும்.

புறநிலை அரசானது இருக்கும் அமைப்புக்களையும் உள்ளடக்கியதே தவிர புதிதாக ஒன்றும் இல்லை.

சிங்களதேசத்துக்கு பதிலாக எமக்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும். நாங்கள் யாரிலும் தங்கி ரிந்தது போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைவாணி!!!!

தற்போதைய நிலையில் அனைத்து வெளிநாட்டிலுமுள்ள இளையோர் அமைப்புதான் போராட்டங்களை நடாத்துகின்றது அது மாணவசமுதாயம் எவராலும் அசைக்கவோ விலைபேசவோ முடியாது அடுத்த தலமுறைக்கு இவ்வமைப்புதான் உகந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா மாரே சிலர் ஒரு அமைப்பு உருவாக்கவேணும் என்று வெற்றுக்கூச்சல் போடுகின்றார்கள். இருக்கும் அமைப்பு போதாதா? தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னத்துக்கு உருவாக்கப்பெற்றது. அவர்களுக்கு ஒரு சில மாதம் குடுப்போம். அவர்களை வலுப்படுத்துவோம் அவர்களும் உயிரை பணயம் வைத்துத்தான் அரசியல் வேலை செய்து வந்தார்கள்.

நாம் வெளியில் பாதுகாப்பக இருந்து விசைப்பலகை வீரர்களாக இருப்பதை விட்டடு விட்டு தற்போது இருக்கும் கட்டமைப்பை பலப்படுத்துங்கோ.

சும்மா புதிசு புதிசா அமைப்பு. தொடங்கி அப்பம் பிரிக்கும் வேலை வேண்டாம்.

இருக்கும் அமைப்புகள் உருபடியா செயற்பட்டால் போதும.;

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை தெரியாமல் கருத்தை வைக்கின்றீர்கள் இப்போதுதான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார்களாம் என்ற விசாரணை ஆரம்பிக்க போகிறார்களாம் இப்படியிருக்கும் போது உது சாத்தியமா?? நிட்சயம் புலம்பெயர்ந்த மக்களிடம்தான் உள்ளது ஆனால் அதுவும் ஈழ தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தாத நல்ல நபர்களாக இருக்க வேண்டும்

கூட்டமைப்பாம் கூட்டமைப்பு.. சிங்கத்தின் குகைக்குள் இருந்து இவர்களால் என்

ன செய்ய முடியும்?

இவர்களையே இவர்களால் காப்பாற்றமுடியுமா...

உடனடித் தேவையான வன்னி மக்களுக்கான அவசர உதவிகளை முதல் நோக்கமாக வைத்து இவாறான அமைப்புக்கள் இணைய முன்வர வேண்டும்

புறநிலை அரசை உருவாக்கி எம் மக்களுக்கு எவ்வித உதவிகளும் செய்யமுடியாது.ஈழத்தில் வாழும் எம்மவர்களின் பொருளாதார நிலையை உயர்வடைய செய்யவேண்டும் ,அதற்கு அரசு என்ற பதத்தை பாவிக்காமல் தவிர்ப்பது நல்லம்.

ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டிய கதையாக முடியாது.. துடிப்புள்ள மக்கள் யாழகளத்தை விட்டு வேறு ஒரு நேரடி சந்திப்புகளை வைத்து முன்னெடுத்து செல்பவர்களை தெரிவு செய்து முன்னோடியாக செயல்படுங்கள்..

யாழில் அம்பலத்தில் எதிரிக்கு தகவல் முன்கூட்டியே கொடுத்து உசார்படுத்தவே உதவும்... நீங்கள் நினைக்க முன் அவன் செயலில் செய்து முடக்கி விடுவான் இந்த அம்பலத்தில்... இது கடந்த வரலாறு....

உங்கள் சிந்தனைகள் வரவேற்கிறேன் ஆனால் செயல்கள் கூடி நடத்துங்கள் உடனடியாக...

முன் செல்லுங்கள் விடுதலைவிரும்பும் பல்லாயிரக்கணக்கான நம்பினம் பின் தொடரும்... எழுதி எழுதி நமது காலத்தை வீணாக்கி எதிர்யை உசாராக்கி நம்மினத்தை இனவெறியாக்கியதே இதுவரை செய்தது..

பாடங்களில் இருந்து எதிர்காலத்தை திருத்துவோம்..செக்கு மாடாகி சுழராதீர்கள்..

நம்மினத்திற்கு நல்லது செய்வதற்கு யாரையும் கேட்டு செய்ய தேவையில்லை.. இதுவரை எழுதியவர்களில் இருந்து யார், யார் எப்படியான மன நிலை துணிச்சல் தெளிவாக உள்ளனர் எனபுரிந்து இருப்பீர்கள்...

