Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்டமைப்பு தமிழரைக் காக்குமா ? தட்டிக் கழிக்குமா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கூட்டமைப்பு தமிழரைக் காக்குமா ? தட்டிக் கழிக்குமா ?

எல்லாமே எங்களை விட்டுப் போனது போன்றதொரு நிலமையில் இன்று தமிழினத்தின் தலைவிதி தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் கனவுகளோடு அந்த மக்களைச் சாகும்படி வீராவேசப் பேச்சுகளும் விவாதங்களினதும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் அறிக்கைகளும் மாறிமாறி அலசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.

மாவிலாற்றில் பிடித்த சனியன் முள்ளிவாய்க்கால் வரையும் துரத்திப்பபோய் 3லட்சடம் வரையான பொதுமக்களை அகதிகளாக்கியும் பல்லாயிரக்கணக்கில் பலியெடுத்தும் தனது கோரத்தைத் தீர்த்து முடித்திருக்கிறது. தன்னினம் விடுதலைபெற வேண்டுமென்ற கனவோடு போராளிகளான ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலியெடுத்தும் கடைசியில் சரணடைய வைத்தும் உலக வல்லரசுகள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டது.

வவுனியாவுக்குள்ளும் யாழ்ப்பாணத்துக்குள்ளும் ஏன் இலங்கையின் பல பகுதிகளுக்குள்ளும் அமைக்கப்பட்டுள்ள சிறைகளில் சித்திரவதைக் கூடங்களில் தமிழினம் இனியொரு ஐம்பது ஆண்டுகள் நிமிரமுடியாதபடி நிலமை வந்து நிற்கிறது. தாய் வேறு குழந்தைகள் வேறு தந்தை வேறு என்ற வகைபிரித்தலில் அனாதைகளாய் போன அத்தனையாயிரம் அப்பாவிகளையும் அடைத்த முகாம்களில் எங்கே முழுமையான நிம்மதியை அவர்கள் தேடுவார்கள்.

புனர்வாழ்வு என்ற பெயரில் ஆயிரமாயிரம் போராளிகள் முன்னாள் போராளிகள் என வகைபிரிக்கப்பட்டு வதைபடும் துயரம், தனது மக்களுக்காகப் போராடிய தெய்வங்கள் இன்று அடுத்த நேரச்சோற்றுக்குத் தட்டேந்தும் நிலைக்கு வரக்காரணமான அனைத்தையும் அனைவரையும் வெறுக்கிறோம்.

இப்போது எம்மிடம் மிஞ்சியிருப்பது ? துயரமும் கண்ணீரும் , இயலாமையும் , இனி எஞ்சியோரது வாழ்வுக்கான வழியொன்று திறபட வேண்டும் என்பதேயாகும். இந்த வழியின் மூலம் எங்கே ? அது இனி என்னத்தைத் தமிழினத்துக்குச் செய்யப்போகிறது ? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து தொலைகிறது.

ஆயுதங்கள் மெளனித்தனவா ? மெளனிக்க வைக்கப்பட்டனவா ? எதுவோ இனி ஆயுதங்களால் எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். ஆயினும் நாம் மீண்டும் எழுவோம் ஆழுவோம் என்ற கனவில் எஞ்சிய உயிர்களையும் பலியெடுக்க இனி அனுமதிக்க முடியாது. யுத்தம் எங்களைக் களைக்க வைத்துவிட்டது. சிறுபான்மையினம் இன்று சின்னாபின்னமாய் நிமிரமுடியாமல் தனது வளத்தை வாழ்வை இழந்து போயுள்ளது. இனியொரு யுத்தம் இனியொரு அழிவு வேண்டாம். அதைத்தாங்கும் வல்லமையில்லை எங்களிடம். எல்லோரும் சொல்வதுபோல் நாங்கள் தோற்றுப்போனோம். எங்கள் தோழர்கள் வஞ்சனையால் வன்கொலை புரியப்பட்டார்கள். மலைகளாய் நாம் நம்பிய இமயங்களையெல்லாம் இறுதிக்கணம் வரை உயிருக்காய் இறைஞ்ச வைத்து அழித்து விட்டார்கள். யுகங்களுக்கும் மாறாத வடுவாய் எங்கள் மனங்கள் ரணமாய்ப்போயுள்ளது.

இனியென்ன செய்வது ?

மக்களின் பணியாளர்களைத் தேடித் தேடி எனது மக்களைக் காக்க என்ன செய்யப்போகிறீர்கள் ? என அவலப்படும் மக்களுக்கான ஆதரவுகளைத் தேடுகிறோம்.

மக்கள் பிரதிநிதிகள் அக்கறையாளர்கள் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டுமென்றே முனைப்போடு உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த முனைப்பை முளையில் கிள்ளிவிட இன்னும் பல மூதேவித்தலைகளும் மூத்ததுகளும் தடைக்கற்களாகவே இடையில் வந்து செருகுப்படுவதால் ஆர்வலர்கள் பின்வாங்குகிறார்கள். இன்னும் மந்தைகளாய் மக்களை மேய்க்கப் புலத்தில் அதிகாரம் பண்ணும் அடங்காப்பிடாரிகளை நம்பி இனியும் எமது மக்களைப் பலிகொடுக்கமாட்டோம். முதலில் இந்தப் பெருச்சாளிகளை எம்மிலிருந்து பிரித்து ஒதுக்குவோம்.

மக்களுடன் நின்று இயங்கக்கூடிய வழிகளைத் தேடியொரு மனிதாபிமானப் பணிகளுக்கான பாதைகளைத் திறந்து விடவேண்டியது முக்கியமாகும். இந்தப்பணியைச் செய்ய இப்போதைக்கு எங்களுக்கு ஒரு துடுப்பாக இருப்பது தமிழ்க்கூட்டமைப்பு மட்டுமே. கூட்மைப்பில் உள்ள 22பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை ஏதோ இருக்கிறோம் என்று இருந்த நிலைமாறி இனி மக்களுக்கான விடிவொன்றை வழிவகுக்க வேண்டிய மாபெரும் கடைமையைப் பொறுப்பெடுக்க வேண்டும். புலம்பெயர் மக்களின் பணத்தில் அறிக்கையும் , கண்டனமும் விடும் அகதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்துவிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனையோர் உடனடித் தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும்.

கூட்டமைப்பினர் ஏதிலியான எமது மக்களுக்கு ஒரு விடிவைப்பெற்றுப் கொடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுவரை காலமும் மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயருக்குள் மக்களுக்கான எந்தவிதமான செயற்பாடுகளையும் செய்யாமல் ஐரோப்பிய ஊலாவந்தும் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் ஐரோப்பாவுக்கும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடம்மாற்றிய சுயநலமக்கள் பிரதிநிகைளைத் தள்ளி வைத்துவிட்டு உரிமையுடன் தங்கள் பணியை ஆரம்பிக்க வேண்டும்.

கூட்டமைப்பினர் இன்னும் புலத்துப்புண்ணியர்கள் அனுமதித்தால் தான் தமிழினத்தைக் காப்போம் எனக் காத்திருக்காமல் உங்கள் கடமையை ஆரம்பியுங்கள். உங்களுக்கான ஆதரவுகளைத் தரக்காத்திருக்கிறோம்.

நட்டாற்றில் நமது இனம் சாக நிம்தியாய் எங்களால் இருக்க முடியவில்லை. ஊர் உறவுகள் முழுவதும் இடைத்தங்கள் முகாம்களிலும் , புனா்வாழ்வு முகாம்களிலும் புழுக்கள் போல் நசிபட புலத்திலிருந்து புதுயுகம் படைப்போமென்று பூச்சாண்டி காட்ட முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்த தேர்தல் நெருங்குகிறது. தமிழ்க்கூட்டமைப்பு தனது முழுமையான பலத்தையும் கையில் எடுக்க வேண்டிய தருணமிது. தமிழின விதி உங்கள் கையில் தான் தொங்குகிறது.