அண்ணாமாரே இப்ப எமக்கிருக்கும் முதல் வேலை சர்வதேச தொண்டு நிறுவனங்களை வதை முகாங்கள், தடுப்பு முகாம்களுகளை பொறுப்பெடுக்க வைத்த அங்கிருப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதத்தை கொடுக்கவேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழும் எம் முன்உள்ளது.

ஒரு அறிக்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதால் சோர்வு நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று அமைப்புகள் உருவாக்கம் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.

எமது விடுதலைப்போராட்ட வரலாற்றில், கள நிலவரத்திற்கும், எமது சமூக கட்டமைப்பிற்கும் ஏற்றாப்போல் புலம் பெயர்தேசத்தில் எமது விடுதலைக்கு வேலை செய்த தமிழ்த்தேசிய அமைப்புகள் உருவாக்கப்பெற்று இயங்கி வந்தன.

எனவே இப்போது உள்ள அரசியல், களநிலவரப்படி புலம் பெயர் தேசத்தில் மக்களிடை இயங்கிய தமிழ்தேசிய நிறுவனங்கள் தன்னை சுதாரித்துக்கொண்டு இயங்கும்அதுவரை நாம் இதுவரை செய்து வந்த வேலையைச் செய்வோம்.

name='குக்கூ' date='May 26 2009, 08:38 AM' post='518394']

ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டிய கதையாக முடியாது.. துடிப்புள்ள மக்கள் யாழகளத்தை விட்டு வேறு ஒரு நேரடி சந்திப்புகளை வைத்து முன்னெடுத்து செல்பவர்களை தெரிவு செய்து முன்னோடியாக செயல்படுங்கள்..

யாழில் அம்பலத்தில் எதிரிக்கு தகவல் முன்கூட்டியே கொடுத்து உசார்படுத்தவே உதவும்...

ஆமாம் நீங்கள் சொல்வது சரி

இதைப்பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59270&hl=

உறவுகளே தற்போது எமக்கு முன்னால் உள்ள பாரிய பொறுப்பு தாயகத்தி்ல் அவலத்திற்குள்ளாகியிருக்கும

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் புறநிலை அரசு பற்றிய யோசனை இங்கே வைக்கப்படவில்லை.

தாயகத்தில் இயங்கி வந்த எமது அரசு அழிக்கப்பட்டு விட்டது என்பதன் அடிப்படையிற்தான் புறிநிலை அரசு பற்றிய யோசனை வைக்கப்படுகின்றது.

ஒரு அரசின் பாராளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கு பெறுவதுதான் சரி. ஒரு தரப்பை மட்டும் வைத்துக் கொண்டு, அதை புறநிலை அரசு என்றோ, பாராளுமன்றம் என்றோ அழைக்க முடியாது.

பெரும்பான்மையான மக்கள் மாவீரர்களையும், புலிகளையும் போற்றுகின்ற பொழுது ஒரிரு மாற்றுக் கருத்தாளர்கள் புறநிலை அரசில் இடம்பெறுவது பிரச்சனையாக இருக்காது.

சிலர் இங்கே மக்களின் அவலங்களைப் பற்றிய போராட்டங்களை மட்டும் செய்யச் சொல்லிக் கோருகிறார்கள். நான் எமது மாவீரர்களின் கனவான தமிழீழத் தாயகத்திற்கான போராட்டம் அழியாமல் இருக்க வேண்டாம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

எமது போராட்டங்கள் மிக குறுகிய நோக்கம் கொண்டவையாக மாறி விட்டன. போரை நிறுத்து என்று போராடினோம். இன்றைக்கு போர் நின்று விட்டது. இனி மக்களை மீளக் குடியேற்று என்று போராடுவோம். ஒரு ஆறு மாதத்திற்குள் தமிழர்கள் சிங்களவர்களோடு சேர்ந்து மீளக் குடியேறத் தொடங்கி விடுவார்கள். அதன் பிறகு மகிந்தவின் அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தச் சொல்லி ஒரு நாலைந்து பேர் போராடிக் கொண்டிருப்பார்கள்.

பின்பு சில மாதங்களில் எந்த ஒரு போராட்டமும் நடைபெறாது. இதை நோக்கித்தான் இன்றைய போராட்டங்கள் போய் கொண்டிருக்கின்றன.

இங்கே சிலருடைய கருத்துகளில் "நாம் இப்பொழுது செய்வது மாதிரி ஆர்ப்பாட்டங்களை செய்து கொண்டிருப்போம், புலி வந்து மிகுதியைப் பார்த்துக் கொள்ளும்" என்பது போன்ற மனநிலை காணப்படுகிறது. மிகவும் வருத்தமாக இருக்கின்றது.