உங்களுக்குள் உள்ள முரண்கள் மனத்தாங்கல்களை மறந்து உங்கள் போன்று தமிழினத்தைத் தாங்கும் தூண்களையெல்லாம் உங்களோடு உள்வாங்குங்கள். மாற்றுக்கட்சி முரண்பாடு கொள்கைக்கட்சி முரண்பாடுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள். சங்கரியின் கையிலோ டக்ளசின் கையிலோ சித்தார்த்தன் கையிலோ சிறீதரன் கையிலோ தமிழனின் விதி கைமாற வேண்டாம்.

உங்களையே நம்புகிறோம் எங்கள் மக்களுக்கான மறுவாழ்வைக் கொடுங்கள். உலக மூலையெங்கும் இருக்கும் தமிழினத்தை உங்களோடு சேருங்கள். அடுத்த தேர்தலை தமிழினத்துக்கான மோட்சமாக மாற்றுங்கள். உங்களையே இறுதியாய் நம்புகிறோம். எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள். அவர்களுக்கான எதிர்காலம் வாழ்வு எல்லாம் உங்கள் கையில் தந்துவிடுகிறோம். துணையாய் நாங்களிருப்போம். தடைகளை உடையுங்கள் என்று கேட்கவில்லை. எம் மக்களின் மறுவாழ்வை உறுதிப்படுத்துங்கள்.

அக்காச்சி பிள்ளைகளைப்பறி கொடுத்தாளாம் , மாமாவின் மனைவி சிதறிச் செத்தாளாம் , மருமகள் முடமாகிப்போனாளாம் , மச்சான் எறும்பு மொய்த்து இரத்தத்தில் கிடந்தானாம் என்று உறவுகளின் துயர் எங்களை அணுவணுவாய் கொல்கிறது. போரால் தாயகம் சிதிலமானது. இங்கோ ஊரை உறவுகளை நினைத்து நாங்கள் மனநோயாளிகளாகிறோம். எம்மக்களைக் காப்பாற்றுங்கள்.

ஆண்டவனை இழந்து விட்டோம். அதற்கடுத்து உங்களைத் தான் நம்புகிறோம்.

28.05.09

********************************************************************************

*********************************************************************************

****************************************************

மோகன் உங்கள் கத்தியைத் தீட்டீட்டீங்களா ????? வெட்டுவாங்கக்கன பேர் இருக்கினம். :wub:

Edited by shanthy

முல்லைத்தீவில் சனங்களோடு இருந்த குற்றத்திற்காக தமிழ்க்கூட்டமைப்பாளார்களில

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுதுதான் வேகமாக இயங்க வேண்டிய காலகட்டம்.. ஆனால் அவர்களின் சத்தத்தையே காணேல்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முல்லைத்தீவில் சனங்களோடு இருந்த குற்றத்திற்காக தமிழ்க்கூட்டமைப்பாளார்களில

கூட்டமைப்பினால் ஒன்றும் சாதிக்க முடியாது. விரைவில் கூட்டமைப்பு என்பதே இல்லாது போகும்.

இவர்களுக்கு ஏற்கனவே நிறையப் பிளவுகள். விடுதலைப் புலிகள் இருந்ததனாற்தான் ஓரளவு என்றாலும் அடக்க ஒடுக்கமாக இருந்தார்கள்.

விரைவில் இவர்கள் மீண்டும் தனிக் கட்சிகளாக மாறி விடுவார்கள். கூட்டமைப்புக்குள் உள்ள மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

மிச்சம் உள்ள இயக்கப் பிரதிநிதிகளும் (ரெலோ, ஈபிஆர்எல்எவ்) கட்சிப் பிரதிநிதிகளும் (தமிழரசுக் கட்சி) தங்களுக்குள் முரண்பட்டு பிரிந்து விடுவார்கள்: இவர்களுக்குள் ஏற்கனவே நிறையப் பிரச்சனைகள் இருக்கின்றன.

தமிழரசுக் கட்சி மீண்டும் ஆனந்தசங்கரியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கூட்டமைப்பினால் ஒன்றும் சாதிக்க முடியாது. விரைவில் கூட்டமைப்பு என்பதே இல்லாது போகும்.

இவர்களுக்கு ஏற்கனவே நிறையப் பிளவுகள். விடுதலைப் புலிகள் இருந்ததனாற்தான் ஓரளவு என்றாலும் அடக்க ஒடுக்கமாக இருந்தார்கள்.

ஜீரணிக்க முடியாத உண்மை.... வினோ வில் இருந்து ஆரம்பித்து அடைக்கலம் வரை ஒன்றாக வைத்திருக்க புலிகளின் அரசியல் பிரிவு மேற்கொண்ட முயற்சிகளை அறிந்தவர்களுக்கு தான் தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்துக்கும் அஞ்சாத நெஞ்சுறுதியும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட விடுதலைப் புலிகளோடு.. கூட்டமைப்பில் உள்ள அனைவரையும் ஒப்பிடக் கூடாது. ஆனால் கூட்டமைப்புக்குள்ளும் நெஞ்சுறுதியுள்ள சிலராவது இருப்பர். அவர்களை மக்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும்..! தமது ஆதரவை வழங்க வேண்டும்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்புத்தான் தமிழரின் எதிர்கால நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுதுதான் வேகமாக இயங்க வேண்டிய காலகட்டம்.. ஆனால் அவர்களின் சத்தத்தையே காணேல்லை...

யு மின் அவுட்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினால் ஒன்றும் சாதிக்க முடியாது. விரைவில் கூட்டமைப்பு என்பதே இல்லாது போகும்.

இவர்களுக்கு ஏற்கனவே நிறையப் பிளவுகள். விடுதலைப் புலிகள் இருந்ததனாற்தான் ஓரளவு என்றாலும் அடக்க ஒடுக்கமாக இருந்தார்கள்.

விரைவில் இவர்கள் மீண்டும் தனிக் கட்சிகளாக மாறி விடுவார்கள். கூட்டமைப்புக்குள் உள்ள மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

சபேசன்,

கூட்டமைப்பு இனி கலைந்து போகும் அபாயம் நிறையவே இருக்கிறது. ஆனால் சுயநலம் மிக்க அங்கே மக்கள் சாக வெளிநாடுகளில் வந்து நின்று (வந்ததும் வாழ்வதும் மக்கள்டு பணத்தில்) இன்னும் சுதந்திர தமிழீழக்கனவை வாழவைக்கவும் தங்களை வாழ்விக்கவும் விரும்புகின்ற கூட்டமைப்பின் தேசியத்திருவுருவங்கள் எமுது மக்களுக்கான நன்மையைச் செய்வார்கள் என்று நம்பமுடியவில்லை. ஆயினும் தமிழினத்துக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென விரும்பும் சிலர் நட்டாற்றில் தவிக்கும் 3லட்டசம் பேருக்கான மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

விடுதலைப்புலிகள் இருந்ததனால் ஓரளவு அடக்கமாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. தங்கள் பதவிகளைக் காத்துக் கொள்வதில் கவனமாக இருந்தார்கள் என்பது பொருத்தமானதாகும். சங்கரியும் சிறீதரனும் சித்தார்த்தனும் செய்ய முடியாததை தமிழ் மக்களால் வெளிநாடுகள் வரை அழைக்கப்பட்டு மக்களுக்கு அறிமுகமான கூட்டமைப்பால் ஏதாவது தமிழர்களுக்கான நல்வழியைத் திறக்கலாம். எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போன பின்னாலும் இந்தக் கூட்டமைப்பு எதையாவது செய்யுமென்ற நம்பிக்கை இருக்கிறது பார்ப்போம். எதுவரை சாத்தியமென்பதை.

எவரிடமோ எல்லாம் இறைஞ்சினோம். பார்ப்போம் எம்மவர்களான இவர்களால் ஏதாவது விமோசனம் உண்டா என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் இவர்களுடைய கதைகளைக்கானவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புத்தான் தமிழரின் எதிர்கால நம்பிக்கை.