தமிழீழப் போராட்டம் உங்கள் கையில் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!

அரசியல் இலக்கை கொண்ட போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் மாற வேண்டும். அதன் முக்கிய படிதான் புறநிலை அரசு என்பது.

புறநிலை அரசை இங்கேயுள்ள அமைப்புகளோடு ஒப்பிடக் கூடாது. இது விளையாட்டுக் கழகமோ, கலாச்சார மன்றமோ அல்ல. இது ஒரு அரசு. மக்களின் ஆணையைப் பெற்ற இழந்த தன்னுடைய தாயகத்தை பெறுவதற்கு போராடுகின்ற ஒரு கட்டமைப்பு:

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கவேண்டியவை!

விரைவில் விபரமாக எனது கருத்துக்களை பதிவு செய்யவுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பான்மையான மக்கள் மாவீரர்களையும், புலிகளையும் போற்றுகின்ற பொழுது ஒரிரு மாற்றுக் கருத்தாளர்கள் புறநிலை அரசில் இடம்பெறுவது பிரச்சனையாக இருக்காது.

எமது போராட்டங்கள் மிக குறுகிய நோக்கம் கொண்டவையாக மாறி விட்டன. போரை நிறுத்து என்று போராடினோம். இன்றைக்கு போர் நின்று விட்டது. இனி மக்களை மீளக் குடியேற்று என்று போராடுவோம். ஒரு ஆறு மாதத்திற்குள் தமிழர்கள் சிங்களவர்களோடு சேர்ந்து மீளக் குடியேறத் தொடங்கி விடுவார்கள். அதன் பிறகு மகிந்தவின் அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தச் சொல்லி ஒரு நாலைந்து பேர் போராடிக் கொண்டிருப்பார்கள்.

பின்பு சில மாதங்களில் எந்த ஒரு போராட்டமும் நடைபெறாது. இதை நோக்கித்தான் இன்றைய போராட்டங்கள் போய் கொண்டிருக்கின்றன.

முற்றிலும் சரி.

இப்போ மனித உரிமையை வலி உறுத்தி போராடுவோம் அதில் சிஙகளவன் சிக்குவான். அடுத்து அரசியல் உரிமைக்கு போராடுவோம். கொஞ்சம் காத்திருங்கள்........

கன பேருக்கு கதிரை மேசை, மகானாடு, மேடைப்பேச்சு, விழாக்கள் அஞ்சலி நிகழ்வு, குத்துவிளக்கு ஏற்றல் என அமர்க்களம் பண்ணுவதற்கு களம் தேவைப்படுபோல கிடக்கு.

கொஞ்ச நாளைக்கு இளையவர் எமக்கு துணையாக வாருங்கள்.

ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டிய கதையாக முடியாது.. துடிப்புள்ள மக்கள் யாழகளத்தை விட்டு வேறு ஒரு நேரடி சந்திப்புகளை வைத்து முன்னெடுத்து செல்பவர்களை தெரிவு செய்து முன்னோடியாக செயல்படுங்கள்..

யாழில் அம்பலத்தில் எதிரிக்கு தகவல் முன்கூட்டியே கொடுத்து உசார்படுத்தவே உதவும்... நீங்கள் நினைக்க முன் அவன் செயலில் செய்து முடக்கி விடுவான் இந்த அம்பலத்தில்... இது கடந்த வரலாறு....

உங்கள் சிந்தனைகள் வரவேற்கிறேன் ஆனால் செயல்கள் கூடி நடத்துங்கள் உடனடியாக...

முன் செல்லுங்கள் விடுதலைவிரும்பும் பல்லாயிரக்கணக்கான நம்பினம் பின் தொடரும்... எழுதி எழுதி நமது காலத்தை வீணாக்கி எதிர்யை உசாராக்கி நம்மினத்தை இனவெறியாக்கியதே இதுவரை செய்தது..

பாடங்களில் இருந்து எதிர்காலத்தை திருத்துவோம்..செக்கு மாடாகி சுழராதீர்கள்..

நம்மினத்திற்கு நல்லது செய்வதற்கு யாரையும் கேட்டு செய்ய தேவையில்லை.. இதுவரை எழுதியவர்களில் இருந்து யார், யார் எப்படியான மன நிலை துணிச்சல் தெளிவாக உள்ளனர் எனபுரிந்து இருப்பீர்கள்..

பட்டறிவுடன் குக்கூ

இதனை எல்லோரும் கருத்திலெடுக்கவும்.

Edited by mekan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.