கடைசி நம்பிக்கையை கூட்டமைப்பு காப்பாற்றுமா கைகழுவுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் உள்ள இயக்கப் பிரதிநிதிகளும் (ரெலோ, ஈபிஆர்எல்எவ்) கட்சிப் பிரதிநிதிகளும் (தமிழரசுக் கட்சி) தங்களுக்குள் முரண்பட்டு பிரிந்து விடுவார்கள்: இவர்களுக்குள் ஏற்கனவே நிறையப் பிரச்சனைகள் இருக்கின்றன.

இந்த ஊகங்களை விட்டுவிடுவோம் சபேசன். எல்லா அரசியலுக்குள்ளும் பிளவுகள் பிரிவுகள் இருந்தன இருக்கின்றன. கூட்டமைப்பு இதற்கு விதிலக்காக இல்லை. தற்போது மக்களுக்கான விமோசனத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூட்டமைப்புக்குள் சிலர் விரும்புகிறார்கள். ஆனால் கூட்டமைப்பின் தலைமை இன்னும் ஐரோப்பியப் பிழைப்புவாதிகளை நம்பிக்கொண்டிருக்கிறது. பத்மநாதனைத் துரோகியாக்கியவர்கள் தங்களையும் துரோகியாக்கிவிடுவார்கள் என அஞ்சுகிறது. இதுதான் உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கூட்டமைப்புக்குள்ளும் நெஞ்சுறுதியுள்ள சிலராவது இருப்பர். அவர்களை மக்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும்..! தமது ஆதரவை வழங்க வேண்டும்..! :D

எல்லோருமே ஒருகாலம் புறப்பட்டது தமிழரின் விடுதலை நோக்கித்தான். ஆனால் இடையில் மயங்கித் தங்கள் இலட்சியத்தை விற்றவரும் வீண் போனவருமாக திசைகள் மாறிய காலங்கள் போய்விட்டன. விடுதலைப்புலிகள் இந்தக்கூட்டமைப்பை ஒன்றுபடுத்தினார்கள். இன்று அவர்கள் இல்லாமல் நடுத்தெருவில் வந்து நிற்கும் தமிழனத்தின் கடைசி நம்பிக்கை கூட்டமைப்புத்தான். ஆனால் இன்னும் சாமியிட்டைக் கேட்டு பூசாரியிட்டைக் கேட்டுத்தான் எழும்புவோம் என்று கூட்டமைப்பு ஒரு குழப்ப நிலையில் இருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு இவர்கள் வர வேண்டும்.

எல்லாரையும் நம்பிக் கடைசியில் துரோகத்தால் களக்கொலை கொடுத்து கடைசியில் மிஞ்சியவர்களையும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னும் சித்திரவதை கூடங்களுக்குள்ளும் நிர்க்கதியாயிருக்கும் அனைவரும் ஓர் புதுவாழ்வு பெற இவர்கள் ஏதாவது செய்ய வேண்டும்.

இன்னும் இவர்களுடைய கதைகளைக்கானவில்லை

சோம்பல் முறிபடுவதாகக் கேள்வி பார்ப்போம். விழிப்பார்களா என. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற வேண்டும்: கோத்தபாய

[ ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2009, 05:46.45 AM GMT +05:30 ] (தமிழ்வின் செய்தி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை என்ன வழியிலேனும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக கள்ள வாக்குகளினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அநேக உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு எதிராகவே பேசியதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் வகையில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டோரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் உருவாகிய கட்சிகள் ஊடாக தமிழ் மக்கள் அரசியலுக்குள் வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

(Tamilwin)

கோத்தபாயவின் அடுத்த பாச்சல் கூட்டமைப்பைக் கலைக்கும் முயற்சி. இதை கூட்டமைப்பு எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறது ? உடனயாகத் அவர்கள் தங்கள் அடுத்த கட்டச் செயற்பாடுகளில் இறங்காது விடில் தமிழினவிதி தமிழரை அழிக்கும் கைகளில் போய்விடும் நிலமையுள்ளது.

Edited by shanthy

புனர்வாழ்வு என்ற பெயரில் ஆயிரமாயிரம் போராளிகள் முன்னாள் போராளிகள் என வகைபிரிக்கப்பட்டு வதைபடும் துயரம், தனது மக்களுக்காகப் போராடிய தெய்வங்கள் இன்று அடுத்த நேரச்சோற்றுக்குத் தட்டேந்தும் நிலைக்கு வரக்காரணமான அனைத்தையும் அனைவரையும் வெறுக்கிறோம்.

இப்போது எம்மிடம் மிஞ்சியிருப்பது ? துயரமும் கண்ணீரும் , இயலாமையும்

இப்படி எங்களை அனாதையாக்கிய கடவுளைக் கண்டால் சித்திரவதை செய்து கடவுளைக் கொல்வேன்.

Edited by Nellaiyan

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுதுதான் வேகமாக இயங்க வேண்டிய காலகட்டம்.. ஆனால் அவர்களின் சத்தத்தையே காணேல்லை...

இல்லை ........ கேள்விப்பட்ட அளவில் சில வேலைகளை செய்ய வெளிக்கிட்டார்களாம்! ஆனால் அதனை குழப்பி அடிக்க புலனாய்வுத்துறை உறுப்பினர் எனும் பெயரில் தமிழ்நெட்டில் வந்த அறிவிப்பும் .... எல்லாவற்றையும் நிறுத்தி விட்டது. அவர்களும் உயிர்களுக்கு பயந்தவர்கள் தானே!!!!!!!!

இக்கால கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தற்காலிகமாவது ஆதரிக்க தவறுவோமாயின் .... டக்லஸ், கருணா போன்ற பிணந்தின்னிகளின் கைகளில் தமிழ்த்தலைமையை ஒப்படைத்து விடுவோம்!! .. பின்பு ...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ........ கேள்விப்பட்ட அளவில் சில வேலைகளை செய்ய வெளிக்கிட்டார்களாம்! ஆனால் அதனை குழப்பி அடிக்க புலனாய்வுத்துறை உறுப்பினர் எனும் பெயரில் தமிழ்நெட்டில் வந்த அறிவிப்பும் .... எல்லாவற்றையும் நிறுத்தி விட்டது. அவர்களும் உயிர்களுக்கு பயந்தவர்கள் தானே!!!!!!!!

இக்கால கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தற்காலிகமாவது ஆதரிக்க தவறுவோமாயின் .... டக்லஸ், கருணா போன்ற பிணந்தின்னிகளின் கைகளில் தமிழ்த்தலைமையை ஒப்படைத்து விடுவோம்!! .. பின்பு ...........

இனியும் அவர் அறிக்கைவிட்டார் இவர் கண்டனம் விட்டார் என்று பதுங்காமல் கூட்டமைப்பு தனது பணிகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் தங்களது போக்குவரத்து விமானச் சீட்டுக்கள் மற்றும் வசதிகளை தாங்கள் நம்பும் பிழைப்புவாதிகளின் கையில் உழலும் வரை இந்த அச்சம் அவர்களை விடப்போவதில்லை.

நேற்று சம்பந்தன் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள கூட்டமைப்பினரை உடனடியாக நாடு திரும்பும்படி அறிவித்திருந்தார். ஆனால் இதில் எத்தனை பேர் போவர்கள் ? தங்கள் வாழ்வை வசதியாக்கித் தந்து கொண்டிருக்கும் பின்வாசல்கதவுகளைத் தாண்டிப் போகத்தயாராக இல்லை.

ஆயினும் உணர்வோடு இன்னும் மக்களை நேசிக்கின்ற கூட்டமைம்பின் உறுப்பினர்களை நம்புவோம். அவர்களால் ஏதாவது நல்லதுமு நடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தஞ் சரணம் கச்சாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

c

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.